View Poll Results: your rating for the following serials

Voters
1. You may not vote on this poll
  • Thirumathi Selavam

    0 0%
  • Thendral

    1 100.00%
  • Chellame

    0 0%
  • Thangam

    0 0%
Page 63 of 159 FirstFirst ... 1353616263646573113 ... LastLast
Results 621 to 630 of 1587

Thread: new serials/programs

  1. #621
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    ``உறவுகள்-100''


    சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் `உறவுகள்' தொடர் நூறு எபிசோடுகளை தாண்டியிருக்கிறது. கூட்டுக்குடும்பத்தின் அவசியத்தை உணர்த்தும் வகையில் அமைந்திருக்கும் இந்தக்கதையின் போக்கு, ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை தொடருக்கு பெற்றுத் தந்திருக்கிறது.

    இத்தொடருக்காக புதிய பாடல் ஒன்று சமீபத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது பற்றி தொடரின் இயக்குனர் ஹரிபாபுவிடம் கேட்டபோது... "உண்மைதான்... உறவுகள் தொடரின் மிக முக்கியமான கதாபாத்திரம் அண்ணாமலை. எந்த சக்தியாலும் தன் கூட்டுக் குடும்பம் உடைக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் மிக உறுதியாய் இருப்பவர். இதுவரை வந்த பல சோதனைகளையும் தாண்டி அமைதியாய் தன் கூட்டுக்குடும்பத்தை வழி நடத்தி சென்று கொண்டு இருக்கிறார். அப்படிப்பட்டவருக்கு தன் குடும்பத்தை விட்டு வெளியேறும் கட்டாயம் ஒன்று உருவாகிறது. அதை இன்முகத்தோடு ஏற்றுக்கொண்டு அவர் வீட்டை விட்டு வெளியேறும் காட்சியில் வசனங்களை மீறி அவர் உணர்வை வெளிப்படுத்த எங்களுக்கு இந்த பாடல் தேவையாய் இருந்தது. இதுவரை திரைப்படங்களில் மட்டும் சோகப் பாடலை பார்த்து நெஞ்சம் நெக்குருகிய ரசிகர்களை இந்த பாடலும் அதன் இசையும் மிகவும் நிச்சயம் உருக்கும். விஜய் ஜேசுதாஸின் குரலில், ரமேஷின் இசையில் பதிவு செய்யப்பட்ட இந்தப்பாடல் ஏற்கனவே நித்யஸ்ரீ பாடி டைட்டில் பாடலாகஅமைந்த பாடலின் இன்னொரு பதிப்பு என்றும் சொல்லலாம். அது கலகலப்பு என்றால் இது சோக மெலடி'' என்கிறார் இயக்குனர்.

    உறவுகள் தொடரில் பீலிசிவம், அமரசிகாமணி, ஸ்ரீகுமார், ராஜ்காந்த், ராமச்சந்திரன், வின்சென்ட்ராய், அர்ச்சனா கிருஷ்ணப்பா, துர்க்கா, ராஜேஸ்வரி, ரேவதிசங்கர், நித்யா, சிவகவிதா, சுதா, ஆர்த்தி, கல்பனா, ஜெ.லலிதா, ஜெயந்த் மற்றும் பலர் நடித்து உள்ளனர்.

    திரைக்கதை - குமரேசன். வசனம்-பாலசூர்யா. ஒளிப்பதிவு: தண்டபாணி. இயக்கம்: ஹரிபாபு.

    தயாரிப்பு: சேன் மீடியா.


    [html:3026a1ad12]<div align="center"></div>[/html:3026a1ad12]


    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #622
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like


    பத்தாவது ஆண்டில் `கல்யாண மாலை'



    ஞாயிறுதோறும் சன் டி.வியில் காலை 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் `கல்யாணமாலை' நிகழ்ச்சியின் 10-வது வருட துவக்கம், கல்யாண மாலை மூலம் நடந்தேறிய 1 லட்சம் சாதனைத்திருமணங்கள் இந்த இரண்டுக்குமான கொண்டாட்டம் சென்னையில் நடந்தது.

    சென்னை காமராஜர் அரங்கில் நடந்த இந்த விழாவுக்கு மத்திய ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன் தலைமையேற்றார். ஆர்.எம்.கே.வி. நிர்வாக இயக்குநர் சிவகுமார் குத்து விளக்கேற்றி விழாவினைத் துவக்கி வைத்தார்.

    எம்.சரவணன், பேராசிரியர் சாலமன் பாப்பையா, ராஜா, சென்னை துணைமேயர் சத்யபாமா வாழ்த்திப் பேசினார்கள். பிரமிட் நடராஜன் வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியின் இயக்குநர் மீரா நாகராஜன் `கல்யாணமாலை 10 வருடங்கள்' என்ற தலைப்பில் பேசினார். `கல்யாணமாலை' மோகன் நன்றி கூறினார். கல்யாணமாலை மூலம் நிச்சயமான ஒரு லட்சமாவது திருமணஜோடி புனிதா-உதயகுமார். இதற்காக புனிதாவின் பெற்றோருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

    தொடர்ந்து கங்கை அமரன் தலைமையில் மாணிக்க விநாயகம், மாலதி உள்ளிட்ட பிரபல பின்னணி பாடகர்கள் கலந்துகொண்ட பட்டிமன்றம் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சி நாளை முதல் தொடர்ந்து 7 வாரங்கள் ஞாயிறுதோறும் சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது.


    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  4. #623
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    திருமாங்கல்யம்



    கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் தினமும் பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர், `திருமாங்கல்யம்'.

    திருமதி செல்வம் தொடரில் குடும்ப நாயகனாக வந்த நாயகன் சஞ்சீவ், திருமாங்கல்யம் தொடரில் அதிரடியான மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் ருத்து.

    முக்கிய கதாபாத்திரங்களில் `சுபலேகா' சுதாகர், கவுதமி, வாசுவிக்ரம், சாதனா, ராமச்சந்திரன், வரலட்சுமி, சிவன் சீனிவாசன், சிவகவிதா, ஆதித்யா, காவியா, கிச்சா, பரத் நடிக்கின்றனர்.

    டைட்டில் பாடலை கவிஞர் யுகபாரதி எழுத, மகதி பாடியுள்ளார். இசையமைத்திருப்பவர் ஏ.ஜான்சன்.

    கதிராஜ் எண்டர்டெய்ன்மென்ட் சார்பாக என்.வெங்கடேஷ்வரன் தயாரிக்கும் இந்த தொடரின் திரைக்கதையை கே.பார்த்திபன் எழுத, வசனம் பாலமுரளிவர்மன். கதை- இயக்கம் ப.வள்ளிமுத்து.

    திருச்சி ஸ்ரீரங்கத்தில் வாழும் ஒரு பெண்ணும், சென்னையில் வாழும் இளைஞனும் திருமணம் செய்து கொள்ளமுடிவாகும்போது எதிர்பாராமல் ஏற்படும் சம்பவங்களே தொடரின் கதை.




    [html:e61282574a]<div align="center"></div>[/html:e61282574a]


    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  5. #624
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    நம்ம வீட்டுக் கல்யாணம்



    வாரம் ஒரு நட்சத்திரத்தின் திருமண நிகழ்வுகள் அதில் நடைபெற்ற சுவாரஸ்யங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள் ஆகியவற்றின் தொகுப்புகள் விஜய் டிவியில் `நம்ம வீட்டு கல்யாணம்' நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

    இந்த வாரம் `பூவிழி வாசலிலே' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிரபலமடைந்த நடிகை சுஜிதாவின் திருமணம் ஒளிபரப்பாகிறது.

    `பூவிழி வாசலிலே' படத்தை தொடர்ந்து சுஜிதா, மந்திர புன்னகை, தேவர் மகன், ரோஜா போன்ற பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தமிழ் அல்லாது தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகிவரும் `மகாராணி' தொடரிலும் நடித்து வருகிறார்.

    சுஜிதாவின் கணவர் ஏ.ஆர்.தனுஷ்ஷும் `நம்ம வீட்டு கல்யாணம்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சுஜிதாமேல் உண்டான `காதல் காலம்' பற்றி மனம் திறக்கிறார். காதலை சுஜிதாவிடம் சொல்லாமல் அவரது வீட்டில் உள்ளோரிடம் சொல்லி காதலுக்கும் திருமணத்திற்கும் சம்மதம் வாங்கியுள்ளார். சுஜிதாவுக்கு தனக்கு நிச்சயிக்கப்பட்டிருக்கும் மாப்பிள்ளை யார் என்பதே நிச்சயதார்த்தம் அன்றுதான் தெரியுமாம்.

    இந்த கல்யாணக் காதலை நாளை இரவு 8 மணிக்கு விஜய் டிவியில் காணலாம்.

    [html:b47a040ce2]<div align="center">[/html:b47a040ce2]

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  6. #625
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    அசலா! நகலா!

    வசந்த் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் புதிய நிகழ்ச்சி, `அசலா நகலா.' இந்த நிகழ்ச்சியில் பிரபல நடிகர்கள் சாயலில் உள்ளவர்கள் கலந்து கொண்டு தங்கள் கலைத்திறமை, நடிப்பு, நடனம் போன்றவற்றை வெளிப்படுத்துகிறார்கள்.

    வழக்கமாக நகல் நடிகர்களின் நடனத்தை மட்டும் பார்த்து ரசித்து வந்த ரசிகர்களுக்கு, முற்றிலும் வித்தியாசமாக அமைகிறது இந்த நிகழ்ச்சி. அசல் நடிகர்கள் போல பேசியும் நடித்தும் இவர்கள் வெளிப்படுத்தும் திறமையில் அசல் நடிகர்கள் தான் இதைச் செய்கிறார்களோ என்ற பிரமிப்பு கூட ஒருகணம் மனதில் வந்து போகும்.

    இந்த நிகழ்ச்சியில் `தினம் ஒரு நடிகர்' என்ற கணக்கில் பிரபல நடிகர் சாயலில் உள்ள நடிகர்கள் தங்கள் திறமையை அரங்கேற்றுகிறார்கள்.

    [html:1bff416a02]<div align="center">[/html:1bff416a02]

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  7. #626
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    டீலா நோ டீலா



    சன் டிவியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி, `டீலா நோ டீலா.'

    மொத்தம் 26 வாரங்கள் ஒளிபரப்பாகவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் 26 சூட்கேஸ்களை 26 மாடல்கள் வைத்திருப்பர்.அந்த சூட்கேஸ்களில் ரூ.1 தொடங்கி 50 லட்சம் வரை வைக்கப்பட்டிருக்கும். எந்த சூட்கேசில் எவ்வளவு என்பது தெரியாத நிலையில் ,போட்டியில் கேட்கப்படும் கேள்விக்கு சரியான பதில் சொல்பவர் இந்த 26 சூட்கேஸ்களில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும். அப்படி தேர்ந்தெடுக்கும் பெட்டியில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளருக்குத் தெரியாது. அதனால் போட்டியின் சுவாரசியம் இங்கே ஆரம்பம்.

    முதல் சுற்றில் 6 சூட்கேஸ்கள் திறக்கப்படும். தான் தேர்ந்தெடுத்த சூட்கேசில் எவ்வளவு தொகை இருக்கும் என்பது தெரியாத போட்டியாளர்களிடம் இப்போது நடுவர் தனது பேரத்தை தொடங்குவார். "இந்த சூட்கேசில் உள்ள தொகைக்கு பதிலாக இவ்வளவு தொகையை வாங்கிக்கொண்டு விலகிக் கொள்கிறீர்களா?'' என்று அவர் போட்டியாளரிடம் கேட்பார். ஒருவேளை சூட்கேசில் இருப்பது ஒரு ரூபாயாக இருந்தால் என்ன செய்வது என்று யோசிக்கும் போட்டியாளர், நடுவர் தருவதாக சொல்லும் அதிக பட்ச தொகையை ஏற்றுக் கொள்வதாக அறிவித்துவிட்டு போட்டியில் இருந்து விலகிக் கொள்வார். இல்லையேல் ஆட்டத்தை தொடர்வார்.

    கலந்துரையாடல், நாடகம், பஞ்ச் டயலாக் என போட்டியாளர்களின் திறமையை வெளிக்கொணரும் விதத்தில் போட்டிகள் நடக்கும். நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் நடிகர் ரிஷி. இவர் ஆனந்த தாண்டவம் படத்தில் இரண்டு நாயகர்களில் ஒருவராக நடித்தவர்.

    இந்த போட்டியை காணும் நேயர்களுக்கும் பரிசுகள் உண்டு.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  8. #627
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like


    Kalloori Kondattam
    (Makkal TV, Sunday, 3.03 p.m.)


    This programme focusses on college life and unearths the abundant talent available in these institutions.

    Talent-hunt shows, games and contests bring out the versatility of Generation Next.

    This week, watch the students of Jain College, Velachery, showcase their skills.



    நன்றி: Hindu
    "அன்பே சிவம்.

  9. #628
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    Good Morning Tamizha
    (Jaya TV, weekdays, 6.45 a.m.-8.40 a.m.)


    The breakfast show is coming up with a new segment called ‘Vazhthukkal’ from November 9, to greet your loved ones and well-wishers on their birthday and anniversary.

    Besides, information on historical events and birthdays of famous personalities will be given. Interested viewers can send in their photos with details, a month before the specific date, to Vazhthukkal, Jaya TV, Post Box No 3173, Chennai - 600 032.



    நன்றி: Hindu


    "அன்பே சிவம்.

  10. #629
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like


    Thirumbi Paarkiraen
    (Jaya TV, Monday-Friday, 10 p.m.)




    Thirumbi Paarkiraen with Kalaignanam Jaya TV, Monday-Friday, 10 p.m.

    This week, the spotlight will be on director-producer Kalaignanam. He has worked as a writer-director for 60 movies. His debut film ‘Bhairavi’ launched Rajinikanth as hero. ‘Mridanga Chakravarthi’ and ‘Raja Rishi’ are some hits produced by him.




    நன்றி: Hindu

    "அன்பே சிவம்.

  11. #630
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    Sun TV Network will come out with a game show on its four southern flagship entertainment channels after the weekend movie or serial, the company said here Tuesday.

    The one-hour programme, patterned on the international game show Deal or No Deal that has been telecast in 73 countries, will run for 26 weeks between 8.30 pm and 9.30 pm Saturdays and Sundays on Sun TV (Tamil), Surya (Malayalam), Gemini (Telugu) and Udaya (Kannada).

    Each participant has a chance to win a maximum of Rs 50 lakh, while a viewer can earn Rs 1,00,000 per episode by winning a contest.

    "The game show will be hosted by actors. Rishi will host in Sun TV while it will be Sai Kiran in Gemini and Udaya. Malayalam actor Mukesh will be the host in Surya," Sun TV vice-president LV.Navaneenth told IANS.

    While the broadcaster will pay a fixed fee and royalty to format owner Endemol, a Netherlands-headquartered entertainment company, it will earn revenue from advertisements and title sponsors. "The programming cost will be borne by Sun TV Network," Navaneenth added.

    Earlier, addressing the media here, Sun's chief operating officer Ajay Vidyasagar said: "We believe the time is right to launch large non-fiction shows on top of our already very strong fiction-based programming content."

    According to Endemol India managing director Deepak Dhar, the original Deal or No Deal show has given away over Rs 500 crore in cumulative prize money, making it one of the most successful game shows in television history.

    The game involves 26 suitcases, each of which contains an unknown amount between Re 1 and Rs 50 lakh. To begin with, a contestant chooses any one of the 26 suitcases, not knowing how much money is inside.

    The contestant's objective is to walk away from the game with the maximum possible amount of money through a process of opening the other 25 boxes and deciding to deal or not to deal with a mysterious banker who offers to buy the suitcase offering varying amounts of money at different stages of the game.
    "அன்பே சிவம்.

Similar Threads

  1. Vijay tv going to start 2 new programs
    By anbupani in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 7th October 2009, 01:58 AM
  2. Programs that you enjoy watching on TV
    By Anoushka in forum TV,TV Serials and Radio
    Replies: 107
    Last Post: 15th July 2008, 04:41 AM
  3. IR in TV Serials
    By RR in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 4
    Last Post: 16th July 2007, 01:12 PM
  4. which channel do you think has the most creative programs?
    By mirattalji in forum TV,TV Serials and Radio
    Replies: 20
    Last Post: 18th November 2006, 01:45 AM
  5. Pongal Programs
    By suryas_shaivs in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 19th January 2006, 06:03 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •