Page 2 of 2 FirstFirst 12
Results 11 to 13 of 13

Thread: SAKALAKALAVALLI MALAI- by KUMARA GURUBARAR

  1. #11
    Senior Member Devoted Hubber devapriya's Avatar
    Join Date
    Oct 2005
    Posts
    350
    Post Thanks / Like

    SAKALAKALAVALLI MALAI-9

    சகலகலாவல்லி மாலை பாடல் 9


    சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞ்ஞானத்தின் தோற்றம் என்ன
    நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார் நிலம்தோய் புழைக்கை
    நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம் நாண நடை
    கற்கும் பதாம்புயத்தாயே சகலகலாவல்லியே

    சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞ்ஞானத்தின் தோற்றம் என்ன நிற்கின்ற - கவிதைகளிலும் கட்டுரைகளிலும் சொல்லும் சொற்களுக்கும், அவற்றின் பொருட்களுக்கும் உயிராக உள்ளுரைப் பொருளாக இருக்கும் மெய்யான ஞானவடிவாக விளங்குகின்ற

    நின்னை நினைப்பவர் யார் - உன்னை (எப்போதும்) வணங்குபவர் (என்னையன்றி வேறு) யார்?

    நிலம்தோய் புழைக்கை நற்குஞ்சரத்தின் பிடியோடு - நிலத்தில் தோயும்படி இருக்கும் நீண்ட தும்பிக்கையுடைய சிறந்த பெண்யானையும்

    அரசன்னம் - பறவைகளிலேயே அழகில் சிறந்த ராஜஹம்ஸமாகிய அரச அன்னப் பறவையும்

    நாண நடை கற்கும் பதாம்புயத்தாயே சகலகலாவல்லியே - வெட்கும் படியான நடையுடைய திருவடித் தாமரைகளை உடையவளே கலைவாணியே

    ***

    அருஞ்சொற்பொருள்:

    புழைக்கை - துதிக்கை, தும்பிக்கை

    குஞ்சரம் - யானை

    பிடி - பெண்யானை (இங்கு குஞ்சரத்தின் பிடி என்பது பெண்யானை என்ற பொருளில் வந்தது)

    பதாம்புயம் - பத + அம்புயம் - பாதத் தாமரைகள். அம்புயம் என்பது அம்புஜம் என்பதன் திரிபு. அம்பு - நீர், ஜம் - பிறந்தது; நீரில் பிறந்தது தாமரை மலர்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #12
    Senior Member Devoted Hubber devapriya's Avatar
    Join Date
    Oct 2005
    Posts
    350
    Post Thanks / Like

    SAKALAKALAVALLI MALAI-10

    சகலகலாவல்லி மாலை பாடல் 10


    மண்கொண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்
    பண்கண்ட அளவில் பணியச் செய்வாய்! படைப்போன் முதலாம்
    விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பில் உன்போல்
    கண்கண்ட தெய்வம் உளதோ? சகலகலாவல்லியே!

    மண் கொண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் - மண்ணுலகில் மன்னர்கள் எல்லாரும் தம் அரசாட்சியின் சின்னமாக வெண்கொற்றக் குடையின் கீழ் சிம்மாசனத்தில் வீற்றிருக்கின்றனர். சிற்றரசர்களின் வெண்குடைகள் பேரரசர்களின் கீழ் அமைகின்றன. அவ்வாறு மண்ணுலகில் உள்ள எல்லா வெண்குடைகளும் தனக்குக் கீழாக பேரரசனாக விளங்குகின்ற மன்னரும்

    என் பண்கண்ட அளவில் பணியச் செய்வாய் - என் பாடல்களைக் கண்டவுடனே தகுந்த மரியாதை கொடுத்துப் பணியும் படி அருள் செய்வாய்.

    படைப்போன் முதலாம் விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் - படைக்கும் கடவுளான பிரம்மதேவன் முதற்கொண்டு விண்ணில் வாழும் தெய்வங்கள் பலகோடி இருப்பினும்

    விளம்பில் உன்போல் கண்கண்ட தெய்வம் உளதோ சகலகலாவல்லியே - உன்னைப் போல் கண்கண்ட தெய்வம் உள்ளதோ? சொல்லுவாய் கலைவாணியே!
    ------------------------
    சகலகலாவல்லி மாலை நிறைவு

  4. #13
    Senior Member Devoted Hubber devapriya's Avatar
    Join Date
    Oct 2005
    Posts
    350
    Post Thanks / Like

    SAKALAKALAVALLI MALAI

    ஹிந்து மதத்தில் வேதமுதல்வன் சிவன் வழிபாடு நம் அனைவர்க்கும் மிகமுக்கியமானது.
    இங்கே கோயில் என்றால் பொன்னம்பலம்- சிதம்பரம்.

    ஆனால் முக்திக்கு காசி-விசுவநாதர் என்பது நம்பிக்கை.

    இக்கோயில் இஸ்லாமியரால் பூட்டப்பட்டு அக்கோயிலின் மிக அருகில் ஞான்வாபி மசூதி என எழுப்பி பூஜைகள் நின்றன.
    தென்னகத்திலிரூந்து மக்கள் காசி-விசுவநாதர் வழிபட்டு கங்கை நீரை கொணர்ந்து ராமேஸ்வரம் கோயிலில் அபிஷேகம் செய்வது மிக முக்கியமானது. காசி-விசுவநாதர் வழிபட முடியாமல் மக்கள் வருந்த்ய போது - தமிழகத்திலிருந்து சென்ற குமரகுருபரர் மிக வருந்தி ஒரு துபாஷியை(மொழிபெயர்ப்பாளர்) துணை கொண்டு சுல்தானை கோயிலைத் திறந்து வழிபாடு செய்ய கேட்ட போது உன் வேண்டுகோளை எனக்கு நேரடியாக சொல்ல கூட தெரியாத உனக்கு ஏதும் உதவ முடியாது என கேலி பேசி அனுப்பினார்.
    மனம் வெதும்பிய குமரகுருபரர் வருத்தத்தோடு சரஸ்வதி தேவியை தூய தமிழில் 10 பாடல்கள் சகலகலாவல்லி மாலை என பாடினார். சகலகலாவல்லி மாலை பாடிட ஹிந்துஸ்தனி , உருது மொழிகள் ஓர் இரவில் பெற்றிட சுல்தானிடம் அவர் மொழியில் பேசிட, அதிசயம் புரிய காசி கோயில் திறக்கப் பட்டது.குமரகுருபரர் வேண்டுகோள்ப்படி அங்கு தமிழகத்திலிருந்து வரும் பக்தர் தங்க காசி மடம் என நிலம் பெற்று நிருவினார்.

    இப்பாடல் படித்து துதிப்போருக்கு கல்வி ஞானம் பெருகும். அப்பாடல்கள் பொருளோடு நான் தருகிறேன்.

    உங்கள் குழந்தை களை இந்த எழிய தமிழில் உள்ள பாடலகளை தினமும் பாடச்செய்தால் கல்வியில் சரஸ்வதி துணை நிச்சயம்.

Page 2 of 2 FirstFirst 12

Similar Threads

  1. can anyone give the Recipe for Malai Kofta ?
    By ramky in forum Indian Food
    Replies: 14
    Last Post: 16th June 2006, 09:58 PM
  2. MALAI
    By jai.poet in forum Poems / kavidhaigaL
    Replies: 2
    Last Post: 28th December 2005, 01:40 PM
  3. Malai & Khoya
    By Alan in forum Indian Food
    Replies: 5
    Last Post: 6th December 2005, 06:53 AM
  4. Saraswathi Poojai Special - Sakalakalavalli Maalai
    By RR in forum Poems / kavidhaigaL
    Replies: 3
    Last Post: 13th October 2005, 07:44 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •