Page 48 of 49 FirstFirst ... 3846474849 LastLast
Results 471 to 480 of 487

Thread: Astrological Knowledge for better and meaningful life

  1. #471
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    athe copy

    பத்தாவது வீடு


    ஒருவரின் ஜீவனம், கெளரவம், சபைகளில் முக்கியத்துவம்
    ஆகியவற்றை 10-ம் வீட்டைக் கொண்டுதான் சொல்ல வேண்டும். தொழிலில்
    முன்னேற்றம், பதவி ௪யர்வு ஆகியவற்றையும் இதைக் கொண்டேதான் சொல்ல வேண்டும்.
    ஒருவருக்கு அரசியல் நல்லபடியாக இருக்குமா அல்லது இருக்காதா என்றும் இந்த
    வீட்டைக் கொண்டுதான் சொல்ல வேண்டும். இதைக் கர்மஸ்தானம் என்றும் கூறுவார்கள்.
    தாயார், தகப்பனாருக்குச் செய்யும் கர்மங்களையும் இந்த வீட்டைக் கொண்டுதான்
    சொல்ல வேண்டும். ஒருவரின் எஜமானர், அரசாங்கம் இவைகளையும் இந்த வீடுதான்
    குறிக்கிறது.
    -------------------
    பத்தாவது வீடு ஜீவனஸ்தானம் மற்றும் கர்மஸ்தானம் எனப்படும். ஒருவருக்கு எப்படி பட்ட தொழில் அமையும் என்று பார்ப்பதற்க்கு இந்த வீட்டை வைத்துதான் முடிவு செய்யபடவேண்டும். சோதிடம் எழுதப்பட்ட காலத்தில் குறைந்த தொழில்கள்தான் இருந்தன அதனால் தொழில்களை சிறிய முயற்சியில் கண்டுபிடித்துவிடலாம். ஆனால் இன்று நிறைய தொழில்கள் வந்துவிட்டன. அதனால் கண்டுபிடிப்பது கடினம்

    பத்தாவது வீட்டு ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் என்ன பலன் என்று இப்பொழுது பார்க்கலாம்.

    பத்தாவது வீட்டு அதிபதி லக்கினத்தில் இருந்தால் அதாவது 1 ம் வீட்டில் இருந்தால் சுயமுயற்சியால் முன்னேற்றம் காண்பார். செல்வம் சொத்துக்கள் கல்வி தான தருமங்களுடன் அரசாங்கத்தில் உயர்பதவிகளில் இருப்பார். நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள்.

    பத்தாவது வீட்டு அதிபதி 2 ம் வீட்டில் இருந்தால் நல்ல அழகுடனும் வாக்குவன்மை திறம்பட பேசும் சக்தி செல்வ செழிப்புடனும் இருப்பார்கள். சொத்துகள் கிடைக்கும் நல்ல நண்பர்கள் அமைவார்கள்.

    பத்தாவது வீட்டு அதிபதி 3 ம் வீட்டில் இருந்தால் சகோதர தோஷம் ஏற்படும். சகோதரர்கள் இருந்தாலும் செல்வாக்குடன் இருக்கமாட்டார்கள்.

    பத்தாவது வீட்டு அதிபதி 4 ம் வீட்டில் இருந்தால் அழகான வீடு, செல்வ செழிப்பான வாழ்க்கை தாய் வழி ஆதரவு முதலியன உண்டாகும். வண்டி வாகனம் அமையும். பூமியிலிருந்து புதையில் போன்றவை கிடைக்கும்.

    பத்தாவது வீட்டு அதிபதி 5 ம் வீட்டில் இருந்தால் புத்திரபாக்கியம் அமையும் சந்தோஷ செல்வாக்குடன் கூடின வாழ்க்கை அமையும். பெரியமனிதர்களின் நட்பை பெறுவார்கள் அரசாங்கத்தில் உயர் பதவிகளில் இருப்பார்கள்.

    பத்தாவது வீட்டு அதிபதி 6 ம் வீட்டில் இருந்தால் பிறர் பொருளை அபகரிக்கும் குணம் இருக்கும். உடம்பு மெலிந்தாக இருக்கும்.

    பத்தாவது வீட்டு அதிபதி 7 ம் வீட்டில் இருந்தால் களத்திர தோஷம் ஏற்படும் மனைவி ஒற்றுமையுடன் இருக்கமாட்டாள். மனைவி மூலம் பொருள் சேரும்.

    பத்தாவது வீட்டு அதிபதி 8 ம் வீட்டில் இருந்தால் நல்ல ஆயுள் உண்டு. புத்திர தோஷம் ஏற்படும். மனைவியுடன் திருப்தியான சந்தோஷங்களில் ஈடுபட முடியாது.

    பத்தாவது வீட்டு அதிபதி 9 ம் வீட்டில் இருந்தால் தகப்பனாரின் சொத்துக்கள் விரயம் ஆகும். புத்திரவிருத்தி இருக்காது. சிரம வாழ்க்கைகளை அனுபவிக்கும்படி இருக்கும். தானதருமங்களிலும் ஈடுபாடு அதிகம் இருக்கும்.

    பத்தாவது வீட்டு அதிபதி 10 ம் வீட்டில் இருந்தால் பெரிய மனிதர்களின் ஆதரவு இருக்கும். உறவினர்களின் ஆதரவு இருக்கும். உலக விசயங்களில் நல்ல அறிவு இருக்கும்.

    பத்தாவது வீட்டு அதிபதி 11 ம் வீட்டில் இருந்தால் செய்யும் காரியங்களில் ஒவ்வொன்றிலும் லாபத்தை பெறுவார்கள். மூத்த சகோதர சகோதரிகள் கஷ்டத்தை அனுபவிப்பார்கள்.

    பத்தாவது வீட்டு அதிபதி 12 ம் வீட்டில் இருந்தால் பொருள் நஷ்டம் ஏற்படும். புத்திரர்களால் கஷ்டங்கள் ஏற்படும். அனாவசியமான செலவுகள் இருக்கும். சொத்துக்கள் அழியும்.
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #472
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    same source:

    11-வது வீடு


    இதை லாபஸ்தானம் என்று கூறுவார்கள். நமக்கு வரக்கூடிய
    லாபங்களையும், சுகங்களையும் அளிக்கக் கூடியது இந்த வீடுதான். மூத்த சகோதரத்தைப்
    பற்றியும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். நண்பர்களையும் இந்த வீட்டை
    வைத்துத்த¡ன் கூறவேண்டும். நல்ல கிரகங்கள் இந்த வீட்டில்இருந்த¡ல்
    நண்பர்கள் கிடைப்பார்கள். பொதுவாக வாழ்க்கையில் என்ன மிச்சம் என்பதை இந்த
    வீட்டை வைத்துத்தான் கூற வேண்டும். 11-ம் வீட்டிற்குடைய கிரகம் 5-ம் வீட்டில்
    இருந்தால் புத்திரத்தால் லாபம் எனக் கொள்ளலாம். அதே 11-ம் வீட்டிற்குடைய கிரகம்
    10-ல் இருந்தால் நல்ல ஜீவனம் எனக் கொள்ளலாம். அதே போல் 11-க்குடைய கிரகம்
    எந்த வீட்டில் இருந்தாலும் அந்த வீட்டிற்கு நல்லது எனக் கொள்ள வேண்டும்.
    ------------


    பதினோராம் வீடு லாப ஸ்தானம் எனப்படும். ஒருவருடைய லாபம் மூத்த சகோதர சகோதரிகள் ஆகியவற்றைப் பற்றி கூறுவது பதினோராம் வீடு.

    பதினோராம் வீட்டு அதிபதி ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் என்ன பலன் என்று இப்பொழுது பார்க்கலாம்.

    1 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல லாபம் வரும் நல்ல படிப்பு வரும் எந்த தொழிலில் ஈடுபட்டாலும் நல்ல லாபங்களை பெறுவார்கள். நல்ல குடும்ப வாழ்க்கை அமையும்

    2 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல குடும்ப வாழ்க்கை அமையும். நல்ல வருமானம், செல்வாக்கு, அதிகாரம் கிடைக்கும்.

    3 ஆம் வீட்டில் இருந்தால் மூத்த சகோதர சகோதரிகளில் நல்ல நிலையில் இருப்பார்கள் . சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும்.

    4 ஆம் வீட்டில் இருந்தால் தெய்வீக வழியில் செல்பவராக இருப்பார்கள் நல்ல பணி ஆட்கள் கிடைப்பார்கள். வீடு வாகனத்துடன் சந்தோஷமாக குடும்ப வாழ்க்கை அனுபவிப்பார்கள்.

    5 ஆம் வீட்டில் இருந்தால் இவர்களின் புத்திரர்களால் நல்ல வருமானம் கிடைக்கும். இவர்கள் செய்யும் தொழில்களை இவர்களின் பிள்ளைகளும் செய்வார்கள். அரசாங்க ஆதரவு கிடைக்கும்.

    6 ஆம் வீட்டில் இருந்தால் செய்கின்ற தொழிலில் எதிரிகள் இருப்பார்கள் வரும் லாபம் எல்லாம் கடன் கட்டவே போய்விடும்.

    7 ஆம் வீட்டில் இருந்தால் மனைவியின் மூலம் லாபங்கள் வரும். திருமணத்திற்க்கு முன்பு ஏழையாக இருந்தவர்கள் திருமணத்திற்க்கு பின்பு நல்ல நிலையில் இருப்பார்கள். நல்ல யோகங்கள் அமையும். வண்டி வாகனம் அமையும்.

    8 ஆம் வீட்டில் இருந்தால் பல தொழில்கள் செய்ய மணம் ஈடுபடும். பல வழியில் பணம் செலவு செய்ய நேரிடும். கஷ்டத்துடனே வாழ்க்கை ஓடும்.

    9 ஆம் வீட்டில் இருந்தால் வண்டி வாகனம் வரும். அரசாங்கத்தில் நல்ல பெயர் கிடைக்கும். தந்தை செய்யும் தொழிலே இவர்களுக்கு கிடைக்கும் . பெரிய தொழில்கள் செய்து நல்ல லாபங்களை பெறுவார்.

    10 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல வேலையில் இருப்பார்கள். அமைதியான குடும்ப வாழ்க்கை அமையும். தெய்வீக அருள் நிறைந்து காணப்படுவார்கள்.

    11 ஆம் வீட்டில் இருந்தால் மூத்த சகோதர சகோதரிகளின் மூலம் லாபங்கள் வரும். மூத்த சகோதர்கள் நல்ல அந்தஸ்தோடு இருப்பார்கள்.

    12 ஆம் வீட்டில் இருந்தால் கடன் தொல்லைகள் வியாதிகள் ஏற்படும். செய்யும் தொழிலில் லாபங்கள் குறைந்து காணப்படும்.
    "அன்பே சிவம்.

  4. #473
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    same source:

    12-வது வீடு:



    இதை மோட்ச ஸ்தானம் என்று சொல்லுவார்கள். இதை
    விரய ஸ்தானம் என்றும் சொல்லுவார்கள். நமக்கு வரக்கூடிய செலவுகள், நஷ்டங்கள்
    எல்லாவற்றையும் இந்த வீட்டை வைத்தே சொல்லவேண்டும். துன்பம், பாவங்கள், வறுமை,
    துரதிஷ்டம், ஆகியவையும் இந்த வீட்டை வைத்தே சொல்ல வேண்டும். மறைமுக
    எதிரிகளையும் இந்த வீட்டை வைத்தே சொல்ல வேண்டும். ஒருவருக்கு ஜெயில் வாசம்,
    ௪ள்ளதா அல்லது இல்லையா என்பதையும் இந்த வீட்டை வைத்துத்தான் கூறவேண்டும்.
    கடனைத் திருப்பிக் கொடுத்தலையும், முதலீடு செய்வதையும் இந்த வீட்டை வைத்துத்தான்
    கூற வேண்டும்

    ----------

    பன்னிரண்டாம் வீடு விரய ஸ்தானம் எனப்படும். மோட்ஷம் தரும் வீடும் இதுதான். நமக்கு வரக்கூடிய செலவுகள், நஷ்டங்கள், துன்பங்கள், பாவங்கள் வறுமை, துரதிஷ்டம ஆகியவைகளை இந்த வீட்டை வைத்து சொல்ல வேண்டும். ஒருவருக்கு ஜெயில் வாழ்க்கை உள்ளதா என்று இந்த வீட்டை வைத்துதான் சொல்ல வேண்டும். அதைப்போல் ஒருவர் தன்னலம் இல்லாது பிறர் நலனுக்காக செய்யும் சேவையை குறிக்கும் வீடு தான் இந்த பன்னிரண்டாம் வீடு. நாம் வளர்க்கும் செல்ல பிராணிகளைக் குறிப்பதும் இந்த வீடுதான். நாம் வாங்கிய கடனை திருப்பி தருவதும் இந்த வீடுதான். நம் உடம்பில் இடது கண், பாதங்களை குறிப்பதும் இந்த வீடுதான். தனிமையான வாழ்க்கையை குறிக்கும் வீடு பன்னிரண்டாம் வீடுதான்.

    பன்னிரண்டாம் வீட்டு அதிபதி ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் என்ன பலன் என்று இப்பொழுது பார்க்கலாம்.

    1 ம் வீட்டில் இருந்தால் நல்ல உணவுகளையும் நல்ல நித்திரையும் கொடுக்கும். நல்ல செலவு செய்து வசதி வாய்ப்புகளை பெறுவார்

    2 ம் வீட்டில் இருந்தால் பேச்சிற்க்கு மதிப்பு இருக்காது தனம் ஸ்தானத்தில் இருப்பதால் தன விரையம் ஏற்படும். தேவையில்லாத பேச்சுகளை பேசுவார்கள்

    3 ம் வீட்டில் இருந்தால் சொத்துகளை இழப்பார்கள் இளைய சகோதர சகோதரிகளால் செலவு ஏற்படும்.

    4 ம் வீட்டில் இருந்தால் சொந்தங்களால் செலவு ஏற்படும். நண்பர்களாலும் செலவு ஏற்படும். குடும்ப செலவினங்கள் அதிகமாக இருக்கும்.

    5 ம் வீட்டில் இருந்தால் மூத்த சகோதரர்களால் விரயம் ஏற்படும். ஆலய திருப்பணிகள், பெரிய மனிதர்கள் பிள்ளைகளால் செலவு வரும்.

    6 ம் வீட்டில் இருந்தால் வியாதிகள் ஏற்படும். அதனால் மருத்துவனையில் சேர்ந்து செலவு செய்ய நேரிடும். பொருள் நஷ்டம் ஏற்படும்.

    7 ம் வீட்டில் இருந்தால் மனைவி வழியில் அதிக செலவினங்கள் ஏற்படும், காமத்தால் செலவினங்கள் ஏற்படும்.

    8 ம் வீட்டில் இருந்தால் சண்டைகள் ஏற்பட்டு அதனால் வழக்குகள் வந்து செலவு செய்ய நேரிடும். உடல் நோய் ஏற்பட்டு அதனால் செலவு ஏற்படும்.

    9 ம் வீட்டில் இருந்தால் தகனப்பனாரின் சொத்துக்களை விற்க்க நேரிடும். சகோதரர்களால் நஷ்டமும் கஷ்டமும் ஏற்படும்.

    10 ம் வீட்டில் இருந்தால் செய்கின்ற தொழிலில் முடக்கம் ஏற்படும். தொழிலில் வருமானம் இல்லாது போதும். தொழில் கை விட்டு போகும்.

    11 ம் வீட்டில் இருந்தால் தான் தருமங்களில் செலவு ஏற்படும். மூத்த சகோதரர்களால் நஷ்டமும் செலவும் ஏற்படும்.

    12 ம் வீட்டில் இருந்தால் உடல் நிலை சரியாக இருக்காது. நல்ல நித்திரை ஏற்படும். சொத்துக்கள் விரையமாகும்.

    உங்களுக்கு புரியுதா
    எனக்கு hmmmmmmmm
    "அன்பே சிவம்.

  5. #474
    Senior Member Devoted Hubber Prabo's Avatar
    Join Date
    Dec 2007
    Location
    Anna Salai
    Posts
    359
    Post Thanks / Like
    Quote Originally Posted by selvakumar View Post
    Prabo, Just for my analysis. Are you a from a rich or a relatively upper middle class family especially from your father side?
    Hi Selva bro

    Kazhiyur Narayanan maathiri sollreenga itha eppo kaetaenu naanae maranthutaen

    Even I have a fascination for Astrology not just as a belief system but also as science.

    Regarding your question, relatively upper middle class-nu sollalaam, but this is only after by birth-nu ellaam solluvaanga/namburaanga. Athuku munnadi appadi illa.

  6. #475
    Senior Member Diamond Hubber selvakumar's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Bay Area
    Posts
    5,450
    Post Thanks / Like
    Quote Originally Posted by Prabo View Post
    Hi Selva bro

    Kazhiyur Narayanan maathiri sollreenga itha eppo kaetaenu naanae maranthutaen

    Even I have a fascination for Astrology not just as a belief system but also as science.

    Regarding your question, relatively upper middle class-nu sollalaam, but this is only after by birth-nu ellaam solluvaanga/namburaanga. Athuku munnadi appadi illa.
    could be true. Because when you were born you had Sukra dhisai. It is good one and brings prosperity to the family.

  7. #476
    Senior Member Diamond Hubber selvakumar's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Bay Area
    Posts
    5,450
    Post Thanks / Like
    On April 10th Venus & Ketu will be at the same location in Taurus and on the opposite side of the chart the Moon & Rahu will be at the same location in Scorpio, financial markets and the stock market may go strongly up and down within the same day. See the powerful effects the planets have on the market this day.
    elp
    From Astroved.com

    Anyone with good knowledge in monitoring stock market? This is not something that happens often. If someone with a good knowledge in stock market can observe and post their views on 10th of April, it will help my learning

  8. #477
    Senior Member Devoted Hubber
    Join Date
    Jun 2011
    Posts
    312
    Post Thanks / Like
    you tracked this one , selva?

  9. #478
    Senior Member Diamond Hubber PARAMASHIVAN's Avatar
    Join Date
    May 2009
    Location
    Kailash
    Posts
    5,541
    Post Thanks / Like
    Aana Sir or some one

    Pls enlighten me as to how I can find what veedu I am in based on my DOB ?
    Om Namaste astu Bhagavan Vishveshvaraya Mahadevaya Triambakaya Tripurantakaya Trikalagni kalaya kalagnirudraya Neelakanthaya Mrutyunjayaya Sarveshvaraya Sadashivaya Shriman Mahadevaya Namah Om Namah Shivaye Om Om Namah Shivaye Om Om Namah Shivaye

  10. #479
    Senior Member Devoted Hubber
    Join Date
    Jun 2011
    Posts
    312
    Post Thanks / Like
    Chinna veeda illa periya veeda ?

  11. #480
    Senior Member Diamond Hubber PARAMASHIVAN's Avatar
    Join Date
    May 2009
    Location
    Kailash
    Posts
    5,541
    Post Thanks / Like
    Quote Originally Posted by Balaji.r View Post
    Chinna veeda illa periya veeda ?
    Karumum ya
    Om Namaste astu Bhagavan Vishveshvaraya Mahadevaya Triambakaya Tripurantakaya Trikalagni kalaya kalagnirudraya Neelakanthaya Mrutyunjayaya Sarveshvaraya Sadashivaya Shriman Mahadevaya Namah Om Namah Shivaye Om Om Namah Shivaye Om Om Namah Shivaye

Page 48 of 49 FirstFirst ... 3846474849 LastLast

Similar Threads

  1. GENERAL KNOWLEDGE.!
    By Sudhaama in forum Miscellaneous Topics
    Replies: 13
    Last Post: 30th April 2008, 07:43 PM
  2. VEDIC KNOWLEDGE FOR ALL
    By padmanabha in forum Miscellaneous Topics
    Replies: 5
    Last Post: 12th February 2007, 06:23 AM
  3. General Knowledge
    By Pras in forum Miscellaneous Topics
    Replies: 237
    Last Post: 31st January 2006, 12:21 PM
  4. Traditional Knowledge
    By gaddeswarup in forum Miscellaneous Topics
    Replies: 57
    Last Post: 19th December 2005, 09:18 PM
  5. Astrological PREDICTIONS and Divine FORECASTS !!!
    By Sudhaama in forum Miscellaneous Topics
    Replies: 79
    Last Post: 29th May 2005, 09:38 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •