View Poll Results: your rating for the following serials

Voters
1. You may not vote on this poll
  • Thirumathi Selavam

    0 0%
  • Thendral

    1 100.00%
  • Chellame

    0 0%
  • Thangam

    0 0%
Page 59 of 159 FirstFirst ... 949575859606169109 ... LastLast
Results 581 to 590 of 1587

Thread: new serials/programs

  1. #581
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    The Idiot
    (Makkal TV, Sunday, 2 p.m.)


    As part of the Russian film series, watch this film that is based on Dostoyevsky’s novel. Half-sane Prince Myshkin returns from a Swiss psycho-clinic to face the glamorous world of St Petersburg.

    Here, vice, money and extortion rule. Myshkin finds himself caught in the whirlpool of intrigue. He inherits an enormous fortune, gets involved with the vicious Nastassya Filippovna and the beautiful young Aglaya. Scandal, murder and an incredible love affair follow. The film is directed by Vladimir Bortko.

    நன்றி: Hindu

    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #582
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    Sinema Talk
    (Jaya TV, Tuesdays, 6.30 p.m.)


    The new chat show, anchored by actor Abhishek, tells you all you wanted to know about Tamil cinema. Abhishek will talk to successful technicians and actors as well.

    நன்றி: Hindu
    "அன்பே சிவம்.

  4. #583
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    Manadhodu Mano
    (Jaya TV, Fridays, 8 p.m.)

    The new 60-minute show is designed to delight music lovers. Playback singer Mano, the host, talks to leading personalities from the world of music, and invites them to share their achievements and success secrets. This week, the guest is Manicka Vinayagam.



    நன்றி: Hindu
    "அன்பே சிவம்.

  5. #584
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    தாயம்



    "போரில் தோற்றுப்போனவர்களை விட வெற்றி பெற்றவர்கள்தான் அதிக வேதனைப்படுகிறார்கள்.'' இது யாரோ எவரோ சொன்னது அல்ல. கவுதம புத்தர் சொன்னது. தன் ராஜ குடும்பத்து வாழ்க்கையில் அவர் உணர்ந்து பார்த்த விஷயத்தையே தன் வேதனை வெளிப்பாடாக்கி இப்படி சொல்லியிருந்தார்.

    இந்த அனுபவமொழி அடிப்படையை மையமாக வைத்து உருவாகும் தொடரே `தாயம்'. `அன்னக்கிளி' செல்வராஜ் கதைவசனத்தில் உருவாகும் இந்த தொடருக்கான கதைப்பின்னணியில் மகாபாரத சம்பவம் ஒன்றும் இணைப்பு படலமாக இருக்கிறது.

    "பாண்டவர்கள் 5 நகரைக் கேட்டு முடியாது என்று மறுக்கிறான், துரியோதனன். `5 வீடாவது தா' என்கிறார்கள் பாண்டவர்கள். அதற்கும் துரியோதனனிடம் இருந்து `கிடையாது' என்பது தான் பதிலாக வருகிறது. கடைசியாக அவர்கள் கேட்ட ஒரு வீடும் மறுக்கப்படுகிறது. அதன்பிறகே இழந்த தங்கள் நாட்டைப் பிடிக்க போரிடும் முடிவை மேற்கொள்கிறார்கள்,பாண்டவர்கள்.

    எல்லாருக்கும் தெரிந்த இந்த பாரதக் கதையில் போருக்குப்பின் வெற்றிபெற்ற நிலையிலும் போரில் இழந்த உயிர்ப்பலிகள் பாண்டவர்களை வேதனைக்குள்ளாக்குகிறது. எந்தத் தரப்பில் பார்த்தாலும் கண்ணில் படும் இளம்விதவைப் பெண்களெல்லாம் தங்கள் உறவுப்பெண்கள். `இதற்கா போர்? இந்த இழப்புக்காகவா போர்?' வேதனையுற்ற அவர்கள் தங்களின் வெற்றி நிலையிலும் அதிக வேதனையை அனுபவித்தார்கள்.

    இந்த சம்பவ பின்னணியில் இரண்டு தரப்பாக போராடும் பங்காளிகள் கொண்ட ஒரு கிராமத்தை கதைக்கு எடுத்துக் கொண்டிருக்கிறேன். பங்காளிக் குடும்பங்கள் அடித்துக் கொண்டதில் இருதரப்பிலும் சில உயிர்களை இழக்க நேர்கிறது. சட்டம் கொடுத்த தண்டனையை அனுபவித்துவிட்டு ஊருக்கு வரும் அவர்கள் தங்கள் வீம்புப்போரால் நேர்ந்த குடும்ப இழப்புகளை பார்க்க சக்தியற்றவர்களாய் துடிக்கிறார்கள். அதன்பிறகு அவர்கள் எந்த மாதிரியான முடிவை மேற்கொள்கிறார்கள் என்பது தொடருக்கான கதைக்களம்'' என்கிறார் அன்னக்கிளி செல்வராஜ்.

    முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் இந்த தொடரை இயக்குபவர் பன்னீர். இவர் விஜயகாந்த் நடித்த சர்க்கரைத்தேவன் படத்தை இயக்கியவர். கதை, திரைக்கதை வசனம்: ஆர்.செல்வராஜ். பாடல்கள் : வைரமுத்து. தயாரிப்பு நிர்வாகம்: குமாரசாமி. தயாரிப்பு: மீடியா ஒன்.

    கலைஞர் டிவியில் விரைவில் இந்த தொடர் ஒளிபரப்பாகிறது.

    [html:3f4af5c4f4]<div align="center">[/html:3f4af5c4f4]



    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  6. #585
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    ஈகைப் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சிகள்



    ரம்ஜான் திருநாளை முன்னிட்டு வரும் திங்கட்கிழமை மக்கள் தொலைக்காட்சி நாள் முழுவதுமë சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்குகிறது.

    ஒரு கடலோர கிராமத்தில் தன் எழுத்துப் பயணத்தைத் தொடங்கி சாகித்ய அகாதமி விருது வரைக்குமான தனது எழுத்துப் பயணம் குறித்து எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி `கடற்பூக்களும் சாய்வு நாற்காலியும்.' இது காலை 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

    காலை 9 மணிக்கு வாழ்த்துக்கள்: உலகெங்கும் வாழும் இஸ்லாமிய சகோதரர்கள் தன் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்ளும் நிகழ்ச்சி.

    ஹஜ் புனிதப் பயணம் போக விரும்புகிறவர்களுக்கு வழிகாட்டும் `பயணம் போகலாம்' நிகழ்ச்சி காலை 10.30 மணிக்கும், பகல் 12 மணிக்கு புதுக்கவிதை உலகின் முடிசூடா மன்னன் கவிக்கோ அப்துல் ரகுமானுடன் ஓர் சந்திப்பும் ஒளிபரப்பாகிறது.

    விதவிதமாய் பிரியாணி சமைப்பதை செய்முறையோடு விளக்கும் நிகழ்ச்சி பிரியமுள்ள பிரியாணி. இந்த நிகழ்ச்சி பகல் 1 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி `தமிழா ஆஸ்கர் தமிழா...' ஆஸ்கர் திரைப்பட விழாவில் 2 விருதுகளைப் பெற்ற ஏ.ஆர்.ரகுமானைப் பற்றியும், இசைக் குறுந்தகடு பற்றியும் அதன் பின்னணி பற்றியுமான பதிவு.



    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  7. #586
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    பெண்ணே உனக்காக!



    பொதிகை தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 8.15 மணிக்கு ஒளிபரப்பாகும் பெண்களுக்கான நிகழ்ச்சி `பெண்ணே உனக்காக!'

    ஒரு பெண் உடல்நலத்தோடு திகழும்போது அப்பெண் மட்டும் நலமாக இருக்கிறாள் என்றில்லை... அந்த பெண்ணை சார்ந்திருக்கும் சுற்றத்திற்கும் மகிழ்ச்சி என்பது உலகம் அறிந்த ஒன்று.

    அந்த வகையில் முதல் வாரத்தில் ஆரம்பித்து நாற்பது வாரங்கள் வரை கர்ப்பிணி பெண்களின் மனதில் ஏற்படுகிற அனைத்துவிதமான சந்தேகங்களுக்கும் இந்த நிகழ்ச்சியில் விடைதந்தார், பிரபல மகப்பேறு மருத்துவர் நிபுணர் ஜெயம் கண்ணன்.

    இனி வரும் வாரங்களில் கரு வளர்ச்சியின்போது உடலில் ஏற்படுகின்ற மாற்றங்கள், எந்தெந்த உணவுகளை உண்பது, எதை விட்டொழிப்பது, கருவுற்ற பெண் எந்தெந்த மாதங்களில் பிரயாணம் செய்யலாம், கணவன் மனைவி தாம்பத்ய உறவு முதற்கொண்டு விரிவாக விளக்கமளிக்கிறார். கடந்த 43 ஆண்டுகளாக மருத்துவ அனுபவத்தில் சந்தித்த, சாதித்த ஆச்சரியங்களையும், அதனை எதிர்கொண்டு சமாளித்த உண்மை நிகழ்வுகளையும் பதிவு செய்கிறார்.

    ஏ.கே.கம்ïனிகேஷன் சார்பாக தயாரித்து வழங்குபவர் அரசுகிருத்திகா.




    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  8. #587
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    ரஜினி செல்லும் `பாபா' குகையில்...



    விஜய் டி.வி.யில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி `நடந்தது என்ன?'.

    இந்த நிகழ்ச்சிக்காக இமய மலையில் பாபா குகையை தேடி பயணம் செல்கின்றனர் விஜய் டி.வி.யின் குழுவினர். நடிகர் ரஜினிகாந்த் பல ஆண்டுகளாக இமயமலைக்கு ஆன்மிக பயணம் சென்று வருகிறார். அவரை இமயமலை ஈர்த்ததன் பின்னணி பற்றியும், `நடந்தது என்ன' குழு ஆய்வு செய்கிறது. அதற்காக அங்கே எல்லா இடங்களுக்கும் பயணம் மேற்கொள்கிறது. பயமும், பக்தியும் கலந்த இந்த பயணத்தின் பதிவுகளை விஜய் டி.வி. நேயர்களுக்கு நேரடியாக வழங்குகிறது. இமயத்திற்கு ரஜினி பயணிக்கும் போது எல்லாப் பயணங்களிலும் அவரின் நண்பர் ஹரியும் உடன் செல்வார். 2500 ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருப்பதாக சொல்லப்படும் பாபாஜியை பற்றியும் அவரின் முக்கியத்துவத்தைப் பற்றிய பல சுவாரஸ்ய தகவல்களையும் அவர் நேயர்களிடம் பகிர்ந்து கொள்கிறார்.




    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  9. #588
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    நாயகன்


    ஜி தமிழ் தொலைக்காட்சியில் வியாழன் தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள புதிய தொடர் `நாயகன்.'திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், நடனம், சண்டை மற்றும் இசை அமைப்பாளர்கள் என்று பல்வேறு பிரிவுகளிலும் தனித்தன்மையுடன் சிறந்து விளங்கியவர்களை இந்நிகழ்ச்சி அடையாளம் காட்டப்போகிறது.

    இந்த நிகழ்ச்சியில் முதல் நாயகனாக இடம் பெறுபவர் நகைச்சுவையில் கொடி கட்டிப் பறந்த நடிகர் நாகேஷ். சமீபத்தில் அமரத்துவம் அடைந்த இவரது தோற்றம், வளர்ச்சி, நாடக ஈடுபாடு, இதன் தொடர்ச்சியாக திரைப்படத் துறைக்குள் நுழைந்தது, இவருடைய சொந்த வாழ்க்கை என்று பலவிதங்களிலும் நாகேஷின் பெருமைகளை மக்களுக்கு காட்டப் போகிறது இந்த நாயகன்.

    நாகேஷின் நடிப்புத் திறமை பற்றியும், அவரது எளிமையான திரையுலக வாழ்க்கை பற்றியும் அவருடன் நெருங்கிப் பழகிய வி.எஸ்.ராகவன், மனோரமா, சச்சு, கே.ஆர்.விஜயா, சித்ராலயா கோபு, கமல்ஹாசன், டைப்பிஸ்டு கோபு, ஸ்ரீகாந்த், இயக்குநர்கள் கே.பாலச்சந்தர், கே.எஸ்.ரவிக்குமார், மவுலி, திருமதி ஒய்.ஜி.பி., தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன், கவிஞர் வாலி, பிலிம் நிïஸ் ஆனந்தன், சோ என்று பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார்கள்.


    [html:177b156f08]<div align="center">[/html:177b156f08]




    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  10. #589
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    சீரியலில் `பாபா'



    ஏவி.எம்.மின் `உறவுக்கு கைகொடுப்போம்' தொடரில் பாபா சுவாமிகள் என்ற ஒரு புதிய கேரக்டரை பக்திபூர்வ அடிப்படையில் சேர்த்திருக்கிறார்கள்.

    சாய்பாபாவுக்கு வியாழக்கிழமை உகந்தநாள். அந்த அடிப்படையில் இந்த பாபா சுவாமிகள் சம்பந்தப்பட்ட காட்சி வியாழன் தோறும் இடம் பெறுகிறது. கதைப்படி கதையின் நாயகன் ஜோதிகிருஷ்ணா தீவிர பாபா பக்தர். பாபா சுவாமிகள் அவருக்கு கொடுத்த ஒரு ரூபாய் தான் தொழில்துறையில் அவரை உயர்ந்த இடத்துக்கு கொண்டு வருகிறது. அதுமுதல் அவர் பாபாவை கொண்டாடுகிறார்.

    தொடரில் பாபா சுவாமிகளாக நடிப்பவர் சீனிவாச ரெட்டி. இவர் ஆந்திராவைச் சேர்ந்தவர். பாபா பற்றிய கதைப்பின்னணிக்கு அவர் போல் சாயல் கொண்டவரை தேடியபோது கிடைத்தவர் இவர்.

    "பாபா சுவாமிகள் கேரக்டர் தொடரில் வந்தபிறகு நிறைய பக்தர்கள் அதுபற்றி பெருமையுடன் குறிப்பிட்டு கடிதம் எழுதுகிறார்கள். `கதையோடு ஒட்டி பாபா சுவாமிகள் கேரக்டரை இணைத்திருப்பது நாங்கள் எதிர்பார்த்திராத ஆனந்தம்' என்ற ரீதியில் கடிதங்கள் வருகின்றன'' என்கிறார், தொடருக்கு கதைவசனம் எழுதும் சேக்கிழார்.




    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  11. #590
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    செந்தூரப்பூவே



    விதிவசத்தால் நகரத்திற்கு வந்து சேரும் நான்கு கிராமத்துப் பெண்களின் போராட்டத்தை மையமாக வைத்து பின்னப்பட்டதே `செந்தூரப்பூவே' தொடர். ராடன் டிவி தயாரிப்பில் ஒளிபரப்பாகி வரும் இத்தொடர் கடந்த வெள்ளிக்கிழமையுடன் 285 எபிசோடுகளைக் கடந்திருக்கிறது.

    திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு இந்த தொடர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.

    கதாநாயகி புனிதா, ஆதரவற்ற தனது தங்கைகளின் வாழ்க்கையில் ஒளியேற்றும் போராட்டத்தில் அலைஅலையாய் பிரச்சினைகளை சந்திக்கிறாள். இனி வரும் நாட்களில் புனிதா தனது தங்கைகளுக்கு ஏற்படும் ஒவ்வொரு பிரச்சினைகளிலிருந்தும் எப்படி அவர்களை காப்பாற்றி மீட்கிறாள் என்கிற காட்சிகள் விறுவிறுப்பாக அமைக்கப்பட்டுள்ளன. கதை ஓட்டத்தில் அந்தக் காட்சிகள் மிகப்பெரிய திருப்பங்களை ஏற்படுத்த இருக்கிறது என்று கூறுகிறார், தொடரின் `கிரியேட்டிவ் ஹெட்' ராதிகா சரத்குமார்.

    இத்தொடரில் விசு, நரசிம்மராஜ×, மனோகர், ஷ்ரவன், வின்சென்ட்ராய், ரஞ்சினி கிருஷ்ணன், யுவராணி ரவீந்திரா, ஜானகி ஆகியோர் நடிக்கின்றனர்.

    இயக்குனர்: பரமேஷ்வர். இணை இயக்கம்; பனப்பட்டி கே.எஸ்.கண்ணன், பகவதிராஜ். திரைக்கதை: முத்துச்செல்வன், வசனம்; வசுபாரதி. ஒளிப்பதிவு; அனில்ஹாஸ்.

    தயாரிப்பு: ராடன் மீடியா ஒர்க்ஸ் இந்தியா லிமிடெட்.

    [html:b57e8b94b0]<div align="center">[/html:b57e8b94b0]



    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

Similar Threads

  1. Vijay tv going to start 2 new programs
    By anbupani in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 7th October 2009, 01:58 AM
  2. Programs that you enjoy watching on TV
    By Anoushka in forum TV,TV Serials and Radio
    Replies: 107
    Last Post: 15th July 2008, 04:41 AM
  3. IR in TV Serials
    By RR in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 4
    Last Post: 16th July 2007, 01:12 PM
  4. which channel do you think has the most creative programs?
    By mirattalji in forum TV,TV Serials and Radio
    Replies: 20
    Last Post: 18th November 2006, 01:45 AM
  5. Pongal Programs
    By suryas_shaivs in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 19th January 2006, 06:03 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •