View Poll Results: your rating for the following serials

Voters
1. You may not vote on this poll
  • Thirumathi Selavam

    0 0%
  • Thendral

    1 100.00%
  • Chellame

    0 0%
  • Thangam

    0 0%
Page 93 of 159 FirstFirst ... 43839192939495103143 ... LastLast
Results 921 to 930 of 1587

Thread: new serials/programs

  1. #921
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    150-வது வாரத்தில் `வைர மங்கை'

    கலைஞர் தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் காலை 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் `வைரமங்கை' நிகழ்ச்சி 150-வது வாரத்தை தொட்டிருக்கிறது. இது தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக திறமைப் பெண்களை அடையாளம் காட்டும் நிகழ்ச்சி.

    பெண்களிடம் உள்ள அத்தனை திறமைகளையும் அரங்கேற்றும் விதத்தில் தமிழச்சி, அழகே அழகாய், உன்னால் முடியும் பெண்ணே, ஆஸ்கார் அரசி என நான்கு தகுதிச் சுற்றுகளையும் சிந்தனைத்திறன் எனும் பொது அறிவு சுற்றினையும் இந்நிகழ்ச்சி கொண்டுள்ளது.

    இந்த சுற்றுகளை கடந்து வரும் வெற்றியாளர்களுக்கு இறுதிச்சுற்றான `சமயோசித சுற்று' ஒரு சிறந்த பெண் மணியை அடையாளம் காட்டும் வித்தியாசமான சுற்றாக அமைந்துள்ளது.

    இதுவரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் திறமைத் திருவிழாவை அரங்கேற்றிய `வைரமங்கை' நிகழ்ச்சியை சின்னத்திரை பிரபலங்கள் சுஜிதா மற்றும் நிஷா தொகுத்து வழங்குகிறார்கள். கிரியேட்டிவ் கிரியேஷன்ஸ் சார்பில் இந்நிகழ்ச்சியை மதுரை. இரா.ரவிச்சந்திரன் தயாரித்து இயக்குகிறார்.

    இதுவரை 16 மாவட்ட வைர மங்கைகளை அடையாளம் கண்டுள்ள இந்நிகழ்ச்சி, இன்னும் பல மாவட்டங்களில் வலம் வர உள்ளது. இறுதியில் தமிழக அளவில் நடைபெறும் வைரமங்கை போட்டியின் வெற்றிப்பெண்மணிக்கு 5 லட்சம் மதிப்புள்ள வைரக்கீரிடம் காத்திருக்கிறது.




    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #922
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    ராதா கல்யாணம்

    ஜீ தமிழ் டிவியில், திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மெகா தொடர், `ராதா கல்யாணம்.'

    வம்சியை தன் வசமாக்கி மணமுடிக்க நினைக்கும் அவரது அத்தை மகள் ருக்கு... அவருக்கு துணையாக பல சதி திட்டங்களை போடும் அவளது தாய்... இவர்களின் அடுத்த திட்டம் என்ன? வம்சி - கீர்த்தியின் வாழ்க்கை சிறப்பாக அமைய தாம்பத்யம் முக்கியம் என்று உணர்ந்து இருவரையும் வெளிïர் அனுப்பும் விஸ்வநாதனுக்கு கிடைக்கும் அதிர்ச்சி என்ன?

    கீர்த்தியிடம் இருந்து ராதாவை தற்காலிகமாக பிரிக்க நினைக்கும் விஸ்வநாதனின் எண்ணத்தை புரிந்து கொள்வாரா கீர்த்தி? அல்லது மாமாவின் பேச்சுக்கு தலை அசைப்பாரா? தனக்கென்று விருப்பு, வெறுப்புகள் இருப்பதாக வம்சியின் பாட்டியிடம் சீறும் ராதாவின் ஆவேசத்திற்கான காரணம் என்ன?

    தன் கழுத்தில் இருக்கும் தாலியை தவறவிடும் ராதாவால் விபரீதங்களை சந்திக்கப்போவது வம்சியா, கீர்த்தியா, அல்லது ராதாவா? விஸ்வநாதனிடம் இருந்து பணம் பறிக்க அவரது வீட்டிற்கு வரும் ராதாவின் தந்தை, தன் மகள் ராதாவை சந்திப்பாரா? மனைவி இறந்த செய்தியை அறிவாரா?

    பரபப்பான திருப்பங்களுடன் விரைகிறது, ராதா கல்யாணம்.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  4. #923
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    கோலிவுட்டில் ஒரு பயணம்


    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நாளை மதியம் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி, `கோலிவுட்டில் ஒருபயணம்'.

    சினிமாவை நேசிப்பவர்கள் ரசிகர்கள் மட்டும் அல்ல; பல நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும்தான். அந்த வகையில் தமிழ் சினிமாவை நல்ல தரத்திற்கு உயர்த்தியவர்களில் பல நடிகர்களும், இயக்குநர்களும், ஒளிப்பதிவாளர்களும், கலை இயக்குநர்களும் அடங்குவர்.

    சிவாஜி என்ற மாபெரும் நடிகர் நம் தமிழ் மண்ணில் பிறந்து சினிமாவுக்கு பெரும் புகழை சேர்த்தது தமிழ்நாடு செய்த பேறு. சிவாஜியின் நடிப்பால் கவரப்படாத ரசிகர்களே இல்லை. சிவாஜியின் நடிப்பாற்றலை போற்றாத நடிகர்களே இல்லை. நடிப்புக்கலைக்கே ஒரு மகுடமாக திகழ்ந்தவர் நடிகர் திலகம் சிவாஜி.

    நிகழ்ச்சியில் `நவரச வேந்தன்' சிவாஜியின் வெள்ளிவிழா படங்களில்இருந்து மறக்க முடியாத சில காட்சிகளும், பாடல்களும் இடம் பிடிக்கின்றன. சிவாஜி நடிப்பால் ஈர்க்கப்பட்டு நடிகர்களானவர்களின் நினைவுகளும் இடம் பெறுகிறது.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  5. #924
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    மகா சக்தி



    "மகாசக்தி' என்ற பெயரில் புதிய புராண மெகா தொடர் தயாரிக்கப்படுகிறது. காளிகாம்பாளின் அவதார திருப்பெருமைகளை சொல்லும் வித்தியாசமான இந்த தொடரில். மாகாளி, மந்திரகாளி, வனகாளி உள்ளிட்ட 36 விதமான காளிகாம்பாளின் மகிமைகள் முக்கிய பங்கு வகிக்கும்.

    `சூப்பர் குட் கண்ணன், காளிதாஸ், புஷ்பலதா, லலிதாம்பிகை, வெள்ளை பாண்டியன், விஜயகுமாரி, குளஞ்சிநாதன், மகாசக்தி அடிகளார் நடிக்கிறார்கள்.

    தொடருக்கு ஒளிப்பதிவு: ஆல்வின். இசை: ராஜ்பாஸ்கர். ஸ்ரீமணிகண்டன் கிரியேஷன்ஸ் சார்பில் மாரியம்மாள் தொடரை தயாரிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதி இயக்குவதோடு வித்தியாசமான கேரக்டர் ஒன்றிலும் நடிக்கிறார் பாலாமணி. இவர் பல குறும்படங்கள் மற்றும் டெலிபிலிம்களை இயக்கி உள்ளார். தனியார் சேனலில் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் தொடர் இது.


    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  6. #925
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    நானும் ஒரு பெண்



    ஜீ தமிழ் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கும் புதிய தொடர், `நானும் ஒரு பெண்'

    பெண்கள் பல்வேறு துறைகளில் பல சாதனைகளை செய்து, தங்கள் பெயரை வரலாற்று பக்கங்களில் பதிவு செய்யும் காலம் இது. இந்த காலகட்டத்திலும் `நிறம்' ஒரு பிரச்சினையாகவே நீடிக்கிறது. தன் கறுப்பு நிறத்திற்காக குடும்பத்தினராலும், சமுதாயத்தினராலும் வெறுக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டு பல அவமானங்களை சந்திக்கும் இளம் பெண் சங்கீதாவின் வாழ்க்கைப் பதிவே இந்த தொடர்.

    சங்கீதாவிடம் பல திறமைகள் உண்டு. இருப்பினும் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல், மகளின் கறுப்பு நிறத்தை மட்டுமே பெரிய குறையாக நினைத்து கவலை கொள்கிறாள் தாய் அம்பிகா.

    ஒரு கட்டத்தில் இந்த கவலை அம்மாவுக்குள் வெறுப்பாக மாற, கலராக இருக்கும் மகன் சதீஷ் மற்றும் இளைய மகள் சுதா ஆகியோர் மீது அதிக அன்பு காட்டுகிறாள். கறுப்பை காரணம் காட்டி மூத்த மகள் சங்கீதாவை உதாசீனப்படுத்தத் தொடங்குகிறாள்.

    சங்கீதாவை பெண் கேட்டு வரும் மாப்பிள்ளைகள் அவளது கறுப்பு நிறத்துக்காக நிராகரிக்கின்றனர். இந்நிலையில் சங்கீதாவின் தங்கை சுதா ஒரு விடுதியில் நடக்கும் வாள் சண்டையில் வெற்றி பெறும் பிரதாப்பை ஒருதலையாக விரும்புகிறாள். மனதில் பதிந்த மணவாளன் குறித்த தன் விருப்பத்தை பெற்றோரிடம் அவள் தெரிவிக்க, பெண் பார்க்க பிரதாப் குடும்பத்துக்கு அழைப்பு விடுக்கிறார்கள். பெண் பார்க்க வந்த பிரதாப்போ சுதாவிற்கு பதிலாக சங்கீதாவை மணக்கிறான். பிரதாப்பின் வீட்டார் கறுப்பாக இருக்கும் சங்கீதாவை ஏற்றுக் கொள்வார்களா? அதன் பிறகு நடக்கும் சுவாரஸ்யமான திருப்பங்கள் என்னென்ன?

    வரும் திங்கள் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது இந்த தொடர்.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  7. #926
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    முந்தானை முடிச்சு- 300



    திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகும் `முந்தானை முடிச்சு' தொடர் 300 எபிசோடுகளை தாண்டியிருக்கிறது.

    பிரேமாவின் சூழ்ச்சியால் கந்தசாமியின் வீட்டிலிருந்து குடும்பத்துடன் வெளியேறிய தமிழரசிக்கு சுஜாதா அறிமுகமாக, அவள் கம்பெனியில் வேலை கிடைக்கிறது. இருவரும் பரஸ்பர ஈர்ப்பால் தோழிகள் ஆகி விட, ஒரு கட்டத்தில் சுஜாதாவின் பின்னணி தெரிய வருகிறது. கதையின் எதிர்பாரா திருப்பமாக அது அமைய இருக்கிறது.

    மறுபுறம் உயிர்ப் போராட்டத்தில் இருக்கும் பிரகாஷிற்கு கெடு வைக்கப்பட, அவனுக்காக தமிழரசி செய்ய இருக்கும் தியாகம்... அதனால் ஏற்க இருக்கும் பழி... அதை தொடர்ந்து தமிழரசிக்கு ஏற்பட இருக்கும் நெருக்கடிகள் அனைத்தும் நெகிழ்ச்சியான பகுதிகளாக தொடர இருக்கிறது.

    இதற்கு இணையாக இருக்கிறது பிரேமாவின் சூழ்ச்சிகளும் அதன் விளைவால் கடை பொறுப்பை பழனியப்பனுக்கு தாரை வார்த்து கந்தசாமி அனுபவிக்கும் புறக்கணிப்புகளும்...இது தவிர நண்பனுக்கு உதவ முற்பட்டு சந்தர்ப்ப சூழ்நிலையால் நண்பனின் மனைவி சியாமளாவிற்கு கணவனாக நடித்துக் கொண்டிருக்கும் கார்த்திக்கு சியாமளா கர்ப்பமான விஷயம் தெரிய வர, அதன் பின் கார்த்தி தன் மனைவி சுவாதியிடம் மாட்டிக்கொள்ள இருக்கும் நெருக்கடி நிலைமைகள் சுவராஸ்யமான சம்பவங்களாக்கப்பட்டிருக்கிறது.

    தொடர் பற்றி தயாரிப்பாளர் `மெட்டி ஒலி' எஸ்.சித்திக்கிடம் கேட்ட போது, ``கதையின் திருப்பமான பகுதிக்கு தொடர் வந்திருக்கிறது. யதார்த்தம் பிறழாத வகையில் சம்பவங்கள் காட்சிகளாக்கப்பட்டிருக்கிறது. நிச்சயமாக தொடர் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற விதத்தில் இருக்கும்' என்கிறார்.

    திரைக்கதை: வே.கி.அமிர்தராஜ். வசனம்: நடராஜ். ஒளிப்பதிவு: டி.அசோக் தேவராஜன்.இயக்கம்: பி. செல்வம். தயாரிப்பு: சினி டைம்ஸ் எண்டர்டெய்ன்மென்ட்.



    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  8. #927
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    `விஜய் விருது' விழா



    சிறந்த சினிமா கலைஞர்களை தேர்ந்தெடுத்து விருது வழங்கும் விஜய் டி.வி.யின் `விஜய்' விருதுகள் விழா' சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. தமிழ்த் திரையுலக நட்சத்திரங்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர். நடிகைகள் ஸ்ரேயா, அமலா பால், நடிகர் பரத் ஆகியோரின் நடன நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.

    விஜய் டி.வி. ரசிகர்கள் செய்த தேர்வு அடிப்படையில் `ராவணா' படத்தில் நடித்த விக்ரம் சிறந்த நடிகராகவும், `அங்காடித்தெரு' படநாயகி அஞ்சலி சிறந்த நடிகையாகவும் விருது பெற்றார்கள். சிறந்த வில்லன் நடிகர் விருது `எந்திரன்' படத்தில் நடித்த ரஜினிக்கு கிடைத்தது.

    சிறந்த இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான், பாடலாசிரியராக வைரமுத்து, இயக்குநராக வசந்தபாலன் உள்ளிட்டோரும் விருதுகள் பெற்றனர். விழாவின் சிறப்பு நிகழ்வாக டைரக்டர் கே.பாலச்சந்தருக்கு `செவாலியே' சிவாஜி விருது வழங்கப்பட்டது. விருது நிகழ்ச்சிகள் அனைத்தும் விஜய் டி.வி.யில் ஒளிபரப்பானது.



    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  9. #928
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    தேவயானியிடம் ஒரு அம்மாவுக்கே உரிய சந்தோஷம்.

    மகள்களுக்குப் பிடித்த `அம்மா'

    கொடிமுல்லை தொடரில் அம்மா-பெண் என இரட்டைவேடத்தில் வருகிறார், தேவயானி. அம்மா அன்னக்கொடியும் தேவயானி தான். மகள் மலர்க்கொடியும் அவர் தான். அம்மா கேரக்டரில் அமைதியே வடிவான தேவயானி. மகள் கேரக்டரிலோ துடிப்பும் துறுதுறுப்புமான தன்னம்பிக்கைப்பெண் தேவயானி.

    ராஜ் டிவியில் இந்த தொடர் ஒளிபரப்பாகத் தொடங்கியதில் இருந்தே `அந்த அம்மா அன்னக்கொடி நீங்கள் தானா?' என்று ரசிகர்களிடம் இருந்து தொடர்ச்சியாக போன்கள். அத்தனைபேருக்கும் பதில் சொல்வதே பாதி வேலையாகி விட்டது தேவயானிக்கு.

    அதுபற்றி தேவயானி கூறும்போது, "அமைதியான அதேநேரம் ஆழமான கேரக்டர் அது. தன் வாழ்வின் அத்தனை இழப்புகளையும் ஆழ்கடலாய் உள்வாங்கிக் கொண்டபோதிலும், முகத்தில் அமைதியை தேக்கி வைக்கிற அந்த கேரக்டரை டைரக்டர் செந்தில்குமரன் விவரிக்கும்போதே `கோலங்கள்' தொடரில் அபிக்குக் கிடைத்த வரவேற்பை இந்த கேரக்டர் தாண்டும் என்று முடிவு செய்து விட்டேன். உண்மையில் தொடர் வந்தபிறகு அந்த வரவேற்பை ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பில் உணர்கிறேன்'' என்கிறார்.

    "ரசிகர்கள் சொல்வது இருக்கட்டும் உங்கள் மகள்கள் இனியா, பிரியங்கா இருவருக்கும் பிடித்தது அன்னக்கொடியா, மலர்க்கொடியா?''

    "இருவருக்கும் பல விஷயங்களில் ரசனை வேறுபடும். ஆனால் இவருக்குமே அன்னக்கொடியை பிடிக்கிறது. ஆரம்பத்தில் அன்னக்கொடியாக வருவது நான்தான் என்பதை அவர்கள் நம்பவில்லை. அன்னக்கொடி மேக்கப்பில் என்னைப் பார்த்தபிறகு நம்பியதோடு அந்த கேரக்டரை நேசிக்கவும் தொடங்கிவிட்டார்கள்.''



    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  10. #929
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சின்னமாமி பெரியமாமி


    வசந்த் டிவியில் திங்கட்கிழமை தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நகைச்சுவைத் தொடர், சின்னமாமி பெரியமாமி. சின்னமாமியாக நளினியும், பெரியமாமியாக நித்யாவும் நடிக்கிறார்கள். சின்னமாமியின் கணவராக காத்தாடி ராமமூர்த்தியும், பெரிய மாமியின் கணவராக சுவாமிநாதனும் வருகிறார்கள்.

    மாதர்சங்கத் தலைவியாக இருக்கும் பெரியமாமிக்கு எதிராக அத்தனை சதிவேலைகளையும் தொடர்கிறார் சின்னமாமி. அடுத்து வரும் தேர்தலில் பெரிய மாமியை தலைவி பதவியில் இருந்து இறக்கி அந்த இடத்தில் தான் அமர வேண்டும் என்பது சின்னமாமியின் திட்டம்.

    இதற்கிடையே சின்னமாமியின் மகளும் பெரியமாமியின் மகனும் காதலாகிறார்கள். இந்தக்காதலை சின்னமாமி-பெரியமாமி இருவரின் கணவர்களும் ஊக்குவிக்கிறார்கள். இந்த காதல் திருமணத்தில் முடிந்தால் இரு மாமிகளுக்கிடையே நடந்து கொண்டிருக்கம் பொறாமைப்போர் முடிவுக்கு வரும் என்பது அவர்கள் எண்ணம். ஆனால் மாமிகள் இருவருக்கும் இந்த காதல் விவகாரம் தெரிந்தால் என்ன முடிவெடுப்பார்கள்? பரபர விறுவிறு திருப்பங்களுடன் விரைகிறது தொடர்.

    எழுத்து, இயக்கம்: ஜெயமணி.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  11. #930
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    மண்வாசனை

    திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ராஜ் டிவியில் ஒளிபரப்பாகும் புதிய தொடர், `மண்வாசனை.' `பால்யவிவாகம்' பிரச்சினை கதைக்களமாக புனையப்பட்டிருக்கிறது.

    ஆனந்தி என்ற சிறுமிக்கு பாலிய திருமணம் நடக்க இருக்கிறது. இதை அறிந்த ஆனந்தியின் ஆசிரியை போலீசுக்கு புகார் கொடுக்கிறார். திருமணம் என்ற சொல்லுக்குக் கூட சரியான அர்த்தம் தெரியாத விளையாட்டுப் பெண் ஆனந்தி புத்தாடையும், நகைகளும் அணிந்து காணப்படுகிறாள். உறவினர்கள் அவளிடம், `இது எல்லாரும் சந்தோஷமாக இருக்கும் ஒரு விழா என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.

    ஆனால் சிறுமி ஆனந்தியின் சந்தோஷம் நீடித்ததா? திருமணத்துக்குப் பிறகு அவள் சந்திக்க இருக்கும் போராட்டங்கள் காட்சிகளாக விரிகிறது.


    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

Similar Threads

  1. Vijay tv going to start 2 new programs
    By anbupani in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 7th October 2009, 01:58 AM
  2. Programs that you enjoy watching on TV
    By Anoushka in forum TV,TV Serials and Radio
    Replies: 107
    Last Post: 15th July 2008, 04:41 AM
  3. IR in TV Serials
    By RR in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 4
    Last Post: 16th July 2007, 01:12 PM
  4. which channel do you think has the most creative programs?
    By mirattalji in forum TV,TV Serials and Radio
    Replies: 20
    Last Post: 18th November 2006, 01:45 AM
  5. Pongal Programs
    By suryas_shaivs in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 19th January 2006, 06:03 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •