Page 53 of 56 FirstFirst ... 3435152535455 ... LastLast
Results 521 to 530 of 555

Thread: THIRUKKURALH

  1. #521
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    சான்றோன் : a wise, learned and respectable man
    (This is the meaning of the word in kuRaL.) .

    அறிவார்ந்தவன் is close to the meaning of the word.


    சங்க கால்களில் கிடைக்கப்பெறும் சான்றோன் என்ற பதத்தை பயன்படுத்திய பாடல்களை அடிப்படையாக வைத்தால், வீரன் என்ற பொருளிலும் எடுத்துக்கொள்ள சாத்தியக் கூறுகள் இருப்பதாக தெரிகிறது. bis_mala ஐயா! குறளில் அறிவார்ந்தவன் என்ற அர்த்தத்தில் இருப்பதாக எப்படி எடுத்துக்கொண்டீர்கள்?
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #522
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    Smile the complete person

    Quote Originally Posted by venkkiram View Post
    சான்றோன் : a wise, learned and respectable man
    (This is the meaning of the word in kuRaL.) .

    அறிவார்ந்தவன் is close to the meaning of the word.


    சங்க கால்களில் கிடைக்கப்பெறும் சான்றோன் என்ற பதத்தை பயன்படுத்திய பாடல்களை அடிப்படையாக வைத்தால், வீரன் என்ற பொருளிலும் எடுத்துக்கொள்ள சாத்தியக் கூறுகள் இருப்பதாக தெரிகிறது. bis_mala ஐயா! குறளில் அறிவார்ந்தவன் என்ற அர்த்தத்தில் இருப்பதாக எப்படி எடுத்துக்கொண்டீர்கள்?
    சான்றோன் என்ற குறளில் வரும் சொற்பயன்பாடு, கல்வியறிவு நிறைவையும் அதன்காரணமாக மக்களால் மதிதகு மாந்தனாய் இருத்தலையும் குறிப்பதாகவே உரையாசிரியர்களும் அகரவரிசைக்காரர்களும் கொண்டுள்ளனர்.

    குறளல்லாத ஏனை நூல்களில் வேறு பொருட்சாயல்களில் இச்சொல் கையாளப்பட்டிருக்கலாம். ஒரு சான்றோன் வீரனாகவும் இருக்குமிடத்து, அப்பொருளைத் தழுவிநிற்றல் கூடும்.

    சான்றோன் என்பதனோடு தொடர்புடைய சொல்லான சான்றாண்மை என்பது, "ஊக்கம்" என்றும் பொருள்படும்.

    அகரவரிசை ஆசிரியர் விஸ்வநாதபிள்ளை: சான்றோன் (குறள் ) "the learned man" என்று குறித்துள்ளார்.

    சான்றோன் என்பதன் அடிச்சொல் "சால்". இந்தச் "சால்" நிறைவு குறிக்கும் சொல்.

    சால் > சால்பு.
    சால் > சான்று (சால்+து). து, விகுதி.
    சால் > சான்று > சான்றோன். (சால்+து+ஓன்).
    சால் > சாலி.
    சால் > சாலினி.
    சால் > சாலிகை.
    சால் > சாலை (கூடுமிடம் முதலியவை)
    சால் > சாலல்.
    சால் = நீர் நிறைக்கும் கலம்.(water for irrigation)
    சால் > சாலர் : நெயதல் நில மக்கள்.
    சால் > சாலகம் (பறவை கூடுமிடம் etc)

    இவை யாவும் நிறைவுக்கருத்தை அடிப்படைச் சொல் கருத்தாக உடையவை.

    "ChanRon" Here the basic etymological meaning is "completeness". - a man of "completeness". What would you consider to be the quality or qualities that would be pointing to completeness in a person?
    Then that factor would be the factor that completes the man. It may vary here and there in situations. But do not forget the common denominator - "completeness". OK Sir?
    Last edited by bis_mala; 10th August 2011 at 01:11 PM.
    B.I. Sivamaalaa (Ms)

  4. #523
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    மிக்க நன்றி bis_mala. நீங்கள் குறிப்பிட்ட ""completeness" - உடன்படுகிறேன். இருந்தாலும் சான்றோன் என்பதை பதத்தை அறிவுக்கான, அறிவு சார்ந்த தளத்தில் பொருள் வரப் பயன்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  5. #524
    Member Junior Hubber
    Join Date
    May 2007
    Posts
    35
    Post Thanks / Like
    வேதநெறியும் தமிழ்சைவத்துறையும் – 2
    முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி
    திருக்குறளும் வடமொழி வேதமும்


    மாமுனிவர் திருவள்ளுவர்

    தமிழ் வேதம் என்றும் உத்தரவேதம் என்றும் போற்றப்படுவது திருக்குறள். திருவள்ளுவரின் காலம் கி.பி 2 எனக்கருதப்படுகின்றது. திருக்குறள் வேதநெறியினைத் தழுவிக்கொண்டு தமிழ்மரபின் தனித்தன்மையையும் நிலைநிறுத்தும் அறநூலாகும்.

    திருக்குறளின் முதலதிகாரம் கடவுள் வாழ்த்து. அதில் இறைவனைக் குறிக்க எட்டு பெயர்கள் கூறப்படுகின்றன. ஆதிபகவன்(1), வாலறிவன்(2), மலர்மிசை யேகினான்(3), வேண்டுதல் வேண்டாமையிலான்(4), இறைவன்(5), பொறிவாயிலைந்தவித்தான் (6), தனக்குவமையில்லான், அறவாழியந்தணன்(8) எனும் இவ்வெட்டுப் பெயர்களும் இறையாகிய பதிக்கு வேதாகமங்கள் கூறும் தன்வயம், இயற்கையறிவு, முற்றுணர்வு, இயல்பாகவே பாசங்களினீங்குதல், பேராற்றல், தூயவுடம்பு, வரம்பிலின்பம், பேரருள் எனும் எட்டுக் குணங்களை முறையே உணர்த்துவனவாகும். இறைவன் ‘எண்குணத்தான்’ ஒன்பதாவது திருக்குறளும் கூறுகின்றது. இந்த இலக்கணம் இறைக்கு வேறெங்கும் கூறப்படவில்லை.

    பிறப்பைப் ‘பெருங்கடல்’ என்றது, அதைக் கடக்கப் புணை இறைவனது திருவடி என்றது, (10), அவிச்சை காரணமாகப் பிறப்புத் தோன்றலின் ‘ பிறப்பைப் பேதமை’ என்றது, (358), மக்கள் தேவர் நரகர் விலங்கு பறவை முதலிய எந்தப் பிறப்பும் துன்பமேயாகையால் பிறப்பினை ‘மாணாப் பிறப்பு(351) என்றது, பிறப்புத் துன்பமாதலறிந்து அப்பிறப்பே வேண்டாமென ‘வேண்டுங்கால் பிறவாமை வேண்டும்’(362) என்றது, ‘தூய்மை அவாவின்மை,(364), உயிர் இருவினையை ஈட்டுவதற்கும் அதனால் பிறப்புண்டாதற்கும் காரணம் இருள் என்னும் ஆணவமலம் அதனைப் போக்கிக் கொள்ள இறைவனின் புகழ்சேர் புகழை இடைவிடாது சிந்திக்க வேண்டும் (5) என்றது இவை போன்றவையெல்லாம் வேத சிவாகமங்களில் பேசப்பட்ட பொருள்களாகும்.

    திருக்குறள் ‘தாமைரைக் கண்ணா னுலகு’(1103), ‘புத்தேள் நாடு’(1323), ‘அளறு’(நரகம் 255) முதலிய உலகங்களையும் ,’அடியளந்தான்’(திரிவிக்ரமன் 610)’தாமரையினாள்’, ‘முகடி’(617), தென்புலத்தார்’ (43), என்னும் இவை போன்ற வேதாகமக் கருத்தாக்கங்கள் திருக்குறளில் செறிந்துள்ளன.

    திருமகளைச் செய்யாள் என்பது தமிழ்வழக்கு. முகமினியனாய்த் தக்க விருந்தினரைப் பேணுவாரது இல்லின்கண் செய்யாளாகிய திருமகள் அகனமர்ந்து உறைவாள்(84) எனக் கூறிய திருவள்ளுவர், வேதநெறி பற்றிச் செய்யாளுக்கு மாறுபட்ட இயல்புடைய மூத்தாளையும் கூறுகிறார். சீதேவிக்கு மூத்தவள் மூதேவி. அவளை ‘ஜ்யேஷ்டா’ என வடமொழியிலும், அதனைத் தமிழ் எழுத்தில் ‘சேட்டை’ என்றும் கூறுவர். “முன்னம் தோன்றலால் முகடியைச் சேட்டை என்றனர்” (லிங்கபுராணம்2-5-4) தமக்கை எனப் பொருள்படும் ‘ஜ்யேஷ்டா’ என்னும் சொல்லை மொழிபெயர்த்துத் திருவள்ளுவர்,

    “அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவள்
    தவ்வையைக் காட்டி விடும்” (167) என்றார். தவ்வை மூத்தவள்.

    “அகர முதல வெழுத்தெல்லா மாதி
    பகவன் முதற்றே யுலகு”

    என்னும் முதற்குறளில் வேதாகமத் தாக்கம் பெரிதும் காணலாம். வேதங்களின் ஆறங்கங்களில் ஒன்று தருக்கம். முதற்குறள் தருக்க முறைப்படி முதற்கடவுளது உண்மையை நிறுவுகின்றது.

    தருக்கத்தில் ஒருபொருளை(வஸ்து)ப் பெயர்(உத்தேசம்) கூறிய பின்னரே மேற்கோள் ஏது உதாரணம் முதலியவற்றல் நிறுவ வேண்டும் என்பது விதி. திருவள்ளுவர் ஆதிபகவன் என்று தாம் சாதிக்கப் போகும் பொருளுக்கு முதலில் பெயர் கூறினார். உலகம் ஆதிபகவனாகிய முதலை யுடைத்து என்று மேற்கோள் கூறினார். அகரமுதல வெழுத்தெல்லாம் என்று ஏது கூறினார். காணப்பட்ட உலகத்தாற் காணப்படாத கடவுட்கு உண்மை கூறும் அனுமானமும் இதனால் உணர்த்தினார்.

    ஆதி என்ற தமிழ்ச் சொல்லும் பகவன் என்னும் வடசொல்லும் சேர்ந்த தொகைச் சொல் ஆதிபகவன் என்பது. பகவன் தமிழ்ச் சொல்லாயின் ஆதிப்பகவன் என ஒற்று மிகவேண்டும் ஒற்று மிகாமல் ஆதியாகிய பகவன் என்னும் பொருளைத் தருதலால் இச்சொல் இருபெயரொட்டுப் பண்புத்தொகை யென்றும் இது வடநூன்முடிபு என்றும் பரிமேலழகர் கூறினார்.

    பகவன் என்பது ‘பகவான்’ என்னும் வடசொல் என்றும், பகவான் என்பது சிவனுக்குப் பெயர் என்றும், அதர்வசிகோபநிஷத், “யோவை ருத்ர: ஸ பகவான்” என முப்பது முறை கூறுகின்றது. சங்கார காரணனாகிய சிவனே உலகத்துக்கு ஆதி என்பது இதனால் உணர்த்தப்பட்ட பொருளாம்.

    “சங்கரோ பகவான் ஆத்யோ ரரட்ச ஸகலா: ப்ரஜா:
    மஹேசோ பகவான் ஆதி தேவ:”

    எனச் சரபோபநிஷதம் கூறுகின்றது. அதாவது சங்கரனுக்குத் தவிர ஏனையோருக்கு இறைமைக் குணங்கள் இல்லை. அவனே பகவான். எனவே ‘மஹேசனே பகவான், ஆதி தேவன்’ என்பது இதன் பொருள். எனவே ‘ஆதிபகவன்’ என்ற பெயரில் உள்ள ‘ஆதி’ என்பது, இறைமைக் குணங்கள் இலராகிய ஏனைத் தேவர்களை விலக்க வந்த அடை, அதாவது சிவனே முதற்கடவுள் என்றுணர்த்துவது இதன் கருத்தாம்.

    சித்தாந்த சைவர்கள் ‘ஆதிபகவன்’ எனுமித்தொடருக்கு ‘ஆதிசத்தியொடு கூடிப் பிரிவின்றி யுள்ளானாகிய சிவன்’ என்று மூன்றாம் வேற்றுமை உடனிகழ்ச்சிப் பொருள் விரித்துப் பொருள்கொள்வர். பதிப்பொருளாகிய ஒருபொருள் சிவமும் சத்தியுமாகத் தாதான்மியத்தால் இருதிறப்பட்டு உலகினை இயக்கி நிற்றல் பற்றி இறைவனை “ஆதிபகவன்” எனும் பெயரால் திருவள்ளுவர் குறித்துள்ளார் எனகொள்ளுதல் பொருந்தும் என்பர். (திருவருட்பயன். 1-2. க. வெள்ளைவாரணம். சமாஜபதிப்பு)

    திருவள்ளுவர் வேதங் கூறும் நான்கு வருணங்களை அறிந்தேயுள்ளார். அதில் தமிழ் மரபுக் கேற்றதைத் தழுவிக் கொண்டுள்ளார்.

    “மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான்
    பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்” (134)

    என்னும் குறளில் ‘பார்ப்பானின் தொழில்களில் ஒன்று வேதங் கற்றல். கற்ற வேதத்தை மறந்தாலும் மீண்டும் கற்று மீட்டுக் கொளலாகும். ஆனால் அவன் தன்னுடைய பிறப்பொழுக்கத்தைக் கைவிட்டால் அழிந்துவிடுவான்’ என்று பார்ப்பனன் தொழிலின் சிறப்பையும், அவன், தன் பிறப்பொழுக்கத்தைக் கைவிடாமையின் சிறப்பையும் ஓதினார்.

    பார்ப்பான் என்னும் பெயர் முன்பு மரியாதைக்கு உரியதொன்றாகவே வழங்கியது. இது இருபிறப்பாளன் என்ற பொருளைத் தருவதாகும்.

    “பார்ப்பு” என்பது பறவையின் குஞ்சுக்குப் பெயர். (“பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற்றிளமை” தொல். பொருள்- மரபியல் சூ559). பறவைக்குஞ்சுக்கு இரண்டு முறை பிறப்புண்டாகும். தாயின் வயிற்றினின்றும் முட்டையாக வெளிவருவது ஒருபிறப்பு. முட்டையினின்றும் குஞ்சாக வெளிவரல் மற்றொரு பிறப்பு. அந்தணர்களுக்கும் இரண்டு பிறவிகள் உண்டு. ஒன்று அன்னையின் வயிற்றினின்றும் வெளிவரல், மற்றொன்று, உபநயனத்தின் பின் உள்ள வாழ்க்கை. ஆதலின் அவர்களை “இருபிறப்பாளர்” என்பர். அதாவது, பறவையின் குஞ்சு போல்பவர் என்ற பொருளில் “பார்ப்பு அன்னவர்” என்பர். ‘பார்ப்பன்னவன்’ என்பதில் உள்ள மெல்லொற்றும் ‘வ’கர உயிர்மெய்யும் கெட்டுப் ‘பார்ப்பனன்’ என நின்றது. மாணிக்கவாசக சுவாமிகள் குருவாக வந்து ஆண்டு கொண்ட சிவபரம்பொருளை, “பார்ப்பானே” என விளிப்பது அறியத் தக்கது. ( புணர்ச்சிப்பத்து -10 திருவாசகம், சிவக்குடில் விளக்கம்.)

    “அந்தணர் நூற்கு மறத்திற்கு மாதியாய்
    நின்றது மன்னவன் கோல்” (543)

    என்னும் குறளில் அரசசாதியையும் செங்கோலின் மாட்சியையும் கூற வந்த திருவள்ளுவர், முதற்சாதியாகிய சிறப்புடைய அந்தணசாதிக்குரிய வேதத்திற்கும் அறத்திற்கும் மன்னவன் செங்கோலே காரணமாக நின்றது என்றார். சிறப்புடைய அந்தணசாதியைக் கூறி ஏனைய இரண்டுசாதியையும் தழுவிக் கொண்டார்.

    “ஆபயன் குன்று மறுதொழிலோர் நூன்மறப்பர்
    காவலன் காவா னெனின்” (560)

    என்னும் குறளில் அரசன் செங்கோல்முறையினால் உயிர்களைக் காவானாகில் கேடுகளாக அறனில்லாத அந்நாட்டுப் பசுக்களும் பால் குன்றும்; அறுதொழிலோராகிய அந்தணரும் தம்முடைய வேதக் கல்வியை மறந்து விடுவர் என்று கூறுகின்றார்.

    இதனால், ‘வேதமும் அறனும் அநாதி; பசுக்கள் பால் குன்றியவழி அவியில்லாது போகும். அவி கொடுத்தற்கு உரியராகிய அந்தணர் வேள்வியின்மையின் வேதக் கல்விக்குரிய மந்திரங்களை ஓதார். வேள்வி நடவாது. ஆதலால் வானம் மழை பொழியாது’ என்று வேள்விக்கும் மழைக்கும் உள்ளதொடர்பினைக் கூறினார்.

    இந்தத் தொடர்பைத் தொல்காப்பியமும்,
    “அமரர்கண் முடியும் அறுவகையானும்” (தொல். பொருள்81 புறத்திணை 26)
    என்று கூறிற்று. ‘அமரர்கண் முடியும் அறுவகையாவது பிறப்பு வகையானன்றிச் சிறப்பு வகையால் தேவர்கண்ணே வந்து முடிதலுடையவாகிய அறுமுறை வாழ்த்தின் கண்ணும்’ என்றும், அந்த ஆறாவன, ’முனிவரும் பார்ப்பாரும் ஆனிரையும் மழையும் முடியுடை வேந்தரும் உலகுமாம்’ என்று நச்சினார்க்கினியர் எடுத்துரைத்தார்.

    இச்சூத்திரத்திற்கு பலர் பலவாறு கூறினும் நச்சினார்க்கினியர் கூறியதே பண்டை மரபு தழுவியதாம். திருஞானசம்பந்தசுவாமிகள் தம்முடைய திருப்பாசுரத்தில் இந்த அறுமுறை வாழ்த்தை வலியுறுத்தியுள்ளார்.

    ‘வாழ்க அந்தணர் வானவ ரானினம்
    வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக
    ஆழ்க தீயதெல் லாமர னாமமே
    சூழ்க வையக முந்துயர் தீர்கவே’ (3-54-1)

    என்னும் இவ்வறுமுறை வாழ்த்தில் நச்சினார்க்கினியர் கூறிய முனிவருக்குப் பதில் ‘வானவர்’ இடம்பெற்றுள்ளது.

    அரசனது செங்கோலுக்கும் அந்தணர் வேள்விக்கும் மழைக்கும் நாட்டின் வளத்துக்கும் குடிகளின் மகிழ்ச்சிக்கும் உள்ள சங்கிலித் தொடர்பினைச் சமயச்சான்றோர் உடன்பட்டு ஏற்றுக் கொண்டுள்ளனர்.

    “வேந்தன் முறைதிறம்பின் வேத விதிதிறம்பும்
    ஏந்திழை யார்தம் கற்பும் இல்லறமும் நில்லாவாம்
    மாந்தர் பசியால் உணங்க மழைவறந்து
    பாந்தள் மூடிக்கிடந்த பாரின்விளை வஃகுமால்”
    (பிரமோத்தரகாண்டம்,10- 1)
    என எதிர்மறையானும் வலியுறுத்தப்பட்டது.


    பராசரருக்கும், மீனவப்பெண் மத்ஸ்யகந்திக்கும் பிறந்த மாமுனிவர் வேதவியாசர்

    திருவள்ளுவர், வேதவேள்வி செய்யும் அந்தணர்களுக்கு இவ்வளவு ஏற்றம் கொடுத்துப் பேசினாலும் பிறப்பால் மட்டுமே அந்தப் பெருமை ஒருவர்க்கு வந்துவிடாது; அதாவது, ‘ஜன்ம பிராமணனை விடக் கன்ம பிராமணனுக்கே ஏற்றம்’ என்பதையும் தெய்வப்புலவர் எடுத்துக் காட்டியுள்ளார்.

    “பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா
    செய்தொழில் வேற்றுமை யான்” (972)
    என்னும் குறளில், திருவள்ளுவர், பெருமையாவது குலத்தினா லறியப்படாதென்றும் அதற்குக் காரணம் இன்னது என்றும் சுட்டிக் காட்டினார்.

    இங்குத் தொல்காப்பியம், பொருளதிகாரம், களவியல், 2-ஆம் சூத்திரத்திற்கு இளம்பூரணர், இத்திருக்குறளை மேற்கோள் காட்டி செய்தவுரை ஆன்றோர் கருத்தை நன்கு புலப்படுத்தும்.

    “ஒத்த கிழவனும் கிழத்தியுங் காண்ப” என்பது.
    ஒப்பு பத்து வகைப்படும். அவை,
    “பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு வகையே (மெய்ப்.25)

    என்னும் மெய்ப்பாட்டியற் சூத்திரத்துள் கூறிய பத்துமாம்.

    அவற்றுள் பிறப்பாவது, அந்தணர், அரசர், வணிகர், வேளாளர், ஆயர், வேட்டுவர், குறவர், நுளையர் என்றாற்போல வருங் குலம். குடிமையாவது அக்குலத்தினுள்ளார் எல்லாருஞ் சிறப்பாக ஒவ்வாமையின் அச்சிறப்பாகிய ஒழுக்கம் பற்றிய குடிவரவைக் குடிமை என்றார்.

    “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
    செய்தொழில் வேற்றுமையான்” (குறள் 972)

    எனவே குலத்தின்கண்ணே சிறப்பென்பது ஒன்றுண்டு.

    அந்தணர் ,பார்ப்பார் என்பன காரண இடுகுறிப் பெயர். காரணம் குறிக்கும் பொழுது அப்பெயர் அந்தக் காரணத்தை உடைய எல்லாரையும் குறிக்கும். சுட்டப்பட்ட காரணம் அந்தணரிடம் சிறப்பாக விளங்க வேண்டும் என்பது விதி. பிறப்பந்தணர்களிடத்தில் எதிர்பார்க்கப்படும் பண்பு.. இதனைத் திருவள்ளுவர் அளவையியலில்(Logic) கூறப்படும் முக்கூற்று விதியில் (Deductive syllogism) வைத்துக் கூறியுள்ளது அறியத்தக்கது.

    எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகுவோர் அறவோர்
    அந்தணர் எவ்வுயிரிடத்தும் செந்தண்மை யுடையவர்
    ஆதலால் அந்தணர் என்போர் அறவோர்.

    மற்றொரு முறையிலும் இதனைக் கூறலாம்.

    அந்தணர் என்போர் அறவோர் – இது மேற்கோள்
    எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான் – இது ஏது.
    எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகுவோர் அறவோர். – முடிவு

  6. #525
    Member Junior Hubber
    Join Date
    May 2007
    Posts
    35
    Post Thanks / Like
    இதனால், எவ்வுயிருக்கும் செந்தண்மை பூண்டொழுகும் சிறப்பொழுக்கம் அந்தணர்களுக்குப் பிறப்பால் குடிவரவாக வரும் என்பதும், அச்சிறப்பொழுக்கம் இல்லாதவன், பிறப்பால் அந்தணனாயினும் அந்தணன் எனப்படமாட்டான் என்றும், ஏனைய குலத்தில் பிறந்தாலும் செந்தண்மை பூண்டொழுகும் அறவோர் அந்தணர் எனப்படுவாரென்பதும் வள்ளுவனார் கருத்தென்பது பெறப்படும்.

    இவ்வாறு வேதவழிச் செல்வதே தமிழ்வேதமாம் திருக்குறள் எனலாம்.
    பிறப்பால் மட்டுமே சாதியுயர்வைப் பேசுவாரை வேதமும் இழித்துரைக்கின்றது. ஈண்டு சந்தமறையும் தமிழும் வல்ல பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் கூறுவது கருதத் தக்கது.

    “ஸாமவேத வஜ்ரஸூசிகோபநிஷதம் – பிராமணத் தன்மைக்குரியது சீவனன்று, உடம்பன்று, சாதியன்று, கல்வியறிவன்று, கன்மமன்று, தன்மமன்று எனத் திருட்டாந்த வாயிலாக விளக்கிச் சுவானுபவப் பிரம ஞானமுடையவனே பிராமணனென்றோதி இதுவே, சுருதிஸ்ம்ருதி புராணேதிஹாசங்களின் அபிப்பிராயம் என்று முடிவுரை மொழிந்துளது. “

    “மஹாபாரதத்து வனபர்வத்து 206ஆம் அத்தியாயங்களிற் பகரப்பட்ட தர்மவியாதரென்னும் வேடரும் அந்தப் பாரதத்திற் பல இடத்துங் கூறப்பட்ட விதுரரென்னுஞ் சூத்திரரும் மகாஞானிகளா யிருந்தனர் என்பதை அறியலாம். இத்திறத்தோரும் பலரே.”

    “இன்னோர், பிராமணராகப் பிறந்திருந்த சன்மாந்தரத்தில் ஆர்ச்சித்த ஞானம் அழியாதிருந்ததினாற் பிரமநிட்டராயினரென்று அவர்கள்நிலைக்கொரு போக்குக் காட்டினும் அஃது அத்திறமுள்ளார் இக்காலத்து மிருப்பர், இனி வருங் காலத்துந் தோன்றுவரென்பதையும்; சன்மாந்தரத்தில் ஆர்ச்சித்த அறியாமை அநீதி. அநீதி அழியாம லிருந்தோரே அநீதிகளை யெழுதி வைத்தார், அவற்றைப் பிரமாணமாக வெடுத்துக் காட்டுகின்றாரென்பதையும்; பிரம வித்தைக்கும் பிரமோபாசனைக்கும் உரியோர் பிராமணசாதியிற் பிறந்தவரே யல்லால் இதரரல்லரென் றியம்பிக்கொண்டு கல்வி யறிவுமில்லாதிருப்போரும் அவரொத்தவரே யென்பதையும் நிலைநிறுத்தும்” எனப் பாம்பனடிகள் கூறுவது கருத்தில் இருத்தத் தக்கது..

    “பிரஜாபதியின் முகம், தோள், தொடை, காலெனுமிடங்களில் முறையே பிராமணனும், சத்திரியனும், வைசியனும், சூத்திரனும் பிறந்தனரென்று நுவறல் – முகம் (பிரம வித்தையாகிய ) வாக்குக்கும், தோள் வெற்றிக்கும், கால் ஒருவனைச் சரணடைந்து ஊழியஞ்செய் துயிர் வாழ்தற்கும், தோலுக்குங் காலுக்கும் இடையிலுள்ள தொடை நடுநாவுடைத் துலையினுக்கும் அருத்தமாதலைக் காட்டவல்லதாமேயன்றிப் பிறப்பிடமே அவைகளெனக் காட்ட வல்லதாகாது. வல்லதாமென்னின், மேற்சொல்லப்பட்ட சூதமுனிவரும், பிறமுனிவருள் வியாசர் முதலாயினார் பலரும் பிறப்பிடத்தா லிழிந்தோராவரெனுந் தீர்வை யேற்படும். இதுநிற்க.”

    “குறிப்பிட்ட தொழில்களை யுடையாரெல்லாம் அவ்வத்தொழில் இழைக்குங்காறும் அவ்வச்சாதியாரென விருத்தலுங் கண்கூடன்றோ. முனிவர் சரிதைகளையுங் கருதுக. பூணூல் பல தொழிலாளருந் தரிக்கின்றமையின் அதனையொரு பெரிதாக நினைப்பதும், இருபிறப்பாள ரென்பார் அத்துவித ஆன்மஞான வேதம் தமக்கே யுரித்தென்பதற்கியைய ஆசாரமுள்ள மற்றையர் அவ்வேதத்தைக் கைவிடலும் அறிவுடைமையாகா” (பரிபூரணானந்த போதம், சிவசூரியப்பிரகாசம். பக் 208-209)

  7. #526
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    chengkOl

    மன்னவன் செங்கோலே காரணமாக....

    “அந்தணர் நூற்கு மறத்திற்கு மாதியாய்
    நின்றது மன்னவன் கோல்” (543)

    என்னும் குறளில் அரசசாதியையும் செங்கோலின் மாட்சியையும் கூற வந்த திருவள்ளுவர், முதற்சாதியாகிய சிறப்புடைய அந்தணசாதிக்குரிய வேதத்திற்கும் அறத்திற்கும் மன்னவன் செங்கோலே காரணமாக நின்றது என்றார்.
    இந்தக் கருத்தின்வழி சென்றால், மன்னவன் செங்கோலின் வல்லமையே, அந்தணராவாரின் சாதியமைப்பிற்கும் அவர்கள் மக்களிடையே அடைந்த மேனிலைக்கும் காரணம் என்றாகிறது. நேரடியாகக் கூறினால், அந்தணர் என்பாரை அரசர்களே உண்டாக்கி, மன்பதையினுள் நடமாட விட்டனர் என்றாகிறது....

    இதைத்தான் வள்ளுவர் கூறினார் என்கிறீர்! So, it was the second jati (kings) who created the first jati (anthaNars), as per this research.

    எந்த அரசர் ஆட்சியில் அந்தணர்கள் நிறுவப்பட்டனர் என்று கூறுங்களேன் கேட்டு இன்புறுவோம்....
    B.I. Sivamaalaa (Ms)

  8. #527
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    பொருந்தாது....

    என்னும் குறளில் அரசன் ெங்கோல் முறையினால் உயிர்களைக் காவானாகில் கேடுகளாக அறனில்லாத அந்நாட்டுப் பசுக்களும் பால் குன்றும்; அறுதொழிலோராகிய அந்தணரும் தம்முடைய வேதக் கல்வியை மறந்து விடுவர் என்று கூறுகின்றார்.
    அரசாட்சி செவ்வையாய் நடைபெறாதவிடத்து, பசுக்கள் ஏன் பால் குன்றும் என்பது வியப்பாக உள்ளது...இவ்விரண்டிற்கும் ொடர்பொன்றுமில்லை.எவன் எப்படி யாண்டாலும் பசுக்களும் ஏனை விலங்குகளும் தம் குட்டிகளுக்குப் பால் தந்துகொண்டுதான் இருக்கும்.

    மேலும், மக்கள் நலம் கருதியே வேதங்கள் ஓதப்படுவன. காவலன் காவல் சீரழிவுற்றபோது, அஃது மீண்டும் சீர்படுதலை வேண்டி, வேத மந்திரங்கள் நன்றாக ஓதப்பட்டு, பூசைகள், அருச்சனைகள், வேள்விகள் முதலிய கூடுதலாக நடைபெறுதலே வேண்டற்பாலது என்பதை வேதங்களே காட்டுகின்றன.வெற்றியையும் வேறு நலங்களையும் (அவை குறைந்த காரணத்தால்) அவற்றை வேண்டிப் பாடப்பட்ட வேதப்பாடல்களை நன்கு கவனிக்கவும்.எனவே, வேதங்களை வேதியர் கைவிடுவர் என்ற உரை பொருந்தாது.
    B.I. Sivamaalaa (Ms)

  9. #528
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    References should be made to earlier posts in this thread on the same topic. For a view somewhat divergent to yours, you may refer to: http://www.mayyam.com/talk/showthrea...l=1#post162301.
    B.I. Sivamaalaa (Ms)

  10. #529
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    "ஆதி"யாகிய பகவன் ..."முதற்றே" : redundancy......

    ஆதி என்ற தமிழ்ச் சொல்லும் பகவன் என்னும் வடசொல்லும் சேர்ந்த தொகைச் சொல் ஆதிபகவன் என்பது. பகவன் தமிழ்ச் சொல்லாயின் ஆதிப்பகவன் என ஒற்று மிகவேண்டும் ஒற்று மிகாமல் ஆதியாகிய பகவன் என்னும் பொருளைத் தருதலால் இச்சொல் இருபெயரொட்டுப் பண்புத்தொகை யென்றும் இது வடநூன்முடிபு என்றும் பரிமேலழகர் கூறினார்.

    பகவன் என்பது ‘பகவான்’ என்னும் வடசொல் என்றும், பகவான் என்பது சிவனுக்குப் பெயர் என்றும், அதர்வசிகோபநிஷத், “யோவை ருத்ர: ஸ பகவான்” என முப்பது முறை கூறுகின்றது. சங்கார காரணனாகிய சிவனே உலகத்துக்கு ஆதி என்பது இதனால் உணர்த்தப்பட்ட பொருளாம்.

    “சங்கரோ பகவான் ஆத்யோ ரரட்ச ஸகலா: ப்ரஜா:
    மஹேசோ பகவான் ஆதி தேவ:”

    எனச் சரபோபநிஷதம் கூறுகின்றது. அதாவது சங்கரனுக்குத் தவிர ஏனையோருக்கு இறைமைக் குணங்கள் இல்லை. அவனே பகவான். எனவே ‘மஹேசனே பகவான்,
    சிவனே உலகத்துக்கு ஆதி என்பது இதனால் உணர்த்தப்பட்ட பொருளாம்
    இங்ஙனம் பரிமேலழகியார் கூறியுள்ளாரேனும், "ஆதி" என்பதும் "முதற்றே" என்பதும் ஒரே பொருளுடைய சொற்கள் என்பது இலக்கணம் படிக்காதவரும் அறிந்த ஒன்றாகும். எனவே, கூறியது கூறலெனும் குற்றமாகின்றது. இப்படிப்பொருள் கூறிக் குறளுக்கு இழுக்கு ஏற்படுத்தல் ஆகாது என்பதால், இவ்வுரை ஏற்புடைத்தாகாது. பிற தேவர்களை விலக்கி மொழிதற்பொருட்டு அடையாக இவ் ஆதிச்சொல் வந்ததென்பதும் சரியன்று. பகவன் என்பது ஒருமையில் இருப்பதால்,
    இறைவன் ஒருவனே என்று பொருள்பட்டு, பிற தேவர்களை இயல்பாகவே விலக்கிவிடும். அடைச்சொல் ஏதும் தேவை இலது.

    இக்காரணங்களால், இக்குறளுக்குப் பரிமேலழகர் தந்த விளக்கம் (the interpretation on particular words and not his view that Sivan is an absolute entity) தள்ளுபடிக்குரியது.
    Last edited by bis_mala; 31st August 2011 at 07:18 PM.
    B.I. Sivamaalaa (Ms)

  11. #530
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    missing finite verb

    பகவன் என்பது ‘பகவான்’ என்னும் வடசொல் என்றும், பகவான் என்பது சிவனுக்குப் பெயர் என்றும் (,........................................) அதர்வசிகோபநிஷத், “யோவை ருத்ர: ஸ பகவான்” என முப்பது முறை கூறுகின்றது.
    The Upanishad does not say which word is "vadasol" and which is not.
    There are some words missing in your quotation (the location indicated by dotted line within brackets.).
    Prepared to check it up?
    B.I. Sivamaalaa (Ms)

Page 53 of 56 FirstFirst ... 3435152535455 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •