Page 47 of 56 FirstFirst ... 374546474849 ... LastLast
Results 461 to 470 of 555

Thread: THIRUKKURALH

  1. #461
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    ariya pizaikaL.

    அரும் பிழைகள்


    போற்றின் அரியவை போற்றல்; கடுத்தபின்,
    தேற்றுதல் யார்க்கும் அரிது.

    693.

    போற்றின் = காத்துக்கொள்ள வேண்டுமென்றால்;

    அரியவை = அரும் பிழைகள் (நேராவண்ணம்);

    போற்றல்= காத்துக்கொள்ள வேண்டும்;

    கடுத்தபின் = அத்தகைய பிழைகளில் ஏதேனும் ஒன்று நேர்ந்துவிடுமானாலும்;

    தேற்றுதல் = அப்புறம் போய் அதைத் தெளிய வைப்பது;

    யார்க்கும் = எவருக்கும்;

    அரிது= கடினமாகப் போய்விடும்

    என்றவாறு.


    அரிது என்று ஒருமையில் முடிந்ததனால், "பிழைகளில் ஏதேனும் ஒன்று நேர்ந்தாலும்" என்று உரைக்கப்பட்டது.


    நீர் ஒரு பொறுப்பான வேலையில் இருக்கிறீர். உமக்குக் கீழிருப்பவர் சில பரிந்துரைகளைச் செய்கிறார். அதை நன்கு ஆராய்ந்து, " இதனால் தொல்லைகள் ஏதும் விளையுமா?" என்று நன்கு சிந்தித்து, பிறகு அப்பரிந்துரையை ஏற்றுச் செயல் படுவதா, அல்லது தள்ளுபடி செய்துவிடுவதா என்று முடிவு செய்ய வேண்டும்.

    அப்படி ஆய்ந்து ஓய்ந்து பாராமல், பிழைபடும் ஒரு காரியத்தைச் சிந்திக்காமல் செய்துவிட்டு, பிறகு அதைச் சரிப்படுத்தி விடலாம் என்றால், அது எளிதன்று. அது முயற்கொம்பாகிவிடும்.

    ஸ்பெக்றம் விவகாரம் இதற்கோர் எடுத்துக்காட்டு.

    Here Naayanaar is not concerned with common or routine faults. Ariyavai = those faults which may lead to dire consequences....
    Even one such fault will be enough to destroy you!!
    B.I. Sivamaalaa (Ms)

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #462
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    n-aaNudaimai

    ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல;
    நாணுடைமை மாந்தர் சிறப்பு.1011



    ஊண் = உணவு; உடை = ஆடை; எச்சம் =( உயிர்களுக்கு) உரிய பிற; உயிர்க்கெல்லாம் = உயிர்களுக்கெல்லாம்; வேறு அல்ல = ஒன்றேதான்;

    நாணுடைமை = தகாதவை மனம், மொழி, மெய்களில் தொடர்பு படுதலை எண்ணி வெட்கி விலகுவது;

    மாந்தர் = மக்கள் ஆவார்தம் ;

    சிறப்பு = வேறுபடுத்திக் காட்டும் உயர்வு ஆகும்.

    சில ஓலைச்சுவடிகளில் எச்சம் என்பது அச்சம் என்று உள்ளதாகக் கூறுவர் ஆய்வாளர்
    B.I. Sivamaalaa (Ms)

  4. #463
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    which is its permanent residence?

    ஒரு நாளைக்கு ஒன்று என்று குறளை ஓதலாம் என்றாலும், வாழ்வின் அன்றாட செயல்பாட்டு நெருக்கடிகளால், அதுகூட முடியவில்லை. ஆகவே நல்ல நூல்களை மிக முயன்று படிக்கவேண்டியுள்ளது.

    இப்போது ஒரு குறளை ஓதியறிவோம். உடம்பில் உயிர் எங்கே இருக்கின்றது என்று அறிய முடிவதில்லை. நெஞ்சிலா? தலைப் பகுதியிலா? வேறு எவ்விடம்...என்று தேடிப் பார்க்கிறோம்.

    உடலில் இருந்துவிட்டு, என்றாவது ஒருநாள் ஓடிவிடுகிறது...எங்கே போய் விடுகிறது?

    இதையும் அறிய முடிவதில்லை.

    நிலையான வீடு அமையவில்லை, உயிருக்கு!

    புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
    துச்சில் இருந்த உயிர்க்கு.
    340.
    B.I. Sivamaalaa (Ms)

  5. #464
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    How to avoid affliction, sorrow, distress, trouble, etc.....

    இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
    துன்பம் உறுதல் இலன் - 628


    இன்பம் எனும் ஒன்றை விரும்ப மாட்டான்; துன்பம் என்பது என்றும் எங்கும் எவர்க்கும் வருவதுதான் என்பான்; அத்தகையவன் என்றும் துன்புறுவதில்லை.

    துன்பம் என்பது வாழ்வில் இயல்பானது என்பதறிந்தால், பிறகு துன்புறுதல் இல்லையே!.

    "பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம், பிறவார் உறுவது பெரும்பேரின்பம்" என்கிறார் மணிமேகலையில், சாத்தனார். அது வேறு கருத்து அன்றோ? (just from memory....). Check the book for accuracy.
    B.I. Sivamaalaa (Ms)

  6. #465
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    ozukkam

    மறப்பினும் ஓத்துக் கொளலாகும்; பார்ப்பான்
    பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்.

    ஓத்து = ஓதுதலை;
    மறப்பினும் = மறந்துவிட்டாலும்;
    கொளல் ஆகும் = அதனை ஏற்றுக்கொள்வது கூடும்;
    பார்ப்பான் = கோயிற்காரியங்கள் அல்லது நூல்கள் பார்ப்ப-
    வன்;
    பிறப்பொழுக்கம் = பிறந்த ( குடியின் )் ஒழுக்கத்தினை;
    குன்ற = குறைவுபட விட்டுவிட்டால்;
    கெடும் = (அது மாற்றவியலாத ) கெடுதலை உண்டுபண்ணிவிடும்.

    இதனால், ஒழுக்கத்தின் இன்றியமையாமை உரைக்கப்பட்டது.

    ஓதுதலை மறத்தல் : ஓதும் தொழிலையே நிறைவேற்ற மறத்தல்
    ஒன்று; மற்று, ஓதுகையில் சொற்களையும் (மந்திரத்தையும்)
    சொற்பொருளையும் மறந்துவிடுதல் இன்னொருவகை மறப்பாகும்.


    குன்றக் கெடும் = குன்றினால், கேடுகள் பலவும் உண்டாகும்
    என்பதாம். குன்ற = குன்றினால்.
    Last edited by bis_mala; 14th February 2011 at 05:01 AM.
    B.I. Sivamaalaa (Ms)

  7. #466
    Junior Member Newbie Hubber
    Join Date
    Aug 2005
    Posts
    1
    Post Thanks / Like
    how to install tamil fonts?

  8. #467
    Member Junior Hubber
    Join Date
    May 2007
    Posts
    35
    Post Thanks / Like
    குறள் 134:
    மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
    பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.

    Translation:
    Though he forget, the Brahman may regain his Vedic lore;
    Failing in 'decorum due,' birthright's gone for evermore.
    Explanation:
    A Brahman though he should forget the Vedas may recover it by reading; but, if he fail in propriety of conduct even his high birth will be destroyed.
    கலைஞர் உரை:
    பார்ப்பனன் ஒருவன் கற்றதை மறந்துவிட்டால் மீண்டும் படித்துக் கொள்ள முடியும்; ஆனால், பிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் ஒழுக்கத்திலிருந்து அவன் தவறினால் இழிமகனே ஆவான்.
    மு.வ உரை:
    கற்ற மறைப் பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவனுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடு்ம்.
    சாலமன் பாப்பையா உரை:
    பார்ப்பான் தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான்.

  9. #468
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    "Paarppaan"

    பார்ப்பான் என்ற சொல்லுக்கு, பெரும்பேராசிரியர் மறைம-
    லையடிகளார் சொன்ன பொருள் , கோயிற்காரியங்கள் பார்-
    ப்பவன் என்பது.

    ஓரிரண்டு ஆண்டுகளின்முன் நம் நேயர்கள் இவ் விணையதள-
    த்தில் கூறியது: "நூல்களைப் பார்ப்பவன்" என்பது.

    இரண்டையும் அணைத்துச் செல்கிறது என் உரை.

    திருவள்ளுவர் காலத்தில், நூல்கள் ஏட்டுருவை இன்னும்
    அடையவில்லை என்பது மெய்ப்பிக்கப் பட்டால், நூல்கள்
    பார்ப்பவன் என்ற பொருளில் மாற்றம் தேவைப்படலாம்.

    பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர், ஐயர் யாத்தனர்
    கரணம் என்ப என்பது தொல்காப்பியம், அது நினைவுக்கு
    வருகிறது. பொய்யும் வழுவும் தோன்றாது மக்களை மேற்பார்-
    ப்பவர் "பார்ப்பார்" என்று சுட்டப்பட்டிருத்தலும் கூடும்.
    மறையோதுவோர் மக்களை நன்னெறிப்படுத்துவோர் அல்லது
    அக்கடமை உடையோர் என்பதனால் இப்பெயர் வந்திருப்பி-
    ன் சாலப் பொருத்தமே.
    B.I. Sivamaalaa (Ms)

  10. #469
    Member Junior Hubber
    Join Date
    May 2007
    Posts
    35
    Post Thanks / Like
    ஜன்மநா ஜாயதே ஸூத்ர: ஸம்ஸ்காராத் த்விஜ:
    வேத பாடாத் பவேத் விப்ர: பிரம்ம ஜாநா நீதி பிராம்மண:

    என்பது புராண வாக்கியம். பிறப்பினால் எல்லோரும் சூத்திரர்களே. உபநயன ஸம்ஸ்காரத்தினால் த்விஜன் ஆகிறான். வேதங்களைப் படிப்பதினால் விப்ரன் ஆகிறான். பிரம்மத்தை உணர்ந்தவன் பிராமணன் ஆகிறான். இதில் த்விஜன் என்ற ஸம்ஸ்கிருதப் பதத்திற்குத்தான் தமிழில் 'இரு' பிறப்பாளன் 'பார்ப்பனன்' என்று சொல்லப்படுகிறது. நக்கீரர் திரு முருகாற்றுப் படையில் "இருபிறப்பாளன் பொழுதறிந்து நுவல" என்று பிராமணர்களின் சந்தியா வந்தனத்தைக் குறிப்பிடுகிறார். "ஒரு பிறப்பும் எய்தாமை யுடையார் தமை உலகியப் பின் இருபிறப்பின் நிலமையினைச் சடங்கு காட்டி" என்று உபநயனச் சடங்கினைச் சேக்கிழார் சுட்டுகிறார். அதேபோன்று தான் த்விஜன் என்ற சொல்லுக்கு நேர் தமிழ் பார்ப்பான்-பார்ப்பனன் என்பதும்.

    பிராமணன் வேதத்தை மறந்தாலும் பின் கற்றுக்கொள்ளலாம். ஆனால், குல ஓழுக்கத்தைவிட்டால் எல்லாமே கெடும் என்று சொல்ல வரும் பொழுது,

    மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
    பிறப் பொழுக்கம் குன்றக் கெடும்.

    என்று திருவள்ளுவர் கூறுகிறார். இங்கே பிராமணரைக் குறிப்பிடும்பொழுது பார்ப்பான் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்.

    "இன்னா ஓத்தில்லாப் பார்ப்பான் உரை"

    என்று இன்னா நாற்பது என்ற நூல் கூறுகிறது.

    (ஓத்து = வேதம் = ஓதுவது ஓத்து)

    பார்ப்பார்த் தப்பிய கொடுமையோர்க்கும் அதாவது பிராமணனுக்குச் செய்த கொடுமை "பார்ப்பார்த்த புதலும்" என்று புறநானூற்றில் வருகிறது. பிறர் பொருளை வஞ்சித்துக் கொள்ளக் கருதி அவரது சோர்வு பார்ப்பார் மாட்டு உண்டாது என்று சொல்லவரும்பொழுது "பார்ப்பார்" என்ற சொல்லைப் பயன் படுத்துகிறார். ஆகையினால், பார்ப்பனன் என்ற சொல் உயர்ந்த கௌரவமான (degnified) சொல்லே. அது derogatory இழிவுபடுத்துகிற சொல்லே அல்ல.

    அடுத்து விப்ரன் என்று பதத்திற்குத்தான் தமிழில் மறையோன் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்.

    "மறையென மொழிதல் மறையோர் ஆறே"

    என்று தொல்காப்பியம் கூறுகிறது.

    நிகண்டு திவாகரம் (தமிழ் அகராதி) Tamil Laxicon

    "மந்திரி-ஆசான்-மறையோன்-வியாழம்"

    என்று கூறுகிறது.

    அடுத்து பிராமணன் என்ற பதத்திற்குத் தமிழில் "அந்தணன்" என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்.

    "அந்தணன்" என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்
    செந் தண்மை பூண்டு ஓழுகலான்"

    என்ற குறளால் குறிப்பிடுகிறார்.

  11. #470
    Member Junior Hubber
    Join Date
    May 2007
    Posts
    35
    Post Thanks / Like
    // For the Benefit of all Viewers - I take from Madurai Kamarajar University’s Kural Peedam established by
    Dr. Mu.Varadarajanar, and Peedam selected Lecturer. Selvi.Kamatchi Sinivasan, who was born in a Saivite family in Srilanka, came to India, served various collages before Joining the Kural Peedam. She had converted to Christianity also. She was of highest repute for integrity, and Peedam asked her to bring Books

    1. குறள் கூறும் சமுதாயம்
    2. திருகுறளும் விவிலியமும் (Tirukural and Bible)
    3. குறள் கூறும் சமயம் ( Religion of Tirukural) and One more also.

    The books were published by Peetam after the death of the Author, i.e., the views represented edited by A team of Experts who made final Edition.
    The Author was selected for Her Strict Integrity, being a Christian Convert- as that was the time Deivanayagam was making with the political support of DMK rule and Pavanar links that Tiruvalluvar was Christian and Tirukural is a book based on Bible. The end result was that the Author Madam lost her beliefs on Christianity on researching Bible. Now let me come to the references of Anthanar in this.


    அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர் க்கும்
    செந்தண்மை பூண்டொழுக லான். 30

    The author of the book analysises the Relligious situation in Tholkappiyam to and takes all references of every song in Sangam Literature, Tholkappiyam, Silapathikaram and Manimekhalai and confirms the research view.

    I QUOTE:
    அந்தணர் நு¡ற்கும் அறத்திற்கும் தியாய்
    நின்றது மன்னவன் கோல். 543

    அந்தணர் என்னும் சொற்கு எவ்வுயிர்கும் செந்தண்மை பூண்டொழுகுவோர் என வள்ளுவர் கூறினாராயினும் இங்கு அச்சொல் பிரமாணரைக் குறிப்பதாகக் கொள்வதெ பொருந்தும். அந்தணர் நூல் என்பதும் வேதம் முதலிய சமயனூல்களையே எனலாம். இவ்வாறே பழைய உரையாசிரியர்கள் அனைவரும் பொருள் கொண்டனர்.
    அறுதொழிலோர் என சிரியர் குறிபிட்டதும் பிரமாணர்களையே யாதால் வேண்டும். ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல் ஏற்றல் என்னும் று தொழில்கள் அவர்க்குரிய என்பது சங்க காலத்தில் முன்பெ வகுக்கப்பட்டது. இவ்வாறு தொழில்கள் பதிற்றுபத்தினுள்ளும் குறிப்பிடப்பட்டுள்ளன.

    ஓதல் வேட்டல் அவைபிறர்ச் செய்தல்
    ஈதல் ஏற்றல் என்று றுபுரிந்து ஒழுகும்
    அறம் புரி அந்தணர் .. .. பதிற்றுபத்தது 24.
    தொல்காப்பியரும்
    “ அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும் சொல்-75
    எனப் பார்ப்பனரின் அறுதொழிலைக் குறிப்பிட்டார். வேதம் முதலிய சமயநூல்களைக் கற்பது சிறப்பாக அந்தணர் (பிரமாணர்) கடமை என அக்காலத்து நிலவிய கருத்தை வள்ளுவரும் ஏற்றுக் கொண்டார் போலும்.
    ஓதுவித்தலும் அவர்கள் தொழில் கையினால் அந்தணர் அல்லாத பிறர்க்கும்
    (மன்னவர் வணிகர் குலத்தவரா?) வேதம் முதலிய நூல்களைக் கற்பித்த்வர் எனக் கருதலாம்.

    பயன் குன்றும் அறுதொழிலோர் நு¡ல்மறப்பர்
    காவலன் காவான் எனின். 560

    மக்கள் வாழ்க்கையில் வேதம் முதலிய சமையநூற்கல்விக்கு இடம் உண்டு, அவை மக்கட்கு நன்மை பயப்பன என்ற கருத்து ஏற்றுக் கொள்ளப் படுவதனாலேயே அவற்றை தரிப்பது மன்னனின் கடமையாயிற்று.
    காவலன் காவானெனின் அறுதொழிலோர் நு¡ல்மறப்பர் என எச்சரிக்கப் படுவதும் சமய நூல்கள் மறக்கப் படுதல் சமுதாயத்திற்கு கேடு எனக் கருதப் படுவதனாலேயே.

    மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
    பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். 134

    இக்குறள் பார்ப்பாரையும் அவர் ஓதும் வேதத்தையுமே குறிக்கிறதென்பது தெளிவு. “மறப்பினும் ஓத்துக் கொளலாகும்” (134) என்ற தொடரும் பார்ப்பான் ஓத்தை(வேதம் ஓதக்கற்றதை) மறத்தலாகாது. ஒருகால் மறப்பினும் விரைவில் திரும்ப ஓதிக் கற்றுக் கொள்ளல் வேண்டும் என்ற் கருத்தைத் தரும்
    பக்கம்-194,195.

    On Kural which was interpreted as Valluvar being against Vedas, the Peedam Author again confirms

    அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
    உயிர்செகுத் துண்ணாமை நன்று. 259
    தீ மூட்டி செய்யப் படும் வேள்வியைக் ரிய வழிபாடு முறையையே குறிப்பிடப் படுகின்றது. தேவர்களுக்கு உணவாகத் தீயிலிடபடும் பொருளையே வடமொழியில் ஹவிஸ் என்பர், அதுவே தமிழில் “அவி” யாயிற்று, .. அவிப்பொருள்களை நெருப்பில் சொரிந்து யிரம் வேள்வி செய்வதை விட ஒன்றின் உயிர் செகுத்து அதன் ஊனை உண்ணாமை நன்று என வள்ளுவர் இங்கு கூறினார். இதனால் வேள்வி தீயது என வள்ளுவர் கருதினார் எனல் குமா? வேள்வியையும் நல்லதாகக் கருதித்தானே வேள்வி செய்தலை விடக் கொல்லாமை நன்று என்றார். .. .. ரிய வேள்விக்களத்திலுமே உயிர்க்கொலையும் விலங்குபலியும் இல்லை. பசுயாகம் எனப்படும் சில வேள்விகளில் மட்டுமே விலங்குபலியளிப்பர். நெய், பால், தானியங்கள் தானியங்களினால் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் கியவற்றை நெருப்பிலிட்டும் வேள்விகள் செய்வர் ( Author quotes this from " INDIA OF THE AGE OF THE BRAMANAS" book-iii, CHAP-2, The forms of Sacrifice- by Basu, Dr.Jogiraj.). எனவே உயிர்க் கொலையின்றி இவ்வாறு செய்யப்படும் வேள்விகள் வள்ளுவர்க்கு உடன்பாடு என்றே கொள்ளலாம். பக்கம் - 192,193.//
    From Page-14 by Devapriya

Page 47 of 56 FirstFirst ... 374546474849 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •