Page 55 of 56 FirstFirst ... 54553545556 LastLast
Results 541 to 550 of 555

Thread: THIRUKKURALH

  1. #541
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    உலகம் சுழல்கிறது.

    உலகம் சுழல்கிறது.

    ஏறத்தாழ 2000 ஆண்டுகளின் முன் வள்ளுவர் காலத்தில் வாழ்ந்த தமிழர், உலகம் உருண்டையானது என்று நம்பினரா, அன்றி அது ஒரு தட்டை என்ற கொள்கை உடையோரா என்பது தெரியவில்லை.

    வள்ளுவனாரும் இதுபற்றி நேரடியாகத் தம் குறளில் ஏதும் சொல்லவில்லை.

    உலகம் சுழல்கிறதென்பதை அவர் ஒருவாறு உணர்ந்திருந்தார் என்றே தோன்றுகிறது. ஆனால் அதை வெளிப்படையாகச் சொல்லாமல்,

    சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்; அதனால்
    உழந்தும் உழவே தலை.

    என்கிறார்.

    சுழன்றும் எனின், உலகம் பல்வேறு நெறிகளிற் சென்றாலும் என்று பொருள்தருமென்பர். ஆனால் உலகம் சுழல்கிறது என்ற கருத்தும் அங்கு ஒளிந்துகொண்டிருக்கிறது என்றே தோன்றுகிறது.
    B.I. Sivamaalaa (Ms)

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #542
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    continued from last post

    Quote Originally Posted by bis_mala View Post
    உலகம் சுழல்கிறது.

    ஏறத்தாழ 2000 ஆண்டுகளின் .....................ஏதும் சொல்லவில்லை.


    சுழன்றும் ....................... தலை.

    என்கிறார்.--------------------
    தோன்றுகிறது.
    மேலும், உலகம் சுற்றுகிறது என்பதற்கு இன்னொரு குறளையும் குறிப்பால் உணர்த்துவதாகக் கொள்ளலாம்.

    குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
    சுற்றமாச் சுற்றும் உலகு. 1025.

    இங்கு சுற்றும் என்ற சொல்லுக்கு "விரும்பிப் போற்றிக் கொள்ளும்" என்பது பொருள். "சூழ்ந்து நிற்கும்" என்றும் கூறலாம். வேறு சொற்களால் உரை கூறியிருப்பினும், கருத்து இதுவாகவே இருக்கக் காணலாம்.

    ஆனால், உலகம் சுற்றுகிறது என்று வள்ளுவர் உணர்ந்திருந்தார் என்பதற்கு இதுவும் ஒரு குறிப்பாகக் கூடுமே!

    இதைத்தான் "சூட்சுமமாகக்" கூறுதல் என்பர் பிறர்.
    B.I. Sivamaalaa (Ms)

  4. #543
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
    அவாவுண்டேல் உண்டாம் சிறிது.


    இதற்கான பொருள் என்ன? இங்கே கீழ்மக்கள் என வள்ளுவர் குறிப்பிடுவது யாரை?
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  5. #544
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    கீழ்கள் = கயவர்.

    இந்தக் "கயவர்" என்ற சொல்லை மாற்றாகப் பயன்படுத்தி மீண்டும் குறளைப் படித்தால், தெளிவாகும் என்று எண்ணுகிறேன்.

    ஆசாரம் = ஒழுக்கம், செல்லும் நெறி.
    B.I. Sivamaalaa (Ms)

  6. #545
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by bis_mala View Post
    கீழ்கள் = கயவர்.

    இந்தக் "கயவர்" என்ற சொல்லை மாற்றாகப் பயன்படுத்தி மீண்டும் குறளைப் படித்தால், தெளிவாகும் என்று எண்ணுகிறேன்.

    ஆசாரம் = ஒழுக்கம், செல்லும் நெறி.
    நன்றி ஐயா!

    கீழ்கள் = கயவர். ஒரு சந்தேகம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னாடி அப்போதிருந்த சமூகப் படிக்கட்டுக்களுக்கிடையே எழுதப்பட்ட திருக்குறளின் பதங்களுக்கு பொருள் காண எப்படி சரியா "=" போட்டு விளக்கத்தை உரித்துக்கொள்கிறீர்கள்?
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  7. #546
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    Wink Thanks Why = sign?

    Quote Originally Posted by venkkiram View Post
    நன்றி ஐயா!

    கீழ்கள் = கயவர். ஒரு சந்தேகம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னாடி அப்போதிருந்த சமூகப் படிக்கட்டுக்களுக்கிடையே எழுதப்பட்ட திருக்குறளின் பதங்களுக்கு பொருள் காண எப்படி சரியா "=" போட்டு விளக்கத்தை உரித்துக்கொள்கிறீர்கள்?
    நீங்கள் கேட்டது நல்ல கேள்வி. கணக்கியல் திட்டவட்டமுடையதுபோல (mathematical precision), "=" என்னும் குறியீடு போட்டுப் பொருள்சொல்வது, அறிஞர் சிலரையாவது வியப்பிலாழ்த்தக்கூடும். என்னைப் பொறுத்தவரை ஐயப்பாடொன்றுமின்றிக் கூறுகிறேன் என்று நீங்கள் கொண்டாலும், தவறொன்றுமில்லை.

    "என்பது யாதெனின்" என்ற தொடருக்கு ஈடாக அதனைப் பயன்படுத்துகிறேன். நீங்கள் குறிப்பிடுவதுபோல வள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகட்கு முன் வாழ்ந்தவர் என்பதால், அவரெழுதியதைக் கணக்கியல் திட்டவட்டத்துடன் பொருள்விளக்கம் செய்யும் எவரும் இன்றில்லை என்பது உண்மைதான். ஆசிரியர்கள் ஓருவருக்கொருவர் மாறுபடுவதினின்று அது தெளிவாகிறது.

    ≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

    கயவர் யார், கீழ் யார், கீழ்மகன் யார் என்பது வள்ளுவரால் ஒரு வரையறவாக (definition) இவ்வதிகாரத்திற் கூறப்படவில்லை (அவர் காலத்தில் அது தெளிவாய் இருந்திருக்கும் ) எனினும், திருக்குறளையும் ஏனைத் தமிழ் நூல்களையும் நுணுகியாய்ந்து அதற்கு ஒருவாறு பொருள்கூறுவது இயலாத ஒன்றன்று. நீதி நூல்கள் மிகப்பல தமிழிலுண்டு ஆதலின், அதற்கு மிக்க இடமும் வசதியும் தமிழில் உண்டு என்பதுண்மை.

    "=" என்பதற்குப் பதிலாக "≈" என்ற குறியீட்டை நீங்கள் போட்டு வாசித்தாலும், எனக்கு மறுப்பொன்று மில்லை.

    இக்காலத்தவர் "கீழ்" என்பதைக் கீழ்ச்சாதி என்று தவறாகப் பொருள் கொள்ளக்கூடும். . இதன்பொருள் அதுவன்று.

    இன்னொரு கேள்வி வரும் என்று எனக்குத் தெரியும், கயவர் யார் என்று கேட்பீர்கள் என்று அல்லது, கீழ் என்பது எப்படிக் கயவரைக் குறிக்கும் என்று! பொருள் தெளிவாய் உள்ளது என்று எண்ணிக்கொண்டேன். So you have not asked. Thank you.

    You are welcome to ask more and others may also upload their input if any.







    B.I. Sivamaalaa (Ms)

  8. #547
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    Do yourself a favour. Read a random kuRaL today.
    I've been doing since morning and spotted many lovely ones I hadn't read before. We (I mean I) always read in a bunch and are likely swept away by one kuRaL that we don't give the next the due attention it deserves. So we will ALWAYS have gems to discover

    ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
    காதலார் கண்ணே உள.

    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

  9. #548
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    மதியும் மடந்தை முகனும் அறியா
    பதியின் கலங்கிய மீன்


    இதில் மீன் என்பது எதைக் குறிக்கிறது? குளத்து மீனா? விண்மீனா?
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  10. #549
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    vaan mIInkaL

    Quote Originally Posted by venkkiram View Post
    மதியும் மடந்தை முகனும் அறியா
    பதியின் கலங்கிய மீன்


    இதில் மீன் என்பது எதைக் குறிக்கிறது? குளத்து மீனா? விண்மீனா?
    I missed this.

    The reference here is to the stars - viN mIIn,

    Please note that the word mIIn here is plural, though in singular format.
    B.I. Sivamaalaa (Ms)

  11. #550
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    பீழை தரும்

    கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்
    முடிந்தாலும் பீழை தரும்.


    கடிந்த : இக்காலத்தில் இதைக் "கடிந்தவை" என்றே எழுதுவர். கடிந்தவைகள் என்று இரட்டைப் பன்மையாக எழுதுவது விலக்கத்தக்கது.

    கடிந்து : விலக்கி.

    ஒரார் : ஒருவார் என்பது இப்படிச் சுருங்கி நின்றது. (தாமும்) விலக்கமாட்டார். ஒருவுதல் - விலக்குதல். தம் நடத்தையிலிருந்து அகற்றுதல் என்பதாம்.

    ஒருவு என்ற வினைச்சொல்லினின்று "வு" கெட்டது. அதாவது "வு" களையப்படவே, ஒரு என்றாகி, பின் ஆர் என்பது வந்து ஒட்ட, ஒரு+ஆர் = ஒரார் எனப்புணர்ந்த எதிர்மறை வடிவம்.

    முடிந்தாலும் : நடைபெற்றாலும். நடந்தேறினாலும்.

    பீழை - பீடை. துன்பம். டகரமும் ழகரமும் ஒன்றுக்கொன்று நிற்கவல்ல எழுத்துக்கள்.
    B.I. Sivamaalaa (Ms)

Page 55 of 56 FirstFirst ... 54553545556 LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •