Page 56 of 56 FirstFirst ... 646545556
Results 551 to 555 of 555

Thread: THIRUKKURALH

  1. #551
    Member Junior Hubber
    Join Date
    May 2007
    Posts
    35
    Post Thanks / Like
    திருக்குறளையும் நாலாயிர திவ்யப்ரபந்தத்தையும் இணைத்து ஒரு ஆய்வுக் கட்டுரை.

    http://chennaipluz.in/wp/thirukural/...e%b0%e0%ae%aa/

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #552
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    வினைத் திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம்
    மற்றைய வெல்லாம் பிற.


    ஒரு காரியத்தை முடிப்பதற்குரிய உறுதி என்பது மன உறுதியே ஆகும், மற்றவற்றைக் காரியம் முடிப்பதற்குரிய உறுதி என்று சொல்ல வியலாது.
    B.I. Sivamaalaa (Ms)

  4. #553
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    மெய்ப்பொருள் காண்ப தறிவு

    எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு.


    திருக்குறள் மணிகளில் இது எடுத்துப் போற்றப்படவேண்டிய, நாளும் பின்பற்றப்பட வேண்டிய ஒளிமணி ஆகும். இது பத்திரிகைச் செய்திகட்குப் பொருந்துமோ? தாளிகைச்செய்திகள் வாய்ச்சொல்லாக வராமல், எழுத்து மூலமாக வருகின்றன.எனினும் அவையும் "சொல்லக் கேள்வி" என்பதில் அடக்கப்பட வேண்டியனவே. தாளிகைச் செய்தி hearsay என்பதில் அடங்குவதாகச் சட்டவல்லுநர் கருதுவரோ? நீங்கள் கேட்டறிந்து கொள்ளுங்கள். எப்படியாயினும் தவறான செய்தி வெளியிட்டமைக்காக தாளிகைகள் சில நீதிமன்றம் சென்றுள்ளன என்பதையும் நாம் கருதவேண்டியுள்ளது,
    B.I. Sivamaalaa (Ms)

  5. #554
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    நாடு.

    தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
    செல்வரும் சேர்வது நாடு.


    ஒரு நாட்டில் வாழும் மக்கள் போதுமான பொருள்வசதி உடையவர்களாக இருக்கவேண்டும். உணவுக்கு ஏங்கும் நிலை இருத்தலாகாது. மேலும் அந்நாட்டில் எல்லா வகையிலும் சிறந்த செல்வர்களும் வாழ்தல் வேண்டும். தீவினை விட்டுப் பொருளீட்டிய செல்வர்களாய் அவர்கள் இருத்தல் வேண்டும் என்று கூறவந்த நாயனார், தாழ்விலா என்ற சொல்லைப் பெய்துவைத்துள்ளார். போதைப்பொருள்களாலும் கொலை களவு முதலியவற்றாலும் உயர்ந்துவிட்டவர்கள் "தாழ்விலாச் செல்வர்" என்னும் கூறுபாட்டினுள் கருதப்படும் தகுதியுடையவரல்லர். பொதுமக்கள் உட்பட அனைவரும் தக்கவர்களாய் இருத்தல் இன்றியமையாதது, உணவு உற்பத்தியுடன் பொருள் உற்பத்தியும் "தள்ளா விளையுள்" என்பதில் அடக்கப்பட வேண்டியவையே. முன்னை உரையாசிரியன்மார் நெல் முதலியவை விளையும் நிலங்கலளை மட்டுமே "விளையுள்" என்று கொண்டாரெனினும் இதுபோது இக்கருத்து சற்று விரிவுசெய்தற்குரியதே ஆகும். பொருளியல் வளர்ச்சி "தாழ்விலாச் செல்வர்" என்பதுள் அடங்கிவிட்டதென்று கருதுவதும் தவறாகாது. எங்ஙனமாயினும் இக்குறள் விரிவாகச் சிந்திக்கவைக்கும் சொற்புதையலைக் கொண்டதாகும்.
    B.I. Sivamaalaa (Ms)

  6. #555
    Junior Member Newbie Hubber mms's Avatar
    Join Date
    Dec 2005
    Location
    Hyderabad
    Posts
    14
    Post Thanks / Like
    இந்தக் குறள்கட்கு சற்றே ஆளமான பொருள் தரவும், சிவமாலா அவர்களே
    குறள் 62:
    எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
    பண்புடை மக்கட் பெறின்.
    குறள் 107:
    எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
    விழுமந் துடைத்தவர் நட்பு.

Page 56 of 56 FirstFirst ... 646545556

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •