View Poll Results: your rating for the following serials

Voters
1. You may not vote on this poll
  • Thirumathi Selavam

    0 0%
  • Thendral

    1 100.00%
  • Chellame

    0 0%
  • Thangam

    0 0%
Page 139 of 159 FirstFirst ... 3989129137138139140141149 ... LastLast
Results 1,381 to 1,390 of 1587

Thread: new serials/programs

  1. #1381
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    வேகம் பிடிக்கும் தேன் நிலவு!


    சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தேன் நிலவு தொடர், நகைச்சுவை பின்னணியில் உருவான திகில் தொடர். இயக்குனர் திருமுருகன் தயாரிக்கும் இந்த தொடரில் அவரும் முக்கிய கேரக்டரை ஏற்றிருக்கிறார்.


    தேனிலவு கொண்டாட கொடைக்கானல் வந்த நான்கு புதுமணத் தம்பதிகளுக்கு நேர்ந்த திகிலான அனுபவங்களும், அதன் பாதிப்பில் இருந்து அவர்கள் மீள முடிகிறதா என்பதை தொடரின்ஆரம்ப காட்சிகள் மிரட்சியுடனே சொல்லிப்போயின. கூடவே நகைச்சுவை காட்சிகளும் அடுத்தடுத்து காட்சிகளானதில் நேயர்களின் இனிப்புச் சுரங்கமாகி விட்டது, இந்த தேனிலவு.


    ‘‘தொடரில் அடுத்த அதிரடி என்ன?’’


    தொடரை இயக்கும் விக்ரமாதித்தனிடம் கேட்டபோது, ‘‘தேனிலவுத் தம்பதிகள் தங்கள் உல்லாச டூரை முடித்துக் கொண்டு ஊருக்கு கிளம்பும் நேரத்தில் ஒரு கொலை விழுகிறது. கொல்லப்பட்டது யார்? கொலையாளி யார்? என்ற பரபரப்பு கேள்வியுடன் தொடர் இன்னும் வேகம் பிடிக்கத் தொடங்கி விடும். கொஞ்சமும் ஊகிக்க முடியாத ஒரு நபர் தான் கொலையாளி என்னும்போது நேயர்களின் இதயத்துடிப்பு ஒரு நிமிடம் ஏறி இறங்கும் என்பது மட்டும் நிச்சயம்’’ என்கிறார்.


    தொடரில் திருமுருகன்–செண்பகா, குமார்–சங்கீதா, அண்ணாமலை–சிவரஞ்சனி தவிர, டெல்லிகணேஷ்–சுதா ஜோடியும் இருக்கிறார்கள். கலகலப்பு ஏரியாவை திருமுருகன் கவனிக்க, திகிலுக்கு மற்றவர்கள். இயக்கம் விக்ரமாதித்தன்.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1382
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    தந்தி டி.வி.யில் 63 நாயன்மார்கள்




    சைவத்தையும் தமிழில் பக்தி இலக்கியத்தையும் வளர்த்தெடுத்ததில் சைவ சமய குரவர்களுக்கு பெரும் பங்குண்டு. சைவசமயத் திருத்தொண்டர்கள் பெருமையை சேக்கிழார் பெரிய புராணமாக வடித்தார். இது தந்தி டி.வி.யின் சீரிய முயற்சியில் திரைவடிவம் பெறுகிறது.


    நாயன்மார்கள் அறுபத்து மூவர். இவர்களது வாழ்க்கையையும், சைவ சமய மற்றும் தமிழ்த் தொண்டையும் தந்தி டி.வி விரைவில் மிகப்பெரும் பொருட்செலவில் ஒரு புராணத் தொடராக வழங்க இருக்கிறது.


    நாயன்மார்கள் வாழ்க்கையை தத்ரூபமாக படம் பிடிக்கும் இந்த தொடர், எல்லோர் மனதிலும் தமிழ் சுவையை கூட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நவக்கிரக தலங்கள் அமைந்துள்ள தஞ்சை, கும்பகோணம் உள்ளிட்ட இடங்களிலும் நாயன்மார்கள் வாழ்க்கை வரலாறு செய்திகள் படமாக்கப்பட்டு வருகிறது. கி.பி 400–ல் வாழ்ந்திருந்த சிவனடியார்கள் பற்றிய சுவையான செய்திகளை, மிக நேர்த்தியுடன் தயாரித்து வருகிறார்கள்.


    நாயன்மார்கள் வாழ்ந்த காலகட்டங்களுக்கே நம்மை கூட்டிச்செல்லும் இந்த வரலாற்று சிறப்புமிக்க தொடர், எல்லோராலும் போற்றப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பக்திக்கு இலக்கணமாக திகழ்ந்த நாயன்மார்கள் தமிழுக்கு ஆற்றியுள்ள தொண்டுகள் குறித்தும் சிறப்பாக தொகுக்கப்பட்டு வருகிறது. நாயன்மார்கள் வாழ்ந்த இடங்களுக்கே சென்று, படப்பிடிப்பு செய்யும் வேலையும் நடந்து வருகிறது.


    சுவாரஸ்யமான நாயன்மார்கள் பற்றிய காவியத்தை மிக விரைவில் தந்தி டி.வி ஒளிபரப்புவதில் பெருமைப்படுகிறது.


    தொடரில் சஞ்சய்– சுந்தரமூர்த்தி சுவாமிகளாகவும், லாவண்யா– பறவை நாச்சியாராகவும், ரஞ்சிதா– சங்கிலி நாச்சியாராகவும், சுபத்ரா எழுத்தாளர் சிவானியாகவும் வருகிறார்கள். ரவிசங்கர், சித்ரா, கிருஷ்ணா, மணிகண்டன், ஷியாம், சாஜன் ஆகியோர் ஏனைய நட்சத்திரங்கள்.


    உரையாடல்: கே.பி.அறிவானந்தம். இசை: ரவிராகவ். ஒளிப்பதிவு: பார்த்திபன். திரைக்கதை, இயக்கம்: ஜி.தனுஷ். தயாரிப்பு: திருமதி.குட்டிபத்மினி



    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  4. #1383
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சிரிக்க வைக்கும் மாதவன்!




    திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 10 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புதிய தொடரான ‘மடிப்பாக்கம் மாதவன்’ எடுத்த எடுப்பிலேயே நகைச்சுவைக்களத்தில் வேகம் பிடிக்கத் தொடங்கி விட்டது.


    டிடெக்டிவ் ஏஜென்சி வைத்திருக்கும் மாதவனுக்கு ஒரு அம்மா. ஒரு தங்கை. ஒரே ஒரு மனைவி. புத்திசாலித்தனமாக ஏதாவது பண்ணுகிறேன் என்று மாட்டிக்கொண்டு கடைசியில் சந்தர்ப்ப சூழ்நிலையால் தப்பித்து விடுவான், இந்த மாதவன்.


    மாதவனின் அம்மா பண்டரிபாய் லேடீஸ் கிளப் தலைவி. அவளாலே மற்றவர்களுக்கு தலைவலி. மாதவனின் மனைவி கவுசல்யா. மாமியாரை மட்டம் தட்டுவதே அவள் வேலை.


    மாதவன் தங்கை பிரியா யாரைப்பார்த்தாலும் காதலிப்பவள்.


    இவர்களுக்கு மத்தியில் மாதவனின் மாமனார் வாசுதேவன் பயங்கர பந்தா பார்ட்டி. யாரையாவது ஏமாற்றி பணம் சம்பாதிப் பதையே கொள்கையாக வைத்திருப்பவர். இப்படி ஏமாற்றி சம்பாதிப்பது அவரது குடும்பத்துக்காகவா? இல்லவே இல்லை, ஆசைநாயகி காஞ்சனாவுக்காக.


    அந்த காஞ்சனாவுக்கும் ஒரு தங்கை, ஒரு தம்பி. எப்படியாவது தங்கையை மாதவனுக்கு இரண்டாம் தாரமாகவும், தம்பியை பிரியாவுக்கும் திருமணம் செய்து வைக்கவேண்டும் என்று காய் நகர்த்துகிறாள், காஞ்சனா. இதற் காக திட்டமிட்டு மாதவன் வீட்டின் அருகிலேயே குடியிருக்கிறாள்.


    இவர்களுக்கு இடையில் மாதவன் படும் அவஸ்தைதான் கதையின் சுவாரஸ்ய முடிச்சு.


    நட்சத்திரங்கள்: ராம்ஜி, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ மதுமிதா, நளினி, இயக்குனர் பாரதி கண்ணன், சுமங்கலி, நாகலட்சுமி, சிவகுமார்.


    கதை, திரைக்கதை: எஸ்.வி.ரமணி; வசனம்: எம்.ரவிக்குமார்; ஒளிப்பதிவு: ஆர்.வெங்கடேஷ். இயக்கம்: எஸ்.மோகன்; தயாரிப்பு நிர்வாகம்: அனில் சுந்தர்; கிரியேட்டிவ் ஹெட்: ஈ.ராமதாஸ்.


    தயாரிப்பு: சினி ஸ்டார் மீடியா (பி) லிமிடெட்..

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  5. #1384
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    மீண்டும் அர்ச்சனா! சின்னத்திரை தொடரில் நடிக்கிறார்


    நடிகை அர்ச்சனா டைரக்டர் பாலுமகேந்திராவின் கண்டுபிடிப்பு. சிறந்த நடிப்புக்காக தேசிய அளவிலான ‘ஊர்வசி’ விருது பெற்றவர். சினிமாவில் நடிப்பதை நிறுத்தியவரை 6 வருடங்களுக்குப் பிறகு சின்னத்திரைக்கு அழைத்து வருகிறார், டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா.


    ‘புதுயுகம்’ தொலைக் காட்சியில் சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் வரும் திங்கட்கிழமை முதல் தொடங்கவிருக்கும் ‘உணர்வுகள்’ தொடரில் தான் நாயகியாக சின்னத்திரையில் அடியெடுத்து வைக்கிறார் அர்ச்சனா.


    ‘‘ஒவ்வொருவர் வாழ்விலும் அவர்கள் சிரித்த தருணங்கள், கண்ணீர் சிந்திய நிகழ்வுகள், இணைந்த உறவுகள், பிரிந்த உறவுகள், புதிய அர்த்தம் உணர்த்திய நிமிடங்கள் எல்லாம் கலந்ததே இந்த ‘உணர்வுகள்’ தொடர். இது வெள்ளித்திரையில் திரைப்படம் பார்த்த உணர்வை ஏற்படுத்தும்’’ என்கிறார் டைரக்டர் சுரேஷ்கிருஷ்ணா.


    இசை: தேவா. ஒளிப்பதிவு: சஞ்சய் பி.லோக்நாத். திரைக்கதை: எல்.சேக்கிழார். வசனம்: ஜான்மகேந்திரன்.


    திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது ‘உணர்வுகள்’ தொடர்.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  6. #1385
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சின்னத்திரையில் ஒரு ‘பாசமலர்’


    சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர், ‘பாசமலர்.’ அண்ணன்–தங்கை பாசத்தை மையப்படுத்திய இந்த தொடரில், சொந்த பந்தங்களுக்கிடையேயான பாசப்போராட்டமும் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது சிறப்பு.


    தங்கையின் மணவாழ்வு சிறப்புற அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கிறான், அண்ணன். மாப்பிள்ளை முடிவாகி திருமணம் உறுதியான நிலையில் அந்த சம்பந்தம் முறிந்து போகிறது. இதனால் அதிர்ச்சியாகும் அண்ணன் திருமண முயற்சி தடை பட்ட பின்னணியை விசாரிக்கப் போக, கிடைத்த தகவல் அவனை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. தங்கை திருமண விஷயத்தில் அண்ணன் அடுத்து என்ன முடிவெடுத்தான் என்பது தொடர்ந்து வரும் பரபரப்பு எபிசோடுகள்.


    அண்ணனாக ஸ்டாலின், தங்கையாக பிருத்திகா நடிக்கிறார்கள். மற்றும் லட்சுமி, கங்கா, சவுந்தர், அழகு, கே.நட்ராஜ் ஆகியோரும் முக்கிய கேரக்டர்களில் இருக்கிறார்கள். ‘மதுரை டூ தேனி’ படத்தில் நாயகனாக நடித்த குருஅரவிந்த் இந்த தொடரில் இன்னொரு நாயகன்.


    கதை, திரைக்கதை: அமல்ராஜ். வசனம்: தர்மலிங்கம். பாடல்: யுகபாரதி. இசை: ராஜ்குமார் ராஜமாணிக்கம். ஒளிப்பதிவு: கோபால். இயக்கம்: அழகர். தயாரிப்பு: ஹோம் மூவி மேக்கர்ஸ்.


    ‘‘இந்த தொடரில் வரும் ‘என்ன தவம் செய்தேனோ, தாய் நீ தானோ’ என்ற டைட்டில் பாடல் சின்னத்திரை நேயர்கள் வட்டாரத்தில் பிரபலமாகி விட்டது. சினிமாவில் சிவாஜி–சாவித்திரி அண்ணன்–தங்கையாக நடித்து இன்றளவும் பேசப்படும் பாசமலரைப் போல், சின்னத்திரையில் இந்தப் பாசமலரும் நேயர்கள் மனதில் வாசம் வீசும்’’ என்கிறார், தொடரின் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார்.


    இந்தப்பாடல்காட்சியை எடிட் செய்து கொடுத்தது பிரபல சினிமா எடிட்டர் ஆண்டனி என்பது குறிப்பிடத்தக்கது.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  7. #1386
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    வாணி ராணி -200




    சன் டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘வாணி ராணி’ தொடர் 200 எபிசோடை எட்டியிருக்கிறது. விறுவிறுப்பான சம்பவங்களுடன் வீறுநடை போடும் இத்தொடரில், இப்போது மேலும் பல திருப்பு முனைகள் தொடரை எதிர்பார்க்க வைக்கின்றன.


    ஊரே மெச்சும்படி ஒற்றுமையாக வாழ்ந்த வாணி–ராணியின் குடும்பம், பூமிநாதன் மற்றும் அங்கயற்கண்ணியின் சதியால் பிரிந்து விடுகிறது. தனியே பிரிந்து சென்ற சாமிநாதனின் குடும்பம் விதி என்ற சூறைக்காற்றில் சிக்கி சிதறிப்போகிறது. யாருக்கும் தீங்கு நினைக்காத ராணியின் நல்ல உள்ளத்தினால் பூமிநாதனின் சதித்திட்டம் எல்லோருக்கும் தெரிய வருகிறது. பிரிந்த சாமிநாதனின் குடும்பமும் ஒன்று சேருகிறது.


    குடும்பத்தை காப்பாற்ற தன் நிலையில் இருந்து கீழே இறங்கி வந்த சாமிநாதன் சுக்கு காபி வியாபாரத்தை ஆரம்பித்து நேர்மையாக சம்பாதிக்க முயல, கல்லூரியில் முதல் மாணவனாக வலம் வரும் அவரின் மகன் சரவணனோ தன் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு அடிதடி வழக்குகளில் இறங்கி, சட்டத்திற்கு புறம்பாக பணம் சம்பாதிக்க முயல்கிறான். இந்த உண்மை அவனின் குடும்பத்திற்கு தெரிய வருமா? அப்படி தெரிய வரும்போது ராணியின் குடும்பம் அதை எப்படி எதிர் கொள்ளப்போகிறது? ராணி எப்படி தாங்கப் போகிறாள்?


    தன் மாமனின் துணையோடு எப்படியும் ராஜேசை கைப்பற்ற நினைக்கும் செண்பகத்திற்கு காளி ஜெயிலில் அடைக்கப்பட்டான் என்ற செய்தி பேரிடியாக அமைகிறது. எப்படியும் உயிரைக் கொடுத்தாவது, ராஜேசை அடைந்தே தீருவது என்ற தீவிர போராட்டத்தில் இறங்குகிறாள். அதைப்போன்றே தன் கணவனை தன் கைப்பிடியில் வைத்திருக்க செல்வியும் போராடுகிறாள். இறுதியில் வெற்றியடைய போவது யார்?


    கேள்விகளுக்கான விடை கிடைப்பது அடுத்தடுத்த பரபரப்பான எபிசோடுகளில்..


    நட்சத்திரங்கள்: ராதிகா சரத்குமார், வேணு அரவிந்த், பப்லு, ரவிக்குமார், சாந்தி வில்லியம்ஸ், மனோ, அருண், விக்கி, மானஸ், நிகிலா, மகாலட்சுமி, ஸ்ரீதேவி, நேஹா. ஒளிப்பதிவு: மீனாட்சிபட்டி காசிநாதன், திரைக்கதை: எஸ்.குமரேசன், வசனம்: பா.ராகவன், இயக்கம்: ஓ.என்.ரத்னம். ஆக்கத் தலைமை: ஆர்.ராதிகா சரத்குமார். தயாரிப்பு ராடன் மீடியா ஒர்க்ஸ்.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  8. #1387
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    கருத்தம்மா -500


    ராஜ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.01 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘கருத்தம்மா’ தொடர், 500–வது எபிசோடை எட்டவிருக்கிறது.


    பாட்டி ராஜம்மாவின் பேத்திகளான தியா, ஜானவி (ராகவ்–சந்தியாவின் பிள்ளைகள்) தனித்தனியாக வெவ்வேறு இடங்களில் வளர்ந்து வந்தாலும், சகோதரிகள் என்று தெரியாமலேயே ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்கள்.


    இந்த நிலைமையில், தனது பேரன் ஆதித்யா, இந்திய வம்சாவளி பெண்ணை விரும்புவதை பாட்டி ராஜம்மாள் அறிகிறார். இது நமது கலாசாரத்திற்கு ஒத்துவராது என்று எச்சரிக்கிறார்.


    இதைகேட்க மறுக்கும் ஆதித்யா, தன் வெளிநாட்டு காதலியையே திருமணம் செய்ய முடிவு செய்கிறான். ஆனால் அந்த வெளிநாட்டுப் பெண்ணோ பார், ரெஸ்டாராண்ட் என்று உல்லாசமாக உலா வருகிறாள். இதை அறிந்த ராஜம்மாள், நமது குடும்பத்திற்கு மிகவும் அவமானச் செயல் என்று பேரன் ஆதித்யாவிடம் அறிவுறுத்துகிறார்.


    இதற்கிடையே, பேத்தி தியா மீதும் பாட்டியின் கவனம் திரும்புகிறது. கல்லூரியில் படிக்கும் தனது சகதோழி ஜானவியை (சகோதரி) சந்திக்கவோ, பேசவோ கூடாது என்கிறார், பாட்டி. மீறி சந்தித்தால் கல்லூரி படிப்பை நிறுத்திவிடுவதாக குடும்பத்தினர் அனைவரின் முன்பும் மிரட்டுகிறார்.


    இந்த நிலையில் கல்லூரியில் நடைபெற்ற போட்டி ஒன்றில் முதல் மாணவியாக தேர்வு செய்யப்பட்டு பதக்கம் பெறுகிறாள் தியா. இதனால் சந்தோஷமடைந்த குடும்பத்தினர் ஒட்டு மொத்தமாக தியாவை பாராட்ட, பாட்டி ராஜம்மாள் மட்டும் ‘இதெல்லாம் சாதனையா என்ன?’ என்கிற ரேஞ்சுக்கு ஏளனம் காட்டுகிறார்.


    பாட்டியின் இம்மாதிரியான அனுதின டார்ச்சரில் நொந்து போகும் தியாவுக்கு ஆறுதலாக அமைகிறது, இளைஞன் ஒருவனின் நட்பு. ரேடியோ நிகழ்ச்சித் தொகுப்பாளரான அவனுடன் தியாவின் நட்பு இறுகி ஒரு கட்டத்தில் காதலாக மாறுகிறது. காதல் தந்த தைரியத்தில் காதலனுடன் தைரியமாக ஊர் சுற்றுகிறாள் தியா.


    இந்தக்காதல் தியாவின் வீட்டுக்குத் தெரியவரும்போது அவளது கல்லூரிப் படிப்பு நிறுத்தப்படுமா? அல்லது காதலை குடும்பத்தினர் ஏற்றுக்கொள்வார்களா? ஆதித்யாவின் காதல் திருமணம் நடைபெறுமா? வரும் எபிசோடுகளில் விடை கிடைக்கும்.



    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  9. #1388
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சிங்காரம் தெரு


    விஜய் டி.வி.யில் நாளை முதல் ‘‘சிங்காரம் தெரு’’ என்ற புதிய நகைச்சுவை தொடர் ஆரம்பமாகிறது. ‘லொள்ளு சபா’ மூலம் பிரபலமான இயக்குனர் ராம்பாலா இயக்கும் இத்தொடர், ஞாயிறு தோறும் காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது.


    ஒரு காலனியில் வசிக்கும் வெவ்வேறு விதமான மனிதர்கள் செய்யும் சிறு தவறுகளுக்குக்கூட அவர்கள் அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்வது, அங்குள்ள காவலர்களிடம் மல்லுக்கட்டுவது தொடரில் நகைச்சுவையுடன் சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த காலனியில் வசிக்கும் ஐந்து குடும்பங்களில் உள்ளவர்கள் அடிக்கும் லூட்டிகளும் நகைச்சுவையுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  10. #1389
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சூரியபுத்திரி – 350




    கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும், ‘சூரிய புத்திரி’ தொடர், விறுவிறுப்பான திருப்பங்களில் 350–வது எபிசோடை எட்டியிருக்கிறது.


    அர்ஜீன், ஜோதியின் காதலை முறித்து பிரியாவிற்கே அர்ஜீனை சொந்தமாக்குவதாக வாக்கு கொடுத்த கிருஷ்ணா, தன் சதி திட்டத்தால் பிரியாவின் திருமணத்தை நிறுத்தி தான் ஒரு அதிகாரி என்பதை நிரூபித்து விட்டாள். தன்னை மிரட்டி கொண்டு இருந்த அஷ்வினை, குற்றவாளியாக மாற்றி செயல் இழக்க செய்துவிட்டாள்.


    கணவனை பிரிந்து வாழும், பாரதிக்கு தன் மகன் அர்ஜூனின் திருமணம் நின்றுபோனது, பெரும் அதிர்ச்சியையும், அவமானத்தையும் ஏற்படுத்தி விட்டது. பாரதியின் குடும்பத்தை அழிக்க வேண்டும் என்ற கிருஷ்ணாவின் ஆக்ரோஷத்தில் இருந்து யார் அவர்களை காப்பாற்றப் போகுகிறார்கள்? பாதிக்கப்பட்ட பிரியாவும் அஸ்வினும் கிருஷ்ணாவை பழி வாங்குவார்களா? கிருஷ்ணா என்னும் தீய சக்திக்கு எதிராக போராடப்போவது யார்? கேள்விக்கான விடைகள், அடுத்தடுத்த பரபரப்பு அத்தியாயங்களில் கிடைக்கும்.


    கதை: பாலா. வசனம்: தனுஷ். ஒளிப்பதிவு: பார்த்திபன், ரவிச்சந்திரன். இயக்கம்: தமிழ்பாரதி, ஆசைத்தம்பி. தயாரிப்பு நிர்வாகம்: ஸ்டார் லைட்ஸ் ஒர்க்ஸ். தயாரிப்பு: குட்டிபத்மினி.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  11. #1390
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சிந்து பைரவி


    ராஜ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘சிந்து பைரவி’ தொடர், 870 எபிசோடுகளைக் கடந்து விறுவிறுப்புமயமாய் தொடர்ந்து கொண்டிருக்கிறது.


    சிந்துவின் மகள் மகதியும், பைரவியின் மகள் முக்தாவும் ஒரே கல்லூரியில் படித்து வருகிறார்கள். இந்த நிலையில், அவினாஸ் தாக்கியதில் தனது பழைய நினைவுகளை இழந்த சிந்துவின் கணவர் வீர் நீண்ட நாள் மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்புகிறார். அப்போது, ‘‘உன் மனைவி சிந்து வேறொருவருடன் ஓடிவிட்டாள்’’ என்று கூறி அவருக்கு மற்றொரு பெண்ணை திருமணம் செய்து வைக்கிறார், அவரது தாயார்.


    குடும்ப விவகாரத்தால், தாய் சிந்துவின் பாசத்தை இழந்து குடி, கும்மாளம் என தவறான பாதையில் சென்று கொண்டிருக்கும் தனது மகன் யுவராஜை, வீர் கண்டிக்கிறார். ஆனால் அவருக்கு கடந்த கால நினைவுகள் சிந்தைக்கு எட்டாத நிலையில் அவற்றை தெரிந்து கொள்ள துடிக்கிறார்.


    இதற்கிடையே யுவராஜ், பைரவியின் மகள் முக்தாவை ஒருதலைப்பட்சமாக காதலிக்க... அவளோ தனது கல்லூரியின் மூத்த மாணவர் ஒருவரை விரும்புகிறார். இது தெரியாமல் அந்த மாணவரையே மகதியும் காதலிக்கிறார்.


    யுவராஜின் ஒருதலைக் காதல் வெற்றி பெறுமா? வீருக்கு பழைய நினைவுகள் திரும்பி தனது உயிர் காதல் மனைவி சிந்துவை மீட்பாரா? வரும் தொடர்களில் விடை கிடைக்கும்

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

Similar Threads

  1. Vijay tv going to start 2 new programs
    By anbupani in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 7th October 2009, 01:58 AM
  2. Programs that you enjoy watching on TV
    By Anoushka in forum TV,TV Serials and Radio
    Replies: 107
    Last Post: 15th July 2008, 04:41 AM
  3. IR in TV Serials
    By RR in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 4
    Last Post: 16th July 2007, 01:12 PM
  4. which channel do you think has the most creative programs?
    By mirattalji in forum TV,TV Serials and Radio
    Replies: 20
    Last Post: 18th November 2006, 01:45 AM
  5. Pongal Programs
    By suryas_shaivs in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 19th January 2006, 06:03 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •