Page 20 of 46 FirstFirst ... 10181920212230 ... LastLast
Results 191 to 200 of 453

Thread: INTERVIEWS With TV Artists

  1. #191
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    படிக்க வந்த இடத்தில் நடிப்பு!

    "மெட்டிஒலி' தொடரை இயக்கிய திருமுருகன், தற்போது இயக்கி வரும் தொடர் "நாதஸ்வரம்'. ஒரு அழகான காலை பொழுதில் அத்தொடரின் படப்பிடிப்பு தளத்திற்குச் சென்றோம். அங்கு ஒப்பனை அறையில் மேக்கப் போட்டுக் கொண்டிருந்தார், அத்தொடரில் நாயகியாக நடிக்கும் ஸ்ருதிகா. ஒப்பனை செய்தபடியே நம் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

    "நாதஸ்வரம்' தொடரில் நடிக்கும் அனுபவம் பற்றி சொல்லுங்கள்?

    திருமுருகன் ஸôரைப் பற்றி நான் உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை. அந்த அளவுக்கு வெற்றிகரமாக ஓடிய தொடர்களை இயக்கியவர். அவருடைய டைரக்ஷனில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்தத் தொடரில் என் கேரக்டர் பேரு மலர். என்ஜினீயர் கதாபாத்திரம். ரொம்ப சாஃப்ட்டான நேச்சர் உள்ள பாத்திரம். அதேசமயம் என்னோட ஒர்க்ல ரொம்ப பெர்பக்ட்டா இருக்கிற மாதிரியான கேரக்டர். படப்பிடிப்பில் வேலைப் பளுவே தெரியாமல் ரொம்ப ரிலாக்ஸôக ஒரு குடும்பத்துல இருப்பது போல இருக்கு.

    இதைத் தவிர வேறு தொடர்கள் நடிக்கிறீங்களா?

    தற்சமயம் வேறு எந்த தொடரிலும் நடிக்கவில்லை. பெரியதிரையில் பாலு தம்பி மனசிலே என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துவருகிறேன். நேரம் கிடைக்காததால் நிறைய தொடர்களில் வாய்ப்பு வந்தும் நடிக்க முடியவில்லை.

    "நாதஸ்வரம்' தொடருக்கு உங்களை எப்படி தேர்வு செய்தார்கள்?

    "வெண்ணிலா கபடி குழு' படத்தில் நான் இரண்டாவது நாயகியாக நடித்திருந்தேன். அதற்கடுத்து "மதுரை டூ தேனி' படத்திலும் நடித்திருக்கிறேன். "வெண்ணிலா கபடி குழு' படத்துக்கு ஸ்கிரிப்ட் எழுதியவர்தான் "நாதஸ்வரம்' தொடருக்கு ஸ்கிரிப்ட் ரைட்டர். அவர் மூலமாகத்தான் இந்தத் தொடரில் நடிக்க எனக்கு வாய்ப்புக் கிடைத்தது.

    நீங்கள் பெரியதிரையில் இருந்து சின்னதிரைக்கு வந்தவரா?

    நான் பெரியதிரையில் இருந்து வரவில்லை. முதலில் சின்னதிரையில்தான் ஆங்கராக இருந்தேன். அதைத் தவிர நிறைய விளம்பரப் படங்களிலும் நடித்தேன். அதன் பிறகுதான் பெரியதிரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்பொழுது சின்னதிரை,பெரியதிரை இரண்டிலும் நடிக்கிறேன்.

    சினிமாத் துறைக்கு எப்படி வந்தீர்கள்?

    என் அக்கா சுதா, டிவியில்தான் ஆங்க்கராக இருக்கிறார்கள். நான் கல்லூரி விடுமுறையில் இருக்கும் பொழுது அவர் மூலமாக தான் சின்னதிரையில் வாய்ப்பு கிடைத்தது. அப்படி தான் இண்டஸ்ட்ரிக்குள்ளே வந்தேன்.

    பெரியதிரை, சின்னதிரை இரண்டுக்கும் என்ன வித்தியாசம் உணர்ந்தீர்கள்?

    சினிமாவைப் பொருத்தவரை குறுகிய காலத்தில் முடிந்துவிடும். ஆனால் சின்னதிரையில் தொடரை பொருத்தவரை மெகா பிராஜக்டாக இருக்கிறது. அதை தவிர வேறு வித்தியாசம் எதுவும் எனக்கு தெரியவில்லை.

    உங்கள் குடும்பம் பற்றி?

    எனக்கு சொந்த ஊர் மலேசியா. பிறந்தது, வளர்ந்தது எல்லாம் அங்கேதான். பள்ளி படிப்பு முடிந்தவுடன் மேற்கொண்டு படிப்பதற்காக மலேசியாவில் இருந்து சென்னைக்கு வந்தோம். பி.பி.ஏ. படித்துக் கொண்டிருக்கிறேன். தற்போது நான், அம்மா, அக்கா மூவரும் சென்னையிலேயே தங்கிவிட்டோம். அப்பா மட்டும் அடிக்கடி மலேசியா சென்று வருகிறார்.

    வெளியிடங்களுக்குச் செல்லும்பொழுது ரசிகர்கள் உங்களை அடையாளம் தெரிந்து கொள்கிறார்களா?

    நிறைய பேர் அடையாளம் தெரிந்து கொண்டு வந்து பேசுகிறார்கள். "நாதஸ்வரம்' தொடரில் கோபியை எப்போது திருமணம் செய்து கொள்ள போகிறீர்கள் என்று ரொம்ப ஆர்வமாகக் கேட்பார்கள். இங்கு இருப்பது போலவே மலேசியாவிலும் தமிழ் தொடர்களுக்கு நிறைய வரவேற்பிருக்கிறது. மலேசியர்கள், தமிழ் தொடர்களை விரும்பிப் பார்க்கிறார்கள். என் நண்பர்கள் எல்லாம் நான் நடிக்கும் தொடரைப் பார்த்துவிட்டு எப்படியிருந்தது என்று போன் செய்து சொல்லும்பொழுது ரொம்ப சந்தோஷமாக இருக்கும்.

    http://dinamani.com/edition/story.as...44&SEO=&Title=

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #192
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    நடிப்பு எனக்குப் புதுசு


    ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் "வந்தாளே மகராசி' தொடரின் மூலம் சின்னதிரை நடிகையாக களமிறங்கியிருக்கும் ஸ்ரீப்ரியா, தற்போது பெரியதிரையிலும் கால்பதித்து வருகிறார். மாடலிங் துறையில் இருந்த இவர் நடிப்பு துறைக்கு வந்த அனுபவத்தைப் பற்றி அவரிடமே கேட்போமா?

    * சினிமாவிலும் டி.வி. தொடரிலும் புதிதாக நடிக்கத் தொடங்கியிருக்கும் அனுபவம் பற்றி?

    "வந்தாளே மகராசி'தான் நான் நடிக்கும் முதல் தொடர். அதில் கிராமத்துப் பெண் பவானியாக வருவேன். இந்தத் தொடரின் கதை ரொம்ப வித்தியாசமானது. இப்பொழுது தான் என்னுடைய பகுதி வர ஆரம்பித்து இருக்கிறது. இனிமேல் எனக்கு நிறைய சவாலான நடிப்பு காத்திருக்கிறது. ஒருவிதத்தில் நெகட்டீவ் கேரக்டர்னுகூட சொல்லலாம். ஸ்ரீ எனக்கு ஜோடியா நடித்திருக்கிறார். பேசப்படுகிற மாதிரியான கேரக்டராக இருக்கும் என்னுடையது. அந்த டீம்ல எல்லாருமே ரொம்ப ஃப்ரண்ட்லியா இருக்காங்க. டைரக்டரிடம் இருந்து நடிப்பைப் பற்றி நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். முதல்முறையாகத் தொடரில் நடிப்பது எனக்கு ஒரு புது அனுபவமாக இருக்கிறது.

    * சினிமா துறைக்குள் வந்தது எப்படி?

    நான் ஈவண்ட் மேனேஜ்மெண்ட் பண்ணிக்கிட்டு இருந்தேன் அப்படியே மாடலிங்கும், சில ஷோவும் செய்துவந்தேன். அப்பொழுது சசிக்குமார் என் போட்டோவைப் பார்த்துவிட்டு அவருடைய "ஈசன்' படத்தில் நடிக்க கூப்பிட்டார். ஏற்கனவே சசிக்குமார் படங்களையெல்லாம் நான் பார்த்திருக்கிறேன். அதனால உடனே ஒத்துக்கிட்டேன். "ஈசன்' படத்தில் நாயகியின் தோழியாக நடித்திருப்பேன். அதன்பிறகு தான் ஜெயா டிவியில் இருந்து நடிக்க கூப்பிட்டார்கள். அப்படித்தான் சினிமாதுறைக்குள் எண்ட்ரி கொடுத்திருக்கிறேன்.

    * வேறு தொடர்களில் நடிக்கிறீங்களா?

    தற்போதைக்கு தொடர்கள் எதுவும் நடிக்கவில்லை. ஆனால் பெரியதிரையில் இரண்டு படங்கள் கமிட் ஆகியிருக்கேன். படத்துக்குப் பேரு இன்னும் வைக்கவில்லை.

    * என்ன மாதிரியான கதாபாத்திரங்கள் நடிக்க விருப்பப்படுகிறீர்கள்?

    நான் இப்பொழுதுதான் புதுசா சினிமாத் துறைக்குள் வந்திருக்கிறேன். நடிப்பு எனக்கு புதுசு. அதனால இந்தக் கதாபாத்திரம், அந்தக் கதாபாத்திரம்னு எனக்கு சொல்லத் தெரியலை. இருந்தாலும் எல்லா விதமான கேரக்டர்களும் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். குறிப்பாக நெகட்டீவ் கேரக்டராக இருந்தாலும் கண்டிப்பாக நடிப்பேன்.

    * மாடலிங் செய்வதற்கும் தற்போது நடிகையாகி இருப்பதற்கும் என்ன வித்தியாசம் உணர்ந்தீர்கள்?

    மாடலிங், நடிப்பு ரெண்டுமே வேற வேற துறை. மாடலிங் பொருத்தவரை கஷ்டம்னு சொல்வது போன்று எதுவும் கிடையாது. ஆனால் நடிப்பு அப்படியில்லை. நிறைய கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது. ஆரம்பத்தில் கேமிரா முன் நிற்பதற்கே எனக்கு ரொம்பப் பயமாக இருக்கும். எப்படி எங்க நிற்கணும், என்ன செய்யணும்னு எதுவுமே தெரியாது.

    ஏதாவது தப்பா செய்துவிட்டால் யாராவது திட்டிவிடுவார்களோன்னு பயம் இருந்தது. ஆனால் எல்லாருமே ரொம்ப ப்ரண்ட்லியா இருந்தாங்க. நிறைய சொல்லிக்கொடுத்தாங்க. ஓரளவுக்கு இப்போ அனுபவம் வந்துவிட்டது. இன்னொரு விஷயம் பார்த்தீங்கனா நடிப்பு துறைக்கு வந்த பிறகு எங்கு வெளியே போனாலும் மக்கள் அடையாளம் தெரிந்து கொண்டு வந்து பேசுகிறார்கள். அது எனக்கு புது அனுபவமா இருந்தது. ரொம்ப சந்தோஷமாவும் இருந்தது.

    குடும்பம் குறித்து?

    நான் பிறந்தது, வளர்ந்தெல்லாம் சென்னையில்தான். பி.எஸ்ஸி. சைக்காலாஜி படித்திருக்கிறேன். அப்பா சந்தானம், அம்மா ஷீலா, அக்கா, தங்கை, பாட்டி இருக்காங்க. இது தான் எங்கள் குடும்பம்.

    உங்கள் பொழுது போக்கு என்ன?

    சினிமாத்துறைக்கு வருவதற்கு முன்பு அடிக்கடி ஷாப்பிங் போவேன், பிரண்ட்úஸôட ஜாலியா அரட்டை அடிப்பேன். ஆனால் இப்பொழுதெல்லாம் ஷாப்பிங் போவதற்குகூட நேரம் கிடைப்பதில்லை. மாற்றி மாற்றி ஷூட்டிங் போவதற்கே நேரம் சரியா இருக்கிறது, அப்படியே நேரம் கிடைத்தாலும் நல்லா தூங்குறேன்.

    Thanks Dinamani
    [/tscii]

  4. #193
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    திருமதிகளின் செல்லப் பிள்ளை!

    2008 -ஆம் ஆண்டிற்கான சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளருக்கான சின்னதிரை விருது பெற்றிருக்கிறார் "திருமதி செல்வம்'

    தொடரின் நாயகன் சஞ்சய். "விளக்கு வெச்ச நேரத்துல' தொடரின் படப்பிடிப்பு தளத்தில் இருந்த அவரை உணவு இடைவேளையின்போது அவரிடம் பேசினோம்:

    "திருமதி செல்வம்' தொடரில் நடிக்கும் அனுபவம் பற்றி?

    திருமதி செல்வம் தொடரில் வரும் செல்வம் கதாபாத்திரம் ஆரம்பத்தில் சிரமமாக இருந்தது. முதல் ஆறுமாதம் இயக்குனர் உதவியால்தான் சிறப்பாக நடித்தேன். அதன்பிறகு நானே செல்வமாக ஒன்றிவிட்டேன். இப்போது எல்லாம் யாராவது செல்வம்ன்னு கூப்பிட்டால் கூட திரும்பிப் பார்க்கிறேன். அது தான் இந்தத் தொடரில் எனக்குக் கிடைத்த அனுபவம்.

    "மானாட மயிலாட' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் அனுபவம்?

    "மானாட மயிலாட' நிகழ்ச்சி முழுக்கமுழுக்க கமர்ஷியலான நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியைக் பொறுத்தவரை நான் முதல் முறையாகத் தொகுத்து வழங்குகிறேன். என் நண்பன் தீபக் கொடுத்த ஊக்கத்தால்தான் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறேன்.

    கலா அக்கா என்னை முதல்ல இந்நிகழ்ச்சியில் நடனம் ஆடுவதற்காகத்தான் கூப்பிட்டார்கள். எனக்கு நடனம் வேண்டாம்ன்னு சொன்னேன். அதனால் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் பொறுப்பைக் கொடுத்தார்கள். இன்று விருது வாங்குகிற அளவுக்கு எனக்கும் ஓர் இடம் கிடைத்திருக்கிறது.

    நிஜத்தில் சஞ்சய் செல்வம் மாதிரி பொறுமைசாலியா? இல்லை கோபமானவரா?

    ஒரு விஷயத்தைத் தொடர்ந்து செய்யும்பொழுது அது நம் மனசில் பதிந்துவிடும். அந்த விஷயம் சில நேரங்களில் நம் சொந்த வாழ்க்கையைக்கூட பாதிக்கும்னு சொல்வாங்க.

    இந்தத் தொடரில் வருவதற்கு முன்பு நான் ஓரளவுக்கு அமைதிதான். என்ன செல்வம் அளவுக்குப் பொறுமை கிடையாது. சட்டென்று கோபம் வந்துவிடும். ஆனால் "செல்வம்' கேரக்டரில் நடிக்க ஆரம்பித்த இந்த நான்கு வருஷத்தில், என் லைப் ஸ்டைலே செல்வமாக மாறிப்போச்சு. ரொம்ப பொறுமைசாலியாகவே மாறிவிட்டேன்.

    படங்களில் எதுவும் நடிக்கிறீர்களா?

    தற்போதைக்குப் படங்கள் எதிலும் நடிக்கவில்லை. ஒரு படத்திற்கு வாய்ப்பு வந்திருக்கிறது. அது முடிவானால் தான் முழுமையாகத் தெரியும்.

    2008-ஆம் ஆண்டுக்கான, சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளருக்கான சின்னதிரை விருது வாங்கும் பொழுது எப்படி உணர்ந்தீர்கள்?

    முதல்வர் கையால் சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளருக்கான விருது வாங்கினது ரொம்ப சந்தோஷமா இருந்தது. அதைவிட பெரிய சந்தோஷம் அவர் விருது கொடுக்கும்பொழுது என்னிடம் உன்னுடைய நடிப்பு எனக்கு ரொம்பப் பிடிக்கும், நான் உனக்குப் பெரிய ரசிகன். எங்க வீட்டில் எல்லாருக்குமே உன் நடிப்பு ரொம்ப பிடிக்கும்னு சொன்னார். அவ்வளவு பெரியவங்க அப்படிச் சொல்லும்பொழுது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அது நான் வாங்கிய விருதைவிட அதிக மகிழ்ச்சியைக் கொடுத்தது.

    ரசிகர்கள் என்ன சொல்லுகிறார்கள்?

    முன்பெல்லாம் என்னைப் பார்க்கிறவர்கள் நல்லா நடிக்கிறீர்கள் என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். "திருமதி செல்வம்' வந்த பிறகு நிலைமை அப்படியே மாறி எல்லோரும் என்னைப் பாராட்டுவதோடு நின்று பேசவும் விரும்புகிறார்கள். "திருமதி செல்வ'த்தின் மூலமாக திருமதிகளின் செல்லப்பிள்ளையாகிவிட்டேன்.

    குடும்பம்?

    என் மனைவி ப்ரித்தி. ரொம்ப உதவியாகவும், ஊக்கமாகவும் இருப்பார். அவரும் சின்னதிரை நடிகை என்பதால் என்னுடைய நடிப்பைப் பார்த்துவிட்டு, "இது நல்லா இருக்கு, இந்த இடத்துல இன்னும் கொஞ்சம் நல்லா செய்திருக்கலாம்'னு சொல்லுவார். எங்களுக்கு லயா என்று எட்டு மாத பெண் குழந்தை இருக்கிறார். இப்போது எங்கள் உலகமே அவர்தான்.

  5. #194
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    ஞாயிறு கொண்டாட்டம்
    நாயகியும் நானே வில்லியும் நானே!

    -ஸ்ரீதேவி குமரேசன்
    First Published : 27 Mar 2011 12:00:00 AM IST

    Last Updated :

    சுதôவாக "மகள்' தொடரிலும், சுவாதியாக "முந்தானை முடிச்சு' தொடரிலும் நடித்து வரும் துர்கா. அடுத்து மூன்று வேடங்களில் ஒரு தொடரில் பரபரப்பாக நடித்துக்

    கொண்டிருக்கிறார். அவரிடம் பேசியதிலிருந்து..

    "மகள்' தொடரில் சுதாவாக நடிக்கும் அனுபவம் பற்றி சொல்லுங்கள்?

    "மகள்' தொடரில் எங்கள் குடும்பம் பரம ஏழ்மையான குடும்பம். செருப்புத் தைக்கும் தொழிலாளியின் தங்கை நான். அதனால் பணத்தின் மீது அதிக ஆசைப்படும் ஓர் அப்பாவியான பெண்ணாக வருவேன். எனக்கு ஜோடியாக பாலாஜி நடிக்கிறார். என் அப்பாவித்தனத்தைப் பயன்படுத்தி என்னை ஏமாற்ற நினைப்பார் பாலாஜி. என் அண்ணனை ஒரு பணக்கார வீட்டு பெண் காதலிப்பாள். அவர்கள் காதலைச் சேர்த்து வைக்க முயற்சி செய்கிற மாதிரியான கேரக்டர். இந்தத் தொடரில் நடிப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

    "முந்தானை முடிச்சு' தொடர் பற்றி?

    "முந்தானை முடிச்சு' தொடர், நான்கு அக்கா தங்கைகளின் கதை. அந்த நான்கு பேரில் நான்தான் கடை குட்டி, என் பேரு சுவாதி. மாமியார் வீட்டில் எல்லோரையும் அனுசரித்துப் போகிற அன்பான மருமகள் கேரக்டர் எனக்கு. அந்தத் தொடரில் நடிப்பது நல்ல அனுபவமாக இருக்கிறது. நான் இதுவரை நிறையத் தொடர்களில் நடித்திருக்கிறேன். ஆனால் முந்தானை முடிச்சு தொடரில் நடிக்க ஆரம்பித்த பிறகு, எனக்கு நிறைய அங்கீகாரம் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. நிறையப் பேர் சுவாதி கேரக்டரைப் பற்றிப் பேசுகிறார்கள்.

    எத்தனை வருடங்களாக தொடரில் நடிக்கிறீர்கள். எப்படி இந்தத் துறையை தேர்ந்தெடுத்தீர்கள்?

    என் தம்பி குழந்தை நட்சத்திரமாக நிறைய தொடர்களிலும், படங்களிலும் நடித்திருக்கிறார். தம்பி சூட்டிங்குக்குப் போகும் போது நானும் அடிக்கடி கூட போவேன். அங்கே அவர்கள் நடிப்பதை எல்லாம் பார்த்துப் பார்த்து எனக்கும் நடிக்க வேண்டும் என்று ஆர்வம் வந்தது. அந்த நேரத்தில் தான் ஜீ தமிழ் சேனலில் "யாதுமாகி நின்றாய்' என்ற தொடரில் நடிகை சொர்ணமால்யாவின் மகளாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதிலிருந்து நான்கு வருடங்களாக நடித்து வருகிறேன். "சௌந்தரவல்லி', "உறவுக்குக் கைகொடுப்போம்' போன்ற பல தொடர்களில் நடித்திருக்கிறேன்.

    வேறு என்ன தொடர்களில் நடிக்கிறீர்கள்?

    ராஜ்டிவியில் ஒளிப்பரப்பாகும் "கொடிமுல்லை' தொடரில் நடித்து வருகிறேன். இதைத் தவிர "ஒன்றாய் இரண்டாய்' என்ற திரை படத்தில் நடித்து வருகிறேன்.

    அதையடுத்து தற்போது புதிதாக உருவாகி வரும் ஒரு மெகா தொடருக்காக மூன்று வேடங்களில் நடித்து வருகிறேன். அந்தத் தொடரின் கதாநாயகியும் நான்தான். வில்லியும் நான் தான். இன்னொன்று மென்மையான ரோல். ஆனால் அந்தத் தொடர் எந்த சேனலில் வரப் போகிறது என்று இன்னும் முடிவாகவில்லை. அந்தத் தொடரை, சௌந்தரவல்லி, கர்ணமஞ்சரி, அம்மன் போன்ற தொடர்களை இயக்கிய ஆர்.கே. இயக்கு

    கிறார்.

    ஒரே நேரத்தில் மூன்று வேடங்களில் நடிக்கும்போது ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் உங்களை எப்படி தயார் செய்து கொள்கிறீர்கள்?

    இயக்குநர் ஒவ்வொரு கதாபாத்திரத்தைப் பற்றிச் சொல்லும் போதும் பாஸிட்டிவ்வான கேரக்டரா, வில்லத்தனமான கேரக்டரா என்பதை முதலில் உள்வாங்கிக் கொள்வேன். ஷாட்டில் போய் நிற்கும்போதே அந்தக் கேரக்டராகத்தான் நிற்பேன். அதுவுமில்லாமல் ஒவ்வொரு கேரக்டரையும் மாற்றி மாற்றித் தான் எடுப்பார்கள். ஒரு கேரக்டருக்கு மேக்கப் போடும்போது அந்தக் கேரக்டராக என்னை மாற்றி கொள்வேன்.

    உங்களைப் பற்றி?

    எனக்கு தாய் மொழி சிந்தி. ஆனால் நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னையில் தான். அப்பா ஜி.லக்ஷ்மணன் எல்.ஐ.சி ஏஜண்டாகப் பணிபுரிந்து வருகிறார். அம்மா குடும்பத் தலைவி. ஒரு தம்பி, அவரும் நடித்துக் கொண்டிருக்கிறார்.



    Nandri. Dinamani
    Last edited by aanaa; 29th March 2011 at 07:50 PM.

  6. #195
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    மனிதரில் இத்தனை நிறங்களா?

    -ஸ்ரீதேவிகுமரேசன்
    First Published : 10 Apr 2011 12:00:00 AM IST

    Last Updated :

    விஜய் டிவி​யில் புதி​தாகத் துவங்​கி​யி​ருக்​கும் தொடர் "பிரி​வோம் சந்​திப்​போம்'.​ மனி​தர்​க​ளின் நிறத்தைக் கதைக்

    கரு ​வா​கக் கொண்டு உரு​வா​கி​யி​ருக்​கும் தொடர் இது.​ இதில் இரு​நா​ய​கி​க​ளில் ரேவதி கேரக்​ட​ரில் நடிக்​கும் கல்​யா​ணி​யி​டம் பேசி​னோம்.​ குழந்​தைத்தனம் மாறாத அவ​ரு​டைய பேச்சி​லி​ருந்து...​ ​

    "பிரிவோம் சந்திப்போம்' என்ன மாதிரி கதை? அதில் உங்கள் கதாபாத்திரம் என்ன?

    ஜோதி-ரேவதி என்ற இரு சகோதரிகளுக்கிடையே நடக்கும் கதைதான் "பிரிவோம் சந்திப்போம்'. மனிதர்கள் மனதில் பதிந்து கிடக்கும் நிறவேறுபாடுகளை வைத்து பின்னப்பட்டிருக்கிறது கதை. ரேவதி நல்ல சிவந்த நிறமாகவும் ஜோதி கருப்பாகவும் இருக்கிறார்கள். அதில் நான் ரேவதியாக நடிக்கிறேன். தாய், தந்தையை இழந்த நான் ஜோதியின் வீட்டில் வளர்வேன். எங்களுக்குள் நிற வேறுபாடு இருந்தாலும் நாங்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் அன்பாகவும் பாசமாகவும் எப்பொழுதும் ஒற்றுமையாகவும் இருப்போம். எங்கள் இருவருக்கும் நிறம் ஒரு பிரச்னை இல்லை.

    இது பிடிக்காத ஜோதியின் தாயும், பாட்டியும் எங்களைப் பிரிக்க முயற்சி செய்வார்கள். ஒரு கட்டத்தில் எங்களுடைய நிறமே பல சிக்கல்களை உருவாக்குகிறது. கருப்பாக இருக்கிற பெண் ஒருவித பிரச்னையை சந்தித்தால், சிவப்பாக இருக்கிற பெண் வேறு விதமான பிரச்னையைச் சந்திக்கிறாள். இப்படி மனித நிறத்தினால் விளையும் விபரீதங்களை எப்படி எதிர்கொள்ளுகிறோம் என்பதுதான் கதை. இதை உணர்வுபூர்வமானப் பாசப் போராட்டமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ரசூல் சார். இந்த தொடர் இந்தியில் மிகப் பரபரப்பாக ஓடிய "விதாய்' என்கிற தொடரின் ரீமேக்.

    டி.வி.யில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக கால் பதித்த நீங்கள் இந்தத் தொடரின் மூலம் நடிகையாகி இருக்கிறீர்கள்?... அதைபற்றி சொல்லுங்கள்?

    இந்தத் தொடரின் மூலம் தமிழில் கதையின் நாயகியாக அறிமுகமாகியிருப்பது சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் நான் சிறுவயதிலேயே நடிக்க வந்துவிட்டேன். குழந்தை நட்சத்திரமாக பல படங்களிலும், தொடர்களிலும் நடித்திருக்கிறேன். பிரபுதேவா சார் நடித்த "அள்ளித் தந்த வானம்' என்ற படத்தில் காசு காசு என்ற ஒரு ஹிட்டான பாடல் காட்சியில் நடித்திருந்தேன். அதன்பின் தான் விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியானேன். இதைத் தவிர மலையாளத்தில் இரண்டு, மூன்று படங்கள் நடித்திருக்கிறேன். "பருந்து' என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறேன். மோகன்லால் சார், மம்மூட்டி சாருடன் எல்லாம் நடித்திருக்கிறேன். அதனால் நடிப்பது புதுசாக தெரியவில்லை.

    வேறு தொடர் எதுவும் நடிக்கிறீர்களா?

    வேறு தொடர் எதுவும் தற்போதைக்கு நடிக்கவில்லை. ராஜ் டிவியில் பீச் கேர்ள்ஸ் என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறேன். இதைத் தவிர மேடைநிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருகிறேன். மற்றபடி நான் கிளாசிக்கல் டான்ஸர் என்பதால் பல வெளிநாடுகளுக்குச் சென்று நடன நிகழ்ச்சிகளும் செய்து வருகிறேன்.

    சினிமாவில் நடிக்க முயற்சி செய்யவில்லையா?

    தமிழில் பெரியதிரையில் இருந்து வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் நானும் படத்தில் நடித்துவிட்டேன் என்று வந்து போக எனக்கு அவ்வளவாக விருப்பமில்லை. கொஞ்சம் தாமதமானாலும் நல்ல கதையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதுபோன்ற கதை அமையும்போது கண்டிப்பாக நடிப்பேன்.

    நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது, நடிப்பது இவற்றில் எதைச் சுலபமாக உணர்ந்தீர்கள்?

    நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதுதானே என்று அலட்சியமாக இருந்துவிட முடியாது, ஏனென்றால் அங்கே கட் சொல்லி ஒன்ஸ்மோர் எல்லாம் போக முடியாது. கல்யாணியின் திறமைகளை வெளிப்படுத்தவேண்டும். ஆனால் நடிப்பு அப்படியில்லை இயக்குநர் உருவாக்கி வைத்திருக்கும் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுக்க வேண்டும். அங்கே கல்யாணிக்கு வேலையில்லை. எந்த வேலை செய்தாலும் அதை நேர்த்தியாகச் செய்து நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று நினைப்பவள் நான்.

    குடும்பம் குறித்து?

    தாய்மொழி மலையாளம். சொந்த ஊர் கொல்லம். ஆனால் நாங்கள் குழந்தையாக இருக்கும் போதே சென்னைக்கு வந்து செட்டில் ஆகிவிட்டோம். என் அப்பா ஜி.கே. சுரேஷ் பைலட்டாக இருக்கிறார். அம்மா வீணா சுரேஷ், அவர்களும் கிளாசிக்கல் டான்ஸர். நான் ஒரே பெண்தான். என்னுடைய சின்ன வயதில் அம்மாவுடன் போய் டான்ஸ் புரோகிராம் எல்லாம் செய்வேன். அப்போதுதான் நடிக்க வாய்ப்பு கிடைத்து நடிக்க வந்தேன்.



    Nandri. Dinamani
    Last edited by aanaa; 12th April 2011 at 07:05 PM.

  7. #196
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    tks for posting aanaa.

  8. #197
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    ஞாயிறு கொண்டாட்டம்
    உங்கள் குடும்பத்தில் ஒருத்தியாக..!

    First Published : 01 May 2011 12:00:00 AM IST

    Last Updated :

    கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "உறவுக்கு கை கொடுப்போம்' தொடரில் செந்தாமரையாக நடித்து வரும் சார்மியை இந்த வாரம் சந்தித்தோம். குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகமாகி, இன்று பெரியதிரையில் நாயகர்கள், நாயகிகளுக்கு அம்மா கேரக்டர் வரை செய்து வரும் அவருடன் ஒரு சுவையான கலந்துரையாடல்.

    "உறவுக்கு கை கொடுப்போம்' தொடரில் உங்களின் செந்தாமரை கதாபாத்திரத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?

    இந்தத் தொடரில் இரண்டாவது நாயகி செந்தாமரையாக நடித்து வருகிறேன். என்னைத் துரத்தித் துரத்திக் காதலிப்பரை மணந்து கொள்வேன். இதனால் என் மாமனாருக்கு என்னைப் பிடிக்காது அதனால் அவர் என்னை கஷ்டப்படுத்துவது போன்ற கேரக்டர். வெளியிடங்களுக்குப் போகும்போது நிறைய பேர் என் கேரக்டரை பார்த்து என் மீது பரிதாபப்பட்டுப் பேசியிருக்கிறார்கள். அவர்கள் அப்படி பேசும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

    குழந்தை நட்சத்திரமாக ஆரம்பித்துத் திரையில் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் நடிப்பு அனுபவத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?

    என் அப்பா நடிகர் சந்திரபாபுவின் மிக நெருங்கிய நண்பர். அதனால் நான் சிறுபிள்ளையாக இருக்கும் பொழுதிலிருந்தே எங்கள் குடும்பத்துக்கும் சினிமாவுக்கும் ஒரு பந்தம் உண்டு. அப்பவே நான் ஒரு நடிகையாகத்தான் வர வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். அப்போதே நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. "அன்புள்ள ரஜினிகாந்த்' படத்தில் மீனா நடித்த கேரக்டரில் நான்தான் முதலில் நடிப்பதாக இருந்தது. "தூங்காதே தம்பி தூங்காதே' படத்தில் கமல் சாரோட தங்கச்சி கேரக்டரும் நான்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் என் அப்பா படிப்பு முடியும் வரை சினிமா பக்கமே போகக் கூடாது என்று கண்டிப்பாகச் சொல்லியிருந்தார். அதனால் படிப்பை முடித்தவுடன் பெரியதிரையில் நடிக்க வந்துவிட்டேன். கிட்டதட்ட முப்பத்தி இரண்டு படங்களுக்கு மேல் நடித்திருக்கிறேன். ஹீரோயின் கேரக்டரில் இருந்து, அக்கா, தங்கை,அம்மா என எல்லாவிதமான கேரக்டரும் செய்து வருகிறேன்.

    உங்களை மக்களுக்கு அடையாளம் காண்பித்த தொடர் அல்லது படம் எது?

    பெரியதிரையில் "ஒயிலாட்டம்' என்ற படம் என்னை மக்கள் முன் அறிமுகப்படுத்தியது. அதற்கு அடுத்து "சிந்துபாத்' தொடரில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்திருந்தேன். அது மக்களிடையே வெகுவாக வரவேற்பைப் பெற்றுத் தந்தது.

    சின்னதிரையில் வேறு தொடர் எதுவும் நடிக்கிறீர்களா?

    "உறவுக்கு கை கொடுப்போம்' தொடர் மட்டும் தற்போது போய்க் கொண்டிருக்கிறது. அடுத்து ஒரு நல்ல கேரக்டராக அமைந்தால் கண்டிப்பாக நடிப்பேன். என்னைப் பொருத்தவரை நிறைய படங்களிலோ, தொடரிலோ நடித்துப் பணம் சம்பாதிப்பதைவிட நல்ல கேரக்டரில் நடித்து நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதுதான் ஆசை. அதனால் குறைவாக நடித்தாலும் கேரக்டர் பிடித்திருந்தால்தான் நடிப்பேன். இதைத் தவிர பெரியதிரையில் படங்களில் நடித்து வருகிறேன். சமீபத்தில் "கோட்டி', "புழல்' போன்ற படங்களில் அம்மா கேரக்டரில் நடித்திருக்கிறேன். அடுத்து தற்போது ரிலீஸ் ஆக உள்ள படங்கள் "காந்தி கணக்கு', "காதலித்துப் பார் வேதனை புரியும்', "பாண்டியன் எக்ஸ்பிரஸ்' போன்ற சில படங்களில் நடித்து வருகிறேன். நடிப்பைத் தவிர மேடை நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிவருகிறேன். இதையடுத்து கடவுள் ஏசு பிரானின் மகிமையைச் சொல்லும் ஏஞ்சல் டிவியில் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி வருகிறேன். நேரம் கிடைக்கும் பொழுது நடன நிகழ்ச்சியும் செய்து வருகிறேன்.

    சின்னதிரை, பெரியதிரை எதில் நடிப்பது விருப்பமாக இருக்கிறது?

    பெரியதிரையில் நடிப்பதுதான் எனக்கு சுலபமாக தோன்றுகிறது. ஏனென்றால் பெரியதிரையைப் பொருத்தவரை ஒவ்வொரு கேரக்டரும் மிகவும் உணர்வுபூர்வமாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் எனக்கு சிறுவயது முதலே பெரியதிரையில் ஆர்வம் அதிகம். அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

    அதற்காக சின்னதிரை மீது நாட்டம் இல்லை என்பதில்லை. அதேசமயத்தில் டி.வி.யில் உடனடியாக அங்கீகாரம் கிடைக்கிறது. இன்றைய சூழ்நிலையில் சின்னதிரைக்கு அதிக வரவேற்பிருக்கிறது. ஒரு தொடரில் நடித்தாலும் ரசிகர்களின் குடும்பத்தில் ஒருத்தியாக மாறிவிடலாம். பெரியதிரையில் மூன்று மணிநேரத்தில் நம்முடைய கேரக்டர் முடிந்துவிடும். ஆனால் சின்னதிரையில் அப்படியில்லை. மெகா தொடர்களாக வருவதால் வருடக்கணக்கில் தினமும் நம் முகத்தை மக்கள் பார்க்கிறார்கள். நான் முன்பே சொன்னது போன்று வெளியிடங்களுக்குப் போகும்போது அவர்கள் குடும்பத்துப் பெண் போன்று மக்கள் வந்து நலம் விசாரிக்கிறார்கள். நாம் வில்லியாக நடித்தால் கோபப்படுகிறார்கள். அதுவே பாஸிட்டீவ்வாக நடித்தால் நம் மீது பரிதாபப்படுகிறார்கள். அது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

    நீங்கள் இதுவரை இது போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கவில்லையே என்று வருத்தப்பட்டதுண்டா?

    வருத்தம் என்பதைவிட ஆசை என்று சொல்லலாம். "படையப்பா'வில் வரும் நீலாம்பரி கேரக்டரைப் போன்ற போல்டான கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதுண்டு. அதேபோல் வில்லி கேரக்டர்களிலும் நடிக்க வேண்டும் என்று நினைத்ததுண்டு.

    உங்களைப் பற்றி?

    என் கணவர் ராஜேஷ் செல்போன் கம்பெனி ஒன்றில் என்ஜினீயராக வேலை பார்க்கிறார். எங்களுக்கு இரண்டரை வயது மகன் இருக்கிறார். நான் மிகவும் கடவுள் நம்பிக்கை உள்ளவள். எனக்கு இதுபோன்ற ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்த கடவுளுக்கு நன்றி.


    Last edited by aanaa; 7th May 2011 at 10:33 PM.

  9. #198
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    கையில் சூடம் ஏற்றிப் பூஜை செய்தார்கள்!

    சேது படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் அபிதா. இவர் தற்போது திருமதி செல்வம் தொடரின் நாயகி அர்ச்சனாவாக நடிப்பதன் மூலம் இல்லத்தரசிகளின் இதயத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார். இத்தொடர் பற்றி அவர் கூறுகையில் சில நாட்களுக்கு முன் ஊட்டியில் இருந்து ஒரு பெண் போன் செய்து இந்தத் தொடரைப் பற்றி கூறினாள் : ""எங்கள் வீட்டில் நடப்பது போலவே இந்தத் தொடர் இருக்கிறது. இதைப் பார்த்ததன் மூலமாகப் பிரிந்திருந்த எங்கள் பெற்றோர் ஒன்று சேர்ந்து விட்டார்கள்'' என்று சொன்னது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. மேலும் தொடருகிறார்...



    திருமதி செல்வம் தொடரில் அப்பாவி அர்ச்சனாவாக வந்து இப்படி ரசிகர்களின் பரிதாபத்தை அள்ளுகிறீர்களே?

    பொறுப்பான குடும்பத் தலைவன் செல்வத்துக்கு ரொம்ப சாஃப்ட்டான திருமதி நான். ரொம்ப சிக்கனமான மிடில் கிளாஸ் ஃபேமிலி எங்களோடது. இப்போ கொஞ்சம் பணம் வர வர தாராளமாச் செலவு செய்ய ஆரம்பிப்பார் செல்வம். ஆனா பணம் வருதுன்னு இப்படி தாராளமா செலவு செய்யக் கூடாதுன்னு நான் சொல்வேன்.இப்படித்தான் போய்க்கிட்டு இருக்கு எங்க திருமதிசெல்வம் வாழ்க்கை. இந்தத் தொடரைப் பார்த்தீங்கன்னா நிறையக் குடும்பங்களில் நடக்கிற நிஜ சம்பவம் போலவே இருக்கிறது என்று நிறையப் பேர்போன் செய்து சொல்லியிருக்கிறார்கள். இன்ப,துன்பம் இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை. அதைத்தான் திருமதிசெல்வம் சொல்கிறது.

    பல வருடங்களாக ஒரே கேரக்டரில் நடிக்க சலிப்பு ஏற்பட வில்லையா?

    இந்தத் தொடரைப் பொறுத்தவரை சலிப்பு எப்பவுமே வந்ததில்லை. ஏனென்றால் அவ்வளவு எதார்த்தமான கதை இது. நாம் நிஜ வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்னைகளும், சந்தோஷத்தையும், துக்கத்தையும் கண்முன்னே கொண்டு வருவதால். ஆடியன்சின் வரவேற்பு இந்தத் தொடருக்கு அதிகம் கிடைக்கிறது. உதாரணத்துக்குச் சொல்ல வேண்டும் என்றால் இரண்டு வருடங்களுக்கு முன் நான் விபத்துக்குள்ளாகி இறந்துவிட்டதாக ஒரு வதந்தி வந்ததல்லவா? அப்போது பார்த்தீங்கன்னா நிறைய பேர் அழுதுகிட்டே எனக்கு போன் செய்து விசாரித்தார்கள்.

    அதுபோல சென்னை கோயிலில் ஓர் அம்மா கையில் சூடம் ஏற்றி பூஜை செய்தார்களாம். அப்போது அங்கு சென்ற இன்னோர் அம்மா அதைப் பார்த்துவிட்டு என்னவென்று விசாரித்திருக்கிறார்கள் அதற்கு அந்தம்மா சொன்னார்களாம். திருமதி செல்வம் தொடரில் வரும் அர்ச்சனாவுக்கு ஆக்சிடண்ட் ஆகிவிட்டதாம். அவங்களுக்கு எதுவும் ஆகாமல் நல்ல படியா பிழைத்து வரவேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்கள். நான் இங்கு சூட்டிங் வந்த பிறகு இந்த விஷயத்தை எங்களுக்குப் போன் மூலம் அம்மா தெரிவித்தார்கள். கேட்பதற்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இந்த ஆடியன்ஸ் எல்லாம் எப்படி என்னை அவர்கள் வீட்டு பெண்ணைப் போல பாவிக்கிறார்கள் என்று நினைக்கும் போது ஒவ்வொருநாளும் இதைவிட இன்னும் நல்லா செய்ய வேண்டும் என்ற ஆர்வம் வருகிறதே தவிர, சலிப்பு ஏற்பட்டதில்லை.

    அர்ச்சனா கேரக்டரைப் போன்று நேரில் பார்த்திருக்கிறீர்களா?

    நானே அந்த மாதிரி கேரக்டர் தான். அதைத் தவிர இந்தத் தொடரில் நடிக்க ஆரம்பித்த பிறகு நிறையப் பேர் போன் செய்து சொல்லியிருக்கிறார்கள். எங்க வீட்டில் நடப்பது போன்று இருக்கிறது. அல்லது அக்கம் பக்கத்து வீட்டு ஆட்களைப் பற்றி சொல்லுவது போல இருக்கிறது என கேள்விப்பட்டிருக்கிறேன். மற்றபடி ஸ்பாட்ல டைரக்டர் என்ன சொல்றாரோ, அதைத்தான் செய்கிறேன்.

    வேறு தொடர் எதுவும் நடித்துக் கொண்டிருக்கிறீர்களா?

    இந்தத் தொடரை தவிர கலைஞர் டிவியில் தங்கமான புருஷன் தொடர் மறு ஒளிபரப்பாகிறது. மற்றபடி வேற எந்த தொடரிலும் தற்போதைக்கு நடிக்கவில்லை. நல்ல கதை அமையும் போது கண்டிப்பாக நடிப்பேன்.

    பெரிய திரையில் உங்கள் நடிப்பை பார்த்து வெகுநாட்கள் ஆகிறதே மறந்துவிட்டீர்களா?

    அப்படியெல்லாம் இல்லை. இப்போது தான் என் குழந்தைக்கு ஒரு வருடம் ஆகப் போகிறது. அதனால் கொஞ்சநாள் கழித்து நடிக்கலாம் என்று காத்திருந்தேன். நல்ல பேனர்ல, நல்ல கேரக்டர்கள் வந்தால் கண்டிப்பாக நடிப்பேன்.

    கேரளாவில் இருந்து சூட்டிங்கிற்காக சென்னைக்கு வந்து போவது சிரமமாக இல்லையா?

    ஆரம்பத்தில்தான் சிரமம் தெரிந்தது, இப்பொழுது பழகிவிட்டது. சூட்டிங் இல்லாத நாட்களில் கேரளாவில் என் குழந்தையோடு தான்இருப்பேன்.

    நடிப்பைத் தவிர வேறு எந்தத் துறையில் ஆர்வம் இருக்கிறது?

    என் கணவர் ஒரு பிஸினஸ்மேன் என்பதனால் அவரோடு இணைந்து நானும் ஏதாவது பிஸினஸ் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. மற்றபடி வருங்கால திட்டம் என்று எதுவும் கிடையாது.

    உங்கள் ஓய்வு நேரங்களில் என்ன செய்வீர்கள்?

    ஓய்வு நேரமா? அப்படி ஓய்வு நேரம் எல்லாம் கிடைப்பதே இல்லைங்க. வீட்டில் இருந்தால் குழந்தையோடவே நேரம் சரியாக இருக்கும். அதே போல வீட்டில் இருக்கும் பொழுது நான்தான் சமையல் வேலைகளை எல்லாம் கவனிப்பேன். நன்றாகச் சமைக்கவும் செய்வேன். மற்றபடி சூட்டிங் சென்றுவிடுவேன்.

    உங்கள் குடும்பம் பற்றி?

    எனக்கு மூன்று சகோதரிகள் இருக்கிறார்கள். மூன்று பேருமே திருமணமாகி கேரளாவிலேயே செட்டில் ஆகிவிட்டார்கள். நான் நாலாவது பெண். அம்மா என்னோட தான் இருக்கிறார்கள். என் கணவர் சுனில். என் குழந்தை பேரு அல்சா.

    கனவு கதாபாத்திரம் என்ன?

    படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்தது போன்ற போல்டான வேடங்களில் நடிக்க வேண்டும். அது போல நல்லா சண்டை போடுவது போல் நெகட்டீவ் கேரக்டர்களும் செய்ய வேண்டும் என்று ஆசையிருக்கிறது.

  10. #199
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    if you go through the replies of the artists, all looks like sterio type.

    why?.

    looks like same stories repeating in serials.

  11. #200
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    ஞாயிறு கொண்டாட்டம்
    சாதிப்பதற்கு தடையில்லை!

    கன்னட சின்னதிரை நடிகையான மகாலஷ்மி

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் "பிரிவோம் சந்திப்போம்' தொடரின் மூலம் தமிழ் சின்னதிரையில்

    அடியெடுத்து வைத்திருக்கிறார்.

    அவரை தொலை பேசியில் தொடர்பு கொண்டு பேசினோம். தமிழில் ஒரு தொடராவது நடிக்க வேண்டும் என்பது என் கனவு. இந்தத் தொடரின் மூலம் என் கனவு

    நனவாகியுள்ளது என்கிறார்.

    உங்களைப் பற்றி?

    என்னுடைய சொந்த ஊர் பெங்களுர். சட்டம் படித்து வருகிறேன். கன்னட சின்னதிரை நடிகையாக இருக்கிறேன். தெலுங்கு தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்து நடித்தேன். அதன் மூலமாகத்தான் தமிழில் பிரிவோம் சந்திப்போம் தொடர் பற்றி கேள்விப்பட்டு அதன் இயக்குனர் ரசூல் ஸôரை வந்து பார்த்தேன். அந்தக் கதைக்கு நான் பொருத்தமாக இருந்ததால் இப்போது கதையிலே நடிக்கிறேன். எனக்குத் தமிழ் ரொம்ப பிடிக்கும். அதனால் தான் தமிழ் தொடர் என்றதும் உடனே ஒத்துக் கொண்டேன். தமிழ் தொடரில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

    பிரிவோம் சந்திப்போம் பற்றி?

    இந்தத் தொடர் தான் தமிழில் எனக்கு முதல் தொடர். இதில் இரண்டு நாயகிகள் இருக்கிறோம். இந்தத் தொடர் மனிதர்களின் நிற வேறுபாட்டை அடிப்படையாக கொண்ட தொடர். இதில் நான் கறுப்பு நிற பெண் ஜோதியாக நடிக்கிறேன். பொதுவாக வெள்ளையாக இருப்பவர்களை தான் மற்றவர்கள் ரசிப்பார்கள். கறுப்பாக இருப்பவர்கள் மீது அவ்வளவு ஈர்ப்பு இருக்காது.

    கறுப்பாக இருக்கும் ஒரு பெண் எந்த மாதிரியான பிரச்னைகளை எல்லாம் சந்திக்கிறாள் என்பதுதான் என் கேரக்டர்.

    பொதுவாக பெண்கள் தங்களை அழகாக காண்பிக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள், ஆனால் இந்தத் தொடரில் நீங்கள் கறுப்பு நிற பெண்ணாக வருகிறீர்கள். அதற்காக வருத்தப்பட்டதுண்டா?

    கண்டிப்பாக வருத்தப்பட்டதில்லை. அதுவுமில்லாமல் நிறத்தை ஒரு பொருட்டாக நான் ஒரு போதும் நினைத்ததில்லை. இதுபோன்று ஒரு கேரக்டர் செய்வதற்கு நான் ரொம்ப சந்தோஷப்படுறேன்.

    உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் நிறத்தில் என்ன இருக்கிறது? கறுப்பாக இருக்கிறவர்கள் படித்து நல்ல நிலைமைக்கு வருவதில்லையா? நாம் கறுப்பாக இருப்பதால் மற்றவர்கள் நம்மை உதாசீனப்படுத்தி விடுவார்களோ என்று பயந்தால் எதுவுமே சாதிக்க முடியாது. உலகில் சாதனையாளர்கள் யாரும் நிறத்தைப் பற்றி எல்லாம் யோசிப்பது கிடையாது. சாதிப்பதற்கு நிறம் தடையாக இருந்ததில்லை.

    நிஜத்தில் நீங்கள் கறுப்பு நிறம் தானா?

    என் நிறத்தைப் பற்றி சொல்லிவிட்டால் சுவாரஸ்யம் குறைந்துவிடும். அதனால் அது ரகசியமாக இருக்கட்டும்.

    தமிழ் நன்றாக பேசுகிறீர்களே எப்படி?

    பெங்களுரில் எங்கள் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லாம் தமிழ் ஆட்கள். அதனால் சின்ன வயதில் இருந்து அவர்களோடு பேசிப் பேசி தமிழ் நன்றாக கற்றுக் கொண்டேன். இங்கே தொடருக்காக முதல் நாள் நடிக்க வந்தபோதுகூட யாருக்கும் தெரியாது நான் கன்னட பெண் என்று. அந்த அளவுக்கு தமிழ் நன்றாக பேசினேன். அதேப் போல தெலுங்கிலும் நன்றாகப் பேசுவேன்.

    தமிழில் வேறு தொடர் எதுவும் நடிக்கிறீர்களா? பெரியதிரையில் நடிக்கிற எண்ணம் உண்டா?

    தற்போதைக்கு வேறு எந்தத் தொடரிலும் நடிக்கவில்லை. பெரியதிரையில் நடிக்கிற எண்ணம் இல்லை. ஆனால் படங்களுக்கு எடிட்டிங் செய்ய வேண்டும் என்று ஆசையிருக்கிறது. அதற்கான பயிற்சி எடுத்து வருகிறேன்.

    குடும்பம்?

    அப்பா ருஷிக் குமார் மைசூர் சாண்டல் கம்பெனியில் வேலை பார்க்கிறார். அம்மா சுசீலா, குடும்பத் தலைவி. நான் வீட்டுக்கு ஒரே பெண்தான். ஆனால் தாத்தா, பாட்டி, பெரியப்பா, சித்தப்பா என்று பெரிய கூட்டுக் குடும்பமாக இருக்கிறோம்.


    nandri.dinamani
    Last edited by R.Latha; 6th June 2011 at 01:19 PM.

Page 20 of 46 FirstFirst ... 10181920212230 ... LastLast

Similar Threads

  1. IR concerts, TV shows and Interviews ...
    By Sanjeevi in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 355
    Last Post: 2nd June 2018, 06:26 AM
  2. Sharing-IR's music-interviews-BgmClips- in web
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 860
    Last Post: 2nd October 2012, 12:43 AM
  3. Talented TV artists
    By swathy in forum TV,TV Serials and Radio
    Replies: 20
    Last Post: 21st March 2010, 10:13 PM
  4. Artists and their best emotions
    By Shakthiprabha. in forum Tamil Films
    Replies: 167
    Last Post: 22nd May 2007, 08:41 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •