Page 2 of 46 FirstFirst 123412 ... LastLast
Results 11 to 20 of 453

Thread: INTERVIEWS With TV Artists

  1. #11
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    "அப்பா அம்மா சந்தோஷப்பட்டா போதும் அசத்துகிறார் அனுஹாசன்

    "எது ரைட்'ன்னு படுதோ அதை செய்வேன் அப்பா அம்மா சந்தோஷப்பட்டா அது தான் எனக்கு கிடைத்த பெரிய சந்தோஷமாக நினைப்பேன்! இப்படி "சென்டிமென்ட்'டாக பதில்களை அள்ளி விட்ட அந்த நடிகை தொகுப்பாளினி! யார் தெரியுமா? விஜய் "டிவி'யில் "காபி வித் அனு' தொகுப்பாளினி அனுஹாசன்தான் கலைஞர் "டிவி'க் காக ரேகா ஐபிஎஸ், சீரியலில் போலீஸ் அதிகாரியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவரின் கலக்கல் பேட்டி:

    * "டிவி'யில் கவனம் செலுத்தும் அளவிற்கு சினிமாவில் கவனம் செலுத்தவில்லையே ஏன்?

    சினிமா மீது ஆர்வம் இல்லாமலில்லை "இந்திரா' படத்தை சுகாசினி இயக்கினாங்க பயமில்லை, ஈசியா இருந்தது. கிராமத்து ஸ்டோரி பிடிச்சிருந்தது. நடிச்சேன். தொடர்ந்து சினிமாவில் நடிக்காததற்கு காரணம், ரொமான்ஸ் சீன்ல நடிக்க மாட்டேன், குட்டி, குட்டி டிரஸ் போட்டுக்கிட்டு நடிக்க, ஆடமாட்டேன்னு கண்டிஷன் போட்டேன். எனக்கு பிடிச்ச மற்றவங்களை சங்கடபடுத்தாத கேரக்டராக இருந்தால் நடிக்கலாம்ன்னு நினைச்சேன். அப்போது பேஷன் வெறி எனக்கு கிடையாது.

    * சினிமா பற்றி கமல், சுகாசினி ஏதும் அட்வைஸ் செய்யவில்லையா?

    யாரு எப்படி நடந்துக்கணும்ங்கிறது அவுங்க, அவுங்களுக்கு தெரியும்ன்னு அவுங்க நினைப்பாங்க. ஒருத்தருக்கு ஒருத்தர் அட்வைஸ் சொல்லிகிடறதெல்லாம் கிடையாது. நான் இதை செய்யப்போறேன், அதற்கு உங்கள் அட்வைஸ் எதிர்பார்க்கிறேன்னு கமல் சித்தப் பாக்கிட்டேயோ, சுகாசினி அக்காகிட்டேயோ கேட்டா சரியான வழியை சொல்லிடுவாங்க. அது சரியாயிருக்கும்.

    * கமல், சுகாசினியிடம் உங்களுக்கு பிடித்தது?

    இரண்டு பேரும் ஒரே மாதிரி கடின உழைப் பாளிங்க எதைச் செய்தாலும் இது என் வேலையில்லைன்னு விடமாட்டாங்க. நடிப்பா இருந்தாலும் சரி, ஸ்கிரிப்ட் ஒர்க்கா இருந்தாலும் சரி, சேவையாக இருந்தாலும் சரி இன்னும் நல்லா செய்யணும்ன்னு செய்வாங்க. அதற்காக நேரம், காலம் பார்க்காம அவுங்களுக்கு திருப்தின்னு தோணும் வரை கடுமையா உழைப்பாங்க. அதனாலதான் அவுங்க ஜெயிக்கிறவங்களா நின்னுட்டிருக்காங்க.

    * "டிவி'க்களில் வரும் நீங்கள் சினிமாவிற்கு வருவதற்கு சாதகமான வழிகள் இருந்தும் தவிர்ப்பது ஏன்?

    ஒவ்வொரு நிலையிலும் எனக்கு எது பிடிச்சிருக்கோ அதை செஞ்சிட்டிருக்கேன். நடிப்பு எனக்கு பிழைப்பு இல்லை. பெரிய நடிகையாகணும்ங்கிற வெறி எனக்கு கிடையாது. என்ன விலை கொடுத்தாவது நான் நடிக்கணும்ன்னு நினைக்கலை. டைரக்டர்கள் சொல்ற மாதிரியெல்லாம் நடிக்கலாம்ன்னு முடிவு செஞ்சிருந்தா நிறைய படங்களில் நடித்திருக்கலாம். இப்ப "ஃ' என்ற படத்தில பாம் ஸ்குவார்ட் கேப்டனா நடிச்சிட்டிருக்கேன். நல்ல ஸ்கிரிப்ட் பிடிச்சதால நடிக்கிறேன்.

    * சமீபத்திய புதிய தகவல் ஏதும்?

    கலைஞர் "டிவி'க்காக ரேகா ஐபிஎஸ், சீரியலில் ஹீரோயினியாக நடிக்கிறேன். என் கனவு ஹீரோ போலீஸ்தான். எங்கு அநியாயம் நடக்குதோ, அநீதி நடக்குதோ, சமுதாயத்திற்கு தேவையில்லாத விஷயம் நடக்குதோ, அங்கெல்லாம் போலீஸ் தட்டிக்கேப்பாங்க அப்படீன்னு சின்னப்பிள்ளையாக இருந்தபோது நினைச்சிருக்கேன். இப்ப போலீஸ் ஆபிசரா நடிக்க வாய்ப்பு கிடைச்சிருக்கு. என் கனவு ஹீரோ போலீஸ் ஆசை என்பதால ஆர்வமா நடிச்சிருக்கேன். ஸ்டோரி ரொம்ப நல்லாயிருக்கு.

    * உலகில் நீங்கள் பெரிதா நினைப்பது எதை?

    உலகில் சந்தோஷப்படும் விஷயம் நிறைய இருக்கு நான் படும் சந்தோஷத்தை பார்த்து அப்பா, அம்மா சந்தோஷப்பட்டா அதுதான் எனக்கு பெரிய சந்தோஷம். எது ரைட்னு படுதோ அதைச் செய்வேன். எது நல்லதுன்னு தோணுதோ அப்படியே நடப்பேன். சுதந்திர பறவை மாதிரி என்னோட பயணம் இருக்கணும். அதே நேரம் யாரையும் சங்கடபடுத்தாமலும் இருக்கணும்வாழ்க்கையில் நுõறு சதவீதம் சந்தோஷமா வாழணும். மற்றவர்களுக்கு பிரச்னையில்லாமல் எனக்கு பிடித்தமானவைகளை செஞ்சிக்கிட தயக்கமில்லை.

    இவ்வாறு அனுஹாசன் அசத்தினார்.


  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #12
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like

    mithuna

    தொடங்கப்பட்ட மிகக் குறுகிய காலத்தில், மிக அதிக ரசிகர்களை ஈர்த்துள்ள நிகழ்ச்சி, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் "ஹிட் மேல ஹிட்'.

    ""மேனின் குறும்பு கொப்பளிக்கும் கிசுகிசுக்களும், மிதுனாவின் தேன்மொழிப் பேச்சுமே இந்த நிகழ்ச்சியின் சக்ஸஸ் எபிசோட்களுக்குக் காரணம்..'' என்கிறது, தொடர் டிவி ரசிகர்களின் எஃப்.ஐ.ஆர்!

    இனி, "ஹிட் மேல ஹிட்'டுக்குக் காரணமான மிதுனா உங்களுடன்....

    வேகமாக புகழ் அடைவதற்கான வழியாக நிறையப் பேர் தேர்ந்தெடுப்பது மீடியாவைத்தான். நீங்களும் அப்படித்தானா?

    ஜெயா டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்த பிரதிபா என்னுடைய குடும்ப நண்பர். அவர் மூலமாகத்தான் நான் ஜெயா டிவியில் அறிமுகமானேன். ஒரேநாளில் அவர்கள் வைத்த வீடியோ, மாடுலேஷன் டெஸ்ட் எல்லாவற்றிலும் நான் பாஸôகி விஜேவாகிவிட்டேன். அப்போது பட்டபடிப்புக்காக நான் லண்டனிலிருக்கும் நார்த் வெஸ்ட் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்திருந்தேன்.

    அதற்கான விசா எனக்கு கிடைக்காத நிலையில், எம்.ஓ.பி.யில் ஒருவருடம் படித்துக் கொண்டிருந்த போது, விளையாட்டாக எனக்கு வந்த வாய்ப்புதான் நிகழ்ச்சித் தொகுப்பாளர் பணி. நான் படிக்கும் படிப்பின் மூலமாகவும், அது தொடர்பான பணியில் சிறப்பதும்தான் என்னுடைய லட்சியம். எந்தவொரு பொறுப்பையும் ஏற்றுக் கொண்டால் அதில் முழுமையாக என்னை ஈடுபடுத்திக் கொள்வேன்.

    அப்படி எனக்குக் கிடைத்த முதல் வாய்ப்புதான், ஜெயா டிவியில் நான் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆனது. மற்றபடி மீடியாவில் சேர்வதின் மூலம் புகழ் அடையவேண்டும் என்ற திட்டமிடல் எல்லாம் கிடையாது.

    இந்த வருடம் ஆகஸ்ட்டில்தான் லண்டனிலிருந்து வந்தேன். வந்ததும் மீடியாவில் எனக்கிருந்த பழைய நண்பர்களுடன் பேசும்போதுதான், விஜய் டிவியில் இப்படியொரு நிகழ்ச்சிக்கான வாய்ப்பு எனக்கு வந்தது.

    மெகா தொடர்கள்தான் இன்றைக்கு தமிழகத்தில் பெண்களின் முதல் சாய்ஸôக இருக்கின்றது. அதுபோன்ற தொடர்களில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா?

    நிச்சயமாக மாட்டேன். நடிப்புக்கும் எனக்கும் ரொம்ப தூரம்.

    சின்னத் திரையை விடுங்கள் பெரிய திரையில் வாய்ப்பு வந்தால்...?

    எவ்வளவு பெரிய அகன்ற திரையாக இருந்தாலும் என்னுடைய பதில் இதுதான். எனக்கு வராத விஷயத்தை, நான் முயற்சிப்பதே இல்லை.

    நீங்கள் லண்டனில் இருந்திருக்கிறீர்கள். அங்கிருக்கும் மக்கள், இந்தளவுக்கு டிவி சீரியஸ்களின் மீது "க்ரேஸôக' இருப்பார்களா?

    லண்டன் வாழ் மக்களிடம் இங்கிருக்கும் மக்கள் அளவுக்கு சீரியல்களின் ஆதிக்கம் இருப்பதாக நான் உணரவில்லை. ஆனால் லண்டன் வாழ் இந்தியர்கள் மத்தியில் சீரியல்களுக்கு பெரிய மதிப்பு இருக்கின்றது. காலம் காலமாக தாய்நாடு பற்றிய நினைப்பிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்திய மொழிச் சீரியல்களைப் பெரிதும் விரும்பிப் பார்க்கிறார்கள். அங்கிருக்கும் தமிழர்களுக்கும் தமிழ் சீரியல்களின் மேல் பெரிய அளவுக்கு க்ரேஸ் இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.

    சீரியல்களுக்கு மாற்றாக டாக்-ஷோக்களை மக்கள் ரசிக்கிறார்களா?

    நிச்சயமாக அப்படி ரசிகர்கள் நினைக்கிறார்கள் என்றுதான் நினைக்கிறேன். இல்லாவிட்டால் டாக்-ஷோக்களுக்கு இந்தளவுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு இருக்குமா?

    நீங்கள் பங்கேற்கும் "ஹிட் மேல ஹிட்' நிகழ்ச்சியின் சிறப்பு என்ன?

    ரசிகர்களின் அதிகப்படியான எஸ்.எம்.எஸ். எந்தப் புதிய பாடலுக்கு வருகிறதோ அந்தப் பாடலை ஒளிபரப்பும் நிகழ்ச்சிதான் ஹிட் மேல ஹிட். இந்த நிகழ்ச்சியில் ஹீ மேன் போன்று "வி மேன்'(விஜய் டிவி மேன்) ஒருவர் தோன்றி, சுவாரஸ்யமான தகவல்களை, விறுவிறுப்பான சினிமா சம்பந்தப்பட்ட கிசுகிசுக்களை ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்வார். இதற்கு ரசிகர்களிடமிருந்து நிறைய வரவேற்பு இருக்கிறது.

    இன்னும் எதுமாதிரியான நிகழ்ச்சிகளில் உங்களின் திறமையை வெளிப்படுத்த இருக்கிறீர்கள்?

    பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் முடித்துவிட்டு, இப்போதைக்கு எம்.பி.ஏ. படிப்பதற்கான நுழைவுத் தேர்வுக்கு என்னைத் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறேன். இப்போது விஜய் டிவியில் வரும் நிகழ்ச்சியைத் தவிர வேறு எந்த நிகழ்ச்சியிலும் என்னை ஈடுபடுத்திக் கொள்ளும் எண்ணம் இல்லை. "இத்தனை நிகழ்ச்சியில் தலை காட்டுகிறேன் பேர்வழி' என்றில்லாமல், ஒரு நிகழ்ச்சி செய்தாலும் அதை "இன்வால்வ்மென்ட்'டோடு செய்ய வேண்டும் என்று நினைப்பவள் நான்.

    மீடியாவில் நீடிப்பது மட்டும்தான் உங்களின் லட்சியமா?

    ஏற்கனவே நான் வெளிநாட்டில் படித்துவிட்டு வந்திருக்கிறேன். இப்போது என்னுடைய தம்பி பத்தாவது படிக்கிறான். இரண்டு மூன்று வருடங்களில் அவனும் வெளிநாட்டுக்குச் சென்று படிக்க இருக்கிறான். இந்த இரண்டு மூன்று வருடங்கள் அவனோடு ஜாலியாக லூட்டி அடித்துக் கொண்டிருப்பது, பெற்றோர்களுடன் இருப்பதை மிகப் பெரிய பாக்கியமாக நினைக்கிறேன். நானே ஒரு ஹோம்-சிக் பேர்வழி. ரொம்ப நாள் வீட்டைப் பிரிந்து என்னால் இருக்கமுடியாது. ஆனாலும் படிப்பு என்று வரும்போது போய்தானே ஆகவேண்டும்? தம்பி வெளிநாட்டிலிருந்து வந்துவுடன் நான் மறுபடியும் செல்ல வேண்டியிருக்கும். பிசினஸ் மேனேஜ்மென்ட் துறையில் சாதனைகளைப் புரியவேண்டும். அதற்கு உதவும் படிப்புகளில் ஜெயிப்பதுதான் என் லட்சியம். மீடியா எப்போதுமே எனக்கு பேஷன் (டஹள்ள்ண்ர்ய்) தான்!

  4. #13
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    ஒரு நடன விழாவைத் தொடங்கிவைக்க அழைக்கப்பட்டிருந்த இயக்குனர் பாரதிராஜா, ""நான் நடனத்தை இருந்து பார்த்து விட்டுத்தான் போவேன்!'' என்று காத்திருந்து நடனத்தைப் பார்த்து, பாராட்டி விட்டுப் போனார். அது, டான்ஸ் மாஸ்டர் தம்பதிகளான வாமன்- மாலினி தம்பதிகளின் மகள் நீபாவின் பரத நாட்டிய அரங்கேற்றம். அழகான அவரது கண்கள் பேசும்போதே அபிநயம் பிடிக்கிறது.


    ஆடும்போது அலைபாயும் அதன் அபிநயத்தை சொல்லவும் வேண்டுமா?

    வாணிமஹாலில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சிக்கு நாமும் அழைக்கப்பட்டிருந்தோம். அவரது நடனத்தைப் பார்த்த வியப்பு மீளாமலேயே பேட்டியைத் தொடங்கினோம்...

    என்ன திடீர் அரங்கேற்றம்?

    ""திடீரென்று இல்லை. பல மாதங்களாக வீணா ரமணி மாஸ்டரிடம் கிளாசிக்கல் டான்ஸ் கத்துகிட்டு வந்தேன். இப்போதான் அரங்கேற்றம் பண்ண காலம் கனிந்திருக்கு. டைரக்டர் பாரதிராஜா, எஸ்.பி. முத்துராமன், தேவயானி, இராஜகுமாரன், ராதிகா சுர்ஜித் என நிறைய பேர் வந்து பாராட்டினாங்க.

    என் கூட "மஸ்தானா மஸ்தானா' நிகழ்ச்சியில் பங்கேற்கும் நடன டீமும் வந்து வாழ்த்தியது. ரொம்ப பெருமையா இருக்கு. நான் கற்றது மற்றவர்களுக்கு தெரிய வேண்டாமா?

    சினிமாவில் நடிக்கும்போதே சீரியலிலும் நடிக்கிறீர்களே?

    எனக்கு நல்ல வாய்ப்புகள் சினிமாவில் இன்னும் வரலை. பேசப்படும் அளவுக்கு நல்ல ஒரு கேரக்டர் அமைஞ்சதுன்னா அடுத்தடுத்து நிறைய வாய்ப்புகள் வரும்.

    அதுவரைக்கும் கிடைக்கும் கேரக்டர்களில் ஜொலிக்க வேண்டியதுதான். சும்மா வீட்டில் இருக்க முடியாதே. இப்போ கூட பாரதிராஜா ஸôர் என் நடனத்தைப் பார்த்துவிட்டு என்னை வைத்து ஒரு ஃபோட்டோ செஷன் எடுக்கணும்னு சொல்லியிருக்காரு.

    தற்போது நடித்து வரும் படங்கள்?

    "பெருசு' படத்திற்குப் பிறகு நடித்த "கண்ணும் கண்ணும்' படம் விரைவில் ரிலீஸôகுது. சின்ன கேரகடர் என்றாலும் நச்சுன்னு இருக்கும். இப்போ "பள்ளிக்கூடம்' படத்தில் சீமான் மனைவியா நடித்ததைப் பல பேர் பாராட்டினாங்க.

    அதுமாதிரி சின்ன கேரகடர் என்றாலும் "அம்முவாகிய நான்' படத்தில் பார்த்திபன் அக்கா மகளாக எனக்கு மனசுக்குப் பிடித்த விட்டுக்கொடுக்கும் கேரகடர். கெஸ்ட் ரோல் என்றாலும் மறுப்பதில்லை. அதிலும் அங்கீகாரம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புதான்.

    இப்போ ஜாகுவார் தங்கம் மகன் விஜயசிரஞ்சீவி நடிக்கும் "சூர்யா', "வயசு அப்படி', "மாயவரம்', "வசந்தத்தை நோக்கி' போன்ற படங்களில் நடித்து வருகிறேன்.

    சின்னத்திரையில் நடிக்கும் நிகழ்ச்சிகள்?

    சன் டி.வி.யில் "பந்தம்' தொடரில் ஆண்ட்டி கேரக்டர் பண்றேன். "மஸ்தானா மஸ்தானா' நிகழ்ச்சி மூலம் நல்ல பேரும், பாராட்டும் கிடைச்சிருக்கு. பாலன் இயக்கிய "ராசாத்தி' என்கிற டெலிஃபிலிமில் எனக்குப் பிடிச்ச நல்ல கேரக்டர் கிடைச்சிருக்கு.

    டான்ஸ் மாஸ்டராக வேண்டும் என்ற எண்ணமிருக்கா?

    அம்மாவும், அப்பாவும் ஏ. கே. சோப்ரா மாஸ்டரிடம் உதவியாளராக இருந்தவர்கள். "கோடைமழை' படத்தின் மூலம் அறிமுகமாகி இருவரும் úஸôலோவாகவும் ஆடியிருக்கிறார்கள். அவர்கள் கஷ்டப்பட்டு இந்தத் துறையில் முன்னுக்கு வந்தவர்கள்.

    அதனால் எனக்கு சினிமாவில் நுழைவது எளிதாக இருந்தது.
    நடிப்புக்காக மட்டும்தான் நான் அம்மா அப்பாவிடம் டான்ஸ் கத்துகிட்டேன். ஆனால், டான்ஸ் மாஸ்டராக வரவேண்டும் என்று இதுவரை நினைக்கவில்லை. நடிப்பில் அதிக ஆர்வம், ஈடுபாடு இருப்பதால், வெற்றி கிடைக்கும் வரை அதில்தான் என் கவனமெல்லாம்.

    உங்களை நடனத்தில் அசர வைத்தவர் யார்?

    பிரபுதேவாதான். அவர்தான் என் மானசீக குரு. அவரைப் பார்த்து, அவரிடமிருந்துதான் நான் நடன அசைவுகளின் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டேன். அவரின் நடனத் திறமைதான் நேற்று அவரை நடிகனாக்கியது. இன்று இயக்குனராகவும் மாற்றியிருக்கிறது.

    அவர் இயக்கிய "போக்கிரி' படத்தில், நடனத்தில் மட்டுமல்லாது ஆக்ஷனிலும் அசத்தியிருப்பார். இப்போது ஹிந்திப் படம் டைரக்ட் பண்றார் என்று நினைக்கும்போது பெருமையா இருக்கு. அதே மாதிரி லாரன்ஸ் மாஸ்டர். அவரோட வெற்றியைப் பார்க்கப் பிரமிப்பா இருக்கு.

    அவர் ஊனமுற்ற கலைஞர்களையும் ஊக்கப்படுத்தி நடனம் ஆடவைப்பது ஆச்சர்யமா இருக்கு. அதேபோல் எதுவுமில்லாத, முதியோர்களுக்குப் பல உதவிகளையும் செய்து வர்றார்.
    அழகானவங்க யார்னு கேட்டா முக அமைப்பில் சொல்லாம, அக அமைப்பில் உண்மையா இருக்கறவங்களைச் சொல்லணும்.

    அதுதான் சரியா இருக்கும். உள்ளத்தில் மற்றவர்களை நினைத்து தியாக வாழ்க்கை வாழ்பவர்கள்தான் அழகானவர்கள். அந்த வகையில் லாரன்ஸ் மாஸ்டர்தான் அழகில் என்னைப் பிரமிக்க வைத்தவர்.

    இருப்பதிலேயே எளிதான நடனம் எது?

    குத்து டான்ûஸ யார் வேண்டுமானாலும் ஆடி விட முடியும். அதற்குப் பெரிய அளவில் இலக்கணம் எதுவும் கிடையாது. ஆனால் கிளாசிக்கல் டான்ஸ் அந்த மாதிரி கிடையாது. அது சிக்கலானது, அதை முறைப்படிதான் பயில வேண்டும்.

    அதுக்கு ரொம்ப பொறுமையும், நிதானமும் வேணும். எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும், அதில் அதிக ஈடுபாடும், திட்டமும், உழைப்பும் வேணும். அதனால், நடனம் என்று முடிவு எடுக்கும்போது எல்லாவகை நடனத்தையும் கத்துக்கிட்டா எளிதாக இருக்கும்.

    கதை எழுதறவங்க எப்படி எல்லாவகையான உலக இலக்கியங்களையும் தேடிப்பிடித்து தங்கள் அறிவை வளர்த்துக்கிறாங்களோ, அதே மாதிரி நடனத்தில் சாதிக்கணும்னு நினைக்கிறவங்களும் புதிய புதிய நடன வகைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற தேடல் முயற்சிகளோடே இருப்பது நல்லது.

    பெற்றோரின் ஒத்துழைப்பு எப்படி இருக்கிறது?

    அவங்களோட முழு ஒத்துழைப்பாலதான் நான் இந்தளவுக்குப் பயிற்சியும், முயற்சியுமா இருக்கேன். நான் சினிமா உள்ளவரை... ஸôரி! நான் இருக்கும் வரை சினிமாவில் எனக்கென ஒரு இடத்தை உருவாக்கி நடித்துக் கொண்டிருப்பேன்.

    அதில், நல்ல நடிகை என்ற அங்கீகாரத்தை மக்கள் தருவார்கள். எனக்குத் தெரிந்தது எல்லாம் சினிமாதான்'' என்று தனது விழிகளை அபிநயம் பிடிப்பதுபோல் உருட்டி, ""என்ன சரிதானே!'' என்பது போல் கேட்கிறார் நீபா!

  5. #14
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    தகவலுக்கு நன்றி
    "அன்பே சிவம்.

  6. #15
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    ""இனி என் எல்லாச் சந்திப்புகளும் சில்லுன்னு ஒரு சந்திப்புதான்'' என்கிறார் நடிகை ஷார்மிளா. விஜய் டி.வி.யில், "சில்லுன்னு ஒரு சந்திப்பு' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க உள்ளதைத்தான் இப்படிக் குறிப்பிடுகிறார். இந்நிகழ்ச்சி வருகிற திங்கள் முதல் ஒளிபரப்பாகிறது. வாய்ப்பு இல்லாத நிலையில் திரைத்துறையில் இருந்து சின்னத்திரைக்குப் பலர் தாவுவது வழக்கம். ஆனால் "இதயதுடிப்பு', "வதம்' உட்பட பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிற நிலையிலும் சின்னத்திரையிலும் கவனம் செலுத்துகிறார் ஷார்மிளா. அவருடன் அமைந்த சில்லுன்னு ஒரு சந்திப்பு:

    வழக்கமான டாக் ஷோ நிகழ்ச்சிகளிலிருந்து "சில்லுன்னு ஒரு சந்திப்பு' எந்தவிதத்தில் வித்தியாசப்படுகிறது?

    இது ஒரு வித்தியாசமான நிகழ்ச்சி. சாதனையாளர்களையும் அவர்கள் பற்றிய விவரங்களும் எல்லோருக்கும் தெரியும். சாதனையாளர்கள் உருவாவதற்கு ஏணிப்படிகளாய் இருந்தவர்களை எத்தனை பேருக்குத் தெரியும்? சாதித்த பிறகு எத்தனை பேர் தங்கள் ஏணிப்படிகளை நினைவுகூர்கிறார்கள்? இந்த நிகழ்ச்சி மூலம் ஏணிப்படிகளை நாங்கள் கவுரவிக்க இருக்கிறோம். நடிகர் மாதவன் பேட்டியை ஒளிபரப்புகிறோம் என்றால் அவர் வெற்றிபெறுவதற்கு யார் உறுதுணையாக இருந்தாரோ அவரையும் நிகழ்ச்சியில் வரவழைத்து, எந்தெந்த வகையில் எல்லாம் மாதவன் வெற்றிபெற உதவினார். அவர் பார்வையில் மாதவனின் ப்ளஸ் என்ன? மாதவன் மாற்றிக்கொள்ள வேண்டியது எது என்பதையெல்லாம் அலசுகிறோம்.

    சாதனையாளர் என்றால் திரைப்படத்துறை சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமா?

    அதுதான் இல்லை. மருத்துவம், பொறியியல் என எல்லாத்துறை சாதனையாளர்களும் இந்த நிகழ்ச்சியில் வருவார்கள். மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாக இந்த நிகழ்ச்சி இருக்கப் போகிறது.

    தொடர்பில்லாத துறைகளைச் சேர்ந்தவர்களோடு கலந்துரையாடுகிறபோது உங்களுக்குச் சிரமமாக இருக்காதா?

    சாஃப்ட்வேர் என்ஜினியரிங் படித்துள்ளேன். படிப்பு வாசனையும் எனக்கு உண்டு என்பதால் ஓரளவு எனக்கு அனைத்துத் துறை தொடர்பான விஷயங்களும் தெரியும். இந்நிகழ்ச்சிக்கான வாய்ப்பு கிடைத்தபிறகு, எப்போதும் புத்தகமும் கையுமாகத்தான் இருக்கிறேன். புத்தகத்தைப் படித்தெல்லாம் நிகழ்ச்சியை வழங்குவதால் ஏதோ இறுக்கமான நிகழ்ச்சியாக இருக்கும் என்று நினைத்து விடாதீர்கள். ஜாலிக்கு ஜாலி... ஜோலிக்கு ஜோலி என்கிற வகையில் இருக்கும்.

    இந்த வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?

    கிராண்ட் மாஸ்டர் நிகழ்ச்சியில் இரண்டு முறை வெற்றி பெற்றிருக்கிறேன். இதனால் எனக்குப் பொது அறிவு அதிகம் இருப்பதாக அவர்கள் கருதியிருக்கலாம். இரண்டாவது இயல்பாகப் பழகக்கூடிய ஒரு நடிகையைத் தேடியிருக்கிறார்கள். மூத்த நடிகைகளைப் போடுகிறபோது, வருகிற சாதனையாளர்கள் அவர்களிடம் இயல்பாகப் பேசுவதற்குச் சிரமமாக இருக்கும். அதைப்போல நடிகைகளும் அவ்வளவாகச் சாதனையாளர்களோடு இறங்கி பேசமாட்டார்கள். நான் அப்படியில்லை. நடிகை என்கிற பந்தா எனக்குச் சிறிதும் இதுவரை இருந்ததில்லை. இதனாலும் எனக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள் என்று கருதுகிறேன்.

    வாய்ப்பு இல்லாதபோதுதான் எல்லோரும் சின்னத்திரை பக்கம் வருகிறார்கள். நீங்கள்?

    நான் கதாநாயகியாக நடித்த "இதயதுடிப்பு' என்கிற படம் வெளியாக உள்ளது. "வதம்' உட்பட நாலைந்து படங்களில் தமிழில் கதாநாயகியாக நடித்து வருகிறேன். வாய்ப்பு கிடைக்காமல் சின்னத்திரைக்கு வரவில்லை. சீரியலுக்கு நடிக்க வந்தால்தான் நீங்கள் சொல்வது பொருந்தும். சங்கீதா, கனிஹா போன்றோர் சின்னத்திரையில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிக்கொண்டே சினிமாவில் நடிக்கவில்லையா? அதைப்போல்தான் நானும் வந்துள்ளேன். இன்னொரு வகையில் சினிமாவில் நடிப்பது என்பது கிணற்றுத் தவளை வேலை போல. இந்நிகழ்ச்சியை வழங்குகிறபோது உலக அறிவு நமக்குக் கிடைக்கிறது. இது எனக்குப் பிடித்திருக்கிறது.

    சீரியலில் நடிக்கவே மாட்டீர்களா?

    க்ளிசரினுக்கு வேலை இல்லாத நல்ல கதையாக இருந்தால் நிச்சயம் நடிப்பேன். அதுவும் இப்போது இல்லை. பெரிய திரையில் ஒரு வலம் வந்துவிட்ட பிறகுதான். நடிப்புக்கு அடுத்ததாக எழுத்தின் மீது அதிக ஆர்வம் உண்டு. ஆங்கில கவிதைகள், கதைகள் எழுதி வருகிறேன். "திசை' என்கிற ஒரு படத்திற்கு கதை, வசனம் எழுதினேன். அந்த படம் எடுக்க முடியாமல் போய்விட்டது. அடுத்த வாய்ப்பை எதிர்பார்த்திருக்கிறேன். நடிப்பிற்கு பிறகு கதை வசனம் எழுதி நானே படங்களை இயக்குவேன். இதுதான் என்னுடைய அடுத்த இலக்காக இருக்கும்.

    அப்போதாவது க்ளிசரினுக்கு வேலை இல்லாத சீரியல்கள் எடுப்பீர்களா?

    மெகா சீரியல்கள் என்னால் எடுக்க முடியுமா என்று தெரியவில்லை. அதை ஒரு பெரிய விஷயமாகக் கருதுகிறேன். மூன்று நேரம் ஓடக்கூடிய திரைப்படத்தை எடுக்கக்கூடிய தகுதி மட்டும்தான் என்னிடம் இருப்பதாக நினைக்கிறேன்.

    உங்கள் ஏணிப்படி யார்?

    என் அப்பா. என் அம்மாவுக்குக்கூட என்னைப் பற்றி தெரியாமல் இருக்கலாம். என் அப்பாவுக்குதான் என்னைப் பற்றி எல்லாம் தெரியும். நான் இந்தளவுக்கு வளர்ந்திருக்கிறேன் என்றால் அதற்கு முழு காரணமும் என் அப்பாவே.

  7. #16
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    தமிழ் சினிமாவில் மட்டுமல்ல... தமிழ் தொலைக்காட்சித் தொடர்களிலும் இப்போதெல்லாம் வேற்று மொழித் தொடர்களில் பிரபலமாக நடித்துக் கொண்டிருப்பவர்களைத் தமிழ் சீரியல்களில் நடிக்க வைப்பதற்கு ஆர்வமாக இருக்கின்றனர் தொலைக்காட்சி தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும். இந்த வெள்ளோட்டத்தில் புயலாகப் புறப்பட்டிருப்பவர் மீனாகுமாரி.

    மெகா தொலைக்காட்சித் தொடரின் எந்தப் பாத்திரமாக இருந்தாலும் அதற்கு கச்சிதமாகப் பொருந்தும் முகம் மீனாகுமாரிக்கு. மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கும் இவர், தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களுக்கும் அறிமுகமானவர். மெகா தொடர்களில் நடிப்பதோடு அவ்வப்போது திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் மீனாகுமாரி நம்மிடம் பேசியதிலிருந்து...

    மலையாளத்தில் என்னென்ன சீரியல்களில் நடித்திருக்கிறீர்கள்?

    ஸ்த்ரி ஜென்மம், வாத்ஸல்யம், ஸ்ரீராமன் ஸ்ரீ தேவி போன்ற மலையாள மொழித் தொடர்களில் நடித்திருக்கிறேன். தெலுங்கிலும் நிறைய தொடர்களில் நடித்துள்ளேன். தமிழில் அன்பு மொழி, ஏவி.எம்.மின் "நாணயம்' போன்ற பிரபல தொடர்களில் நடித்துள்ளேன்.

    தற்போது தமிழில் நடித்துக் கொண்டிருக்கும் சீரியல்களில் உங்களுக்கு மாறுபட்ட கேரக்டர்கள் கிடைத்திருக்கிறதா?

    நிச்சயமாக. கலைஞர் டி.வி.யில் ஒளிபரப்பாகும் "வைரநெஞ்சம்' தொடரில் என்னுடைய கேரக்டர் பெயரே சக்தி. பெயருக்கு ஏற்றாற்போல் குடும்பத்தின் மானத்தையும் காப்பாற்றி, தன்னுடைய சுயகெüரவத்தையும் காப்பாற்றும் வலிமையான பாத்திரம். ஒரே வீட்டில் மருமகள்களாகப் போகும் அக்கா, தங்கைக்கு இடையில் நடக்கும் உணர்ச்சிப் போராட்டம்தான் கதையின் கரு. சன் டி.வி.யில் ஒளிபரப்பாகும் "மகள்' தொடரில், என்னுடைய கேரக்டரின் பெயர் காவேரி. பொறுப்பைத் தட்டிக் கழித்தே பழகிவிட்ட தந்தை, அவருடைய செயல்களுக்கு எந்தவிதமான எதிர்ப்பும் காட்டாத அம்மா, தம்பி, சகோதரி... என்று பெரிய குடும்பத்தைக் காப்பாற்றும் ஒருவரே சம்பாதிக்கும் உறுப்பினராக நான். இந்த நிலைமையில் என் வாழ்க்கையில் நடக்கும் போராட்டங்கள்தான் கதை. இரண்டு சீரியல்களிலும் என்னுடைய நடிப்புக்கு நிறைய வாய்ப்பிருக்கிறது.

    திரைப்பட வாய்ப்பு வந்தால் சீரியலில் நடிப்பதற்குத் தொடர்ந்து முக்கியத்துவம் தருவீர்களா?

    திரைப்படங்களில் நடிப்பதற்கு மூன்று நான்கு மாதங்கள் கால்ஷீட் கொடுத்தால் போதும். சீரியல் என்பது அப்படியில்லை. மெகா சீரியலில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டால் அதற்குரிய பொறுப்புணர்ச்சியோடு முடித்துக் கொடுக்கவேண்டும். மெகா தொடர்களில் நான் நடிப்பதற்கு எந்தவிதமான இடையூறும் இல்லாத வகையில் நடிப்பதாக இருந்தால் திரைப்படங்களில் நடிப்பதற்கு எந்தத் தயக்கமும் இல்லை. இந்த கண்டிஷனோடுதான் சமீபத்தில் கூட "கிரீடம்' படத்தில் அஜீத்தின் சகோதரியாக நடித்தேன்.

    மெகா சீரியல்களுக்கு நீங்கள் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள். ஆனால் மெகா சீரியல்களில் நடிக்கும் நடிகைகளுக்கு அந்தளவுக்கு சீரியல்கள் முக்கியத்துவம் கொடுக்கிறதா? திடீரென்று நினைத்தால் ஒருவரை நீக்கிவிடுகிறார்களே...?

    நான் முன்பே சொன்னது போல் மெகா சீரியல் என்பது நீண்ட நாள் எடுக்கப்படும் விஷயம். இரண்டு வருடம் மூன்று வருடம் ஒப்பந்தம் போடுகிறார்கள் என்றால், அந்த இடைப்பட்ட காலத்தில் நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் எவ்வளவோ சம்பவங்கள் நடக்கலாம். சிலருக்கு வெளிநாட்டுப் பயணம் அமையலாம். சிலருக்கு திருமணம் நடந்து, தொடர்ந்து நடிக்க முடியாத நிலை வரலாம். இதுபோல் தவிர்க்க முடியாத காரணங்களால் நடிகர்களும், வேறு சில காரணங்களால் தொலைக்காட்சித் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் சில நடிகர்களை மாற்றுவது நடக்கிறது. இது எல்லோருக்கும் நடக்கும் விஷயம் அல்ல. எப்போதாவது, யாராவது ஒருவருக்கு நடக்கும் விஷயம். இது நடப்பதற்கும் பின்னணியில் நிச்சயமாக நியாயமான காரணம் இருக்கும். ரசிகர்களுக்கு தேவை நல்ல கதையும். திறமையான நடிகர்களும்தான்.

    நடிகராக இல்லை, ரசிகராக இருந்து சொல்லுங்கள். தொலைக்காட்சி ரசிகர்களின் ரசிப்புத் தன்மையில் எத்தகைய மாறுதல் வரவேண்டும்?

    இப்போது நிறைய சேனல்கள். நிகழ்ச்சிகளுக்கும் பஞ்சமில்லை. ரசிப்புத் தன்மைக்கும் பஞ்சமில்லை. விளையாட்டு, சீரியல், டாக்-ஷோ, டான்ஸ் ஷோ, பாடுபவர்களுக்கென்று ஷோ, க்விஸ் நிகழ்ச்சிகள், அரட்டை கச்சேரிகள்... குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் என்று என்ன இல்லை. எல்லாவற்றையும் ரசிப்பதற்கென்று தனித் தனியாக ரசிகர்கள் இருந்து கொண்டுதானே இருக்கிறார்கள்? ரசிகர்களிடம் இன்றைக்கு இருக்கும் ரசனைக்கு என்ன குறை?

    ஒன்று அழுது வடிந்து கொண்டிருக்கும் பெண். இல்லாவிட்டால், பழிவாங்கத் துடிக்கும் பெண். இந்த இரண்டு எல்லைகளை நோக்கி நகர்பவளாகத்தானே சீரியலில் பெண்களின் கேரக்டர்கள் இருக்கின்றன?

    எப்படிப்பட்ட பாத்திரம் என்பதைச் சொல்வதற்காகத்தான் நீங்கள் சொல்லும் எல்லைகளைத் தொட வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலுமே நிறைய அரசியல் இருக்கத்தானே செய்கின்றது!

  8. #17
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    நடிப்பு, நடனம் என்று எல்லாவற்றிலும் சின்னத் திரை வட்டத்தில் கலக்கிக் கொண்டிருப்பவர், ப்ரீத்தி. அவர் டிங்குவுடன் போட்ட ஆட்டத்தைப் பார்த்து பாராட்டாதவர்களே இல்லை. ஜோடி நெ. 1 போட்டி நடந்த அரங்கத்தில் இருந்த ஆடியன்ஸ், தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் முதல் நடுவர்கள் வரை ப்ரீத்தியின் நடனத் திறமையைக் கண்டு வியக்காதவர்களே இருக்க முடியாது. சின்னத் திரை, வெள்ளித் திரை என்று எதைப் பற்றிக் கேட்டாலும் பளிச்சென்று வருகிறது அவரிடமிருந்து பதில்.

    மீடியாவில் உங்களின் என்ட்ரி எப்படி, எப்போது நிகழ்ந்தது?

    2002-ல் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போதே "திரைக்குப் பின்னால்' என்னும் நிகழ்ச்சியை ராஜ் டி.வியில் தொகுத்தளித்தேன். மெகா தொடரைப் பொறுத்தவரை கே.பாலசந்தரின் "வீட்டுக்கு வீடு லூட்டி', "அண்ணாமலை' போன்ற சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தேன். முன்னணி தொலைக்காட்சி இயக்குனர்கள் பெரும்பாலானவர்களின் இயக்கத்தில் நடித்திருக்கிறேன்.

    தற்போது நடித்துக் கொண்டிருக்கும் சீரியல்கள்?

    கலைஞர் டி.வி.யில் ஏவி.எம்.மின் "வைரநெஞ்சம்' தொடரிலும், கே.பி.சார் டைரக்ஷனில் "நான் அவள் இல்லை' தொடரிலும் நடித்துவருகிறேன்.

    தேவையில்லாமல் ஃபுட்டேஜ் பிராப்ளத்திற்காக சீரியல்களில்தான் காட்சிகளை இழுப்பார்கள். இந்த விஷயம் இப்போது டாக்-ஷோ, டான்ஸ் ஷோக்களிலும் தொடர்கின்றதே?

    சில விஷயங்களை அந்தக் குறிப்பிட்ட போட்டிச் சுற்று முடிந்தவுடன்தான் ஒளிபரப்ப முடியும். சில எபிசோடில் போட்டியாளர்களின் வீடுகளில், அவர்கள் பயிற்சி பெறும் விதங்களைக் கூட காட்டுவதற்காக இருக்கலாம். மற்றபடி டான்ஸ் ஷோக்களை ஃபுட்டேஜ் பிராப்ளத்தில் சேர்க்க முடியாது.

    டான்ஸ்-ஷோவில் பங்கெடுத்தவர்கள் முதல் நடுவர்கள் வரை எல்லோருமே ஏன் ரொம்பவும் உணர்ச்சி வசப்படுகிறார்கள். இது இயற்கையானதா, திட்டமிட்ட ஒன்றா?

    நிச்சயமாக திட்டமிடல் எல்லாம் கிடையாது. அந்தந்த நேரத்தில் நிகழ்ந்ததைத்தான் ஜோடி நெ.1-ல் நீங்கள் பார்த்தீர்கள்.

    ஜோடி நெ.1 போட்டியில் பரிசு பெற்ற பணத்தைக் கொண்டு சமூகத்திற்குப் பயன்படும் வகையில் ஏதாவது செய்வதற்கு திட்டம் உள்ளதா?

    எதிர்காலத்தில் நிச்சயமாகச் செய்வேன்.

    போட்டியின் போது அடிக்கடி கெமிஸ்ட்ரி நன்றாக இருந்தது என்று நடுவர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்களே...என்ன அது?

    நம்முடன் ஆடும் பார்ட்னர்களின் மூவ்மென்ட்களுக்கு ஏற்றார் போல் நம்முடைய மூவ்மென்ட்களில் சிலச் சில மாற்றங்களை உடனுக்குடன் செய்வதுதான் கெமிஸ்ட்ரி. வேற ஒண்ணுமில்லீங்க!

    ஜோடி நெ.1-ல் ஜெயித்ததின் மூலம் கிளாசிக்கல் டான்சர் என்ற இமேஜில் பாதிப்பு வராதா?

    அது வேறு. இது வேறு. நான் கலாக்ஷேத்திராவில் நடனம் பயின்று கிளாசிக்கல் டான்சராக இருப்பது, சின்னத் திரை ரசிகர்களுக்குத் தெரியாது. அவர்களைப் பொறுத்தவரை நான் நடிகையாக மட்டுமே அவர்களுக்கு அறிமுகமாகியிருந்தேன். நான் ஆடவும் செய்வேன் என்பதே நிறையப் பேருக்கு ஆச்சரியமாக இருந்திருக்கும்.

    பெருகி வரும் நடனப் போட்டிகள், டாக்-ஷோக்கள் போன்றவற்றால் மெகா சீரியல்களின் எதிர்காலம் பாதிக்கப்படுமா?

    எல்லாவகையான ரசிகர்களையும் திருப்திப்படுத்துவதற்கே சேனல்கள் இயங்குகின்றன. அதனால் எந்தப் புது விஷயத்தாலும், சீரியல்களுக்கு இருக்கும் மவுசு பாதிக்கப்படாது.

    சினிமாவில் ஒரு பாடலுக்கு பிரபல நடிகருடன் ஆடுவதற்கு வாய்ப்பு வந்தால் ஆடுவீர்களா?

    நிச்சயமாக ஆடமாட்டேன்.

    உங்களின் ரியல் ஜோடியைக் கண்டுபிடித்து விட்டீர்களா?

    இன்னும் இல்லை. இப்போதென்ன அவசரம்?!

  9. #18
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    Meera Vasudevan Interview

    குடும்பப் பிரச்சினை... காவல் துறையில் புகார்... விவாகரத்து... செய்திகளுக்குப் பிறகு தெள்ளத் தெளிவான மீரா வாசுதேவனை கலைஞர் டிவியில் பொங்கலன்று பார்க்கமுடிந்தது. டாடா இண்டிகாம் ஆட்டம்-பாட்டம் ஷோவில் காம்பியரிங் கலக்கல் மீராதான்!

    இனி ஹஸ்கி வாய்ஸில் மீராவின் பதில்கள்...

    நீங்கள் காம்பியரிங் செய்யும் ரியாலிட்டி ஷோவின் தனித் தன்மை என்ன?

    நீங்கள் இதுவரை பார்த்த எந்த ரியாலிட்டி ஷோவாக இருந்தாலும் சரி, அதில் ஏற்கனவே பிரபலமானவர்களுக்கு மட்டும்தான் டான்ஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். இல்லாவிட்டால் பள்ளி, கல்லூரிகளில் படிப்பவர்களாக இருக்க வேண்டும், ஐ.டி. பார்க்குகளில் வேலை செய்பவர்களாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் எல்லாம் இருக்கும். கலைஞர் டி.வி.யில் கலா மாஸ்டர் டைரக்ட் செய்யும் டாடா இண்டிகாம் ஆட்டம்-பாட்டம் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் பார்வையாளர்கள் கூட நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பை வழங்குகிறோம். இதுதான் நான் காம்பியரிங் செய்யும் இந்த ரியாலிட்டி ஷோவின் ஸ்பெஷாலிட்டியே!

    சினிமாவில் வாய்ப்பு குறைந்ததால்தான் சின்னத் திரையில் நடிக்க வந்தீர்களா?

    அப்படிச் சொல்ல மாட்டேன். சிறந்த நடிகைக்கான தமிழ் மாநில அரசின் விருதைப் பெற்றவள் நான். ஏனோதானோ என்று என்னால் படங்களில் நடிக்க முடியாது. என்னுடைய இந்தத் தீர்மானத்தில் மண் விழுந்தது, என்னுடைய திருமணத்திற்குப் பின்தான். என்னுடைய கணவரின் வற்புறுத்தலால் பல படங்களை எனக்கு விருப்பம் இல்லாமல்தான் நடித்தேன். அவர்களுக்குப் பணம் மட்டுமே பிரதானமாக இருந்தது. நல்ல படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எவ்வளவோ சொன்னேன். யாரும் கேட்பதாக இல்லை. அவர்களின் வற்புறுத்தலால்தான் டிவி பக்கமே வந்தேன். ஆனால் கணவன் போடாத சோறை, எனக்கு இந்தச் சின்னத் திரைதான் இப்போது போட்டுக் கொண்டிருக்கிறது!

    என்ன படிக்க வேண்டும், எந்த மாதிரியான பணியில் ஈடுபடவேண்டும் என்பதில் தெளிவாக இருக்கும் இந்தக் காலப் பெண்கள், தங்களின் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் கோட்டை விட்டு விடுவது ஏன்?

    எவ்வளவுதான் பணம் சம்பாதித்தாலும், புகழின் உச்சியில் இருந்தாலும் தனக்காக உருகும் ஒரு துணை வேண்டும் என்று எதிர்பார்ப்பவளாகத்தான் எந்தப் பெண்ணும் இருப்பாள். இதற்கு நான் உள்பட எந்தப் பெண்ணும் விதிவிலக்கல்ல. இந்த எதிர்பார்ப்புதான் பெண்களின் பலவீனம்; இந்த பலவீனத்தை ஆண்கள் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்கிறார்கள். வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் பெண்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்பதற்கு நானே ஓர் உதாரணம்.

    மீடியாவின் வெளிச்சத்தில் வலம் வரும் பல பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் இருட்டு சூழ்ந்திருக்கிறதே...?

    பேங்க் பணியில் இருப்பவர், மார்க்கெட்டில் காய், கனிகள் விற்பவர், ஐ.டி. பணிகளில் இருப்பவர்.... இப்படிச் சமூகத்தில் எந்தப் பணியில் இருக்கும் பெண்களுக்கும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் கணவனால் பிரச்னைகள் ஏற்பட்டாலும் அவை பெரிதாக யாருக்கும் தெரிவதில்லை. மீடியாவில் புகழின் வெளிச்சத்தில் இருப்பவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் தோல்விகள்தான் எல்லோருக்கும் எளிதாகத் தெரியும்.

    டாக் ஷோ, ரியாலிட்டி ஷோ எவ்வளவோ வந்தாலும் மக்களிடம் சீரியல்களுக்கு இருக்கும் ஈர்ப்பு இன்னும் குறையவில்லையே?

    இனிமேலும் குறையாது என்பதுதான் என்னுடைய கருத்து. டாக் ஷோ, ரியாலிட்டி ஷோக்கள் எல்லாமே பார்ப்பவர்களை என்டர்டெயின் பண்ணுவதோடு அதன் வேலை முடிந்துவிடுகிறது. சீரியல்கள் அப்படி இல்லை. அதன் ஒவ்வொரு எபிசோட்டுடனும் ரசிகர்கள் ஒன்றிப்போய் இருக்கிறார்கள். தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த, நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களோடு, சின்னத் திரையில் ஒளிபரப்பாகும் கதைச் சம்பவங்களை பொருத்திப் பார்த்துக் கொள்கிறார்கள். வெற்றியும், தோல்வியும், பொறாமையும், மாமியார் கொடுமையும், குடிகார கணவர்களின் கொடுமையும் இவற்றுக்கு எதிராகப் போராடும் பெண்களின் கதைகளும் தானே இன்றைக்கு பெரும்பாலான தொடர்களின் மையக் கருத்தாக இருக்கின்றது. இதற்கு பெண்களிடம் வரவேற்பு எப்படிக் குறையும்?

    டி.வி.சேனல்களில் இன்னும் எத்தகைய மாற்றங்கள் வரவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

    குழந்தைகளுக்கென்று சேனல்கள் இருக்கின்றன, பொது அறிவை வளர்த்துக் கொள்வதற்கான சேனல்கள் இருக்கின்றன. கலந்துரையாடல், அர்த்தமுள்ள அரட்டை அடிப்பதற்கான சேனல்கள் இருக்கின்றன. இளைஞர்களுக்காக டாக் ஷோ, ரியாலிட்டி ஷோ போன்றவைகளுக்காக தனித் தனி சேனல்கள் இருக்கின்றன. விளையாட்டுக்கென்று இருக்கின்றன... இன்னும் என்ன மாற்றங்கள் வரவேண்டும் என்று நினைக்கிறீர்கள். போதுமான அளவுக்கு எல்லா சேனல்களுமே இருக்கின்றதே!

    கிளிசரின் தேவைப்படாத கதாபாத்திரங்கள் உங்களுக்கு சின்னத் திரையில் கிடைக்கின்றதா?

    நிச்சயமாகக் கிடைக்கின்றது என்றுதான் சொல்லுவேன். சன் டிவியில் ஒளிபரப்பாகும் சூர்யவம்சத்தில், தன்னையும் காப்பாற்றிக் கொண்டு, வயிற்றில் வளரும் தன்னுடைய குழந்தையையும், குடும்ப மானத்தையும் மனம் கலங்காமல் காப்பாற்றும் வேடம். கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் வைஜெயந்தி ஐ.பி.எஸ். தொடரில் காக்கிச் சட்டை அணிந்த போலீஸ் அதிகாரியாக நடிக்கிறேன். இதில் கிளிசரினுக்கு வேலை இல்லை... துப்பாக்கிக்குத்தான் வேலை!

    முன்னணி நடிகைகளாக இருந்தவர்களே, ரீ-என்ட்ரி ஆகும்போது "ஐட்டம் சாங்'குகளில் தூள் கிளப்புகிறார்கள்... நீங்கள் எப்படி?

    ஐட்டம் சாங் ஆடவேண்டிய அவசியம் எனக்கில்லை. என் நடிப்புத் திறமைக்கேற்ற வாய்ப்பு நிச்சயம் வரும். சின்னத் திரையில் இன்னும் நிறைய சீரியல்களில் நடிப்பேன். மறுபடியும் சினிமாவில் நல்ல ரோல்களில் என்னைப் பார்க்கலாம். இது உறுதி. இனிமேல் எனக்கு நல்ல காலம்தான்!

  10. #19
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    Chandra Lakshmanan (Kolangal) Interview

    "செய்யற வேலை யை ஒழுங்கா செஞ் சாத் தான் நிலைச்சு நிற்க முடியும். கவனத்தை வேறு திசையில திருப்பி தொழிலை கோட்டை விட்டுடக் கூடாது!' விஜய் "டிவி'யில் "காதலிக்க நேரமில்லை' சீரியலில் நடிக்கும் சந்திரா லட்சுமணனை "ஜோடி நெ.1' போட்டி ஆட் டத்தின் போது "பேட்டி'க்கு சந்தித்தோம். சந்திராலட்சுமணனின் சுவாரஸ்யமான பேட்டி:



    * நீங்கள் நடிக்கும்"காதலிக்க நேரமில்லை' சீரியலில் திருமணத்திற்கு முன்பே ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழலாம் என்பது போல கதை போகிறதே?

    காதலிக்க நேரமில்லாத ஆணும், பெண்ணும் காதலிப்பதற்காக ஒரு புதிய தளத்தை உருவாக்கி தங்களுடைய காதலை சொல்ல முயல்றாங்க. திருமண பந்தம் இக்காலக் கட்டத்தில் சுமையாக கருதப்படுகிறதா? திருமணத்திற்கு முன் இருவரும் இணைந்து வாழும் உறவை ஏற்றுக் கொள்ள முடியுமா? உண்மையான காதலை எப்படி தெரிந்து கொள்வது? பரபரப்பான இந்த வாழ்க் கை சூழலில் காதலுக்கு நேரம் உண்டா, காதலிக்கும் போது இருக்கும் நேசம், பாசம் திருமணம் முடிந்த சில காலங்களில் குறைந்துவிடுகிறதா இப்படி பல கேள்விகளோடு "காதலிக்க நேரமில்லை'கதை போகிறது. சீரியலில் எனக்கு டைரக்டர் கொடுத்த கேரக்டரை செஞ்சிருக்கிறேன். திருமணத்திற்கு முன்பே சேர்ந்து வாழ்கிற கலாசாரத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது.

    * கோவிலில் "சீட்' எழுதிப் போட்டு, நடிக்க வந்ததாக பேசப்பட்டதே?

    காலேஜ்ல கேட்டரிங் டெக்னாலஜி படிச்சு முடிச்ச பிறகு அடையார்ல பார்க்ஷெரட்டன் ஒட்டலில் டிரெயினிங் போயிருந்தப்ப,அங்கு என்னை டைரக்டர் சந்தோஷ் பார்த்தார். அவரது படத்தில் நடிக்கிறியான்னு கேட்டார். அப்பா அம்மாக்கிட்டே சொன்னேன். அவுங்க சாமிக் கிட்டே கேட்டுடலாம்ன்னு சொல்லி "சீட்' எழுதிப் போட்டு பார்த்தோம். நடிக்கலாம்ன்னு வந்தது. படத்தில் நடிச்சேன். மலையாளத்தில் பிருத்விராஜுடன் சேர்ந்து "ஸ்டாப் வயலன்ஸ்' படத் தில் நடிச்சேன். நுõறு நாட்களை தாண்டி ஓடியது. தொடர்ந்து 10 படங்களில் நடித் தேன். சீரியலிலும் நடிச்சிட்டிருக்கேன்.

    * "காதலிக்க நேரமில்லை' சீரியலில் உங்களோடு இணைந்து நடிக்கும் பிரஜினும் நீங்களும் "ஜோடி நெ.1'லும் இணைந்து ஆடும் வாய்ப்பு எப்படி வந்தது?

    விஜய் "டிவி' நிகழ்ச்சி சம்பந்தப்பட்டவர்களை வச்சு தான் "ஜோடி நெ.1' வடிவமைக்கப்பட்டுள்ளது."காதலிக்க நேரமில்லை'யில் நானும் பிரஜினும் நடிப்பதால் இப் போட் டியில் ஜோடி போட்டு ஆடுவதற்கு வாய்ப்பு கிடைச்சிருக்கு. வேறு ஏதும் காரணம் இல்லை.

    * நடிகை ஸ்ரீவித்யாவுடன் சேர்ந்து முன்பு மேடைகளில் கச்சேரி செய்ததாக சொன்னார்களே, இசையில் நாட்டம் உண்டா?

    இசையின் மீது ஆர்வம் அதிகமிருந்ததால கத்துக்கிட்டேன். குருவாயூர் கோவிலில் நானும் ஸ்ரீவித்யா மேடமும் சேர்ந்து பாடி னோம். மென்மையான மனுஷி. அவுங்க இறந்த மாதிரியே தெரியலை. அவுங்க உயிரோடு இருப்பது போலவே நினைக்க தோன் றது. நாங் கள் தெய்வச் சன்னதியில் சேர்ந்து பாடியதை மறக்க முடியாது.

    * அதிர்ஷ்டம் என்று நினைப்பது எதை?

    சினிமா "டிவி'யில் தொடர்ந்து வாய்ப்பு கிடைப்பது கஷ்டம். இரண்டு, மூன்று வருடம் கழிச்சு பிரேக் வந்துடும். எனக்கு அப் படி பிரேக் ஏதும் ஏற்படலை. சினிமா, சீரியல்ன்னு வாய்ப்பு வந்திட்டிருக்கு. எல்லாம் கடவுள் கொடுக்கிறார்ன்னு நினைச்சிட்டு ஒர்க் பண்ணிட்டிருக்கேன். இது என்னோட அதிர்ஷ்டம்ன்னு நினைக்கிறேன்.

    * கல்லூரியில் படிக்கும் போது காதல் ஏதும்?

    கல்லூரினா காதலிலில்லாம இருக்குமா. எனக்கு காதல் வரலை. ஆனா நிறைய லவ் லெட்டர் வந்தது. எதையும் கண்டுக்காம விட்டுட்டேன். இப்ப நினைச்சா சிரிப்பாயிருக்கு. எந்தக் கவலையும் தெரியாம ப்ரி பேர்ட்ஸா பறக்கிற காலம் காலேஜ் லைப் தாங்க.

    * காதல் விஷயத்தில் இப்போது உங்கள் நிலை...?

    ""காலேஜ் லைப்ல லவ் லெட்டரை ஜாலியா எடுத்து விட்டுடலாம். தொழில்ல லவ்'வின் பார்வை வேறு விதமாகதான் இருக்கும். செய்யற வேலையை ஒழுங்கா செஞ்சாத்தான் நிலைச்சு நிற்க முடியும். கவனத்தை வேறு திசையில திருப்பி தொழிலை கோட்டை விட்டுடக் கூடாது. என்னோட பழகுகின்ற மற்றவங்களுக்கும் நான் எப்படிப்பட்ட பொண்ணுன்னு தெரியும். அதனால யாரும் காதல் கணை இதுவரை தொடுக்கலை.எனக்கு லவ்'வும் வரலை. லவ்' பண்ண பயப்படவும் வேண்டியதில்லை. அப்பா அம்மாவுக்கு ஒரே பொண்ணு நான். ஒரு ஆளைக் காட்டி இவரைத் நான் காதலிக்கிறேன். மேரேஜ் செஞ்சு வைங்கன்னா செஞ்சு வச்சுடுவாங்க. என்னோட முடிவுகள் சரியானதாகத் தானிருக்கும்ன்னு பெற்றோர் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை தான் இதற்கு காரணம். <<உலக நடப்புகளை அப்பா அம்மா எனக்கு சொல்லிக் கொடுத் திருங்காங்க. எப்படி வாழ்ந்தால் பிரச் னையில்லாமல் பெருமையா வாழலாம்ன்னும் சொல்லி வளர்த்திருக்காங்க. இப் படி வளர்க்கப்பட்ட நான் எப்படி "ரூட்' மாறி போவேன் சொல் லுங்க. எனக்கு வர்ற மாப் பிள்ளை என் அப்பா அம்மாவுக்கு பிடித்த ஆளாகத் தானிருப்பார். கடவுள் எனக்கு வேண்டியவரை தான் என்னிடம் காட்டுவார்,'' என்று ஆர்வமாக சொன்னார் சந்திராலட்சுமணன்.

  11. #20
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    Priyanka Interview

    சிவாஜி புரொடக்ஷன் தயாரித்து வரும் "தவம்' சீரியலில் ஷூட்டிங்'கில் பிரியங்காவை "பேட்டி'க்கு சந்தித்த போது, ""அப்பா அம்மாவை பத்திரமா பாதுகாக்கணும், அவுங்களோட வயசான காலத்தில நாம காட்டும் பாசம், பரிவு அவுங்களை சந்தோஷப்படுத்தணும். முதியோர் இல்லத்தில விட்டுட்டு அவுங் களை அன்புக்கு ஏங்க வைக்கக் கூடாது,'' என்று உருக்கமாக சொன்னார். பிரியங்காவின் பேட்டி:



    * சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு வந்து "டிவி'பக்கம் வந்துட்டீங்களே?

    நடிக்கணும்ன்னு வந்துட்டு, சினிமாவில் நடிக்க ஆசையில் லாம இருக்குமா. "காதல் கிறுக் கன், துõள், மருதமலை, அலை' ன்னு பல படங்கள்ல நடிச்சிட் டேன். சினிமாவுல நடிக்க காத்திருந்து நாட்களை வேஸ்ட் செய்ய வேண்டியிருந் தது. "டிவி' பக்கம் வந்ததால ஒவ்வொரு நாளும் பிரயோசனமானதாக இருக்கு. மாதத் தில் 20 நாட்கள் ஒர்க் பண்ணிட்டிருக்கேன். "டிவி'ப் பக்கம் வந்ததால சினிமாவுக்கு நான் ஒன்றும் "குட்பை' சொல்லிடலை. நல்ல வாய்ப்புக்கு காத்திருக்கிறேன்.

    * காமெடி சீனில் நடிக்க ஆர்வம் காட்டுவதாக பேசப் பட்டதே?

    எனக்கு காமெடி சீன்ல நடிக்க ஆசையிருக்கு. "மருதமலை' படத்தில வடிவேலுவுடன் நடிச்சேன். சாதாரணமான சீனை வடிவேலுவிடம் கொடுத்தாலே போதும், மனுஷர் அட்டகாசமா காமெடி செஞ்சு அசத்திடுவார். சீன்'ல அவரோட ஈடுபாடு,எதார்த்த ரீயாக்ஷன்ல இருக்கிற காமெடி கலக்கல் மிரட்டும். சென்டிமென்ட் சீன்'ல நடிக்கிறதைவிட காமெடி சீன்'ல நடிப்பது சிரமம். இருந்தாலும் சென்ட்டிமென்ட் சீனைவிட காமெடி சீனுக்கு தான் ரசிகர்களிடம் வரவேற்பு அதிகம் இருக்கு. காமெடி சீன்'ல நடிக்க நல்ல வாய்ப்பு கிடைச்சா வெளுத்து வாங்கிடுவேன்.

    * சீரியல்களில் வில்லி கேரக்டரில் நடிப்பது பற்றி?

    வில்லி கேரக்டரில் விரும்பி நடிக்கிறேன்னு சொல்றதைவிட இந்த கேரக்டரில் நல்லா செய்வேன்னு நினைச்சு டைரக்டர்கள் கொடுக்கிறாங்க. ஸ்டோரிக்கு ஹீரோ, ஹீரோயின் முக்கியமானவங்களா இருந்தா லும், டேர்னிங் பாயிண்ட்'டா வில்லி கேரக்டருக்கும் முக்கியத்துவம் இருக்கு. நடிக்க வந்த பிறகு இந்த கேரக்டரில் நடிக்க மாட்டேன், அந்த கேரக்டரில் நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டிருக்கலாமா, எந்தக் கேரக்டரிலும் நான் நடிப்பேன். பத்தாம் வகுப்பு படிச்சிட்டிருந்தப்ப ஏ.வி.எம்.. நிறுவனத்திற்காக "ஸ்டில்' சாரதியுடன் ஒரு சந்திப்புக்கு காம்பியரிங் செய்ய வாய்ப்பு கிடைச்சது. அப்புறம் சித்தி, அண்ணாமலை, அஞ்சலி'ன்னு நிறைய வாய்ப்பு வந்தது. அரசி, தீரன் சின்னமலை, தவம், ரேகா ஐ.பி.எஸ்., நடிச்சிட்டிருக்கேன்.

    * நடிகைகளை கிளாமராக நடிக்க வைக்க நினைக்கும் இயக்குனர்கள் பற்றி?

    படத்தின் கதையை சொல்லும் போதே இயக்குனர்கள் சீன்களை சொல்லிடுவாங்க. அதில் கிளாமராக நடிக்க வேண்டிய சீன் இருந்தாலும் சொல்லிடுவாங்க. எதுவும் சொல்லாம ஷூட்டிங் ஸ்பாட்'டில் போய் டைரக் டர் சீன் சொல்லி கிளாமரா நடிக்கணும்ன்னு சொல்லும்போதுதான் பிரச்னை வந்துடுது. சீன் பற்றி முன்பே பேசிட்டா ஷூட்டிங்' போகும் போது பிரச்னை இருக்காது. கிளாமராக நடிப்பது பற்றியும் பிரச்னை வராது.

    * தவிர்க்க வேண்டிய விஷயம் என்று ஏதும் மனதில்?

    ""அப்பா, அம்மாவைவிட கண்கண்ட தெய்வம் இல்லைன்னு தான் சொல்வேன். அவுங்க வயசான காலத்தில அவுங்களை இடைஞ்சலா நினைக்கக்கூடாது. எவ்வளவு வேலை இருந்தாலும் அவுங்களை கவனிச்சிக் கிடறதுக்கும் நேரம் ஒதுக்கணும். வசதி வாய்ப்பிருந்தும் பல பேர் பெற்றோர் களை முதியோர் இல்லத் தில கொண்டு போய் விடறாங்க. அவுங்க அங்கு அன்புக்கு ஏங்கி தவிக்கிறாங்க, நம்மலை எப்படியெல்லாம் பாது காத்து வளர்த்து ஆளாக்க சிரமப்பட்டிருப்பாங்கன்னு நினைச்சு பார்க்கணும். அம்மா, அப்பாவை கடைசி வரை சந்தோஷமா காப்பாத்தணும். குழந் தைங்க நம்மளை நல்லபடியா பாத்துக்கிடுதுன்னு அவுங்க சந்தோஷப்பட்டாத்தான் நாம நல்லாயிருப்போம்,'' என்று உருக்கமாக சொன்ன பிரியங்காவை அவரது அம்மா மொபைல் போனில் அழைக்க பறந்தார்.

Page 2 of 46 FirstFirst 123412 ... LastLast

Similar Threads

  1. IR concerts, TV shows and Interviews ...
    By Sanjeevi in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 355
    Last Post: 2nd June 2018, 06:26 AM
  2. Sharing-IR's music-interviews-BgmClips- in web
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 860
    Last Post: 2nd October 2012, 12:43 AM
  3. Talented TV artists
    By swathy in forum TV,TV Serials and Radio
    Replies: 20
    Last Post: 21st March 2010, 10:13 PM
  4. Artists and their best emotions
    By Shakthiprabha. in forum Tamil Films
    Replies: 167
    Last Post: 22nd May 2007, 08:41 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •