View Poll Results: your rating for the following serials

Voters
1. You may not vote on this poll
  • Thirumathi Selavam

    0 0%
  • Thendral

    1 100.00%
  • Chellame

    0 0%
  • Thangam

    0 0%
Page 23 of 159 FirstFirst ... 1321222324253373123 ... LastLast
Results 221 to 230 of 1587

Thread: new serials/programs

  1. #221
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    நீதிக்காக - வின் டிவி
    வின் டிவியில் செவ்வாய் மற்றும் வியாழனில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி, `நீதிக்காக'.

    அரசியல், சமூகம், பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றில் உள்ள தவறையும், சீர்கேடுகளையும், அவல நிலைகளையும் சமூக அக்கறையோடு தோலுரித்துக் காட்டும் நிகழ்ச்சி இது.

    இந்நிகழ்ச்சியில் அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள், நீதித்துறை வல்லுநர்கள் என பல துறைகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று உரையாற்றுகிறார்கள்.

    நேரடி ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களும், தொலைபேசி வாயிலாக தங்கள் சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.

    பரவீன் பிலிப் தொகுத்து வழங்குகிறார்.
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #222
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    `வினோத கார்' - `டிராவல் அன்ட் லிவிங் சேனல்'
    5 நண்பர்கள் அடங்கிய குழுவுக்கு வாகனங்களை மறுவடி வமைப்பு செய்வதே வேலை. இவர்களுக்கு கார் வடிவமைப்பு சம்பந்தப்பட்ட போட்டி ஒன்றில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. படகு போன்ற தோற்றம் கொண்ட வினோத வாகனம் ஒன்றை உருவாக்கி போட்டியில் ஜெயிக்கிறார்கள். இதன் மூலம் விலை உயர்ந்த சில கருவிகள் அவர்களுக்கு பரிசாக கிடைக்கிறது.

    `மோன்ஸ்டர் கேரேஜ்' என்ற பெயரில் வாகன வடிவமைப்பு பற்றிய தகவல்களை வழங்கும் இந்த நிகழ்ச்சியை, `டிராவல் அன்ட் லிவிங் சேனல்' வரும் திங்கள் இரவு 9 மணிக்கு ஒளிபரப்புகிறது.
    "அன்பே சிவம்.

  4. #223
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    பாலா.

    "டி.வி.தான் காரணம்''
    வைகை என்ற படம் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமாகும் பாலா, ஏற்கனவே சின்னத்திரையில் பிரபலம். "பெரிய திரையில் வளர்ந்து விட்டாலும் சின்னத்திரையில் இருந்து வரும் எந்த அழைப்பையும் புறக்கணிக்க மாட்டேன். நான் சினிமா நடிகன் என்ற அளவுக்கு இன்று வெளிப்பட காரணம் டிவி தான். என்னை திரைக்கேற்றவிதத்தில் வடிவமைத்ததில் டிவிக்கு பெரும் பங்குண்டு'' என்கிறார், பாலா.
    thanks - thinathanthi
    "அன்பே சிவம்.

  5. #224
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    அழகான ராட்சசி - ஜி டிவி


    ஜி டிவியில் ஒளிபரப்பாகிவரும் அழகான ராட்சசி தொடர் சின்னத்திரை நேயர்களின் அதிக பட்ச விருப்பத் தொடராகியிருக்கிறது. "வித்தியாசமான கதைகளுக்கு எப்போதுமே ரசிகர்கள் அதிகம். அழகான ராட்சசி கதையிலும் அதன் கதைப்பின்னணி ரசிகர்களை ஈர்த்திருக்கிறது. துணிச்சல்மிக்க ஒரு பெண்ணின் சாகசங்கள்தான் கதையின் முடிச்சு. நாயகி உட்பட அத்தனை நட்சத்திரங்களும் கதையோடு பொருந்திப்போனார்கள்'' என்கிறார், தொடரின் இயக்குனர் பிரபுநேபால்.

    கிராமத்தில் பாட்டியின் அரவணைப்பில் ஜாலியாக சுற்றித் திரிந்து சுதந்திரக்காற்றை அனுபவித்துவந்த இளம் பெண் ஷக்தி, பாட்டி இறந்ததும் வேலைதேடி பட்டணம் வருகிறாள். வானொலி நிலையத்தில் வேலை கிடைக்கிறது.

    அம்மா சிவகாமியிடம் இருக்கும் திரண்ட சொத்துக்காக மகன் கிஷோர் அடிதடி வரை இறங்கத் தயாராகிறான். சிவகாமியோ, "எப்போது உனக்கு திருமணம் ஆகிறதோ, அப்போது உன் பாகத்தை பிரித்துக் கொடுக்கிறேன்'' என்று கூறிவிடுகிறாள். ஊதாரி இளைஞனுக்கு யார் துணிந்து பெண் கொடுப்பார்கள்?

    இந்நிலையில் சாலை விபத்துக்குள்ளாகும் கிஷோருக்கு ஷக்தி ரத்தம் கொடுக்கிறாள். இந்த புதிய ரத்தபந்தம் அவர்களை மணமேடை வரை கொண்டுபோகிறது. அதற்குள் அந்த இளைஞனின் அடாவடி விஷயங்கள் அத்தனையும் ஷக்திக்கு தெரிந்து போகிறது.

    திருமணம் நடக்கிறது. மனைவிக்கு தன்னைப்பற்றி எதுவும் தெரியாது என்று கணவன் கிஷோர் நினைத்திருக்க, ஷக்தியோ கணவனின் நடவடிக்கைகளில் கவனம் பதிக்கிறாள்.

    இதற்கிடையே சிவகாமியின் தம்பி மனைவி காஞ்சனாவுக்கு கிஷோரின் கணக்கில்லாத சொத்தின்மீது ஒரு கண். சிவகாமிÛயும் ஷக்தியையும் கொன்றுவிட்டு தன் மகள் பூஜாவை ஷக்திக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிடுகிறாள். துணிச்சலே உருவான ஷக்திக்கு இது தெரிந்து விட, தன் முழுபலத்தையும் பிரயோகித்து இந்த `வாழ்வா...சாவா' போராட்டத்தை எதிர்கொள்கிறாள். சதியை முறியடிக்க அவளால் முடிந்ததா என்பது தொடரின் அடுத்தடுத்த பரபரப்பு காட்சிகள்'' என்கிறார், பிரபுநேபால்.

    தொடரின் நட்சத்திரங்கள்: ஷியாமந்தா, சுரேஷ்குமார், பிரியா, அப்சர்பாபு, ஜெயரேகா.

    திரைக்கதை: தேவிபாலா. கதை பிரபுநேபால். வசனம்: கஜேந்திரன், ஜீ.கே. தயாரிப்பு, இயக்கம்: பிரபுநேபால்.
    நன்றி -- தினதந்தி
    "அன்பே சிவம்.

  6. #225
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    தாத்தாவுக்காக...



    தீயசக்திகளை ஒழித்து தனது தாத்தாவை மீட்க போராடும் 15 வயது சிறுவனின் கதைதான் `பென் 10- அலைன் போர்ஸ்.' பென் என்கிற சிறுவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து, மாயாஜாலங்களின் பிடியில் சிக்கி இருக்கும் தனது தாத்தாவை மீட்க போராடுகிறான். இந்த போராட்டத்தில் அவன் தாத்தாவை மீட்டதோடு தீயசக்திகளையும் அழிக்கிறான். திருப்பங்கள் நிறைந்த காட்சி அமைப்பு தொடரை ரசிக்க வைக்கும்.

    கார்டூன் நெட்வொர்க் சேனலில் இந்த தொடரை திங்கள் முதல் புதன் வரை தினமும் மாலை 6 மணிக்கு காணலாம்.
    நன்றி -- தினதந்தி
    "அன்பே சிவம்.

  7. #226
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    உலக வழிகாட்டிகள்



    "பொழுது போக்கு அம்சங்களுடன் பல பொது அறிவு விஷயங்களையும் அறிந்து கொள்ளும் நிகழ்ச்சி தான், உலக வழிகாட்டிகள். கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து, பசிபிக் வரை பயணம் செய்து, அங்குள்ள பல்வேறு அரிய விஷயங்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்கள்.

    டிராவல் அன்ட் லிவிங் சேனல் ஒளிபரப்பு செய்யும் இந்த நிகழ்ச்சியை நாளை இரவு 10 மணிக்கு காணலாம்.
    நன்றி -- தினதந்தி
    "அன்பே சிவம்.

  8. #227
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    லவகுசா
    ராமாயண கதையில் ராமனின் மகன்கள் லவன்- குசன் இருவரையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வரும் புராணத் தொடர் லவகுசா. சின்னத்திரை வரலாற்றில் முதன் முதலாக வசந்த் டி.வி. லவகுசா தொடரை ஒளிபரப்புகிறது.

    ராமாயணத்தில் சுந்தர காண்டத்திற்கு அடுத்து வரும் காண்டம், உத்தரகாண்டம். இது மிக சிறப்பானதொரு காண்டமாகும். இந்த காண்டத்தின் நிகழ்வுகள் லவகுசாவில் இடம் பெறுகின்றன. ராமனின் மகன்கள் லவன், குசன் போன்றோரின் கதைகளையும், சீதையின் பெருமைகளையும், சீதையின் வாழ்க்கைப் பாதையின் பெருமையையும் சொல்லும் தொடர் இது.

    இந்த தொடரில் சீதையாக நடிப்பவர் நடிகை யுவராணி.

    தென்றல் வரும் தெரு, உறவுக்கு மரியாதை, காசு போன்ற படங்களை இயக்கிய கவுரி மனோகர் தொடரை இயக்குகிறார்.

    தேவ நாராயணன் இந்த தொடருக்கு கதை வசனம் எழுதுகிறார். தயாரிப்பு: டி.எஸ்.சேதுராமன். இணை தயாரிப்பு: ஜி. சத்யா.

    லவகுசா தொடருக்கான படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத் அரண்மனையிலும், தொடர்ந்து ஆந்திராவில் உள்ள என்.டி.ஆரின் ஸ்டூடியோவிலும் நடைபெற்று வருகிறது.

    விரைவில் லவகுசா தொடரை வசந்த் டி.வி.யில் காணலாம்.
    நன்றி - தினதந்தி
    "அன்பே சிவம்.

  9. #228
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சினிமாஸ்கோப்



    புதிதாக வெளிவந்து திரை அரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் தமிழ் திரைப்படங்களைப் பற்றிய ஒரு சிறப்பு விமர்சனம் `சினிமாஸ் கோப்' நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை வின் தொலைக்காட்சி ஞாயிறு தோறும் மதியம் 1 மணிக்கு ஒளிபரப்புகிறது.

    தொகுத்து வழங்குபவர் ஜ×னிட்டா. நிகழ்ச்சியை எழுதி இயக்குபவர் பி.வருண்.

    நன்றி - தினதந்தி
    "அன்பே சிவம்.

  10. #229
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    நமக்கேன் வம்பு



    வின் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் காலை 9.30 மணிக்கு ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சி `நமக்கேன் வம்பு.' அன்றாட நிகழ்வுகள், அரசியல் நிகழ்வுகள் மற்றும் சமுதாய நிகழ்வுகளை நக்கலும், நையாண்டியுமாக சிந்திக்கவும், சிரிக்கவும் வைக்கின்ற நிகழ்ச்சி இது.

    இதன் மறு ஒளிபரப்பை திங்கட்கிழமை இரவு 9 மணிக்கு காணலாம்.

    நன்றி - தினதந்தி
    "அன்பே சிவம்.

  11. #230
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    மனிதன்-விலங்கு சண்டை



    தத்ரூபமாக நடக்கும் நிகழ்ச்சிகளை தொழில்நுட்ப கலைஞர்கள் எடிட் செய்யாமல் அப்படியே காட்சிகளாக்கி தரும் நிகழ்ச்சி இது. விலங்குகளுக்கும், மனிதனுக்கும் நடைபெறும் சண்டைகள், ஆபத்துகள் பற்றி விவரிக்கிறார்கள். 4 எபிசோடுகளை கொண்ட நிகழ்ச்சியாக இது தயாராகி உள்ளது. ஒவ்வொரு எபிசோடும் 1/2 மணி நேரம் கொண்டது. நவீன கிராபிக்ஸ் தொழில்நுட்பத்துடனும், முப்பரிமாண காட்சி அமைப்புகளுடனும் அதேநேரம் இயல்பு மாறாமல் இந்நிகழ்ச்சி தயாராகி உள்ளது.

    `அன்டேம்டு அன்ட் அன்கட்` என்ற பெயரில் நாளை இரவு 9 மணிக்கு அனிமல் பிளானட் சேனல் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது.
    நன்றி - தினதந்தி
    "அன்பே சிவம்.

Similar Threads

  1. Vijay tv going to start 2 new programs
    By anbupani in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 7th October 2009, 01:58 AM
  2. Programs that you enjoy watching on TV
    By Anoushka in forum TV,TV Serials and Radio
    Replies: 107
    Last Post: 15th July 2008, 04:41 AM
  3. IR in TV Serials
    By RR in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 4
    Last Post: 16th July 2007, 01:12 PM
  4. which channel do you think has the most creative programs?
    By mirattalji in forum TV,TV Serials and Radio
    Replies: 20
    Last Post: 18th November 2006, 01:45 AM
  5. Pongal Programs
    By suryas_shaivs in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 19th January 2006, 06:03 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •