Page 4 of 8 FirstFirst ... 23456 ... LastLast
Results 31 to 40 of 71

Thread: SUNTV

  1. #31
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    பந்தம்-500

    சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 11.30 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பந்தம் தொடர் 500 எபிசோடுகளை கடந்து இருக்கிறது.

    இந்த தொடரில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவராக அப்சர் நடித்து வருகிறார். கோமா நிலையில் இருந்து குணமாகிய செல்வாவின் மனைவி நித்திலா, தான் யார் என்று மறந்த நிலையில் அம்னீஷியா பேஷண்டாக சக்தியிடம் வந்து சேர்கிறாள்.

    செல்வாவின் மனைவிதான் நித்திலா என்று தெரிந்தும், சக்தி அவளை காதலிக்கிறான். இதை தடுக்க நினைக்கும் சக்தியின் அக்கா காயத்ரியின் எச்சரிக்கையையும் மீறி சக்தி நித்திலாவை தன் மனைவியாக்கி கொள்ள முயல்கிறான்.

    நீலாம்பரி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் தேவிபிரியா, ஆதிலட்சுமியின் குடும்ப பிரச்சினைகளை தீர்த்து வைத்து ஆதிலட்சுமியையும் திருத்த முயல்கிறார். நீலாம்பரிக்கும் ஆதிலட்சுமிக்கும் என்ன உறவு, செல்வா எப்படி நித்தியாவை மீட்கிறார் என்ற கேள்விகளோடு பந்தம் தொடரை விறுவிறுப்புடன் கொண்டு போகிறோம் என்கிறார், தொடரின் இயக்குனர் ஹரிபாபு.

    தொடரில் இரட்டை வேடங்களில் நித்யா நடிக்கிறார். மற்றும் நளினி, தீபக், ராஜசேகர், ஷில்பா, மனோகர், ஸ்ரீகுமார், யுவஸ்ரீ, கன்யா ஆகியோரும் நடிக்கின்றனர்.

    இசை: ரேஹான்; திரைக்கதை, வசனம்: குமரேசன்; இயக்கம்: ஹரிபாபு; தயாரிப்பு: சேன் மீடியா.
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #32
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    ராணி மகா ராணி


    சன் டி.வி.யில் சனிக்கிழமை தோறும் ஒளிபரப்பாகும் `கேம்ஷோ' `ராணி மகாராணி' முழுக்க முழுக்க பெண்களே கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சி, ஓர் சுவாரஸ்யமான அதிர்ஷ்ட விளையாட்டை மையமாக கொண்டது. திரையில் மறைந்திருக்கும் பிரபலம் யார்? என்பதே இந்த விளையாட்டின் பிரதானம். கொடுக்கப்பட்ட நாலு வாய்ப்புகளில் முதல் வாய்ப்பிலேயே அந்த பிரபலம் யார் என்று சரியாகச் சொன்னால் 1 லட்சம் பரிசு.

    இரண்டாவது வாய்ப்பில் கண்டு பிடித்தால் ரூபாய் 50 ஆயிரம் பரிசு, மூன்றாவது வாய்ப்பில் கண்டு பிடித்தால் ரூபாய் 25 ஆயிரம், நாலாவது வாய்ப்பில் கண்டு பிடித்தால் ரூபாய் 12,500. இத்தோடு வார்த்தை விளையாட்டில் வெற்றி பெறுபவர்களுக்கு தங்க நாணயமும் பரிசாக காத்திருக்கிறது.

    நடன நிகழ்ச்சி வரிசையில் `ராணி மகாராணி' நிகழ்ச்சியும் மக்களின் வரவேற்பை பெறும் என்று சரிகம நிறுவனத்தின் பி.ஆர்.விஜயலட்சுமி தெரிவித்தார். பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார், மமதி அஞ்சன். ஒளிப்பதிவு- உதயசங்கர். இசை: பால்ராஜ், இயக்கம்: பிரின்ஸ்- வெங்கட்.ஜி.
    "அன்பே சிவம்.

  4. #33
    Senior Member Diamond Hubber Nerd's Avatar
    Join Date
    Mar 2005
    Posts
    7,811
    Post Thanks / Like
    Not sure where to post this...
    Watched Vivek interviewing Abdul Kalam. It was very good. Kalam's answers were simply superb and made heck a lot of sense. The way he put forth his opinions was very loveable. Vivek started off with stupid questions like sinna vayasula pattam vittrukkIngaLA, deevali rocket vitturukkeengala etc., The questions that followed were good. I thought the whole thing was not spontaneous though - as in Kalam already knew what the questions were going to be and he had already prepared the answers. He was looking at a TV screen which was in front of him the whole time. Whatever it is, it was an excellent watch.

  5. #34
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    Quote Originally Posted by Nerd
    Not sure where to post this...
    Watched Vivek interviewing Abdul Kalam. It was very good. Kalam's answers were simply superb and made heck a lot of sense. The way he put forth his opinions was very loveable. Vivek started off with stupid questions like sinna vayasula pattam vittrukkIngaLA, deevali rocket vitturukkeengala etc., The questions that followed were good. I thought the whole thing was not spontaneous though. Whatever it is, it was an excellent watch.
    சும்மா ஒண்ணே முக்கால் படங்களில் மட்டுமே நடித்திருக்கும் நடிகைகளின் திரையுலக அனுபவங்களை (??) பேட்டி காண்பதைவிட, அறிவியல் விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்களுடைய பேட்டி உருப்படியாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது.

    சன் டிவி இனிமேலும் இதுபோன்ற உருப்படியான நிகழ்ச்சிகளைத்தொடர வேண்டும்.

  6. #35
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    Quote Originally Posted by saradhaa_sn
    சன் டிவி இனிமேலும் இதுபோன்ற உருப்படியான நிகழ்ச்சிகளைத்தொடர வேண்டும்.

    மக்களை வளர விடுவாங்களா ஆ
    "அன்பே சிவம்.

  7. #36
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    Abhinaya creations Mega Serial Thiruppavai being telecast in Sun Tv channel at 12.30 noon on all Mondays to Fridays is the story of a family subject. Many viewers initially thought that the serial speaks about the Love of Andal with Lord Perumal. But it is entirely different. As per the story line the Vedas do not belonged to one particular community or religion alone. People who have faith in them will reap the benefit.

    The story of the Thiruppavai, Screenplay and direction are all done by J.K. Balamurugan. Manibharathi is writing the dialogues, and is produced by Radha Krishnaswamy for Abhinaya creations.

    Delhi Ganesh, Anuradha Krishnamoorthy, Sivan Srinivasan, Shobana, Sangeetha, Nithya,Shravani and other leading artistes are acting.
    "அன்பே சிவம்.

  8. #37
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    "திருப்பாவை'.
    நல்ல தொடர்களை கொடுப்பதுதான் நோக்கம்: ஜே.கே.



    அபிநயா கிரியேஷன்ஸ் சார்பில் பத்துக்கும் மேற்பட்ட மெகா தொடர்களை தயாரித்த ஜே.கே. முதன் முதலாக சன் டி.வியில் ஓளிபரப்பாகி வரும் திருப்பாவை சீரியலைத் தயாரித்து இயக்கி வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது.

    இதுவரை மாங்கல்யம், ஆடுகிறான் கண்ணண், தீர்க்க சுமங்கலி, செல்லமடி நீ எனக்கு, தெலுங்கில் காஸ்ட்லி அல்லுலு, வம்ச வருஷம் உள்ளிட்ட பல தொடர்களை தயாரித்து இருக்கிறேன்.

    தற்போது இயக்கி வரும் திருப்பாவை என்னுடைய கதை என்பதால், அதனை மற்ற யாரும் சொன்னால் நன்றாக இருக்காது என்பதற்காகவே, நான் இயக்கும் பணியில் இறங்கினேன். மாமியார், மருமகள் சண்டை, இரண்டு, மூன்று பெண்களைத் திருமணம் செய்து கொண்டு அல்லல்படுவது போன்ற வழக்கமான சீரியல் கதைகளைப் போல் இல்லாமல் முற்றிலும் மாறுபட்ட கதையைக் கொண்டதுதான் திருப்பாவை.

    இந்தக் கதை வேதத்தை பற்றியது, நல்ல விஷயங்களை செய்யும் போது வேதத்தை மீறுவதில் தப்பில்லை, எதுவாக இருந்தாலும் வேதம் சொல்லுகிற படிதான் நடக்க வேண்டும் என இந்த இரண்டு கருத்துகளுக்கிடையே நடக்கும் மோதல்தான் "திருப்பாவை'.

    கண்ணால் காண்பதும், காதால் கேட்பதும் நிஜம் மாதிரி தெரியும் ஆனால் நிஜமாக இருக்காது. விசாரித்தால்தான் உண்மை தெரியவரும். மனம் விட்டு பேசாத எதுவுமே பிரச்னைதான்; அதை பேசி தீர்த்து விட்டால் முடிந்து விடும்.

    நகர வாழ்க்கையில் மனைவிக்கு வாங்கி போகிற மல்லிகை பூ கூட டீசல் புகையில் கருகி விடுகிறது. கிராமத்தை விட்டு பிழைப்பு தேடி நகரத்துக்கு வந்த ஒவ்வொருவரும் ரசனையை தொலைத்துவிட்டுதான் வாழ்கின்றனர்.

    ஆகவே டி.வி.யில் கிராமத்தை காட்டுவோம் என்பதற்காகதான் இந்த சீரியலை நகரங்களை விட்டு விட்டு கும்பகோணம் அருகிலுள்ள உப்பிலியப்பன் கோவில் கிராமத்தில் எடுத்திருக்கிறோம். இனி வரும் காட்சிகளையும் அங்கேயே எடுக்க முடிவு செய்துள்ளேன். சீரியலை கிராமத்தில் எடுப்பது அதிக செலவுதான். ஆனாலும் நல்ல சீரியலை மக்களுக்கு கொடுப்பதுதான் நோக்கம் என்றார் ஜே.கே.
    "அன்பே சிவம்.

  9. #38
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like


    செந்தூரப்பூவே


    சன் டி.வி.யில் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர், `செந்தூரப்பூவே'.

    மக்கள் அரங்கம் தவிர வேறு எந்த சின்னத்திரை நிகழ்ச்சியிலும் பங்கேற்காத விசுவுக்கு இந்த கதை பிடித்துப் போகவே உடனே டபுள் ஒ.கே. சொன்னார். விசுவின் நண்பராக தொடரில் வரும் நரசிம்மராஜ×ம் ஒரு திரைப்பட பிரபலம்தான். விட்டாலச்சாரியின் ஆஸ்தான ஹீரோ! தமிழ் நாட்டில் சக்கை போடு போட்ட `ஜெகன் மோகினி' திரைப்படத்தின் ஹீரோவும் இவரே.

    கதாநாயகி ரஞ்சினி கிருஷ்ணன் கேரள அரசின் மாநில விருதை பெற்றவர். சித்தி தொடருக்குப் பிறகு சின்னத்திரைப் பக்கம் வராமல் இருந்த யுவராணி, இத்தொடரின் வில்லி கதாபாத்திரம் பற்றி தெரிந்ததும் உடனே மேக்கப் போட்டுக் கொண்டிருக்கிறார்.

    `மெட்டிஒலி' தொடருக்கு திரைக்கதை எழுதிய முத்துச்செல்வன் தொடருக்கு திரைக்கதை எழுத, பரமேஷ்வர் இயக்கி வருகிறார்.
    "அன்பே சிவம்.

  10. #39
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    'ராணி மகாராணி' நிகழ்ச்சியில் வழக்கத்துக்கு மாறாக அல்ல, வழக்கத்துக்கு கூடுதலாக சில சுவாரஸ்யங்களைச் சேர்த்திருக்கிறார்கள். அதை அறிமுகப்படுத்தும் முகமாக, முதல் ஷோவுக்கு இரண்டு தெரிந்த முகங்களை போட்டியாளர்களாக அழைத்திருந்தனர்.

    ஒருவர் சின்னத்திரை நட்சத்திரம் 'அலைகள்' ராணி.

    இன்னொருவர் சின்னத்திரை நட்சத்திரம் புவனேஸ்வரி.

    இருவருமே எந்த பந்தாவும் இல்லாமல் ரொம்ப சாதாரணமாக இருந்தனர் என்பதுடன், வழக்கமாகக் கலந்துகொள்ளும் குடும்ப பெண்களைப்போல, ஆரம்பத்திலேயே 'நான் பாரதி கண்ட புதுமைப்பெண்ணாக்கும்', 'அசத்துவோம்', 'நொறுக்குவோம்' என்றெல்லாம் வெட்டி பந்தா பண்ணாமல், திரையில் மறைந்திருக்கும் நட்சத்திரத்தைக் கண்டுபிடிக்க நிஜமான பரபரப்புடனும், பதட்டத்துடனும் காணப்பட்டனர். கண்டுபிடித்ததும், சின்னக்குழந்தைகளைப்போல குதூகலித்ததும் ரசிக்கும்படியாக இருந்தது.

    நடிகை ராணி, தான் இந்தப்போட்டியில் பங்குபெற தன் மகன்தான் ட்ரைனிங் பண்ணினான் என்று சொன்னது ஆச்சரியமாக இருந்தது. அவருக்கு திருமணம் ஆகிவிட்டது என்பது தெரியும். ஆனால் இவ்வளவு பெரிய மகன் இருப்பது ஆச்சரியம்தான். (சமீப காலம் வரை இவருக்கு இன்னும் திருமணமே ஆகவில்லை என்று நினைத்திருந்தேன். காரணம், அவ்வளவு இளமையாக இருக்கிறார்).

    இருவருமே முதல் பரிசை வெல்லவில்லை. ராணி மூன்றாவது சுற்றிலும் (25 ஆயிரம்) , புவனேஸ்வரி இரண்டாவது சுற்றிலும் (50 ஆயிரம்) வென்றனர். ராணியை வெல்ல வைத்தது ஸ்னேகா என்றால், புவனேஸ்வரியை வெல்ல வைத்தவர் பார்த்திபன். இருவரையும் தங்கக்காசு வெல்ல வைத்தவர் ஜோதிகா.

    நிகழ்ச்சி நடத்தும் மமதி அஞ்சன், அடிக்கடி 'இது 100% லேடீஸ் ஷோ' என்கிறார். டைட்டிலிலும் 'ராணி மகாராணி' என்ற டைட்டிலின் கீழே 100% லேடீஸ் ஷோ என்று போடுகிறார்கள். ஆனால் நிகழ்ச்சி முடிவில், டெக்னீஷியன்கள் பெயர்ப்பட்டியல் காண்பிக்கப்படும்போது முழுக்க முழுக்க ஆண்கள் பெயர்களாகவே வருகிறது. அப்புறம் என்ன 100%...??. (இந்த சாரதாவை முதலில் அடிச்சு விரட்டணும். ஸேம்சைட் கோல் போடுவதே இவ்ளுக்கு வேலையா போச்சு).

  11. #40
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    Quote Originally Posted by saradhaa_sn
    நிகழ்ச்சி நடத்தும் மமதி அஞ்சன், அடிக்கடி 'இது 100% லேடீஸ் ஷோ' என்கிறார். டைட்டிலிலும் 'ராணி மகாராணி' என்ற டைட்டிலின் கீழே 100% லேடீஸ் ஷோ என்று போடுகிறார்கள். ஆனால் நிகழ்ச்சி முடிவில், டெக்னீஷியன்கள் பெயர்ப்பட்டியல் காண்பிக்கப்படும்போது முழுக்க முழுக்க ஆண்கள் பெயர்களாகவே வருகிறது. அப்புறம் என்ன 100%...??.


    Quote Originally Posted by saradhaa_sn
    (இந்த சாரதாவை முதலில் அடிச்சு விரட்டணும். ஸேம்சைட் கோல் போடுவதே இவ்ளுக்கு வேலையா போச்சு).
    "அன்பே சிவம்.

Page 4 of 8 FirstFirst ... 23456 ... LastLast

Similar Threads

  1. KASTURI IN SUNTV
    By mokshani in forum TV,TV Serials and Radio
    Replies: 177
    Last Post: 31st August 2012, 10:09 PM
  2. Anandam - serial sunTV
    By aanaa in forum TV,TV Serials and Radio
    Replies: 127
    Last Post: 31st March 2009, 07:10 PM
  3. SunTV & KTV Live !
    By rathakovn in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 2nd June 2007, 09:37 PM
  4. watch suntv here
    By vidhya in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 2nd March 2007, 09:14 PM
  5. Baked Alaska on SunTV
    By Vk in forum Indian Food
    Replies: 2
    Last Post: 7th February 2006, 05:18 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •