Results 1 to 2 of 2

Thread: sirukathai - padithathil pidithathu

  1. #1
    Member Junior Hubber
    Join Date
    Mar 2005
    Location
    Thinaikulam-paramakudi
    Posts
    30
    Post Thanks / Like

    sirukathai - padithathil pidithathu

    ========================
    சிறுகதை :படித்ததில் பிடித்தது
    ========================
    கா.கவிராம்
    --------------

    அவன் அப்படித்தான்!


    க்ரிக் க்ரிக்... க்ரிக் க்ரிக்... செல்போனில் வந்த குறுஞ்செய்தியை பார்ப்பதற்கு விரக்தியுடன் பச்சை நிற பட்டனை அழுத்தினான் ரகு.

    Dear Ragu, pls/ open ur heart/ vomit what ever have it / in ur mind 2/ ANY ONE. / open mind / helps u 2 bcom / normal. pls...
    sender : 9884208075

    செல்போனை மேஜை மீது வைத்தவனுடைய விரல்கள் சிகரெட் பாக்ஸை தேடியது.

    'நான் என்ன செய்வேன்? என் மனதில் உள்ளதை உள்ளபடி, உரிய நேரத்தில், உரியவரிடம் வெளிப்படுத்தினேன். ஆனால், என்னைப் புரிந்துகொள்ளவில்லை, அந்த உரிய நபர்.

    கடந்த சில நாட்களாகவே நான் நார்மல் இல்லைதான். உணர்கிறேன். இருக்கும் இரண்டு நண்பர்களிடமும் இரண்டு வார்த்தைக்கு மேல் பேச முடியவில்லை. 'ஹாய்', 'பாய்' மட்டும்.

    எனது மாற்றம் நரேனை பாதிக்கவில்லை; தேவாவை பாதித்திருக்கிறது. அதனால்தான் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளான்.

    ஆம். எனக்கும் தெரிகிறது. மனதில் உள்ளதை அப்படியே யாரிடமாவது கொட்டிவிட்டால், நான் நார்மலாகிவிடுவேன். அதிக நேரம் கண் இமைக்காமல் இருப்பது குறைந்துவிடும்; நண்பர்களுக்கு 'ஹாய்' சொல்வது அதிகரிக்கும்; புத்தகங்களை வெறித்துப் பார்ப்பது தவிர்க்கப்படும்; வாய் வழியாக புகை நுழைவது குறையும்...

    ஆனால், என்ன செய்வது என்னால்தான் யாரிடமும் மனம் திறந்து பேச முடியவில்லையே. இதற்குக் காரணம் என் பிறவி குணமா? ஸ்கூல் ஹாஸ்டலின் தனிமையா? இயலாமையா? தாழ்வு மனப்பாண்மையா? உளவியல் பிரச்னையா? அல்லது வேறு ஏதாவதா?

    இல்லை! இந்த இன்னலில் இருந்து என்னால் மீண்டு வர முடியும். நானும் மற்றவர்களைப் போன்றே நார்மலாக இருக்கப் போகிறேன். இதற்கு முதல் முயற்சியாக, தேவா சொன்னது போலவே, என் மனதில் இருப்பதை அப்படியே ஒருவரிடம் கொட்டப் போகிறேன். என் பிரச்னையில் இருந்து மீண்டு வரப் போகிறேன்.

    அந்த ஒருவர் யார்? நரேனா? இல்லை. தேவாவா? இல்லவே இல்லை. ம்... ப்ரியா..! அவள்தான் சரியான தேர்வு.

    இன்று மாலை பீச்சுக்கு அழைத்துச் சென்று, அவளிடம் அனைத்தையும் கொட்டிவிடப் போகிறேன்.'

    ஒருவழியாக தன் பிரச்னையைப் போக்குவதற்கான தீர்வை தானே யோசித்து ஒரு முடிவுக்கு வந்துவிட்டான் ரகு.

    ***

    மெரினா பீச்சின் சில்லென்ற காற்று ரகுவின் உதடுகளுக்கு உத்வேகமாக இருந்திருக்க வேண்டும். படபடவென வார்த்தைகளை உதிர்க்கத் தொடங்கினான்.
    பிரியா... நான் இதுவரைக்கும் யார்கிட்டயும் ஷேர் பண்ணிக்காத விஷயங்களை உங்கிட்ட சொல்லப் போறேன்...

    நான் எப்பவும் வர்ற ட்வெண்டி செவன் எல் பஸ்லதான் அவளை முதன்முதலா பார்த்தேன். அவ எப்பவும் கண்டெக்டர் பக்கத்துலதான் நிப்பா. நான் ஸ்டெப்புக்கு மேல இருப்பேன். ஒருநாள் இல்லை; ஒரு வாரம் இல்லை: ஒரு மாசம் அவ கண்களையே பார்த்துட்டு இருந்தேன். வழக்கம் போல பேசணும்னுகூட தோணலை.

    அவதான் முதல்ல எங்கிட்ட பேசினா. 'ஹலோ'தான் முதல் வார்த்தை. அவளுக்கு எங்கிட்ட புடிச்சதே என்னோட பார்வைதான். எப்படி எனக்குத் தெரியும்ணு கேக்குறியா? அவ சொல்லியிருக்கா.

    ரொம்ப நல்லா போயிட்டு இருந்துது எங்க ரிலேஷ்ன்ஷிப். கொஞ்சம் கொஞ்சமா என்னைப் பத்தி அவளுக்கு தெரிய ஆரம்பிச்சுது. விலக ஆரம்பிச்சா.

    காரணம்... சிம்பிள். நான் சரியா அவகிட்ட பேசமாட்டங்குறதுதான். நான் என்ன பண்ணட்டும்? என்னோட நேச்சர் அப்படி. ஆமா... அப்படிதான் நான் நெனச்சிட்டு இருக்கேன்.

    என்னால அவளைப் புரிஞ்சுக்க முடியுது. எல்லா லவ்வர்ஸ்சும் எதிர்ப்பாக்குற ஒரு அடிப்படை விஷயத்தைதான் எங்கிட்டயும் அவ எதிர்பாத்தா... ரொமாண்டிக்கா பேசணும்.

    எனக்கு சரியா பேசவே வரமாட்டேங்குது. அப்புறம் எப்படி ரொமாண்டிக்கா பேச முடியும். சான்ஸே இல்லை. நான் எவ்வளவோ எடுத்து சொன்னேன், 'எனக்கு யார்கிட்டயும் சரியா, கன்டினியுஸாப் பேச வராது'ன்னு. இந்த ஒரு வரியைதான் நான் அதிகமாக அவகிட்ட பேசியிருப்பேன்னு நினைக்கிறேன்.

    என் நிலைமையை அவளாள புரிஞ்சிக்க முடியல; கடைசியா அவ ஒரே ஒரு ட்ரை பண்ணினா. என்ன தெரியுமா? நான் சைக்கியாட்ரிஸ்ட் கிட்ட செக் பண்ணனுமாம். 'இதுக்கு ஒத்துக்கிட்டு ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டா, நம்ம ரிலேஷன்ஷிப் தொடரும்; இல்லேன்னா 'குட் பை'''ன்னு சொல்லிட்டு கிளம்பிட்டா. நான் அதுக்கு ஒத்துக்கல.

    ஒரு மாசம் ஆகுது. என்னைப் பாக்கல, எங்கிட்ட பேசல, ஒரு மேசேஜ் கூட பண்ணல. நானும் எப்பவும் போல கம்முனு இருந்துட்டேன்.

    நான் ஏன் சைக்கியாட்ரிஸ்ட பாக்கணும்? செக் பண்ணணும். நான்தான் இப்ப நலலா பேச ஆரம்பிச்சிட்டேனே. நான் இவ்ளோ நேரம் உங்கிட்ட பேசிட்டு இருக்கேன்னா, நான் நார்மல் ஆயிட்டேன்னுதான்னே அர்த்தம். ஓகே ப்ரியா இவ்ளோ நேரம் என் மனச திறந்து சொன்ன விஷயங்களை கேட்டதுக்கு ரொம்ப தாங்க்ஸ்.''

    ''அங்கிள். பஞ்சு மிட்டாய் சாப்டு முட்ச்டேன். இன்னொன்னு வாங்கி தாங்க அங்கிள்' என்றாள் ரகுவின் 3 வயது அத்தை மகள் ப்ரியா!

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2
    Senior Member Diamond Hubber
    Join Date
    Jan 2006
    Posts
    6,074
    Post Thanks / Like
    Anbe Sivam

Similar Threads

  1. nadhi sollum sirukathai (isaimaNi)
    By RR in forum Hub Magazine Archive - 2007
    Replies: 3
    Last Post: 18th October 2007, 06:36 PM
  2. Sirukathai - - - nan padithathil pidithathu
    By k.kaviram in forum Poems / kavidhaigaL
    Replies: 5
    Last Post: 5th February 2007, 08:56 PM
  3. kAgangaL siRukathai paRRi.. (RR)
    By RR in forum Hub Magazine Archive - 2005
    Replies: 1
    Last Post: 4th November 2005, 01:32 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •