Page 2 of 4 FirstFirst 1234 LastLast
Results 11 to 20 of 33

Thread: ilaiyudhir kAlathil sila iravugaL

  1. #11
    Member Junior Hubber venkathoney's Avatar
    Join Date
    Jun 2006
    Posts
    42
    Post Thanks / Like

    Re: ilaiyudhir kAlathil sila iravugaL

    Quote Originally Posted by madhu


    ( தலைப்பு நல்லா இருக்கா ? ) :P


    .
    Nalla irruku.........

    Kadhaiyai viraivil edhirparkiroom aavalaa
    "It takes a minute to have a crush on someone,
    an hour to like someone, and a day to love someone...
    but it takes a lifetime to forget someone."

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #12
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    idhu oru nedunkathai... every week oru episode... nALaikku mudhal episode post seyyaren :P

  4. #13
    Senior Member Diamond Hubber
    Join Date
    Jan 2006
    Posts
    6,074
    Post Thanks / Like
    anna
    Anbe Sivam

  5. #14
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    vaasi..

    idhu konjam periya story. adhunAla every week saturday / sunday oru episode post seiven. ( inimEl naanum konjam bujy aayiduvenla.. :P )

    anyway... adhai reNdu part-a post seyyaren.. first part of episode 1 is here...

  6. #15
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    1. இது வசந்த காலம்


    முன்னொரு காலத்தில் வீரமகேந்திரபுரம் என்ற நாட்டின் தலைநகராம் குமுதபுரியில் இந்திரசேனன் என்ற அரசன்
    ஆண்டு வந்தான். அவனுக்கு குமுதவல்லி என்ற பெண் பிறந்து இளவரசியாக வளர்ந்து வந்தாள், தக்க பருவத்தில்
    அவளுக்கு ஏற்ற துணையைத் தேடி மணமுடிக்க எண்ணிய அரசன், தன் பட்டத்து ராணியாகிய உலகமாதேவியுடன்
    ஆலோசனை செய்தான்.

    உலகமாதேவியின் அண்ணன் காலபுரத்தை ஆண்ட கனகவர்மன். அவனுக்கு விஜயவர்மன் என்ற மகன் இருந்தான்.
    அவன் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கியதுடன் வீர தீர பராக்கிரமங்களிலும் மேம்பட்டு இருந்தான். அதே போல
    இந்திரசேனனின் உடன் பிறந்த மோகனவல்லியை கதம்பகிரி மன்னன் காடவர்மனுக்கு மணமுடித்துக் கொடுத்திருந்தார்கள்.
    அவர்கள் மகன் ஆதித்தனும் கட்டிளங்காளையாய் வளர்ந்து பல கலைகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தான்.

    தற்போது நிலாமுற்றத்தில் அமர்ந்து அளவளாவிக் கொண்டிருந்த அரசனும் அரசியும் இந்த இருவரில் யார் தங்கள்
    மகளுக்கு ஏற்றவன் என்று தேர்வு செய்து கொண்டிருந்தனர்.

    "தேவி... இருவருமே மிகுந்த திறமை உள்ளவர்களாகத் திகழ்வதால் இதில் நம் அன்பு மகளுக்கு வாழ்க்கைத் துணையாக
    யாரைத் தெரிந்தெடுப்பது ? நமது அமைச்சரோ விஜயவர்மன் சிறந்தவன் என்கிறார். ராஜகுருவோ ஆதித்தன் சரியான
    இணை என்கிறார்" என்று அரசன் கேட்க அரண்மனை நந்தவனத்தை நோக்கிய அரசி உலகமகாதேவி "அரசே.. இவர்களில்
    யார் நம் மகளை மணக்க தகுதி வாய்ந்தவர் என்று ஒரு சோதனை செய்து பார்த்துவிடலாம்" என்றாள்.

    "அதுவும் சரிதான்.. இருவருமே வில்வித்தை, வாட்பயிற்சி, யானையேற்றம், குதிரையேற்றம் மட்டுமின்றி கல்வி, கேள்விகளிலும்
    சிறந்து விளங்குகிறார்கள் என்று கேள்விப்பட்டேன்"

    அரசி புன்னகைத்தாள். "நான் சொல்லும் பரீட்சை அவற்றுக்கு எல்லாம் அப்பாற்பட்டது அரசே... நமது நாட்டில்
    அடுத்த இரு திங்கள் கடந்ததும் பருவ மழைக்காலம். இதோ இந்த பூங்காற்று இன்னும் சில தினங்களில் சுழிக்காற்றாக
    மாறி வீசத்துவங்கும். நமது அரண்மனை நந்தவனத்தில் இருக்கும் விருட்சங்கள் எல்லாம் இலைகளை உதிர்த்து விட்டு
    இப்போது இளம்தளிர்களோடு விளங்குகின்றன. மீண்டும் அவை இது போல ஆக ஒரு ஆண்டு ஆகும். ஆனால்.."
    அரசி நிறுத்தினாள்.

    "சொல் தேவி..." இந்திரசேனர் ஆவலுடன் கேட்க....

    "சுமதி....."

    சுமதி படித்துக் கொண்டிருந்த கதைப் புத்தகத்தை சட்டென்று மூடினாள்.

    "சுமதி.. சுமதி",,,

    "இதோ வரேன் அத்தை"

    "படுத்துண்டு இருக்கியா ?.. அப்படின்னா பரவாயில்ல... நான் பாத்துக்கறேன்"

    சுமதி கொல்லை நிலைப்படியில் இருந்து எழுந்து உள்ளே போனாள். சமையல் அறையில் கல்யாணி அடுப்பில் பால் குக்கரை
    வைத்து விட்டு ஃப்ரிட்ஜ் உள்ளே எதையோ தேடிக்கொண்டிருந்தாள்.

    "அத்தை.. என்ன தேடறீங்க ?"

    "இந்த பால் பாக்கெட்ல எது புதுசு, எது பழசுன்னு தெரியல. நீதான் அடுக்கி வச்சே.. சொல்லு"

    "வரிசையா இடது பக்கத்துலேருந்து எடுத்துக்கோங்கோ அத்தை. அது சரி.. என்னைக் கூப்பிடறதுதானே. நான் வந்து
    காபி போடமாட்டேனா. மணி மத்யானம் ரெண்டரைதான் ஆறது. அதுக்குள்ள பால் காய்ச்ச வந்தாச்சா?"

    "இன்னிக்கு சனிக்கிழமை இல்லியா.. மறந்து போச்சா.. கார்த்தி வந்துடுவான். சாயந்தரம் மாதவன் டில்லிலேருந்து
    வரான். நல்ல வேளையா உனக்கு காலேஜ் இல்ல.."

    "அச்சச்சோ.. சரி அத்தை.. நான் காபி போட்டு வைக்கிறேன். நீங்க போய் ஒரு அரை மணி ரெஸ்ட் எடுங்கோ"

    "வேணாம்.. நான் டிகாஷனை இறக்கி வைக்கிறேன். நீ வாசல்ல மரகதம் போனா அவளைக் கூப்பிட்டு நாளைக்குக்
    காலையிலே முளைக்கீரை இளசா வேணும்னு சொல்லு."

    கல்யாணி சொல்லச் சொல்ல சுமதி புன்னகையுடன் அத்தையைக் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய்
    பெட்ரூமில் விட்டுவிட்டு "இப்போ சமத்தா இங்கேயே இருங்கோ.. நான் எல்லா வேலையையும் கால் மணில முடிச்சுட்டு
    கூப்பிடுவேனாம். அப்போதான் வெளில வரணும். புரிஞ்சுதா"

    கண்களில் மெல்லிய நீர்த்திரையிட சுமதி சுறுசுறுப்பாக ஓடுவதைப் பார்த்தபடி நின்றாள் கல்யாணி.

  7. #16
    Senior Member Diamond Hubber
    Join Date
    Jan 2006
    Posts
    6,074
    Post Thanks / Like
    ilavarasi .........sumathi..........
    Anbe Sivam

  8. #17
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by crazy
    ilavarasi .........sumathi..........

  9. #18
    Senior Member Diamond Hubber
    Join Date
    Jan 2006
    Posts
    6,074
    Post Thanks / Like
    enakku onnume puriyal..........athaan
    eagerly waiting for the next part
    Anbe Sivam

  10. #19
    Senior Member Veteran Hubber Anoushka's Avatar
    Join Date
    Nov 2004
    Location
    Dublin, Ireland
    Posts
    2,807
    Post Thanks / Like
    madhu: interesting-ah irukku regular-ah update paNNuveenga illaya?
    The moment will arrive when you are comfortable with who you are, and what you are--when you don't feel the need to apologize for anything or to deny anything. To be comfortable in your own skin is the beginning of strength.

  11. #20
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by Anoushka
    madhu: interesting-ah irukku regular-ah update paNNuveenga illaya?
    inimEl apeez irukkum enbadhAl daily updates mudiyAdhu..

    adhunAlathAn weekly update :P

Page 2 of 4 FirstFirst 1234 LastLast

Similar Threads

  1. Sila Nerangalil Music Review
    By Hulkster in forum Current Topics
    Replies: 3
    Last Post: 29th October 2007, 09:07 AM
  2. Buddharum sila kaezvikaLum
    By Oldposts in forum Poems / kavidhaigaL
    Replies: 24
    Last Post: 7th November 2004, 09:36 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •