Page 10 of 46 FirstFirst ... 8910111220 ... LastLast
Results 91 to 100 of 453

Thread: INTERVIEWS With TV Artists

  1. #91
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    விஜய் டி.வி.யின் அழகு தொகுப்பாளினி "ரம்யா'.


    இயக்குநர் ஆவதே லட்சியம்'

    தனக்கு இதுவரை வந்த காதல் கடிதங்களை சேர்த்து வைத்திருக்கிறார்; ஏன் என்று கேட்டால் நாளை எனக்கு வரும் கணவரிடம் காண்பிக்கதான் என்கிறார்

    உலகத்திலேயே சென்னைதான் எனக்கு பிடித்த ஊர். ஏனென்றால் நான் பிறந்த இடமாயிற்றே. வைஷ்ணவா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேசன் முடித்த பிறகு மாடலிங் செய்து வந்தேன். அப்போதுதான் காம்பியரிங்கில் ஆர்வம் வந்தது.

    எதையுமே வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என நினைப்பவள் நான். எல்லோர் மாதிரியும் என்னையும் என்ஜினீயர், டாக்டர் ஆக்கி அழகு பார்க்க நினைத்தது என் குடும்பம். அதில் எல்லாம் மனது ஒட்டவே இல்லை. ஏதாவது வித்தியாசமாகச் சாதிக்க வேண்டும் என தோன்றியது. அதனால்தான் இந்த துறைக்கு வந்தேன்.

    இதற்காக நிறைய இழந்திருக்கிறேன். திரைப்பட இயக்குனர் ஆக வேண்டும் என்பதுதான் என் கனவு, ஆசை, லட்சியம் எல்லாமே. கல்லூரி காலத்தில் இரண்டு குறும்படங்களை இயக்கிய அனுபவம் எனக்கு உண்டு.

    சினிமாவில் நடிப்பதற்கு தினமும் அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் அதில் எனக்கு ஆர்வம் சுத்தமாக இல்லை. சினிமாதான் வாழ்க்கையென்று கிளம்பியிருந்தால் இதுவரை நிறைய படங்களில் என்னையும் சராசரி நடிகையாக இந்த உலகம் பார்த்திருக்கும்.

    காம்பியரிங் மூலமாக நிறைய சினிமா உலக நட்பு கிடைத்தது. அவர்களும் உதவி இயக்குனராக பணிபுரிய அழைக்கிறார்கள். காம்பியரிங்கில் சிக்கிக்கொண்டதால் என்னால் அங்கு எளிதாகப் போக முடியவில்லை. என்றைக்கு இந்த துறை போதும் என்ற எண்ணம் வருகிறதோ, அன்றைக்கு ஒடிப்போய் சினிமாவில் சாதித்து விடுவேன்.

    கமர்ஷியல் சினிமாக்கள்தான் இன்றைய சினிமா உலகத்தை ஆட்சி செய்கின்றன. எப்போதாவது வருகின்ற ஒன்றிரண்டு பெண் இயக்குனர்கள் கூட உணர்வுப்பூர்வமான கதைகளுக்குதான் முக்கியத்துவம் தருகிறார்கள். அந்த நிலையை நான் மாற்றுவேன்.

    காம்பியரிங் ஆசையில் தினமும் புதியதாக நிறைய பேர் வருகிறார்கள். காம்பியரிங் ஒன்றும் சுலபமான வேலை அல்ல. எவ்வளவு பெரிய ஆட்கள் வந்தாலும் எங்களைத்தான் எல்லோரும் கவனிப்பார்கள். காம்பியரிங் செய்யும்போது தமிழில் பேசுவதையே விரும்புகிறேன்.

    இதுவரைக்கும் நிறைய பேர் காதலை சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவர்களில் யாரும் என்னை பாதிக்கவில்லை. இதுவரை எனக்கு வந்த காதல் கடிதங்களையெல்லாம் பத்திரமாக வைத்திருக்கிறேன்.

    நாளை எனக்கு வரும் கணவரிடம் அவற்றைக் காண்பிப்பதற்காக... என்கிறார் குறும்புடன்
    http://www.dinamani.com/Cinema/CineI...n%A7Ls&Topic=0

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #92
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    நடிக்கும் உணர்வே இல்லாமல் நடிக்கிறோம்!

    நடிகர் சேத்தன்

    ‘அத்திப்பூக்கள்' தொடரில் தனது ஆழமான நடிப்புத்திறனை வெளிப்படுத்தியதின் மூலம் பெண் ரசிகைகளின் பேராதரவிற்கு உரியவராகிவிட்டார் சேத்தன். அவரது பேச்சும், பார்வையும், நடிப்பும் ரசிகர்கள் மனதில் தேங்கிவிட்டது. அவரிடம் பேசவும், பாராட்டுக்களை பகிர்ந்து கொள்ளவும் ரசிகர்கள் ஆசைப்படுகின்றனர். அவரைப் படப்பிடிப்பு தளத்தில் பார்த்தபோது ரசிகர்களின் ஆவலைச் சொன்னோம். அவரது முகத்தில் மகிழ்ச்சி பூத்தது.

    புன்னகை மாறாமல் நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள்...

    டிவி மீடியாவில் நடித்து இவ்வளவு ரசிகைகளை எப்படி உங்களால் பெறமுடிந்தது?

    டிவி எப்பவும் பெண்கள் மீடியம். அதில் நல்ல கேரக்டர்களில் நடித்தால் போதும், பெண்களுக்கு நிச்சயம் பிடித்துவிடும். எனக்கு நடிப்பதற்கு அப்படிப்பட்ட வாய்ப்புகள் கிடைத்தன. எனக்குக் கிடைத்த வாய்ப்புகளை நானும் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டேன். நல்ல கேரக்டராக இருந்தாலும் சரி, நெகட்டிவ்வான கேரக்டராக இருந்தாலும் சரி. நமக்குக் கிடைக்கும் புகழ் எல்லாமே அந்த கேரக்டருக்குக் கிடைக்கும் மரியாதைதான்.

    நிஜ வாழ்க்கையில் தம்பதியாக இருக்கும் நீங்களும் தேவதர்ஷினியும் சீரியலுக்காக ஒரு குழந்தையை இன்னொரு பெண்ணிடமிருந்து பெறும் காட்சியை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?

    எல்லாருமே சென்டிமென்டுக்கு உட்பட்டவங்கதான். நான் மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன? பொதுவாகவே கலைஞர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்கள். அதனால அது இயற்கையாகவே வந்துடும். எங்களுக்குக் குழந்தைகள்னா இயல்பிலேயே ரொம்பப் பிடிக்கும். உயிர்னு வெச்சுக்குக்கங்களேன். அதனால் அந்தக் காட்சியில் நடிக்கும்போது உண்மையிலேயே உணர்வுபூர்வமா நடிச்சோம். எல்லாருக்கும் இருக்கிற ஏக்கம், ஆசைகளைத்தானே டைரக்டர் ஒரு காட்சியில் பயன்படுத்துவாங்க? அதனால் அந்தக் காட்சியில் நடிக்கிற உணர்வே எங்களுக்கு வரவில்லை.

    குடும்பத்தில் கணவன், மனைவி இருவருமே நடிப்பது ப்ளஸ்ஸா, மைனஸ்ஸா?

    ப்ளஸ்தான். வெவ்வேறு தொடர்களில் நடித்தாலும் ஒரே தொடரில் நடித்தாலும் ப்ளஸ்தான். உழைப்புக்கு உழைப்பு. வருமானத்திற்கு வருமானம். ஒரே தொடரில் நடிக்கும் போது, அதிக நேரம் ஒன்றாக இருக்கிறோம். நிறைய விஷயங்களை பேசிக்க முடியும்.

    ‘அத்திப்பூக்கள்' தவிர வேறு சீரியலில் உங்களைப் பார்க்க முடியவில்லையே?

    சினிமாவில் நடிக்கிறேன். இப்போது ‘பூக்கடை ரவி' என்ற படத்தில் என்-கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டா நடிச்சிருக்கேன். ‘முத்திரை' படத்தில் லீகல் அட்வைஸரா நடிச்சிருக்கேன். இன்னும் இரண்டு படங்களின் படப்பிடிப்பு ஆரம்பிக்கவில்லை. இப்போதைக்கு நிறைய படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்துகிறேன்.

    பிரேம்குமார் மாதிரி நீங்களும் சீரியலுக்கு முழுக்கு போட்டுவிட்டு சினிமாவில் நடிக்க வந்து விட்டீர்களா?

    அப்படி முழுக்கு, முடிவுன்னு எல்லாம் பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்லக்கூடாது. ஆரம்பத்துலேர்ந்து இருக்கிற ஆசை சினிமா. அவ்வளவுதான். சீரியலில் நடிக்க ஆரம்பித்து பிஸியாகிவிட்டேன். அதனால் சினிமாவில் முழுமையாகக் கவனம் செலுத்த முடியவில்லை. பத்து வருஷம் ஆகிவிட்டது. மறுபடியும் சினிமாவில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறேன். ஏனென்றால் அதுதான் என்னுடைய கனவு!

    அபிஷேக், ‘கதை' என்கிற படத்தை இயக்குகிறார். அதுபோல் நீங்கள் எப்போது இயக்குனராகப் போகிறீர்கள்?

    கூடிய சீக்கிரம். அதுக்கான முயற்சியும் இருக்கு. யோசனைகளும் இருக்கு. நான் சின்னத் திரையிலிருந்து வருவதால் எப்படிப்பட்ட படத்தைத் தருவேன் என்கிற எதிர்பார்ப்பு நிச்சயம் அனைவருக்கும் இருக்கும். நிச்சயமாக இளைஞர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாகத்தான் அது இருக்கும். ஆனால் வழக்கமான படமாக இருக்காது. தனியாகத் தெரியும் வகையில் இருக்கும்.

    http://www.dinamani.com/sunday/sunda...FAP+%A3%B2U%F4

  4. #93
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    ‘சின்னச்சின்ன ஆசை' நிகழ்ச்சியின் தொகுப்பாளினி ஆர்த்தி!

    அடுத்தவர்களின் ஆசையை நிறை வேற்றுவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் குடிசைப் பகுதிகளைச் சேர்ந்த சிறு குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றுவதன் மூலம் அவர்களுக்கு அக்காவாக, அன்புத் தோழியாக, அம்மாவாக பரிணமிக்கிறார் மக்கள் தொலைக்காட்சியின் ‘சின்னச்சின்ன ஆசை' நிகழ்ச்சியின் தொகுப்பாளினி ஆர்த்தி!

    சலனப்படுத்தாத பேச்சு, துருதுரு செயல்பாடு, அழகான உச்சரிப்பு, எப்போதும் சிரித்த முகம். இவற்றுக்குச் சொந்தமான ஆர்த்தியிடம் பேசிய திலிருந்து...

    சின்னத்திரையில் பிரவேசிக்கும் வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?

    நான் பாரதி கல்லூரியில் எம்.ஏ., பிசினஸ் எக்னாமிக்ஸ் படித்துக் கொண்டிருந்தபோது முழுக்கமுழுக்கத் தமிழில் தொகுத்து வழங்க தொகுப்பாளினி வேண்டும் என்ற மக்கள் தொலைக்காட்சி விளம்பரத்தைப் பார்த்து விண்ணப்பித்தேன். என் திறமைகளுக்கு மதிப்பு அளித்து இந்த வாய்ப்பை அளித்தார்கள். ஆரம்பத்தில் படித்துக்கொண்டே தொகுத்து வழங்கி வந்த நான் தற்போது முழுநேர தொகுப்பாளினி.

    சின்னச்சின்ன ஆசை நிகழ்ச்சியின் நோக்கம் என்ன?

    தமிழ்நாட்டில் உள்ள குடிசைகள் அனைத்திலும் உள்ள குழந்தைகளின் சின்னச்சின்ன ஆசையை, அவர்களை நேரில் சந்தித்துக் கேட்டு, அதனை நிறைவேற்றுவதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம். இதற்கு ஏராளமானோரின் ஆதரவும் அமோக வரவேற்பும் கிடைத்திருக்கிறது. இப்போது 50 வாரங்களைக் கடந்து வெற்றிகரமாக இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. குழந்தைகள் தினத்தன்று வெறும் அரை மணிநேர நிகழ்ச்சியாக நாங்கள் தயாரித்த போதிலும், பார்வையாளர்களின் அதிக வரவேற்பு கிடைத்ததால் வாரந்தோறும் நிகழ்ச்சியாக மாறியது. இதன் மூலம் பெரும்பாலான குடிசைகளைச் சேர்ந்த குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றணும். என்னுடைய ஆசையை நிறைவேற்றவில்லை என்று ஒரு குழந்தைகூட சொல்லக்கூடாது என்பதில் எங்கள் தொலைக்காட்சி நிர்வாகத்தினர் உறுதியாக உள்ளனர்.

    இந்த நிகழ்ச்சியில் உங்களின் மறக்க முடியாத அம்சம்?

    ஒரு குழந்தை ‘அக்கா என் காலில் போட்டிருந்த கொலுசை என் அப்பா தூங்கிக்கிட்டிருந்தபோது கழட்டிப் போய் வித்து குடிச்சிட்டார். அதனால, எனக்குக் கொலுசு வாங்கிக் கொடுங்க'ன்னு கேட்டது. இதை என் வாழ்க்கையிலேயே மறக்க முடியாது.

    இதைப்போல குப்பை பொறுக்கி வாழ்க்கையை ஓட்டும் தாய். அவர் வருமானத்தில் படிக்கும் அவர் பையன். அந்தப் பையன் ‘அம்மாவுக்கு ஒரு புடவை எடுத்துக் கொடுங்கள்' என்று கேட்டான். அதை மறக்கமுடியாது. இதைப்போல நிறைய இருக்கிறது. மூன்று குழந்தைகள் என்னை அம்மா என்று கூப்பிட்டார்கள். அந்தச் சமயத்தில் உண்மையாகவே நான் தாய்ப் பாசத்தை உணர்ந்தேன்.

    பொது நிகழ்ச்சிகளில் மக்களைச் சந்தித்தபோது உங்களை பாதித்த விஷயம்?

    மற்ற நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் என்றால், பேசுவாங்களோ என்கிற தயக்கத்தோடு பார்க்கிற ரசிகர்கள், மக்கள் தொலைக்காட்சி தொகுப்பாளர்களை அவங்க குடும்ப உறுப்பினராகப் பாவிப்பதைக் கண்கூடாக காண முடிகிறது. சமீபத்தில் ஒரு நீதிபதி என்னிடம், ‘உன்னை மாதிரி ஒரு பொண்ணைத்தான் என் மகனுக்குத் தேடிக்கொண்டிருக்கேன்'னு சொன்னது மக்களிடையே எனக்குக் கிடைத்த நன்மதிப்பைக் காட்டியது.

    ஆங்கிலக் கலப்பில்லாமல் பேசுவது கஷ்டமாக இல்லையா?

    தமிழ்தாங்க நம்முடைய தாய்மொழி. அதில் பேசுவதுதான் நமக்கு அழகு. அதுதான் நமக்குள் நெருக்கத்தை ஏற்படுத்தும். அந்நிய உணர்வு இல்லாம பக்கமா இருக்கிற மாதிரியான உணர்வை தமிழால்தான் ஏற்படுத்த முடியும்.

    உங்களுடைய மற்ற பொழுதுபோக்கு?

    நிறைய புத்தகம் படிப்பேன். எங்கள் அலுவலகத்தில் ஊழியர்களுக்காகத் தனி நூலகமே அமைத்திருக்கிறார்கள்.

    எப்போதும் புடவையுடன் வலம் வருவதில் சிக்கல் இல்லையா?

    இல்லவே இல்லை. ஏனெனில் மற்ற ஆடைகளில் தொகுத்து வழங்கும்போது மனதில் சில நெருடல்களோடு உரையாடல்களைச் சொல்ல வேண்டி இருக்கும். அதனால் நிகழ்ச்சியில் நம்முடைய ஈடுபாடு குறைய நேரிடும் எனக் கருதுகிறேன். புடவை அணிவதன் மூலம் எந்த வித நெருடலும் இல்லாமல் ஈடுபாட்டோடு தொகுத்து வழங்க முடிகிறது. அதனால் புடவைதான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

    எதிர்கால ஆசை?

    எத்தனை நிகழ்ச்சிகள் செய்து வந்தாலும், எதிலும் என் தனி அடையாளத்தைப் பதிவு செய்யத் தவறக்கூடாது என்பதுதான்.

    வேறென்ன நிகழ்ச்சியில் பங்கேற்கிறீர்கள்?

    ஆரம்பத்தில் வளாகம், வேலைவாய்ப்புத் தகவல்கள், தற்போது சொல்விளையாட்டு, சின்னச்சின்ன ஆசை இன்னும் பல.

    நேரலையில் நேயர்களை எதிர்கொள்வதற்கு தனி பயிற்சி எடுத்துக் கொள்வீர்களா?

    இல்லை. ஓரிரு நிகழ்ச்சிகளில் பயம் நீங்கி சரளமாகப் பேசத் தொடங்கிவிடுவேன். எனது கல்லூரி நாட்களில் நானே நாடகங்களை இயக்கி நடித்ததால் மேடை அச்சமின்றி பேசக்கூடிய திறமை உள்ளது. அந்தத் திறமை எனக்குப் பேருதவியாக உள்ளது.

    http://www.dinamani.com/sunday/sunda...FAP+%A3%B2U%F4



  5. #94
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    இலக்கை எட்ட வழி : வண்ணத்திரை ராஜி டிப்ஸ்

    கலைஞர் "டிவி'யில் வண்ணத்திரை, "சிரிப்பொலியில்' டாப் டென் காமெடியை தொகுத்து வழங்கி வருபவர் ராஜீ; "எதை செஞ்சாலும் திட்டமிட்டு செய்ய வேண்டும். உறுதியான முடிவோடு உழைத்தால் நினைச்சது நடக்கும்', என்று அழுத்தமாக சொன்னார்.
    ராஜீயின் பொறுப்பான பேட்டி:

    * காமெடி நிகழ்ச்சிக்கான காம்பியரிங் பற்றி?

    காமெடி நிகழ்ச்சிக்கு மட்டும் நான் காம்பியரிங் செய்யணும்ன்னு ஏதும் கட்டுப்பாடு வைத்துக் கொள்ளவில்லை. நிகழ்ச்சி நடத்த போவதற்கு முன்பாக ஒரு முறை வீட்டில் எனக்கு நானே ரிகர்சல் பார்த்துக் கொள்வேன். நிகழ்ச்சிகளை எந்தெந்த தருணங்களில் எந்த விதமாக தொகுத்து வழங்கினால் ரசிகர்களை ஈர்க்கலாமென்றும் நினைப்பேன். காம்பியரிங் போது அழகான உச்சரிப்பு, மேனரிஸம், ஸ்டைல் என கவனம் செலுத்தும் போது நிகழ்ச்சி மெருகேறும். ரசிகர்களிடம் வரவேற்பை பெறும்.

    * ரேடியோ எப்.எம்., அனுபவம் ஏதும்...?

    ரேடியோ எப்.எம்.,மில் "உங்களுக்காக 'நிகழ்ச்சிக்கு காம்பியரிங் செய்தபோது நிறைய ரசிகர்களோட எண்ணங்களை புரிந்து கொள்ள முடிந்தது. "மும்பை சுந்தரி, திக்... திக்... தீபா' நிகழ்ச்சிகளுக்கு காம்பியரிங் செய்தேன். நிகழ்ச்சி எப்படியிருந்தால் ரசிப்பாங்கன்னும் அப்சர்வ் பண்ண முடிந்தது. ரசிகர்கள் நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதையும் தெரிந்து கொள்ள முடிந்தது. அவர்களை ஈர்க்கும் வகையில் என்னோட காம்பியரிங் இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் எனக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது.

    * சீரியலில் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கீங்களாமே...?

    "டிவி' பீல்டுக்கு வருவதற்கு என் அப்பாவும் ஒரு காரணம். நான் "பிளஸ் 2' படிச்சிட்டிருந்தப்ப அப்பா சந்திரமோகன் சென்னை தொலைகாட்சியில் சீரியல்களை இயக்கி வந்தார். அவரது சீரியலில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் விதமாக மெசேஜ் நிறைய இருந்தது. எய்ட்ஸ், குடி பழக்கம், புகை பிடிப்பதால் ஏற்படும் பாதிப்பு என பல தகவல்கள் இடம் பெற்றிருந்தன. நானும் அப்பாவுடன் உதவி இயக் குனராக ஒர்க் பண்ணினேன். பிறகு ராஜ் "டிவி'யில் "பரதம்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினேன். இப்ப கலைஞர் "டிவி'யில் "வண்ணத்திரை' சிரிப்பொலியில் "ஜாலியா தமாஸ் டாப் டென் காமெடி' நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறேன். கலைஞர் நியுஸ்ல "உங்கள் மாவட்ட செய்தி'யிலும் ஒர்க் பண்ணிட்டிருக்கேன்.

    * துடிப்பான பெண்களுக்கு உங்கள் ஆலோசனை?

    பெண்கள் எல்லாத்துறையிலும் பயமின்றி கால் பதிக்க முடிகிறது. எந்தப் போட்டியையும் அறிவு பூர்வமாக சமாளித்து ஜெயிக்க கூடிய நிலையும் உள்ளது. எந்தத் துறையில் விருப்பம் இருக்கோ அதற்கு செல்ல வழியை தேட வேண்டும். மாதம் ஆனா சம்பளம் வருதுன்னு இல்லாம பார்க்கிற பணியில மேலும், மேலும் வளர்வதற்கான வழிகளில் கவனம் செலுத்தினால் போட்டிகளை சமாளித்து நினைத்த இலக்கை எட்டலாம் .

    * உங்கள் எதிர்கால இலக்கு என்ன?

    எம்.ஏ., ஜர்னலிசம் மாஸ் கம்யூனிக்கேஷன் கோர்ஸ் படிச்சிருக்கேன். படிப்பு முடிச்சதும் "டிவி' மீடியாவுக்கு போகணுன்னு ஆசை வந்தது. நினைச்ச பீல்டுக்கே வந்துவிட்டேன். நாம செய்ற வேலைகளால் மற்றவர்கள் நம்மை திரும்பி பார்க்க வைக்கணும்ங்கிற ஆர்வம் உள்ளவர்களின் நினைப்பு எனக்கும் இருக்கு. அதற்கான நல்ல தருணங்களை எதிர்பார்த்திட்டிருக்கேன். நினைச்சபடி வாய்ப்புகள் அமையும்போது புதுமைகளை செய்து மக்களிடம் வரவேற்பு பெற முயல்வேன்,' என்றும் ராஜீ ஆர்வமாக சொன்னார்.
    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  6. #95
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    மசாலா சீரியல்கள் : மின்னல் தீபா பேட்டி

    மாயி படத்தில் இடம் பெறும்... மாயி அண்ணன் வந்திருக்காக... மாப்ள மொக்கச்சாமி வந்திருக்காக... மற்றும் நம் உறவினர்களெல்லாம் வந்திருக்காக... வாம்மா மின்னல்...! என்ற காமெடி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரையுமே கவர்ந்தது. நம்மையும் அறியாமல் வாய் விட்டு சிரிக்க வைத்த அந்த காமெடி சீனில் மின்னல் போல் வந்து மறையும் பெண்ணாக நடித்தவர் நடிகை தீபா. மின்னல் பெண் கேரக்டரில் நடித்ததால் மின்னல் தீபா என்று அனைவராலும் அழைக்கப்பட்டு வரும் தீபா சின்னத்திரையில், செல்லமடி நீ எனக்கு, சூப்பர் சுந்தரி, ரேகா ஐ.பி.எஸ். சீரியல்களில் நடித்திருக்கிறார்; "ஜெயா "டிவி'க்காக "பொய் சொல்லப் போறோம்' காமெடி சீரியலில் நடித்து வருகிறார். அவரின் பேட்டி:

    * சீரியல்களில் வன்முறை காட்சிகள் அதிகமாக இடம் பெறுகிறது என்று ரசிகர்களே குறை கூறுகின்றனரே?

    நிறைய "டிவி' சேனல்கள் வருவதால போட்டி, போட்டு சீரியல்களுக்கு ரசிகர்களிடம் வரவேற்பை பெறவேண்டிய நிலை உள்ளது. சீரியல் பரபரப்பா பேசப்படணும், ரசிகர்களை ஈர்க்கணும்ங்கிற முடிவில் டைரக்டருங்க களமிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கு. ஸ்பீடாகவும், த்ரிலிங்காகவும் சீரியலை நகர்த்த சினிமா மாதிரி சீரியல்களுக்கும் மசாலா தடவ வேண்டியிருக்கு. சில சீரியல்களில் வன்முறை காட்சிகளும் இடம் பெற்று விடுகிறது. "டிவி' சீரியலுக்கும் சென்சார் வைத்துவிட்டால் எந்த பிரச்னையும் வராது.

    * சென்டிமென்ட், வன்முறை பிடிக்காததால் தான் காமெடி சீரியல்களில் நடிக்கிறீர்களா?

    நானும் பல சீரியல்களில் பல்வேறு கேரக்டர்களில் நடிச்சிருக்கேன். இப்ப ஜெயா "டிவி'யில் "பொய் சொல்லப் போறோம்' காமெடி சீரியலில் நடிச்சிட்டிருக்கேன். இந்த கேரக்டரில் தான் நடிப்பேன் என்று தனி திட்டம் ஏதும் இல்லை. எல்லாக் கேரக்டரிலும் நடிப்பேன்.

    * சென்டிமென்ட் சீனில் நடிப்பதை விட காமெடி சீனில் நடிப்பது சிரமம் என்கின்றனரே?

    சென்டிமென்ட் சீன்ல ஈசியா நடிச்சிடலாம். நமக்கு ஏதும் ரிலாக்ஸ் இருக்காது. காமெடி சீனில் நடிப்பது ஜாலியாகவும் ரிலாக்ஸாவும் இருக்கும். காமெடி வசனங்களை பேசி நடிக்கும் போது மொத்த யூனிட்டும் சிரிச்சுக்கிட்டே ஒர்க் பண்றதால ஷூட்டிங் வேகமா நடக்கும்.

    * கலையுலகில் நடிகைகள் அவ்வப்போது "ஏடாகூடமா' சிக்கிக் கொள்கின்றனரே?

    பிரச்னையில்லாம எதுவும் இல்லை.எல்லாத்தையும் பார்த்து எந்த சூழ்நிலையில் எப்படி நடந்துக்கிட்டா நாம சேர வேண்டிய இடத்தை சென்றடைந்து விடலாம்ன்னு நினைச்சு கவனமா நடந்தா எந்த பிரச்னையும் வராதுன்னு நான் சொல்வேன்.

    * சினிமாவில் நடித்து விட்டு "டிவி'க்கு வந்து விட்டீர்களே, சினிமா வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டீர்களா?

    "சினிமாவில் சின்ன, சின்ன கேரக்டர்களில் நிறைய நடிச்சுட்டேன். "மாயி'படத்தில மின்னல் கேரக்டர்ல நடிச்சேன். எங்கே போனாலும் "வாம்மா மின்னல்' என்று படத்தில் பேசப்படும் வசனத்தை சொல்லி ரசிகர்கள் பாராட்டும் அளவிற்கு வரவேற்பு கிடைச்சது. அதன்பிறகு "திரையுலகத்திலும் சரி, "டிவி' வட்டாரத்திலும் சரி மின்னல் தீபான்னே தான் அழைக்கின்றனர். "மாஸ்கோவின் காவிரி' படத்தில் சந்தானத்தோட ஜோடியா நடிச்சிருக்கேன். சீன் நல்லா வந்திருக்கு,''என்று தீபா சந்தோஷம் பொங்க சொன்னார்.
    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  7. #96
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சின்னத்திரை ஸ்பெஷல் பிட்ஸ்

    * நம்பினால் நம்புங்கள்: ஜீ தமிழ் சேனலில் திங்கள் முதல் வியாழன் தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் உண்மைத் தொடர். அறிவியல் உண்மைகளுக்கு அப்பாற்பட்டு அமானுஷ்யமாக நடக்கும் மர்ம நிகழ்வுகளை சொல்லும் நிகழ்ச்சி இது.

    * இலவசமா பறக்கறாங்க: ராஜ் "டிவி'யும், தினமலர் நாளிதழும் இணைந்து நடத்தும் சிங்கப்பூர் சுற்றுலா போட்டியில் பங்கேற்ற நேயர்களில் முதல் இண்டு வார வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர். மே 1ம் தேதி வரை போட்டி கூப்பன்கள் வரும். 100 பேருக்கு சிங்கப்பூர் பறக்கும் வாய்ப்பு உண்டு. ராஜ் "டிவி' பாருங்க; தினமலர் நாளிதழில் போட்டி கூப்பனை எடுங்க; தூள் கிளப்புங்க.

    * வருகிறார் கிருஷ்ணர்: ராஜ் "டிவி'யில், ஜெய கிருஷ்ணா தொடர் நாளை முதல் வார நாட்களில் மாலை 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது. அரண்மனை சிறையில் பிறந்து, கோகுலத்தில் யசோதையின் மகனாக வளர்வது உட்பட எல்லாவற்றையும் காணலாம்.

    * கலக்கறாங்க: முதலில், ஜெயா சேனல்; அடுத்து, விஜய் "டிவி' இப்போது ஜீ சேனல் வரை இசைப்போட்டிகளுக்கு குறைவில்லை.
    விஜய் "டிவி' சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கடந்த வாரம் கர்நாடக இசை சுற்று; ஏழு பேரும் அருமையாக பாடினாலும், "எல்லாம் இன்ப மயத்தில் ராகினிஸ்ரீ, குட்டி நித்யஸ்ரீ; பல ஆண்டு பயின்று பாடுவது பெரிய விஷயம் இல்லை; ஆனால், கர்நாடக இசை வாடையே தெரியாமல் அதில், கலக்கினாரே பிரசன்னா; சபாஷ்!

    * சீனியர் சீரிஸ்: ஜெயா சேனலில், எஸ்.பி.பி., நடத்தும் என் னோடு பாட்டுப் பாடுங்கள் நிகழ்ச்சியில், இளம் பாடகர், பாடகிகள், இல்லத் தரசிகள், டூயட் சீரிஸ் தொடர்ந்து இப்போது 30 45 வயதுக்குட்பட்டவர்கள் பங்கேற்கும் சீனியர் சீரிஸ். இன்று இரவு 11 மணிக்கு மறு ஒளிபரப்பு.

    * திரும்பிப் பார்க்கிறேன்: ஜெயா சேனலில் வார நாட்களில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் இதில், கலைஞர்கள் பங்கு பெற்று அவர்களின் அனுபவங்களை விவரிக்கின்றனர். சரோஜாதேவி, சோவை தொடர்ந்து நாளை நடிகை காஞ்சனா.

    * சபாஷ் குடும்பம்: இமயம் "டிவி'யில், சனி தோறும் இரவு 8 மணிக்கு; இரு குடும்பங்கள் பங்கேற்கும் போட்டி நிகழ்ச்சி; புரிந்து கொள்ளுதல் உட்பட ஐந்து சுற்று போட்டி உண்டு.
    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  8. #97
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சீரியல் நடிகைகளிடையே இப்போது போட்டி ஏற்பட்டுள்ளது. இந்தப் போட்டி, தமிழ் சீரியல் உலகை வேறு ஒரு இடத்துக்கு எடுத்துச் செல்லும் என்கிறார் நடிகை ராகவி.

    ஏவி.எம். நிறுவனத்தின் "சொந்தம்' சீரியல்தான் என் முதல் சீரியல். சினிமாவில் பெரிய நடிகையாக வர வேண்டும் என்ற கனவோடுதான் நான் இந்த துறைக்கே வந்தேன். "ராஜா கைய வைச்சா', "மருதுபாண்டி', "நட்சத்திர நாயகன்' என சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தேன். அதன் பிறகும் சில படங்கள் தொடர்ந்தன.

    பிறகு, சில சினிமா வாய்ப்புகள் வந்தன. ஆனால் அவை எதுவும் பிடிக்கவில்லை. பிறகுதான் என் கவனம் சீரியல் பக்கம் திரும்பியது. அதன் பிறகு சீரியல் நடிகையாகவே ஆகிவிட்டேன்.

    சீரியல் உலகம் என்றுமே பிஸியானது. சினிமா போல அது கனவுலகம் இல்லை. சினிமா பற்றிய கனவுகளுடன் வாழ்கிறவர்கள் சீரியலுக்கு வந்தால் சாதித்து விடலாம். சினிமாவை நம்பி வந்து சீரியலில் சாதித்தவர்கள்தான் இங்கு அதிகம். இன்னும் சொல்லப் போனால் பல சினிமா நடிகைகளுக்கே சீரியல்தான் இறுதி அடைக்கலமாக இருக்கிறது.

    சீரியல்கள் மட்டும் இல்லையென்றால் பல சினிமா நடிகைகளின் முகங்கள் பாதி பேருக்கு மறந்து போயிருக்கும். "ஜெயம்', "பிருந்தாவனம்', "பொறந்த வீடா புகுந்த வீடா' உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தாகிவிட்டது. தற்போது திருமதி செல்வத்தில் மட்டும் நடித்து வருகிறேன். நான் ஒரே நேரத்தில் நிறைய சீரியல்களில் நடிப்பதில்லை.

    திருமதி செல்வத்தில் ஜெயந்தி என்ற அருமையான கேரக்டர் கிடைத்திருக்கிறது. அதைச் சரியாக செய்தாலே போதும். ஒரே நேரத்தில் நிறைய சீரியல்களில் நடித்தால் வீட்டை கவனிக்க முடியாமல் போய்விடும். அதனால்தான் என் கேரியரில் நிறைய சீரியல்கள் இல்லை. இல்லையென்றால் நானும் இதுவரை 50-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்து விட்டேன் என சொல்லி பெருமைப்பட்டுக்கொள்ள முடியும். சினிமாவைப் பொருத்தவரை நல்ல கேரக்டர்கள் வந்தால் பார்க்கலாம்.

    இப்போதைக்கு என் குழந்தை ஜித்திசாய்தான் என் உலகம். பிறந்து மூன்று மாதங்கள்தான் ஆகிறது. அவனுடைய ஒவ்வொரு அசைவையும் வீடே ரசித்துக் கொண்டாடுகிறது. அவன் என்னை பார்த்து சிரிக்கும் போதெல்லாம் மனம் சொக்கிப்போகிறேன் என்கிறார் ராகவி.

    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  9. #98
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    "பெண்களின் நிலை இன்னும் மாறவில்லை': பூஜா



    ஆரம்ப காலத்திருந்தே பெண்களின் பிரச்னைகள் பற்றித்தான் சீரியல்கள் பேசி வருகின்றன. அவ்வப்போது சில சீரியல்கள் இதற்கு எதிர்மறையாக வந்தாலும், பெண்களின் பிரச்னைகளை முழுமையாகக் கையில் எடுத்திருக்கிறது விஜய் டி.வி.யின் "ரோஜா கூட்டம்' என்கிறார் பூஜா.

    காலத்திற்கு ஏற்றவாறு பெண்களின் வாழ்க்கை முறை மாறுபட்டுக்கொண்டே இருக்கிறது. என்னதான் பெண்கள் சுதந்திரமாகவும் தன்னிச்சையாகவும் செயல்பட ஆரம்பித்து விட்டார்கள் என சொல்லிக்கொண்டாலும் பெண்களுக்கு சமுதாயத்தில் இருக்கிற பிரச்னைகள், வெளியே சொல்ல முடியாத நிலையில்தான் இருக்கின்றன. அவர்களுடைய நிலை இன்னும் மாறவில்லை.

    5 பெண்கள்; அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்படும் விதவிதமான பிரச்னைகள்; அதை அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதுதான் "ரோஜா கூட்டம்' சீரியலின் முழுக் கதை.

    இந்த சீரியலில் நான் மாடல் நடிகை மானஸô என்ற கேரக்டரில் நடிக்கிறேன். சில விஷயங்களில் விட்டுத் தர வேண்டும் என்ற நிலை வரும் போது மானஸô எப்படி அந்த நிலையைக் கையாளுகிறாள் என்பதுதான் என் கதை. ஒரு நடிகையின் பிரச்னைகளைப் பேசுகிற இந்த கேரக்டர், எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதனால், இந்த கேரக்டரில் ரசித்து நடிக்கிறேன். "ரோஜா கூட்டம்' சராசரி தொடர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. எந்த நேரமும் கண்களைக் கசக்கிக் கொண்டிருக்கும் பெண்கள் இதில் இல்லை.

    இதைத் தவிர "அத்திப் பூக்கள்', "தங்கமான புருஷன்' ஆகிய சீரியல்களில் நடித்து வருகிறேன். "அத்திப் பூக்கள்' ஈஸ்வரி, "தங்கமான புருஷன்' தாரா ஆகிய இரண்டு கேரக்டர்களுமே எனக்கு நல்ல பெயரை வாங்கி தந்திருக்கிறது. ஒரே நேரத்தில் மக்கள் ரசிக்கக் கூடிய மூன்று சீரியல்களில் நடிப்பது சிரமமாக இருந்தாலும் அவற்றுக்கு பாராட்டு கிடைக்கும்போது அதிலும் ஒரு சுகம். ஒவ்வொன்றிலும் வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதுதான் என் நோக்கம்.

    குஷ்புதான் என்னை முதல் முறையாக நடிக்க அழைத்தார். அவருடைய "குங்குமம்' சீரியல்தான் என்னுடைய முதல் சீரியல். அவர்தான் என் குரு. அதற்கு பிறகு நிறைய சீரியல்கள் செய்தாகிவிட்டது.

    சினிமாவைப் பொருத்தவரை நிறைய வாய்ப்புகள் வந்தன. இப்போதும் வருகிறது. அவை எல்லாமே ஹீரோயினுடைய காதலுக்கு ஐடியா தந்துவிட்டுச் செல்வது போன்ற கேரக்டர்கள்தான். சினிமாவில் சும்மா போய் நிற்பதை நான் விரும்பவில்லை. நானும் சினிமாவில் நடித்தேன் என்ற பதிவு எனக்கு வேண்டாம். நல்ல கேரக்டர்கள் வந்தால் பார்க்கலாம் என்றார்.

    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  10. #99
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    "சீரியலுக்கென்றே தனி சேனல் வர வாய்ப்பு'



    சினிமாவில் சாதிக்க வேண்டும் என வந்த பலருக்கு சீரியல்கள்தான் அரவணைப்பாக உள்ளன. சீரியல்களின் தாக்கம் மக்களிடம் வெகுவாகப் பரவி வருகிறது என்கிறார் "விழுதுகள்' சந்தானம்.

    சிறு வயதில் இருந்தே நடிப்புதான் எனக்கு எல்லாம். பெரிய நடிகனாக வேண்டும் என்ற ஆசைதான் என்னையும் நடிகனாக்கி விட்டது. அந்தக் காலத்தில் மேடை நாடகத்தில் தொடங்கிய என் நடிப்பு ஆர்வம் இன்று அன்றாட சீரியல்கள் வரை வந்து நிற்கிறது. காலத்துக்கு ஏற்றவாறு இடம் மாறிவிட்டதே தவிர ஆர்வம் மாறவில்லை.

    டி.டி. தொலைக்காட்சியில் வந்த விழுதுகள்தான் என் முதல் சீரியல். அந்த சீரியலில் எனது கேரக்டர் பெரிய அளவில் பேசப்பட்டது. அதிலிருந்து "விழுதுகள்' சந்தானம் ஆகிவிட்டேன்.

    முதன் முதலில் தமிழில் தயாரிக்கப்பட்ட சீரியலில் நடித்தவன் என்ற பெருமை எனக்கு உண்டு. அந்த சீரியலை தமிழ் சினிமாவின் பழம் பெரும் இயக்குநர் பீம்சிங் மகன் கோபி இயக்கியிருந்தார்.

    இதுவரை 50-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்தாகி விட்டது. பாலசந்தர், சிஜே.பாஸ்கர் என பல இயக்குநர்களிடம் பணிபுரிந்தாகி விட்டது. அவ்வப்போது சில படங்களிலும் நடித்தேன். நாடகங்கள் மீது இருந்த ஆர்வம் சினிமா மீது இல்லை.

    இப்போது நிறைய சேனல்கள் வந்து விட்டன. ஒரு காலத்தில் டி.டி.யைத் தவிர வேறு எதையும் பார்க்க முடியாது. ஆனால், இப்போது நிலைமை வேறு. காமெடி, இசை என ஒவ்வொன்றுக்கும் ஒரு சேனல் வந்து விட்டது. விரைவில் சீரியலுக்கென்று ஒரு சேனல் வந்தாலும் வரலாம்.

    சீரியல்களில் நடிப்பதற்கு நடிகர்கள் போதவில்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது. அந்த அளவுக்கு சீரியல் உலகம் பிஸியாகிவிட்டது. ஒரு நடிகையை மையமாக வைத்து 4 அல்லது 5 சீரியல்கள் போய்க் கொண்டு இருக்கின்றன. நடிகர்களின் வாழ்க்கையை சீரியல்கள் தற்போது மாற்றிவிட்டது.

    இப்போது நிறைய பேர் சிறு வயதிலே சீரியலுக்கு வந்து விடுகிறார்கள். இது ஆரோக்கியமானதா, இல்லையா என்பதைப் பற்றி யோசிக்க யாருக்கும் நேரம் இல்லை.

    "மகள்', "திருமதி செல்வம்', "நாணல்', "பந்தம்', "கோலங்கள்' உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறேன். அனைத்திலும் நல்ல கேரக்டர்கள். அவை எனக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தால் சரி என்றார்.

    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  11. #100
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    சீரியலுக்கு சென்சார் தேவை' (நடிகை தேவிப்ரியா)

    சினிமாவை விட சீரியலுக்கான வரவேற்பு மக்களிடையே நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. அதற்குக் காரணம் சீரியல்களின் புதிய கதைக் களங்கள்தான் என்கிறார்

    சினிமா நடிகைகள் சீரியலுக்கு வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், எந்த நடிகையின் சினிமா சாதனை சீரியலில் தொடர்கிறது? சினிமாவை விட சீரியலில்தான் நடிகைகளின் கேரக்டர்கள் அதிகமாகப் பேசப்படுகிறது. சீரியல் பல கதைகளை வீட்டுக்குள்ளேயே கொண்டு செல்வதால் மக்களால் மிகவும் ரசிக்கப்படுகிறது. சினிமா போல் சீரியல் பொழுதுபோக்கிற்காகப் பார்க்கப்படுவதில்லை. சீரியலில் ஒவ்வொரு நாளும் என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை உருவாக்குகிறோமே அதுவே பெரிய வெற்றிதான்.

    பழி வாங்கல், துரோகம், கணவன் மனைவி தொடர்புகளில் சிக்கல் இவைகள்தான் சீரியல்களில் ஆண்டாண்டு காலமாக சொல்லப்பட்டு வருகின்றன என்பது உண்மைதான். யாருடைய வாழ்க்கையில்தான் இந்த விஷயங்கள் இல்லை? மனிதர்களின் சராசரி வாழ்க்கைதான் இங்கு சீரியலாக்கப்படுகிறது.

    மாமியார்-மருமகள் பிரச்னையை பற்றி சொல்லும் போது பழி வாங்கல், துரோகம் போன்றவற்றை சொல்லித்தான் ஆக வேண்டும். இதில் மாற்றம் தேவை இல்லை.

    பாலியல் தொடர்பான விஷயங்கள் சினிமாவை விட சீரியலில் குறைவுதான். இருந்தாலும் ஒரு கதை சொல்லப்படும்போது அது தவிர்க்க முடியாத விஷயமாகி விடுகிறது. சீரியலை குடும்பமே உட்கார்ந்து பார்க்கக் கூடிய இன்றைய சூழலில் இந்த விஷயங்கள் குறைந்தால் கொஞ்சம் நன்றாக இருக்கும். அதைக் கட்டுப்படுத்தும் வகையில் சீரியலுக்கென தனி சென்சார் வந்தால் வரவேற்கலாம்.

    இப்போது ‘சதிலீலாவதி', ‘தெற்கத்தி பொண்ணு', ‘பந்தம்', ‘ஆனந்தம் விளையாடு வீடு' ஆகிய சீரியல்களில் நடித்து வருகிறேன். ‘சதிலீலாவதி' மாலதி, ‘தெற்கத்தி பொண்ணு' கீதா நாயுடு ஆகிய கேரக்டர்கள் தற்போது பேசப்பட்டு வருகின்றன.

    நடிகர் ஜே.கே.ரித்தீஷின் தயாரிப்பில் ‘ஆண்டாள்' என்ற புது சீரியலில் நடித்து வருகிறேன். அதில் இதுவரை பார்க்காத புதிய தேவிப் பிரியாவை பார்க்கலாம்.

    சினிமாவில் முக்கியத்துவமான கேரக்டரில் மட்டும் நடித்து வருகிறேன். சமீபத்தில் ‘வல்லமை தாராயோ', ‘நாயகன்' படங்களில் நல்ல கேரக்டர் கிடைத்தது. அது போல் கேரக்டர்கள் வந்தால் நடிப்பேன் என்றார் தேவிப்ரியா.

    ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.க்ண்ய்ஹம்ஹய்ண்.ஸ்ரீர்ம்/இண்ய்ங்ம்ஹ/இண்ய்ங்ஐற்ங்ம்ள்.ஹள்ல்?ஐஈ=ஈசஇ20090329123629&பண்ற்ப ்ங்=இண்ய்ங்ம்ஹ+%2ஈ+சங்ஜ்ள்&ப்பண்ற்ப்ங்=%ஊ9சய்%அ7கள ்&பர்ல்ண்ஸ்ரீ=0
    ள/ற்ள்ஸ்ரீண்ண்ன

Page 10 of 46 FirstFirst ... 8910111220 ... LastLast

Similar Threads

  1. IR concerts, TV shows and Interviews ...
    By Sanjeevi in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 355
    Last Post: 2nd June 2018, 06:26 AM
  2. Sharing-IR's music-interviews-BgmClips- in web
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 860
    Last Post: 2nd October 2012, 12:43 AM
  3. Talented TV artists
    By swathy in forum TV,TV Serials and Radio
    Replies: 20
    Last Post: 21st March 2010, 10:13 PM
  4. Artists and their best emotions
    By Shakthiprabha. in forum Tamil Films
    Replies: 167
    Last Post: 22nd May 2007, 08:41 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •