Page 5 of 8 FirstFirst ... 34567 ... LastLast
Results 41 to 50 of 71

Thread: SUNTV

  1. #41
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    கண்மணியே!



    திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 12 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர் "கண்மணியே.''

    தங்கள் குடும்பத்துக்கு உரித்தான பூர்வீக சொத்து எதுவும் பிரச்சினைக்குரியதாக இருந்தால், அதை ஆண் பிள்ளைகள்தான் மீட்கப் போராடுவார்கள். ஆனால் இப்படியொரு நிலை தங்கள் குடும்பத்துக்கு நேர்ந்தபோது அக்கா - தங்கைகளான மூன்று பெண்கள் பூர்வீக சொத்தை மீட்கப் போராடும் கதைதான் தொடர் வடிவம் பெற்றிருக்கிறது.

    தந்தை இல்லாத அந்த குடும்பத்தில் தாயாரின் விருப்பத்தை நிறைவேற்ற மூன்று பெண்களும் போராடும் காட்சிகள், பெண்களுக்கே தன்னம்பிக்கை தரும் விதத்தில் அமைந்துள்ளது என்கிறார், தொடரின் கதை, கிரியேட்டிவ் ஹெட் சந்திரமோகன் நாக். நடந்த ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது என்கிறார் அவர்.

    தொடருக்கு திரைக்கதை: பி.என்.சி.கிருஷ்ணா. வசனம்: சி.எஸ்.ராஜேந்திரன். டைரக்ஷன்: ஷாஜி பிலால். தயாரிப்பு: பாலாஜி டெலிபிலிம்ஸ் ஷோபா கபூர், ஏக்தா கபூர்.

    நட்சத்திரங்கள்: இளவரசன், `சங்கராபரணம்' ராஜலட்சுமி, சாதனா, பாவனா, ஸ்ரேஷா, ஷில்பா, நளினிகாந்த், நாஞ்சில் நளினி. `ஈரமான ரோஜாவே' சிவா முக்கிய கேரக்டரில் வருகிறார்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #42
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    நேற்றிரவு 'ராணி மகாராணி' நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா (லட்சுமியின் மகள்) பங்கேற்றார். (பல ஐஸ்வர்யாக்கள் இருப்பதால் அடையாளம் சொல்ல வேண்டியே லட்சுமி பெயர்). நடிகை என்ற பந்தாவெல்லாம் கொஞ்சமுமில்லாமல், ரொம்ப உற்சாகத்துடன் கண்டுபிக்கப் போராடினார்.

    இரண்டு பாகங்கள் கொண்ட இப்போட்டியில் முதல் பாகத்தில் 'மறைந்திருந்த பிரபலத்தை'க் கண்டுபிடிக்க முடியவில்லை. (பின் என்ன, முகத்தின் கண், மூக்கு, வாய் உள்ள பகுதிகளில் உள்ள சில்லுகளை அகற்றாமல், செண்டிமெண்ட், ராசி அது இதுன்னு சொல்லிக்கிட்டு, மூலைக்கு மூலை உள்ள சில்லுகளை அகற்றினால் என்ன தெரியும்?. அதனால் 'ஜெயம்' ரவியை அப்பாஸ் என்று சொல்லி தோற்றுப்போனார்).

    ஆனால், இரண்டாவது பகுதியில் சுதாரித்துக்கொண்டு, மூன்றாவது அகற்றலிலேயே 'த்ரிஷா' என்று சொல்லி 25,000 பரிசு பெற்றார். தோற்றபோது சின்னக்குழந்தைகள் போல அடம் பிடித்ததும், வெற்றி பெற்றபோது குதூகலித்ததும், அவருக்குள் இருக்கும் குழந்தைத்தனம் இன்னும் போகவில்லையென்பதைக் காட்டியது.

    ஐஸும், மமதியும் ரொம்ப பெஸ்ட் ஃப்ரண்ட்ஸ் போலும். ரொம்ப சகஜமாக 'வா, போ' என்று பேசிக்கொண்டனர். 'என்ன நீ, ரூல்ஸையெல்லாம் அடிக்கடி மாத்துறே', '45 செகண்ட் முடிஞ்சதும் பஸ்ஸரை அழுத்தறது யாரு?. அவர் கையைக் கொஞ்சம் கட்டிப்போடேன்' என்றெல்லாம் பொய்க்கோபத்துடன் கடிந்துகொண்டார். உண்மையிலேயே பார்க்க ரொம்ப தமாஷாக இருந்தது.

    கடைசியில் தங்கக்காசு பெறுவதற்கான, 'தமிழ்சொல்லாடல்' போட்டியில், வாசகத்தைச்சொல்ல முடியாமல் திணறிய ஐஸு, தங்கநாணயம் வழங்கப்பட்டபோது, 'இல்லே, நான் ஜெயிக்கலை. அதுனால இது எனக்கு வேண்டாம். நான் ரொம்ப HONEST PERSON' என்று மறுத்தார். 'இல்லே ஐஸு, இது இங்கு கலந்துகொள்ளும் எல்லோருக்குமே வழங்கப்படுவது' என்று சொன்ன பிறகே வாங்கிக்கொண்டார்.

    இனிமேலும் ஐஸ்வர்யாவைப்போன்ற ஜோவியலான பெண்களை அழைச்சிக்கிட்டு வாங்க மமதி (அஞ்சன்).

    'நான் பாரதி கண்ட புதுமைப்பெண்ணாக்கும்', 'பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்....' என்று வெட்டி பந்தாக்கள் பண்ணும் பெண்களை தவிருங்கள்.

  4. #43
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    Raj Tv , Sun News are screening live from Srirangam from 3 and 4 am respectively.

    Vaikuntha Ekadasi is celebrated for 20 days in Srirangam on the Sukla Ekadasi day of the Tamil month of Margazhi. On Vaikuntha Ekadasi day, Lord Ranganatha, wearing a garment of rubies, goes out of the temple in a magnificent procession through the Parampada Vasal gate (gateway to salvation) and goes to the 1000-pillar hall.
    The program in Parthasarathy temple today is as follows.

    2.00 - Moolavar dharsanam
    4.00 - ul purapadu
    4.30- paramapatha vasal thirapu
    10.00- urchavar thirumanjanam
    12.00 - periya veedhi purapadu

    The sorka vaasal will open every day till 15th from 6.00 PM and from 11th to 16th from 9.30 am.


    The most important festival celebrated for full twenty one days during Tamil month Margazhi (December-January), is divided to two ten days as pagal pathu and ra pathu, with all pomp and pageantry.On Vaikunta Ekadesi day, Lord Ranganatha, attired in splendid garment, proceeds in a magnificient procession through Paramapada Vasal, arrives at Thirumamani Mandapam in the Thousand in a pillared hall to the thrill and joy of the devotees gathered in lakhs who have come from all over India and abroad. This occasion is the peak point of all festivals conducted in the Temple, on this day of days; Sri Ranganatha becomes a virtual king and is known as Sri Rangaraja. He holds his Divine Durbar in that huge hall which is further extended by a specially erected and tastefully decorated pandal, throughout the day Nalayira Dhivyaprabandham is recieted, and gets back to the Temple only late in the night. Milling crowds of devotees constantly keep moving from dawn to midnight. Teams of devotees, engaged in non-stop bhajans, fast throughout the day and keep endless vigil during the whole night, singing and dancing to the beat of cymbals. Verily, it is the sight for the gods to see. A paradise on Earth indeed!

    chennai television
    "அன்பே சிவம்.

  5. #44
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    நாகவல்லி



    சன் டிவியில் ஞாயிறு தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர், நாகவல்லி.

    தன் மகளின் நாகதோஷம் நீங்க மயானம் நடுவில் உள்ள கல்வெட்டை தேடிப்போன பாகீரதியின் கணவன் கணபதி சித்தபிரமை அடைகிறார். ``நாகம்மாவின் பக்தையான பாகீரதியின் குடும்பத்துக்கு இப்படி ஒரு சோதனை தேவைதானா?'' என்று நாகவல்லியிடம் கேட்கிறான், மாயன்'' எது எப்படி நடக்க வேண்டுமோ அப்படியே நடக்கிறது, பொறுத்திருந்து பார்'' என்று நாகவல்லி கூறுகிறாள்.

    அழிக்கப்பட்ட 96 கிராமத்தில் ஒரு குடும்பமான சுசிலா குடும்பமும், பாகிரதியின் குடும்பமும் திருமண சம்பந்தம் பேசுகிறது. அதில் மூன்றாவது குடும்பத்தின் தலையீட்டால் இந்த திருமணம் நடைபெறாது என்று பதறுகிறது, சுசிலா குடும்பம்.

    கோமேதகக் கல்லை தேடிப்போன வக்கீல் வாசு என்னவானான்? நாகலோகத்துக்குச் சென்று நவரத்தின நாகத்தை சந்திக்க போன புரபசர் திருமூர்த்தியின் கதி என்ன?

    நாகவல்லியை பழிவாங்கி, நாகலோகத்தை கைப்பற்றத் துடிக்கும் கார்க்கோடனின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? பாம்புகளின் அரசியான நாகவல்லியை பழிதீர்க்கவும், அழிக்கவும் பட்சிகளின் அரசனான நடராஜனின் நாடகம் முடிவுக்கு வருமா?.

    இப்படி பல்வேறு முடிச்சுகளுக்கு விடை சொல்லும் விதமாக, பிரம்மாண்ட செட்டுகளில் ``நாகவல்லி'' வளர்கிறாள்.

    தொடரின் ஒளிப்பதிவு- இயக்கம்: பி.எஸ்.தரன்.
    நன்றி - தினதந்தி
    "அன்பே சிவம்.

  6. #45
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    அதிரடி அத்தை



    சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் மேகலா தொடரில் மேகலாவின் தம்பி செரியன் தொடர்பான காட்சிகள் இப்போது பற்றிப்பிடிக்க ஆரம்பித்திருக்கிறது.

    விரக்தியின் எல்லைக்கே போய்விட்ட செரியன் தன் இயலாமையின் கடைசி ஆயுதமாக தற்கொலையை தேர்ந்தெடுக்க, அதிலும் உடனடி சிகிச்சையில் பிழைத்துக் கொள்கிறான். மருமகனின் இந்த முடிவால் பாதிக்கப்பட்ட மாமனார், செரியனை இனி வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்துவிடகேட்டுக் கொள்கிறார். அதே நேரம் ஒரு கண்டிஷனும் போடுகிறார். மருமகன் பேரைச்சொல்லிக் கொண்டு எந்த உறவுக்காரர்களும் வீட்டுப் பக்கம்கூட எட்டிப் பார்க்கக்கூடாது என்பது தான்அந்த கண்டிஷன். இதற்குசெரியனும் ஒப்புக்கொண்டு வீட்டோடு மாப்பிள்ளையாகி விடுகிறான்.

    ஆனால் செரியனின் அத்தையும் தன் சாமர்த்தியத்தால் அந்த வீட்டில் டேரா போட்டுவிடுகிறாள். அவள் தன்தம்பி மகனின் மனதில் ஒரு திட்டம் விதைக்கிறாள். அதன்படி செரியனின் மனைவி பெயரில் அவளுக்கான சொத்துக்களை அவள்அப்பாவிடம் கேட்டு வாங்குவது. அதன்பிறகு அந்த வீட்டில் இருந்து தனிக்குடித்தனத்துக்கு செரியனையும் அவன் மனைவியையும் அழைத்துச் சென்று விடுவது. இந்த திட்டத்தை செரியனின் அத்தை ஆரம்பிக்கும்போது ஏற்படும் திருப்பங்கள் ரசிகர்களை பரபரப்பாக வைத்திருக்கும் என்கிறார், தொடரின் இயக்குனர் விக்ரமாதித்தன்.

    செரியனாக நடிப்பவர் நடிகர் சரவணன். அத்தை கேரக்டரில் வடிவுக்கரசி நடிக்கிறார். தயாரிப்பு: `மெட்டிஒலி' சித்திக்.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  7. #46
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    காமெடி சேனல்கள்!
    சன் நெட்ஒர்க் நகைச்சுவைக்கென்று ஆரம்பித்
    துள்ள சேனல் "ஆதித்யா'. இருபத்தி நான்கு மணி
    நேரமும் ஒளிபரப்பாகும் இதில் திரைப்படங்களில்
    இடம் பெறுகிற நகைச்சுவை காட்சிகளை
    தொகுத்து ஒளிபரப்புகின்றனர். அத்துடன் திரைப்
    பட நட்சத்திரங்களும் பங்கேற்று பேசி வருகின்ற
    னர்.
    இதே போன்றதொரு நகைச்சுவை சேனலை
    கலைஞர் தொலைக்காட்சியும் ஆரம்பித்துள்ளது.
    இதற்கு "சிரிப்பொலி' என பெயர் வைத்துள்ளனர்.
    இதன் தொடக்க விழா சென்ற 14-ஆம் தேதி நடை
    பெற்றது. நகைச்சுவை பிரியர்களுக்கு கொண்டாட்
    டம்தான்.

  8. #47
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    கலக்கும் "கலசம்'
    கஸ்டம்ஸ் ஆபிஸராக இருக்கும்
    ரஞ்சனியை பலவித சூழ்ச்சி வலை
    களை பின்னி சஸ்பென்ட் செய்து விடு
    கிறாள் சந்திரமதி. எதிரியின் குகைக்
    குள்ளேயே தந்திரக்கார நரியைப்
    போல உலவுகிறாள் ரஞ்சனி. இதற்கி
    டையில் சொத்து வாங்குவதில் சந்திர
    மதிக்கும் அவளோட இன்னொரு எதி
    ரிக்கும் பிரச்சினை ஏற்படுகிறது.
    அதை தனக்கு சாதகமாக பயன்படுத்
    திக் கொள்கிறாள் ரஞ்சனி.
    சந்திரமதியின் எதிரி கடத்தல்காரர்.
    அவன் கடத்தலில் ஈடுபடும்போது
    ரஞ்சனி கஸ்டம்ஸில் இல்லாவிட்டா
    லும் கஸ்டம்ஸ் துறைக்கு உதவிகள்
    செய்து வருகிறாள். இப்படி தினம்,
    தினம் பரபரப்பான காட்சிகளுடன்
    ஒளிபரப்பாகி வருகிறது "கலசம்'
    தொடர்.
    இதில் ரஞ்சனியாக வரும் ரம்யா
    கிருஷ்ணனின் பாசமும், தந்திரமும்
    கலந்த நடிப்பு ரசிகர்களிடையே
    பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியி
    ருக்கிறது. அதே போல சந்திரமதியாக
    வரும் சுதா சந்திரன் உடை, நடை,
    பாவனையில் "ஜாக்பாட்' குஷ்பு
    யே மிஞ்சி விடுகிறார்.
    இந்தத் தொடரை ரசிக்கும்படி
    விறுவிறுப்பாக இயக்கி வருபவர்
    அப்துல்லா. கிரியேட்டிவ்
    ஹெட்: ரம்யாகிருஷ்ணன்.


    http://www.cinemaexpress.com/Pdf/1622009/63.pdf

  9. #48
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    Latha
    "அன்பே சிவம்.

  10. #49
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    செந்தூரப்பூவே



    சன் டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் `செந்தூரப்பூவே' தொடர் நூறு எபிசோடுகளை கடந்திருக்கிறது. கதையின் நாயகி புனிதா தன் வாழ்வில் பலவிதமான போராட்டங்களை சந்தித்தபோதிலும் துணிச்சலுடன் அதை எதிர்கொண்டு தனது தங்கைகளை எப்படி கரை சேர்க்கிறாள் என்பதே கதையின் கரு.

    "கிராமத்தை விட்டு நகரத்திற்கு வில்லன்களால் துரத்தப்படும் புனிதாவும் தங்கைகளும் வரும் வழியிலேயே தங்கள் தாயை இழக்கிறார்கள். பெரியவர் ரத்னவேல் அவளுக்கு உதவுகிறார். புனிதாவுக்கு தெரிந்த ஒரே நகரவாசி அவளது குடும்பத்தோழர் பாலு. இவர்களுக்கு இடையே நடக்கவிருந்த திருமணம் தடைபட்டதால் பாலு சங்கீதாவை மணந்து கொண்டான்.

    இப்போது ரத்னவேலின் உதவியோடு நகரத்தில் வேரூன்றும் புனிதா, தன்னை முன்னாளில் காதலித்த பாலுவை கண்டுபிடித்தாளா? பாலு-ரஞ்சனி சந்திப்பை பாலுவின் மனைவி சங்கீதா அங்கீகரித்தாளா? கேள்விகளுக்கு பதில் தருகிறது தொடர்'' என்கிறார், தொடரின் தயாரிப்பாளர் ஆர்.ராதிகா சரத்குமார். தொடருக்கு கிரியேட்டிவ் ஹெட்டும் இவரே.

    முத்துச்செல்வம் திரைக்கதைக்கு வசுபாரதி வசனம் எழுத, பரமேஷ்வரர் இயக்கி வருகிறார்.
    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  11. #50
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    நடிக்கிறோம்னு தெரிஞ்சா போரடிச்சிடும்!



    சென்னை, வளசரவாக்கத்திலிருக்கும் ஒயிட் ஹவுஸ். கண்களில் பொறி பறக்க ஆக்ரோஷமாக நடித்துக் கொண்டிருந்தார் ரம்யா கிருஷ்ணன். வெள்ளித் திரையில் நீலாம்பரியாக கோலோச்சிய ரம்யா கிருஷ்ணனின் நடிப்புத் திறனை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் அளவுக்கு சின்னத் திரையில் வாய்ப்பு இருக்கிறதா? ‘கலசம்' மெகாத் தொடரின் படப்பிடிப்பிலிருந்த ரம்யா கிருஷ்ணனிடமே கேட்டோம்.

    ‘கலசம்' அனுபவம் எப்படி இருக்கிறது?

    மிகவும் சுவாரஸ்யாக இருக்கிறது. ஒவ்வொரு காட்சியும், ‘அடுத்து என்ன நடக்கும்?' என்று ஆவலைத் தூண்டும் விதத்தில் இருக்கின்றது. தினம் தினம் புதிய ரசிகர்கள் தங்களின் தொடரைப் பார்க்கும் விதத்தில் பார்த்து பார்த்து காட்சியை மெருகேற்றி வருகின்றனர். அதனால்தான் ‘கலசம்' தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கின்றது.

    கஸ்டம்ஸ் டிபார்ட்மென்ட்டை கதையில் எடுத்திருக்கிறீர்கள்? அது மக்களை சென்றடையும்னு நினைத்தீர்களா?

    எந்தக் கதையாக இருந்தாலும் அதில் சென்டிமென்ட் இருக்கவேண்டும். அதோடு காட்சிகள் இழுவையாக இல்லாமல், விறுவிறுப்பாக இருக்கவேண்டும். கதையில் வசுந்தரா, நீலாம்பரி என்று பல பாத்திரங்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கின்றது. தமிழில் இந்த மெகாத் தொடருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பைப் பார்த்து இதைத் தெலுங்கிலும் கொண்டு செல்லும் யோசனை இருக்கிறது.

    திடீரென்று தயாரிப்புப் பணியிலும் இறங்கிவிட்டீர்களே?

    நான் எதையும் திட்டமிட்டு செய்வதில்லை. அததற்கான வாய்ப்புகள் தானாக அமையும்போது, அதை மிகச் சரியாக நான் பயன்படுத்திக் கொள்வேன்.

    என்னை மெகாத் தொடரில் நடிப்பதற்கு, ராடான் டிவி சார்பாக ராதிகா கேட்டார்கள். அப்போது நான், ‘‘மெகா தொடரில் நடிப்பதாக இருந்தால் அது என்னுடைய சொந்தத் தயாரிப்பாகத்தான் இருக்கும்'' என்று சொன்னேன். அப்போதுதான் இந்த ஃபீல்டில் என்ன நடக்குது. ஸ்பான்சர்கள் எப்படி.. என்பதைப் பற்றியெல்லாம் நான் யோசித்தேன். இதன்பிறகு, மீண்டும் ராதிகா ‘தங்கவேட்டை' கேம் ஷோ தயாரித்த போது என்னை கூப்பிட்டார்கள். அப்போது அதில் பங்கேற்று இந்தத் துறையில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். தெலுங்கில் ஒரு டாக் ஷோவை நானே தயாரித்தேன். அது ஜெமினி டிவியில் வெளிவந்தது. அந்த அனுபவம் இந்த மெகாத் தொடரை தயாரிப்பதற்கு உதவியாக இருக்கிறது. உண்மையில் சொல்லப் போனால், என்னோட தங்கை வினயாவும், விஷன் டைம் ராமமூர்த்தியின் மனைவி வைதேகியும்தான் இந்த ‘கலசம்' தொடரை தயாரிக்கிறாங்க. தெலுங்கில் மட்டும்தான் நான் சொந்தமாகத் தயாரித்தேன்.

    இப்போது சினிமாவில் நடிக்கிறீர்களா?

    அதுக்கு நேரம் அமையல. சீரியலில் நடிப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது. நல்ல படங்கள், எனக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களாக இருந்தால், சினிமாவில் நடிப்பதைப் பற்றி யோசிக்கலாம். இப்போதைக்கு இதில் நடித்துக் கொண்டிருக்கிறேன். என் மகனைக் கொஞ்சுவதற்குக் கூட நேரமில்லாமல் இருக்கிறேன்.

    உங்களின் மகனுக்கு என்ன பெயர் வைத்திருக்கிறீர்கள்? உங்களை பிரிந்து எப்படி இருக்கிறான்?

    ரித்விக் என்று பெயர் வைத்திருக்கிறோம். இப்போது அவருக்கு 4 வயது. நர்சரி போய்க்கொண்டிருக்கிறார்.

    உங்கள் கணவர் கிருஷ்ணவம்சி தெலுங்கில் முன்னணி இயக்குநர். அவருக்கு உங்களின் ஆலோசனைகளைச் சொல்வீர்களா?

    இந்த ஆலோசனை சொல்றதெல்லாம் எனக்கு ஒத்து வராது. நான் யாருக்கும் ஆலோசனைகள் சொல்ல மாட்டேன். புதுசா எப்படி சொல்றது? நான் அப்படியே சொன்னாலும், அதற்கு அவர் அப்போதைக்குத் தலையாட்டுவார். அதோடு சரி. அதை செயல்படுத்தறதும், செயல்படுத்தாம இருக்கறதும் அவருடைய விருப்பம்தான். அவர் நிறைய படிக்கிறார். நிறையச் சிந்திக்கிறார். அதனால நான் என்ன அவருக்குப் பெரியதாகச் சொல்லி விட முடியும்?

    ‘கலசம்' தொடரில் நடிப்பு தவிர உங்களின் பங்களிப்பு வேறு துறைகளில் ஏதாவது இருக்கின்றதா?

    கதை, வசன விவாதங்களில் ஈடுபடுகிறேன். நடிக்கிற நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் இந்தத் தொடரை நன்றாகக் கொண்டு வருவதற்கு நிறையச் சிந்திக்கிறோம். நான் இப்போதெல்லாம் சராசரி மக்களின் வாழ்க்கையை கூர்ந்து கவனிக்கிறேன். அன்றாட வாழ்க்கையில் அவர்களின் நடை, உடை, பாவனை, பேச்சு, கோபம்.. போன்ற உணர்ச்சிகளை அவர்கள் வெளிப்படுத்தும் முறைகளைக் கூர்ந்து கவனித்து வருகிறேன். அந்த உணர்ச்சிகள்தான் நான் நடிக்கும் சீரியலில் என்னுடைய கதாபாத்திரங்களில் பிரதிபலிக்கின்றன. சும்மா... நடிக்கிறோம்னு தெரிந்தால் எனக்கே போரடித்துவிடும்!

    - அவருக்கே உரித்தான கன்னக் குழி சிரிப்பை உதிர்க்கிறார் ரம்யா.

    http://www.dinamani.com/sunday/sunda...FAP+%A3%B2U%F4


Page 5 of 8 FirstFirst ... 34567 ... LastLast

Similar Threads

  1. KASTURI IN SUNTV
    By mokshani in forum TV,TV Serials and Radio
    Replies: 177
    Last Post: 31st August 2012, 10:09 PM
  2. Anandam - serial sunTV
    By aanaa in forum TV,TV Serials and Radio
    Replies: 127
    Last Post: 31st March 2009, 07:10 PM
  3. SunTV & KTV Live !
    By rathakovn in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 2nd June 2007, 09:37 PM
  4. watch suntv here
    By vidhya in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 2nd March 2007, 09:14 PM
  5. Baked Alaska on SunTV
    By Vk in forum Indian Food
    Replies: 2
    Last Post: 7th February 2006, 05:18 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •