Results 1 to 5 of 5

Thread: VASANTHAM Serial

Threaded View

  1. #1
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like

    VASANTHAM Serial

    சன் டிவியில் வரும் திங்கள் முதல் ஒளிபரப்பாக விருக்கும் புதிய தொடர், `வசந்தம்'.

    வாழ்வில் ``வசந்தம்'' அனைவரும் எதிர்பார்ப்பதுதான். குடும்பச் சுமையைத் தாங்கும் அகிலாவின் வாழ்வில் வசந்தம் பல வடிவங்களில் தயாராகிறது! காதலில் வெற்றி, பதவி உயர்வு, குடும்ப சந்தோஷம் என வசந்தத்தின் வரிசை தொடரும் என எதிர்பார்க்கும் அவள், வலுவான விதியின் இரும்புக் கைகள் அவள் வாழ்வில் சூறாவளியை உருவாக்கும் என்பதை எதிர்பார்க்கவில்லை.

    எதையும் தாங்கும் மனநிலை கொண்ட அகிலாவோ அச்சூறாவளியை மென்மையான தென்றலாக மாற்ற முயற்சிக்கிறாள். ஆனால் அதற்குள் அப்பெண்ணின் வாழ்வில் குறுக்கிட்டு குழப்பும் மனிதர்கள், சம்பவங்கள், சூழ்நிலைகள் இவற்றை யதார்த்தமாக சித்தரிக்கும் கதையே ``வசந்தம்''.

    அகிலாவாக ``ப்ரண்ட்ஸ்'' விஜயலெட்சுமி நடிக்கிறார். மற்றும் சந்திரசேகர், டெல்லி கணேஷ், ஷியாம் கணேஷ், விஷ்வா, துர்கா, சைலஜா, வந்தனா, வத்சலா ஆகியோர் நடிக்கிறார்கள். திரைக்கதையை தேவிபாலா எழுத, பா.விஜய் பாடல் எழுதுகிறார். இசை: இமான். வசனம்: நடராஜ். ஒளிப்பதிவு: நாக சரவண்.

    பிரபல தொடர்களான சொந்தம், வாழ்க்கை, சஹானாவை இயக்கிய வெங்கட் இத் தொடரை இயக்குகிறார். மார்க்கெட்டிங் நிறுவனமான `விஷன் டைம்' முதன் முறையாக மெகா தொடரை தயாரிக்கிறது.

    தினமும் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் ஒரு மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கிறது, இந்த தொடர்.



  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Similar Threads

  1. Sun Tv New Serial - MUTHARAM A NEW TAMIL TV SERIAL
    By anbupani in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 26th November 2011, 08:27 PM
  2. best serial
    By kandiban in forum TV,TV Serials and Radio
    Replies: 42
    Last Post: 10th April 2007, 12:32 AM
  3. VASANTHAM CENTRAL [Singapore Tamil TV] - Really Great & Ente
    By Oldposts in forum TV,TV Serials and Radio
    Replies: 67
    Last Post: 26th March 2005, 08:32 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •