View Poll Results: your rating for the following serials

Voters
1. You may not vote on this poll
  • Thirumathi Selavam

    0 0%
  • Thendral

    1 100.00%
  • Chellame

    0 0%
  • Thangam

    0 0%
Page 69 of 159 FirstFirst ... 1959676869707179119 ... LastLast
Results 681 to 690 of 1587

Thread: new serials/programs

  1. #681
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    Anjaraipetti(Zee Tamizh, Monday-Saturday, 1.30 p.m.)

    The Anjaraipetti team visits the temple town of Thiruvannamalai and tastes exotic dishes unique to this region. Some recipes are rawakarandi appam, inji kulambu, aval pulav, yellupodi dosa and nanaa special chicken.

    நன்றி: Hindu
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #682
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    `ரசிகன்-75'

    கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் காலை 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி, `ரசிகன்'.

    ஒவ்வொரு கலைக்கும் கலைஞர்களுக்கும் ரசிகன் முக்கியமான ஒரு அம்சமாக விளங்குகிறான். வெள்ளித்திரையில் கலைஞர்களையும், அவர்களது படைப்புகளையும் ரசிக்கும் ரசிகர்களின் திறமைகளை சின்னத்திரையில் வெளிச்சமிட்டுக் காட்டும் இந்த `ரசிகன்' நிகழ்ச்சி 75 வாரங்களைத் தொட்டிருக்கிறது.

    நடிகர்கள் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜீத், விஜய், விக்ரம், இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ், கவிஞர்கள் வாலி, வைரமுத்து ஆகியோரின் ரசிகர்கள் இதுவரை பங்கு பெற்றனர்.

    75-வது வார சிறப்பு நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்துவின் சிறப்பு ரசிகராக இசையமைப்பாளர் தேவா கலந்து கொண்டு, கவிஞரிடம் தான் ரசித்த பாடல்களை செய்திகளை சுவாரசியமாக பகிர்ந்து கொள்கிறார்.

    நிகழ்ச்சி இயக்கம்: கி.மணிவண்ணன், கிராவிட்டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பவர்: பி.விஜயகுமார்.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  4. #683
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    இமயத்துடன்..!
    கலைஞர் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் புதிய நிகழ்ச்சி, `இமயத்துடன்..!' தன் கணீர் குரல் வளத்தால் தமிழ் சினிமாவையே கட்டிப்போட்டிருந்த பிரபல பின்னணி பாடகர் டி.எம். சவுந்தர்ராஜனின் வாழ்க்கைப் பின்னணியே இந்த தொடர்.

    திரைப்படக்கல்லூரி மாணவர் விஜயராஜ் தான் கடந்த 7 ஆண்டுகளாக இதற்கான முயற்சிகளைத் தொடர்ந்தவர். இப்போது இந்த தொடருக்கு தயாராகி இயக்கத் தொடங்கி விட்டார்.

    தொடரில் டி.எம்.சவுந்தர்ராஜனுடன் தொடர்புடைய கலைஞர்கள், சக கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அத்தனைபேரையும் அவர்கள் இல்லங்களுக்கே சென்று டி.எம். சவுந்தர்ராஜன் சந்தித்து உரையாடுகிறார். அப்போது தனது இசைவாழ்வில் நடந்த விஷயங்களை சுவாரசியமாக அவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.

    டி.ம்.எஸ்.சின் வாழ்க்கைப் பின்னணி என்பதால் அவரது சிறுபிராயம் தொடர்பான காட்சிகள் சமீபத்தில் ஏஆர்.எஸ் கார்டனில் படமாக்கப்பட்டது. டி.எம்.எஸ்.சின் அப்பா மீனாட்சி ஐயங்கார் ஏற்கனவே காலமாகி விட்டதால் அப்பா சாயலுக்கு ஒரு நடிகரைத் தேடினார் இயக்குனர். கடைசியில் அவர் பார்வை நிலைத்தது டி.எம்.எஸ்.சின் நீண்டநாள் நண்பரும் எழுத்தாளருமான மேஜர்தாசன் மீது. அப்போதே அந்த அப்பா கேரக்டருக்கான மேக்கப்புடன் தயார்ப் படுத்தப்பட்டார் மேஜர்தாசன்.. அதற்குப்பிறகு நடந்து தான் உணர்ச்சிமயம். தன்அப்பா கெட்டப்பில் வந்த மேஜர்தாசனை பார்த்த டி.எம்.எஸ்.சுக்கு அவரது அப்பாவுடனான அந்த வசந்த நாட்கள் நினைவுக்கு வந்திருக்க வேண்டும். உடனே மேஜர்தாசனின் கைகளைப் பிடித்தபடி கண்ணீர்மழை பொழிந்து விட்டார். குரல் தழுதழுப்பில் பேசத் தடுமாறினார். அப்போதே இந்த அப்பா கேரக்டருக்கு உயிர்ப்பு வந்துவிட்டது என்கிறார், இயக்குனர்.

    தொடர்ந்து அப்பா-இளைஞர் டி.எம்.எஸ் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டன. இதில் இளைஞர் டி.எம்.எஸ்.சாக நடித்தவர் டி.எம்.எஸ்.சின் பேரன் டி.எம்.எஸ்.சுந்தர்.


    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  5. #684
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    (Jaya TV, Sundays, 10 a.m.)

    The search for the brightest woman in the State begins with this new talent hunt. The aim is to bring out the hidden talent of women from across Tamil Nadu. The first stop is Madurai. This fun-filled show is hosted by Suhasini Mani Ratnam.

    Contests in singing, oration and hair styling will test the confidence levels of the participants. Also, relationships including compatibility between mother-in-law and daughter-in-law or mother and daughter, will be evaluated. Besides, there are contests for gossip and cookery. So, try your luck!
    நன்றி: Hindu
    "அன்பே சிவம்.

  6. #685
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    Makkal TV
    Muthamizh Mudhiram ( Thursday-Saturday, 12 noon)
    This programme showcases the talent of medical college students who took part in an inter-collegiate cultural event. Nearly 2,500 students from 200 colleges participated in various competitions — dance, music, drama, poetry and painting.

    Aalayam ( Monday to Friday, 6.05 p.m.)
    This new programme, to be launched on Pongal Day (January 14), will focus on the temples of India. Architecture, history, music, dance… every aspect will be discussed here.

    Paati Sollum Kathai(Monday to Friday, 5.30 p.m.)
    This is a cartoon series based on grandmother's tales. Stories from the Panchatantra, folk tales and ‘needhi kathaigal' will form the content of this series. This first story will be telecast on January 14
    .

    நன்றி: Hindu
    "அன்பே சிவம்.

  7. #686
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    அபிராமி ராமநாதன் தயாரிப்பில் கவுதமி நடிக்கும் `அபிராமி'



    கலைஞர் டிவியில் வரும் திங்கட் கிழமை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய தொடர், `அபிராமி'. நடிகை கவுதமி தொடரின் நாயகியாக நடிக்கிறார். கவுதமியின் முதல் சின்னத்திரைப் பிரவேசம் இந்த தொடரில் இருந்து தொடங்குகிறது.

    பழமை குலத்தில் பிறந்தும், பழைய கருத்துகளில் பாசி படிந்துவிடாமல், புதுமை கருத்துக்களை தன் செயலின் மூலம் புரிய வைப்பவள் அபிராமி.

    இவர் எரிமலையாக வெடிக்கவும் செய்வாள் குளிர்நிலவாக சுற்றத்தாருக்கு வெளிச்சமும் தருவாள். இன்றைய நாகரிக உலகத்திற்கு ஒத்துப்போகாத மூட பழக்கங்களை எதிர்த்து போர்க்கொடி தூக்கி முற்போக்கு சிந்தனையை பரவச் செய்கிறாள் அபிராமி.

    ஒரு கட்டுப்பாடுமிக்க குடும்பத்தில் பிறந்து, தனது எண்ணங்களுக்கும், கருத்துகளுக்கும் எதிர்ப்பு இருந்தபோதும், அதை தன் உயிர் மூச்சாக கருதி, ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறுகிறாள். மூடப்பழக்கத்தால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியை நாடே போற்றும் அளவுக்கு ஒரு பெரிய நிலைக்கு உயர்த்துகிறாள் அபிராமி.

    அபிராமியாக நடிகை கவுதமி வருகிறார் பெரிய திரையில் சாதனைகள் புரிந்து இப்போது சின்னத்திரையில் முத்திரை பதிக்க வருகிறார். மற்றும் கல்பனா, கிருஷ்ணகுமார் பவானி, மனோகர், `வியட்நாம் வீடு'சுந்தரம், லட்சுமி, லால்சா, ஜாய், பேபி ஆர்யா இன்னும் பலர் நடிக்கிறார்கள்.

    இத்தொடரின் கிரியேட்டிவ் ஹெட்டாக திருமதி. குட்டிபத்மினி பணியாற்றுகிறார். திரைக்கதை: ஜோதி. வசனம்: `காலசக்ரா' நரசிம்மன். இயக்கம்: மதிவாணன். தயாரிப்பு: `அபிராமி மெகாமால்' சார்பில் `அபிராமி' ராமநாதன், நல்லம்மை ராமநாதன்.

    [html:acf23c26f5]<div align="center">[/html:acf23c26f5]

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  8. #687
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    உறவுக்கு கை கொடுப்போம்



    திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ஏவி.எம்.மின் `உறவுக்கு கை கொடுப்போம்' தொடர், எதிர்பாராத திருப்பங்களில் விறுவிறுப்பைத் தக்கவைத்துக் கொண்டிருக் கிறது. கூட்டுக் குடும்பத்தின் மூத்த அண்ணன் ஜோதிகிருஷ்ணா ஒரு கொலைப்பழியில் சிக்கிக் கொள்கிறார் என்பது இந்த வார பரபரப்பு அத்தியாயம்.

    நாலு தம்பிகள், ஒரு தங்கை இவர்களே தன் உலகம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தக் குடும்பத்தின் மூத்தஅண்ணன் ஜோதிகிருஷ்ணா, தன் உடன்பிறப்புகளுக்காக திருமண சிந்தனை கூட இல்லாமல் வாழ்ந்து வருகிறார். ஆனாலும் ஒரு கட்டத்தில் தன் தம்பிகளின் கட்டாயத்துக்காக ஜானகி என்ற பெண்மணியை திருமணம் செய்து கொள்கிறார்.

    வழக்கமாக இதுமாதிரியான கூட்டுக்குடும்பங்களில் வாழ்க்கைப்படும் பெண்கள் எதையாவது சொல்லி தனிக் குடித்தனத்திற்கு தங்கள் கணவனை தயார் செய்வது தான் நடக்கும். ஆனால் ஜானகியோ தன் கணவனை விடவும் ஒரு படி மேலாகப்போய் அந்தக் குடும்பத்தின் ஒற்றுமைக்காக பாடுபடுகிறாள். அப்படியிருந்தும் அவள் கொழுந்தன்மார்கள் இருவர் தங்கள் மனைவியின் சொல் கேட்டு அந்த கூட்டுக்குடும்பத்தில் இருந்து தங்களை வெளியேற்றிக் கொள்கிறார்கள்.

    இதற்கிடையே தங்கைக்கும் திருமணம் ஆகிறது. கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறாள் தங்கை என்ற எண்ணமே அண்ணன் ஜோதிகிருஷ்ணாவை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறது. ஆனால் அந்த மகிழ்ச்சிக்கு வேட்டுவைக்கும் விதத்தில் ஒரு சம்பவம் நடக்கிறது. தங்கையின் கணவர் ஒருநாள் திடீரென ஜோதிகிருஷ்ணாவை குறிப்பிட்ட இடத்துக்கு வரச்சொல்லி அழைக்கிறார். அங்கே போனால் தங்கை கணவர் அந்த இடத்தில் இல்லை. அங்கே இருந்தது... அதாவது கிடந்தது ஒரு பிணம்.

    இதனால் கொலைப்பழி அவர் மீது விழுகிறது.

    இந்தக்கொலையை செய்தது யார்? தங்கையின் கணவனா? அல்லது ஜோதிகிருஷ்ணாவிடம் முன்பகை கொண்டு அவருக்கு எதிராக காய் நகர்த்திக் கொண்டிருக்கும் தமயந்தி சுகுமாறனா?

    தொடரும் காட்சியமைப்புகள் ஜோதிகிருஷ்ணா இந்த கொலைப்பழியில் இருந்து தப்பவேண்டுமே என்று நேயர்களை படபடக்க வைக்கும்.'' இப்படிச்சொல்லி சஸ்பென்ஸ் வைத்த தொடரின் கதை-வசனகர்த்தா சேக்கிழார், `இந்த கொலையை செய்தது யார் என்று கண்டுபிடித்து எழுதும் நேயர்களுக்கு ஏவி.எம். நிறுவனம் பரிசளித்து பெருமைப்படுத்தும்'' என்றும் தெரிவித்தார்.

    தொடரில் ஜோதிகிருஷ்ணாவாக நடிப்பவர் `பூவிலங்கு' மோகன்.

    தொடருக்கு பாடல்: வைரமுத்து. இசை: பரத்வாஜ். ஒளிப்பதிவு: பிரபாகர். கதைவசனம்: சேக்கிழார். இயக்கம்: புவனேஷ். தயாரிப்பு: எம்.சரவணன், எம்.எஸ்.குகன், அருணா குகன், அபர்ணா குகன்.

    [html:d46ba0368f]<div align="center">[/html:d46ba0368f]

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  9. #688
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    சிரிக்க வைக்கிறார்கள்



    சனிக்கிழமை தோறும் இரவு 7.30 மணிக்கு தமிழன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நகைச்சுவை நிகழ்ச்சி, சிரிப்பு உங்கள் சாய்ஸ். அரைமணி நேர நிகழ்ச்சியில் 4 காமெடி சம்பவங்கள் இடம் பெறுகின்றன. இந்த சம்பவத் தொகுப்புகளினூடே சிற்சில குட்டிக்கதைகளும் ரசிக்கும் விதத்தில் சொல்லப்படுகின்றன.

    மாறுபட்ட இந்த நகைச்சுவைத் தொடரை உருவாக்கி இயக்கியிருப்பவர் ப்ரியா பாலு.

    தொடரின் நாயகர்களாக ஆர்.கஜா, ரவிகுமார் நடிக்க, இவர்களுடன் முக்கிய கேரக்டரில் ப்ரியா பாலுவும் நடிக்கிறார். இந்த காமெடித் தொடர் பற்றி ப்ரியாபாலு கூறும்போது, "நகைச்சுவைக்கு எத்தனை வரவேற்பு கிடைக்கிறது என்பதை இந்த தொடர் எங்களுக்கு தந்த மரியாதையை வைத்தே முடிவு செய்தோம்.

    பல நேரங்களில் நடித்துக்கொண்டிருக்கும்போது காமெடியை அதன்போக்கில் விரிவுபடுத்தியதும் உண்டு. அப்போது உடன் நடித்தவர்கள் சிரிப்பை அடக்கமுடியாமல் தவித்த சம்பவங்களை இப்போது நினைத்தாலும் நெஞ்சுக்குள் குபீர்ச் சிரிப்பாக எட்டிப் பார்க்கும்.

    எங்கள் நகைச்சுவை ரசனைக்கு இப்போது நேயர்களிடம் கிடைத்த வரவேற்பு எங்கள் உற்சாகத்தை அப்படியே இரட்டிப்பாக்கி விட்டது'' என்கிறார்.

    தொடரில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள்: பயில்வான் ரங்கநாதன், பிரேமா, ஷர்மிளா, ஜெயகுமார், ஜெய்.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  10. #689
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    நாதஸ்வர ஓசை

    மெட்டிஒலி தொடர் மூலம் சின்னத்திரை தொடர்களுக்கு ஒரு நட்சத்திர அந்தஸ்து கொடுத்தவர் டைரக்டர் திருமுருகன். இந்த தொடரை முடித்த கையோடு பெரியதிரையில் 2 படங்களை இயக்கிய திருமுருகன், இப்போது மீண்டும் சின்னத்திரைக்கு ஒரு தொடரை இயக்குகிறார்.

    இந்த தொடருக்கு `நாதஸ்வர ஓசை' என்று பெயர் சூட்டியிருக்கிறார். புதுமுகங்கள் நடிக்கவிருக்கும் இந்த தொடருக்கான நடிகர்-நடிகைகள் தேர்வு மாவட்டவாரியாக நடந்து கொண்டிருக்கிறது. தொடரின் முக்கிய கேரக்டர் ஒன்றில் திருமுருகனும் நடிக்கிறார்.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  11. #690
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    `இளவரசி'
    திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் பிற்பகல் 1.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர், `இளவரசி'. நடுத்தர வர்க்க குடும்பத்தினரின் பிரச்சினைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த தொடரில், சந்தோஷி, மனு, காத்தாடி ராமமூர்த்தி, ஜெயமணி, ரேவதி சங்கர், நந்தகுமார், சாந்தி கணேஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

    கதை-திரைக்கதை எழுதி இயக்குபவர் என்.சந்தானம். ஒளிப்பதிவு: பாலகுருநாதன். வசனம் சுரேஷ் கிருஷ். சினேகன் எழுதிய டைட்டில் பாடலை பிரபல பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் பாடியுள்ளார். இசையமைத்திருப் பவர் கிரண். கிரியேட்டிவ் ஹெட்: ராதிகா சரத்குமார். தயாரிப்பு: ரடான் நிறுவனம்.

    [html:6b96a19aa5]<div align="center"></div>[/html:6b96a19aa5]

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

Similar Threads

  1. Vijay tv going to start 2 new programs
    By anbupani in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 7th October 2009, 01:58 AM
  2. Programs that you enjoy watching on TV
    By Anoushka in forum TV,TV Serials and Radio
    Replies: 107
    Last Post: 15th July 2008, 04:41 AM
  3. IR in TV Serials
    By RR in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 4
    Last Post: 16th July 2007, 01:12 PM
  4. which channel do you think has the most creative programs?
    By mirattalji in forum TV,TV Serials and Radio
    Replies: 20
    Last Post: 18th November 2006, 01:45 AM
  5. Pongal Programs
    By suryas_shaivs in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 19th January 2006, 06:03 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •