View Poll Results: your rating for the following serials

Voters
1. You may not vote on this poll
  • Thirumathi Selavam

    0 0%
  • Thendral

    1 100.00%
  • Chellame

    0 0%
  • Thangam

    0 0%
Page 19 of 159 FirstFirst ... 917181920212969119 ... LastLast
Results 181 to 190 of 1587

Thread: new serials/programs

  1. #181
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சிறப்பு ஜாக்பாட்- ஜெயா டிவி
    ஜெயா டிவியில் குஷ்பூ நடத்தி வரும் `ஜாக்பாட்' நிகழ்ச்சியில் பிரபலமான நபர்கள் இரண்டு பிரிவுகளாக வேடிக்கையாகவும் புத்திசாலித்தனமாகவும் மோதிக் கொள்கிறார்கள்.

    ஒரு அணியில் தங்கள் அறிவுக் கூர்மையை சோதித்துப் பார்க்க ரேடியோ ஜாக்கி செந்தில், வினிதா, அஞ்சனா, ப்ரியா ஆகியோர் களம் இறங்குகிறார்கள்.

    மற்றொரு அணியில் ஜெயா டிவியின் தொகுப்பாளர்கள் பாஸ்கி, சேது, ரம்யா, ரஷிகா ஆகியோர் இணைந்து தாங்கள் திறமையை நிரூபிக்க போட்டி போடுகிறார்கள்.

    புத்தாண்டையொட்டி நாளை இரவு 8 மணிக்கு இந்த சிறப்பு ஜாக்பாட் நிகழ்ச்சியை காணலாம்.

    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #182
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    மக்கள் தொலைக்காட்சி - 2008-ம் ஆண்டை திரும்பி பார்க்கும் நிகழ்ச்சி
    ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு 2008-ம் ஆண்டை திரும்பி பார்க்கும் நிகழ்ச்சிதான் இந்த மக்கள் 2008.

    2008-ம் ஆண்டில் மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சிறந்த நிகழ்ச்சிகளின் `விறுவிறு தொகுப்பு தான்' இந்த `மக்கள் 2008.'

    தீப ஒளித்திருநாள், குழந்தைகள் நாள், விடுதலை நாள், ரம்ஜான், கிறிஸ்துமஸ் என்று 2008-ம் ஆண்டில் கொண்டாடிய சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் மக்களை பேசவைத்த பல்வேறு நிகழ்ச்சிகளின் சுவையான தொகுப்பு இது.

    மக்கள் தொலைக்காட்சியில் டிசம்பர் 31 புதன் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது இந்த நிகழ்ச்சி.
    "அன்பே சிவம்.

  4. #183
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    அடிதடி ஆராய்ச்சி - டிஸ்கவரி சேனல
    உலகெங்கிலும் பிரசித்தி பெற்ற தற்காப்பு கலைகள் குறித்து அறிய விரும்புபவர்களுக்கு ஏற்ற நிகழ்ச்சி இது. ஜிம்மி ஸ்மித், ஆன்டர்சன் என்ற இரு தற்காப்பு கலை நிபுணர்கள் உலகின் பல பகுதிக்கு பயணம் செய்து, அந்தந்த பகுதியில் சிறப்பு பெற்ற தற்காப்பு கலையை விளக்கிறார்கள். `காலி' என்ற கலை முதல் `உதை குத்துச்சண்டை' வரை பலகலைகளை ஆராய்கிறார்கள்.

    அந்த வரிசையில் இந்த வாரம் கேரளாவின் பிரசித்தி பெற்ற தற்காப்பு கலையான `களரிபயட்' பற்றி அறிந்ததும், அறியாததுமான பல தகவல்களை சொல்கிறார்கள்.

    "அன்பே சிவம்.

  5. #184
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    தாம்தூம்-2009--- ஜெயா டிவி
    புத்தாண்டை `தாம்தூம் 2009' என்ற நிகழ்ச்சியின் மூலமாக பிரம்மாண்டமாக வரவேற்கிறது, ஜெயா டிவி. எம்.ஜி.எம்.மில் நடைபெறும் இந்த நேரடி ஒளிபரப்பு, வரும் புதன்கிழமை இரவு 9.30 மணி முதல் ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிறது.

    பிரபல முன்னணி நட்சத்திரங்கள், திரையுலக கலைஞர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள, வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளோடு பிறக்கவிருக்கும் 2009-ஐ புத்துணர்வுடன் தனது ரசிகர்களோடு இணைந்து கொண்டாடுகிறது, ஜெயா டிவி.

    விழாவில் 2008 ஆம் ஆண்டில் திரைத்துறையில் சாதனை படைத்த நடிகர்- நடிகைகள், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு விருதுகளையும் வழங்கி சிறப்பிக்கவிருக்கிறது.

    இந்த `தாம்தூம் 2009' நிகழ்ச்சியில் பிரபல பின்னணி பாடகர்கள் க்ரிஷ், யுகேந்திரன், பிரசாந்தினி, பெல்லிராஜா, தீபாமரியம், சின்னபொண்ணு இவர்களின் இனிய குரலில் இன்னிசை நிகழ்ச்சியையும், சினிமா நடிகைகள் பூர்ணா, சுஜா, தாரிகா ஆகியோர் ராக் அகாடமியுடன் இணைந்து நடத்தும் நடனநிகழ்ச்சியையும் காணலாம்.

    "அன்பே சிவம்.

  6. #185
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சபாஷ் சரியான காமெடி - ஜெயா டிவி


    ஜெயா டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு ``சபாஷ் சரியான காமெடி'' எனும் புதிய நகைச்சுவை நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

    இந்நிகழ்ச்சியில் `சிக்ஸ் பேக் சில்லி ராஜா' எனும் வித்தியாசமான கேரக்டரில் வயிறு குலுங்க சிரிக்க வைக்க வருபவர், ஜேக்கப். இவர் சொல்லும் தத்துவமும், கடி ஜோக்கும் பிரம்மாண்டமான அரங்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் நடிகர்களின் நகைச்சுவை காட்சிகளும் நிகழ்ச்சியில் இடம் பெறும்
    "அன்பே சிவம்.

  7. #186
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    தங்கமான புருஷன்

    கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. ``தங்கமான புருஷன்'' தொடர்.

    எவர்ஸ்மைல் புரொடக்ஷன்ஸ் சார்பாக ஈ.ராமதாஸ் தயாரித்து வழங்கும் இந்த தொடரில், `சேது' புகழ் நடிகை அபிதா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருடன் நடிகர்கள் பிரேம் சாய் மற்றும் நீபா ஆகியோரும் நடித்து வருகிறார்கள்.

    சுந்தர் கே.விஜயன் இயக்குகிறார்.
    "அன்பே சிவம்.

  8. #187
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    மக்கள் தொலைக்காட்சி - கார்ட்டூன்கள
    கார்ட்டூன்கள் என்றாலே குழந்தைகளுக்கு கொள்ளை இன்பம். குழந்தைகளை மட்டுமல்ல, பெரியவர்களையும் வெகுவாக கவர்ந்திருப்பவை கார்ட்டூன்கள்.

    கார்ட்டூன்களில் உருவங்கள் பேசுவதையும், நடப்பதையும், ஓடுவதையும் பார்க்கும் போது குழந்தைகள் மனம் துள்ளும். தானும் அந்தக் கார்ட்டூன்களாக மாறி குதூகலிக்கும்.

    இந்தக் கார்ட்டூன்களின் வளர்ச்சி 2டி, 3டி என்று வளர்ந்து பரிணாமம் அடைந்து நிற்கிறது. நிஜ உருவங்களையும், கார்ட்டூன்களையும் இணைத்து உருவான தொடர்களும் இன்று அதிகம்.

    கார்ட்டூன்களின் நோக்கம் குழந்தைகளை உற்சாகப்படுத்துவதாக மட்டும் தான் இருக்க வேண்டும். அவர்களுக்குள் வன்
    முறையை விதைத்து விடக்கூடாது.

    ஆனால் அனைத்து கார்ட்டூன்களும் அப்படி சமூக அக்கறையோடு உருவாக்கப் படுகின்றனவா என்றால் கேள்விக் குறிதான்.

    ஆனால் மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்ட்டூன் மகிழ்ச்சியை மட்டும் செய்யக்கூடியவை.

    வியாழன் தோறும் 4.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது இந்த ``குறும்புச் சித்திரம்''.
    "அன்பே சிவம்.

  9. #188
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சூப்பர் சிங்கர் - விஜய் டிவி
    விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் இந்த வார சூப்பர்சிங்கர் நிகழ்ச்சி, மற்றொரு தகுதிச் சுற்றாக அமையும். போட்டியில் கலந்து கொள்ளும் பாடகர்களுக்கு பின்னணி பாடகர்கள் மனோ, சித்ராவுடன் இணைந்து பாடும் அரிய வாய்ப்பும் வழங்கப்படுகிறது. இந்த சுற்றில் இருக்கும் அஜீஷ், விஜய் நாராயணன், ரஞ்சித், பிரசன்னா, ரவி, ராகினி ஸ்ரீ, ரஞ்சினி, ரேணு ஆகியோரே நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக வரும் சித்ரா மற்றும் மனோவுடன் சேர்ந்து பாடும் வாய்ப்பை பெற்றவர்கள்.

    இந்த சுற்றில் மனோ, சித்ரா இருவருக்கும் பிடித்த பாடகருக்கு சிறப்பு பரிசும் உண்டு.

    பின்னணி பாடகர்களான சுஜாதா மற்றும் ஸ்ரீநிவாஸ் நடுவர்களாக இருக்கும் இந்த நிகழ்ச்சியை திங்கள் முதல் புதன் வரை தினமும் இரவு 9 மணிக்கு விஜய் டிவியில் காணலாம்.
    "அன்பே சிவம்.

  10. #189
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    பதில் சொல்லுங்கள் பரிசு வெல்லுங்கள்'' -வசந்த் டிவி
    சினிமா மற்றும் பொது அறிவை வளர்க்கும் வசந்த் டிவியின் நிகழ்ச்சி ``பதில் சொல்லுங்கள் பரிசு வெல்லுங்கள்.'' இது ஒரு நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி.

    திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் போனில் தொடர்பு கொள்ளும் நேயர்களிடம் பொது அறிவுத் திறனை வளர்க்கும் விதத்தில் கேள்விகள் கேட்கப்படும். சரியான பதில் சொல்லும் நேயர்களுக்கு பரிசு உண்டு.

    நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் ஆர்.பாலாஜி.
    "அன்பே சிவம்.

  11. #190
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    பெண் - ராஜ் டி.வி.
    ராஜ் டி.வி.யில் பெண்களுக்கான பெண்களே நடத்தும் நிகழ்ச்சி, `பெண்' இந்நிகழ்ச்சி 500 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. பெண்கள் விரும்பும் சமையல்கலை, கைத்தொழில், மருத்துவம், சாதனைப் பெண்கள் போன்ற நிகழ்ச்சிகள் இதன் சிறப்பம்சம்.

    திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 11 மணிக்கு இந்த நிகழ்ச்சியை காணலாம்.
    "அன்பே சிவம்.

Similar Threads

  1. Vijay tv going to start 2 new programs
    By anbupani in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 7th October 2009, 01:58 AM
  2. Programs that you enjoy watching on TV
    By Anoushka in forum TV,TV Serials and Radio
    Replies: 107
    Last Post: 15th July 2008, 04:41 AM
  3. IR in TV Serials
    By RR in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 4
    Last Post: 16th July 2007, 01:12 PM
  4. which channel do you think has the most creative programs?
    By mirattalji in forum TV,TV Serials and Radio
    Replies: 20
    Last Post: 18th November 2006, 01:45 AM
  5. Pongal Programs
    By suryas_shaivs in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 19th January 2006, 06:03 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •