Page 46 of 56 FirstFirst ... 364445464748 ... LastLast
Results 451 to 460 of 555

Thread: THIRUKKURALH

  1. #451
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    Treatment of other persons and creatures....


    தமக்கு வந்த துன்பம்போல் கருதிச் செயல்படாதவிடத்து.....




    அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின் நோய்
    தம் நோய்போல் போற்றாக் கடை.

    (315)

    அறிவினான் = அறிவினால்; ஆகுவது = விளையும் பயன்;
    உண்டோ = ஏதும் உள்ளதோ; பிறிதின் நோய் =
    வேறோர் உயிரின் நோயை; தம் நோய் போல் = தமக்கு வந்த துன்பம்போல், போற்றாக்கடை = கருதிச் செயல்படாதவிடத்து எ-று.

    எனவே, பிற உயிர்கட்கு இன்னா செய்தலாகாது , அதுவே அறிவுடைமை என்கிறார் நாயனார்.
    B.I. Sivamaalaa (Ms)

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #452
    Member Junior Hubber
    Join Date
    Apr 2005
    Location
    UK
    Posts
    75
    Post Thanks / Like
    எதனால் திருக்குறள் சைவ சமயச்சார்புடையது/போன்மையுடையது? என்பதே இங்கு பெரிய விவாதமாக இருக்கிறது...

    பொருள், யாக்கை முதலிய நிலையானவை அல்ல என்றாலும், அவை இவ்வுலக வாழ்க்கைக்கு வேண்டிய கருவிகள் என்பதையும் நாயனார் நன்கு எடுத்துக் கூறியுள்ளார். இதுவே நடுநிலை பிறழாத நல்ல கொள்கை.

    பிறரைக் காட்டிலும் ஒரு சைவ சமயப் பெரியாருக்கே இத்தகைய நடுநிலை நெறி கைவரும் என்பது கருதத்தக்கது.
    யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை, இளமை நிலையாமை - ஆதலால் காம ஆசையைத் துறக்கச் சொல்கிறது சைவ சமயம்... பெண்ணாசயைத் துறக்கச் சொல்வது தவிர இன்புற அனுபவிக்கச் சொல்லவில்லையே சமயங்கள் நேரடியாக... திருக்குறளைப் போன்று? அதில் தான் வேறுபாடு விளக்கமாக வெளிவருகிறது.. மற்றபடி அறத்துப் பாலில் வரும் நடுவு நிலைமை இரண்டிலும் உண்டு அல்லவா?
    ஏதோ என் அறிவுக்குப் பட்டதை கேள்வி எடுத்துரைத்துள்ளேன்... ஆனால் என் வாக்கு வாதம் முற்றிலும் சரி என்று கூற இயலாது...

  4. #453
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    A receptacle for misery....


    இடும்பைக்கே கொள்கலம்



    இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக் // குற்றம் மறைப்பான் உடம்பு.
    1029


    நாயனார் பெரிய குடும்பக்கலை வல்ல அரும்பெரியார்.
    ஒரு குடும்பக்காரனுக்குத்தான் எத்தனை அல்லல்கள்? எதையெதையெல்லாம் அவன் சரிசெய்துகொண்டு இவ்வுலகில் வாழ்க்கையைத் தொடரவேண்டியுள்ளது?
    அக்குடும்பத்துக்கு ஒரு வீழ்ச்சி ஏற்பட்டுவிடக்கூடாது என்று கண்ணுங் கருத்துமாகச் செயல்படவேண்டி யுள்ளதே! அதனால், மன அழுத்தம் மிகுந்து, அவனுடலும் வெகுவாகப் பாதிக்கப்படும் நிலை உண்டாகிவிடுகிறதே!
    மன அழுத்தத்தின் காரணமாக, மாரடைப்புமுதல் புற்று நோய்வரை வந்த நோய்களேதும் மிகுவனவே தவிர , அவற்றுள் ஏதும் குறைந்து நலம்பெறுவதாய்க் காண முடியவில்லையே!

    குடும்பத்தைக் குற்றம் மறைப்பான் = குடும்பத்துக்கு ஏற்படும் இடர்களைச் சரிப்படுத்திக்கொள்ள முயன்று உழலும் அவன் ,
    உடம்பு இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ = துன்பங்களையே உள்வாங்கிச் சுமக்கும் பாத்திரமோ (அவன்) உடம்பு?

    இப்படி குடும்பத்தலைவன்பால் மனமிரங்கும் உள்ளம், நாயனாரின் உள்ளம்.

    துன்பம் வருங்கால் நகுக என்கிறாரே, துறவு பூண்டு ஓடிவிடு என்கிறாரோ!! மனம் இரங்கவும் செய்கிறார் அல்லவா?
    B.I. Sivamaalaa (Ms)

  5. #454
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    valluvar saivite

    Quote Originally Posted by sar
    எதனால் திருக்குறள் சைவ சமயச்சார்புடையது/போன்மையுடையது? என்பதே இங்கு பெரிய விவாதமாக இருக்கிறது...

    பொருள், யாக்கை முதலிய நிலையானவை அல்ல என்றாலும், அவை இவ்வுலக வாழ்க்கைக்கு வேண்டிய கருவிகள் என்பதையும் நாயனார் நன்கு எடுத்துக் கூறியுள்ளார். இதுவே நடுநிலை பிறழாத நல்ல கொள்கை.

    பிறரைக் காட்டிலும் ஒரு சைவ சமயப் பெரியாருக்கே இத்தகைய நடுநிலை நெறி கைவரும் என்பது கருதத்தக்கது.
    யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை, இளமை நிலையாமை - ஆதலால் காம ஆசையைத் துறக்கச் சொல்கிறது சைவ சமயம்... பெண்ணாசயைத் துறக்கச் சொல்வது தவிர இன்புற அனுபவிக்கச் சொல்லவில்லையே சமயங்கள் நேரடியாக... .
    எப்படி, சைவ சமயம், துறவை முன் நிறுத்துகிறது என்று கருதமுடியும்?

    சிவனார், பார்வதியுடன் திகழ்கின்றார். முருகப்பெருமான், வள்ளி தெய்வானையுடன் அருள் பாலிக்கிறார்.கணேசருக்கும் இரு மனைவியர் உள்ளனர் என்று கூறப்படுகிறது.சைவ சமயத்தில் தெய்வங்களே இல்லற வாழ்வுக்கு எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன.

    இல்லறத் துறவும் உள்ளது. ( இராமகிருஷ்ண பரம அம்சரைப்போல).

    இல்லறத்திலிருந்து துறவு மேற்கொண்டோரும் உளர்.

    துறவறம் முன் நிறுத்தப்படவில்லை.

    வள்ளுவனாரும் இல்லறவாழ்வில் இணைந்திருந்ததாகவே சொல்லப்படுகிறது.

    வள்ளுவர் சைவப்பெரியார் என்றே பேரா, டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளை* சொல்கிறார்.

    Pl also read my post Posted: Thu Sep 23, 2010 3:32 am Post subject: malar misai EkinAn - in this thread.

    Note

    *Prof. R.P.Sethu Pillai, D.Lit., "திருவள்ளுவர் நூல்நயம்", சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.

    Asceticism is not a prescription for the general public in saivism, it is a matter of individual choice. It is a calling. Anyone is free to renounce. Compare sufism is Islam, or celibacy of the priesthood and religious orders in Catholicism.
    B.I. Sivamaalaa (Ms)

  6. #455
    Member Junior Hubber
    Join Date
    Apr 2005
    Location
    UK
    Posts
    75
    Post Thanks / Like
    காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றும் குற்றங்கள் அல்லவா...?
    சைவ சமயத்தின் படி... ta.wikipedia.org/wiki/சைவ_தத்துவங்கள்

    திருக்குறளிலும் காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றும் நோய் அறிகுறிக்கான காரணங்கள் என்றும் குறிப்பிடப் பட்டும் உள்ளது...

    காமம் வெகுளி மயக்கம் இவ்முன்றன்
    நாமம் கெடக்கெடும் நோய்

    பொருள்: காமம், வெகுளி, மயக்கம் என்னும் இவை மூன்றின் பெயர்களைக்கூட உள்ளத்திலிருந்து அறவே நீக்கிவிட்டால், பிறவித் துன்பமும் கெடும்.
    http://thatstamil.oneindia.in/art-culture/kural/36.

    மற்ற படி... கடவுளே இல்லற வாழ்விற்கு எடுத்துக் காட்டி விளங்குகிறார்கள் என்பதை மறுக்க முடியாது.... மேலும் காதல் உணர்ச்சி கட்டுப்படுத்தப் பட வேண்டியது என்றாலும் அது தான் இயற்கையும் கூட... அதனால் தான் காமத்துப் பால் இருக்க்கிறது...
    சக்தி இல்லையேல் சிவம் இல்லை... சிவம் இல்லையேல் சக்தி இல்லை.... ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின் பெண் இருக்கிறாள்... இல்லறம் அல்லது நல்லறம் அன்று... போன்றவை ஆண்பெண் வாழ்க்கைத் துணைக்கு இல்லற வாழ்விற்கு உகந்தவை...

    ...ஆனாலும் சமயங்கள் காம இச்சையை ஆதரிக்காதது போலவே அபிமானம் எனக்கு இது வரைக்கும் ஏனோ இருந்து வந்துள்ளது... 'குடும்பத்தில் எப்படி இருக்க வேண்டும்' என்ற புத்தகத்தில் இந்து மதத் துறவி சாமியார் ஒருவர் (சுவாமி சித்பாவனந்தர்??!! என்ற சந்தேஹம்) இல்லற வாழ்வில் பிள்ளைகள் பெற்ற பின் ஒரு சில ஆண்டு நிலைக்குப் பின் காம சுகத்தில் நாட்டம் கொள்ளலாகாது என்று கூறியபடிததது போல் ஞாபகம் உள்ளது...

    சில சமய இலக்கியங்களிலோ காமத்தைப் புறந்தள்ளுவதே கடவுள் பக்தியின் லட்சிய நோக்கம் போன்று படித்திருக்கிறேன்...

    மிக்க நன்றி... சற்று தெரிந்த வரை எடுத்துரைத்தால் நலம்...

  7. #456
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    The sociology of Saivism in particular and other concepts i

    The Sociology of Savism in particular and other concepts in general


    It is actually a matter of what I would like to call "social engineering": The aim has always been to strike a delicate balance between opposing forces. The prevention of overindulgence in anything that brings about its ugly consequences.

    At a time when there was no police, no courts, no written law, what else could mankind do? Those in charge of society or social groups had the duty, which was abundantly theirs, to allow what should be allowed and to prescribe the point at which the brakes should be applied.

    Different societies at different times had tried different methods, with results sometimes differing and sometimes similar. Society allowed love, but not sensual indulgence in it, which is called lust (or kaamam) which if left unchecked, would definitely carried certain people who were unable to control themselves into committing rapes and assaults with intent to outrage modesty of women. Or otherwise producing unwanted children, who grew up and became a menace to society. The rulers themselves promoted and rewarded poets who specialised in composing on aram (or virtues). The poets had an important place in society in this respect. Religion too had its important place in the history of social development.

    Saivam had and does have its own way of dealing with development of society.

    But unfortunately, in order to confirm themselves in their calling and check themselves from slipping into kaamam, ascetics of India often unleashed an unwarranted attack on women. It is their struggle with their inner selves, and often was symptomatic of some sort of weakness in them. Such attacks brought about some consolidation and steadiness in them. A better method was shown by Sri Ramakrishna, allowing annai Saaradadevi to be with him and yet not despising her gender to steady oneself nor indulging in her feminine attraction in any covert manner. But if one was not able to rise up to that standard, it may be deplorable albeit considered acceptable to achieve in asceticism somehow by attacking those "allurements" in life. It would be worse to deceive oneself by practising stealth to enjoy sensual pleasures, in a double-faced manner. These may then be considered different methods of achieving it. Different methods may bear fruit in the case of different persons.

    Note that Karaikkaal Ammaiyaar did not have to invoke masculine gender hostility to achieve her goal. This I would say is a better method.

    Gender is installed by the creator herself or himself, who has no gender herself or himself. In another view, both genders are in her or him. Gender is divine. It is natural. We deeply respect it.

    Nothing comes without a struggle. The struggle is within oneself. The various theories and propositions to achieve in the struggle and attain, are just manifestations of that inner struggle.

    Swami Chitpavananda's advice? He probably never got married in the first place. He is repeating what Mahatma advised in his book.
    Do you know some people are accusing the Mahatma of neglecting his wife and of having beaten her in the process. I know of a case where the husband became too religious and kept away from his wife, the wife ran way with a neighbour, in the end the husband committed suicide out of shame or whatever......Ensure that you have proper safeguards in place before following any advice....Life is that not that simple.......Books are books....Anybody can publish anything....( other than what is prohibited by the municipal laws in place). Of course we respect the Swami ji and also the Mahatma. Practicality of advice is a different matter.


    Population control in the old world of bygone days was achieved by taking the husband away and putting him in a monastery after a betrothal. He became released after serving his "internment". Read history of other countries as well.... The Chinese and the Muslims realised the benefit of having a very large population, with expansion in view. Nabi liberalised marriage laws. In countries where Hindus are a minority, the democratic process will ensure that their rights are eroded, unless the non-Hindu majority population is willing to share....

    Well, I will stop here.
    B.I. Sivamaalaa (Ms)

  8. #457
    Member Junior Hubber
    Join Date
    Apr 2005
    Location
    UK
    Posts
    75
    Post Thanks / Like
    திரு செல்வி சிவமாலா அவர்களே,
    நிச்சயம் நீங்கள் கருத்துரைத்த வண்ணம் மிகவும் பாராட்டுக்குரியது... ஆண் பெண் அபிலாசைகளைக் கட்டுப் படுத்த வேண்டிய அவசியமே ஒழிய காமத்தை அறவே ஒழித்தாகவேண்டும் என்ற அவசியம் இல்லை... இயல்பான வாழ்க்கையில் இணைந்து இருந்து கடவுளை அடைவதே வாழ்க்கையின் லட்சியம்... அதற்கு துறவிகள் துணை புரிகிறார்கள்... எல்லோரும் துறவிகள் என்பது சாத்தியமே இல்லை... எல்லோர்க்கும் பங்கு உண்டு சமுதாய முன்னேற்றத்தில்... அதனாலே தான் இல்லறவியல் துறவறவியல் என்று இரண்டுமே இருக்கிறது... முக்கியமாக காமம் வெகுளி மயக்கம் இக்குறட்பா துறவறவியலில் வருகிறது என்பது தான் கவனிக்க வேண்டியது...சமுதாயக் கட்டுப்பாடு... அவ்வளவு தான்... அதையும் மதங்கள்/ சமயங்கள் தங்கட்குள் வைத்திருக்கின்றன... அது காலத்திற்கு எவ்வாறு ஏற்றது என்பதே இங்கு கேள்விக் குறி... தங்கள் விளக்கம அறிவார்ந்தது மிகவும் நன்றி..

  9. #458
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    nanRi

    Quote Originally Posted by sar
    திரு செல்வி சிவமாலா அவர்களே,
    நிச்சயம் நீங்கள் கருத்துரைத்த வண்ணம் மிகவும் பாராட்டுக்குரியது... .................................................. .......... தங்கள் விளக்கம அறிவார்ந்தது மிகவும் நன்றி..
    You are welcome.
    B.I. Sivamaalaa (Ms)

  10. #459
    Member Junior Hubber
    Join Date
    Apr 2005
    Location
    UK
    Posts
    75
    Post Thanks / Like
    பின் வரும் குறட்பாவில் உள்ள வார்த்தைகளில் சந்தேஹம் உள்ளது...

    அமைச்சு
    636. மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
    யாவுள முன்நிற் பவை.

    Translation :
    When native subtilty combines with sound scholastic lore,
    'Tis subtilty surpassing all, which nothing stands before.
    Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
    Explanation :
    What (contrivances) are there so acute as to resist those who possess natural acuteness in addition to learning ?.


    my understood MEANING (OWN PERSONAL INTERPRETATION):

    FOR THOSE HAVING MENTAL INTELLECT (BRAIN ABILITY) THAT TOO WITH GOOD BOOKS AS GUIDANCE, WHAT ELSE STANDING INFRONT COULD BE MORE CHALLENGING TO THEM...?

    THIS IS OBVIOUSLY ENCOURAGING WORDS FOR HUMANITY THAT YOU COULD DO... DONT SLIP BEHIND.. ESPECIALLY WHEN YoU POSSESS GOOD INTELLECTUAL & READING CAPABILITIES U CAN WIN ANYTHING UPFRONT - thats a good preaching, no doubt abt it;

    ஆனால் இச்சொற்கள் எதைக் குறிக்கப் பயன்பட்டிருக்கின்றன...?

    மதிநுட்பம் = brain intelligence, mental thinking solving capability;
    அதிநுட்பம் = which is more subtle/indepth (than mental abilities);

    அவ்வாறே ஆகின் 'நுட்பமான மதி' என்ற சொல் வழக்கில் 'intelligent' ஆன 'mind' என்று பொருள் கொண்டால்
    'நுட்பமான விடயம்' என்ற சொல் வழக்கில் 'intelligent things' என்ற பொருள் ஒத்து வராது... அதே சமயம்
    minute/subtle things என்று பொருள் கொண்டால்... minute/subtle brain என்ற வழக்கு ஒத்து வராது...

    உண்மையில் நுட்பம் என்னும் சொல் intelligent என்ற பதத்திற்கும் minute என்ற பதத்திற்கும் பொதுவாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது.

    எவ்வாறு இது பொருந்தும் என்று சற்று புரிந்தால் தேவலை... நுட்பமான விஷயம், it would be better if we could understand this subtle thing... நன்றி

  11. #460
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    mathi nutpam

    This incongruity arises from your own substitution of words and interpretation. You should find another word which can be used suitably in both instances if you need one which can be interchangeably used in both.

    மதி என்ற சொல், மதித்தல் என்ற வினையடியாகப் பிறப்பது. முதனிலைத் தொழிற்பெயர்.

    'இது இத்தகையது', 'இதற்கு எத்துணை "கனம்" இருப்பதாகக் கணிக்கலாம்' , 'இதனோடு அதை ஒப்பிட்டால், அது எத்தகையது என்று முடிவு செய்யலாம்', 'ஒவ்வொன்றையும் எப்படித் "தூக்கி" வினைசெய்வது', ---என்றெல்லாம் உள்ளனவற்றை அறிந்துகொள்ளும் அறிவைத்தான் மதி என்று சொல்லவேண்டும்.


    அப்படி அறிந்து அதைப் பயன்படுத்திக் கொள்ளமுடிந்தாலும் அந்தப் பொருளுக்குள் இன்னோர் உட்பொருள் ஒளிந்துகொண்டிருக்கும். அதையும் அறிந்துகொள்ளவும் அதையும் எடைபோடவும் திறம் இருக்கவேண்டும். அந்தப் பொருள், முன் உள்ள வெளிப்பொருளை நோக்க, ஒரு நுண்பொருள். இங்கு நுண் என்பது, வெளிப்படையாக இல்லாமல் ஒளிந்துகொண்டிருக்கும் பொருள் என்று அறியவேண்டும்.

    நுண் என்பது (in this context) அளவுபற்றியது அன்று. உரு பற்றியதும் அன்று. அதன் உள்ளில் இது, இதனுள்ளில் இன்னொன்று, இப்படியே பற்பல, மற்றப் பசங்களுக்குத் தெரியவில்லை, நீங்கள் கண்டுபிடித்து அதை "அடக்கியாளத்" தெரிந்துகொண்டீர் என்று வைத்துக்கொள்வோம்.உங்களை மதி நுட்பமுடையவர் என்று சொல்லத்தகும்.

    Language is never complete without figurative usage and figurative extension of meanings in words including word development, The principle applies to all languages, to some: less, to others: more, but all the same as to application of the principle,


    விரிவஞ்சி இத்துடன் நிறுத்துகிறேன். ஐயப்பாடுகள் இருந்தால் தொடர்வோம்.
    B.I. Sivamaalaa (Ms)

Page 46 of 56 FirstFirst ... 364445464748 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •