View Poll Results: your rating for the following serials

Voters
1. You may not vote on this poll
  • Thirumathi Selavam

    0 0%
  • Thendral

    1 100.00%
  • Chellame

    0 0%
  • Thangam

    0 0%
Page 100 of 159 FirstFirst ... 50909899100101102110150 ... LastLast
Results 991 to 1,000 of 1587

Thread: new serials/programs

  1. #991
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    ஜான்சிராணி



    திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சரித்திரத்தொடர், ஜான்சிராணி.

    தொடரில் வரும் வாரங்களில் இடம் பெறும் காட்சிகள் வருமாறு.

    நெல்சன், லட்சுமிபாயை தூக்கிலிட உத்தரவிடுகின்றான். இதை அறியும் தாத்தை தோப்பே லட்சுமிபாயை போன்ற தோற்றத்திலிருக்கும் ஜல்காரியை சிறையில் வைத்து லட்சுமிபாயைக் காப்பாற்றுகிறார். மறுநாள் நெல்சன் லட்சுமிபாயை தூக்கிலிட தயாராக, தக்க சமயத்தில், நானா சாஹேப் தனது சந்தேகத்தை எழுப்பி ஜல்காரியை நெல்சனிடமிருந்து காப்பாற்றுகிறார். அங்கு தன் படைகளுடன் வரும் லட்சுமிபாய் நெல்சனை பிடித்துச் செல்கிறார்.

    லட்சுமிபாய் நானா சாஹேப்பின் எண்ணங்களைப் புரிந்து கொண்டு அவரை பாராட்டுகின்றார். அனைவரும் நெல்சனை கொல்ல துடிக்கையில் நெல்சன் தன்னை நோக்கி யானை ஒன்று வருவதைக் கண்டு அலறுகிறான். அதன்பிறகு நடந்தது என்ன? நெல்சன் வதம் நடந்ததா?


    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #992
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    ரஜினியின் `பஞ்ச்' தந்திரம்


    ராஜ் டிவிக்கென தயாராகி வரும் புத்தம் புதிய நிகழ்ச்சி வரிசையில் ``ரஜினியின் பஞ்ச் தந்திரம்'' என்ற நிகழ்ச்சியும் இப்போது உருவாகி வருகிறது. தனது ஸ்டைல் மூலமாகவும் தனித்துவ வசனங்கள் மூலமும் ரசிகர்களை வசீகரித்து வருபவர், நடிகர் ரஜினிகாந்த். அவர் பேசும்போது சாதாரண வசனங்கள்கூட `பஞ்ச்' டயலாக்காகி விடுகிறது.


    `என் வழி தனி வழி; ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி; பேரைக் கேட்டாலே சும்மா அதிருதுல்லே?' இம்மாதிரி பஞ்ச் டயலாக்குகள் நிர்வாகவியல் துறையினர் வளர்ச்சிக்கே ஒரு மந்திரமாக விளங்குகிறது.

    ரஜினியின் பஞ்ச் தந்திரம் என்ற நூலை மையமாக வைத்து இந்நிகழ்ச்சி வெளிவருகிறது. ரஜினியின் மிகச்சிறந்த 30 பஞ்ச் டயலாக்குகளை தொகுத்து அவற்றின் அர்த்தங்களை, நிர்வாகவியல் மந்திரங்களாகவும் யுக்திகளாகவும் விவரித்துள்ளனர் நூலாசிரியர்கள் பி.சி.பாலசுப்பிரமணியும் ராஜாகிருஷ்ண மூர்த்தியும். இவர்களில் ராஜா கிருஷ்ணமூர்த்தி நடிகர் கிட்டி என்ற பெயரில் ரசிகர்களிடம் ஏற்கனவே அறிமுகமானவர்.

    நிகழ்ச்சிக்கான முதற்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையில் உள்ள பொறியியல் கல்லூரியில் நடந்து முடிந்தது. இதில் நூற்றுக்கணக்கான நிர்வாகவியல் மாணவர்கள் கலந்து கொண்டு தங்களின் வாழ்வில் ரஜினியின் பஞ்ச் டயலாக்குகள் ஏற்படுத்திய விளைவுகளை நூலாசிரியர்களிடம் விவாதித்தனர். நிகழ்ச்சியில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமாரும் கலந்து கொண்டார்.

    ராஜ் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் நிகழ்ச்சி இது.







    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  4. #993
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    ஊர் சுற்றலாம்!



    பாலிமர் டி.வி.யில் ஞாயிறுதோறும் பகல் 12.30 மணிக்கு `ஊர் சுற்றலாம்' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. நடிகர் ஆன்டனிராஜ் வழங்கும் இந்நிகழ்ச்சியில், தமிழகத்தின் முக்கிய இடங்கள் மற்றும் சுற்றுலா தலங்களை பார்த்து மகிழ முடியும்.

    இந்த வாரம் கோவை வெள்ளியங்கரி அடிவாரத்தில் அமைதியான சூழலில் அமைந்திருக்கும் ஈஷா யோகா மையம் இடம் பெறுகிறது. அதோடு கோவையின் நீர் ஆதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வரும் `சிறுதுளி' அமைப்பின் நிறுவனர் வனிதா மோகனின் கோவையைப் பற்றிய பார்வை மற்றும் ரேஸ்கோர்ஸ், அங்கு அமைந்திருக்கும் சாரதாம்பாள் கோவில் ஆகியவற்றை பார்த்து ரசிக்கலாம்.

    இந்த நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பு ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 5.30 மணிக்கு பாலிமர் டி.வி.யில் இடம் பெறுகிறது.


    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  5. #994
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    பூஜைக்கொண்டாட்டம்


    `அனுபல்லவி' தொடரை கிளைமாக்ஸ் டிராக்கில் ஓடவிட்டிருக்கும் அபிநயா கிரியேஷன்ஸ், இப்போது தங்கள் அடுத்த தொடருக்கும் தயாராகி விட்டார்கள். `அனுபல்லவி' தொடரை எழுதிய தயாரிப்பாளர் ஜே.கே.யே இந்த தொடரின் கதையையும் எழுதியிருக்கிறார். தொடருக்கு `வெள்ளைத்தாமரை' என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

    புதிய தொடருக்கான பூஜையை தனது இல்லத்திலேயே பிரமாண்டமாய் நடத்தினார், ஜே.கே. அப்போது தனது அலுவலக உழைப்பாளர்கள் அத்தனை பேருக்கும் டைரக்டர் விசு கையால் தீபாவளி போனஸ் கொடுக்க வைத்தார்.

    இதற்காக சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த விசு பேசும்போது, "நான் ஜெயா டிவிக்கு சின்னச்சின்ன ராகம், மக்கள்அரங்கம் என வாரம் 2 எபிசோடு டேப் கொடுக்கவே நேரத்தை துரத்திக் கொண்டிருப்பேன். ஆனால் தினமும் அரைமணி நேரம் சீரியல் அதற்கான உழைப்பு என்பது என்னை பிரமிக்க வைக்கிறது. இதுவரை 30 மேடை நாடகம் எழுதி இயக்கி இருக்கிறேன். அந்த நாடகங்கள் மூவாயிரம் மேடை கண்டிருக்கிறது. ஆனாலும் பி.ஆர்.கோவிந்தராஜ் மூலமாக டைரக்டர் கே.பாலச்சந்தரை சந்தித்த பிறகே சினிமா வெளிச்சம் கிடைத்தது'' என்றார்.

    அபிநயாவின் ஆஸ்தான நடிகர் அபிஷேக் பேசுகையில், "விசு சாரின் `குடும்பம் ஒரு கதம்பம்' படத்தை நான் மும்பையில் 36 தடவை பார்த்து ரசித்திருக்கிறேன். நான் அவரது ரசிகன்'' என்றார். இதைக் கேட்டதும் விசு முகத்தில் சற்றே வெட்கம் கலந்த பூரிப்பு.

    தொடர்ந்து இயக்குனரும் நடிகருமான கோவை அனுராதா, இசையமைப்பாளர் சத்யா ஆகியோரும் பேசினார்கள். முன்னதாக ஜே.கே.யின் வாரிசுகள் விஜய், சஞ்சய் இருவரிடமும் வெள்ளைத்தாமரை தொடருக்கான ஸ்கிரிப்டை டைரக்டர் விசு வழங்கினார்.


    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  6. #995
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    பாரிஜாதம் - விஜய் தொலைக் காட்சி


    பாரிஜாதம்



    விஜய் டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரைதினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய தொடர் `பாரிஜாதம்.'

    இரட்டை சகோதரிகளான ஆர்த்தி, அருந்ததி இருவரும் நேர்மாறான குணம் படைத்தவர்கள். ஆர்த்தி மென்மையான குணம் படைத்தவள். அருந்ததி அவளுக்கு எதிர்மாறானவள். இவர்கள் தோற்றத்தில் ஒன்று போல இருக்க, அதனால் ஏற்படும் காதல் குழப்பங்கள்... அதனை ஆர்த்தி எப்படி சரி செய்கிறாள்! அருந்ததி எப்படி குழப்பங்களை ஏற்படுத்துகிறாள்? என்பது கதை.

    நடிப்பு: ரஸானா, விஜய் கிருஷ்ணராஜ், அர்ச்சனா, ரோஹன் கவுடா, நந்தா, லட்சுமிதேவி, ரகு, வருண், ராஜசேகர், ரம்யா மற்றும் ப்ரியா.

    கதை: சான்றாஸ். திரைக்கதை: ஸ்ரீபாரதி. வசனம்: ஸ்ரீனிவாசன். இயக்கம்: சுகிமூர்த்தி.

    மகாராணி தொடரை தயாரித்த அதே குழுதான் இந்த பாரிஜாதம் தொடரையும் தயாரிக்கிறது.


    நன்றி: தினதந்தி



    Last edited by aanaa; 5th November 2011 at 07:46 PM.
    "அன்பே சிவம்.

  7. #996
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    Vanitha Vijayakumar turns anchor with Sakthi Kodu

    Posted in Cinenews, video on October 31, 2011 / 0 Comments

    Vanitha Vijayakumar to host Sakthi Kodu Polimer TV

    Vanitha Vijayakumar, daughter of Veteran actor Vijayakumar had been in the news for the past few months due to the public spat between her parents and her continual struggle to take custody of her son Srihari(born to her first husband Akash). She was busy giving statements about the way her parents treated her and second husband Ananda Rajan, and things even took a violent turn between the families. She later had a showdown with first husband Akash in court and even embarrassed him publicly. All of a sudden, she took a complete U-turn and re-united with Akash citing the interest of the future of her son.


    Vanitha dumps her second husband

    Now the flamboyant lady is hosting a reality show ‘Sakthi Kodu’ on Polimer TV, which has stepped into third year. She discusses various issues with the guest on the programme.

    The guests of the show are real life victims or survivors, eminent personalities and celebrities who will share their personal experiences and how they handled their bad times. Throwing light on her show, Vanitha says, “The aim of the show is to bring the dark to the light; the shy and timid to open up and help educate the viewers gain knowledge. It wants to help society become more open minded.”

    The show will also have a live call-in option where viewers can ask questions and share their views.

  8. #997
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    நடிகை தேவயானி நடிக்கும் `முத்தாரம்'



    நடிகை தேவயானி நடிக்கும் புதிய தொடர் முத்தாரம். `மெட்டிஒலி' சித்திக் தயாரிக்கிறார். படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வரும் இந்த தொடர், விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பாகிறது.

    தொடரில் ரஞ்சனி என்ற புதுமைப்பெண் கேரக்டரில் தேவயானி நடிக்கிறார்.

    ரஞ்சனி. பட்டதாரி. வேலை பார்க்கும் பெண். அழகான, அமைதியான, அன்பான குணம் கொண்டவள். பாசத்துக்காக பழியை சுமப்பவள். அன்புக்காக அக்னிப்பிரவேசம் செய்யவும் தயங்க மாட்டாள்!

    உங்கள் ஊரில் உங்கள் தெருவில், ஏன் உங்கள் வீட்டிலேயே இந்த ரஞ்சனி இருக்கிறாள்.குடும்ப உறவுகளுக்காக உயிரையும் தருவாள். குடும்பம் மட்டுமல்ல, வேலை பார்க்கும் இடத்தில் ரஞ்சனி மிகப் பெரிய போராட்டங்களை சந்திக்கப் போகிறாள். கடுமையான அவமானங்களை எதிர்கொள்ளப் போகிறாள்! அவளை நேசித்தவர்கள் கூட, அவளை விட்டு விலகும் துர்பாக்கிய நிலைக்கு ஆளாகப் போகிறாள்!

    இப்படியும் ஒரு பெண்ணா? இத்தனை பொறுமைசாலியா? என்று உலகமே ஒரு புத்தம் புது கதாபாத்திரத்தை சந்திக்கப் போகிறீர்கள்!

    ரஞ்சனி போல ஒரு அம்மா கிடைக்கவில்லையே என ஏங்கப் போகும் குழந்தைகள்.

    ரஞ்சனி போல ஒரு மனைவி கிடைத்திருந்தால் இந்த உலகத்தையே ஜெயித்திருப்பேனே என பெருமூச்சுவிடும் கணவர்கள்.

    ரஞ்சனி போல ஒரு சகோதரி எனக்கு மட்டும் ஏன் வாய்க்கவில்லை என பரிதவிக்கும் சகோதர்கள்.

    ரஞ்சனி போல ஒரு மகளுக்கு ஏன் தகப்பனாக இருந்திருக்கக்கூடாது எனத் துடிக்கும் அப்பாக்கள்.

    ரஞ்சனி போல ஒரு மருமகள் எந்த மாமியாருக்கும் வாய்க்கப் போவதில்லை.

    இந்த ரஞ்சனி தான் விரைவில் உங்கள் இல்லங்களுக்கு வரப்போகிறாள்.

    நட்சத்திரங்கள்: தேவயானி, சத்யப்பிரியா, டாக்டர் ஷாஜீ, திவ்யா, ஷப்னம், கம்பர் ஜெயராமன், காதல் கண்ணன், ராஜா, ஜோக்கர் துளசி, வி.ஆர்.திலகம்.

    திரைக்கதை: தேவிபாலா. வசனம்: பா.ராகவன். பாடல்: வைரமுத்து. இசை: தீனா. இயக்கம்: ஆர்.கணேஷ். தயாரிப்பு: சினிடைம்ஸ்.




    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  9. #998
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    `சாதிக்கலாம் வாங்க'



    மக்கள் தொலைக்காட்சியில் தினந்தோறும் காலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தன்னம்பிக்கை நிகழ்ச்சி, `சாதிக்கலாம் வாங்க'.

    பதினெண் பருவம் எனப்படும் இந்த பதினைந்து வயதில் ஒவ்வொரு மாணவனுக்குள்ளும் விதைக்கப்படும் விதை தான் அவனது எதிர்கால வாழ்க்கையை நிர்ணயிக்கும் கருவியாக அமைகிறது. அந்த கருவியை இயக்க ஒரு தூண்டல் தேவைப்படுகிறது. ஒவ்வொரு மாணவனுக்குள்ளும் சாதிக்க வேண்டும் என்ற விதையை விதைத்து அந்த விதையை தூண்டி விடும் வேலையைத்தான் மக்கள் தொலைக் காட்சி தன் கையில் எடுத்துக் கொண்டுள்ளது.

    சாதிக்க நினைப்பவர்களுக்கு மட்டுமல்லாமல், நம்மால் சாதிக்க முடியுமா? என நினைப்பவர்களுக்குமான நிகழ்ச்சிதான் `சாதிக்கலாம் வாங்க.' கல்வியையும் தொலைக்காட்சி வழியாக கொடுக்க முடியும் என நிரூபித்திருக்கிறது இந்த நிகழ்ச்சி.

    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது ஒரு கடினமான விஷயமே அல்ல என மாணவர்களுக்கு புரிய வைப்பது இதில் முதல் முயற்சி. அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் திங்கள் முதல் வெள்ளி வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடமாக தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் என எளிமையான முறையில் சொல்லிக் கொடுக்கிறார்கள்.மாணவர்களை நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடையச் செய்வதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.

    இந்த ஐந்து நாட்களில் எவையேனும் ஒன்றை தவறவிடும் மாணவர்களுக்காக, இந்த ஐந்து நாட்களில் நடத்தப்பட்ட பாடங்களின் தொகுப்பு மற்றும் மறு ஆய்வு சனிக்கிழமையன்று ஒளிபரப்பப்படுகிறது.

    ஞாயிறு அன்று மாணவர்களுக்கு ஞாபக சக்தியை அதிகரிக்க, மனநிலை சீராக செயல்பட அவர்களுக்கு மனவளக்கலை என்ற பகுதியையும் கொண்டுள்ளது. இதில் உடற்பயிற்சி, யோகாசனம் ஆகியவை பயிற்றுவிக்கப்படுகின்றன. இதில் மாணவர்கள் மனபலம் பெறுவது மட்டுமல்லாமல், பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற இந்த பகுதி உறுதுணையாக இருக்கும்.


    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  10. #999
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    காதம்பரி



    ஜெயா டிவியில் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் புதிய சரித்திரத்தொடர், காதம்பரி. வெள்ளையரின் கொடுங்கோல் ஆட்சி நடந்து கொண்டிருந்த 18-ம் நூற்றாண்டு காலகட்டத்தில் அவருக்கு சாமரம் வீசியும், காட்டிக் கொடுத்தும் வாழ்ந்து வந்தான் நாகருத்ராக்ஷவரத்தின் மன்னர் ராஜா ருஷ்யேந்திர பூபதி. இந்த கொடுங்கோல் ஆட்சிக்கு துணையாக இருந்தவர்கள் ராணி மங்களேஸ்வரி மற்றும் தளபதி கஜேந்திரவர்மன். இந்த மன்னர்களிடம் இருந்து நாட்டின் மக்களை காக்க பிறந்தவள் காதம்பரி. அவளின் தியாகங்கள் நாட்டின் விடுதலையாக அமைகிறது.

    அனைவரும் மறுஜென்மம் எடுத்து 200 ஆண்டுகளுக்கு பின்னர் பிறக்கிறார்கள். பிறந்த அனைவரும் மீண்டும் சந்திக்க, என்ன நடக்கிறது என்பது கதை.

    இதன் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், திருநெல்வேலி, அச்சன்கோவில், பெங்களூர் மற்றும் பல மாநில காடுகளிலும், அரண்மனையிலும் நடந்து கொண்டிருக்கிறது.

    தொடரின் நட்சத்திரங்கள்: மிதுனா, சுதாசந்திரன், லஷ்மிராஜ், பாலாஜி, காயத்ரி, சுந்தரி, செம்புலி ஜெகன்.

    தொடருக்கு ஒளிப்பதிவு: வி.அன்புராஜ். இசை: ராஜேஷ் ராமலிங்கம். இயக்கம்: பிரபு சங்கர். தயாரிப்பு: சாப்ரன் கிரியேஷன்ஸ்.


    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  11. #1000
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    பாரதிராஜா தொடரில்...



    டைரக்டர் பாரதிராஜா கலைஞர் டிவிக்காக இயக்கிய `தெக்கித்திப் பொண்ணு' தொடருக்கு டைட்டில் பாடலுக்கான நடனக்காட்சியை அமைத்துக்கொடுத்தவர் பிரபல டான்ஸ் மாஸ்டர் கூல் ஜெயந்த். இப்போது மீண்டும் கலைஞர் டிவிக்காக பாரதிராஜா இயக்கும் `அப்பனும் ஆத்தாளும்' தொடருக்கும் டைட்டில் பாடலுக்கு அவரே நடனம் அமைத்திருக்கிறார். முந்தின தொடரைப்போலவே இந்த சீரியல் டைட்டில் பாடலும் பேசப்படுவதில் கூல்ஜெயந்த்துக்கு மெகா மகிழ்ச்சி.

    இத்தனைக்கும் பெரியதிரையில் பிசியான டான்ஸ் மாஸ்டர் இவர். பாரதிராஜாவுக்காக சின்னத்திரை பக்கம் கவனம் திருப்பி இருக்கிறார். அதற்கான காரணம் கேட்டால், "என்னை சினிமாவில் டான்ஸ் மாஸ்டராக அறிமுகம் செய்தவரே டைரக்டர்
    பாரதிராஜா தான்'' என்கிறார். நன்றிக்கடன்!



    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

Similar Threads

  1. Vijay tv going to start 2 new programs
    By anbupani in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 7th October 2009, 01:58 AM
  2. Programs that you enjoy watching on TV
    By Anoushka in forum TV,TV Serials and Radio
    Replies: 107
    Last Post: 15th July 2008, 04:41 AM
  3. IR in TV Serials
    By RR in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 4
    Last Post: 16th July 2007, 01:12 PM
  4. which channel do you think has the most creative programs?
    By mirattalji in forum TV,TV Serials and Radio
    Replies: 20
    Last Post: 18th November 2006, 01:45 AM
  5. Pongal Programs
    By suryas_shaivs in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 19th January 2006, 06:03 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •