View Poll Results: your rating for the following serials

Voters
1. You may not vote on this poll
  • Thirumathi Selavam

    0 0%
  • Thendral

    1 100.00%
  • Chellame

    0 0%
  • Thangam

    0 0%
Page 103 of 159 FirstFirst ... 35393101102103104105113153 ... LastLast
Results 1,021 to 1,030 of 1587

Thread: new serials/programs

  1. #1021
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    கார் பரிசாகப்பெறும் சகலகலா வல்லவன் யார்?

    கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் மாலை 4.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி, சகலகலாவல்லவன். பொதிந்து கிடக்கும் பல்வேறு மனிதத் திறமைகளை வெளிக்கொண்டு வருவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.

    தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து ஒன்றுக்கும் மேற்பட்ட திறமைசாலிகளை இரண்டு கட்ட தேர்வுகளின் மூலம் தேர்ந்தெடுத்து நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டுள்ளது. 18 முதல் 35 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இருவரும் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் குழுவினராகவும் போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர்.

    திரைப்படம், இசை, நடனம் போன்ற துறைகளில் முத்திரை பதித்த பிரபலங்களான திரைப்பட இயக்குனரும், நடிகருமான ரமேஷ்கண்ணா, பரதநாட்டியக் கலைஞரும், நடிகையுமான சுகன்யா, ஒளிப்பதிவாளர், திரைப்பட தயாரிப்பாளர், நடிகர் என பல முகங்களைக் கொண்ட இளவரசு, பாடகர் மாணிக்க விநாயகம் ஆகியோர் இந்த நிகழ்ச்சிக்கு நடுவர் பொறுப்பேற்றிருக்கின்றனர்.

    நிகழ்ச்சியின் ஆரம்ப கட்டத்தில் போட்டியாளர்களின் திறமைகளை கருத்தில் கொண்டு அடுத்தடுத்த சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். கால் இறுதி, அரை இறுதிச் சுற்றினைக் கடந்து இறுதிச்சுற்றில் வெற்றி பெறும் வெற்றியாளருக்கு தமிழகத்தின் சகலகலாவல்லவன் பட்டமும், முதல் பரிசாக `ஸென் எஸ்டிலோ' கார் ஒன்றும் வழங்கப்படுகிறது.

    இது ஒன்றுக்கும் மேற்பட்ட திறமைகள் கொண்ட போட்டியாளர்களுக்கு ஒரு களம். பல திறமைகள் கொண்ட ஒருவருக்கு சவால். மாருதி ஸென் எஸ்டிலோவும், கலைஞர் தொலைக்காட்சியும் இணைந்து இந்த நிகழ்ச்சியை வழங்குகின்றது.தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றிலேயே புதுமையான, பற்பல நபர்களிடையே ஒளிந்திருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட பல திறமைகளை வெளி உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பு: கிராவிட்டி என்டர்டெயின்மென்ட்.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1022
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    ரஜினி எக்ஸ்பிரஸ்

    நடிகர் ரஜினியின் 61-வது பிறந்த நாளையொட்டி விஜய் டி.வி. `ரஜினி ரசிகன் எக்ஸ்பிரஸ் வாகனம்' ஒன்றை ஏற்பாடு செய்தது. அந்த வாகனம் தமிழகம் முழுவதும் சுற்றிவந்தது. இந்த வாகனத்தை படஅதிபர் ஏவி.எம்.சரவணன், இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.


    நாளை ஞாயிறு முழுவதும் ரஜினி தொடர்பான சிறப்பு நிகழ்ச்சிகள் இடம் பெறுகிறது. பிரபல நட்சத்திரங்கள், இயக்குனர்கள், ரஜினி ரசிகர்கள், நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் இதில் பங்கு கொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சிகளுடன் `ரஜினி ரசிகன் எக்ஸ்பிரஸ் வாகனம்' சுற்றி வந்த இடங்களில் பெற்ற வரவேற்புகளும் ஒளிபரப்பாகும்.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  4. #1023
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    வந்தாளே மகராசி-300

    ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் "வந்தாளே மகராசி'' தொடர் 300 எபிசோடுகளை கடந்து தொடர்கிறது. பெண்ணின் பெருமைகளைச் சொல்லும் தொடர் என்பதால் தொலைக்காட்சி நேயர்களிடம் வரவேற்பு பெற்ற தொடர் இது. குறிப்பாக இந்த தொடருக்கு பெண் ரசிகைகள் அதிகம்.

    எந்தவொரு குடும்பத்திலும் பெண் குழந்தை பிறந்தால் குடும்பத்தில் உள்ளவர்கள் அழைக்கிற வார்த்தை தான் தொடரின் தலைப்பு. பெண் மணமாகி புகுந்த வீட்டிற்கு செல்லும்போதும் இதை வார்த்தையைத்தான் சொல்வார்கள். இந்த வார்த்தையையே தலைப்பாக்கி வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

    சொர்ணமால்யா, ஐஸ்வர்யா, ஸ்ரீ, இளவரசன், லதாராவ், சுக்ரன், ஸ்ரீலதா, அமரசிகாமணி, ஷண்முகசுந்தரம், புவனா, சுதா, சுமங்கலி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

    இசை: ராஜ்பாஸ்கர். இயக்கம்: செந்தில்குமார். இவர் சுந்தர் சி.யின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

    விஜய் நடித்த `புதிய கீதை' மற்றும் பள்ளிக்கூடம், சாணக்யா, குப்பி, பகைவன் போன்ற படங்களைத் தயாரித்த விஸ்வாஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் வி.சுந்தர் தயாரிக்கிறார்.

    நன்றி: தினதந்தி

    -------
    "அன்பே சிவம்.

  5. #1024
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    உறவுக்கு கைகொடுப்போம்-500



    கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஏவி.எம்.மின் `உறவுக்கு கைகொடுப்போம்' தொடர் 500 எபிசோடை நிறைவு செய்திருக்கிறது. தொடர்ந்து குடும்ப உணர்வுகளின் சங்கமமாக தொடரும் இந்த தொடருக்கு குறிப்பாக பெண் ரசிகைகள் அதிகம்.

    அண்ணன்-தம்பிகளின் ஒற்றுமை பற்றியும், வீட்டுக்கு வந்த மருமகள்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வது பற்றியும் சொல்லும் குடும்பக்கதை பின்னணி என்பதால், தொடர் நேயர்களின் ஏகோபித்த வரவேற்புக்குரியதாகி இருக்கிறது. விளைவு, கலைஞர் டிவியின் தொடர்கள் வரிசையில் டி.ஆர்.பி.ரேட்டிங்கிலும் முதல் தொடர் என்ற நிலையை தொடர்ந்து தக்க வைத்திருக்கிறது.

    அண்ணன், தம்பி, தங்கை என்று சின்னக்குடும்பம். அந்தக் குடும்பத்தின் தாயான தெய்வநாயகி இறந்து மீண்டும் பெரியண்ணாவுக்கு குழந்தையாக பிறக்கிறாள். அந்தக் குழந்தை போன ஜென்ம நினைவுகளுடன் தன் பிள்ளைகளுக்கு தாயாக, மருமகள் களுக்கு மாமியாராக குடும்பத்தை சிறப்பாக நடத்திச் செல்கிறாள். இந்த கேரக்டரில் குழந்தை தெய்வநாயகியாக 21/2 வயது சின்னஞ்சிறுமி யுவினா நடித்திருக்கிறாள். பெரிய மனுஷி தோரணையில் மாமியார் தெய்வநாயகியாக நடிக்கும் அவள் சிறுவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை ஒட்டுமொத்தமாக தன் நடிப்பால் கவர்ந்திருக்கிறாள்.

    இந்த குடும்பத்தின் கடைசி மருமகள் மதுவிற்கு குழந்தை என்றால் கொள்ளைப் பிரியம். அவள் 8 மாத கர்ப்பிணியாக இருக்கும்போது பிறக்கும் குழந்தையின் எதிர்காலம் பற்றி அறிய ஜாதகம் பார்க்க செல்கிறார்கள். ஜோதிடரோ, `ஆண் குழந்தை பிறந்தால் தாய் உயிரோடு இருக்கமாட்டாள் என்றும், பெண் குழந்தை பிறந்தால் தாய்க்கு ஆபத்து இல்லை' என்றும் சொல்ல, குடும்பமே ஆடிப்போகிறது. மதுவிற்கு என்ன குழந்தை பிறக்கப்போகிறது?

    தெய்வநாயகியின் தம்பி நந்தகுமார்-கிருஷ்ணா குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த பத்மா யார் என்ற சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்து விட்டது. இனியாவின் தாய் தான் பத்மா என்பது தெரிந்து விட்டது. இதற்குப்பிறகு கிருஷ்ணா எதிர்பார்த்ததுபோல் இனியா, கிருஷ்ணாவை வெறுத்தாளா? அல்லது பத்மா-கிருஷ்ணாவின் தியாகத்தை உணர்ந்தாளா? பத்மா வந்ததால் கிருஷ்ணாவின் நிலை என்ன?

    கேள்விகளுக்கு பதில், வரப்போகும் பரபரப்பான எபிசோடுகளில்.

    தொடரின் இன்னொரு சிறப்பு அம்சம், வியாழன் தோறும் பாபாவின் தரிசனம். அதுவும் கதையில் வரும் கதாபாத்திரங்களுக்கு அவர் ஆலோசனை சொல்லும் விதத்தில் காட்சிகள் அமைந்திருப்பது சிறப்பு.

    நட்சத்திரங்கள்: பூவிலங்குமோகன், விஜய்ஆனந்த், புஷ்பலதா, காயத்ரிபிரியா, யுவினா பார்த்தவி, சுரேஷ்வர், தினகர், சீதா, காஞ்சி வினிதா, பூரணி, சுபாஷினி, கிருஷ்ணமூர்த்தி.

    கதை, திரைக்கதை வசனம்: சேக்கிழார். இயக்கம்: கே.ஏ.புவனேஷ்.

    தயாரிப்பு: எம்.சரவணன், எம்.எஸ்.குகன்.



    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  6. #1025
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சின்ன மருமகள்



    திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர், `சின்ன மருமகள்.'

    தேவுடன் திருமணம் என்பதை ஒரு கனவாகவே நினைத்துக் கொண்டிருந்த ராதிகாவிற்கு நேரம் கை கூடி வர, திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. சடங்குகள் பல நடந்து கொண்டிருக்க, அதே நேரம் சினிமா ஆசையில் மும்பை சென்றிருந்த விசாகா வீடு திரும்புகிறாள். விசாகாவின் வருகை ராதிகாவின் குடும்பத்தில் அச்சத்தை ஏற்படுத்துகிறது. இருப்பினும் தன் பேத்தியின் வருகை பாட்டிக்கு மட்டும் இனிக்கிறது.

    ராதிகாவிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது முதலே, இதை சற்றும் விரும்பாத விசாகாவின் பாட்டி ராதிகாவுடனான தேவின் திருமணத்தை நிறுத்த பல வழிகளை கையாள்கிறார். அதன் ஒரு பகுதியாக தேவ் வீட்டிலிருந்து ராதிகாவிற்கு கொடுத்து அனுப்பப்பட்ட கொலுசை விசாகாவிற்கு அளித்து அணியச் செய்கிறார். இதைக் காணும் ராதிகாவின் அம்மா, தேவகி பாட்டியுடன் ராதிகாவிற்கு ஆதரவாக வாதிடுகிறார். தேவகியின் பேச்சை ஒரு பொருட்டாகவே மதிக்காத பாட்டி, விசாகாவை தேவுடன் இணைக்கப் போகும் தன் திட்டத்தை தேவகியிடம் கூற, தேவகியோ `இதற்கு ஒரு போதும் சம்மதிக்க மாட்டேன்' என்று கர்ஜிக்கிறாள்.

    இதற்கிடையில் மாப்பிள்ளையை அழைக்கச் சென்றிருந்த ராதிகாவின் அப்பா, தேவ் தன் சொத்துக்களை ராதிகாவின் பெயருக்கு மாற்றி எழுதியதை அறிந்து கொதித்துப் போகிறார். அதே சமயம் கொலுசு அனுப்பப்பட்டது தனக்கு தான் என்று ராதிகா தேவகி மூலம் அறிந்து அதிர்ந்து போகிறாள்.

    ராதிகா-தேவ் திருமண கனவு பலித்ததா? அல்லது பாட்டியின் சதித்திட்டம் வென்றதா? தொடர்கிறது, தொடர்.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  7. #1026
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    பாமர மக்களிடம் இருந்து தெய்வீக ராகங்கள்



    ஸ்ரீசங்கரா தொலைக்காட்சி இளைய தலைமுறைக் கலைஞர்களுக்கான இசையாற்றல் மற்றும் தெய்வீக உணர்வை வளர்க்கும் விதத்தில் `பஜன் சாம்ராட்' என்ற இசைப்போட்டி நிகழ்ச்சியை வழங்கி வருகிறது. தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த இசை நிகழ்ச்சியில் நடுவர்களாக இருப்பவர்கள் பிரபல கர்நாடக இசைப்பாடகி சவுமியா, நாட்டுப்புற இசைப்பாடகி குசுமா.

    சவுமியாவிடம், "திரை இசைப்பாடல்களுக்கு நடுவராக சேனலில் வந்தீர்கள். சாஸ்திரிய சங்கீதத்துக்கும் நடுவராக இருந்திருக்கிறீர்கள். இந்நிகழ்ச்சி முழுக்க பஜனைப் பாடல்கள் பாடும் போட்டி. இதில் உங்கள் நடுவர் பணியை எப்படி உணருகிறீர்கள்?'' கேட்டோம்.

    "திரைப்பட பாடல்கள், கர்நாடக சங்கீத பாடல்கள், பஜனைப்பாடல்கள் சாஸ்திரிய சங்கீத பாடல்கள் என ஒவ்வொன்றும் ஒருவிதம். இதில் பஜனைப்பாடல்கள் இறைவனை நினைத்து உருகிப்பாடுவது. இந்தப் பாடல்கள் மூலம் இறைவனை உணரலாம். இந்த நிகழ்ச்சியின் நோக்கம், சங்கீத வாசனையே இல்லாதவர்களும் கேள்வி ஞானத்தில் தங்கள் பாடும்ஆற்றலை நிரூபிப்பது தான். சங்கீத வாசனையே இல்லாத கன்னட தோட்ட தொழிலாளர்கள் கூட பஜனைப்பாடல்களை உள்ளம் உருக பாடியதை பார்த்து நெகிழ்ந்து போனேன்.

    குறிப்பாக ஒரு இஸ்லாமிய பெண்ணும், ஒரு கிறிஸ்தவப்பெண்ணும் உள்ளம் உருக பஜனை பாடியபோது எனக்கு மதம் தெரியவில்லை மனிதம் தான் தெரிந்தது. இசையின்பால் அவர்கள் கொண்டிருந்த ஈடுபாடு தான் தெரிந்தது.''

    நிகழ்ச்சியின் இன்னொரு நடுவரான குசுமா 500-க்கும் மேல் பஜனைப் பாடல்கள் பாடியவர். இவரது பாடல்கள் இசைத்தட்டாகவும் வந்துள்ளது. அவர் கூறும்போது, "தெய்வீக ராகங்கள் பாமர மக்களிடம் இருந்தும் இத்தனை அற்புதமாக வெளிப்படுவதை ஒரு நடுவராக உணர்ந்த நேரத்தில் என் பிரமிப்பு பல மடங்காயிற்று. கற்றுக்கொள்ளும் ஆர்வம் மட்டுமே அவர்களை தேர்ந்த பாடகர்களாக செதுக்கியிருக்கிறது'' என்கிறார்.

    இந்த பஜனைப்பாடல் போட்டியில் பாடகர்கள் குழுவாக கலந்து கொள்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்படும் குழுவுக்கு பரிசு 10 லட்சம் ரூபாய்.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  8. #1027
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    பக்தி திருவிழா



    விஜய் டிவியில் வருகிற 20-ந்தேதி வரை நடைபெறு கிறது, பக்தி திருவிழா. திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் இந்த திருவிழாவில் பிரபல சொற்பொழிவாளர்களின் ஆன்மிக உரை மற்றும் நாமசங்கீர்த்தனங்கள் இடம் பெறுகின்றன.

    இதற்கான விழாவை ஸ்ரீமத் ஸ்ரீரங்க ஸ்ரீநாராயண ஜீயர் சுவாமிகள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். முதல் நாள் நிகழ்ச்சியின் தொடக்கமாக உடையலூர் கல்யாணராமனின் நாம சங்கீர்த்தனமும், ஸ்ரீரங்கம் உ.வே.ஸ்ரீ ஹரியின் உபன்யமும் இடம் பெற்றன.

    இன்று மாலை 5 மணிக்கு செல்வி சுமித்ராவின் ஹரி கதாவும், 6 மணிக்கு பேராசிரியை இளம்பிறை மணிமாறனின் உபன்யாசமும், இரவு 7 மணிக்கு டாக்டர் கணேஷின் நாமசங்கீர்த்தனமும் இடம் பெறுகிறது. இரவு 7.40 மணிக்கு உ.வே.துஷ்யந்த் ஸ்ரீதரின் உபன்யாசம்.

    நாளை மாலை 5 மணிக்கு டி.எஸ்.பிரேமாவின் உபன்யாசம்; 6 மணிக்கு பேராசிரியை விஜயசுந்தரியின் உபன்யாசம். இரவு 7 மணிக்கு சதானாதபாகவதரின் நாமசங்கீர்த்தனம். 7.40 மணிக்கு நாவேந்தர் மதிவண்ணனின் உபன்யாசம்.

    செவ்வாய் மாலை 5 மணிக்கு செல்வி சிந்துஜாவின் ஹரிகதா இடம் பெறுகிறது. 6 மணிக்கு கடையநல்லூர் துக்காராம் கணபதி மஹாராஜின் `பாண்டுரங்கனின் மகிமை' ஹரி கீர்த்தனை இடம் பெறுகிறது. இரவு 7 மணிக்கு ராகவேந்திர பஜனைமண்டலி வழங்கும் ஹரி கீர்த்தனையும், 7.40 மணிக்கு நீலமங்கலம் அலமேலு, வி.சுப்புராமன் ஆகியோரின் உபன்யாசமும் நடைபெறுகிறது. அத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகிறது.

    ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த பக்தி திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.


    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  9. #1028
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சரித்திரம் பேசும் காதம்பரி



    200 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை கதைக்களமாக கொண்டு, பழங்கால தமிழர்களின் வாழ்க்கை முறையை விளக்க வரும் புதிய டி.வி. தொடர் காதம்பரி. விறு விறுப்பான திரைக்கதையோடும், முன்னணி நட்சத்திரங்களோடும் வேகமாக வளர்ந்து வரும் இந்த தொடர், ஜெயா டி.வி.யில் ஜனவரியில் இருந்து ஒளிபரப்பாக உள்ளது.

    நடிகை மிதுனா, இந்த தொடருக்காக முதன்முதலாக சின்னத்திரையில் தோன்றுகிறார். சுதாசந்திரன் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதை, திரைக்கதை, இயக்கம் எஸ்.பி. வசனம் கிருஷ்ணசாமி. ஒளிப்பதிவு வி.ராக்கு. இசை ராஜேஷ் ராமலிங்கம்.

    சாப்ரன் கிரியேஷன்ஸ் இந்த தொடரை தயாரித்து வழங்குகிறது.



    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  10. #1029
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    பாட்டு ராணிக்கு பாட்டுத்திருவிழா



    பிரபல பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரிக்கு சமீபத்தில் பாராட்டு விழா நடந்தது. `பாட்டு ராணிக்கு பாட்டுத்திருவிழா' என்ற தலைப்பில் சென்னை காமராஜர் அரங்கில் நடந்த இந்த விழாவில் எல்.ஆர். ஈஸ்வரி பாடிய காலத்தால் அழியாத பாடல்களை சாதகப்பறவைகள் இசைக்குழுவினர் பாடினார்கள். நிகழ்ச்சியின் நாயகி எல்.ஆர்.ஈஸ்வரியும் பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். எல்.ஆர்.ஈஸ்வரிபாடி பிரபலமான பாடல்களான `பட்டத்துராணி பார்க்கும் பார்வை, அம்மம்மா கேளொரு சேதி, முத்துக் குளிக்க வாரீகளா, பளிங்கினால் ஒரு மாளிகை' போன்ற பாடல்களை தங்கள் குரலில் பாடகிகள்பாடியபோது நெகிழ்ந்துஅவர்களை பாராட்டவும் செய்தார். நிகழ்ச்சியில் `எலந்தப்பய(ழ)ம்' பாடலை அவரே பாடி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

    விழாவில் கவிஞர் வாலி, நடிகர்கள் சிவகுமார், விவேக் ஆகியோர் எல்.ஆர்.ஈஸ்வரியின் இசை சாதனைகளை பட்டியலிட்டார்கள்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை வசந்த் டிவியுடன் இணைந்து `சாதகப்பறவைகள்' சங்கர் செய்திருந்தார்.

    இந்த விழாக்கொண்டாட்டம் வசந்த் டிவியில் நாளை காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது.




    நன்றி: தினதந்தி
    Last edited by aanaa; 25th December 2011 at 07:24 AM.
    "அன்பே சிவம்.

  11. #1030
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    அழகிய தமிழ் மகள்



    கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் `அழகிய தமிழ் மகள்' நிகழ்ச்சி, 175-வது எபிசோடுகள் ஒளிபரப்பானதை கொண்டாடும் விதமாக சமீபத்தில் சிறப்பு நிகழ்ச்சியும், படப்பிடிப்பும் நடைபெற்றது. கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய அணு விஞ்ஞானி சேத்தல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அங்கு பணிபுரியும் வடமாநிலத்தைச் சேர்ந்த பெண்மணி, தமிழ் மொழி மீது கொண்ட காதலால், இந்தியில் தமிழ்க் கவிதை எழுதி வாசித்து அனைவரது பாராட்டையும் பெற்றார்.

    தனித்திறமை உள்ள மகளிரை செல்வி. திருச்சி அன்னலட்சுமி மற்றும் தேர்வுக்குழுவினர் தேர்வு செய்கிறார்கள். ஸ்ரீவெங்கடேசுவரா டெலிபிலிம்ஸ் சார்பாக கே.பி.முத்துக் குமார் மற்றும் யமஹா பிரகாஷ் நிகழ்ச்சியினை தயாரிக்க, நடிகை ரோகிணி தொகுத்து வழங்குகிறார். ஞாயிறு தோறும் காலை 8 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது, இந்த நிகழ்ச்சி.


    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

Similar Threads

  1. Vijay tv going to start 2 new programs
    By anbupani in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 7th October 2009, 01:58 AM
  2. Programs that you enjoy watching on TV
    By Anoushka in forum TV,TV Serials and Radio
    Replies: 107
    Last Post: 15th July 2008, 04:41 AM
  3. IR in TV Serials
    By RR in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 4
    Last Post: 16th July 2007, 01:12 PM
  4. which channel do you think has the most creative programs?
    By mirattalji in forum TV,TV Serials and Radio
    Replies: 20
    Last Post: 18th November 2006, 01:45 AM
  5. Pongal Programs
    By suryas_shaivs in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 19th January 2006, 06:03 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •