Page 20 of 24 FirstFirst ... 101819202122 ... LastLast
Results 191 to 200 of 239

Thread: Mellisai Mannar M.S. VISWANATHAN

  1. #191
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சிவந்த மண் படத்தின் பல தங்க புதையல்களின் நடுவே தொலைந்து விட்ட பிளாட்டின புதையலை பற்றி இந்த பதிவு.பிளாட்டினத்தின் மதிப்பு மக்களுக்கு புரியாததாலோ என்னவோ.

    ஒரு நாளிலே உறவானதே
    கனவாயிரம் நினைவானதே
    வா வெண்ணிலா இசையோடு வா
    மழை மேகமே அழகோடு வா
    மகராணியே மடி மீது வா

    நாளை வரும் "நாளை" என நானும் எதிர்பார்த்தேன்.
    காலம் இது காலம் என காதல் மொழி கேட்டேன்
    போதை தரும் பார்வை எனை மோதும் அலை மோதும்
    போதும் என கூறும் வரை பூவே விளையாடு
    வரும் நாளெல்லாம் இது போதுமே

    மஞ்சம் இது மஞ்சம் என மார்பில் விழி மூடு
    கொஞ்சும் இதழ் சிந்தும் என் நெஞ்சில் ஒரு கோடு .
    தஞ்சம் இது தஞ்சம் என தழுவும் சுவையோடு.
    மிஞ்சும் சுகம் யாவும் பெற வேண்டும் துணையோடு
    வரும் நாளெல்லாம்.இது போதுமே

    ஒரு நிர்ப்பந்தமாய் நடந்த காதல் ஜோடியின் நாலு பக்கம் வேடர் சூழ்ந்த நிலையில் (நண்பர் செஞ்சியும்)மானிரெண்டின் காதல்.(மகாராணியின் முதலிரவு கட்டாந்தரையில்).இரவு ஊருறங்கிய பின் குளிக்கும் மனைவியிடம் தாபத்தை கண்ணியமாய் வெளியிடும் புரட்சியாளன்.

    காஞ்சனாவின் தாபம் நிறைந்த விழிகளும்,நடிகர்திலகத்தின் காதல் வயப்பட்ட மோவாய் முத்தங்களும்.போதும் என கூறும் வரை அணைத்து,வினாடி கண் சொக்குவாரே !!!!!வரும் நாளெல்லாம் என்று வீணை மாதிரி மடி கிடத்துவாறே (50 ஆவது நாள் போஸ்டர் என நினைவு),மிஞ்சும் சுகம் யாவும் வரிகளில் காஞ்சனாவின் கண்களை பாருங்கள் .வரும் நாளெல்லாம் என மடியில் இரு கால்களை வெவ்வேறு நிலை மடித்து மயக்குவாறே....

    புரட்சியாளனின் இயல்பான முடியழகும் ,ஆண்மை நிறைந்த கட்டம் போட்ட சட்டையும்,make -up மிதமாக திராவிட மன்மதனின் இளமை பொங்கும் handsome என படும் ஆணழகும்(அந்த மூக்கு ...அடடா) ,காஞ்சனாவின் நாணம்,தாபம் நிறை பெண்மையும், ஆபாசமில்லாத உறுத்தாத ஈர உடையும் உங்களை வேறு உலகத்துக்கே அனுப்பும்.

    நடிகர்திலகத்தின் முதல் ஐந்து காதல்களுக்குள் வரும். நல்ல வேளை ...அசல் திட்ட படி பாலமுரளி இதை பாடவில்லை. டி.எம்.எஸ் -சுசிலாவின் மயக்கும் குரலும் (ரெண்டு பெரும் சௌகரியமான pitch இல் ),எம்.எஸ்.வியின் சாதனை பாடல்களில் ஒன்று.

    பார்த்து பார்த்து பார்த்து பார்த்து ,கேட்டு,கேட்டு,கேட்டு,கேட்டு மகிழவும்.

    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #192
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இசை அமைப்பாளர்கள் ஒருவருக்கொருவர் அனுசரணையாக இருப்பது ஒரு symbiotic உறவே. நௌஷட் ஒரு விஸ்வநாதன்-ராமமூர்த்தி பக்தர். விஸ்வநாதன்-ராமமூர்த்தியோ நௌஷத் அவர்களை குரு போல பாவிப்பவர்கள். Mutual Admiration Group .நௌஷட் சாத்தி படத்தில் பாலும் பழமும் போல தர முடியவில்லை என்று குறிப்பிட்டதாக ஞாபகம்.

    விஸ்வநாதன்-ராமமூர்த்தி ,சுப பந்துவராளி ராகத்தில் அவர்கள் பாலும் பழமும்(1961) படத்தில் இந்த நாடகம் அந்த மேடையில் எத்தனை நாளம்மா என்று முயற்சி செய்தனர். பல அற்புத பாடல்கள் நிறைந்த அந்த படத்தில் ஏனோ இந்த பாடல் சுமாராகவே எடு பட்டது. பாடல் நல்ல பாடல் என்ற போதும் ,ஒரு முழுமை missing .பிறகு 1964 இல் leader என்ற படம் நௌஷட் இசையமைப்பில் பேச பட்ட படம்.இதில் லலித் என்று ஹிந்துஸ்தானி ராகத்தில் ஒரு பாடல்.(ஏக் ஷஹன் ஷா ,ரபி-லதா)

    http://www.bing.com/videos/search?q=...995E7D3F662F76

    ஆஹா ,இணை ,இந்த feel ,melody ,ராக கூறுகள் ,சுப பந்துவராளியின் சில சங்கதிகள்,காதலின் உருக்கம் ,காலத்தை வென்று நிற்கும் பாடல் தயார்.உன்னை நான் சந்தித்தேன்(1965) .சுசிலாவின் அற்புத மாய குரலின் உருக்கம் நிறைந்த பிரிவின் துயர்,காதலின் போக்கு,எதிர்பார்ப்பு .

    பிறகு இதனை மிஞ்சும் ஆட்டுவித்தால் யாரொருவர்(1975) இதே சுபபந்துவராளியில்.சௌந்தரராஜன் ,சுயவிரக்கம்,சுய விளக்கம்,தத்துவம் சார்ந்த சுய ஆறுதல் கலந்து பாட ,மற்ற பாடல்களுக்கு அமையாத இன்னொன்று நடிகர்திலகம்.ஏதோ சிந்தனையில் மூழ்கியிருக்கும் அவர்,கிருஷ்ணர் வேடமிட்டு வரும் நண்பன் குழந்தையை சட்டென்று நிலைக்கு வராமல், சுதாரிக்கும் அழகு. புது பரிமாணம் கண்ட பாடல்.





    Last edited by Gopal.s; 18th July 2015 at 05:42 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  4. #193
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    27,286
    Post Thanks / Like
    MSV was brilliant in setting words to tune or setting tunes for words.

    When the mind stills and becomes the music that it hears, when the heart recognises that it has heard its soul mate, then you know it is MSV. Can there be any one else like him?

    M.S. Viswanathan, nay, Viswa Nadam.

    He was the greatest of them all. Original, versatile, innovative and prolific… my god.

    MSV, the composer, is a mystery. A phenomenon no one will ever fathom. How could he invent those exquisite melodies, , those thousands of songs? How could he get into the minds of all the characters and sing like they would? How could he make all those who heard his songs feel as if it were their own?

    MSV came into the field at a time when film music, till then steeped in the classical idiom, was beginning to shrug it off in search of a new, modern sound. He broke film music almost completely from the grip of the classical genre to introduce newer forms of melodic contours not necessarily based on ragas. That was a huge shift and an incredible feat, indeed. He also effortlessly brushed aside for good the trend of re-tuning Hindi songs into Tamil.

    MSV was a boon to the directors, a challenge to the singers, a friend to the lyricists, a revelation to the orchestra, and above all else, a king to the people. Yes, he ruled them with his music wand. He mesmerised them, he owned them so much that even Sivaji Ganesan and MGR were dependent on him to bolster their image. In fact, his music, along with Vaalee’s lyrics, became the music of the Tamil People and played a clinching role in MGR’s ascension as Chief Minister.

    MSV was the real master of composition. One would never know which came first - the lyric or the music - in any of the thousands of songs, unless some one shed light on it. He was brilliant in setting words to tune or setting tunes for words. His greatness lay in the fact that his scores was exclusive to a film, and you could never ever mix them with any other.

    A plethora of musical styles and genres was at his beck and call. How he chose the ones he chose for a situation will remain a mystery for ever. I know for a fact that he was utterly spontaneous and reacted intuitively to a situation and that tunes came to him in a jiffy. So innovative was he that he would just start with a raga and then change its course at will only to make it sweeter! For example, ‘Muthukkalo Kangal’ begins like Madhyamavati and somewhere along the way, sounds like Kanada.

    Classical music it was in ‘Madhavi Ponmayilal’ or ‘Yezhu Swaranangalukkul.’ For the super-hit, ‘Adhisaya Ragam,’ he used a rare raga, Mahathi.He was also expert at creating tunes devoid of a classical slant such as Yengirintho Aasaigal or rock and roll for ‘Viswanathan velai vaenum.’

    Setting prose and poetry to tune in ‘Andha Naal Gnyyabagam,’ ‘musicalising’ laughter (Sirrippil Undaagum), and ‘painting’ the sky and the earth along with falling rain in ‘Pudhiya Vaanam’ are true works of a genius.

    To me, he was a great psychologist -- who knew his characters upside down and inside out. His real genius lay in the fact that he never composed anything which his characters would not sing. He never showed off his musicianship, an extraordinary trait that misses many a great composer. The audience saw and heard only the brother, the sister, the lover, the sweet heart or the father sing, but never MSV, the composer.

    Can there ever be a more poignant song than ‘Kalamidhu kalamidhu’ ? Or ‘Malai pozhudhin’? Can devastation be expressed more poignantly than in ‘Enge nimmadhi’? What about ‘Ilaakanam marudho’ or ‘Nalaam nalaam’? Or the songs of the epic ‘Karnan’? Even today, these melodies stir emotions deep within us. You realise that he has created beautiful music that expresses every human emotion.

    An icon has passed on. But his music will remain in the minds of all those who were touched by the magic of M.S. Viswanathan’s music.


    http://www.thehindu.com/features/fri...cle7429649.ece
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  5. Thanks raagadevan thanked for this post
  6. #194
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    உண்மையில் எம்.எஸ்.வி இசையமைத்த திரைப்படங்கள் எத்தனை? சிலர் ஆயிரம் என்கிறார்கள். ஒருவர் ஆயிரத்து அறுநூறு என அஞ்சலிக் கட்டுரையொன்றில் அடித்து விட்டிருக்கிறார். இதெற்கெல்லாம் தரவுகள் இருக்கிறதா? எனது சிற்றறிவுக்கு எட்டியவரையில் அவரது திரைப்படங்களின் எண்ணிக்கை ஆயிரம் தாண்டாது. தரவுகள் இருந்தால் கொடுக்கவும். எனது நிலைப்பாட்டினை மாற்றிக்கொள்கிறேன்.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  7. #195
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by venkkiram View Post
    உண்மையில் எம்.எஸ்.வி இசையமைத்த திரைப்படங்கள் எத்தனை? சிலர் ஆயிரம் என்கிறார்கள். ஒருவர் ஆயிரத்து அறுநூறு என அஞ்சலிக் கட்டுரையொன்றில் அடித்து விட்டிருக்கிறார். இதெற்கெல்லாம் தரவுகள் இருக்கிறதா? எனது சிற்றறிவுக்கு எட்டியவரையில் அவரது திரைப்படங்களின் எண்ணிக்கை ஆயிரம் தாண்டாது. தரவுகள் இருந்தால் கொடுக்கவும். எனது நிலைப்பாட்டினை மாற்றிக்கொள்கிறேன்.
    உண்மை வெங்கி ராம். சரித்திரத்தை காப்பதில் தவறினாலும் ,திரிப்பதில் நாம் மன்னர்களாயிற்றே.சன் டீவீ, கலைஞர் டீவீ எல்லாம் msv -tkr சேர்ந்து பண்ணிய படங்கள் 700 என்றும் ,தனியாக பண்ணியவை 500 என்றும் அள்ளி விடுகின்றன. எனக்கு தெரிந்து குத்து மதிப்பாக விஸ்வநாதன்-ராமமூர்த்தி சேர்ந்து 1952 முதல் 1965 வரை சுமார் 125 படங்களும்,1966 முதல் இறுதி வரை msv தனியாக இசையமைத்தவை ஒரு 700 தேறும். மொத்தம் 825 தமிழிலும், ஒரு 200 மற்ற மொழிகளிலும் தேறலாம். நமது எழுத்து மற்றும் தொலை ஊடகம், மூடர்களாலும்
    பொய்யர்களாலும் நிறைந்தது. இதற்கு திராவிடம் ரொம்பவே துணை போயுள்ளது.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  8. #196
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரும் இணைந்து 1952ல் பணம் தொடங்கி 1965 ஆயிரத்தில் ஒருவன் வரையிலும் கிட்டத்தட்ட 90 திரைப்படங்கள் தமிழில் இசையமைத்துள்ளனர். மற்ற மொழிகளிலும் சேர்த்தால் 120லிருந்து 125 வரை வரலாம்.

    மெல்லிசை மன்னர் தமிழில் தனியாக இசையமைத்த படங்களைப் பொறுத்த வரையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் சேர்த்து சுமார் 800 படங்கள் என வைத்துக் கொண்டாலும் மெல்லிசை மன்னரைப் பொறுத்த மட்டில் ஏறத்தாழ 1000 படங்களுக்கு இசைமைத்திருக்கிறார்.

    மெல்லிசை மன்னர்கள் இசையமைத்த திரைப்படங்கள் பாடல்கள் விவரங்கள், அடியேனுடைய இணைய தளத்தில் தொகுக்கப் பட்டுள்ளது.

    இணைப்பு: http://mellisai.tripod.com
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #197
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கலைஞர் டி.வி.யின் மானாட மயிலாட 10 நிகழ்ச்சியில் நாளை 19.07.2015 இரவு 7.30 மணிக்கு மெல்லிசை மன்னர் நினைவலைகள் ஒளிபரப்பாகிறத
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #198
    Member Junior Hubber
    Join Date
    Mar 2005
    Posts
    30
    Post Thanks / Like
    Also, Mega TV has announced a program for tomorrow (Sunday, July 19) at 5 PM. Appears to be a re-broadcast of an event to honor MSV-TKR. Nevertheless, would be worth a watch.

  11. #199
    Member Junior Hubber
    Join Date
    Mar 2005
    Posts
    30
    Post Thanks / Like
    Gopal, Regarding "Inda Nadagam", there is a charanam missing in the movie version, may be that is why you feel an incompleteness. I feel it is a masterpiece in the MSV-TKR_KD combination. I recall Madurai GS Mani mentioning the different hues of Shubhapantuvarali explored by MSV in various songs and talked highly of this song.

  12. #200
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like


    தான் ஈடுபடும் கலையிலேயே தனக்கு ஒரு நல்ல சீடர் அமைவது குருவுக்கே பெருமை. அந்த வகையில் நமது பாரம்பர்ய இசையின் தொடர் சங்கிலியின் கடைசி முடிச்சியாக திகழும் இளையராஜா என்ற சீடரை பெற்ற மெல்லிசை மன்னர் புண்ணியம் செய்தவர். தமிழ்த் திரையுல இசை சாம்ராஜ்யத்தின் மிக முக்கிய நிகழ்வாக, மெல்லிசை மன்னரும், இசை ஞானியும் இணைந்து பணியாற்றிய இசைப் பிரவாகத்தினை கருதுகிறேன்.

    இறுதி அஞ்சலி உரையில் கூட, எல்லாரும் சொல்ல மறந்த ஒன்றை முக்கியப்படுத்தி சொன்னார் இளையராஜா. அதுதான் திராவிட கழக வளர்ச்சிக்கு மெல்லிசை மன்னரின் பங்கு.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

Page 20 of 24 FirstFirst ... 101819202122 ... LastLast

Similar Threads

  1. BACKGROUND SCORE OF M.S.Viswanathan
    By RAGHAVENDRA in forum Memories of Yesteryears
    Replies: 13
    Last Post: 19th June 2013, 12:39 AM
  2. JeganMohini - IR - NK Viswanathan - Azhagiri
    By Vysar in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 6
    Last Post: 6th August 2009, 09:37 PM
  3. Poornam Viswanathan
    By madhu in forum Tamil Films
    Replies: 38
    Last Post: 3rd October 2008, 11:11 PM
  4. Viswanathan-Ramamoorthy : Help please ?
    By imsathya in forum Memories of Yesteryears
    Replies: 2
    Last Post: 11th April 2008, 12:36 PM
  5. spotlight on mellisai mannan msv
    By padmanabha in forum Indian Films
    Replies: 1
    Last Post: 15th September 2006, 04:38 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •