Page 54 of 56 FirstFirst ... 4445253545556 LastLast
Results 531 to 540 of 555

Thread: THIRUKKURALH

  1. #531
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    பிராமணத் தன்மை

    சுவானுபவப் பிரம ஞானமுடையவனே பிராமணனென்றோதி..........
    “ஸாமவேத வஜ்ரஸூசிகோபநிஷதம் – பிராமணத் தன்மைக்குரியது சீவனன்று, உடம்பன்று, சாதியன்று, கல்வியறிவன்று, கன்மமன்று, தன்மமன்று எனத் திருட்டாந்த வாயிலாக விளக்கிச் சுவானுபவப் பிரம ஞானமுடையவனே பிராமணனென்றோதி இதுவே, சுருதிஸ்ம்ருதி புராணேதிஹாசங்களின் அபிப்பிராயம் என்று முடிவுரை மொழிந்துளது. “
    சரிதான், மறுக்கமுடியாத உண்மைதான், ஆனால் உம் முன் நிற்பவனொருவன், சொந்தப் பட்டறிவும் பிரம்மம்சார் உணரறிவும் உடையானென்று நீர் எப்படி அளவிட்டறிவீர்? அதனால்தானோ, அப்பன் பிராம்மணன் என்றறியப்பட்டு, இப்போது பூணூலணிந்து கோவிலில் மந்திரமோதுவோனே பிராமணன் என்ற முடிவிற்கு மக்கள் வந்துவிட்டனர்....

    People are just being practical about it.
    If you go by certain criteria, even an Imam or a Catholic priest can be a Brahmin, though not a member of the Brahmin caste, as you yourself seem to come to realise. So, as per you, was VaLLuvar adverting to a member of a Brahmin caste (if existed then in present rigid form) or one who is Brahmin by certain qualities? If it is the latter, there is no need to feel so disappointed at kuRaL commentaries that leave out or differently interpret "paarppaan","anthaNar" etc.,
    You agree that these words do not have a single meaning. Shall we call them multi-purpose words? Why work so hard on them...?
    Last edited by bis_mala; 1st September 2011 at 11:29 AM. Reason: c0lor
    B.I. Sivamaalaa (Ms)

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #532
    Member Junior Hubber
    Join Date
    May 2007
    Posts
    35
    Post Thanks / Like
    திருக்குறள் போற்றும் சமயம் – அந்தணர் யார்?
    http://ankaraikrishnan.wordpress.com...e%ae%e0%ae%af/

    பாரத நாட்டின் புகுந்த அன்னியர்கள் பிரித்தாளும் சூட்சியில் பல ஊகக் கோட்பாடுகளைப் பரப்பினர், அந்த மூடநம்பிக்கை புரளிகளுக்கு ஆதாரம் என முறையற்ற வகையில் மேலும் புரளிகளும் திரிபான விளக்கங்களும் கொண்ட ஆய்வுகள் என அடுக்கடுக்கான புத்தகங்கள் பரவியது. உண்மையரிந்த புலவர்கள் தங்கள் சுயநலத்திற்காக இவற்றை தீவீரமாக கண்டிக்கவில்லை. அடிமைப் படுத்த அன்னியர்கள் மததினையும் சாதியையும் தூண்டலாட, வெகுஜன அறிஞர்களும் உண்மையைக் கூற தயங்கினர். முக்கியமான ஊகக் கோட்பாடுகள் ஆரியர்- திராவிடர் என்னும் அன்னியர்கள் படையெடுப்பு, குமரிக்கண்டம் என்பவை முழுமையாக விஞ்ஞானம் மறுத்துள்ளது.

    மேலும் வள்ளுவரே குறளின் உள்ளேயே வேறு குறளில் தொடர்புடைய அதிகாரத்தில் பயன்படுத்தும் போது அதெ பொருள்பட்டு விளக்கம் கொண்டபடியாக இயற்றியும் உள்ளார்.

    திருக்குறள் எழுதப்படும் காலத்தில் அந்தணர் என்ற சொல்-தமிழரின் பழமையான இலக்கியங்கள் சங்க இலக்கியங்கள் எனப்படும் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும், இதன் பின் தொல்கப்பியம், திருக்குறள் உள்ளிட்ட பதினெண்கீழ்கணக்கு நூல்கள், இதன் பின்னரான இரட்டை காப்பியங்கள் சிலப்பதிகாரம் மனிமேகலையும், பின் திருமந்திரம் தொடங்கி பக்தி இலக்கியங்கள் என அறிஞர்கள் குறித்துள்ளனர். இலக்கியங்களில் பயன்பட்ட அதே பொருளில் தான் வள்ளுவரும் பயன்படுத்தியுள்ளார்.

    நூறுக்கும் அதிகமான ஆதாரங்கள் உள்ளன, உதாரணத்திற்கு சில தரப்பட்டுள்ளது. உண்மைகளை அனுபவிப்போம்.

    ஆசிரியர் நல்லுவந்தனார் பரிபாடல் 11ம் பாடலில் வையை என வைகை ஆற்றின் சிறப்பைக் கூறுகையில்

    பரிபாடல்2:

    கனைக்கும் அதிகுரல் கார் வானம் நீங்க,
    பனிப் படு பைதல் விதலைப் பருவத்து, 75

    ஞாயிறு காயா நளி மாரிப் பின் குளத்து,
    மா ஆருந் திங்கள் மறு நிறை ஆதிரை
    விரிநூல் அந்தணர் விழவு தொடங்க,
    புரி நூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப,
    ‘வெம்பாதாக, வியல் நில வரைப்பு!‘ என 80

    அம்பா ஆடலின் ஆய் தொடிக் கன்னியர்,
    முனித் துறை முதல்வியர் முறைமை காட்ட,
    பனிப் புலர்பு ஆடி, பரு மணல் அருவியின்
    ஊதை ஊர்தர, உறை சிறை வேதியர்
    நெறி நிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின், 85

    தையல் மகளிர் ஈர் அணி புலர்த்தர,
    வையை! நினக்கு மடை வாய்த்தன்று.
    மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து,
    பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவர், அவர்
    தீ எரிப் பாலும் செறி தவம் முன் பற்றியோ, 90

    தாய் அருகா நின்று தவத் தைந் நீராடுதல்?
    நீ உரைத்தி, வையை நதி!

    மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரம் அன்று வேதமோதும் அந்தணர்கள் சிவபெருமானிற்கு திருவிழா செய்யத் தொடங்கினர். முப்புரி நூல் அணிந்த அந்தணர் பொன்கலத்தை ஏந்தி சென்றனர். அம்பா ஆடல் செய்யும் கன்னிப் பெண்கள்- முதிய அந்தணப் பெண்கள் வழிகாட்ட அதிகாலையில் நீராடினர்.
    அதிகாலையில் நீராடிய இளம்பெண்கள், மார்கழியின் குளிர் வாட்ட, கரையில் வேதமந்திரங்கள் கூறி வளர்த்த வேள்வி அக்னியின் அருகில் சென்று தங்கள் ஈர ஆடையை காயச் செய்தனர். அந்தணர் வேத வேள்விகளால் மழை தொடர வைகை நீ பெருகுகிறாய்.
    இவை மார்கழி மாதத்தின் பாவை நோன்பின் தொன்மையையும் திருவாதிரை பண்டிகை கொண்டாடுதலின் வழமையையும் மெய்பிக்கின்றது.

    பரிபாடல்-திரட்டு 2ம் பாடல் வையை என்ற தலைப்பில்
    தலைவன் கூற்று
    மணி அணிந்த தம் உரிமை மைந்தரோடு ஆடித்

    தணிவின்று, வையைப் புனல். 50

    தலைவன் கூற்று

    ‘புனலூடு போவது ஓர் பூ மாலை கொண்டை,

    எனலூழ் வகை எய்திற்று’ என்று ஏற்றுக்கொண்ட

    புனலூடு நாடு அறியப் பூ மாலை அப்பி,

    நினைவாரை நெஞ்சு இடுக்கண் செய்யும் கனல்புடன்,

    கூடாமுன், ஊடல் கொடிய திறம் கூடினால், 55

    ஊடாளோ? ஊர்த்து அலர் வந்து ஊர்ந்து.

    என ஆங்கு-
    பார்ப்பார் நீராடாது கரையில் நின்ற காரணம்

    ‘ஈப் பாய் அடு நறாக் கொண்டது, இவ் யாறு’ எனப்

    பார்ப்பார் ஒழிந்தார், படிவு.

    ‘மைந்தர் மகளிர் மண விரை தூவிற்று’ என்று, 60

    அந்தணர் தோயலர், ஆறு.

    ‘வையை தேம் மேவ வழுவழுப்பு உற்றென’

    ஐயர், வாய்பூசுறார், ஆறு.

    -பா¢பாடல்-திரட்டு 2:50-63
    அந்தணர்கள் எல்லா மக்களும் சேர்ந்து கொண்டாடும் புதுநீர் விழாவின் போது, கேளிக்கைகளில் கலந்துகொள்ளாது ஒதுங்எயே வாழ்ந்தனர். கள் குடித்தவர்கள் உமிழ்கையில் கள்ளும்; பெண்களும் சிறுவர்கள் பயன்படுத்தும் நறுமணப் பொருட்கள், வழுவழுப்பான தேன் முதலியவை வைகை ஆற்றின் புதுப் புனலில் கலந்து வந்தது ஆகையால் ஒழுக்க நெறிப்பட்ட பார்ப்பனர்கள் புதுப் புனலின் போது வைகையில் குளிப்பதோ- வாய் கொப்பளிப்பதோ இல்லை. இங்கே பார்ப்பனர்- அந்தணர்-ஐயர் என்ற மூன்று பதங்களும் பிராமணர்களைக் குறிக்க சங்க காலத்திலே இருந்தது எனத் தெளிவாகிறது.

    மேலும் சங்க காலத்தில் தமிழகத்தின் பக்திநிலை பற்றியும் உறுதி செய்கிறது.

    மதுரைக் காஞ்சி

    பூவினர் புகையினர் தொழுவனர் பழிச்சிச்
    சிறந்து புறங்காக்குங் கடவுட் பள்ளியுஞ்
    சிறந்த வேதம் விளங்கப் பாடி
    விழுச்சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து
    நிலமமர் வையத் தொருதா மாகி . . .470

    உயர்நிலை யுலக மிவணின் றெய்தும்
    அறநெறி பிழையா அன்புடை நெஞ்சிற்
    பெரியோர் மேஎ யினிதி னுறையுங்
    குன்றுகுயின் றன்ன அந்தணர் பள்ளியும்
    வண்டுபடப் பழுநிய தேனார் தோற்றத்துப்
    பூவும் புகையுஞ் சாவகர் பழிச்சச்
    சென்ற காலமும் வரூஉ மமயமும்
    இன்றிவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்குணர்ந்து
    வானமு நிலனுந் தாமுழு துணருஞ்
    சான்ற கொள்கைச் சாயா யாக்கை . . .480

    “தாதுண் தும்பி போது முரன்றாங்கு

    ஓதல் அந்தணர் வேதம் பாட” – மதுரை காஞ்சி 655, 656

    திருமுருகாற்றுப்படை

    2. திருச்சீர் அலைவாய்

    மந்திர விதியின் மரபுளி வழாஅ
    அந்தணர் வேள்விஓர்க் கும்மே;ஒருமுகம்,

    4. திரு ஏரகம்

    அந்தணர்:
    இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது
    இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி
    அறுநான்கு இரட்டி இளமை நல்லியாண்டு
    ஆறினிற் கழிப்பிய அறன்நவில் கொள்கை . . .180

    மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து
    இருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல,
    ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்
    புலராக் காழகம் புலர உடீஇ,
    உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து
    ஆறெழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி
    நாஇயல் மருங்கில் நவிலப் பாடி
    விரையுறு நறுமலர் ஏந்திப் பெரிந்துஉவந்து
    ஏரகத்து உறைதலும் உரியன்: அதான்று,

    பெரும்பாணாற்றுப்படை

    செந்தீப் பேணிய முனிவர் வெண்கோட்டுக்
    களிறுதரு விறகின் வேட்கு 499

    பெருநாள ளமையத்துப் பிணையினிர் கழிமின்
    செழுங்கன் றியாத்த சிறுதாட் பந்தர்ப்
    பைஞ்சேறு மெழுகிய படிவ நன்னகர்
    மனையுறை கோழியடு ஞமலி துன்னாது
    வளைவாய்க் கிள்ளை மறைவிளி பயிற்றும் . . . .300
    மறைகாப் பாள ருறைபதிச் சேப்பிற்
    பெருநல் வானத்து வடவயின் விளங்குஞ்

    அந்தணர்கள் அவர்கள் வீடுகளில் ஓதும் மறையைக் கேட்டு கேட்டு அவர்கள் இல்லங்களில் வாழும் கிளிகளும் வேத ஒலிகளை எழுப்புகின்றனவாம்.

    பதிற்றுப்பத்து

    பிராமணர்கள் ஆறு தொழிலை உடையவர்கள்.

    “ஓதல் வேட்டல் அவை பிறர்ச் செய்தல்

    ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந்தொழுகும்

    அறம் புரி அந்தணர்” – 24)

    பாட்டு – 74

    கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாது

    வேள்வி வேட்டனை உயர்ந்தோர் உவப்பச்

    அந்தணன், பார்ப்பான், நான்மறையாளன், முனிவன் என்று குறிப்பிடப்படுகின்றனர். வேதம் அறிந்தவர்கள். அதனைத் தினந்தோறும் ஓதுபவர்கள் என்று குறிப்பிடப்படுகிறது.

    அந்தணர் – பார்ப்பான் அறுதொழிலார் என நேரடியாக குறளில் வள்ளுவர் பன்படுத்தியுள்ளார்.

    நாம் மேலே சங்க இலக்கியத்தில் காட்டியதில் வேள்விகள் சிறப்பித்து கூறப்படுவதயும் காண்கிறோம்.

    அனால் திருவள்ளுவரோ

    குறள் 259: துறவறவியல் – புலான்மறுத்தல்

    அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
    உயிர்செகுத் துண்ணாமை நன்று.

    நாமக்கல் கவிஞர் உரை மு.வ உரை:

    நெய் முதலியப் பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது.

    நாம் இந்தக் குறளோடு இதன் முந்தைய அடுத்த குறள்களையும் காண்போம்.

    குறள் 258:

    செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
    உயிரின் தலைப்பிரிந்த ஊன்.

    மு.வ உரை:

    குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர், ஒர் உயிரினிடத்திலிருந்து பிரிந்து வந்த ஊனை உண்ணமாட்டார்.

    குறள் 260:

    கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
    எல்லா உயிருந் தொழும்.

    மு.வ உரை:

    ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.

  4. #533
    Member Junior Hubber
    Join Date
    May 2007
    Posts
    35
    Post Thanks / Like
    குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர்- முனிவர்களை தான் வள்ளுவர் ஊணுண்வு மறுத்தலில் முக்கிய்ம் கொடுக்கிறார். ஆனாலும் அனவருக்கும் அவர் வற்புரித்தினார் என்று கொண்டாலும் ஒருவன் தெய்வமாக தொழப்படும் நிலைக்கு ஈடாகும் நிலைக்கு முன்னர் இறைவனிடம் அடையும்வழி வேள்விகள் செய்தல். ஒருவன் வேல்விகள் செய்து கொண்டு, இறைவனை அடைய முயன்று ஊன் உண்தல் தவிற்க வேள்விகளை சிறப்பித்து போற்றித் தான் வள்ளுவர் கூறுகிர்றார்.

    வேள்விகள் பற்றி வள்ளுவர் கூறியுள்ளது

    விருந்தோம்பல்

    இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
    துணைத்துணை வேள்விப் பயன்.

    பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
    வேள்வி தலைப்படா தார்.

    செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
    நல்வருந்து வானத் தவர்க்கு.

    அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
    நல்விருந்து ஓம்புவான் இல்.

    விருந்தினரை உபசரித்தல் அதிதி யக்ஞம் எனப்படும் இது வேள்விக்கும் ஒப்பாகும், இவ்வேள்வி செய்வோர் வீட்டில் ல்க்ஷ்மி தேவீ வாசம் செய்வாள் என்கிறார்.

    குறள் 413: கேள்வி

    செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
    ஆன்றாரோ டொப்பர் நிலத்து.

    கேள்வி என சத்சங்கங்கள் செய்வது தேவர்கள் உண்ணும் அவி உணவிற்கு ஈடானது

    வள்ளுவர் வேள்விகளை மிகவும் உயர்வாகவே கருதியதைக் கண்டோம்.

    வேத முறைப்படி மூன்று அக்னிகள் வளர்க்கப்படுகின்றன. அவை ஆகவனீயம், காருகபத்தியம், தட்சினாக்கினி என்பவை. இவை ரிக் வேதத்திலேயே கூறப்பட்டுள்ளன. முத்தீ பண்டைத் தமிழர் வாழ்வில் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது. சேரமான் மாவெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப்பெருவழுதியும் சோழன் பெருநற்கிள்ளியும் ஒற்றுமையாக இருப்பதை காண்கிறார் புறநானூற்று ஔவையார். பாடுகிறார்:

    பார்ப்பு என்றால் பறவைக் குஞ்சு. பிரக்கும் போது முட்டை உடலில் வந்தது பின் முட்டை உடைய புது பிறப்பு எடுப்பது போலே பூனல் எனப்படும் உபநயந்துக்குப்பின் வேதம் படிக்க ஆசிரியரிடம் செல்கிறான், எனவே பார்ப்பான் என்றால் இருபிறப்பாளன். தாயின் வயிற்றினின்று பிறந்து வருவது ஒரு பிறவி. தன்னுடைய வாழ்க்கையை மேலான வாழ்க்கையாகத் திருத்தி அமைக்க ஆரம்பிக்கின்ற பொழுது மனிதன் ஆன்மிகத் துறையில் இன்னொரு பிறப்பெடுத்தவன் ஆகின்றான். ஆகையினால் அவன் துவிஜன் – இருபிறப்பாளன் என்று சொல்லப் படுகிறான்.

    அந்தணர்- அந்தம் + அணர். உலகின் உறுதிப் பொருளான வேதங்களினை கொண்டு வழி காட்டுபவர் எனப் பொருள் படும்.

    வேதங்களின் உறுப்புகளான ஆயுர்வேதம், பஞ்சாங்கங்கள் துணை கொண்டு, சிறு மருத்துவம், வரும் ஆண்டில் காலநிலையை முன்னரே கணித்து பார்த்து யாது பயிரிடலாம், பயணங்கள் செய்ய உகந்த நாளா என நிமித்தம் பார்த்து சொல்வதாலும் பார்ப்பான்.

    இறைவனை அந்தணர் என்றும் பார்ப்பான் என்றும் அழைப்பது சங்க இலக்கிய நடைமுறையே.

    ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ,
    வேத மா பூண் வையத் தேர் ஊர்ந்து,
    நாகம் நாணா, மலை வில்லாக,
    மூவகை ர் எயில் ஓர் அழல்-அம்பின் முளிய, – 25

    மாதிரம் அழல, எய்து அமரர் வேள்விப்
    பாகம் உண்ட பைங் கட் பார்ப்பான்
    உமையொடு புணர்ந்து, காம வதுவையுள்,
    அமையாப் புணர்ச்சி அமைய, நெற்றி
    இமையா நாட்டத்து ஒரு வரம் கொண்டு - 30
    (Paaaripādal, Chapter 5)

    மண்மிசை—அவிழ்துழாய் மலர்தரு செல்வத்துப்
    புள்மிசைக் கொடியோனும், புங்கவம் ஊர்வோனும்,
    மலர்மிசை முதல்வனும், மற்று அவனிடைத் தோன்றி
    உலகு இருள் அகற்றிய பதின்மரும், இருவரும்,
    மருந்து உரை இருவரும், திருந்து நூல் எண்மரும் (Paripādal 8:1-5)

    தொல்காப்பியம்-செய்யுளியல்480

    நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளக்கும்1
    மறைமொழி தானே 2மந்திரம் என்ப.

    என் – னின். மந்திரம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

    நிறைந்த மொழியையுடைய மாந்தர் தமதாணையாற் சொல்லப்பட்ட மறைந்தசொல் மந்திரமாவ தென்றவாறு.

    திருமுருகாற்றுப்படை2. திருச்சீர் அலைவாய்

    மந்திர விதியின் மரபுளி வழாஅ
    அந்தணர் வேள்விஓர்க் கும்மே;ஒருமுகம்,

    உலகமே இருளில் முழ்கி கிடந்த போது ஆன்ம ஒளியில் திளைத்தது நம் நாடு.ரிஷிகள் சிந்தனையில் அனுபூதியில் கண்ட உண்மைகளின் தொகுப்பே வேதங்கள்.எப்போது இவை தோன்றியது என யாருக்கும் தெரியாது.”புவி ஈர்ப்பு விதிகள் நமக்கு முன்னும், நமக்கு பின்னும் எப்போதும் இருக்கும்.அது போல்தான் ஆன்மிக உலகின் விதிகளும் மாறாமல் இருக்கும்”அவ்வாறு ரிஷிகள் வெளிப் படுத்திய அந்த உண்மைகள், பின்னாளில் வியாசரால் நான்காகப் தொகுக்கப் பட்டன.ரிக்,யாகூர்,சாம மற்றும் அதர்வணம்.ஒவ்வொரு வேதமும் முக்கிய மூன்று பிரிவாக ,சம்ஹிதை(பல்வேறு தேவர்களின் பிரார்த்தனைகள்),பிராம்மணம்(யாக விவரங்கள்)ஆரண்யகம்(அறுதி உண்மை பற்றிய ஆராய்ச்சிகள்) பிரிக்கப் பட்டன.

    நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
    மறைமொழி காட்டி விடும்.

    தவவலிமை உள்ளவர்கள் பெருமையைக வேதங்கள் இந்நிலத்து வேதங்கள் காட்டுகின்றன.

  5. #534
    Member Junior Hubber
    Join Date
    May 2007
    Posts
    35
    Post Thanks / Like
    சங்க காலத்தில் பலவகைகளிலும் மேன்மையுற்றிருந்த தமிழகம் 3ம் நூற்றாண்டு முதல் 6. வரை களப்பிரர் காலத்தில் பல இடர்பாடுகளுக்கு உள்ளானது. அக்காலத்தில் சமணம் தழைத்தோங்க ஆரம்பித்தது. காதல், களவு, கற்பு, வீரம் போன்றவற்றைப் பற்றி எழுதப்பட்ட இலக்கியங்கள் மறைந்தன. நீதிக்கருத்துக்களை எடுத்துக்கூறும் நூல்கள் இயற்றப்பட்டன. அவ்வாறு எழுதப்பட்டவையே பதினென் கீழ்கணக்கு நூல்களாகும்

    திருக்குறள் இக்காலத்தில் இயற்றப்பட்டதே- எனவே திருவள்ளுவர் தன் நூலை ஒரு பொது நூல் தோற்றம் தரும் வகையில் கடவுள் வாழ்த்தின் பத்து குறட்பாக்களில் ஒரு பெயர்சொல் கூட பயன்படுத்தவில்லை. இதை வெவெவேறு மதத்தினரும் தன் வகையில் பொருத்த முயற்சித்தல் இயல்பே. ஆனால் வள்ளுவர் மனதை அறிய நாம் மேலே கண்ட முறையில் அவர் சங்க கால நடைமுறையில் தான் எழுதியுள்ளார் என்பதை தெளிவாக உணறலாம்

    சாங்கிய தரிசனத்தி ருந்து எழுந்த ஒரு தத்துவம் பின் பௌத்த சமண மதங்களாக மாறியது. இவ்விரு மதங்களும் பல வைதிக மதக் கோட்பாடுகளை சற்றே மாற்றி பயன்படுத்தியது மட்டுமின்றி இதிகாசங்கள் இரண்டையும் திரித்து தங்கள் மத நம்பிக்கைகேற்ப பிற்காலத்தில் புனைந்தனர். என்வே வள்ளுவர் காலத்திற்கு முன்பே இருந்த ஆதாரங்கள் வள்ளுவர் வைதீக நடைமுறையையெ கூறினார் எனத் தெளிவாக உண்மைகளை தெளிவாக்கும்.

    Jainistm is a kind of religion based upon the acceptance of the Samkhya system, but venerating a limited group of noble selves, who have achieved perfection and bliss. ( p-10 Coparative Religion ; A.C.Bouquet)

    அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்

    நின்றது மன்னவன் கோல். (543-செங்கோன்மை)

    நாமக்கல் கவிஞர் உரை

    அந்தணர்கள் ஓதும் வேதம் முதலிய ஞான நூல்களின் அறிவு மக்களிடையே பரவுவதற்கும், அதனால் நாட்டில் அறங்கள் சரியாக நடப்பதற்கும் ஆதரவாக இருப்பது அரசாட்சியின் செங்கோண்மை.

    மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
    பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். (134ஒழுக்கமுடைமை)



    அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
    உயிர்செகுத் துண்ணாமை நன்று. ( 259 புலான்மறுத்தல்)



    ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
    காவலன் காவான் எனின். (560 கொடுங்கோன்மை)

    Translation:

    Where guardian guardeth not, udder of kine grows dry,
    And Brahmans’ sacred lore will all forgotten lie.

    Explanation:

    If the guardian (of the country) neglects to guard it, the produce of the cows will fail, and the men of six duties viz., the Brahmins will forget the vedas.

    மு.வ உரை:

    நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும், அந்தணரும் அறநூல்களை மறப்பர்.

    குறள் 1066:

    ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
    இரவின் இளிவந்த தில்.

    மு.வ உரை:

    பசுவிற்கு நீர் வேண்டும் என்று அறம் நோக்கி இரந்து கேட்டாலும், இர த்தலை விட நாவிற்கு இழிவானது மற்றொன்று இல்லை.

    “பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, ‘பசுக்களும், பசுவின் இயல்பை ஒத்த அந்தணரும், பெண்களும், நோயுடையவர்களும், முன்னோர்களுக்கு விருப்பத்துடன் ஈமச் செயல்களைச் செய்வதற்குரிய பொன்னையொத்த ஆண் மக்களைப் பெறாதவர்களும் பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுங்கள்!
    நாங்கள் எங்கள் அம்புகளை விரைவாகச் செலுத்தப்போகிறோம்’ என்று அறநெறியோடு அறிவுறுத்திப் பிறகே போர் செய்யத் தொடங்கும் வலிமையும் மறமும் கொண்டவன். கொல்லுகின்ற யானை மீது எடுக்கப்பட்ட கொடிகள் ஆகாயத்தை மறைக்கும்; அத்தகைய சிறப்புடையவன் எம்முடைய வேந்தன். புலவர் நெட்டிமையார், முதுகுடுமியின் அறப்போர் நெறியாக யார்யார் காப்பாற்றப்படுவதற்கு உரியவர் எனப் பட்டியலிடுதல் நோக்கத் தக்கது.

    ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
    பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
    தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
    பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
    எம்அம்பு கடிவிடுதும் நும்மரண் சேர்மின்……

    என்ற அடிகள் அக்காலத் தமிழர் போர் நெறி காட்டுவன.

    இப்புறநானுறு பாடல்படியான மரபில் தானே வள்ளுவர் இகுறளும் கூறுகின்றது.

    பசுக்கள் தரும் பால்- அதன் உப பொருட்கள் தயிர், வெண்ணெய் நெய்- இவை அனைத்துமே கர்ப்பிணி பெண்கட்கும், சிறு குழந்தைகட்கும் அவசியம். வேள்விகளிலும் அவசியம். நாட்டின் பலத்திற்கு வருங்காலத் தலைமுறையும் கடவுள் ஆசியும் அவசியம் என்பதையே கூறியுள்ளார்.

    திருவள்ளுவர் சங்ககாலத் தமிழர் மரபுப்படிதான் திருக்குறளைத் தந்துள்ளார். அதில் அந்தணர் என்பது தொழில் வழியில் அந்தணர்களைத் தான்.
    http://ankaraikrishnan.wordpress.com...e%ae%e0%ae%af/

  6. #535
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    திருக்குறள் எழுதப்படும் காலத்தில் அந்தணர் .............
    திருக்குறள் எழுதப்படும் காலத்தில் அந்தணர் .............

    இருந்தால் எனக்கும் மட்டற்ற மகிழ்ச்சிதான்.இது கடைச்சங்கத்தின் இறுதி நிலையில் என்பர் அறிஞர் சிலர்...கடைச்சங்க காலத்தில்தான் சாதிகள் உருப்பெறத் தொடங்கின என்றும் வேறு சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

    இவைபோன்ற சாதிக் குறிப்புகள் சங்க நூல்களில் இருந்தால் அவை இடைச்செருகல்கள் என்பாருமுண்டு. சாதிகளை நிலைநிறுத்திக்கொள்ள ஒரு வரலாற்று அடிப்படை மிகமிகத் தேவையாய் இருந்த காரணத்தால், இங்ஙனம் முனைவதும் மனித இயற்கைதான். கற்பாருக்குத்தான் கன மதி தேவை.

    சேரன் செங்குட்டுவன் கண்ணகி சிலை நிறுவிய ஞான்று, கடல்சூழ் இலங்கைக் கயவாகு மன்னன் வந்திருந்தான். அது கி.பி இரண்டாம் நூற்றாண்டு என்று நிறுவப்பட்டுள்ளது. கயவாகு என்று பல மன்னர்கள் இருந்ததால், பிற்காலத்துக் கயவாகுவைத்தான் இளங்கோ குறித்தார் என்று சிலர் வாதாடத் தொடங்கினர். எப்படியும் சங்க காலத்தை பல நூற்றாண்டுகள் பின் தள்ளிவிட வேண்டுமென்பது இவர்கள் துடிப்பு.
    வள்ளுவர் இளங்கோவுக்கு முந்தியவர். இப்போது குறிக்கப்பெறும் திருவள்ளுவராண்டு, சரியானதென்று தென்கலைப் பெரும்புலவர் சாமிநாத ஐயரும் ஏற்றுக்கொண்டுள்ளார்.
    பிற்காலத்துச் சமண சங்கம் வேறு. முன்னிருந்த முச்சங்கம் வேறு.
    Last edited by bis_mala; 8th September 2011 at 11:20 AM.
    B.I. Sivamaalaa (Ms)

  7. #536
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்

    நின்றது மன்னவன் கோல். (543-செங்கோன்மை)

    நாமக்கல் கவிஞர் உரை

    அந்தணர்கள் ஓதும் வேதம் முதலிய ஞான நூல்களின் அறிவு மக்களிடையே பரவுவதற்கும், அதனால் நாட்டில் அறங்கள் சரியாக நடப்பதற்கும் ஆதரவாக இருப்பது அரசாட்சியின் செங்கோண்மை.

    மன்னவனின் செங்கோன்மை என்பது அரசு தரும் பாதுகாப்பு என்று பொருள்படும். ("ஆதரவாக" என்பது ஒருவகையில் சரி என்றாலும், ஆதி என்பது ஆதரவன்று. பொருள் முரண்படுகிறது.)

    வேதங்களை ஓதுவது, அவற்றை ஓதுவதனால் உண்டாகும் பலன்களை அடைவதற்காக. மன்னன் எப்படி அதற்கு "ஆதி" (ஆக்கம் தருதல்) ஆவது?

    அரசியற் பாதுகாப்பு என்பது நேரல்லாத [indirect ] காரணம். மூல காரணம் ஆகாது.

    ஆகவே இங்கு அந்தணர் என்ற சொல், "பிராமின்" என்ற பொருளில் வரவில்லை. நூல் என்பதும் வேதங்களைக் குறிக்கமாட்டா!

    வேதங்களுக்கும் அவற்றை ஓதுவதற்கும் ஆதியாய் நிற்பது பிரம்மன். மன்னன் கோல் அன்று.

    The mannan is no more than an obedient "consumer" of the Brahmin services in this respect. Wrong interpretation.




    உரை தள்ளுபடி,


    I do not propose to comment on your entire posts. Suffice it to say that those are rejected.
    Last edited by bis_mala; 12th September 2011 at 06:19 PM. Reason: to explain bit more...
    B.I. Sivamaalaa (Ms)

  8. #537
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    ஆதி பகவன் முதற்றே உலகு.

    ஆதி பகவன் என்ற இரு சொற்களுக்கும் "ஆதியும் பகவனும்" என்று பொருள்கொண்டோரும் உளர்.

    ஆதி என்பது சூரியனையும் குறிப்பது.

    சூரியனும் சிவனும் என்றும் பொருள்கொள்ளலாம்.

    Note: In the event the words Athi and Bhagavan are taken to refer to a commoner woman by the name of Athi and a Brahmin by the name of Bhagavan, the words in sandhi will be normal. Just ஆதி பகவன் and not ஆதிப் பகவன்.
    Last edited by bis_mala; 17th September 2011 at 03:25 PM.
    B.I. Sivamaalaa (Ms)

  9. #538
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    மக்களிடையே பரவுவதற்கு....

    Quote Originally Posted by lathaji View Post
    நாமக்கல் கவிஞர் உரை
    அந்தணர்கள் ஓதும் வேதம் முதலிய ஞான நூல்களின் அறிவு மக்களிடையே பரவுவதற்கும், அதனால் நாட்டில் அறங்கள் சரியாக நடப்பதற்கும் ...............................

    வேதம் முதலிய ஞான நூல்கள் மக்களிடையே பரப்பப் படவேண்டும் என்று எந்த முற்கால அறிஞரும் முனைந்து நின்றதாகத் தெரியவில்லை. வேதங்களை வேதியர் ஓதவேண்டும், அதனால் நோய் நொடிகள் பண முடை என்ற பல இன்னல்கள் நீங்கவேண்டும், நல்வாழ்வு பெறவேண்டும் என்று செயல்பட்டனர். உரையின் இந்தப் பகுதி, உரையாசிரியரின் சொந்தக் கொள்கையே யன்றி, ஆசிரியர் வள்ளுவனாரின் குறட்கருத்தன்று.

    It is also not clear which and what "vetham" is being referred to.
    B.I. Sivamaalaa (Ms)

  10. #539
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    வள்ளுவரும் சாதியும்- ஓர் உரையாடல்

    ஜெயமோஹனும் சௌம்யநாராயணன் [பிரவாஹன்] என்பவரும் உரையாடியது. செறிவான கருத்துக்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.

    சதுர்வர்ணம் மயா சிருஷ்டம் குண கர்ம விபாகஜ என்பதற்கும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான் என்பதற்கும் வேறுபாடே இல்லை. இவர்கள் கீதையிலும் குறளிலும் முதல் வரியை மட்டுமே எடுத்துக்கொள்கிறார்கள்
    குறள் எந்த கலகக் குரலையும் எழுப்பவில்லை என்பது உண்மை..ஆனால், அது சமத்துவத்தைப் போதிப்பதாக, அதுதான் தமிழ் நெறி என்பதாக ஒரு உருவேற்றம் நிகழ்ந்துள்ளது. அது சரியல்ல
    சங்ககாலத்தில் பறையர்கள் பார்ப்பனர் பிரிவில் இருந்தனர் என்பதுதான் பல்வேறு சான்றுகள் காட்டுகின்ற உண்மை..
    கடந்த ஆறேழு வருடங்களாகவே இப்படிப்பட்ட மாற்றுக்கருத்துக்களை தொடர்ந்து வாசித்து வருகிறேன். தலைமுறை தலைமுறையாக எப்பேர்பட்ட மூளைச் சலவையினால் நாம் இதுவரை இதற்கு எதிரான கருத்துக்களை நுகர்ந்து வந்திருக்கிறோம் என்பதை நினைத்துப் பார்க்கும் போது, வெட்கமாக இருக்கிறது. இணையத்தளத்தின் வரவால், விவாதக்களம் தொடங்கப்பட்டு, அறிஞர்கள் பலரும் தொடர்ச்சியாக விவாதங்களில் ஆரோக்யமாக ஈடுபட்டு, உண்மைகளை நிறுவி ஆவணப்படுத்தணும். எதிர்கால சந்ததியினருக்கு அப்போதுதான் மெய்ப்பொருள், அதையொட்டிய நிகழ்தகவுகள், விளைவுகள் இவற்றை புரிந்துகொள்ள உதவும்.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  11. #540
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    some pointers

    Quote Originally Posted by venkkiram View Post
    வள்ளுவரும் சாதியும்- ஓர் உரையாடல்

    ஜெயமோஹனும் சௌம்யநாராயணன் [பிரவாஹன்] என்பவரும் உரையாடியது. செறிவான கருத்துக்களை ...........
    இதை மறுப்பதற்கில்லை. இரத்த உள்ளீட்டு ஆய்வுகளின் படி (DNA), பல பிராமணர்களிலும் பறையர்களிலும் Haplogroup G கா ணப்படுகிறது.பல்லவர் காலத்திற்குப் பின் வந்த வடமா ( வட நாட்டு மாந்தராகிய பிராமணர்)-களின் நிலை ஆய்வுக்குரியது.

    வள்ளுவரின் தந்தை பிராமணர் என்ற பழங்கதையும் உண்டு.

    வள்ளுவன்கடவு என்னும் கேரள ஊரில், ( பரசினிக் கடவு.
    மூதப்பன் கோவில்) இன்னும் ஒரு வள்ளுவன், திருவிழாவின்போது சிவனாக அலங்கரிக்கப்பட்டு வணங்கப்படுவதாகக் கேள்வி.

    இலக்கியத்தில், வள்ளுவன் சிற்றரசனாகவும் அவன்முன் பிராமணப் புலவர் பாடி, பரிசில் பெறுநராகவும் காணப்படும் பாடல் உள்ளது.

    M சீனிவாச ஐயங்காரும் தம் நூலில் இதுபோன்ற வரலாற்றையே எடுத்துக்காட்டுகிறார்.

    பிராமணன் அண்ணன் என்றும் பறையன் தம்பி என்றும் கூறப்பட்ட கேரளக்கதைகளும் உள்ளன என்று தெரிகிறது.

    Thanks Mr Venkiraam for your sharing.
    Last edited by bis_mala; 22nd September 2011 at 06:01 PM.
    B.I. Sivamaalaa (Ms)

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •