Page 13 of 46 FirstFirst ... 3111213141523 ... LastLast
Results 121 to 130 of 453

Thread: INTERVIEWS With TV Artists

  1. #121
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    வில்லியாக நடிப்பதில்தான் திருப்தி' - நீலிமா ராணி.




    "சீரியல்களில் என் சாய்ஸ் வில்லிதான்' என்கிறார் "கோலங்கள்' தொடரில் வில்லி ரேகாவாக மிரட்டிக்கொண்டிருக்கும் நடிகை நீலிமா ராணி.

    ""இப்போது நிறைய பேர் சீரியல்களை பார்க்க ஆரம்பித்து விட்டனர். காரணம், ஒவ்வொன்றுக்கும் ஒரு சேனல் ஆரம்பிக்கப்பட்டு எல்லா விஷயங்களிலும் சலிப்பு ஏற்பட்டு விட்டது. காமெடி சேனல் என்ற பெயரில் விவேக்கையும் வடிவேலையும் மாற்றி மாற்றி காட்டுகிறார்கள். அது பலருக்கு பிடிக்கவில்லை. அதிலிருந்து நேயர்களை விடுவித்து ரிலாக்ஸ் கொடுப்பது சீரியல்கள்தான்.

    ஆண்டாண்டு காலமாக சொல்லப்பட்ட கதைகள்தான்; பார்த்த முகங்கள்தான் என்றாலும் சீரியல்களில் ஏதோ ஒரு விஷயம் நாளுக்கு நாள் புதுமையை ஏற்றிக் கொண்டிருக்கிறது. படித்தவர்களும் தொழில் நுட்பம் தெரிந்தவர்களும் சீரியலுக்கு வந்ததுதான் அதற்கு காரணம்.

    இப்போது "கோலங்கள்', "பராசக்தி' ஆகிய தமிழ் சீரியல்களிலும் "மாயா' என்ற தெலுங்கு சீரியலிலும் நடித்து வருகிறேன். மூன்று சீரியல்களுமே எனக்கு திருப்தியாக இருக்கிறது. இதைத் தவிர தற்போது வெளியான "நியூட்டனின் 3-ம் விதி', "ராஜாதிராஜா' படங்களும் எனக்கு நல்ல பெயரை வாங்கி தந்திருக்கின்றன. மேலும் "ஜக்குபாய்', "புகைப்படம்', "ரசிக்கும் சீமானே' ஆகிய படங்களில் நடித்து வருகிறேன்.

    சீரியல்களில் பெண்களையே முன்னிலைப்படுத்த காரணம் சீரியலுக்கு பெண்கள் ரசிகைகளாக இருப்பதுதான். பெண்களுக்கு பெண்கள்தான் வில்லியாக இருக்க முடியும். அதனால்தான் சீரியல்களில் வில்லி கேரக்டர்கள் பெண்களால் அலங்கரிக்கப்படுகின்றன.

    கோலங்களில் என்னுடைய ரேகா கேரக்டர் வில்லி ரகத்தை சார்ந்துதான் அமைந்திருக்கிறது. பாசமுள்ள அம்மா, அன்பான மனைவி, அருமையான காதலி போன்ற கேரக்டர்கள் கொடுக்காத அதிர்வுகளை வில்லி கதாபாத்திரம் மட்டுமே கொடுக்கிறது. அதனால் சீரியல்களில் என் சாய்ஸ் வில்லிதான்'' என்றார் நீலிமா ராணி.

    நன்றி: தினமணி
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #122
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    வெளியுலகம் அதிகம் தெரியாமல் வளர்க்கப்பட்ட விஜயலட்சுமி இன்று வீட்டுக்குள் உலகத்தை கொண்டு வரும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர். கேலக்ஸி பப்ளிகேஷன் பதிப்பாளர் + வெளியீட்டாளர். இருக்கும் இடம் தெரியாம இருக்கணும் என்று வளர்க்கப்பட்ட விஜயலட்சுமி இன்று சாயா விளம்பர நிறுவனத்தின் நிர்வாகி.

    ஒரு கார் ஷெட்டில் இரண்டு டேபிள், சேருடன் ஆரம்பிக்கப்பட்ட கேலக்ஸி இன்று பல கார்கள் நிற்கும் வகையில் போர்டிகோ அமைத்திருக்கிறது. பதினைந்து வருட அனுபவத்தில் செய்தி, பொழுதுபோக்கு என்று பல்வேறுபட்ட நிகழ்ச்சிகளை தயாரித்திருக்கிறது.


    கேலக்ஸிக்கு முன்னுதாரணம் என்று எதுவுமில்லை என்கிறார் விஜயலட்சுமி. ஆனால் இன்று இது மாதிரி நிகழ்ச்சி தயாரிக்கும் பல நிறுவனங்களுக்கு முன்னுதாரணமாக இருந்திருக்கிறது கேலக்ஸி.

    ஒரு நிகழ்ச்சிக்காக முதன்முதலில் இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்கு சென்றது கேலக்ஸிதான். பாட்டுக்குபாட்டு நிகழ்ச்சியை கனடா, பிரான்ஸ், லண்டன், ஜெர்மனி ஆகிய நாடுகளில் நிகழ்த்தியிருக்கிறது.

    இப்போதெல்லாம் கையில் பணம் இருந்தால் டிவியில் புரோகிராம் பண்ணிவிடலாம் என்று நினைக்கிறார்கள். புரடக்*ஷன் பண்ணுறது ஈசி. அந்த புரோகிராமை தூக்கி நிறுத்துவதுதான் கஷ்டம். அதை திறம்பட செய்து வரும் கேலக்ஸி, இன்னும் பல நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.

    சேரும் இடத்தை பொறுத்தே நதியின் சிறப்பு என்பார்கள். ரமேஷ்பிரபாவை சந்தித்த பிறகுதான் என் வாழ்க்கை சிறந்தது என்கிறார் விஜயலட்சுமி.

    ’’பொறந்தது மூணும் பொண்ணுங்க என்பதால அப்பா பொத்தி பொத்தி வளர்த்தாங்க. ரெண்டு அக்காவை விடவும் எனக்கு கொஞ்சம் கவனிப்பு அதிகம் இருக்கும். நடுத்தர குடும்பம்தான் ஆனா அம்மா(ஜெயா), அப்பா(ஆறுமுகம்) எங்களை கஷ்டம் இல்லாம வளர்த்தாங்க.

    . ரொம்ப தூரம் போய் படிக்கக்கூடாதுன்னு வீட்டுக்கு பக்கத்திலேயே உள்ள ஸ்கூலில்தான் படிக்க வச்சாங்க.சென்னை மண்ணடி ஏ.ஆர்.எஸ்.ஸ்கூலில்தான் +2வரை படிச்சேன்.

    நான் ஆசைப்பட்ட கல்லூரி எல்லாம் பஸ்ஸில் போய் படிக்கும் தூரத்தில் இருந்ததால அங்க போய் படிக்க அனுமதிக்கல. வீட்டுக்கு பக்கத்திலே நடந்து போகும் தூரத்தில இருந்ததால பாரதி பெண்கள் கல்லூரியில பி.காம் படிச்சேன்.

    எனக்கு விவரம் தெரிஞ்ச நாளா நானும் என் ரெண்டு அக்காவும் பாடப்புத்தகங்களை தவிர வேறு புத்தகங்களை அதிகமா படிச்சது இல்லை. டெய்லி பேப்பர் கூட வீட்டுக்கு வாங்கிட்டு வரமாட்டாங்க அப்பா. அதுல ரொம்ப மோசமான செய்தி எல்லாம் வரும்... அதனாலதான் அப்பா வாங்கிட்டு வரலன்னு அம்மா சொல்லிடுவாங்க. இதனாலதான் டிவியும் வாங்கல.

    எங்க பூர்வீகம் கும்பகோணம் பக்கம் குடவாசல். ஆனா துணி வியாபாரத்தால சின்ன வயசிலேயே சென்னைக்கு வந்துட்டாங்க அப்பா. ரெண்டு அக்காவையும் சென்னையிலேயே கல்யாணம் பண்ணிக்கொடுத்துட்டாங்க. பெரிய அக்காவுக்கு 10th படிச்சதும் கல்யாணமாச்சு. அடுத்த அக்காவுக்கு +2 முடிச்சதுமே கல்யாணம் ஆச்சு. நான் மட்டும் நிறைய படிச்சு வேலைக்கு போய்தான் கல்யாணம் பண்ணனும்னு இருந்தேன்.

    பஸ்ஸூல போகுற தூரம் தேனாம்பேட்டை எஸ்.ஐ.டி.காலேஜ். ஆனாலும், மல்லுக்கட்டி வீட்டில் சம்மதம் வாங்கிட்டேன். எம்.காம். சேர்ந்தேன். ரெண்டு நாள் காலேஜ் போனேன். அப்ப ஒரு யோசனை வந்துச்சு. இன்னும் ரெண்டு வருசம் படிச்சு காலத்த எதுக்கு ஓட்டிக்கிட்டு... பேசாம இப்பவே வேலைக்கு போயிட்டா என்னன்னு யோசிச்சு ஒரு முடிவுக்கு வந்துட்டேன்.

    காலேஜ் விட்டதும் தேனாம்பேட்டையிலிருந்து மண்ணடி போறதுக்குத்தான் பஸ் ஏறினேன். மவுண்ட் ரோடு வழியாதான் பஸ் போகும். ஆனந்த விகடன் பத்திரிக்கை ஆபீஸ் மவுண்ட் ரோட்டில்தான் இருக்கு. என் தோழி சுபா அங்கே வொர்க் பண்ணிக்கிட்டு இருந்தா. அவள பார்த்து வேலை வி்*ஷயமா சொல்லலாம்னு போனேன். அவளோ டக்குன்னு என்னை மதன் சார்கிட்ட கொண்டு போய் நிறுத்திட்டா.

    ஆனந்த விகடனில் (96ல்) எனக்கு எடிட்டோரியல் செகரட்டரி போஸ்டிங் கிடைச்சது. ஒரு வருஷம் அங்க வொர்க் பண்ணினேன். அந்த சமயத்துலதான் அவர (ரமேஷ்பிரபா) சந்திச்சேன். விகடன் மாணவர் திட்ட நிருபரா இருந்து அவர் ஃப்ரீலான்ஸ் பத்திரிக்கையாளரா அங்க வொர்க் பண்ணிக்கிட்டு இருந்தார். விகடனுக்கு பக்கத்திலே இருந்த கிளாரியன் ( clarion) விளம்பரக் கம்பெனியில் முழு நேரமா வொர்க் பண்ணிக்கிட்டு இருந்தார்.

    காலேஜ் படிக்கும் போது படிப்பு, வேலைவாய்ப்பு சம்பந்தமாக அவர் எழுதின புத்தகங்கள் சில தோழிகள் மூலமாக படிச்சிருக்கேன். ரொம்ப பெரிய ஆளுன்னு நினைச்சிருந்தேன். நேரில் பார்த்தப்போ ரொம்ப சின்னப்பையனா இருந்தார். இந்த ஆச்சர்யத்தைதான் முதல் சந்திப்பில் அவர்கிட்ட சொன்னேன்.

    விகடனில் அவர் நிறைய பிஸினஸ் தொடர்கள் எழுதுவார். அது சம்பந்தமாக அடிக்கடி அவர் அங்கு வருவார். நல்ல பழக்கம் இருந்தது. ஒரு வரஷத்துக்கு பிறகு நியூ இந்தியா கம்பெனியில் எனக்கு ஜாப் கிடைச்சது. அவருக்கும் ‘உள்கா’ விளம்பரக் கம்பெனியில் பிராஞ்ச் மேனேஜர் போஸ்டிங் கிடைச்சது. எப்போதும் போல யதார்த்தமாக சந்திச்சுக்கிட்டோம்.எங்க வீட்டுக்கு எல்லாம் அவர் அடிக்கடி வருவார். அம்மா,அப்பாவுக்கு அவர் மேல நல்ல அபிப்ராயம் இருந்துச்சு.

    யதார்த்தமான சந்திப்புகள் பிறகு அர்த்தமுள்ள சந்திப்புகளாக மாறிப்போச்சு. 90ல் இரு வீட்டு சம்மதத்துடன் கல்யாணம் செஞ்சுக்கிட்டோம். இனம் வேறுங்கிறதால அவுங்க பக்கம் கொஞ்சம் எதிர்ப்பு இருந்துச்சு. அப்புறம் எல்லாம் சரியாச்சு’’ என்று சொல்லும் விஜயலட்சுமிக்கு, ரமேஷ்பிரபா பிஸினஸ் சம்பந்தமாக எழுதின புத்தகங்களில் ரொம்ப இம்ரஸ் பண்ணினது ‘எதையும் விற்கும் உலகம்’! இவரும் அவரும் சேர்ந்து இதைத்தான் விற்கணும் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். அது சன் தொலைக்காட்சி ஆரம்பித்த நேரம்.

    ‘’காலேஜ் சமயத்துல அவர் நிறைய காலேஜ் புரோகிராம் பண்ணியிருக்கிறார். அதே மாதிரி பண்ணலாம்னு முடிவெடுத்து சன் டிவியில் சொன்னார். ஓகே ஆச்சு.

    93ல் வார்த்தை விளையாட்டுன்னு சன் டிவியில் புரோகிராம் பண்ணினார். அந்த புரோகிராமுக்கு நான் கோ-ஆர்டினேட்டரா இருந்தேன்’’ என்கிறார்.

    தொண்ணூறுகளின் துவக்கத்தில் டிவி நிகழ்ச்சிகள் தயாரிக்கும் நிறுவனங்கள் வெகு சில மட்டுமே இருந்தன. அதுவும் தூர்தர்ஷன் டிவிக்குதான் அவை தயாரித்து கொடுத்தன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சமயத்தில் கேலக்ஸி என்ற நிறுவனத்தை ஆரம்பித்து முதன் முதலாக நிகழ்ச்சி தயாரித்து கொடுத்ததை சொல்கிறார்.

    ‘’ராஜ் டிவியில் 94ல் ‘ஓல்ட் இஸ் கோல்டு’ புரோகிராம் பண்ணினோம். சிலோன் ரேடியோவில் நிகழ்ச்சி தொகுப்பாளரா இருந்த எம்.எச்.அப்துல் ஹமீது சார்தான் அந்த புரோகிராமை தொகுத்து வழங்கினார். நல்ல வரவேற்பு இருந்துச்சு அந்த புரோகிராமுக்கு.

    அவர்(ரமேஷ் பிரபா) திருச்சி பெரம்பலூர் மாவட்டம் மேலப்புலியூரில் பிறந்தவர். ஜமீன் வம்சத்தை சேர்ந்தவர். இந்த தலைமுறையில வசதி கொஞ்சம் குறைவு. அப்படியும் இவருக்கு பூர்வீக சொத்து இருந்துச்சு. ஆனாலும் அந்த பணத்துல கேலக்ஸியை ஆரம்பிக்கல. கையில் இருந்த கொஞ்ச பணத்தை வைத்துதான் ஆரம்பிச்சோம். ஆழ்வார்பேட்டையில் ஒரு கார் ஷெட்டில் தான் கேலக்ஸி ஆபீஸ். இரண்டு டேபிள் சேர் மட்டும் இருக்கும். அவரு பிஎஸ்சி, பி.டெக், எம்பிஏன்னு நிறைய படிச்சிருக்கிறார். அந்த படிப்பு, அவரோட திறமை, என்னோட ஒத்துழைப்புன்னு எல்லாம் சேர்ந்து கேலக்ஸியை வளர்த்தெடுத்தது’’என்று நிம்மதி பெருமூச்சு விடுகிறார். 97ல் சொந்த நிறுவனம் ஓரளவிற்கு வளர்ந்து விட்டதால் அதுவரை தான் பார்த்து வந்த நியூ இந்தியா வேலையை விட்டு விலகியிருக்கிறார். அந்த சமயத்தில் நியூ இந்தியாவில் அவர் வாங்கிய சம்பளத்தொகை பன்னிரண்டாயிரம்.

    ’’சிலோன் ரேடியோவுக்கு ஏஜண்ட்டாக இருந்து விளம்பரமும் புரோகிராமும் செஞ்சு கொடுத்தோம். அவரோட திறமையை பார்த்து சன் டிவியில் வணக்கம் தமிழகம் நிகழ்ச்சியை இயக்கும் பொறுப்பு வந்தது அவருக்கு. அப்புறம் விஜய் டிவியில் டெமோ பிஸினஸ் புரோகிராம் பண்ணினோம்.

    சன் டிவியில பாட்டுக்கு பாட்டு ஆரம்பிச்சோம். அடுத்து ஸ்டார் சமையல் புரோகிராம் பண்ணினோம். வீட்டை விட்டு வெளியே போகாம சினிமா எதுவும் பார்க்காம வளர்த்ததால சமையல் கலை நிறைய கத்துக்கிட்டேன். அதெல்லாம் இந்த புரோகிராமுக்கு யூஸ் ஆச்சு’’ என்று நெகிழ்கிறார். நிகழ்ச்சிகளோடு சேர்ந்து கேலக்ஸி நிறுவனமும் வளர்ந்திருக்கிறது. ஆழ்வார் பேட்டை கார் ஷெட்டில் இருந்து மெல்ல மெல்ல கோபாலபுரத்திற்கு மாறியிருக்கிறது கேலக்ஸி. பிறகு அண்ணாமலைபுரம் கற்பகம் அவென்யூவில் ஒரு வாடகை வீட்டில். இப்போ அதே கற்பகம் அவென்யூவில் கம்மீரமாக சொந்த பில்டிங்கில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

    ‘’ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாற்றம் இருந்துச்சு. போகப்போக எல்லாம் தெரிய வந்துச்சு. பொதுவாகவே பொண்ணுங்களுக்கு சிக்கன புத்தி இருக்கும். அதிலும் எனக்கு கொஞ்சம் அதிகம். அது கேலக்ஸிக்கு கைகொடுத்திருக்கு. முதலில் ஒரு நாளைக்கு இரண்டு எபிசோடு மட்டுமே எடுப்போம். இப்போ அனுபவம் இருப்பதால ஒரு நாளைக்கு நாலு எபிசோடு எடுக்குறோம்.

    டிவிக்கு நிகழ்ச்சி தயாரிக்கறீங்களே நீங்க சீரியல் எடுக்கலாமேன்னு கேட்குறாங்க. உண்மையை சொன்னா எனக்கு சீரியலே பிடிக்காது. எப்போதும் தூங்குற நேரம் மட்டுமே வீட்டுக்கு போறேன். அம்மாதான் ஒரே மகள் இனியாவையும் வீட்டையும் கவனிச்சிக்கறாங்க. என்னோட அப்பாவும் அவரோட அப்பாவும் தவறிட்டாங்க.

    சில பேரு சினிமா எடுக்கலாமேன்னு சொல்லுவாங்க. கேலக்ஸி அதுக்கெல்லாம் தலையாட்டாம அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல் என்ற பழமொழிக்கு ஏத்தபடி போய்க்கிட்டிருக்கு. இப்போ கலைஞர் டிவியில் ‘விடியலே வா’ன்னு புரோகிராம் பண்ணிக்கிட்டு இருக்கிறோம். எல்லாமே சிரிப்புதான் புரோகிராமும் சக்சஸ் ஆகியிருக்கு.

    ஒரு நிறுவனத்துல வேலை பார்த்தா கரெக்ட் டயத்துக்கு போயிட்டு கரெக்ட் டயத்துக்கு வந்துடலாம். வருசத்துல ஏகப்பட்ட லீவு இருக்கு. சொந்த நிறுவனம் என்பதால அந்த சவுகரியம் எல்லாம் இல்லாம போச்சு. ஆனா, பலபேரு வந்து, நாங்க உங்க நிறுவனத்தை முன்னுதாரமா வச்சுத்தான் வந்திருக்கிறோம். கணவனும் மனைவியும் சேர்ந்து வொர்க் பண்ணுறத பார்த்துட்டுத்தான் நானும் என் வொய்ப்பை கொண்டு வந்திருக்கிறேன்... என்றெல்லாம் சொல்லும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு’’என்று மகிழ்கிறார். புதுசு கண்ணா புதுசு விளம்பரம் பட்டி தொட்டி எல்லாம் முனுமுனுக்கப்பட்டது. அந்த விளம்பரத்தை பண்ணிக்கொடுத்தது ‘சாய் அட்வர்டைசிங்’ என்ற கேலக்ஸியின் ஒரு பிரிவு. பிரிண்ட் மற்றும் விசூவல் மீடியாவுக்கு விளம்பரப் பறிமாற்றம் செய்துவருகிறது சாய் அட்வர்டைசிங்.

    ‘’எனக்கு தமிழ்,ஆங்கிலம், இந்தி,மலையாளம், தெலுங்குன்னு அஞ்சு லாங்வேஜ் தெரியும். அவருக்கு தமிழ், ஆங்கிலம் தெரியும். இதனால அட்வர்டைசிங்கில் நல்லா பண்ண முடியுது. கேலக்ஸி பப்ளிகேஷன் ஆரம்பிச்சு நான் எழுதுன சமையல் கலை புத்தகங்கள், அவர் எழுதுன கல்வி, பிஸினஸ் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் வெளியிடுறோம்’’ என்று சொல்கிறார்.

    இத்தனை மொழிகள் தெரிந்தாலும் அத்தனை மொழியிலும் ஏன் நிகழ்ச்சிகள் செய்யவில்லை என்றால் ‘சீரியல் என்றால் ஒரு லாங்வேஜ்ல உள்ளத அப்படியே டப்பிங் செஞ்சுடலாம். நியூஸ்..அப்புறம் ஒரு மொழியைச்சார்ந்து எடுக்குற புரோகிராமை இன்னொரு லாங்வேஜ்க்கு டப்பிங் பண்ண முடியாது. நேரடியா வேறு மொழிகளுக்கு புரோகிராம் பண்ணனும்கிற எண்ணம் இல்ல. ஆனாலும் சூர்யா மலையாள டிவிக்காக ‘காரியம் திசாரம் பிரஸ்னம் குருதரம்’ன்னு புரோகிராம் பண்ணினோம்’ என்கிறார்.

    ஏதோ மலையாள மந்திரம் போலத்தான் இருக்கும். காரியம் திசாரம் பிரஸ்னம் குருதரம்’ன்னு அவர் சொன்னது. ஆனால் அது பிரச்சனை பெருசா இருந்தாலும் ஈஸியா முடிஞ்சிடும் என்ற அற்புதமான தமிழ் அர்த்தத்தை தருகிறது. அது போலவே நல்ல பல நிகழ்ச்சிகளை தயாரித்து வரும் கேலக்ஸியும் அர்த்தமுள்ளதாகவே விளங்குகிறது.
    "அன்பே சிவம்.

  4. #123
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    நடிக்கத் தயங்கினேன்!

    -கோலங்கள் - திருச்செல்வம்

    முரசொலி மாறன் மறைந்த தினம் 23.11.2003, அன்று முதல் தான் 'கோலங்கள்' மெகா தொடர் சன் தொலைக்காட்சியில் ஆரம்பமானது. வெற்றிகரமாக ஐந்து ஆண்டுகளை கடந்து தொடர்கிறது. அந்த மெகாவின் மகா கேப்டன் அண்ட் நாயகன் தொல்காப்பியன் என்கிற திருச்செல்வனிடம் பேசியபோது;

    ''தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுக்காவிலுள்ள 'நாடியம்' தான் எனக்கு சொந்த ஊர், எங்களது விவசாயக் குடும்பம், அப்பா வேலுச்சாமி, அம்மா சரஸ்வதி, இரண்டு அக்கா செல்வி, மாதவி என்று, நான் தான் கடைக்குட்டி, அழகான அன்பான சிறிய குடும்பம்.

    சொந்த ஊர் நாடியத்தில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன் அதன் பின் தேவக்கோட்டை டி.பிரிட்டோ உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு வரையும், போர்டு பிஷப் பள்ளியில் பிளஸ் டூ முடித்தேன்.

    அதன் பின்னர் தஞ்சை பூண்டி கல்லூரி பி.எஸ்.சி., பிசிக்ஸ் படித்தேன். அஞ்சல் வழியில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., படித்தேன்.

    கலைத்துறை ஆர்வம் கொண்ட நான். 1988ல் சென்னை திரைப்படப் பயிற்சி கல்லூரி சேர்ந்து, 1991ல் படிப்பை முடித்து வெளியே வந்து சவுண்ட் என்ஜினியராக ஐந்தாண்டு பணியாற்றினேன். சுஜாதா டப்பிங் தியேட்டரிலும், பிரசாத் ஸ்டூடியோவில் இளையராஜா மியூசிக் கம்போஸ் செய்யும் ஒலிப்பதிவு கூடத்திலும் பணிபுரிந்தேன்.

    தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என்று பல மொழிகளில் தயாரான நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் சவுண்ட் என்ஜினியராகப் பணியாற்றிய காலகட்டத்தில் படங்களின் தரங்கள், படமாக்கிய முறை, காட்சிகள் எடுத்த விதம் என்று சினிமா தொழில் சார்ந்த பல விஷயங்களை தெரிந்து முடிந்தது.

    இந்த அனுபங்கள் எல்லாம் நாமும் ஏன் இது போன்று படங்கள் இயக்கக் கூடாது என்ற எண்ணம் எனக்குள் உதயமானது. நான் திரைப்படக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது இயக்குநர் திருமுருகன் என்னுடன் கூடப் படித்தவர். இருவரும் ஒரேசெட். அப்போத திருமுருகன் 'காவேரி' என்றொரு சீரியலை இயக்குனார். அவருடன் அசிஸ்டெண்ட் டைரக்டராக சேர்ந்து பணியாற்ற வாய்ப்பு கொடுத்தார்.

    அடுத்து திருமுருகன் இயக்கிய மெகா சீரியலான 'மெட்டிஒலி'யிலும் நான் அசோஸியேட் டைரக்டராக என் பணியை தொடர்ந்தேன். அசோஸியேட் வேலையோடு 'மெட்டிஒலி'யில் மாப்பிள்ளை சந்தோஷ் கதாபாத்திரத்தில் என்னை நடிக்கும்படி சொன்னார்.

    நான் முதலில் தயங்கினேன். காரணம் அப்போது என் நினைப்பெல்லாம் டைரக்ஷன் மட்டும்தான். நானும் ஒரு டைரக்டராக வேண்டும் என்று முயற்சித்து வேறு இருந்தேன். பலரிடம் கதை சொல்லி வாய்ப்பு தேடலில் இருந்த நேரம் அதனால்தான் நடிக்கச் சொன்னதும் தயங்கினேன்.

    பின்னர் 'மெட்டிஒலி'யில் மாப்பிள்ளை சந்தோஷ் பாத்திரத்தில் நடித்தேன். அதனால் நடிப்பிலும் நல்ல பெயரும் கிடைத்தது. எனக்கும் நடிப்பு வரும் என்கிற நம்பிக்கை எனக்குள் ஏற்படுத்தியது. டைரக்ஷன் பயிற்சியோடு நடிப்பும் தெரிந்துகொண்டேன்.

    அழைத்து கதையைக் கேட்டார்கள். நான் சொன்ன கதை அவர்களுக்கு மிகவும் பிடித்து போக 'கோலங்கள்' மெகா தொடர் இயக்கும் வாய்ப்பு கிடைத்த'மெட்டிஒலி'யின் மகா வெற்றியை தொடர்ந்து விகடன் டெலி விஸ்டா தயாரிப்பு நிறுவனம் என்னை து நான் இயக்குநரானது இப்படிதான்.

    'கோலங்கள்' நெடுந்தொடர் ஐந்து வருடங்களை கடந்து தனது வெற்றி பயணத்தை தொடர்கிறது. குடும்பப் பெண்களிடம் எங்கள் தொடருக்கு அதிலும் கதை நாயகி 'அபி'க்கு மரியாதைக் கூடிக் கொண்டே இருக்கிறது. தங்கள் குடும்பங்களில் ஒருத்தியாக 'அபி'யை கொண்டாடுகிறார்கள்.

    அதே போல தோழமை மிக்க எனது 'தொல்காப்பியன்' கேரக்டருக்கு பெண்கள் மத்தியில் நல்ல பெயர் இருக்கிறது. எனக்கு நிறைய பேர் போனிலும், நேரிலும் தொடர்பு கொண்டு பாராட்டுகிறார்கள். நடிகைகள் வடிவுக்கரசி, கீதா, லட்சுமி, விஜயசாந்தி, அமைச்சர் சற்குணப்பாண்டியன் என்று வி.ஜ.பி. பெண்மணிகள் பலர் 'கோலங்கள்' தொடரைப் பார்த்து பாராட்டியிருக்கிறார்கள்.

    'கோலங்கள்' கதைக்களம் குடும்பம் சார்ந்தது. ஆண்களுக்கு நிகராக பெண்களும் எதையும் தைரியமாகச் செய்யக்கூடிய சாதனை பண்ணக் கூடிய தகுதி பெண்ணுக்கும் உண்டு.

    பெண்கள் ஆண்களுக்கு அடிமையாக என்றிருக்கும் கலாசாரம் இதில் தவிடு பொடியாக்கியுள்ளது. இதில் அபி, ஆனந்தி, ஆர்த்தி, உஷா, கங்கா போன்ற பல முக்கியத்துவம் தரப்பட்ட கேரக்டர்கள் இருக்கிறது.

    அதேபோன்று ஆதி, அபிஷேக் போன்ற பிரபலங்களின் கதாபாத்திரங்களும் பேசப்படும் வகையில் அமைந்தது. கோலங்களின் வெற்றி தமிழில் மட்டுமல்ல பிற மொழிகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தெலுங்கு, மலையாளம் மொழிகளில் டப் செய்யப்பட்டு அந்தந்த மொழி சேனல்களில் ஒளிபரப்பாகிறது. கன்னட மொழியில் 'ரங்கோலி' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு உதயா சேனலில் ஒளிபரப்பாகிறது.''

    -சரி அடுத்த என்ன?

    ''ஒரு பெரிய இயக்குநர் என்று பெயர் பெறுவதுதான் என் லட்சியம். 'கோலங்கள்' என் திறமையை வெளிபடுத்த உதவியிருக்கிறது.

    கோலங்களின் வெற்றி. படங்களை இயக்கும் வாய்ப்பு கொண்டு வந்து கொண்டிருக்கிறது. இந்த நெடுஞ்தொடர் முடிந்த பின் படம் இயக்குகிறேன். பெரிய நிறுவனங்களின் அழைப்புகள் வருகின்றன அதை முறையாக பயன் படுத்திக் கொள்ளலாம்.''

    திருச்செல்வத்திற்கு திருமணமாகிவிட்டது. மனைவி பெயர் பாரதி. ஒரே மகள் பிரியதர்ஷினி. வீட்டில் மகளை 'அபி' என்று அன்பாக அழைக்கிறார்.
    "அன்பே சிவம்.

  5. #124
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    old - FYI



    Family dramas

    Seetha entered films when she was just a toddler in a Telugu film Bhandalu Anu Vandalu which was produced and directed by actress Lakshmi long back. That was followed by umpteen roles as a child artiste. But when she grew up she did not find a good role in films. So her attention was shifted to the small screen, a move that has proved to be fruitful. In a short span, she has completed a number of serials including Radhika’s Chitthi and En Peyar Ranganayaki on Sun TV. Currently she is acting in AVM’s Nambikkai, a serial produced by Krishnaswamy associates and four other Telugu serials. A closer look at this charming actress:
    Other Stories
    Interview
    News
    Review

    How did you become an actresss?
    I started my career when I was three years old. My grandma was instrumental in my joining films. Actress Laksmiji was frantically looking out for a small girl to act in her home production in Telugu. My grandma took me to the production manager and even before I could understand what was happening, I was put in front of the camera. Since then I have been acting. When I was young, my father got married a second time and left us alone. So, it was inevitable that I make an earning through films. Thus I completed 11 films as a child artiste.

    Do you recollect your first day of acting?
    It was a nightmare. I didn’t really know what has to be done in front of a crowd. It was a whole new experience for me. Everything scared me. Lakshmi madam got very angry and asked the production manager to throw me out of the sets. But all of them persuaded me to try and somehow I managed finally.

    We heard that you did some semi porn Malayalam films. Is it true?
    These are all are cooked up stories. I haven’t done anything of that sort. After I grew up, as a teenager, the first Malayalam film I did was Devaragam. The films that followed were all decent ones. This semi porn culture in Malayalam films started when I was acting in films in other languages. But I don’t know from where this rumour spread. I am getting a few Malayalam offers but I am scared to go near them. I think twice, find out the credentials about the company and its genuinity from my friends before accepting them.

    Aren’t you interested in glamourous roles?
    Right from the begining I have refused glamourous roles. I don’t think glamourous costumes will suit my figure. Secondly I have decided to do only family roles which don’t require revealing outfits.

    Don’t you think this will affect your career?
    Money wise .. Yes. I have missed out certain films. But the amount of mental peace it has given me is immeasurable. As of now my hands are full with TV serials.

    When are you going to become a heroine?
    As far as TV is concerned I have been always a heroine. I have no desire to become one in films. I have had enough with films. I have crossed that stage now.

    You seem to be disgusted with films?
    Yes. Very much. It’s a man’s world. You have to undergo casting couch. Added to this, I have plenty of bounced cheques given to me by the producers.

    So TV is the best bet for you!
    Undoubtedly. There is no casting couch. There are fixed timings. You go in the morning and come back in the evening. Here one doesn’t require to wear glamourous outfits. And no one cheats you in payment.

    What is your ambition?
    I couldn’t continue my studies after eighth standard. I know nothing but this showbiz. My whole world revolves around this. I want to be known as a popular actress.
    http://www.screenindia.com/old/20020222/rtelu3.html
    "அன்பே சிவம்.

  6. #125
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    சினிமா
    'கனவை நிஜமாக்கும் பயணம்': பிரஜின்

    First Published : 11 Jun 2009 11:53:00 PM IST

    Last Updated :

    'எல்லோருக்கும் குறிப்பிட்ட வயதிற்குள் குறிப்பிட்ட இடத்தை அடைய வேண்டும் என்ற ஆசை இருக்கும். அந்த மாதிரி நான் ஆசைப் பட்ட இடம்தான் சினிமா' என்கிறார் "முத்திரை' படம் மூலம் நடிக்க வந்திருக்கும் பிரஜின்.
    ""சின்ன வயதில் இருந்து இன்று வரைக்கும் விரும்பியதில் சில விஷயங்கள் கிடைக்காமல் போனலும், பெரிதும் நேசித்த சினிமா கிடைத்து விட்டது. சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திரிந்த எனக்கு இளைப்பாறும் நிழல் போல "முத்திரை' படம் கிடைத்துள்ளது.
    புதுமுக இயக்குநர் ஸ்ரீநாத் என்பவர் இயக்கும் அந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளேன். படம் விரைவில் வெளிவர உள்ளது. இந்தப் படம் வந்த பிறகு சினிமாவில் எனக்கென தனி இடம் உருவாகும். அதுபோல ஹீரோவாக நடித்து வரும் "சா பூ த்ரி' படமும் முடிந்து விட்டது.
    இனி பிரஜினை ஹீரோ அல்லது கேரக்டர் ரோலில் தொடர்ந்து பார்க்கலாம். டி.வி. தொகுப்பாளர், சீரியல் நடிகர் என வலம் வந்த என்னை சினிமாவில் பார்ப்பவர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
    தற்போது "முள்ளும் மலரும்' என்ற தமிழ்ப் படத்திலும், ஒரு மலையாள படத்திலும் நடித்து வருகிறேன். முதல் சினிமா வந்த பிறகுதான் என்னுடைய சினிமா ஆர்வம் எல்லோருக்கும் தெரிய வரும். அதுவரை டி.வி.காரர்கள் எல்லாம் சினிமாவுக்கு வந்து விட்டார்கள் என்றுதான் மக்கள் பேசி கொள்வார்கள்.
    டி.வி.யாக இருந்தாலும், சினிமாவாக இருந்தாலும் இங்கே திறமைதான் முக்கியம். அதை சிறப்பாக வெளிபடுத்துபவர்களை மக்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள்.
    டி.வி.யில் எனக்கு பிரேக்கை தந்த சீரியல் விஜய் டி.வி.யின் "காதலிக்க நேரமில்லை' சீரியல்தான். சினிமாவில் பிஸியாகி விட்டதால் சீரியல்களைக் குறைத்து வருகிறேன். நிகழ்ச்சிகளைத் தொகுப்பதிலும் ஆர்வம் இல்லை. சினிமாவில் வெல்ல வேண்டும் என்ற கனவுதான் என் கண் முன்னே இப்போது பயணமாகிறது. அதை நிஜமாக்க பயணம் செய்து வருகிறேன் என்கிறார் பிரஜின்.

  7. #126
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    FYI

    தேசிய விருது பெற்று தேசமெங்கும் பேசப்பட்ட சின்னப்பெண் கீர்த்தனா இப்போ கொஞ்சம் வளர்ந்திருக்கிறார். கூடவே குறும்புத்தனமும் வளர்ந்திருக்கிறது. கலகல பேச்சால் புதுமைப்பித்தன் ரா.பார்த்திபனிடம் பேசிக்கொண்டிருக்கும் உணர்வை ஏற்படுத்துகிறார்.

    என் அப்பா எனக்கு தாயுமானவர் மட்டுமல்ல. அலாரமானவர், ஓட்டுநரானவர், இன்னும் நிறைய ஆனவர் என்று சொல்லிவிட்டு ஒரு நீ...................ண்ட ஹிஹி. கன்னத்தில் முத்தமிட்டால ரெட்டை வால் சுந்தரியை நேரில் பார்க்க முடிந்தது.

    ’’கன்னத்தில் முத்தமிட்டால் ரெட்டைவால் சுந்தரி கேரக்டர் அப்பாவ ரொம்ப இம்ப்ரஸ் பண்ணிடுச்சி. பெரும்பாலும் சுந்தரின்னுதான் கூப்பிடுவாங்க.

    உண்மையில அப்பாவ நான் அம்மான்னுதான் கூப்பிடனும். ஆமாங்க, காலையில் எஙகளை எழுப்புவது முதல் வீட்டுக்கு மளிகை வாங்குவது, துணிமணி எடுத்துக்கொடுப்பது வரை எல்லாமும் செய்வார் அப்பா. அவரைப்பொறுத்தவரை நான் இன்னமும் கைக்குழந்தைதான். என்னை விட்டு வெளியூருக்கு மட்டுமல்ல; வடசென்னை, தென்சென்னைக்கு கூட சீக்கிரத்துல கிளம்பமாட்டார்.

    தற்காலிகமான பிரிவுக்கு கூட அவ்வளவு தயங்குவார் அப்பா. எப்போதும் என்கூடவே இருக்கனும் என்று பிரியப்படுவார் அப்பா. அது எனக்கு ரொம்ப வசதியா இருக்கு. அப்பாவை பக்கத்துல இருந்தே பார்த்து பார்த்து நிறைய கத்துக்கிட்டேன்.

    அப்பா ரொம்ப கிரியேட்டிவ். சின்ன விசயமோ, பெரிய விசயமோ எதையும் ரொம்ப கூர்ந்து கவனித்து எல்லோருடைய எண்ணத்தையும் எதிர்பார்ப்பையும் மீறி ரொம்ப புதுமையான விதத்தில் வெளிப்படுத்துவார் அப்பா. புத்திசாலித்தனமாகவும், ‘அட’ன்னு சொல்லுற மாதிரியும் எப்படி ‘டக்கு’ன்னு இவரால சொல்ல முடியுதுன்னு ரொம்ப ஆச்சர்யமா இருக்கும். இதெல்லாத்தையும் பக்கத்துல இருந்தே பார்த்து பார்த்து என்னையும் அதுமாதிரியே டெவலப் பண்ணிக்குவேன்.

    அப்பாவோட கவிதைகள் எல்லாமே பிடிக்கும். எந்த சந்தர்ப்பத்தில் கேட்டாலும் கவிதைகள் வந்து விழும். இப்ப ஊரெல்லாம் பவர்கட். ஆனா எங்கவீட்டுக்கு மட்டும் பவர்கட் பிரச்சனை இல்ல. அப்பாவோட மண்டைக்குள்ளதான் பல்ப் இருக்குதே’’ என்று சொல்லிவிட்டு சிரித்தவர், என்ன புரியலியா என்று சொல்லிவிட்டு ’அப்பாவோட சிந்தனையைத்தான் அப்படி சொன்னேன்’ என்றவரிடம், உங்க வளர்ச்சியில் அப்பாவின் பங்கு என்ன? என்றதும்.


    ’’எல்லாத்தையும் திட்டமிட்டு செய்வேன். அது அப்பாவுக்கு ரொம்ப பிடிக்கும். முக்கியமா நான் கிடார் கத்துக்கிறதுல அப்பாவுக்கு ரொம்ப சந்தோசம். அப்பா ரொம்ப சந்தோசப்படுறதுக்கு என்ன காரணம் தெரியுமா. அப்பா ஆசைப்பட்டு கத்துக்க முடியாம போன விசயம் இசை.


    ‘’நல்ல இசையை விட வேற எதுவும் உன்னை சந்தோசமா வைக்க முடியாது. அதை நீ வாசிக்குறதுல எனக்கு ரொம்ப பெருமை’’ ன்னு பாராட்டுவார். நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓபன் ஸ்கூலில் +2 படிக்கிறேன். கால்பந்தாட்டத்தில் தமிழக அளவில் நிறைய போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் வாங்கியிருக்கிறேன். இதுக்கெல்லாம் அப்பாவோட ஆதரவும் ஊக்கமும் தான் காரணம். அப்பாவோட விருப்பத்தால பாலே நடனமும் கத்துக்கறேன்.

    என் ஆரோக்கியத்துல அதிகம் அக்கறை எடுத்துக்குவார் அப்பா. அப்புறம் முக்கியமான ஒன்னு. பாதுகாப்பு உணர்வில் அதிக கவனம் செலுத்துவார் அப்பா. அதனாலதான் பப்பிகள் கூட வளர்க்க அனுமதிக்கவில்லை. அப்படியிருந்தும் ஒரே ஒரு பப்பி மட்டும் வளர்க்க சம்மதம் வாங்கிட்டேன். வோட்கா பப்பிக்கு ஃப்ரண்ட் வேணுமாம்னு சொல்லி ஒரு ஷிவாவா பப்பி வாங்கிடுவேன் என்று சொல்லும் கீர்த்தனா, இயற்கை மீதும் பறவைகள், நாய்கள் மீதும் அலாதியான பிரியம் வைத்திருக்கிறார். அப்பா போலவே இவரும் இயக்குராகனும்னு கனவு வச்சிருக்கிறார். இப்போதே அதற்கான ஒத்திகைகளில் ஈட்பட்டுவிட்டார்.

    ‘’அப்பா தன்னுடைய கதை, திரைக்கதைகளுக்கு என்னை ஒரு பார்வையாளரா வைத்துக்கொள்வார். அது சம்பந்தப்பட்ட விமர்சனங்களை கேட்பார். என்னையும் நிறைய ஐடியா சொல்லச்சொல்லுவார்.

    சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் நான் நடித்திருக்கும் விதத்தை பாராட்டி பேசுவார். இப்போதைக்கு இதுதான். மற்றபடி நிறைய படஙகள் பார்க்குறேன்.+2 முடிச்சிவிட்டு விஷூவல் கம்யூனிகேஷன் படிச்சு விட்டுத்தான் டைரக்*ஷன் பண்ணுவேன்’’ என்றவர் தனது இத்தனை சிறிய வயதிலேயே வாழ்க்கை பற்றிய பெரிய விசயமான மரணம் பற்றி அப்பா மூலமாக தெரிந்து கொண்டதை குறிப்பிட்டார்.

    ‘’சில வருஷங்களுக்கு முன்னால் மரணத்தை பற்றியும் அதுக்கு அப்புறம் இருக்குற வாழ்க்கை பற்றியும் திடீர்னு ஏதோ ஒரு பயமான நினைப்பு எனக்கு வந்துச்சு. அதை எப்போ நினைச்சாலும் அப்செட் ஆயிடுவேன். அந்த சமயத்துல அப்பாதான் ரொம்ப அழகா, தைரியப்படுத்துற விளக்கம் கொடுத்தார்.

    வெறுமைதான் நம்மளை பயமுறுத்தும். அதனால போற பாதையை வெறுமையா வெச்சுக்காதே. பாதை முழுக்க சின்னச்சின்னதாய் புள்ளிகள் வெச்சுக்கோ. இதை நல்லா செஞ்சு முடிச்சதும் அடுத்தது அதை நல்லா செஞ்சு முடிச்சதும் அதுக்கடுத்துன்னு நிதானமா நகர்ந்து போ. எல்லாம் சரியான இடத்துல சரியான விதத்துல நடந்திருக்கும் என்று சொல்லி என்னை தேற்றினார் அப்பா. எனக்கு சிறந்த வாழ்க்கை வழிகாட்டிதான் அப்பா.

    அப்பான்னா அப்பாதான். நேற்று என்னை மகிழ்ச்சியா வச்சிருந்தார்ன்னா இன்று மகிழ்ச்சியோட உச்சத்துல வச்சிருப்பார்.

    அப்பா - என்னைவிட உயரமான, அடர்த்தியான, அழகான, விநோதமான சினேகிதர். எல்லோருக்கும் கிடைக்காது இப்படிப்பட்ட அபூர்வமான அப்பா’’ என்று நெகிழ்கிறார் கீர்த்தனாபார்த்திபன்.
    "அன்பே சிவம்.

  8. #127
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சினிமாவின் சாபக்கேடு'!



    தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் முன்னணி இசையமைப்பாளராக கொடி கட்டிப் பறந்த சந்திரபோஸ், இப்போது சின்னத்திரையின் ஆஸ்தான நடிகராகிவிட்டார். அவருடைய சின்னத்திரைப் பிரவேசம் குறித்து கேட்டபோது...

    ""சிவாஜி, எம்.ஜி.ஆர் போல பெரிய நடிகராக வேண்டும் என்ற எண்ணம்தான் என்னை சென்னைக்கு பயணமாக வைத்தது. இப்போது இருப்பது போல அப்போது சினிமாவில் சுலபமாக நுழைந்துவிட முடியாது. இருப்பினும், சென்னையில் செயல்பட்டு வந்த "பாய்ஸ்' நாடக கம்பெனியில் நடித்து வந்தேன். அப்போது நடிப்பு உள்பட நாடகத்தில் உள்ள அனைத்துத் துறைகளையும் கற்க வேண்டும். அதன் காரணமாக இசை என்னை தொற்றிக் கொண்டது.

    இசையமைப்பாளராக ஆவேன் என்றெல்லாம் நான் நினைத்ததில்லை. நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் இசையில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். சினிமாவில் நுழைந்த பிறகு அதை விட்டு வெளியே வர முடியாது.

    சினிமா தொழில் தெரிந்தவனுக்கு இளநீர் கூட சீவத் தெரியாது. தோற்றாலும் ஜெயித்தாலும் சினிமாதான் வாழ்க்கை. தோற்போமா? ஜெயிப்போமா? எனத் தெரியாமல் இருக்கும் ஒரே துறை சினிமாதான். இதை சினிமாவின் சாபக்கேடு என்றுதான் சொல்ல வேண்டும்.

    பல மொழிகளிலும் 372 படங்களுக்கு இசையமைத்து விட்டேன். நான் இசையமைத்து இன்னும் வெளிவராமல் 17 படங்கள் பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கின்றன. சினிமாவில் எப்போதும் தொடர்ந்து ஒடுகிற குதிரை மீதுதான் பணத்தைக் கட்டுவார்கள். இடையில் குதிரைக்கு சிறிய சறுக்கல் ஏற்பட்டாலும் தூக்கி விட இங்கே ஆள்கள் இல்லை.

    எனக்கும் அது மாதிரி ஒரு சறுக்கல் ஏற்பட்டது. வாய்ப்புகள் இல்லாமல் பைத்தியம் பிடித்தவன் போல் வீட்டில் முடங்கிக் கிடந்தேன். அந்த நேரத்தில் வாழ்க்கை என்னை எப்படியெல்லாம் சுழற்றி அடித்தது என்பதைச் சொல்ல வார்த்தைகள் இல்லை.

    அதன் பிறகு "கத்திக் கப்பல்' என்ற படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. படத்தைப் பார்த்த பழைய நண்பர்கள் ஃபோன் செய்து என் நடிப்பைப் பாராட்டி, நான் சினிமாவில்தான் இருக்கிறேன் என்பதை ஞாபகப்படுத்தினார்கள்.

    பின்பு சீரியல் வாய்ப்புகள் கிடைக்கவே தொடர்ந்து நடிக்க ஆரம்பித்து விட்டேன். இப்போது "வளையோசை', "திருப்பாவை', உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து வருகிறேன்.

    இசையமைப்பாளராக இருந்த போது அடைந்த சந்தோஷத்தை விட இப்போது கிடைக்கிற சந்தோஷத்தில் கொஞ்சம் கூடுதல் உற்சாகம் இருப்பதாக உணர்கிறேன் என்றார் சந்திரபோஸ்.

    நன்றி; தினமணி
    "அன்பே சிவம்.

  9. #128
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    'சம்பா, கனவுகள்' உட்பட பல சீரியல்களில் நடித்திருப்பவர் பாவனா. தற்போது கலைஞர் "டிவி'யின் "பவானி' சீரியல் ஹீரோயின். பாவனாவின் அனுபவ பேட்டி:

    * சீரியலுக்கு மீண்டும் வந்திருப்பது?
    சீரியலில் நடிச் சிட்டிருந்தப்பவே மேரேஜ் ஆயிடுச்சு. குடும்பம், குழந்தையின்னு நான்கு வருடங்கள் சீரியல் பக்கம் வரமுடியலை. இப்ப நல்ல வாய்ப்புகள் வந்தது.என்னோட கணவரும் என்கரேஜ் பண்ணினார்.

    * மற்ற சீரியல்களைவிட "பவானி' சீரியலில் முக்கியத் துவம் ஏதும்?
    மெயின் ரோல் பண்றேன். சீனியர்கள் நிறைய பேர் நடிக்கிறாங்க. ஸ்கிரிப்ட் வித்தியாசமாயிருக்கு. நான் இதுவரை நடிச்ச சீரியல்களில் மத்த கேரக்ட்களை சுற்றியே என் கேரக்டர் இருக்கும்.

    * நான்கு வருட இடைவெளியில் மீண்டும் நடிக்க சிரமம் ஏதும்?
    இடைவெளி விட்டதால் சிரமம் ஏதும் இல்லை. இன்னும் நல்லா செய்யறது எப்படின்னு தான் நினைப்பு இருக்கு.

    * ஆண்களைவிட பிரச்னைகளில் பெண்கள் தான் அதிகம் சிக்கிவிடுகின்றனர் என்று பேசப்படுவது பற்றி?
    பெண்கள் பிரச்னைகளில் சிக்காமல் ஒதுங்கிடறது தான் நல்லது. நாம நடந்துக்கிற விதத்திலதான் பிரச்னை வருவதும், வராததும் இருக்கு. பெண்கள் முன் மாதிரி விழிப்புணர்வு இல்லாமலில்லை.
    அறிவு பூர்வமாக நிறைய முன்னேற்றம் ஏற்பட்டிருக்கு. தேவையற்ற விஷயங்கள் பக்கம் மூக்கு நீட்டாம ஒதுங்கிட்டாலே எந்தப் பிரச்னையும் வராது.

    * சீரியல்களில் வன்முறை காட்சிகளும், பெண்களை "அடாவடி'த்தனமாக சித்தரிக்கப்படும் சீன்'கள் நிறைய வருகின்றனவே?
    சீரியல்களில் நல்லதும் வருது, தேவையற்றதும் வருதுன்னு குறை சொல்றதைவிட நல்ல விஷயங்களை எடுத்துக் கிட்டு,தேவையில்லாத விஷயங்களை இப்படியும் நடக்குமோன்னு நினைச்சு உஷாராக நாம நடந்துக்கிடலாமே,'' என்று சொன்ன பாவனா, சீரியல் ஷூட்டிங்கிலிருந்து மொபைல் போனில் அழைப்பு வர புறப்பட்டு சென்றார்.
    "அன்பே சிவம்.

  10. #129
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    குத்துப் பாட்டுகள் எப்போதும் உள்ளன!

    First Published : 12 Jul 2009 07:01:10 PM IST

    Last Updated :

    ஒரு டி.எம்.எஸ்., ஒரு சீர்காழி கோவிந்தராஜன், ஒரு பி.பி.ஸ்ரீனிவாஸ், ஒரு எஸ்.பி.பி. என்று ஒரு சில பாடகர்களே தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த காலம் ஒன்று இருந்தது. இன்று நிறையப் பாடகர்கள், நிறைய இசை அமைப்பாளர்கள். தினம் தினம் அறிமுகமாகும் புதுமுகங்கள். அப்படி அறிமுகமாகிறவர்கள் எல்லாம் எல்லாருடைய கவனத்தையும் கவர்ந்துவிடுவதில்லை. கவனத்தைக் கவர்ந்திருக்கிறார் வி.வி.பிரசன்னா. இளம் பாடகரான அவரை சென்னையில் உள்ள அவருடைய இல்லத்தில் சந்தித்துப் பேசினோம்.



    சினிமாவில் பாட வந்தது எப்படி?

    எனக்குச் சொந்த ஊர் கோவை. படித்தது பி.எஸ்ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ். ஆனால் ஆர்வம் எல்லாம் பாட்டில், இசையில். பள்ளிநாட்களிலேயே கர்நாடக சங்கீதத்தில் வாய்ப்பாட்டும், வயலினும் கற்றுக் கொண்டேன். மாஸ்டர் கே.வி.நடராஜ பாகவதரும், சர்மாவும்தான் ஆசிரியர்கள்.

    பள்ளியில் படிக்கும்போது நிறைய பாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பாடி, பரிசுகள் வாங்கியிருக்கிறேன். அடிப்படையில் நான் வயலினிஸ்ட். என்றாலும் என் குரல் நன்றாக இருக்கிறது என்பதற்காக எல்லாரும் என்னைப் பாடச் சொல்வார்கள். அப்படிப் பாடியதில் பக்திப் பாடல்களைப் பாடும் வாய்ப்பு வந்தது.

    சத்யப்பிரகாஷ் என்ற இசையமைப்பாளர் கோவையில் ராகவேந்திரர் பக்திப் பாடல்களுக்கான ஆல்பம் ஒன்றைத் தயாரித்தார். அதில் நான் ஒரு பாட்டுப் பாடினேன். பிறகு சென்னைக்கு வந்து பக்திப் பாடல்களைப் பாடத் தொடங்கினேன். சுமார் 4 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடிவிட்டேன்.

    அந்தக் கால கட்டத்தில் நெய்வேலி சந்தான கோபாலன் சாரைச் சந்தித்தேன். அன்று முதல் எனக்கு நல்ல ஆலோசகராகவும் வழிகாட்டியாகவும் அவர் இருந்தார். இருக்கிறார்.

    "என் சகியே' பட இசையமைப்பாளர் பிரதீப் ரவி அந்தப் படத்தில் பாட எனக்கு முதன்முதலில் வாய்ப்புக் கொடுத்தார். "சகியே' என்ற பாடலை அதில் பாடினேன். அதற்குப் பின் நிறையப் படங்களுக்காகப் பாடிவிட்டேன். தவமாய் தவமிருந்து, வெயில், குசேலன், நான் அவனில்லை போன்ற படங்களுக்காக நான் பாடிய பாடல்கள் அனைவருடைய கவனத்தையும் கவர்ந்தவை. மாயாண்டி குடும்பத்தார், பொக்கிஷம், நினைத்தாலே இனிக்கும், மரியாதை, நண்டு ஊருது நரி ஊருது ஆகிய படங்களிலும் நான் பாடிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

    இளையராஜா இசையில் நான் பாடியது "கண்ணுக்குள்ளே' படத்தில். விஜய் ஆன்டணி சார் எனக்கு நிறைய வாய்ப்புக் கொடுத்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ், சபேஷ் முரளி எல்லாரும் என்மேல் அன்பு கொண்டவர்கள். வாய்ப்புத் தருபவர்கள்.

    தொலைக்காட்சிகளிலும் தலைகாட்டுகிறீர்களே?

    ஆமாம். பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்றிருக்கிறேன். சன் தொலைக்காட்சியின் "அதிரடி சிங்கம்' நிகழ்ச்சியில் நானும் விஜய் ஆன்டணியும் நடுவர்களாக இருந்தோம். அது எங்களுடைய நெருக்கத்தை அதிகப்படுத்தியது. என்றாலும் அதற்கு முன்பே நாங்கள் நண்பர்கள். ஜீ தமிழ் டிவியில் "சரிகமப' நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறேன்.

    சினிமா ஆசை?

    சினிமாவில் நடிப்பதற்காக பல வாய்ப்புகள் என்னைத் தேடி வந்தன. ஆனால் மறுத்துவிட்டேன். எனக்கு நடிக்கப் பிடிக்கவில்லை. நல்ல கதையம்சம் உள்ள திரைப்படத்தில் எனது மனதுக்குப் பிடித்த கதாபாத்திரம் கிடைக்கும் என்றால் ஒருவேளை நான் நடித்தாலும் நடிக்கலாம். நல்ல பாடகராக இருக்கவே ஆசை.

    சினிமாவில் குத்துப் பாட்டுகளுக்குத்தானே இப்போது மதிப்பு?

    என்னைச் சந்திக்கும் பல ரசிகர்கள் ஏன் சினிமாவில் குத்துப் பாட்டுகள் அதிகமாக வருகின்றன? என்ற கேள்வியை என்னிடம் கேட்கிறார்கள். குத்துப்பாட்டுகள் தமிழ் சினிமாவில் எப்போதும் இருந்து வந்திருக்கின்றன. முதலில் மெலோடியான பாடல்கள் அதிகமாகவும் குத்துப் பாட்டுகள் குறைவாகவும் தமிழ் சினிமாவில் இருந்தன. இப்போது நிலைமை தலை கீழாகியிருக்கிறது. அதனால்தான் ரசிகர்கள் அப்படிக் கேட்கிறார்கள்.

    ஆரவாரமான இசை உள்ள குத்துப் பாடல்கள் இப்போது அதிகம் வந்தாலும் மனதைத் தொடும் ஒன்றிரண்டு மெலோடி இசைப் பாடல்களும் வரத்தான் செய்கின்றன.

    மக்களின் மனதைக் கவர்கின்றன. அத்தகைய பாடல்களை நான் பாடியிருக்கிறேன் என்பதில் எனக்குப் பெருமை.

    குத்துப் பாட்டுகள் அதிகம் வருவதற்குக் காரணம், மக்கள் அதை அதிகம் ரசிக்கிறார்கள் என்று நினைக்கிறார்கள். நம்புகிறார்கள். உண்மையில் குத்துப்பாட்டுகள் ஓரிரு மாதங்களில் கவர்ச்சியை இழந்துவிடுகின்றன. மெலோடியான பாடல்கள்தாம் எத்தனை வருடங்களானாலும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கின்றன.

    குத்துப் பாட்டிலும் கூட சில நாட்டுப்புற மெட்டை அடிப்படையாக வைத்து இசையமைக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட பாடல்கள் மக்கள் மனதில் அழியாத இடத்தைப் பிடித்துவிடுகின்றன.

    மறக்க முடியாத நிகழ்ச்சி?

    லண்டனில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்திருந்த ஒரு பெண் என்னிடம் போனில் பேசினார். வாழ்க்கையில் ரொம்பக் கஷ்டப்பட்டு, தற்கொலை முயற்சி வரைக்கும் போன அவர், என்னுடைய பாடல்களைக் கேட்டு தன்னுடைய மனது மாறிவிட்டதாகச் சொன்னார். உங்கள் பாடல்கள் மனதுக்கு அமைதியைக் கொடுத்தன என்றார். இது என்னால் மறக்க முடியாத நிகழ்ச்சி.

  11. #130
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    "பழமையும் பரதமும்'

    தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நாளுக்கு நாள் புதுமைகள் வந்துகொண்டே இருக்க, பழைய சினிமா பாடல்களின் தொகுப்புகளைக் கேட்பது அரிதாகி விட்டது. இந்நிலையில், ஜெயா டி.வி.யில் பழைய பாடல்களைக் கவிதை நயத்தோடு வழங்கி வரும் ஸ்ரீதேவியிடம் பேசிய போது....

    ""பல சமயங்களில் நம் உதடுகள் முணுமுணுக்கும் பாடல்கள் பெரும்பாலும் பழைய பாடல்களாகத்தான் இருக்கும். தலைமுறை இடைவெளியில் சில சமயங்கள் இது மாறிவிட்டாலும், சில பாடல்கள் மட்டும் காலம் கடந்து நம் உதடுகளால் முணுமுணுக்கப்படுகிறது. ஏனென்றால் நாம் இன்னும் பழமையின் சாயல்கள்தான்.

    மற்ற டி.வி.க்களில் எத்தனையோ நிகழ்ச்சிகள் வந்தாலும் ஜெயா டி.வி.யின் "தேன் கிண்ணம்' நிகழ்ச்சிக்கான ரசிகர்கள் பல தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள். சிறுவர் முதல் பெரியவர் வரை எல்லோரும் ரசிக்க கூடிய இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது பெருமையாக இருக்கிறது.

    பழைய பாடல் வரிகளில் இடம்பெற்றுள்ள கவிதை நயத்தையும் உவமைகளையும் திறனாய்ந்து சொல்லுவது என் ஸ்பெஷல். இந்த நிகழ்ச்சியை வழங்கியதிலிருந்து என் நண்பர்களும் இப்போது பழைய பாடல்களின் தீவிர ரசிகர்கள் ஆகிவிட்டனர்.

    என்னதான் சினிமாக்களில் பழைய பாடல்கள் ரீமேக் செய்யப்பட்டு புதிய இசைக் கோர்வையில் வந்தாலும் பழைய பாடல்களுக்கான மவுசு இன்னும் குறையாமல்தான் இருக்கிறது.

    இதே போல் முன்பு பொதிகை டி.வி.யில் ஒளிபரப்பாகி வந்த "கதை கதையாம் காரணமாம்' என்ற நிகழ்ச்சியையும் நான்தான் வழங்கி வந்தேன். "தேன் கிண்ணம்' பழைய பாடல்களில் தொகுப்பு என்றால், அந்த நிகழ்ச்சி பழைய சினிமா காட்சிகளின் தொகுப்பு. அது என்னவோ தெரியவில்லை... எனக்கு பழைய சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளாகவே அமைகின்றன.

    ஆரம்பத்தில் பழமையை ரசிக்கக் கூடிய மனப்பக்குவம் எனக்கு இல்லாமல்தான் இருந்தது. ஆனால், இப்போது வீட்டிலும் சரி, பயணங்களிலும் சரி பழைய பாடல்கள்தான் என்னை ஆக்கிரமிக்கின்றன.

    பரத நாட்டியத்தில் மிகுந்த ஈடுபாடு உண்டு. நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் நேரம் போக, மீதம் இருக்கும் நேரத்தில் பரத நாட்டியம்தான் என் வாழ்க்கை. சினிமா, சீரியல் வாய்ப்புகள் வந்தாலும் அவற்றில் ஈடுபாடு இல்லை. எனினும் சினிமா பார்ப்பதில் அதிக ஈடுபாடு உண்டு. என்னுடைய மனமும் உடலும் உற்சாகமாக இருக்கக் காரணமே பழமையும் பரதமும்தான்"" என்கிறார் தொகுப்பாளினி ஸ்ரீதேவி.
    http://dinamani.com/edition/story.as...41&SEO=&Title=

Page 13 of 46 FirstFirst ... 3111213141523 ... LastLast

Similar Threads

  1. IR concerts, TV shows and Interviews ...
    By Sanjeevi in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 355
    Last Post: 2nd June 2018, 06:26 AM
  2. Sharing-IR's music-interviews-BgmClips- in web
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 860
    Last Post: 2nd October 2012, 12:43 AM
  3. Talented TV artists
    By swathy in forum TV,TV Serials and Radio
    Replies: 20
    Last Post: 21st March 2010, 10:13 PM
  4. Artists and their best emotions
    By Shakthiprabha. in forum Tamil Films
    Replies: 167
    Last Post: 22nd May 2007, 08:41 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •