Page 52 of 56 FirstFirst ... 2425051525354 ... LastLast
Results 511 to 520 of 555

Thread: THIRUKKURALH

  1. #511
    Member Junior Hubber
    Join Date
    May 2007
    Posts
    35
    Post Thanks / Like
    //சாத்தனார் நாயனாரை "பொய்யில் புலவன்" (பொய்யற்ற மெய்ப்புலவன்) என்று புகழ்ந்திருப்பதால், பார்ப்பன வெறுப்போ பெண்ணடிமை செய்யும் நினைப்போ மற்றெந்தக் குற்றமுமோ இல்லையென்பது தெளிவு.//

    இவ்வெறுப்பை செயற்கையாக பாதிரியார்களும் சுயனல அரசியல்வாதிகளும் தவறான தமிழ் ஆய்வாளர்களும் பரப்பினர்.தமிழர்கள் என்றுமே வேதங்களையும் அதை துணைகொண்டு இறைவனை அடைய உதவும் பார்ப்பனர்களையும் போற்றியே வாழ்ந்தனர்.

    அச்சு இயந்திரம் வருமுன் அனைத்து இலக்கியமும் செய்யுளாக மனனம் செய்து காப்பாற்றுதலெ இவற்றைக் காப்பாற்றியது.
    திருவள்ளுவர் வேதங்களையும் பார்ப்பனர்களையும் உயர்வாகவே போற்றும் தமிழ் மரபை பின்பற்றியுள்ளார். தமிழ் மக்களிடம் பழக்கத்திலிருந்த பலதார மணம், குடி, சூது, புலால் உண்தல் இவற்றை வன்மையாக கண்டித்தார்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #512
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    Quote Originally Posted by lathaji View Post
    //சாத்தனார்................தெளிவு.//

    இவ்வெறுப்பை.................... செயற்கையாக பாதிரியார்களும் சுயனல அரசியல்வாதிகளும் தவறான தமிழ் ஆய்வாளர்களும் பரப்பினர்.தமிழர்கள் என்றுமே வேதங்களையும் அதை துணைகொண்டு இறைவனை அடைய உதவும் பார்ப்பனர்களையும் போற்றியே வாழ்ந்தனர். ............திருவள்ளுவர் வேதங்களையும் பார்ப்பனர்களையும் உயர்வாகவே போற்றும் தமிழ் மரபை பின்பற்றியுள்ளார். தமிழ் மக்களிடம் பழக்கத்திலிருந்த பலதார மணம், குடி, சூது, புலால் உண்தல் இவற்றை வன்மையாக கண்டித்தார்.
    அதனால்தானே சில பிராமணர் வேதங்களை மறந்துவிட்டுப் போய்ப் படித்துக்கொண்டு வந்தனர் என்றும் ஒழுக்கம் குறைவுபட்டால் ஒரு பார்ப்பான் உடனே இழி பிறப்பினன் ஆவான் என்றும் கூறிய உரைகளை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.
    B.I. Sivamaalaa (Ms)

  4. #513
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    நூல்களை ஆராய்வான் ஒருவன்

    வீரராகவனார் உரை (காஞ்சிபுரம் 1939)

    மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
    பிறப்பொழுக்கம் குன்றக் கெடும். 134.


    நூல்களை ஆராய்வான் ஒருவன்,(அவைகளை ) மறப்பினும் (பின்னர் மறுபடியும்) ஆராய்ந்து அறியலாகும். ஆனால் மக்களது பிறவிக்குரிய உயரிய ஒழுக்கம் குறையுமாயின் அவன் அடியோடு கெடுவான்.

    இது திரு.வி.க அவர்களாலும் பார்க்கப்பட்டு அவரது "நவசக்தி" இதழில் வரவேற்கப்பட்ட உரைநூல்.
    B.I. Sivamaalaa (Ms)

  5. #514
    Member Junior Hubber
    Join Date
    May 2007
    Posts
    35
    Post Thanks / Like
    திரு மு.வரதராசனார் உரை
    கற்ற மறைப் பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவனுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடு்ம்.

    திரு மு.கருணாநிதி உரை
    பார்ப்பனன் ஒருவன் கற்றதை மறந்துவிட்டால் மீண்டும் படித்துக் கொள்ள முடியும்; ஆனால், பிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் ஒழுக்கத்திலிருந்து அவன் தவறினால் இழிமகனே ஆவான்.

    திரு சாலமன் பாப்பையா உரை
    பார்ப்பான் தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான்.
    Though he forget, the Brahman may regain his Vedic lore;
    Failing in 'decorum due,' birthright's gone for evermore.
    திரு.பரிமேலழகர் உரை
    ஓத்து மறப்பினும் கொளலாகும் - கற்ற வேதத்தினை மறந்தானாயினும் அவ் வருணம் கெடாமையின் பின்னும் அஃது ஓதிக்கொள்ளலாம், பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்.- அந்தணது உயர்ந்த வருணம் தன் ஒழுக்கம் குன்றக் கெடும். (மறந்தவழி இழிகுலத்தனாம் ஆகலின், மறக்கலாகாது என்னும் கருத்தான், 'மறப்பினும்' என்றார். சிறப்புடை வருணத்திற்கு மொழிந்தமையின், இஃது ஏனைய வருணங்கட்கும் கொள்ளப்படும்.)

    திருவள்ளுவர் குறளில் கூறியதை அவர் வழி நின்று கற்றலே பயிலும் முறை. திருவிக ஒரு ஆய்வில் பாயிரம் முழுமையும் இடைசொருகல் என்னும் ஊகத்தைப் பரப்பினார்.

    கிறிஸ்துவ பாதிரியார்களும் பொய்யான தமிழார்வலர்களும் தமிழின் மூத்த பழங்குடியினரான தொல்காப்பியர் முதான பார்ப்பனர்களை பற்றி பொய்யான பரப்பலகளைப் பரப்ப திருக்குறளுக்கு பொருந்தாத உரைகளை கூறிஉள்ளதை எல்லாம் இங்கே தொடர்ந்து வாந்தி எடுப்பது ஏனோ

  6. #515
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    வாந்தியா?!

    நீங்கள் குறிப்பிட்ட உரைகள் சில, திராவிட இயக்கத்தினருடையவை! அவை மறைக்குலத்தவரைக் குறைக்குலத்தவராய்க் காட்டக்கூடும் என்பதால் தள்ளுபடிக் குரியவை.
    B.I. Sivamaalaa (Ms)

  7. #516
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    Proper approach....

    Quote Originally Posted by xyz View Post
    .............திருவள்ளுவர் குறளில் கூறியதை அவர் வழி நின்று கற்றலே பயிலும் முறை. திருவிக ஒரு ஆய்வில் பாயிரம் முழுமையும் இடைசொருகல் என்னும் ஊகத்தைப் பரப்பினார்.

    உலகிலுள்ள வேற்று மொழிகளிலும் இடைச்செருகல்கள் பற்றிய ஆய்வுகளும் கருத்துரைகளும் உள்ளன. எனவே திரு வி.க இடைச்செருகல் பற்றி ஆய்வு செய்ததைச் சினந்துரைப்பதற்குக் காரணம் ஏதுமில்லை. இருக்கு வேததத்திலும் இடைச்செருகல்கள் உளவென்பர் ஆய்வாளர் சிலர். இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்! ஷேக்ஸ்பியர் நாடகமெல்லாம் இன்னொருவர் எழுதியதென்கிறார்களே, கேட்டதில்லையா? கம்பராமாயணத்தில் பல செருகல்கள் என்றார் டி.கே.சி. அப்படி இருந்தால் நாமென்ன செய்வது?
    One need not accept something which to her is not acceptable. Then she should reject that part of his output or statement. To reject the person in toto for that matter is not a proper approach to learning and research.

    Note:

    Rig Veda manuscripts were stored in Deccan College, Pune, from late 19th century. They are in the Sharada and Devanagari scripts, written on birch bark and paper. The oldest of them is dated to 1464. CE. The 30 manuscripts of Rigveda preserved at the Bhandarkar Oriental Research Institute, Pune.
    Last edited by bis_mala; 10th August 2011 at 02:29 AM. Reason: add note
    B.I. Sivamaalaa (Ms)

  8. #517
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    What VaLLuvan wanted to tell us....

    ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
    காவலன் காவான் எனின்.

    ஆ பயன் குன்றும்= ஆகும் பயன் குன்றும்; அறு தொழிலோர் = ( வஞ்சம் அல்லது குற்றம் யாதும்) அற்ற தொழிலுடையோர், நூல் = (அவரவர் தொழிலைப்பற்றிய கலை) நூல்களை ; மறப்பர் = (பின்பற்றித் தம் தொழிலை மேற்கொண்டு நடத்துதலைத் தொடரும் திறனும் நிலையும்) இழப்பர்; காவலன் = அரசின் முதல்வன்; காவான் = ஒழுங்காக ஆட்சி நடத்தவில்லை ; எனின் = என்றால்.

    காவலன் = நாடு காப்போன் , ஆகவே போலிஸ் எனினும் ஆம்.

    In this kuRaL, VaLLuvan was concerned with law and order situation in any country.

    அறு = அற்ற.
    Last edited by bis_mala; 7th August 2011 at 06:01 PM. Reason: use brackets & polish up
    B.I. Sivamaalaa (Ms)

  9. #518
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    முன் இடுகையின் தொடர்ச்சி:

    ஆபயன்:

    ஆபயன் - ஆகும் பயன். இஃது இலக்கணத்தில் வினைத்தொகையாகும். ஒரு நாட்டிற்கு ஆகும் பயன் என்பது பொருளியல் நிலைத்தன்மையும் அதன் மேம்பாடுமாகும். அரசு ஒழுங்காக நடைபெறாதபோது, பொருளியற் பயன்கள் குறைந்து சீரழிவு கூடிவிடும். எனவே நாட்டிற்குக் காவலாக இருப்போர், அரசியலைச் சீருடன் செலுத்துதல் வேண்டும் என்பது பொருள்.

    ஆகாறு (ஆகு+ஆறு, ஆகும் ஆறு) என்ற பழந்தமிழ்ச் சொல்லையும் ஒப்பு நோக்கி, ஆபயன் என்ற சொல்லின் பொருளையும் திறத்தையும் உணரவேண்டும். ஆகாறு என்பது வருவாய் என்று பொருள்தரும். அதேபோல், ஆபயன் என்பது பொருளியல் சீரான நிலைமையில் நின்று மக்கள் பயன்பெறுதலைக் குறித்தது.

    ஆபயன் என்பதில் வரும் "ஆ" பசுவைக் குறிப்பதன்று.
    Last edited by bis_mala; 8th August 2011 at 02:10 AM.
    B.I. Sivamaalaa (Ms)

  10. #519
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனைச்
    சான்றோன் எனக் கேட்ட தாய்


    இந்தக் குறளில் வரும் சான்றோன் என்ற பதத்திற்கு சரியான பொருள் என்ன? அறிவார்ந்தவனா? இல்லை வீரனா?
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  11. #520
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    Smile சான்றோன்

    Quote Originally Posted by venkkiram View Post
    ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனைச்
    சான்றோன் எனக் கேட்ட தாய்


    இந்தக் குறளில் வரும் சான்றோன் என்ற பதத்திற்கு சரியான பொருள் என்ன? அறிவார்ந்தவனா? இல்லை வீரனா?
    சான்றோன் : a wise, learned and respectable man
    (This is the meaning of the word in kuRaL.) .

    அறிவார்ந்தவன் is close to the meaning of the word.
    B.I. Sivamaalaa (Ms)

Page 52 of 56 FirstFirst ... 2425051525354 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •