View Poll Results: your rating for the following serials

Voters
1. You may not vote on this poll
  • Thirumathi Selavam

    0 0%
  • Thendral

    1 100.00%
  • Chellame

    0 0%
  • Thangam

    0 0%
Page 143 of 159 FirstFirst ... 4393133141142143144145153 ... LastLast
Results 1,421 to 1,430 of 1587

Thread: new serials/programs

  1. #1421
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சன் தொலைக் காட்சியில்
    தாமரை
    03 -11 - 2014 முதல்










    Last edited by aanaa; 2nd November 2014 at 06:29 AM.
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1422
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    எக்ஸ்பிரஸ் சேனல்
    * புது யுகம் தொலைக்காட்சியில் காலை 6 மணி முதல் 7 மணி வரை "ஆன்மிக விடியல்' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதமும், அஷ்டலட்சுமி ஸ்தோத்திரமும் தெய்வீக மணம் பரப்புகிறது. நம் மண்ணின் பாரம்பரிய இசையான நாதஸ்வரமும் புல்லாங்குழலும் இசைக்கோலம் போடுவதோடு, வயலின் மற்றும் சாக்ஸபோன் இசையிலும் தெய்வீகப் பாடல்கள் ஒலிக்கின்றன. அத்துடன், தெய்வீகத் திருத்தலங்களில் நடைபெறும் திருவிழாக்கள், சிறப்பு வழிபாடுகள் பற்றிய தகவல்களும் தெரிவிக்கப்படுகின்றன.
    "அன்பே சிவம்.

  4. #1423
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    பெற்றோரின் அன்பு வார்த்தைக்காக, தான் காதலித்தவனை விட்டுவிட்டு, காதலனின் நண்பனைத் திருமணம் செய்கிறாள் மோகினி. திருமணம் முடிந்தபிறகு முதலிரவில் எதிர்பாராத நிகழ்வு ஒன்று நடக்கிறது. அதன்பிறகு மோகினியின் புகுந்த வீட்டில் என்னென்ன மாற்றங்கள் நடக்கின்றன என்பதுதான் "மோகினி' நெடுந்தொடரின் கதையம்சம். தமிழ்த் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் வழக்கமான நெடுந்தொடராக இல்லாமல், நெகட்டிவ் கதாபாத்திரங்கள் இல்லாமல், மாமியார் - மருமகள் சண்டை இல்லாமல், அழுது வடியும் கதாபாத்திரங்கள் இல்லாமல், நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இந்தத் தொடர் எடுக்கப்பட்டுள்ளது. ஏவி.எம். நிறுவனம் தயாரித்துள்ள இந்தத் தொடர்,
    விரைவில் கலைஞர் தொலைக்காட்சியில் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
    "அன்பே சிவம்.

  5. #1424
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    தொலைக்காட்சி மேலும் அடுத்த கட்ட புது முயற்சியாக ஒரு மாபெரும் மருத்துவமனையை கதைக் களமாகக் கொண்டு உருவாக்கியுள்ள மருத்துவத் தொடரே இந்த ‘உயிர் மெய்’ தொடர்.
    தயானந்த் இண்டஸ்ட்ரீஸின் நிறுவனரான தயானந்தின் வாழ்க்கைக் கனவுதான் இம் மருத்துவமனை. உலகத் தரத்துடன் நிர்மாணிக்கப்பட்ட இம்மருத்துவமனையில் அனைத்து மருத்துவ பிரிவுகளும் இருந்தாலும், இதன் அவசர சிகிச்சைப் பிரிவு மற்ற மருத்துவமனைகள் பார்த்து பொறாமைப்படும் விதத்தில் போற்றத்தக்கதாக அமைந்துள்ளது.

    அவசர சிகிச்சைப் பிரிவின் தலைமை மருத்துவர் டாக்டர்.கவிதா சந்தீப்.
    இவருக்கு கீழே பணியாற்றும் டாக்டர்.புவனா நடராஜன், குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர். கரண் பெல்லா, அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர்.மனோ அருண்மணி, அமெரிக்காவில் மருத்துவம் படித்துவிட்டு அறுவை சிகிச்சையில் பயிற்சி எடுக்க வந்திருக்கும் டாக்டர்.தமிழ்ச் செல்வன், அவசர சிகிச்சை பிரிவு நர்ஸ்.ஜென்னி, ஆகியோரே இத் தொடரின் முக்கியமான கதாபாத்திரங்கள்.

    இவர்களைத் தவிர முன் அலுவலகத்தில் பணி புரியும் ஏழுமலை, பன்னீர் செல்வம் மற்றும் இதர நர்ஸுகள் சரளா, வித்யா, சுமதி, இப்படி அனைவருமே நமது சமுதாயத்தின் வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட மனிதர்களை நினைவூட்டுவர்.

    மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த சினிமா நட்சத்திரமான நடிகை அமலா இக்கதையின் முக்கிய கதாபாத்திரமான டாக்டர்.கவிதா சந்தீப் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    மேலும், இந்த தொடரில் நடிக்க வந்தது பற்றி அவர் கூறும்போது,
    “சின்னத்திரையில் நடிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்காமல் இருந்த நான், ‘உயிர் மெய்’ தொடரின் கதையைக் கேட்ட பிறகு இப்படிப்பட்ட ஒரு மாறுபட்ட தொடரில் நடிப்பதில் பெருமை கொள்கிறேன்.

    இது போன்ற கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது சந்தோஷமாக இருப்பதாகக் கூறுகிறார்.
    மேலும் தான் நடிக்கும் இத்தொடர் சராசரியான தொடர் போல் இல்லாமல் முற்றிலும் மாறுபட்ட ஒரு தொடராக அமைந்திருப்பதாகவும், மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் இத்தொடரில் ஒவ்வொரு எபிசோடும் மருத்துவத்தின் முக்கியத்துவம், அதைக் கையாளும் மருத்துவர்களின் சேவை, அவர்களின் உணர்வுகளையும், தியாகங்களையும் திரைக்கதையாக பிரதிபலிப்பதாகச் சொல்கிறார்.

    இது மக்களுக்கான தொடர். ஒவ்வொருவரும் குடும்பத்துடன் காணவேண்டிய ஒரு தொடர் தான் ‘உயிர் மெய்’,” என அமலா கூறுகிறார்.
    டாக்டர் கதாபாத்திரத்தில் நடிப்பதைப் பற்றி அவர் பற்றி கூறும் போது, “பொதுவாக ஒரு மருத்துவமனையில், ஒரு நோயாளியை கவனிக்கும் டாக்டர், அவர் கையாளும் மருத்துவத்தை விட, அவரது கருணையும், ஆதரவும், நம்பிக்கை வார்த்தையுமே அந்த நோயாளியை பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடையச் செய்யும் என மருத்துவர்களின் மகத்துவத்தை உயர்வாகக் கூறுபவர், அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதே பெருமையென்கிறார்.

    ‘உயிர் மெய்’ தொடரில் ஒரு முக்கிய பிரம்மாண்டமும் இருக்கிறது.
    அது கதையின் களமான ஒரு மிகப்பெரிய மருத்துவ மனையை மாபெரும் கலை இயக்குனர் தோட்டாதரணி அவர்களால் 20 ஆயிரம் சதுர அடியில் பிரம்மாண்டமான மருத்துவமனை செட் அமைத்து, படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். இது தமிழ் தொலைக்காட்சிகளில் ஒரு பிரம்மாண்ட படைப்பாகும்.

    இந்த உயரிய படைப்பான ‘உயிர் மெய்’தொடரை பூஷன் மற்றும் ப்ரியா இயக்க, ஒளிப்பதிவை அருண் மொழி ஏற்க, கதை, திரைக்கதையை ராதிகா எழுத, இவர்கள் கூட்டணியில் இந்த பிரம்மாண்ட தொடர் உருவாகிவருகிறது.

    இத்தொடர் பற்றி இவர்கள் கூறும் போது, “இது கண்டிப்பாக பார்ப்பவர்கள் மனதில் புதிய உணர்வை உருக்கத்தை ஏற்படுத்தும். வழக்கமான தொடர் போல் அல்லாமல், நேயர்களுக்கு ஒரு சிறந்த பொழுதுபோக்கு படைப்பாகவும், ஒவ்வொரு காட்சியும் அழகு பட பார்ப்பவர் மனதை வசீகரிக்கும் விதத்தில் உருவாக்கி வருகிறோம் எனக் கூறுகின்றனர்.

    இத்தொடரின் அழகுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக, இதன் தலைப்பு பாடலுக்கான இசையை, இயைமைப்பாளர் தரண் அமைக்க, பாடலை சினேகன் எழுத, ஹரிச்சரண் பாடியுள்ளார்.

    முற்றிலும் மாறுபட்ட இப்படியொரு புதுமையான தொடரை படைப்பது பற்றி ஜீ தமிழ் தொலைக்காட்சி பிசினஸ் ஹெட் என்.எஸ். ஈஸ்வரன் கூறும்போது, ‘உயிர் மெய்’ தொடர் கட்டாயமாக மக்கள் குடும்பத்தோடு, பார்த்து ரசித்து, அவர்கள் கொண்டாடும் ஒரு தொடராக இருக்கப் போகிறது.

    ஒவ்வொரு மனிதனின் உணர்வை சொல்லும் இத்தொடர் பார்ப்பவர்களின் வாழ்க்கையில் ஒரு முக்கியத் தொடராக அமையப்போவது உறுதி, எனக் கூறுகிறார்.
    குளோபல் ஒன் ஸ்டுயோ இத்தொடரை தயாரித்து வழங்க, வரும் ஆகஸ்ட் 18 ம் தேதி முதல் வாரம் தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை, இரவு 8 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது
    "அன்பே சிவம்.

  6. #1425
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சன் டிவியில் சின்ன பாப்பாபெரிய பாப்பாஸ் நளினி, நிரோஷா நடிக்கிறார்கள்


    சென்னை:: ராடன் மீடியா ஒர்க்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் சார்பில் ராதிகா சரத்குமார் தயாரிக்கும் புதிய நகைச்சுவைத் தொடர், ‘சின்னபாப்பா& பெரிய பாப்பாஸ்’. இதில் எதிரும் புதிருமான கதாபாத்திரத்தில் நடிகைகள் நளினியும் நிரோஷாவும் நடிக்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் சுவாரஸ்யமான மோதல்கள்தான் கதை. குடும்ப பின்னணியில் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இத்தொடர் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்தொடரை எஸ்.என்.சக்திவேல் இயக்குகிறார். திரைக்கதை, வசனத்தை ஜி.கே.கோபிநாத் எழுதுகிறார். ஒளிப்பதிவு தர்மா. கிரியேட்டிவ் ஹெட், ராதிகா சரத்குமார்.இந்தத் தொடர், சன் தொலைக்காட்சியில் வரும் 15&ம் தேதியில் இருந்து ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தோறும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது.



    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  7. #1426
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    18 தொடர்களில் இருந்து விருதுகள்


    சென்னை: சன் டி.வி.யில் ஒளிபரப்பாகும் 18 தொடர்களில் இருந்து சன் குடும்பம் விருதுகள் வழங்கப்பட இருக்கின்றன.சன் டி.வி.யில் தினமும் காலையில் இருந்து இரவு வரை ஒளிப்பரப்பாகும் தொடர்களில் இருந்து சிறந்த கலைஞர்களை கவுரவிக்கும் பொருட்டு சன் குடும்ப விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதில், சொந்த பந்தம், பொம்மலாட்டம், தேவதை, மரகத வீணை, பொன்னூஞ்சல், இளவரசி, வள்ளி, கல்யாணப்பரிசு, பிள்ளை நிலா, முந்தானை முடிச்சு, பாசமலர், நாதஸ்வரம், தெய்வ மகள், வம்சம், தென்றல், வாணி ராணி, சக்தி, அழகி ஆகிய பதினெட்டு தொடர்கள் இடம்பெற்றுள்ளன. மக்களின் வரவேற்பை பெற்றுள்ள இந்தத் தொடர்களில் இருந்தே விருதுக்குரியவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


    26 பிரிவுகளில்...

    சென்னை: ‘சன் குடும்பம் விருதுகள்’ வழங்கும் விழாவில் இந்த வருடம் 26 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட இருக்கிறது.சன் டி.வி.யின், ‘சன் குடும்பம் விருதுகள்’ வழங்கும் விழா, இந்த வருடம் வரும் 11&ம் தேதி மாமல்லபுரத்தில் நடக்கிறது. இந்த விழாவில் மொத்தம் 26 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுகின்றன. சிறந்த கதாநாயகன், கதாநாயகி, அப்பா, அம்மா, மாமியார், மருமகள், அண்ணன், தங்கை, வில்லன், வில்லி, நகைச்சுவை நடிகர், நடிகை, இயக்குனர், ஒளிப்பதிவாளர், வசனகர்த்தா, திரைக்கதை, இசை உட்பட 26 பிரிவுகளில் விருது வழங்கப்பட இருக்கிறது. இவ்வளவு பிரிவுகளில் விருது வழங்கப்படுவது இதுவே முதல் முறை. ‘சினிமா படங்களுக்கு ஏகப்பட்ட விருது விழா இருக்கிறது. சின்னத்திரை கலைஞர்களுக்கு இந்த விருது விழா மட்டுமே இருப்பதால் எங்களுக்கு உற்சாகமாக இருக்கிறது’ என்று டி.வி.தொடர் தயாரிப்பாளர் ஒருவர் சொன்னார்.




    நன்றி: தினமலர்
    Last edited by aanaa; 15th November 2014 at 05:01 AM.
    "அன்பே சிவம்.

  8. #1427
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    விஜய் டிவியின் பெருமையாய் விளங்கிய, நேயர்களின் நெஞ்சங்களைக் கவர்ந்த ‘மகாபாரதம்’ தொடர் நேயர்களின் விருப்பத்திற்கிணங்க மீண்டும் ஒளிபரப்பாக உள்ளது.


    இந்த இதிகாசத் தொடரை நேயர்கள் இதுவரை கண்டிருக்காத வகையில் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்தது.


    இதுவரை நாம் பல மகாபாரதக் கதைகளைப் பார்த்திருக்கிறோம். ஆனால், நாம் அறிந்திராத பல கதாபாத்திரங்களை நமக்கு எடுத்துக் காட்டியது விஜய் டிவியின் மகாபாரதம்தான்.


    இத் தொடரின் முதுல் பாகங்களை சில நேயர்கள் காணத் தவறியிருக்கக் கூடும. அவர்களுக்காகவே விஜய் டிவி எண்ணற்ற நேயர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் மீண்டும் ‘மகாபாரதம்’ தொடரை மறுஒளிபரப்பு செய்ய முடிவெடுத்தது.


    சத்யவதி – சாந்தனு வாழ்க்கை வரலாற்றில் தொடங்கும் இந்த ‘மகாபாரதம்’, பீஷ்மர், திருதிராஷ்டிர்ர், பாண்டு, குந்தி, திரௌபதி, பாண்டவர்கள், கௌரவர்கள், சகுனி, கர்ணன், வாசுதேவ கிருஷ்ணன் ஆகியோரது கதாபாத்திரங்களை அழகாக சித்தரித்துக் காட்டுகிறது.


    வரும் டிசம்பர் 8ம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு விஜய் டிவியில் மட்டும் ஒளிபரப்பாகும் ‘மகாபாரதம்’ தொடரை காணத் தவறாதீர்கள்.
    "அன்பே சிவம்.

  9. #1428
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    வேந்தர் டி.வி.யில் ஞாயிறு தோறும் பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘நினைத்தாலே இனிக்கும்’ நிகழ்ச்சி, நேயர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.


    பிரம்மாண்டமான, அழகு மிகு அரங்கத்தில் நடிகை குஷ்பு, திரைப்படப் பிரபலங்களுடன் கலந்துரையாடுகிறார். இப்படிப்பட்ட நிகழ்ச்சியில் குஷ்பு தோன்றுவது இதுதான் முதல்முறை,


    இன்று திரையில் பிரபலமாக இருக்கும் முன்னணி கதாநாயகர்கள் மற்றும் கதாநாயகிகள், மனந் திறந்து குஷ்புவுடன் தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொள்கின்றனர். மேலும், ‘படம் பேசும்’, ‘கலாட்டா கெட்-அப்’, ‘வேந்தர் ஷாப்பிங்’ போன்ற சுவையான பகுதிகளும் இதில் இடம்பெறுகின்றன.


    ‘படம் பேசும்’ பகுதியில், பிரபலங்களின் புகைப்படங்கள் காண்பிக்கப்படுகின்றன. அந்த புகைப்படங்களைப் பற்றிய சுவையான நினைவுகளை பிரபலங்கள் பகிர்ந்து கொள்வர். ‘கலாட்டா கெட்-அப்’ பகுதியில், பிரபலங்கள் தேர்வு செய்யும் தோற்றம், அவர்களுக்கு மேக்கப்பாக போடப்படும். ‘வேந்தர் ஷாப்பிங்’ பகுதியில், பிரபலங்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை இலவசமாக ஷாப்பிங் செய்து கொள்ளலாம்.


    ஞாயிறு தோறும் பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி, அன்று மாலையே 6.30 மணிக்கு மறு ஒளிபரப்பாகிறது.
    "அன்பே சிவம்.

  10. #1429
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    தமிழ் சேனல்களில் எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது இதிகாசம் மற்றும் புராணத் தொடர்கள் அதிக அளவில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தியில் தயாரான பிரமாண்ட தொடர்களான மகாபாரதம், ராமாயணம் போன்றவை தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு சமூக தொடர்கள் பெண்களை வீட்டிலேயே கட்டிப்போட்டது


    இப்போது சமூக தொடர்களை விட புராணம் மற்றும் இதிகாச தொடர்களுக்கே அதிக மவுசு ஏற்பட்டிருக்கிறது. திரைப்படங்களுக்கு நிகராக பிரமாண்டமாக இந்த தொடர்கள் தயாரிக்கப்படுவதால் மக்கள் அதனை விரும்பி பார்க்கிறார்கள். இதனால் வாரம் ஒரு நாள், இரண்டுநாள் ஒளிபரப்பாகி வந்த தொடர்கள் திங்கள் முதல் வெள்ளி வரை வாரத்தின் 5 நாட்கள் ஒளிபரப்பாகிறது


    விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பிய மகாபாரதம் தொடருக்கு கிடைத்த மகத்தான வரவேற்பால் அது இப்போது மீண்டும் ப்ரைம் டைமில் மறு ஒளிபரப்பாகிறது. இன்னொரு தொலைக்காட்சியும் மகாபாரதத்தை தமிழில் நேரடியாக தயாரித்து ஒளிபரப்புகிறது.
    இதுதவிர ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஓம் நமச்சிவாயா மற்றும் ராமாயணம் தொடர்கள் ஒளிபரப்பாகிறது. புதுயுகம் தொலைக்காட்சியில் முதன் முறையாக சனீஸ்வர பகவானின் பெருமையை சொல்லும் ஸ்ரீசனீஸ்வரமகிமை என்ற தொடர் ஒளிபரப்பாகிறது.


    பொதிகை தொலைக்காட்சில் புராண கதைகளில் சொல்லப்படும் தத்துவங்கள், நீதிகளை மையமாக கொண்டு தர்மத்தின் குரல் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. முன்னணி செய்தி சேனல் ஒன்றில் 63 நாயன்மார்களின் வரலாற்றையும் ஒளிபரப்பி வருகிறார்கள். இதுதவிர தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான அம்மன் திருத்தலங்களின் வரலாறுகளைச் சொல்லும் அம்மன் மகிமை என்ற தொடர் முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாக இருக்கிறது.


    புராணம், இதிகாச தொடர்களை தயாரிப்பது அதிக பட்ஜெட் பிடிக்கும் வேலை என்றாலும் ஸ்பான்சர்களும், விளம்பரதாரர்களும் இந்த தொடர்களில் ஆர்வம் காட்டுவதால் மினிமம் கியாரண்டி தொடர் என்று இதனை சின்னத்திரை விளம்பர வட்டாரத்தில் குறிப்பிடுகிறார்கள்



    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  11. #1430
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    தொடரும் சக்தி!


    அருணவ், மனீஷா சட்டர்ஜி நாயகன், நாயகியாக நடிக்கும் சக்தி தொடர் 2014 டிசம்பருடன் முடிவுக்கு வருவதாக இருந்தது. ஆனால் தொடருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பையும், உயர்ந்திருக்கும் டி.ஆர்.பி ரேட்டையும் கருத்தில் கொண்டு தொடரை தொடர முடிவு செய்து விட்டார்கள் தயாரிப்பாளர்கள். இதனால் தொடரில் நடித்துக் கொண்டிருப்பவர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.


    தொடரை நீடிக்க வசதியாக கதையில் சில மாற்றங்களையும் செய்துள்ளனர். ரொமான்ஸ் மற்றும் பிசியாலஜிக்கல் த்ரில்லர் வகையான ஷக்தி பல திருப்பங்கள் நிறைந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையை சுற்றி நடக்கிற கதை.


    இதில் ஹீரோயினாக நடிக்கும் மனீஷா சட்டர்ஜிக்கு சினிமா வாய்ப்புகளும் வந்து கொண்டிருக்கிறது. மனீஷா ஷக்தியாகவும், அருணவ் ஆர்யாவாகவும், அனுராதா கிருஷ்ணமூர்த்தி லோகேஸ்வரியாகவும் நடிக்கிறார்கள். தொடரை சதாசிவம் பெருமாள் இயக்குகிறார், கிரன் இசை அமைக்கிறார்.



    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

Similar Threads

  1. Vijay tv going to start 2 new programs
    By anbupani in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 7th October 2009, 01:58 AM
  2. Programs that you enjoy watching on TV
    By Anoushka in forum TV,TV Serials and Radio
    Replies: 107
    Last Post: 15th July 2008, 04:41 AM
  3. IR in TV Serials
    By RR in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 4
    Last Post: 16th July 2007, 01:12 PM
  4. which channel do you think has the most creative programs?
    By mirattalji in forum TV,TV Serials and Radio
    Replies: 20
    Last Post: 18th November 2006, 01:45 AM
  5. Pongal Programs
    By suryas_shaivs in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 19th January 2006, 06:03 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •