Page 2 of 3 FirstFirst 123 LastLast
Results 11 to 20 of 26

Thread: KAVITHAAVILAASAM

  1. #11
    Senior Member Devoted Hubber gragavan's Avatar
    Join Date
    Nov 2004
    Location
    Bangalore, India.
    Posts
    406
    Post Thanks / Like
    ¦Åí¸¢ ÔÉ¢§¸¡ð ÀÂýÀÎòи¢ýÈ£÷¸Ç¡?

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #12
    Senior Member Veteran Hubber VENKIRAJA's Avatar
    Join Date
    Mar 2006
    Location
    Madras
    Posts
    3,285
    Post Thanks / Like
    yes,i feel a bit lazy to write in tscii n copy it again,etc.(though its cozier)

  4. #13
    Devoted Hubber sundararaj's Avatar
    Join Date
    Nov 2006
    Location
    BANGALORE
    Posts
    382
    Post Thanks / Like
    Good info VENKI.
    Liberty is my religion. Liberty of hand and brain -- of thought and labor. Liberty is the blossom and fruit of justice -- the perfume of mercy. Liberty is the seed and soil, the air and light, the dew and rain of progress, love and joy.

  5. #14
    Senior Member Veteran Hubber VENKIRAJA's Avatar
    Join Date
    Mar 2006
    Location
    Madras
    Posts
    3,285
    Post Thanks / Like
    விலாசம் எண் #3:

    "நாட்கள் எல்லாம் அழுகின்றன
    அவள் பிறந்தநாளாய் பிறக்காததற்காக"

    இத்தனை அற்புதமாய் காதலை நவில புதுக்கவிஞர்களுள் யாரிருக்கிறார்கள் இவனைத் தவிர?பெயர் கடைசியில்.ஆனந்த விகடன் இவனது வாசலாயிற்று.தமிழ் வாசகர்களின் நெஞ்சில் இவன் குடியேறியது பேப்பர்கார சிறுவர்களின் மூலமாகத்தான்.இளைஞர்களை பெரிதும் கவர்ந்த பட்டியலில் தற்போதைக்கு இவன் முதலிடத்தில் இருப்பான்."திமிருக்கும் அழகென்று பேர்"என பாவேந்தன் கவியை திரித்த இவன் கவிமத்து செயமத்து.அடுத்த பெண்கள் கல்லூரி 5 கீ.மீ.இது தான் இவரது முதல் தொகுப்பு.பிறகு தேவதைகளின் தேவதை,விழியீர்ப்புவிசை,இளங்கலை காதலியல்(B.Sc love-ology) என இவரது கவிதை ரதங்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.இவனது கவிதை வேள்வியில் ஆரம்ப சுடர்களை ஏற்றிவைத்தவர்கள் பழனிபாரதியும்,அறிவுமதியும் தான்.மாணாக்கனாக்கி பின் சிற்பமாக்கியிருக்கிரார்கள்.காதல் கவிதைகள் எழுதினாலும் இவர் காதலித்ததில்லை என்கிறார்.காதலர்களின் உரையாசிரியராக அவதாரமெடுத்துவரும் இவர் நிச்சயமாக எனது அலமாரிகளில் நிறைந்திருக்கிறார்.காதலினை உருவகம்,நவீனம்,அழகியல் போன்ற கட்டங்களுள் புகுத்தாமல் மிகவும் எளிய சொற்களை வைத்துக்கொண்டே கவி நெய்கிறார்.சொற்களுள் புகுந்து அர்த்தங்களை தேட வேண்டிய அவசியம் இல்லை.ஆனால் சில கவிதைகள் மட்டும் எங்கோ வாசித்ததைப் போன்ற மணம் வீசுவதை இவர் தவிர்த்துக்கொள்ளலாம்.நடையில் பெரிதாக சிலாகிப்பதற்கு ஒன்றுமில்ல,இதுவே இவரது பலம்.இத்தனை எளிய நடையில் எப்படி இவரால் இத்தனை கருத்தாழத்தை கொணர முடிகிறது.பார்ப்பதற்கு வெறும் கிணரு,பாய்ந்தால் தான் தெர்யும் நீங்க இயலாத பாதாளமென்று,நிறைந்திருக்கு நீர் காதலல்லவா?

    "நானும் ஏசுபிரான் தான்
    ஆனால் ஒரு வித்தியாசம் -
    நீ ஒரு கன்னத்தில் முத்தமிடவேண்டும்"
    (இது நான் கொஞ்சம் மாற்றியடித்தது)

    அளப்பெரிய இந்த ஆற்றலை எங்கே மறைத்துவைத்திருக்கிறார் என்று ஆச்சரியப்படும் அளவிற்கு ஓர் அற்ப தோற்றம்.சாதாரண அரசு அலுவலராட்டம்.இவர் அருட்பெருங்கோ என்ற துணைக்கவிஞரோடு இணைந்தும் கவி புனைவார்.அர்த்த ராத்திரியின் திரி போல கருப்பின் வாசனையை இவரது காதல் தோல்வி கவிதைகளில் காணலாம்.என்னை புறநானூற்று,அகனானூற்று கவிகளை விடவும் இவரது தொகுப்புக்கள் பிடித்தது.என் வகுப்பு முழுதும் இவர் புத்தகம் பறந்து பல்லவி பாடியது.நடையில் அடர்த்தி வாழையாட்டம் இருந்தாலும் சுவையில் ஆலமாகிவிடுகிறார்.மேலும்,இவரது உவமைகளும் உருவகங்களும் வித்தியாசமானவை.அறிவியல் இவரது கவிதைகளில் ஊடாடும்.கவிதை நடையில் இவர் வெறும் புதுமையை மட்டும் நம்பியவர்.பாடுபொருள் பெண்,துறை சேலை என்றாகிவிட்டாலும்,தாடியற்ற கவிஞர் இவர்.விகடன்,குமுதம் முதலான ஜனரஞ்சக பத்திரிக்கைகளும் இவரது படைப்புகளை வெளியிட்டுள்ளன,கணையாழி,தீராநதி போன்ற இலக்கிய இதழ்களும் இவரது படைப்புகளை ஏந்தியிருக்கின்றன.இதோ இக்கவியை பாருங்கள்,புரியும் இவர் யாரென்று:

    "ஐந்து லட்சம் மைல்களுக்கு
    அப்பால் உள்ள நட்சத்திரத்தில்
    75% ஹைட்ரஜன் என
    கண்டுபிடிப்பதற்கு விஞ்ஞானம் உள்ளது
    பகத்து வீட்டிலிருக்கும் உன்
    இதயத்தி நான் இருக்கிறேனா
    எனக் கண்டாயத் தான் ஒரு விஞ்ஞானமும் இல்லை"

    சரிதான்.அவர் பெயர் தபூ சங்கர்,இயற்பெயர் காதலாக இருக்கக்கூடும்.

  6. #15
    Senior Member Veteran Hubber VENKIRAJA's Avatar
    Join Date
    Mar 2006
    Location
    Madras
    Posts
    3,285
    Post Thanks / Like
    விலாசம் எண் # 4.

    பட்டப்பெயர்கள் ஏதும் இல்லை.இவர் இட்டுக்கொண்ட ஒரே பெயர் மாத்திரமே உண்டு.அதுவும் ஒரு புராண பெயர்,அதுவும்சமகால ஓவியருடைய பெயருக்கு எதுகைப்பெயர்.ஆம்,வாலி.எதுகை மாலி,புகழ்பெற்ற ஓவியர்.படுத்துக்கொண்டே ஜெய்க்கும் ரங்கன் வாழ் ஸ்ரீரங்கத்து திருமகன் வாலி.ஓவியராக ஆசைப்பட்டு சென்னை வந்தார்.பாடெழுதித்தான் வயிறு கழு ஆயிற்று என கவிதைத்தொழில் புரிந்தவர்.வந்து ஆண்டுகள் ஐம்பது ஆகிவிட்டன,ஆனால் இன்னும் ஒரு விருதோ,புகழோ,பெயரோ இன்றி சர்வ அமைதியாக வாழ்ந்துகொண்டிருக்கிறது தாடிகளை
    கரையாகக் கொண்ட கவிதைக் கடல்.கண்ணதாசன் உச்சியில் இருந்தபோது அன்னார் கவிதை எழுத வந்தார்,எப்போதுமே,இளையேன்,எளியேன்,அடியேன் என்றே தன்னை அடக்கிக்கொள்வது வாலிக்கு விருப்பமான ஒன்று.எம்.ஜி ஆரின் உடன்பிறவா சகோதரராக இருந்தவர் வாலி:

    "நான் ஆணையிட்டால்
    அது நடந்துவிட்டால்
    இந்த ஏழைகள் வேதனை படமாட்டார்"

    "ஒரே வானிலே
    ஒரே மண்ணிலே
    ஒரே கீதம் -
    உரிமைகீதம் பாடுவோம"

    போன்ற பல இறவாக்கவிகளுக்கு சொந்தக்காரர்.இவரது வரிகல் தாம் தலைவருக்கு புரட்சியின் வித்தாய் அமைந்தன,தமிழ்த்தாய்க்கு சொத்தாய் அமைந்தன்.உவமைகலின் ஒன்றுவிட்ட சகோதரர் வாலி.அவரது வார்த்தை வழியே உவமை எள்ளி நகையாடும்.

    "தேயும் நிலாவைத்
    தாயும் காட்டி
    தேயா நிலாவுக்குச்
    சோறு ஊட்டினாள்"

    -இராமனுக்கு கோசலை சோறூட்டும் காட்சியை இப்படி விவரிக்கிறார்.அபூர்வ சகோதரர்கள் படத்தில் அவர் "மழை கொட்டும் நேரம்,உப்பு விற்கப் போனேன்;காற்றடிக்கும் நேரம்,மாவு வாங்கப் போனேன்"என்று எழுதியது நினைவிருக்கலாம்.ஏரத்தாழ இருபதின்பாயிரம் பாடல்களையும்,இராமாயணம்,மகாபாரதம்:இவற்றினை வசனகவிதையாகவும்,எண்ணற்ற தனி நூல்களையும் எழுதியிருக்கிறார்."வாலி ஓவியராகவில்லை என்ற வருத்தம் அவருக்கு மட்டுமே இருக்கும்",என்று விகடன் பதிப்பாளர் ஒருமுறை பேசினார்.எம்.ஜி.இராமச்சந்திரன்,இவரிடம் ஐயா
    நீங்கள் எழுதியது எல்லாம் நடந்துவிட்டது,உங்களுக்கு ஏதேனும் செய்யவேண்டும் என நினைக்கிறேன் என்றபோது இப்படி நீங்கள் கேட்பதைத் தவிர வேறு என்ன வேண்டும் என்றாராம்.நேற்று நடிக்கும் சிம்புவுக்கும் இன்ஸ்பிரேஷனாக,அன்றிருந்த எம்.ஜி.ஆருக்கும் இன்ஸ்பிரேஷனாக என இருப்பினும்,இன்னும் டில்லி கூட பார்த்ததில்லை மனிதர்.அற்புதமாக புதுக்கவிதைகளில் மரபுத்தமிழ்ச்சுவையை கொண்டுவரும் கலையை அறிமுகப்படுத்தியவர் வாலி.வசன கவிதைகலுக்கு புத்துயிர் கொடுத்து எழுப்பியவர் வாலி.சிறுவயதிலேயெ அவருக்கு கவியார்வம் இருந்திருக்கிறது.அவர் இலக்கிய அரட்டைகலில் கலந்துகொள்வதுண்டாஅம்,அவ்வரட்டைகளில் சுஜாதா,பாலகுமாரன் போன்றோரெல்லாம் இருந்ததாகக் கேள்வி

    "பூமாலை வாங்கிவந்தான்
    பூகள் இல்லையே!
    போதையின் பாதையில் போகின்றான்
    மானத்தின் மானத்தை வாங்கிவிட்டான்!"

    அற்புதம்!இயைபுத்தொடை இவரதி இடதுத்தொடை.பேச்சிலேயே இயைபருவி வழியும்,நுங்கும் நுரையுமாக பிரவாகம் எடுக்கும் இவர்,ஆங்கிலத்திலும் தேர்ந்தவர்.தூய தமிழ் பாவலரும் கூட.தாடிக்காரர் குமுத்தத்தின் வாரந்தோறும் வாலி பகுதிக்கு தொலைபேசி அழைப்பிலேயெ கவிதை வாசிக்குமளவு இவரது நரம்புகள் கூர் தீட்டப்பட்டுள்ளன,கவிதை பொறிகள் சிதற.நிறைய படங்களிலும் நடித்துள்ளார்.இந்த நொடிவரை கவிதை எழுதுகிறார்.கலைஞரின் செல்லத்தம்பி.ஏகப்பட்ட வெற்றிப்பாடல்கலின் கர்த்தா.ஏனோ இவருக்கு ஒரு தேசியவிருது கூட தரவில்லை,அதுசரி....ஒரு பிரமுகர் பேசியது நினைவுக்கு வருகிறது:இத்தகு பிரபலங்களின் பெயரில் விருது தரலாமே தவிர,பிரபலங்கலுக்கு விருது தருவது ஏற்புடைத்தன்று!சரிதானே!வாலி பாரதி,பாரதிதாசன்,சுரதா தலைமுறையில் வந்தவர்.அவர்களது புகழ் குறையாத அளவிற்கு,முடிசூடா மன்னனாக,பட்டமில்லா இராஜாவகா தமிழ்மொழியை ஏறத்தாழ ஆட்சி செய்துவிட்டார்.முழுக்க நரைத்தாலும்,உள்ளே கரும்பு வில்லொடு ஒரு மன்மதன் அரை உறக்கத்திலிருக்கிறான்,இவருள்ளே.உணர்ச்சிகளில் 'வாலி'பனாகவும்,கோபத்தில் தாலிபனாகவும் மாறிவிடுகிற இவர் சாதிப்பற்றும் இல்லாதவர்.புழுவென்றறியாது புலியென்ப்று சொல்பவர்கள் மத்தியில
    "கலங்களுக்கு நடுவே கட்டுமரத்தோடு வந்தவன்"என தன் ஆரம்பகாலத்தை விமரிசிக்கும்

    இவரது simplicity உண்மையாகவே அட்டகாசம்.மேலும் பெயரில் மட்டுமல்லாது,தன்னுடன் மோதுபவர்களின் பாதிபலத்தை பெற்றுக்கொண்டு உடனுக்குடன் கவிசொல்லு ஆற்றல் படைத்தவரும் ஆவார்.பழகுவதற்கு எளியவர்,புன்முறுவலுக்கு பதிலவர்,ஆவேச வல்லவர்.எங்கள் வாலியவர்.

  7. #16
    Senior Member Seasoned Hubber TamilMoon's Avatar
    Join Date
    Jun 2006
    Location
    Chennai
    Posts
    1,103
    Post Thanks / Like
    Quote Originally Posted by VENKIRAJA
    பாடுபொருள் பெண்,துறை சேலை என்றாகிவிட்டாலும்,தாடியற்ற கவிஞர் இவர்.

    "ஐந்து லட்சம் மைல்களுக்கு
    அப்பால் உள்ள நட்சத்திரத்தில்
    75% ஹைட்ரஜன் என
    கண்டுபிடிப்பதற்கு விஞ்ஞானம் உள்ளது
    பகத்து வீட்டிலிருக்கும் உன்
    இதயத்தி நான் இருக்கிறேனா
    எனக் கண்டாயத் தான் ஒரு விஞ்ஞானமும் இல்லை"

    சரிதான்.அவர் பெயர் தபூ சங்கர்,இயற்பெயர் காதலாக இருக்கக்கூடும்.
    ←~^~♥~Vijay~♥~^~→

  8. #17
    Senior Member Diamond Hubber
    Join Date
    Jan 2006
    Posts
    6,074
    Post Thanks / Like
    venki : good job
    Anbe Sivam

  9. #18
    Senior Member Veteran Hubber VENKIRAJA's Avatar
    Join Date
    Mar 2006
    Location
    Madras
    Posts
    3,285
    Post Thanks / Like
    did i satisfy u aal?was thje topic enriched by me?then i'm happy.can u please say anout whom i should write?it would be better if i cater ur needs."neengal kaettavai?"

  10. #19
    Junior Member Admin HubberNewbie HubberTeam HubberModerator HubberPro Hubber
    Join Date
    Jan 2005
    Location
    Presently at Dubai
    Posts
    7
    Post Thanks / Like
    'அதோ அந்தப் பறவை' பாடலை எழுதியது கண்ணதாசன்; தாங்கள் குறிப்பிட்டதுபோல் வாலி அல்ல.

  11. #20
    Senior Member Veteran Hubber VENKIRAJA's Avatar
    Join Date
    Mar 2006
    Location
    Madras
    Posts
    3,285
    Post Thanks / Like
    விலாசம் எண் # 5.

    எங்கள் ஊர் என்பதனால் கொஞ்சம் பெருமை.ஆமாம்,காஞ்சியைச் சேர்ந்த கவிஞரின் விலாசத்தை இப்போது ஆராய்வோம்.நா.முத்துக்குமார்.வெளிவரும் அனைத்து படங்களிலும் தன்னுடைய வரிகளை பொதித்துவிடுகிற பாட்டுக்காரர்.வழக்கம் போல அறிவுமதியிடம் பயின்றவர் தான்.தபூ சங்கரைப் போலவே எளிமையை வகிடெடுத்துக்கொண்ட கவிஞர்.எளிமையென்றாலும் எரிமலை தான்.

    "கண்முன்னே எத்தனை நிலவு காலையிலே
    கலர் கலராய் எத்தனை பூக்கள் சாலையிலே"

    இதுதான் இவரது முதல் பாடல்.செல்வராகவனின் திரைப்படங்கள் இவரை வெளியுலகுக்கு அடையாளம் காட்ட,அட இந்த பலூன்காரன் வராத தெரு,ஆனா ஆவன்னா,வானம் என் அலமாரி அதையெல்லாம் எழுதினவருப்பா!என இலக்கிய வட்டாரம் சித்தரித்தது.பாடல்களுக்குள இவரது ஹைக்கூக்கள் ஒளிந்திருக்கும்:

    "காட்டிலே காயும்
    நிலவை கண்டுகொள்ள
    யாருமில்லை."

    தனிக்கவிதையாக,

    "யாருமற்ற தனிமையில்
    ஒன்றையொன்று முகம் பார்த்தன
    சலூன் கண்ணாடிகள்"

    என்றும் கவிதை இயற்றியுள்ளார்.அந்நியன் திரைப்படத்தின் "காதல் யானை.."பாடல் இவரை புகழின் உச்சிக்கு அழைத்துச்சென்றது.இந்த சமூகத்தின் கண்ணாடியாக தன்னை பாவிக்கும் முத்துக்குமார் பிற கவிஞர்கள் போல பேசும்போது கரடுமுரடான சொற்களோ,பாஷ்யங்களோ உபயோகிப்பதில்லை.கவிஞருக்குரிய கர்வம் இல்லாதவர்.ஏதோ பக்கத்து வீட்டுக்காரரைப் போல தான் இருப்பார்,பேசுவார்.வெகுசமீபத்தில் இவரது திருமணம் நடந்தேறியது,அதன் அழைப்பிதழின் முகப்பிலிருந்த கவிதை கூட புகழ்பெற்றது.சாதாரண மனிதனுக்கும் புரியும் வகையில் இயற்றப்படும் இவரது கவிதை "காலங்களில் அவள் வசந்தம்... "எனும் பாடல் தருவதைப் போன்ற ஒரு ஆனந்தத்தை தரவேண்டும் என விழைகிறார்.லேசான தாடியும்,அறிவியலாளர் ஆகவேண்டும் என்ற ஆசையும் இவருக்கு உண்டு.பத்திரிக்கைகள் மூலமாக வந்த பேரும்,பாடல்களில் இவர் அடைந்த புகழும் மேன்மேலும் வளரட்டும்.முத்துக்குமார் தன்னுடைய சிறுவயது ஞாபகங்களையெல்லாம் எழுதிய ஆனா ஆவன்னா என்ற புத்தகம் அவ்வாண்டு புத்தகக்கண்காட்சியில் சாதனை புரிந்தது.தமிழ்,தமிழன் பொன்ற விளம்பரம் சார்ந்த பேச்சுகளிலோ,அதனை மதம் மாதிரியே வன்முறைக்குள்ளாக்கும நடைமுறைகளையோ கடுமையாக சாடுபவர் ஆவார்.கட்சி,மதம்,சாதி பற்றில்லாதவர்.மேலும் செயற்கையான உவமைகளின்றி,உள்ளத்தின் ஊற்றுக்கண்ணாக இவரது கவிதைகள் அமைகின்றன.தன்னுடைய சிஷ்யர்கள் என்று வரையறையாக யாருமின்றி,தனக்கு நல்ல முன்னேற்றம் அடையக்கூடிய,பிடித்த இளைய கவிஞர்களை ஊக்குவிக்கிறார்.க்லாப்பிரியாவின் தீவிர இரசிகர்.ஆங்கில இலக்கியத்திலும் தீவிர ரசிப்புத்தன்மை உண்டு,குறிப்பாக ரஷ்ய நாவல்களில்.இவரது பக்கங்களில் நவீன கவிதைகளும் உண்டு.இவருடைய பாணி எளிதில் புரியக்கூடியது என்றாலும்,எளிதில் நீங்காதது.எப்படி என்றால் திருவள்ளுவரின் படத்தைக்க் காட்டுகிறார்!

Page 2 of 3 FirstFirst 123 LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •