Results 1 to 5 of 5

Thread: VASANTHAM Serial

  1. #1
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like

    VASANTHAM Serial

    சன் டிவியில் வரும் திங்கள் முதல் ஒளிபரப்பாக விருக்கும் புதிய தொடர், `வசந்தம்'.

    வாழ்வில் ``வசந்தம்'' அனைவரும் எதிர்பார்ப்பதுதான். குடும்பச் சுமையைத் தாங்கும் அகிலாவின் வாழ்வில் வசந்தம் பல வடிவங்களில் தயாராகிறது! காதலில் வெற்றி, பதவி உயர்வு, குடும்ப சந்தோஷம் என வசந்தத்தின் வரிசை தொடரும் என எதிர்பார்க்கும் அவள், வலுவான விதியின் இரும்புக் கைகள் அவள் வாழ்வில் சூறாவளியை உருவாக்கும் என்பதை எதிர்பார்க்கவில்லை.

    எதையும் தாங்கும் மனநிலை கொண்ட அகிலாவோ அச்சூறாவளியை மென்மையான தென்றலாக மாற்ற முயற்சிக்கிறாள். ஆனால் அதற்குள் அப்பெண்ணின் வாழ்வில் குறுக்கிட்டு குழப்பும் மனிதர்கள், சம்பவங்கள், சூழ்நிலைகள் இவற்றை யதார்த்தமாக சித்தரிக்கும் கதையே ``வசந்தம்''.

    அகிலாவாக ``ப்ரண்ட்ஸ்'' விஜயலெட்சுமி நடிக்கிறார். மற்றும் சந்திரசேகர், டெல்லி கணேஷ், ஷியாம் கணேஷ், விஷ்வா, துர்கா, சைலஜா, வந்தனா, வத்சலா ஆகியோர் நடிக்கிறார்கள். திரைக்கதையை தேவிபாலா எழுத, பா.விஜய் பாடல் எழுதுகிறார். இசை: இமான். வசனம்: நடராஜ். ஒளிப்பதிவு: நாக சரவண்.

    பிரபல தொடர்களான சொந்தம், வாழ்க்கை, சஹானாவை இயக்கிய வெங்கட் இத் தொடரை இயக்குகிறார். மார்க்கெட்டிங் நிறுவனமான `விஷன் டைம்' முதன் முறையாக மெகா தொடரை தயாரிக்கிறது.

    தினமும் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் ஒரு மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கிறது, இந்த தொடர்.



  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    any updates here
    those who watch in the afternoon . pl come forward
    "அன்பே சிவம்.

  4. #3
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    சன் டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் ஒரு மணிக்கு ஒளிபரப்பாகி வரும் வசந்தம் தொடர் நூறு எபிசோடுகளை எட்டியது.

    அகிலாவுக்கும், ஜீவாவுக்கும் காதல் திருமணமாகி `ஈகோ'வில் பிரிந்து விடுகிறார்கள். இந்நிலையில் அகிலா கர்ப்பமாகி ஒரு குழந்தைக்கு தாயாகிறாள். பிரசவத்திற்கோ, குழந்தையை பார்ப்பதற்கோ கணவன் வரவில்லை.

    இதற்கிடையில் அகிலாவின் தங்கை துளசியை ஏற்கனவே திருமணமான சரவணன் ஏமாற்ற முயற்சி செய்கிறான். இதற்காக முதல் மனைவியை கொடைக்கானல் அழைத்துச் சென்று கொல்ல முடிவு செய்கிறான்.

    கணவனைப் பிரிந்த அகிலா குழந்தையை வைத்துக் கொண்டு பிரச்சினைகளை எப்படி எதிர்கொண்டாள்? அவள் நாத்தனார் வாழ்க்கையை காப்பாற்றினாளா? வரும் எபிசோடுகளில் இந்த பரபரப்பான கேள்விகளுக்கு விடை உண்டு'' என்கிறார், தொடரின் இயக்குனர் ரிஷி.

    ஒளிப்பதிவு: நாகசரவணன், திரைக்கதை வசனம்: `வேதம்புதிது' கண்ணன். தயாரிப்பு: பிளான் `வி' புரொடக்ஷன்.

    நட்சத்திரங்கள்: வாகை சந்திரசேகர், `பிரண்ட்ஸ்' விஜயலட்சுமி, டெல்லி கணேஷ், ஷியாம் கணேஷ், விஷ்வா, துர்கா, அப்சர், வந்தனா.

  5. #4
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    சன் டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் `வசந்தம்' தொடர் 150 எபிசோடுகளை கடந்திருக்கிறது.

    அகிலாவுக்கு திருமணம் ஆகி ஈகோ பிரச்சினையால் கணவனை பிரிந்து குழந்தையுடன் தனியாக வாழ்ந்து வருகிறாள். இதனால் அவள் சந்தித்த பிரச்சினைகள் ஏராளம். பிறருக்கு உதவும் எண்ணம் கொண்ட அகிலா, தன் தோழி தீபாவுக்கு செய்யும் உதவி அவளுக்கே எதிராக திரும்புகிறது. இதனால் குடும்பத்தில் பெரிய பிரச்சினை உருவாகிறது. தவிர தனது தங்கை துளசியின் திருமணம் அகிலாவால்தான் தடைபட்டுப் போனதாக நம்புகிறாள். இதற்கிடையில் அலுவலகத்திற்கு சென்று வரும் அகிலாவிற்கு மிகபெரிய பிரச்சினை ஏற்படுகிறது. கணவனும் எங்கே இருக்கிறான் என்று தெரியவில்லை. பிறந்த வீட்டிற்கும் செல்ல இயலவில்லை. புகுந்த வீட்டிலும் பிரச்சினை. இப்படி திரும்பிய பக்கமெல்லாம் போராட்டங்களை சந்திக்கும் அகிலா, இப் பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்கிறாள் என்பது வரும் வாரங்களின் விறுவிறுப்பான காட்சிகள்'' என்கிறார், தொடரின் இயக்குனர் ரிஷி.

    ஒளிப்பதிவு: நாக.சரவணன். கதை, திரைக்கதை: தேவிபாலா, வசனம் பாலசூரியன். தயாரிப்பு பிளான் வி.புரொடக்ஷன்ஸ்.

    நட்சத்திரங்கள்: வாகை சந்திரசேகர், விஜயலட்சுமி, டில்லிகணேஷ், சோபனா, வந்தனா, புஷ்பலதா, வத்சலா ராஜகோபால், ஷ்யாம் கணேஷ்.

  6. #5
    Junior Member Admin HubberNewbie HubberTeam HubberModerator HubberPro Hubber
    Join Date
    Aug 2005
    Location
    India
    Posts
    16
    Post Thanks / Like

    hoping for better content in our TV serials.

    Aanaa and latha. Its interesting to watch you update serials here. do you do this as a general thing or as a parttime profession? You must be spending an awful lot of time doing this. Make be the serial makers should see your efforts and give better storyline, plots to their works. I sometimes feel thier efforts dont justify your interests. Atleast most of our serials.

Similar Threads

  1. Sun Tv New Serial - MUTHARAM A NEW TAMIL TV SERIAL
    By anbupani in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 26th November 2011, 08:27 PM
  2. best serial
    By kandiban in forum TV,TV Serials and Radio
    Replies: 42
    Last Post: 10th April 2007, 12:32 AM
  3. VASANTHAM CENTRAL [Singapore Tamil TV] - Really Great & Ente
    By Oldposts in forum TV,TV Serials and Radio
    Replies: 67
    Last Post: 26th March 2005, 08:32 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •