Page 5 of 46 FirstFirst ... 3456715 ... LastLast
Results 41 to 50 of 453

Thread: INTERVIEWS With TV Artists

  1. #41
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    காமெடி டைம் அர்ச்சனா பெண்குழந்தைக்கு தாயான பூரிப்பில் குண்டாகி விட்டார். உடம்பை குறைக்க கடந்த சில மாதங்களாக தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் என்றாலும் உடல் மெலியவில்லை. இன்னும் 3 மாதங்களுக்குள் முன்பு போல கொடிஇடைக்கு வந்து விடுவேன் என்று அவர் சவால் விட்டுள்ளார்.

    இதற்கிடையே அர்ச்சனா கலைஞர் டிவிக்கு தாவி விட்டார். ஸீ டிவியில் சேர்ந்து விட்டார்,விஜய் டிவியில் புதிய நிகழ்ச்சி வழங்கப்போகிறார் என்று பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன. இதுபற்றி அர்ச்சனாவிடம் கேட்டபோது இன்னும் 3 மாதம் கழித்து முடிவு எடுப்பேன் என்றார்.
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #42
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    அப்பா, அம்மாவை மதிச்சு நடக்கணும் : பணிவாக சொல்கிறார் புஷ்பலதா

    பெங்களூரிலிருந்து தமிழ் சீரியலுக்கு புதிய வரவாக புஷ்பலதா வந்திருக்கிறார். "மகராசி, வசந்தம்' சீரியங்களில் நடித்துக் கொண் டிருக்கிறார். புஷ்பலதாவின் பேட்டி:


    * நீங்க நடித்த சீரியலை பார்த்த இலங்கை டாக்டர் குடும்பத்தினர் சென்னை வந்து உங்களை சந்தித்தார்களாமே உண்மையா?

    கலைஞர் "டிவி'யில் நான் நடிக்கிற "மகராசி' சீரியல் பெண்கள் துணிச்சலா செயல்பட்டா எதிலும் சாதிக்கலாம்ங்கிறதை போல கதை போகுது. இந்த கதை போலவே இலங்கையில் ஒரு டாக்டரின் குடும்பத்திலும் சில நிகழ்வுகள் இருந்ததாம். இதனால என்னை பார்க்கணும்ன்னு நினைச்சு அவுங்க குடும்பத்தினர் சென்னை வந்திருக்காங்க. அன்று நான் வீட் டில் இல்லை. "மகராசி'யை தயாரிக்கும் அண்ணாமலை புரொடக் ஷன்ஸ் ஆபீஸ் போய் "ஷூட்டிங்' எங்கு நடக்குதுன்னு விசாரிச்சுக்கிட்டு ஸ்பாட்டுக்கு போயிருக்காங்க. அன்றைக்கு நான் "ஷூட்டிங்' போகலை. யூனிட்'டில் இருந்தவங்க மொபைல் போன்ல என்னை பிடிக்க முயன்றும் முடியவில்லை. இதனால அவுங்க ஓட்டலில் தங்கிவிட்டு மறுநாள் "ஷூட்டிங் ஸ்பாட்'டில் வந்து என்னை பார்த்தாங்க. "ஏன் இவ்வளவு செலவு செஞ்சுட்டு வந்து பார்க்கணுமா, போனில் பேசியிருக்கலாமே'ன்னு கேட்டேன். அவுங்க குடும்பத்தில் இதேபோன்று சில நிகழ்வுகள் இருந்ததாம். அதனால என்னை நேரில் பார்த்து பேசணும்ன்னு நினைச்சு சென்னை வந்தோம்ன்னு சொன் னாங்க. நாம எங்கேயோ இருக்கிறோம், எங் கேயோ இருக்கும் அவுங்க நம்மை தேடி வந்து பார்த்து நட்பா பேசறாங்க. "டிவி'யில் இருந் ததால தான் இப்படி ஒரு சந்திப்பு ஏற்பட்டது. இதை என்னோட நடிப்புக்கு கிடைச்ச பரிசா நினைச்சு சந்தோஷப்பட்டேன்.

    * சினிமாவில் நடிக்க முயற்சி செய்து வாய்ப்பு கிடைக்காமல் தான் சீரியலுக்கு வந்ததாக பேசப்பட்டதே?

    தெலுங்கில் "கருத்தவியம்' சீரியலை பார்த்த டைரக்டர் ப்ரியன் என்னை "மகராசி' சீரியலுக்கு அழைச்சு வந்தார். படத்தில் நடிக்கணும்ன்னு ஆசை தான். தெலுங்கு சீரியலில் நடிச்சிட் டிருந்தப்ப இரண்டு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. கிளாமரா நடிக்கணும்ன்னு கூடவே கண்டிஷனும் இருந்தது. நான் முடியாதுன்னு சொன்னதால வாய்ப்பு நழுவிப் போயிடுச்சு. அதற்காக நான் வருத்தப்படலை. நல்ல வாய்ப்பு வந்தால் நடிக்கலாம்ன்னு இருக்கேன். "டிவி'யில் நல்ல வாய்ப்பு வந் திட்டிருக்கு. ஒர்க் பண்ணவும் சிரமமில்லை. யூனிட்'ல எல்லாரும் நல்லா பழகுறாங்க. ரிலாக்ஸ்சா ஒர்க் பண்ண முடியறது. இப்படித் தான் எதிர்காலம் இருக்கும் ன்னு சொல்ல நாம ஆண்டவன் இல்லையே. நாம நல்லபடியா நடந்துக்கிட்டா நடப்பதும் நல்லதா நடக்கும்ங்கிற நம்பிக்கையில இருந்திட்டிருக்கேன்.

    * சீரியலில் சேலையை இழுத்து போர்த்திக் கொண்டு நடிக்கும் சில நடிகைகள் பொது இடங்களில் "டூ பீஸ்' சில் வந்து கலக்குகின்றனரே?

    மாடர்ன் டிரஸ் போடுவது அவுங்க அவுங்க இஷ்டம். பப்ளிக்ல அறிமுகமான நாம எப்படி நடந்துக்கணும்ன்னு கொஞ்சம் யோசிச்சா டிரஸ் விஷயத்தில கவனமா இருக்கணுன்னு தோணிடும். பொழுது போக்கு அம்சங்கள்ல நாட்டம் உள்ளவங்க மாடர்ன் டிரஸ் போட்டுக்க ஆசைப்படுவாங்க. மாடர்ன் டிரஸ் போட்டுக்கிடறது தவறுன்னு சொல்ல மாட்டேன். முகம் சுளிக்கிற மாதிரி டிரஸ் போட்டுக்கிறதை தவிர்க்கலாமேன்னு சொல்லலாம். சேலை. சுடிதார் தான் எனக்கு பிடிக்கும். ஜீன்ஸ், டிசர்ட் போடுவது கிடையாது.

    * சமீபத்திய சந்தோஷம் ஏதும்?

    "மகராசி'க்கு நல்ல முகராசி இருக்கு. சீரியல் பீல்டில் எனக்கு "பளிச்'ன்னு பப்ளிசிட்டி கிடைச்சிருக்கு. "டிவி' சீரியல்கள்ல டி.ஆர்.பி., ரேட்டிங்'ல முன்னணியில "மகராசி' இருந்து வருவதாக கலைஞர் "டிவி' பொதுமேலாளர் ப்ளாரென்ட் பெரேரா சொல்லியிருக்காங்க. சந்தோஷமாயிருக்கு.

    * கட்டுப்பாட்டை மீறி வீட்டில் அடி வாங்கிய சம்பவம் ஏதும்?

    ""அப்பா, அம்மா சொன்னதை நான் மீறினது கிடையாது. சுட்டித்தனம் கூட செய்ததில்லை. அப்பா, அம்மா அவுங்க உயிரை விட மேலாக நம்மை உயிரா நினைச்சு வளர்க்கிறாங்க. நமக்காக எவ்வளவோ தியாகம் செய்றாங்க. சாப்பிடற சாப் பாடு, போடுகிற டிரஸ் எதுவானாலும் குழந்தைகளுக்கு பிறகு தான் அவுங்களுக்குன்னு செய்துக்கிடறாங்க. இப்படிப்பட்டவங்க நம்மை கண்டிக் கிறாங்கன்னா காரணமில்லாமல் இருக்காது. அதனால அப்பா, அம்மாவை மதிச்சு நடக்கணும். அதே நேரம் பிள்ளைகளின் மனநிலை அறிந்து பெற்றோர்கள் நடந்துக்கணும். நல்ல வழிகாட்டணும். குழந்தைகளின் நியாயமான கோரிக்கைகள் பெற்றோருக்கு பிடிக்கலையென்றாலும் குழந்தைகளின் சந்தோஷத்திற்காக நிறைவேற்றி வச்சால் அந்த குடும்பத் தில் சந்தோஷத்திற்கு பஞ்சமிருக்காது,'' என்று அழுத்தமாக சொன்னார் புஷ்பலதா
    "அன்பே சிவம்.

  4. #43
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    அழணும்னா உடனே அழுதுடுவேன்; சிரின்னா உடனே சிரிச்சிடுவேன் : சொல்கிறார் காயத்ரி

    விஜய் "டிவி'யில் "ஜோடி நெம்பர் ஒன்' நடன போட்டியில் ஆட்டம் போடும் காயத்ரி, "மதுரை, ரேகா ஐ.பி.எஸ்., கல்யாணப் பரிசு' சீரியல்களிலும் நடித்து வருகிறார். "சிவா மனசுல சக்தி' படத்திலும் நடிக்கிறார். காயத்ரியின் பேட்டி:


    * மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலை பார்த்ததாக சொன்னாங்களே, அங்கு ஏதும் பிரச்னையா "டிவி' பக்கம் வந்திருக்கீங்களே ?

    பி.டெக்., முடிச்சிட்டு மைக்ரோ சாப்ட் நிறுவனத்தில் வேலை செஞ்சிட்டிருந்தேன். நல்ல சம்பளம் கிடைச்சது. இருந்தாலும் "டிவி' பக்கம் போகலாம்ன்னு ஆசை இருந்தது. வாய்ப்பு கிடைச்சா செய்யலாம்ன்னு நினைச்சிட்டிருந்தேன். கம்பெனியில் வேலை செஞ்சிட்டிருந்தப்ப கூடவே மாடலிங் கும் செஞ்சிட்டிருந்தேன். என்னை பார்த்த விஜய்ஆதிராஜ் அவருடன் "மீண்டும் ஒரு காதல் கதை' சீரியலில் நடிக்க அழைச்சார். வேலையை விட்டுட்டு "டிவி' பக்கம் வந்துட்டேன். "மதுரை, ரேகா ஐ.பி.எஸ்., கல்யாணப் பரிசு' சீரியல்களில் நடிச்சிட்டிருக்கேன்."சிவா மனசுல சக்தி' படத்தில நல்ல கேரக்டர் கிடைச்சதால சினிமாவிலும் கால் வச்சாச்சு.

    * நல்ல சம்பளத்தில் வேலையிலிருந்த உங்களுக்கு சீரியலில் எதிர்பார்த்த வருவாய் கிடைக்கிறதா?

    வாழ்க்கைக்கு பணம் தேவை தான். பணம் கிடைக்கிறதேன்னு பிடிக்காத வேலையை ஏனோ தானோன்னு செஞ்சுட்டிருப்பதைவிட பிடிச்ச வேலையை செஞ்சு அதுல என்ன கிடைக்கிறதோ அதுவே நிறைவா நினைச்சு சந்தோஷப் படணும். அப்பத் தான் பிடிச்ச வேலையை திருப்தியா செய்யலாம். பிடிச்சதுன்னு ஒரு வேலைக்கு வந்த பிறகு அங்க அவ்வளவு சம்பளம், இங்க இவ்வளவு சம்பளம்ன்னு கணக்கு பார்த்திட்டிருக்கலாமா சொல்லுங்கள்.

    * வேறு துறைகளில் ஆர்வம் ஏதும்?

    "லைப் ஈஸ் பியூட்டி புல்'ங்கிற பெயர்ல தமிழ் ஆல்பத்தில நடிச்சிருக்கேன். நாமும் தனியா ஆல்பம் பண்ணனும்ன்னு ஆசையிருக்கு. சரியான வாய்ப்பு அமையும் போது செய்வேன்.

    * சீரியலுக்கு வந்து சிரமப்பட்ட விஷயங்கள் ஏதும்?

    நடிக்க வந்த புதுசுல சீன்ல அழத் தெரியாது, வெட்கப்பட தெரியாது. ஆர்வமா நானே சீரியலுக்கு வந்ததால இப்ப எல்லாம் சரியாயிடுச்சு. அழனும்னா உடனே அழுதுடுவேன். சிரின்னா உடனே சிரிச்சிடுவேன். இந்த பீல்டு'ல ஆர்வமா கவனமா இருந்தா வாய்ப்பு வரும்.

    * விஜய் "டிவி' "ஜோடி நெம்பர் ஒன்' போட்டியில் வெற்றி பெறுவீர்களா?

    போட்டியில இருக்கிறவங்க சிலர் முறையா டான்ஸ் கத்துக்கிட்டு வந்திருக்காங்க. சிலர் டான்ஸ் மேல இருந்த ஆர்வத்தில வந்திருக்காங்க. எனக்கு டான்ஸ் மேல ஆர்வம் இருந்ததால தான் வந்திருக்கேன். யாரிடமும் டான்ஸ் கத்துக்கலை. போட்டியில "ரிகர்சல் ஸ்டார்ட்' ஆனதுமே டான்ஸ் மேல எனக்கு அதிரடி ஈர்ப்பு வந்திடுச்சு. அதனாலதான் போட்டியில இன்னும் நாங்க நின்னிட்டிருக்கோம். ஜெயிச்சுடுவோம்ங்கிற ஆசை இருக்கு. போட்டியில எல்லாருமே நல்லா ஒர்க் பண்ணிட்டிருக்காங்க. ஜெயிச்சா சந்தோஷம் தான்.

    * "டிவி'யெல்லாம் சரியா வராது, அமெரிக்காவில் நல்ல கம்பெனியா பார்த்து வேலை தேடு என்று உங்க அம்மா கண்டிஷன் போட்டாராமே?

    அம்மாவுக்கு இந்த பீல்டு முதலில் பிடிக்கலை. என் வழியில என்னை விட்டுடுங்கன்னு சொன்னேன். என்னோட ஆர்வத்தை பார்த்துட்டு தான் "டிவி'க்கு வர சம்மதிச்சாங்க. எனக்கு நல்ல வாய்ப்பு வந்துட்டிருப்பதால என்னை விட என்னோட அம்மா சந்தோஷமாயிருக்காங்க. வெளிநாட்டு வேலை பற்றியெல்லாம் இப்ப ஏதும் பேசுவதில்லை.

    * கம்ப்யூட்டர் தொழில்நுட்ப நிறுவனங்களில் பிரச்னைகள் பெரிதாக இருக்கிறது என்று சொன்னார்களே?

    எந்தத் துறையிலும் பெண்களுக்கு "சேப்ட்டி' கிடையாது. தேவையில்லாத டார்ச்சர் இல்லாமலிருக்கா? யாரு என்ன செய்றாங்க. எந்த நோக்கத்தில செய்றாங்க. எதற்காக செய்றாங்கன்னு தெரியாமலிருக்காது. டார்ச்சர் எந்த வகையில வருதோ அதே போக்கில போய் அவுங்களுக்கு நல்ல பாடம் புகட்டணும். நம்ம வழியில அவுங்க எந்த கிராசும் செய்யாத அளவிற்கு நம்ம எதிர்ப்பை காட்டிடணும். மறைமுகமா "டார்ச்சர்' கொடுக்கிறவங்களை நேரடியாக எதிர்ப்பதைவிட அறிவையும், திறமையையும் பயன்படுத்திக்கூட எதிர்க்கலாம். முடியலையா அலட்டிக்காம வேறு வேலை பார்த்துட்டு போயிடறது நல்லது.

    * உங்களுக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை பார்ப்பதாக சொன்னாங்களே?

    ""இப்பத்தான் "டிவி' பீல்டுக்கு வந்திருக்கேன். அதற்குள் மேரேஜ்ன்னு சொன்னா எப்படி சார். இந்த பீல்டுல ஸ்ட்ராங்கா நிக்கணும்ன்னு ஆசையில வந்திருக்கேன். திருப்தியடைஞ்ச பிறகு தான் மேரேஜ் பண்ணிக்குவேன். லவ் பண்ணி மேரேஜ் செஞ்சுக்கிடணுன்னு ஆசை இருக்கு. லவ் பண்ற ஆளு எனக்கு லைப்ல எல்லா வகையிலும் சரியான ஆளாத் தான் இருப்பார்'' என்று சொன்ன காயத்ரியை அவுங்க அம்மா மொபைல் போனில் அழைத்ததும் பறந்தார்.
    "அன்பே சிவம்.

  5. #44
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சரியா நடந்தா சிக்கல் வராது! சாந்தி ஆனந்த்ராஜ் அட்வைஸ்

    தீர்க்க சுமங்கலி, அவர்கள், சூர்யவம்சம், ஆசை உட்பட 20க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளவர் சாந்தி ஆனந்த்ராஜ். தற்போது ராஜ் டிவிக்காக ஆறுமனமே ஆறு, கலைஞர் டிவிக்காக சூப்பர் சுந்தரி ஆகிய சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். நான் கலைத்துறைக்கு வருவதற்கு பாட்டி ஜெமினி வரலட்சுமிதான் காரணம் என்றவர் செய்யற வேலையில கவனமா இருந்தா நினைச்சதை சாதிக்கலாம் என்றும் அனுபவம் சொன்னார். சாந்தி ஆனந்த்ராஜின் சுவராஸ்யமான பேட்டி:



    * உங்கள் பாட்டி உங்களை கலைத்துறைக்கு அழைத்து வந்ததாக உங்க வீட்டில் சொன்னாங்களே?

    என்னோட பாட்டி ஜெமினி வரலட்சுமி, சக்கரதாரி படத்தில் ஜெமினிகணேசன் ஜோடியாக நடிச்சவர். இந்த பீல்ட்ல அவருக்கு ஈடுபாடு இருந்ததால, என்னையும் கொண்டுவர ஆசைப்பட்டு நடிப்பு, பரதநாட்டியம்ன்னு எல்லாம் கத்துக்க ஏற்பாடு செஞ்சாங்க. பார்த்திபன் நடிச்ச சுகமான சுமைகள் படம் மூலம் நடிக்க துவங்கி சினிமா, சீரியல்கள்னு பட்டியல் நீண்டுக்கிட்டிருக்கு.

    * திடீர், திடீர் என்று பிரச்னை வந்துவிடுகிறது என்று புலம்பும் பெண்கள் பற்றி?

    இயல்பாகவே பெண்கள் பாதுகாப்பாக நடந்துகிடணும்ங்கிற நிலைதானிருக்கு. எல்லாப் பெண்களுக்கும் பிரச்னை வந்துடறதில்லை. என்ன செய்றோம்ன்னு தெரியாம, ஏதோ செஞ்சிடவறங்க தான் சிக்கலில் மாட்டிடறாங்க. சிக்கலிலிருந்து சமாளிக்க எடுக்கிற முயற்சியும் தோல்வியில முடியறப்ப மேலும் பிரச்னையில, சிக்கி உயிரை விடவும் துணிஞ்சிடறாங்க. எந்த பிரச்னையா இருந்தாலும் சம்பந்தப்பட்டவங்களிடம் தைரியமா பேசி முடிச்சிடணும். முடியலைனா நம்மை சுற்றி உள்ள நல்ல மனிதர்கள் யார்ன்னு பார்த்து அவுங்களிடம் சொல்லி பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க பார்க்கணும். இதைவிட்டுவிட்டு, சிக்கலை தீர்க்க ஏனோ தானோன்னு எதையாவது செய்து வேதனை படக் கூடாது.

    * வீட்டு வேலைகளில் ஆர்வம் காட்டாததால் பல நடிகைகளுக்கு வீட்டில் பிரச்னை என்று பேசப்படுகிறதே?

    திருமணமான பெண்கள் எந்தப் பணியில இருந்தாலும் வீட்டு மேலேயும் பொறுப்பா நடந்துக்கிடுவாங்க. வெளியில வேலை பார்க்கிறவங்களுக்கு அதிக நேரம் ஆயிடும்போது வீட்டை அவ்வளவாக கவனிக்க முடியாம போயிடும். சூழ்நிலையை புரிஞ்சுக்கிட்டு வீட்டார்கள் குறை சொல்லக் கூடாது. புரிஞ்சுக்கிடாதவங்க சின்ன பிரச்னையை கூட பெரிசா சொல்லிடும்போதுதான் சிக்கலாயிடுது. நான் படங்களில்,சீரியல்களில் பிசியா இருந்தப்ப எனக்கு மேரேஜ் நடந்தது. பிறகு நடிப்பதா வேண்டாமா என்ன செய்யலாம்ன்னு என்னோட கணவரிடம் கேட்டப்ப, நடிப்பின் மீது உனக்கு ஆர்வம், திறமை இருக்கும்போது அது என்னால முடங்கக் கூடாது. உன்னோட முயற்சிக்கு தடையா நான் இருக்க மாட்டேன். நீ செஞ்சிட்டிருக்கிற வேலையை தாராளமா செய்யலாம்ன்னு சொன்னார். ஷூட்டிங்ல நேரம் கொஞ்சம் அதிகமானா போன் போட்டு சொல்லிடுவேன்.வீட்டில் அதைச் செய்யலை இதைச் செய்யலைன்னு கோபிச்சுக்கிட மாட்டார். அவரோட நல்ல ஒத்துழைப்பாலதான் நான் செய்யற வேலையை ஒழுங்கா பொறுப்பா செய்ய முடியறது. வீட்டிலேயோ, வெளியிலேயோ நாம நடந்துக்கிடற விதத்திலதான் முடிவும் இருக்கு.எந்த விஷயமானாலும் நாம சரியா நடந்துக்கிட்டா சிக்கல் வராதுன்னு நான் சொல்வேன்.

    * நடிப்பில் பாலசந்தரை அசத்தியதாக சொன்னார்களே?

    பாலசந்தர் இயக்கிய சேரன் எக்ஸ்பிரஸ் சீரியலில் எனக்கு நடிக்க நல்ல வாய்ப்பு கிடைச்சது. கணவர் விபத்தில் இறந்திடுவார். நான் மாதமாயிருப்பதால அதை என்னிடம் மாமியார் சொல்லாமல் மறைப்பாங்க. மாமியராக இருந்தாலும், ஒரு மகளைப் போல என்னை பாவிப்பாங்க. விபத்து பற்றி தெரியாமலேயே, கதையும் முடிஞ்சுடும். அருமையான ஸ்டோரி. ரொம்ப ஆர்வமா நடிச்சேன். நடிப்பை பார்த்துட்டு பாலசந்தர் சார் பாராட்டினார்.

    * பிறந்த வீட்டில் கிடைக்கும் சுதந்திரம் புகுந்த வீட்டில் இல்லை என்று புலம்பும் பெண்கள் பற்றி?

    புகுந்த வீட்லேயும்முழு சுதந்திரம் கிடைக்கும். மருமகளை மாமியார் தனது மகளை போல பாவிச்சா பிரச்னை எப்படி வரும். மருமகளும் மாமியாரை, தன் அம்மாவைப் போல கவனிச்சுக்கிட்டா அவுங்க ஏன் மருமகளை பற்றி குறை சொல்லப் போறாங்க. விட்டுக் கொடுக்கும் தன்மை இருவரிடமும் இருக்கணும்.

    * நீங்கள் ஆசைப்படுவது எதுவும்...?

    எனக்கு எந்த ஆசையும் இல்லை. அமைதியா வாழ்க்கை போயிட்டிருந்தா போதும். எல்லாத்தையும் கடவுள் பாத்துக்கிடுவார். எனக்கு எது நடந்தாலும் அது அவரால்தான் நடக்கிறதுன்னு நினைச்சுக்குவேன். சந்தோஷம் வந்தா ஏத்துக்கிடற மனநிலை, சங்கடம் வந்தால் அதனை சமாளிக்கிற மனநிலையை ஆண்டவன் எனக்கு கொடுத்திருக்கார். என்னோட நினைப்பு நல்லபடியா இருக்கையில நடப்பதும் நல்ல படியாதானே இருக்கும்ங்கிற நம்பிக்கையோடு இருந்துக்கிட்டிருக்கேன்' என்றவர் சூப்பர் சுந்தரி சீரியலில் நடிக்க முட்டுக்காட்டுக்கு புறப்பட்டார்.
    "அன்பே சிவம்.

  6. #45
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    TINKY MARRIED

    கங்கா யமுனா சரசுவதி தொடரில் அறிமுகமான நடிகை டிங்கி, தொடர்ந்து அலைகள், மாங்கல்யம், பெண், ஜனனி, நீ நான் அவள், அகல்யா, கணவருக்காக என தொடர்ந்து சின்னத்திரையில் நடிப்பு முத்திரை பதித்தார். இப்போது திருமணமாகி கடந்த வாரம் சென்னையில் திருமண வரவேற்பையும் நடத்தினார்.

    வரவேற்பு விழாவுக்கு சின்னத்திரையே திரண்டு வந்திருந்தது. நடிகர்கள் ராஜேஷ், டெல்லிகணேஷ், கருணாஸ், சக்திகுமார் , பரத் கல்யாண், நடிகைகள் கவுசல்யா, ஈஸ்வரிராவ், மஞ்சரி, உமாரியாஸ், சுஜிதா என திரும்பிய திசையெல்லாம் சின்னத்திரையின் நட்சத்திரங்கள்.

    மணமக்களை வாழ்த்திய கையோடு டிங்கியிடம், "இனி நடிப்பு அவ்வளவு தானா?'' கேட்டோம்.

    டிங்கி இந்த கேள்வியை எதிர்பார்த்தது போல் பதிலை தயாராக வைத்திருந்தார். "நடிப்பு அனுபவத்தை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. வட இந்தியாவில் எங்கோ ஒரு இடத்தில் இருந்த இந்த டிங்குவை சின்னத்திரை தான் ரசிகர்களுடன் சொந்தம் கொள்ள வைத்தது. இந்த சொந்த உணர்வுடன் என் அடுத்த கட்ட வாழ்க்கையை தொடங்கவிருக்கிறேன். கணவர் கோபிக்கு சிங்கப்பூரில் பிஸினஸ் என்பதால் டிங்கி கோபி என்ற பெயரில் அங்கே என் வாழ்க்கை தொடங்கும்.''

  7. #46
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சுப்புலட்சுமியின் பேட்டி:

    சீரியல் ஷூட்டிங் பார்க்கப் போன சுப்புலட்சுமிக்கு சீரியல் இயக்குனர் சுந்தர் கே.விஜயன் செல்வி சீரியலில் நடிக்க வாய்ப்பு கொடுத்ததால், அரசி, காத்து கருப்பு, காதலிக்க நேரமில்லை, தேன்மொழியாள் என்று சீரியல்களில் சுப்புலட்சுமி பிசியாகி விட்டார். சுப்புலட்சுமியின் சுவாரஸ்யமான பேட்டி:

    வீடு முழுக்க ஜோதிகா படம் ஒட்டி வச்சிருக்கீங்களே என்ன விசேஷம்?
    ஜோதிகாவின் தீவிர ரசிகை நான். அவுங்க நடிச்ச எல்லா படமும் எனக்கு பிடிக்கும். சந்திரமுகி கிளைமேக்ஸ் சீன்ல நடிப்பால அசத்தினாங்க. அப்படி யாராலும் நடிக்க முடியாது. அவுங்களோட ஸ்டைல், மேனரிசம், பேச்சு, சிரிப்பு, காஸ்ட்யூம் செலக்ஷன் எல்லாம் எனக்கு பிடிக்கும்.
    நடிகையே ஒரு நடிகையின் ரசிகையாயிட்டீங்க.ஜோதிகாவை நேரில் சந்தித்த அனுபவம் ஏதும்?
    ஜோதிகாவை நேரில் சந்தித்து பேசணும்ன்னு ஆசையிருந்தது. எங்க அக்கா பிரியங்கா மூலம் அந்த வாய்ப்பு அமைஞ்சது. ஜோதிகா நடிச்ச "மணிகண்டா' படத்தில என்னோட அக்கா பிரியங்காவும் நடிச்சாங்க. "ஷூட்டிங் ஸ்பாட்'டுக்கு வந்து ஜோதிகாவை சந்திச்சு பேசணும்ன்னு சொன்னேன். அழைச்சிட்டு போறேன்னு சொன்ன அன் றைக்கு எனக்கு ஸ்கூல் இருந்தது. ஸ்கூலுக்கு "கட்' அடிச்சிட்டு ஜோதிகாவை பார்க்க போனேன். அன்பா பழகினாங்க, இனிமையா பேசினாங்க. ரொம்ப எளிமையா இருந்தாங்க. அவுங்களோட ஒவ்வொரு செய்கையும் எனக்கு பிடிச்சிருந்துச்சு. என்னோட பர்த்டே'க்கு வாழ்த்து சொன்னாங்க. நடிக்க வரவேண்டாம். நல்லா படிச்சு வேலைக்கு முயற்சி பண்ணு'ன்னும் அப்ப சொன்னாங்க. எதிர் பாராதவிதமா நான் நடிக்க வந்துட்டேன். ஜோதிகா திருமணத்திற்கு பிறகு நடிக் கலை. திறமையான நடிகை அவுங்க. மீண்டும் நடிக்க வரணும். அவுங்க சினிமாவில் நடிக்க சூர்யா சார் விட்டுக் கொடுக்கணும். அவுங்களோட ரசிகையா கேட்டுக்கறேன்.
    நடிகை ராதிகா உங்களுக்கு நடிப்பு சொல் லிக் கொடுத் தாங் களாமே?
    ராடன் "டிவி' தயாரித்த "செல்வி' தான் நான் முதலில் நடிச்ச சீரியல். அதுவும் ராதிகா மேடத்தோடதான் அதிகமா நடிக்க வேண்டியிருந்தது. ஆக்ட்டிங்ல அவுங்க சாதிச்சவங்க. முதல் நாள் ஷூட் டிங்ல அவுங்க கூட சரியா நடிச் சிட முடியுமான்னு பயமாயிடுச்சு. அவுங்க என்னிடம் நல்லா பேசினாங்க. பயப்படாம உன் இஷ்டத்திற்கு நடி. சரியில் லைன்னா பார்த்துக்கலாம்ன்னு சொன் னாங்க. சில சீன்களில் இப்படி நடிச்சா நல்லாயிருக்கும்ன்னு நடிப்பு சொல்லிக் கொடுத்தாங்க. பெரிய நடிகை என்ற பந்தா ஏதும் அவுங்களிடம் இல்லை. அவுங்களோட நடிச்சதால யார் கூடவும் பயமின்றி நடிக்கலாம்ங்கிற தைரியமே எனக்கு இப்ப வந்திடுச்சு. எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடிச்சிடலாம்னும் துணிச்சலிருக்கு.
    வெளிநாட்டில் மறக்க முடியாத சம்பவம் ஏதும்?
    செல்வி ஷூட்டிங் கிற்காக இலங்கை போயிருந்தோம். கொழும்பு, கதிர்காமம், நூரேலியான்னு அங்கு பல இடங்களில் ஷூட்டிங் நடந்தது. டிசம்பர் 26ம் தேதி கொழும்பு கடற்கரை அருகில் ஷூட்டிங் நடப்பதாக இருந்தது. முதல் நாள் மாலை ஷூட்டிங் பற்றி பேசிக் கொண்டிருந்தப்ப ராதிகாமேடம் நாளைக்கு ஷூட்டிங் வேணாம்ன்னு சொல்லிட்டு போயிட்டாங்க. மறுநாள் ஷூட்டிங்கை ரத்து செஞ்சுட்டாங்க. அன்று தான் சுனாமி தாக்குதல் நடந்தது. இலங்கை உட்பட பல நாடுகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. "செல்வி' சீரியல் ஷூட்டிங் நடத்த இருந்த இடத்திலிருந்த எல்லாவற்றையும் கடலலை அடிச்சுட்டு போயிடுச்சு. நாங்க அந்த நேரத்தில் கடற்கரையில் ஷூட்டிங்கில இருந்திருந்தா ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்பட்டிருக்கும். ராதிகாமேடத்தால யூனிட்ல உள்ள எல்லாரும் தப்பியதை மறக்க முடியாது.
    சமீபத்தில் மனம் நெகிழ்ந்த சம்பவம் ஏதும்?
    நெசவுத் தொழிலாளர்களின் வேதனையான வாழ்க்கை பற்றிய டாக்குமென்ட்ரி படத்தில் நடிப்பதற்காக அம்பாசமுத்திரம் போயிருந்தேன். சினிமா டைரக்டர் ராஜிவ் மேனனோட மனைவி லதா மேனன் தான் அதன் டைரக்டர். நெசவாளர்களின் வாழ்க்கை பற்றி நான் தெரிஞ்சுக்கிட்டா எதார்த்தமாக நடிக்க வாய்ப்பாயிருக்கும்ன்னு சொல்லி, நெசவாளர் வீட்டுக்கு அழைச் சுட்டு போய், அவுங்களோட பேச வச் சாங்க, அவுங்க துணி நெய்வதை பார்க்க வச்சாங்க. அதன் பிறகு தான் ஷூட்டிங் நடந்தது. துணி நெய்கிற சீன்ல கயிறெல்லாம் அடிச்சு ஈசியா நடிச்சிட்டேன். ஆனா, மறுநாள் கை, கால் வலி எடுத்திடுச்சு. ஒரு நாள் பேருக்கு ஒர்க் பண்ணியதே தாங்க முடியலை. வருடம் முழுவதும் இப்படின்னா பாவங்க அவுங்க. ஏதோ பணம் கொடுக்கிறோம். கலர் கலரா துணி வாங்கி போட்டுக்கறோம். அந்தத் துணி தயாராவதற்கு பின்னணியில் எவ்வளவோ உழைப்பும், எவ் வளவோ வேதனைகளும் புதைஞ்சு கிடக்குங்க. இது அவுங்களை நேர்ல பார்க்கிறவங்களுக்கு புரியும். நம்மால முடிஞ்ச அளவு கைத்தறி துணிகளை நாம வாங்கினா நெசவாளர்களுக்கு உதவியா இருக்குமுங்க'' என்று நெகிழ்வாக பதில் சொன்ன சுப்புலட்சுமியை அவரது அம்மா ராணி, கோவிலுக்கு போக வேண்டும் என்று மொபைல் போனில் அழைக்க, புறப்பட்டு சென்றார்.

  8. #47
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    பெண்கள் எதிலும் சாதிக்க முடியும் - சொல்கிறார் சுப்ரஜா

    ஆந்திர வரவான சுப்ரஜாவை பேட்டிக்காக அரும்பாக்கத்தில் உள்ள இந்தியன் மருத்துவமனையில் நடந்த கஸ்தூரி சீரியல் ஷூட்டிங்கில் சந்தித்த போது, கணவரின் ஒத்துழைப்பு இருந்தால் பெண்கள் எதிலும் சாதிக்க முடியும், என்று கணவர் புகழ் பாடினார். சுப்ரஜாவின் பேட்டி:

    அழுகின்ற சீன்களில் நடிக்க பல நடிகைகள் ஆசைப்படுவதாக டி.வி. சீரியல் வட்டாரத்தில் பேசப்படுகிறதே?
    ஆண்களைவிட பெண்கள் நிறைய சீரியல் பார்க்கிறாங்கன்னு ஒரு கணிப்பு இருக்கு. வாழ்க்கையில் அன்றாடம் நடக்கும் சம்பவங்கள்ல வித்தியாசமாக படறதைதான் டைரக்டருங்க சீரியலில் கதையாக கொண்டு வர்றாங்க. நடிப்பவர்கள் அழாமல் நடிக்க முடியுமா? மனுஷங்கன்னா அழுவதும், சிரிப்பதும் எதார்த்தம். அப்பத்தான் அவுங்க மனுஷங்க. அழற சீன் சீரியலில் நிறைய வந்தாலும் சென்டிமென்ட் சீன்களில் நடிக்க எனக்கு பிடிக்கும்.
    புதிய சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தும் மறுத்ததாக பேசப்பட்டதே உண்மையா?
    தெலுங்கில் நிறைய சீரியல்களில் நடிச்சிருக்கேன். கஸ்தூரி சீரியல் மூலமா தமிழுக்கு வந்திருக்கேன். அக்கா தங்கையிலும் நடிச்சிட்டிருக்கேன். இதற்கே நேரம் சரியாக இருக்கு. மலையாள சீரியலில் நடிக்க அழைப்பு வந்தது. நடிக்கலாம்'ன்னு இருக்கேன். தமிழில் இரண்டு வாய்ப்பு வந்தது. நேரமில்லாததால் ஒப்புக்கொள்ள முடியவில்லை.
    தமிழ் சீரியலில் நடிக்க உங்களுக்கு முன் அழைப்பு விடுக்கப்பட்டபோது தமிழ் தெரியாது, வாய்ப்பு வேண்டாம் என்று மறுத்ததாக பேசப்பட்டதே?
    நான் நடிச்ச தெலுங்கு சீரியலை பார்த்துட்டுதான் கஸ்தூரி சீரியலில் நடிக்க அழைப்பு வந்தது. சினிமான்னா சில சீன்கள்தான் நடிக்க வேண்டியிருக்கும். மொழி தெரியாவிட்டாலும் சமாளிச்சுடலாம். சீரியலில் டயலாக் நிறைய பேசவேண்டியிருக்கும், மொழி தெரியாம சமாளிக்கிறது சிரமமாயிருக்கும்ன்னு நினைச்சேன். அதனால மறுத்தேன். நீ சரி சொல்லும்மா நாங்க பாத்துக்கறோம்ன்னு தயாரிப்பாளர் சொன்னார். சரின்னு நடிச்சேன். ரெண்டு வருடமா சென்னையிலிருந்ததால, தமிழ் எனக்கு பிடிச்சதால விரைவா கத்துக்க முடிஞ்சது. தெலுங்கைவிட இங்கு நடிப்பில் ஆர்வம் அதிகமாயிருக்கு. ஷூட்டிங் கில் அழற சீன் ஒன்றில் ஷூட் செய்து முடிஞ்சதுகூட தெரியாமல் அழுது கொண்டேயிருந்தேன். சீன்' ஓகே, ஆயிடுச்சுன்னு டைரக்டர் சொன்ன பிறகும்கூட அழறதை நிறுத்த முடியலை. அந்தளவிற்கு ஈடுபாடு இருந்தது.
    திருமணம் ஆகாத நடிகைகளைவிட திருமணம் ஆன நடிகைகளுக்கு பிரச்னை அதிகமாயிருக்கு என்கின்றனரே?
    நடிகைகளுக்கு மட்டும்தான் பிரச்னை வரும் மற்றவங்களுக்கு வராதுன்னு ஏதும் கட்டுப்பாடு இருக்கா சொல்லுங்க. யாராயிருந்தாலும் சரியா நடந்துக்கிட்டா எப்படி பிரச்னை வரும். கணவன் மனைவி ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு நடந்துக்கிட்டா, எப்படி நடந்துக்கிட்டா லைப் சந்தோஷமாயிருக்கும்ன்னு யோசித்து நடந்துக்கிட்டா பிரச்னை எப்படி வரும். நடிகையா வரணும்ன்னு குழந்தையாக இருந்தபோதே எனக்கு ஆசை இருந்தது. எங்க வீட்ல யாருக்கும் பிடிக்கலை. திருமணம் ஆனதும் கணவர் என்ன சொல்வாரோ, நடிக்க அனுமதிப்பாரா, மாட்டாரா'ன்னு நினைச்சிட்டிருந்தேன். என்னோட ஆசையை புரிஞ்சுகிட்டவர் நடிக்க அனுமதிச்சார். எங்கள் வீட்டில் வேண்டாம்ன்னு சொன்னாங்க. நான் பார்த்துக்கறேன்னும் அவுங்களையும் சமாதானப்படுத்தினார். அவரோட ஒத்துழைப்பால நான் நடிச்சிட்டிருக்கேன். நாங்க ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சுக்கிட்டதால வாழ்க்கை சந்தோஷமாயிருக்கு.
    பெண்கள் பெண்களை பற்றி குறை கூறுவது அதிகமாயிருக்கு என்று பல பெண்கள் புலம்புகின்றனரே?
    பெண்கள்னாலே ஒருத்தரை ஒருத்தர் குறை கூறுவது சகஜமாயிடுச்சு. நமக்கு பிடிச்சது மத்தவங்களுக்கு பிடிக்காது, மத்தவங்களுக்கு பிடிச்சது நமக்கு பிடிக்காது. இதே நிலை தான் எல்லாருக்கும். அவுங்க அவுங்களுக்கு எது பிடிக்குதோ அதை செய்றாங்க. இதில நாம சொல்ல என்ன இருக்கு. தேவையில்லாம யாரையும் நாம இஷ்டத்திற்கு ஏதேதோ சொல்லி சங்கடப்படுத்தக் கூடாதுன்னு எல்லாரும் நினைச்சா குறை எப்படி வரும். பலரும் பலவிதமாயிருப்பதால எதிலும் அமைதி ஏற்படுவது சிரமமாயிடுது.
    பிரச்னையில் சிக்கிய அனுபவம் ஏதும்?
    வீட்டை விட்டு வெளியே ஒர்க் பண்ண போறப்ப எப்படி நடந்துக்கிடணும்ன்னு எங்க வீட்ல சொல்லியிருக்காங்க. வீட்ல உள்ள மூத்தவங்க சொல்றதை கேட்டு நடந்தாலே போதும் நமக்கு நாமே பாதுகாப்பான ஆளாயிடுவோம். எந்தப் பிரச்னையும் நெருங்காம பார்த்துக்கிற அளவுக்கு தைரியம் இருப்பதால இதுவரை எந்தப் பிரச்னையும் இல்லை, என்று சொன்ன சுப்ரஜாவை, கஸ்தூரி சீரியல் டைரக்டர் நடிக்க அழைக்க, ஷூட்டிங் ஸ்பாட்டுக்குள் புகுந்து கொண்டார்.
    "அன்பே சிவம்.

  9. #48
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    LEKHA RATHNAKUMAR

    சின்னத்திரையில் `இருட்டில் ஒரு வானம்பாடி' தொடங்கி `நீ எங்கே என் அன்பே' வரை 5 சீரியல்களை இயக்கியவர் லேகா ரத்னகுமார். இவரது சீரியல்களில் `இசை லேகா சொனட்டன்'என்று வரும். இன்றைய பிரபலங்களின் இசைக்கு எந்தவிதத்திலும் குறைந்திடாத இந்த இசைக்கு சின்னத்திரை ரசிகர்கள் வட்டாரத்திலும் எதிர்பார்ப்பு ஏற்பட, இந்த இசையையே தனது சீரியல்களின் தொடர் இசையாக ஆக்கிக்கொண்டார்.

    இப்போது ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களில் டைட்டில் இசைக்கு ஒரு இசையமைப்பாளர் ஒரு பாடலை உருவாக்கிக் கொடுப்பதோடு சரி. அப்புறமாய் பின்னணி இசைக்கெல்லாமே இந்த லேகா சொனட்டன் இசைதான் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    இது ஒரு இசை லைபரரி. லேகா - சொனடான் என்ற பெயரில், ஜெர்மன் ரிக்கார்டிங் கம்பெனியின் கூட்டு முயற்சியில் ஒரு மிïசிக் லைப்ரரியை ஆரம்பித்திருக்கிறார் லேகா ரத்னகுமார். இந்த லைப்ரரியில் இண்டியன் மிïசிக், வெஸ்டர்ன் மிïசிக் மற்றும் பல நாட்டு கிளாசிகல், கிராமப்புற மிïசிக் என எல்லாம் உண்டு.

    சின்னத்திரையிலோ, பெரிய திரையிலோ எந்தவிதமான கதையாக இருந்தாலும் அதாவது ஆக்ஷன், காதல், சோகம், காமெடி, கிராமத்துக் கதை, நகரத்துக் கதை, ஆக்ஷன் திரில்லர் - இப்படி எந்தவிதமான கதைக்கான பின்னணிக்கும் பயன்படுத்தக்கூடிய சி.டி.க்கள் இந்த லைப்ரரியில் இருக்கின்றன. இதுமாதிரியான அங்கீகாரம் பெற்ற மிïசிக் லைப்ரரி இந்தியாவிலேயே இது மட்டும்தான்'' என்கிறார், லேகாரத்னகுமார்.

  10. #49
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    PRIYA RAMAN

    வளசரவாக்கத்தில் உள்ள "மனோ ஹவுஸ்' படப்பிடிப்புத் தளம். வி.சேகரின், "பொறந்த வீடா புகுந்த வீடா' தொடரின் படப்பிடிப்பு.

    ""நம்ம குடும்பக் கெüரவத்தை நான் எப்படிக் காப்பாத்துறேனோ... அப்படி என் தங்கச்சி காப்பாத்துவாம்மா. நீங்க ஒண்ணும் வருத்தப்படவோ, சந்தேகப்படவோ வேணாம்'' என்று டயலாக் பேசுகிறார் ப்ரியா ராமன்.

    ஷாட் முடிந்து திரும்பிய ப்ரியா ராமனிடம் "கொண்டாட்டம்' பகுதிக்குப் பேட்டி என்றதும் மகிழ்ச்சியுடன் பேச ஆரம்பித்தார்.

    பானுப்ரியா நடித்துக் கொண்டிருந்த வேடத்தில் திடீரென்று நீங்கள் இடம் பெற்றது எப்படி? "பொறந்தவீடா புகுந்த வீடா' தொடரில் நடிக்க ஆரம்பித்த கதையைச் சொல்லுங்கள்?

    இந்தத் தொடர்ல பானு அக்காதான் நடிச்சிட்டு இருக்காங்கன்னு எனக்குத் தெரியும். நான் வேறொரு சீரியல் முடிச்சிட்டு, எனது மகன் பிறந்ததையடுத்து கொஞ்சம் ஓய்வில் இருந்தேன். அப்பத்தான் வி.சேகர் ஆபீஸிலேர்ந்து பேசுனாங்க. பானு அக்கா தனிப்பட்ட காரணத்தினால தொடர்ல இருந்து விலகுவதாகச் சொல்லி, என்னை நடிக்கக் கேட்டாங்க.

    ஒரு நடிகை செய்ததை இன்னொரு நடிகை செய்ய பொதுவாகவே தயங்குவாங்க. ரெண்டு பேருமே சினிமாவுல நடிச்சவங்க. இது ஒரு ஈகோ விஷயமா "டீல்' பண்ணாம நடிக்கணும்னு சொன்னாங்க. நான் ஏற்கெனவே வி.சேகர் சாரோட ஒரு படத்தை மிஸ் பண்ணிட்டேன். தேதி இல்லாம நடிக்க முடியல. இப்போ வாய்ப்பு வந்ததும் சந்தோஷமா ஒத்துக்கிட்டேன். மக்களும் என்னை ஏத்துகிட்டாங்க.

    நீங்க நடித்த காட்சிகளை பானுப்ரியா பார்த்தாங்களா? என்ன சொன்னாங்க?

    இல்ல. அவங்க குடும்பத்தில பெரிய ஃபங்ஷன் இருந்ததா கேள்விப்பட்டேன். அதனால தொல்லை பண்ணல. ரசிகர்கள் மத்தியில நல்ல வரவேற்பு இருக்கு.

    சினிமாவுலேர்ந்து சின்னத்திரைக்கு வந்ததைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?

    நான்கு, ஐந்து வருஷத்துக்கு முன்பு ஒரு சினிமா நடிகைகிட்ட சீரியல்ல நீங்க நடிக்கிறீங்களான்னு கேட்டால், அய்யோ... நான் படம்தான் பண்ணுவேன். கதாநாயகி வேஷம் கிடைக்கலைன்னாகூட அம்மாவா, அக்காவா சினிமாவுலதான் நடிப்பேன்னு சொல்வாங்க. சீரியல்ல நடிக்க மாட்டேன்னு மைண்ட்ல பிக்ஸ் ஆகியிருந்தது மறைந்து இப்போது, நெக்ஸ்ட் லாஜிக்கல் ஸ்டெப் இதுதான்னு புரிஞ்சுக்கிட்டாங்க. இது இறக்கம் இல்லை. பேரலல் இன்டஸ்டிரியா இருக்கு. இதுக்கு ஆடியன்ஸ் இருக்காங்க. டெக்னிஷியன்ஸ் இருக்காங்க. இது ஒரு பெரிய இன்டஸ்ட்ரியா வளர்ந்தாச்சு. எந்த விஷயத்திலும் குறைந்ததோ, தாழ்ந்ததோ இல்லன்னு ஆகிடுச்சு. சின்னசின்ன டெக்னிக்கல் வித்தியாசம்தான் அதுக்கும் இதுக்கும் இருக்கு. எனக்குச் சந்தோஷமாகத்தான் இருக்கு.

    சினிமா இன்டஸ்ட்ரிக்கு விரும்பிதான் வந்தீர்களா? இங்கே வந்தபிறகு வேறு எதையும் தவறவிட்டதாக வருத்தம் இருக்கிறதா?

    எனக்கே ரொம்ப பிரமிப்பா இருக்கு. எங்க குடும்பத்தில ஐ.ஏ.எஸ்., டாக்டர்னு படிச்சவங்க. அப்படி ஒரு பேமிலிலேர்ந்து இதுக்கு வரணும்னு ஆசை இருந்தது எனக்கு. இந்தளவுக்கு வருவேன்னு எதிர்பார்க்கல. 1994லிருந்து 2008 வரை பதினாலு வருஷம் பயணம். இந்தப் பதினாலு வருஷத்துல கதாநாயகியாகத்தான் இருக்கேன். அதுல நல்ல வரவேற்பு. தமிழ், தெலுங்கு, மலையாளம் என எதுவானாலும் பெரிய திரை, சின்னத்திரை எதுவானாலும் பெரிய அங்கீகாரம் கிடைச்சுது. ஐம்பது, ஐம்பத்தி ஐந்து படம் பண்ணியிருக்கேன். எட்டு, ஒன்பது சீரியல் பண்ணிட்டேன். எனக்கு இந்தத் தொழில் பிடிக்கும். இந்தத் தொழிலைக் காதலிக்கிறேன். எல்லோரும் கேட்பாங்க. இந்தத் தொழில்ல சம்பாதித்து, இதுலயே முதலீடு செய்றீயேன்னு...

    மாம்பழம் வியாபாரம் செய்றவங்க அதில் சம்பாதித்த பணத்தை, புது மாம்பழம் வாங்கத்தான் நினைப்பார்கள். ஒரு கூடை மாம்பழம் கெட்டுப் போயிட்டதால. அந்தத் தொழிலை விட்டுட மாட்டார்கள். அதுமாதிரி ஒரு படம் ஓடல. நஷ்டங்கிறதுக்காக இதைவிட முடியாது.

    உங்களோட கணவர் ரஞ்சித், நடிகராகத் தரும் அறிவுரை?

    நாங்க ஒருத்தரை ஒருத்தர் ஆரோக்கியமாக விமர்சித்துக் கொள்வோம். அறிவுரை என்பதைவிட "கன்சல்டேஷன்' கண்டிப்பா இருக்கும். எனக்கு அவர் சொல்றதைவிட, நான்தான் அவருக்கு அதிகம் சொல்வேன். அவர் எப்பவுமே மென்மையானவர். மீசை வைச்ச குழந்தைன்னு சொல்லலாம். அந்தளவுக்கு மென்மையான மனம் படைத்தவர். என் கணவர் என்பதற்காக நான் என்னுடைய தனிப்பட்ட உரிமை எதையும் விட்டுக் கொடுக்க மாட்டேன். அவரும் விட்டுக் கொடுக்க மாட்டார்.

    உங்களுக்கு எத்தனை குழந்தைகள்? என்ன செய்கிறார்கள்?

    ஆதித்யான்னு ஒரு பையன். பதினேழு மாசம் ஆச்சு. அப்படியே அவர் ஜாடை. ஆனால் என் கலர்ல இருக்கான். ஒரு தாயான பிறகுதான் ஒரு பெண் முழுமையடைவான்னு சொல்வாங்க. அது நூறு சதவிதம் உண்மை. இதற்கு முன்பு நான் ஒரு கல்லூரி மாணவி மாதிரி இருந்தேன். இப்போது பொறுப்பு அதிகரித்திருக்கு. அவன் என்னென்ன கத்துக்கணும், எப்படி வரணும், வளரணும்னு நிறைய ஆர்வம் இருக்கு.

    புதுசா வேறு என்ன திட்டம் இருக்கு?

    இந்த வருஷம் புதிய படம் தயாரிக்கத் திட்டமிட்டிருக்கேன். வி.சேகர் சார் யூனிட்ல வொர்க் பண்றது பெருமையா இருக்கு. ஹோம்லியான யூனிட். எல்லா உணர்ச்சிகளையும் வெளிப்படுத்கும் கதாபாத்திரம் எனக்குக் கிடைச்சிருக்கு.

    சீரியல்ல நடிக்க வரும்போது சினிமா கதாநாயகி என்கிற எண்ணத்தை ஓரங்கட்டிட்டு வரணும்னு ஒரு பிரபல நடிகை சொன்னாங்க. அதைப்பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?

    டி.வி. இன்டஸ்ட்ரி ஹீரோயின் ஒரியண்டட் இன்டஸ்ட்ரி. சினிமாவுல ஹீரோவை சுத்தி கதை நகரும். அவருக்கான வியாபாரத்தை நம்பி அதுகேத்த மாதிரி பாட்டு; பைட்டு; காட்சின்னு பண்ணுவாங்க. ரெண்டு கதாநாயகி. இவங்களுக்கு இவ்வளவுதான் வாய்ப்புன்னு ஃபிக்ஸ் ஆயிடும். ஆனால் டி.வி.யில் பெண்களுக்குத்தான் முக்கியத்துவம். இதற்கு சினிமா நடிகையா இருந்துதான் நடிக்க வரணும் என்கிற அவசியமும் கிடையாது. இங்கே அந்தக் கேரக்டர்தான் தெரிவாங்க... அவர்களைதான் ரசிகர்கள் விரும்புவாங்க. அப்படியொரு பவர்ஃபுல்லான மீடியா. தியேட்டர் இல்லாத ஊர்லகூட டிவி இருக்கு. மக்கள்கிட்ட தினம்தினம் ஒரு மெசேஜ் சேர்க்க முடியும். அதனால நாம எப்பவும் நடிகையா தெரியாமல் அந்தக் காரெக்டரா தெரியணும். அப்போதான் வெற்றி கிடைக்கும் அந்த காரெக்டருக்கு.

  11. #50
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    அம்மா அட்வைஸ் பெண்களுக்கு தேவை : சொல்கிறார் மத

    அப்பா அம்மாவின் பாசம், அட்வைஸ் பெண்களுக்கு அவசியம். இவைகளை மதித்து நடந்தால் பிரச்னை வராது! -கலைஞர் டி.வி.யில் மானாட மயிலாட நடன போட்டியில் ஆடிக்கொண்டிருந்த நடிகை மது சொன்ன மதுரமான வார்த்தைகள் இவை. அவரின் பேட்டி:

    * பேஷன் டெக்னாலஜியில் ஆர்வமாக இருந்ததாக உங்கள் வீட்டில் சொன்னாங்களே "டிவி' பக்கம் வந்திருக்கீங்களே?
    பிடிச்ச நல்ல விஷயங்கள்ல உறுதியா இருந்து, லைப்ல பயன்படக் கூடிய விஷயங்கள்ல இன்ட்ரஸ்ட் எடுத்துக்கிட்டு கத்துக்கிட்டா அடுத்த முயற்சிக்கு ஸ்ட்ராங்காயிருக்கும்ன்னு நினைச்சேன். ஸ்கூல் முடிச்சதும் பேஷன் டெக்னாலஜி படிச்சேன். என்னோட மாடலிங் போட்டோவை பார்த்துட்டு கஸ்தூரி சீரியலில் நடிக்க அழைச்சாங்க. டி.வி., சினிமா பக்கம் போகணும்னு எனக்கு இன்ட்ரஸ்ட் இருந்ததால வந்த வாய்ப்பை பயன்படுத்திக்கிட்டேன். வைரநெஞ்சம், "புரியாத புதிர், கலக்கல் சந்துரு காமெடி ஷோவில் நடிக்கும் வாய்ப்பு கிடைச்சது. மானாட மயிலாட டான்ஸ் புரோகிராமிலும் கலந்துக்கிட்டு ஆடிட்டிருக்கேன்.
    * போட்டியில் ஜெயிச்சுடுவீங்களா?
    மானாட மயிலாட டான்ஸ் போட்டியில ஜெயிச்சிடணும்ன்னு அதில கலந்துக்கிட்டிருக்கிற எல்லாருக்கும் ஆசையிருக்கு. அதனாலதான் போட்டி போட்டு வித்தியாசமா பாடல்களை செலக்ட் பண்ணி ரிஸ்க் எடுத்து ஆடிட்டிருக்கோம். நிச்சயம் ஜெயிக்கணும்ங்கிற கான்பிடன்ஸ் இருக்கு. இதற்கு காரணம் கலா மாஸ்டர்தான். முதலில் என்னை போட்டிக்கு செலக்ட் பண்ணும்போது என்னால் போட்டியில் சரியா ஆட முடியுமான்னு பயமாயிருந்தது. உன்னால முடியும். நீ நல்லா செய்வே, வந்து ஆடுன்னு கலா மேடம் சொன்னாங்க. என்னோட பிரண்ட்ஸ்களும் என்கரேஜ் பண்ணினாங்க. போட்டியில ஜெயிக்கணும்ங்கிற ஆர்வத்தோட சுரேஷ்வரும் நானும் ஆடிட்டிருக்கோம்.
    * நடிகைகள் விழாக்களுக்கு வரும் போது கிளாமராக டிரஸ் போட்டுட்டு வந்து கலக்குகின்றனரே உங்களுக்கு அப்படி ஆசை ஏதும்?
    எனக்கு அப்படியெல்லாம் ஆசையில்லை. அழகா நீட்டா டிரஸ் பண்றதுதாங்க பெண்களுக்கு நல்லது. கவர்ச்சியா தெரியணும்ங்கிற நோக்கில டிரஸ் பண்றதால பிரச்னைதான் வரும். அடுத்தவங்க இப்படி செய்றாங்களேன்னு நாமும் அப்படி செய்தோம்னா சிக்கல்தான். வித்தியாசமா, கிளாமரா டிரஸ் பண்ண ஆசைப்படும் பெண்கள் அவுங்களுக்கு நல்லவங்களா தெரியறவங்களிடம் டிரஸ் விஷயத்தில ஆலோசனை கேட்டு நடப்பது நல்லது. பேஷன்னு சொல்லிக்கிட்டு அரைகுறையா டிரஸ் போட்டுக்கிட்டு கூட்டங்களுக்கோ பப்ளிக்கிலோ போகக்கூடாது. அப்படிப்பட்ட டிரஸ்களை தயாரிக்கவும் கூடாதுன்னு அரசு கட்டுப்பாடு போடணும். மீறிப் போட்டுக்கிட்டு போறவங்க மேல அதிரடி நடவடிக்கை எடுத்தா அப்புறம் யாரும் அரைகுறையா டிரஸ் போட்டுக்கிட்டு பப்ளிக்ல போக பயப்படுவாங்க.
    * மேல்மருவத்தூரில் அடிக்கடி உங்களை பார்ப்பதாக சொன்னாங்களே, அப்படி என்ன பலமான வேண்டுதல்?
    எனக்கு கோவிலுக்கு போவது ரொம்ப பிடிக்கும். எங்க பேமிலியில இருக்கிற எல்லாரும் மேல்மருவத்தூர் கோவில் பக்தர்கள். அதனால மாதா மாதம் கோவிலுக்கு குடும்பத்தோட போயிட்டு வருவோம். அமைதியான சூழ்நிலையில் மனசு லேசாயிடும். என்ன செய்தால், எப்படி நடந்துக்கிட்டா சரியாயிருக்கும்னு மனசில நினைச்சு சாமிக்கிட்டே வேண்டிக்குவேன். ஏழைகளுக்கு என்னால முடிஞ்ச உதவிகளை செய்வேன். அப்பர் கிளாஸ், மிடில் கிளாஸ், லோ கிளாஸ்'ன்னு வித்தியாசமில்லாமல் எல்லாருக்கும் ஒரே மாதிரியா அம்மன் சன்னதியில் முக்கியத்துவம் இருப்பதால நிறைய பேர் கோவிலுக்கு வர்றாங்க.
    * முக்கியமான நினைப்பு ஏதும்?
    வசதி வாய்ப்பு இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி அப்பா, அம்மாவை எந்த சூழ்நிலையிலும் மறந்துடக் கூடாது. அவுங்களை நல்லபடியா வச்சுக்கணும். நாம செய்கிற விஷயங்கள்ல அவுங்க சந்தோஷப்பட்டாங்கன்னா அதைவிட அவுங்களுக்கு நாம செலுத்தும் நன்றிக்கடன் வேறென்ன இருக்கு.
    * இப்படி நடந்தால் தேவலாம் என்று ஏதாவது நினைப்பு?
    இந்தியாவில் திறமையானவங்க நிறைய பேர் இருக்காங்க. வெளிநாட்டினருக்கு சவால் விடும் திறமை நம்மவங்களிடம் இருக்கு. இருந்தும் பல நிறுவனங்கள் வெளிநாட்டிலிருந்து ஆட்களை வேலைக்கு அழைச்சிட்டு வர்றாங்க. இங்குள்ள திறமையானவங்களை இனம்கண்டு பயன்படுத்தினால், சாதிப்பாங்க. திறமையானவங்களுக்கு உரிய முக்கியத்துவம் உள்ள வேலை வாய்ப்புகள் கிடைக்காததால வெளிநாடுகளுக்கு ஓடிடறாங்க. அங்கு பெரிய ஆட்களாக இருக்காங்க. எதிலும், ஆற்றல் உள்ளவங்க, திறமையானவங்க இங்கேயே வேலை செய்ய வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்தா நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவியா இருக்கும்.
    * பிடிக்காத விஷயம்?
    யாரையும் மட்டம் தட்டி பேசக்கூடாது. அலட்சியப்படுத்தக் கூடாது. ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒரு வகையில் முக்கியத்துவம் வாய்ந்தவங்களாகத்தான் இருக்காங்க. அது தெரியாம அவுங்களை அலட்சியப்படுத்திடறாங்க. தனித் தன்மையை புரிஞ்சுக்கிட்டு அவுங்களை நல்ல படியா நடத்தினா அவுங்களும் சமுதாயத்தில முக்கியமானவங்களாயிடுவாங்க, என்று பொறுப்பாக சொன்னார் மது.
    "அன்பே சிவம்.

Page 5 of 46 FirstFirst ... 3456715 ... LastLast

Similar Threads

  1. IR concerts, TV shows and Interviews ...
    By Sanjeevi in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 355
    Last Post: 2nd June 2018, 06:26 AM
  2. Sharing-IR's music-interviews-BgmClips- in web
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 860
    Last Post: 2nd October 2012, 12:43 AM
  3. Talented TV artists
    By swathy in forum TV,TV Serials and Radio
    Replies: 20
    Last Post: 21st March 2010, 10:13 PM
  4. Artists and their best emotions
    By Shakthiprabha. in forum Tamil Films
    Replies: 167
    Last Post: 22nd May 2007, 08:41 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •