Page 14 of 15 FirstFirst ... 412131415 LastLast
Results 131 to 140 of 145

Thread: NAAN MARAI

  1. #131
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Nov 2006
    Posts
    1,591
    Post Thanks / Like

    Re: Naan Marai is always Vedas

    Quote Originally Posted by devapriya
    Dear Friends,
    Tamil research was done with Caste motives by Church and Tamil Upper Castes and Marai are always Vedas.
    What kind of joke is this,"my friend" ?
    This is a very big world!

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #132
    Senior Member Devoted Hubber devapriya's Avatar
    Join Date
    Oct 2005
    Posts
    350
    Post Thanks / Like

    Naan Marai is always Vedas

    Dear Friends,

    With Superstious Blind beliefs, friends write meaningless posts without reading the previous posts

    What kind of joke is this,"my friend" ?


    The method of Pavanar;s unscientific styles and totally mischievous Maraimalai and others have been explained with highly reverred authors published articles.

    so, do not put post for posting. Give links to Authors of repute and universities. Pavanar, Mathiwanan from Tamil Etimoligical Dictionary Project Agree that Nanmarai is Vedas. If you have any proof for otherwise You have not given One till date, which is why No Scholar of Decent Repute Agree.

    Please do not live in ILLUSIONS.
    These meaningless Superstitions do not have any base from Tamil Sangam or any othe Lieterature.

  4. #133
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Nov 2006
    Posts
    1,591
    Post Thanks / Like
    Yeah, "thamizh reserach was done with caste motives" is very sensible statement by you!

    Defend your statement by giving evidences before you post anything further!
    This is a very big world!

  5. #134
    Senior Member Devoted Hubber devapriya's Avatar
    Join Date
    Oct 2005
    Posts
    350
    Post Thanks / Like

    Naan Marai is Always Vedas/

    Dear Friend Thamiz,

    Please go up and read post by friend mms dated may 20 and mine from may21, quoting from thinnai.com.

    Also in precious pages we have quoted from highly reverred Communist Author and Disciple of Professor Vanamamalai, Ve.Krishnamurthi' article. please read them, and caste is one which I feel must be avoided as per guide lines. Still that motivated researches created and creating problems.

    The falsehood of a Separate Tamil NanMarai was well ANALYSED BY Communist Scholar V.Krishnamurthy, and I quote from his article.

    தமிழகத்தின் அண்மைக் கால வரலாற்றில் பிராமணர்- பிராமணர் அல்லாதார் இயக்கத்திற்குப் பெரும் பங்கு உண்டு. இதன் தொடக்கத்தைச் சோழர் காலம் தொட்டு காணுதல் கூடும். அக்காலத்தில் பிராமணர்களைப் போன்றே வேளாளர்களும் சமுதாயத்தின் மேல்தட்டில், சாதி ஏணிப்படியில் மேல் இடத்தைப் பெற்று இருந்தனர்.

    பிரமதேயம் எனப்படும் நிலங்கள் எவ்வாறு பிராமணர்களுக்கு நிவந்தங்கள் அளிக்கப் பட்டனவோ அவ்வாறே வேளாளர்களுக்கு வெள்ளான் வகை நிலங்கள் மன்னர்களால் அளிக்கப் பட்டன. இது இவ்விரு வகுப்பினரின் மேலாண்மையைக் காட்டுகிறது. இத்தகைய சமூக, பொருளாதார நிலை இவ்விரு சமூகத்தின் இடையே கலாச்சாரப் போட்டியையும் கருத்துப் போராட்டத்தையும் உருவாக்கியது. தத்துவத்துறையிலும் இப்போராட்டம் வெளியாயிற்று. நிலவ்ய்டமை முறைவலுப் பெற்றுவிட்ட பிற்காலத்தில் சைவ நூல்களும் அதனடியாக சைவசித்தாந்தம் தோன்ற்லாயின.

    பாரதத்தின் பல்வேறு பகுதிகளில் தத்துவ விசாரணை என்பது பிராமணரின் ஏகபோகமாகத் திகழ்ந்தபோது தமிழகத்தில் வேளாளர்களும் தத்துவ விசாரணையில் ஈடுபட்டனர். அதன் விளைவாகவே தமிழில் சைவசித்தாந்தம் உருவாக்கப் பட்டது.
    ஆங்கிலேயர் வருகைக்குப் பின் இவ்விரு வகுப்பினரிடையே முரண்பாடு மேலும் முற்றியது. அறிவு ஜீவிகளான இம்மேல்தட்டு வகுப்பினரிடையே ஆங்கிலேய அரசுப் பதவிகளில் அமர்வதில் கடும் போட்டி ஏற்பட்டது. இம் முரண்பாடு பிராமணர் எதிர்ப்பௌ இயக்கமாக உருவெடுத்தது, நீதிக்கட்சியில் சங்கமம் அயிற்று. பின்னர் ஆரிய-திராவிட இனப் பாகுபாடாகப் பரிணாமம் பெற்றது.

    இவ்வியக்கத்தின் கொள்கைகளை கலாச்சார, சமய மட்டத்தில் பிரச்சார்ம் செய்யும் பணியில் பல பிராமணர் அல்லாத அறிஞர்கள்- குறிப்பாக வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர். அவர்களில் கா.சு.பிள்ளை, மறைமலை அடிகள், சிவராச பிள்ளை போன்றோர் தத்துவத் துறைகளில் பிராமண ஆதிக்கத்தை குறைக்கும் நோக்கோடு தமது ஆய்வுகளை இவர்கள் நடத்தினர்.

    ஆனால் சைவ சமய குரவர்களாகிய அப்பர், சம்பந்தர், சுந்தரர் மற்றும் வாசகர் ஆகியோரின் தேவாரம், திருவாசகம் ஆகிய நூல்களில் வேதங்களையும் அந்தணர்களையும் போற்றியிருந்தும், நெடுங்காலாமாகவே அவ்வேதங்களே, தத்துவங்களின் மூல நூல்கள் எனக் கருதப் பட்டு வரும் மரபும் இவ்வறிஞர்களது பணிக்கு இடைஞ்சல் ஆயிற்று.
    " வேறு விதமாக சொல்வதானால் ரிக், யஜுர், ஸாமம், அதர்வணம் அகிய நான்கு வேதங்களும் ஆரியர்களின் படைப்புகளே என்ற உண்மையும், பிராமண்ர்களே காப்பாளர்கள் என்ற யதார்த நிலையும் அவர்களது நோக்கிற்கு இடையுறாக வந்தது.

    இந்த இடையூறை கடக்க முன்பு எப்போதும் இல்லாத புது கொள்கைகளை நீதிக்கட்சியின் கருத்துக்காவலர்களாகிய இந்த அறிஞர்கள் (கா.சு.பிள்ளை, மறைமலைஅடிகள், சிவராசபிள்ளை) உருவாக்கினர். அதாவது வேதங்கள் என்றும் மறை நூல்கள் என்றும், சைவ குரவர்களால் குறிப்பிடப்படுபவை வடமொழி வேதங்கள் அல்லவென்றும், வடமொழி வேதங்கள் தோன்றுவதற்கு முன்பே தமிழில் வேதங்கள் தோன்றி விட்டன என்றும் அவற்றை கண்ட வடமொழியார், தெளிவாக சொல்வதானால் பிராமணர்கள் அவற்றை வடமொழியில் பெயர்த்துக் கொண்டார்கள் என்றும் கூறத் தலைப் பட்டனர். அவ்வாறாயின் அத்தமிழ் வேதங்கள் இன்று உள்ளனவா என்ற வினாவிற்கு அவை கடல்கோளால் அழிந்துபோயின என்றும் அவர்கள் கூறினர். எக்கூற்றுக்கள் முற்றிலும் வரலாற்று விரோதமானவை; விஞ்ஞானபூர்வ மற்றவை என அறிஞர்களால் தள்ளப் பட்டன, என்றாலும், அவற்றின் தாக்கம் இன்று வரை தமிழக மக்களிடையே நீடித்திருக்கிறது எனின் மிகையாகாது. – பக் 52-53; ஆய்வு வட்டக் கட்டுரைகள்.;வெ.கிருஷ்ணமூர்த்தி


    தமிழில் எழுதப்பட்ட வேதங்கள் அல்லது நான்மறை நூல் (ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களின் தமிழ் மூல நூல்கள்) கடல் கோளில் அழிந்து போயின என்றாலும் அவற்றின் பெயர்கள் முறையே தைத்திரீயம்; பௌடிகம்,தலவகரம்; அதர்வணம் ஆகும் என கா.சு.பிள்ளை, தனது நூல்களில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த நான்மறைகள் எவை என விளக்கத் “திரு நான்மறை விளக்கம்” என்ற நூலையே கா.சு.பிள்ளை எழுதியிருக்கிறார். தமது கூற்றை நிருபிக்க தொல்காப்பியத்தில் பாயிர உரையில் நச்சினார்க்கினியர் கூறியுள்ள விளக்கத்தை ஆதாரமாகக் காட்டுகிறார்.

    இது குறித்து “கா.சு. பிள்ளையின் ஆய்வுமுறை” என்ற எனது கட்டுரையில் ஏற்கனவே நான் ஆராய்ந்துள்ளேன். இக்கட்டுரையில் தமிழ் வேதங்கள் எனக்
    கா.சு. பிள்ளையால் குறிப்பிடப்பட்டுள்ள பவுடிகம் தைத்திரீயம்; தலவகரம் ஆகியவை யாவை என்றும் இவைகள் உண்மையில் தமிழ்வேதங்கள் தானா என்றும் ஆராய்வோம்.( இப்பெயர்களே தமிழ்ச் சொற்கள்தானா என்பது வேறு விஷயம்).

    The Author analyses the above names usage in Tamil Old Lit, and finds the earliest in a Copper Plate Grants called as “Parvathiva sekara puram copper plates” issued by Aay King Kokkarunan Thadakkan giving Paddy Grants to the Practices of Paviziyam, Thaththiriyam and Thalavarkarams. This Pandiyan Copper Plate is earlier than Nachinaarkiniyar writing the Commentary for Tholkappiyam.

    Communist Scholar Mr.V.Krishnamurthy then goes on to analsyse these with the Assistance of S.C.Bannerji’s “Dharma Sutras- A study in that Origin and Development” and finds from Veda developed Samhitas and Sutras.
    · Paviziyam refers to Apasthamba Sutra from Yajur Vedic School.
    · Thaththiriyam is from Yajur Vedic School, i.e., Thaththiriya Prmana- and its brach Vaikaana dharma Sutra
    · Thalavarkara is from Sama Veda School,, referring Gowthama Dhara Sutra.

    Finally Concludes- எல்லாவற்றிற்கும் மேலாக தமிழில் நான்கு வேதங்கள் வடமொழி வேதங்களுக்கு முன்னரே இருந்தன எண்றும் அவை முறையே பவுடிகம், தலவாகரம், தைத்ரேயம் மற்றும் அதர்வணம் எண்றும் கா.சு.பிள்ளை போன்ற தமிழ் வேத ஆர்வாளர்கள் கூற்று அர்த்தமற்றது எனவும் துணியலாம். THIS ARTICLE COMES IN Page 51-65. அ



    The book Aayvuvattak Katturaigal also has தோழர்.செ.யோகநாதன், who is from Srilanka who had several awards in Lanka and having won 3 prizes in Tamilnadu for his Tamil Literary works in his அணிந்துரை:
    தமிழ் மொழி பண்பாடு, வரலாறு மற்றும் பிற துறைகள் பற்றி ஆய்வு நெறியற்ற கத்தைகத்தையான புத்தகங்களும், கட்டுரைகளும் நிறைய வெளியாகியுள்ளன என்பதைக் குறிப்பிடுவதில் தவறு ஒன்றுமில்லை.... .
    இவற்றை மீறி எழுந்த நியாயமும் உண்மையும் ஆய்வு மனோபாவமும் கொண்ட குரல்களை ஒடுக்குவதில் மிக இழிந்த போக்குகள் கையாளப்பட்டு வந்திருக்கின்றன. ஆனாலும் இந்த மீறற்குரல்களே தமிழையும் தழிழியலையும் எல்லாத் துறைகளையும் ஆரோக்கியமாக வளர்ப்பதில் பெரும் பங்காற்றியுள்ளன. இன்றும் அவ்வழியைஅத் தொடர்கின்றன.
    தமிழ் ஆய்வை ஒரு திருவிழாவாகவும் ஆதாரம் ஏதுமற்ற ஆய்வுகளின் புகழ் பாடலாகவும் மாற்றிய காரணத்தால் நமது முன்னேற்றம் எப்போதோ முடமாக்கப்பட்டு விட்டது. இதே வேளையில் வேற்று மொழி பேசும் அறிஞர்கள் தமிழ் கற்று, அதன் பல்வேறு துறைகளையும் ஆய்வு செய்யும் போக்கும் உருவாயிற்று. சர்வதேச அள்விலான ஆய்வுநெறிகள் இவ்விதம் தமிழ் ஆய்வாளர்களில் வெகுசிலரையும் கவர்ந்து கொண்டது.
    ஆய்வுநெறியின் ஆதாரமே விஞ்ஞான பூர்வமானது. எவ்விதம் விஞ்ஞானம் உண்மையை ஆதாரபூர்வமாக ஆய்ந்து நிருபிக்கிறதோ, அப்படியே செம்மையான ஆய்வு நெறியும் உண்மையைத் தேடி அதை உறிதிப் படுத்துகிறது; நிறுவிகிறது.
    உணர்ச்சி வசப்பட்டு வழிபாட்டு மனோபாவத்துடன் ஆய்வுத்துறையில் நின்றவர்கள், விஞ்னான அடிப்படையில் செம்மையுற ஆய்வு செய்தவர்களை, எவ்விதம் புறந்தள்ளி தடைகளை உண்டாக்கி, இருட்டடிப்புகள் செய்தனர் என்பது இன்னமும் பூரணமாக வெளிவராத வரலாறு.

    செம்மையான, கற்றுத்தேறிய இத்தகைய ஆய்வாளர்களுக்கு எதிராக இன்றளவும்-மேலே காட்டிய வெற்றுத்தனங்கள் உடையோர் கடுமையான இடையூறுகளை விளைவித்து வருகிறார்கள். இதனாலேயே தமிழும் தமிழியலும் பிற துறைகளும் முன்னேற முடியாமல் தடுமாறிக் கொண்டு இருக்கின்றன. பக்கம்-ii,iii


    Dear Tamilz please read all my posts. It is not pleasure when you stand by Truth, against blind superstitions. Read the two Complete articles given from www.thinnai.com please.
    Every Scholar of repute agree that Naan Marai are Vedas
    EVER
    EE

  6. #135
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Nov 2006
    Posts
    1,591
    Post Thanks / Like
    So, it is a caste-war between piLLai and brahmins???

    You know the pity is when Jeyakanthan won the "Bharatheeya njAna pIdam", he was mentioning that he was proud that both winners of the award belongs to "piLLai" and he was proud of that he is saiva piLLai!

    I cant believe this guy is such a casteist and cheap!

    When we have such casteists like this Krishnamurthy and Jeyakanthan, how can anyone try to disprove your nonsensical statements?
    This is a very big world!

  7. #136

    Join Date
    May 2007
    Location
    The Greatest Nation In The World :: USA
    Posts
    206
    Post Thanks / Like
    Forgot How Awesome Thinnai Was since I don't have time to visit it anymore. Thanks for reminding me Devapriya.

    Do "Nesakumar" and "Aravindhan Neelagandan" still post there?
    I'm Baaaaaaack!!!

  8. #137
    Senior Member Devoted Hubber devapriya's Avatar
    Join Date
    Oct 2005
    Posts
    350
    Post Thanks / Like

    Tamil Marai is always Vedas

    I quote from Thinnai which is highly relevant here:

    நூல் அறிமுகம் - தொல்காப்பியத் தமிழர் - சாமி சிதம்பரனார் -விஸ்வாமித்ரா


    ** “சிதம்பரனாரின் சிலப்பதிகாரப்பற்று உண்மையாயின் தமது மானத்தைக் காத்துக் கொள்வதற்கேனும் ஈ.வே.ரா.வின் வட்டாரத்தை விட்டு அவர் வெளியே வரட்டும். 'பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் ' என்பது போல தமிழுக்கும் தொண்டு செய்வதாக நடிப்பது, அதே சமயத்தில் , தமிழின் பெருமையை இழித்துப் பேசும் ஈ.வே.ரா.வுக்குத் துதி பாடுவது என்ற இழிநிலை இனியும் நீடிக்கக் கூடாது.” **

    - என்று இந்தக் கட்டுரையில் ( ) ஈவேராவின் பிரதமசீடர் தமிழறிஞர் சாமி சிதம்பரனாருக்கு ம.பொ.சி. அவர்கள் அறைகூவல் விட்டிருந்ததை திண்ணை வாசகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

    சாமி சிதம்பரனார் உண்மையில் தமிழ்ப்பற்று கொண்டவர். ஆதலால் கடைசிக்காலத்தில் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் வக்கிரம் பிடித்த பார்வையின் பாதிப்பை விட்டு, அந்த வட்டாரத்தை விட்டே வெளியே வந்து பல நல்ல ஆய்வுநூல்களை எழுதியிருக்கிறார். எந்தக் கம்பராமாயணத்தை ஈவேரா கோஷ்டியினர் ஆபாச வார்த்தைகளில் தூற்றிக் கொண்டிருந்தார்களோ, அதையே நடுநிலைமையுடன் ஆய்ந்து ஆறுகாண்டங்கள் கொண்ட தொகுப்பினை வெளியிட்டுப் பிராயச்சித்தமும் தேடிக் கொண்டிருக்கிறார். மேலும், சித்தர்கள் கண்ட விஞ்ஞானம், தத்துவம், சிலப்பதிகாரத் தமிழகம், மணிமேகலை காட்டும் மனிதவாழ்வு, பட்டினப்பாலை - ஆராய்ச்சி உரை, நாலடியார் - பாட்டும் உரையும், பழந்தமிழ் வாழ்வும் வளர்ச்சியும், பட்டினத்தார் தாயுமானார் பாடல் பெருமை என்று ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். அவர் மறைவுக்குப்பின், பிரசுரம் ஆகாத சில நூல்களையும் அவரது மனைவியார் திருமதி.சிவகாமி சிதம்பரனார் வெளியிட்டிருக்கிறார்.

    அன்னாரின் 'தொல்காப்பியத் தமிழர் ' என்ற புத்தகம் திராவிடமாயையில் சிக்கி அழிந்து கொண்டிருக்கும் இன்றைய தலைமுறை அவசியம் படிக்க வேண்டிய ஒருநூலாகும். இந்த நூலின் முன்னுரையில் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்படவேண்டிய சில கருத்துக்களை இப்படி எழுதியிருக்கிறார்:

    “தமிழர்களைப் பற்றித் தமிழ் இலக்கிய உண்மைகளை உணராதவர்களால் எழுதப்பட்ட வரலாறுகளே இன்று மலிந்து கிடக்கின்றன. தமிழர் வரலாற்றைப் பற்றி வெளிநாட்டினர் பலவாறு கூறுகின்றனர். பழந்தமிழ் இலக்கியங்களிலே பயிற்சியில்லாத சரித்திரக்காரர்கள் என்னென்னவோ சொல்கின்றனர். இவர்கள் கூறுவதைவிடப் பழந்தமிழ் நூல்களைக் கொண்டு தமிழர் நாகரிகத்தை ஆராய்ந்தறிவதே சிறந்த முறையாகும்.”

    “தொல்காப்பியர் காலத்துத் தமிழர் வாழ்வைப்பற்றி அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். குறிப்பாகத் தமிழ்மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இதனால் பழந்தமிழர் வாழ்வைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்; பழந்தமிழர் வரலாறு, நாகரிகம் ஆகியவைகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம். தமிழ் இலக்கியத்தின் சிறப்பைப் பற்றியும், வளர்ச்சியைப் பற்றியும் புரிந்துகொள்ள முடியும். இதுவே இந்நூலை எழுதியதின் நோக்கம்.”

    “தமிழகத்திலே இன்று இனவெறுப்பு தலைவிரித்தாடுகிறது. மொழிவெறுப்பு முறுக்கேறி நிற்கின்றது. நாகரிக வெறுப்பு நடனமாடுகின்றது. வரலாறு, நாகரிகம், பண்பாடு என்ற பெயர்களைச் சொல்லித் தமிழ்மக்களிடையே கலகத்தீயை மூட்டிவிடுகின்றனர் சிலர். இத்தகைய வெறுப்புத்தீ அணைக்கப்பட வேண்டும். அப்போதுதான் தமிழர் முன்னேற்றமடைவர்; தமிழ்மொழி வளர்ச்சியடையும்.”

    “இன்று நடப்பது விஞ்ஞான யுகம். விஞ்ஞானவளர்ச்சி காரணமாகப் பண்டைய பழக்கங்கள் சிலவற்றைத் தவறு என்று சொல்லுகின்றோம். பண்டைய மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைகள் சிலவற்றை மூடநம்பிக்கைகள் என்று மொழிகின்றோம். விஞ்ஞான அறிவுக்கு ஒத்துவராத சில பழக்கங்களும் நம்பிக்கைகளும் பண்டைக்கால மக்களிடம் இருந்தன. நாகரிகம் பெற்ற எல்லா இனத்தினரிடமும் இவைகள் இருந்தன. தமிழர்களிடமும் இத்தகைய பழக்கங்களும், நம்பிக்கைகளும் இருந்தன என்பதில் வியப்பில்லை.”

    “தமிழ் இலக்கியங்கள் நன்றாகக் கற்றவர்களுக்கு இவ்வுண்மை தெரியும். இவ்வுண்மையை உணர்ந்த புலவர்களில் கூடச் சிலர் இதை மறைக்கின்றனர். 'தமிழர்களிடம் எவ்விதமான பொருந்தாப் பழக்கமும் இருந்ததில்லை. எந்தக் குருட்டு நம்பிக்கையும் இருந்ததில்லை. இன்றைய விஞ்ஞான அறிவுபெற்ற பகுத்தறிவாளர்களைப் போலவே அன்றும் வாழ்ந்தனர். தமிழ்நாட்டிலே புகுந்த ஆரியர்கள்தாம் பொருந்தாப் பழக்கவழக்கங்களையும், குருட்டு நம்பிக்கைகளையும் தமிழர்களிடம் புகுத்தினர் ' என்று கூறுகின்றனர். இவர்கள் கூற்று வெறுப்பையே அடிப்படையாகக் கொண்டது. இவர்கள் வடமொழியில் கொண்டிருக்கும் வெறுப்பும் இதற்கொரு காரணம்.”

    “ஆரியர்கள்தாம் பொருந்தாப் பழக்கவழக்கங்களையும் மூடநம்பிக்கைகளையும் தமிழரிடையே புகுத்தினர் என்பது உண்மையன்று.”

    “தொல்காப்பியர் காலத்திலேயே தமிழர்களிடையே இருந்த நாகரிகம் தமிழர் நாகரிகம் என்றுதான் எண்ண வேண்டும். அந்த நாகரிகம் ஆரியருக்கும், தமிழருக்கும் ஒத்த நாகரிகமாகத்தான் காணப்படுகின்றது. தொல்காப்பியத்தில் ஆரியர் என்ற பெயரோ, திராவிடர் என்ற பெயரோ காணப்படவில்லை.”








    சாமி சிதம்பரனார் மேலும் சொல்கிறார்:

    “இந்தியாவின் அடிப்படை நாகரிகம் ஒன்றுதான் என்று கூறும் சரித்திராசிரியர்கள் உண்டு. 'இந்தியமக்கள் வணங்கும் தெய்வங்கள், பிறப்பு, இறப்பு பற்றிய நம்பிக்கைகள், நீதி, அநீதி இவைகளைப் பற்றிய முடிவுகள், பாவபுண்ணியம், மோட்சம், நரகம் பற்றிய கொள்கைகள் இவைகள் எல்லாம் ஒன்றாகவே இருக்கின்றன. இந்திய மக்கள் அனைவருக்கும் இவைகளைப் பற்றிய கருத்து ஒன்றுதான். இவைகள்தாம் பண்பாட்டுக்கு அடிப்படையானவை. அவரவர்கள் வாழும் இடத்தைப் பொறுத்து நடை, உடை, பாவனைகளும், மொழிகளும் வேறுபட்டிருக்கலாம். இதனால் இந்தியமக்களின் பண்பாடு வெவ்வேறு என்று சொல்லிவிட முடியாது ' என்பதே இச்சரித்திராசிரியர்களின் கொள்கை. இந்தக் கொள்கைக்குத் தொல்காப்பியம் ஆதரவளிக்கிறது.”

    “இந்த நூலில் விளக்கப்படும் செய்திகள் கற்பனையோ, ஊகமோ அன்று. ஒவ்வொரு செய்தியும், தொல்காப்பியச் சூத்திரத்தின் மேற்கோளுடன் எழுதப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு சூத்திரத்தின் இறுதியிலும் அச்சூத்திரத்தின் எண், அதிகாரம், இயல் ஆகியவை குறிக்கப்பட்டிருக்கின்றன.” - என்றும் முன்னுரையின் இறுதியில் அழுத்தமாய்க் குறிப்பிடுகிறார் சாமி சிதம்பரனார்.

    இந்த நூலில் திராவிடஸ்தான் அரசியல்வியாதிகள் காலம்காலமாய் அப்பாவித் தமிழ்மக்களை ஏமாற்றி ஏய்ப்பதற்குச் சொல்லிவரும் பல பொய்கள் உடைத்தெறியப்பட்டுள்ளன.

    1. நால்வகை வகுப்புப்பிரிவுகள் வெளிநாட்டினர் கொண்டுவந்ததல்ல என்ற உண்மையை புறத்திணை இயல்சூத்திர ஆதாரத்தைக் கொண்டு நிரூபிக்கிறார் ஆசிரியர். (பக்கம் - 55,56)

    2. தொல்காப்பியர் 'அந்தணர் மறைத்தே ' என்று குறித்திருப்பதும், எட்டுவகை (கந்தருவம் உள்ளிட்ட) மணங்களைக் குறிப்பிட்டிருப்பதும் அவை (தொல்காப்பியர் சொல்லும் மறை என்பது) வடமொழி வேதங்கள்தாம் என்பதற்குப் போதுமான சான்றாகும். அவை தமிழ்வேதங்கள் என்பது பொருந்தாது. (பக்கம் - 81-84)

    3. தொல்காப்பியம் கடவுளையும் வேறுபல தெய்வங்களையும் மறுக்கவில்லை. தொல்காப்பியர் கடவுள் நம்பிக்கை உள்ளவர் என்று துணிந்து கூறலாம். (பக்கம் - 86)

    4. தொல்காப்பியர் காலத்திலே திருமால், சேயோன், வருணன், வேந்தன், கொற்றவை, சூரியன், சந்திரன், அக்கினி முதலிய தெய்வங்கள் வணங்கப்பட்டன. இன்னும் கூற்றுவன், தேவர்கள், பேய்பிசாசுகளும் இருப்பதாகவும் தமிழர்கள் நம்பினர். தெய்வ வணக்கம் தமிழ்நாட்டிலிருந்தது. தமிழர்கள் பல தெய்வங்களை வணங்கி வந்தனர் என்பதற்கு இவை போன்ற பல ஆதரவுகள் தொல்காப்பியத்திலே காணப்படுகின்றன. இவ்வழக்கம் தமிழர்களிடம் இயற்கையாகவே தோன்றியதாகும். வேறு எவராலும் புகுத்தப்பட்டதும் அன்று. போதிக்கப் பட்டதும் அன்று. (பக்கம் - பக்கம் 92,93)

    5. 'பண்டைத் தமிழகத்திலே உருவ வணக்கம் இருந்ததில்லை; அது இந்நாட்டிலே குடிபுகுந்த ஆரியரால் புகுத்தப்பட்ட வழக்கம் ' என்று சிலர் சொல்லுகின்றனர். இதற்கு ஆதரவு ஒன்றுமில்லை. இது வெறுப்பைத் தூண்டும் வீணான கூற்று. உருவ வணக்கமுறை எல்லா நாடுகளிலும் இருந்தது. பழைய பைபிளைப் படிப்போர் இதைக் காணலாம். பல நாட்டு வரலாறுகளிலும் இதைக் காணலாம். தமிழ்நாட்டிலும் உருவ வணக்கமுறை தொன்றுதொட்டே ஏற்பட்டிருந்தது என்பதைத் தொல்காப்பியத்தால் அறியலாம். (பக்கம் - 94)

    6. தமிழ்மொழி தொல்காப்பியத்துக்கு முன்பாகவே பிறமொழிச் சொற்களை ஏற்று வளர்ந்து வந்திருக்கிறது என்பதையும் ஆதாரத்துடன் காட்டுகிறார்: பழந்தமிழ்ச் செல்வமாகிய தொல்காப்பியத்திலேயே பல வடசொற்கள் கலந்திருப்பதைக் காணலாம். திசை, பூதம், பிண்டம், ஏது (ஹேது), பயம், மந்திரம், நிமித்தம், தாபதம், அவிப்பலி, அமரர், மங்கலம், மாயம், காரணம், கருமம், கரணம், அந்தம், அந்தரம், புதல்வன், வதுவை, பதி, மாத்திரை, படலம், அதிகாரம், வைசிகள் இவைகள் எல்லாம் வடசொற்கள் என்று கருதப்படுகின்றன. இன்னும் பல வடசொற்களும் தொல்காப்பியத்தில் பலவிடங்களில் காணப்படுகின்றன. இன்றுள்ள தமிழ்நூல்களிலே தலைமையான நூல் என்று எண்ணப்படும் தொல்காப்பியத்திலேயே இவ்வாறு வடசொற்கள் கலந்திருப்பது குறிப்பிடத்தக்கது. (பக்கம் - 130)

    இறுதியாய் இன்றைய தமிழர்களுக்கு சாமி சிதம்பரனார் மிகுந்த வருத்ததுடன் கூறுவது:

    “இன்று குறிக்கோளைப்பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் அடுக்குச் சொற்களைச் சேர்த்து எழுதுவதையே இலக்கியம் என்று எண்ணுகின்றனர். மற்றொரு சாரார் மறுமலர்ச்சி இலக்கியங்கள் என்ற பெயரில் எழுதும் வெறும் காமவிகாரத்தை வளர்க்கும் கட்டுக்கதைகளே இப்பொழுது மலிந்து வருகின்றன. தமிழர் நாகரிகம், தமிழர் பண்பாடு என்று எதை எதையோ எழுதிக் குவித்து வருகின்றனர். தனித்தமிழ் அன்பர்களும், காதல் வெறியர்களும் எழுதி வெளியிடும் புத்தகங்களிலே பெரும்பாலானவை தமிழையோ, தமிழ் இலக்கியங்களையோ வளர்ப்பதற்கு வழிகாட்டவேயில்லை. இவைகளிலே பெரும்பாலான புத்தகங்கள் மொழிவெறி, சாதிவெறி, இனவெறி இவைகளையே அடிப்படையாக வைத்துக்கொண்டு எழுதப்படுவன. மக்களிடம் இன்று வேரோடியிருக்கும் இத்தகைய வெறிகள் எல்லாம் அழிந்துபட வேண்டும் என்னும் ஆர்வத்தில் எழுதப்படும் புத்தகங்கள் மிகச்சிலதான்.

    ஆதலால் இன்று வெளிவரும் மறுமலர்ச்சித் தமிழ்ப்புத்தகங்களிலே பல, மக்களிடம் நேசப்பான்மையை நிலைநிறுத்த உதவுவதில்லை. இதற்கு மாறாக வெறுப்பையும், விரோதப்பான்மையையுமே வளர்த்து வருகின்றன.

    இது தமிழ்வளர்ச்சியா ?

    இலக்கிய வளர்ச்சியா ?

    தமிழர் பண்பாட்டை எடுத்துக்காட்டும் வழியா ?”

    இதே போன்று இவர் சிலப்பதிகாரக் காலத்து தமிழ் நாடு என்ற நுல்லையும் எழுதியுள்ளார். அதிலும் இது போன்ற கருத்துக்களை அழுத்தமாகச் சொல்லியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இணையத்தில் மலிவான எழுத்துக்களைப் பரப்பிவரும் ஈவேராவின் சீடர்கள்தான் இந்தக் கேள்விகளுக்குத் தக்க பதில்களைத் தேட வேண்டும்.

    நூல் வெளியீடு:

    தொல்காப்பியத் தமிழர் - சாமி சிதம்பரனார்,

    நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
    41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
    அம்பத்தூர், சென்னை - 600 098.

  9. #138
    Senior Member Devoted Hubber devapriya's Avatar
    Join Date
    Oct 2005
    Posts
    350
    Post Thanks / Like
    [tscii]திருச்சிற்றம்பலம்
    ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க
    சைவாலயங்களில் சம்ஸ்கிருத மந்திரங்களே வேண்டும்
    சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளைதிருநெல்வேலி பேட்டை

    --------------------------------------------------------------------------------
    1. சைவஸ்தான்
    வடக்குக்கயிலை. தெற்குக்குமரி. மேற்குச்சோமநாதபுரம். கிழக்குப் புஷ்பக நகரம். இந் நான்கெல்லைக்குட்பட்டது பாரத தேசம். இதன் சநாதன தர்மம் சைவ சமயம். இவ்வுண்மையை அவ்வெல்லை கூறியதால் அறிக. 'முத்தேவ ராதி புலவோர்கள் விண்ணின் முழுதின் பகற்றி யருளின் பித்தேறி நின்ற முனைவன் பதங்கள் பெருகன்பி னோடு பணியு மத்தேய மான வுயர்பாரதம்' என்றார் கச்சியப்ப முனிவர் பிரானார். 'Oh India, forget not that your ideal God is the great ascetic of ascetics Umanath Sankar.' என்றார் விவேகானந்தர். 'ஆரியரும் திராவிடரும்.....இந்தியாவுக்கு.........குறைந்தபட்சம ் பதினாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்........வந்தவர்கள். இமயமலையிலிருந்து குமரிமுனை வரையில் பரவி....... ஒருவரோடொருவர் பிரிக்க முடியாதபடி கலந்து.........(அவர்களின்) சமயக்கோட்பாடுகளும், சமூக வழக்க பழக்கங்களும், கலைகளும், பண்பாடுகளும் பிரித்துக்காட்ட முடியாதபடி கலந்து போயிருக்கின்றன. இமயமலையிலுள்ள நேப்பாள நாட்டிலிருந்து தெற்கே ஈழநாட்டிலுள்ள திரிகோணமலை வரையில் சைவ சமயமும், சிவலிங்க வழிபாடும், ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலிருந்து நிலைபெற்றிருக்கின்றன. சைவ சமயிகள் அணியும் புறச்சின்னங்களில் ஒன்றான ருத்திராக்ஷமணிகள் பல்லாயிரம் ஆண்டுகளாக நேப்பாளத்திலிருந்து தமிழ் நாட்டுக்கு வந்து கொண்டிருக்கின்றன' என்றார் 'கல்கி' யாசிரியர் டிசம்பர் 6, 1953 கல்கியில். இவை சில சான்றுகள். ஆகவே பாரத தேச முழுவதும் சைவஸ்தான் என்பதாயிற்று.
    2. முதல் நூல்
    சேனாவரையமும், நன்னூல் விருத்தியும் தமிழ் இலக்கண நூலரைகள். அவற்றுள் சேனாவரையும் 'வடசொல் எல்லாத் தேயத்திற்கும் பொது' என்றது. விருத்தி 'ஆரியச்சொல் எல்லாத் தேயத்திற்கும் விண்ணுலக முதலியவற்றிற்கும் பொது' என்றது. அதனால் சம்ஸ்கிருதம் பாரததேசத்தின் பொதுமொழி, எல்லா மகாணங்களுக்கும் சமமாக வுரியது. தமிழகத்துக்கும் அதுவே யென்பது சித்திக்கிறது.
    இருக்கு முதலிய நான்கும் வேதங்கள், காமிக முதலிய இருபத்தெட்டும் சிவாகமங்கள். அவை முதன் முதல் அம்மொழியிலுளவாயின. அவை முதல் நூல்கள். அவற்றை யாக்கிய முனைவனார் பரமசிவனார். அதுபற்றி அம்மொழி சைவசமயத்துக்கு விசேடமாகவும் உரியதாயிற்று. 'ஆரியத்தோடு செந்தமிழ்ப்பயனறிகிலா வந்தகர்', 'ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்' என்றது திருமுறை.
    அம்முதல் நூல்கள் சைவசமயத்துக்குச் சர்வபிரமாண சாத்திரங்கள். மந்திர 'மறைநாலுந் தம்பாட் டென்பர்', 'மிக்க வேத மெய்ந்நூல்', 'தெருளு நான்மறை', 'பண்டாய நான்மறை', 'முடிவில்லா வோத்து', 'சுருதிமறை நான்கான செம்மை', 'ஆரணம் பொழியும் பவளமாய்', 'வைதிகத்தின் வழியொழுகாதவக் கைத்தவம்', 'மறைவழக்க மிலாத மாபாவிகள்', 'பதிக நான்மறை' , 'இருக்கு நான்மறை', 'தொல்லிருக்கு மறை யேத்துகந்து', 'சந்தோக சாமமோதும் வாயான்', 'வேதவேதாந்தன்', ' மறையீறறியா மறையோன்', 'சுருதி சிரவுரை', 'வேத விழுப்பொருள்', 'வேதாந்த நிலைக்குறை', 'தெய்வ நான்மறைகள் பூண்ட தேரானை', 'மந்திமுந் தந்திரமுந் தாமே', 'அண்டர் தமக்காகமநூல் மொழியும்', 'அரவொலி யாகமங்கள றிவாரறி தோத்திரங்கள் விரவிய வேதவொலி விண்ணெலாம்வந் தெதிர்த் திசைப்ப' என்றது திருமுறை. அவ்வடிகளில் அம்முதனூல்களின் பெயர்கள், அடைகள், சரிதைகள் முதலிய வுள. அவற்றை நோக்குக. அம்முதனூல்களைப்பற்றிய துதிகள் புலனாம். வைணவமுந்தமிழ் நாட்டுச் சமயமாம். சிலர் கருத்தது. அச்சமய நூல் நாலாயிரப்பிரபந்தம். அதுவும் 'இருக்கெசுர் சாமவேத நாண் மலர்.....' என்று பெயர் வரிசை கூறித்துதித்தது.
    3. சைவ விதி
    மக்கள் அரசின் வழியாகத் தமக்கெனச் சட்ட திட்டங்களை வகுத்துகொள்வர். அவை இலெளகிக விதி, அவ்வகுப்பில் காலதேசங்களுங் கவனிக்கப்படும். ஆதலின் அவ்விதியை வசதிப்படி மாற்றுவர், நீக்குவர். வேறும் வகுப்பர் அவர். அது குற்றமாகாது. ஏன்? உலக சுகமே அதன் குறிக்கோள். இன்னொன்று சமய விதி. அ·திங்குச் சைவ விதி. அதை வகுத்தவர் பரமசிவனார். அது தான் அம்முதனூல்கள். சைவசமூகம் சைலாயம் சைவாதீனம் எல்லாம் அந்நூல்களைப் போற்றுக, விசுவசிக்க, அவற்றின் வரம்புக்குள் அடங்குக. அவற்றில் விதித்தவாறே ஒழுகுக. அவ்வளவே அவற்றின் கடன். 'மெய்ச்சுருதி விதிவழியோர் தொழும்' என்றது திருமுறை. காலம் தோறும் இவ்வுலகில் சைவ மக்கள் வருகின்றனர், வாழ்கின்றனர், மாள்கின்றனர். அவ் வக்காலத்து அவர் தொகை கைம்மண்ணளவே. ஆனால் உலகம் அழியும். அதுவரை எதிர்காலத்திலும் அவர் வந்து போய்க் கொண்டிருப்பர். அத்தனை பேரையுஞ் சேரக் கணக்கிடுக. அத்தொகை உலகளவிற்கும் அதிகமாகும். சைவ விதி அவர்க்கும் உரியது. அதை அக்கைம்மண்ணளவினர் தம் காலமிட முதலியவற்றிற்கு கேற்ப மாற்றலாமா? அதற்கவர் யார்? அவ்வுலகளவினர்க்குப் பிரதி நிதிகளா? மேலும் அவ்விதிக்குக் குறிக்கோள் வீடுபேறு. காலம் இடம் முதலியவற்றால் அவ்விதி பாதகமடையாது.
    சைவசமுக நிலயங்கள் பல. அவற்றை அவ்வப்போது திருத்தவும் நேரலாம். திருத்துவ தென்பதென்ன? அவற்றை அவ்விதிவழி யொழுகுமாறு செய்வதே அது. திருத்துவதெப்படி? முதலில் p>
    4. நவீனர்
    தமிழகத்தில் தமிழரானவருஞ் சைவசமயத்தினரல்லர். அச்சமயத்துக்குப் பரமதுரோகிகளாயுள்ள தமிழரு மிருந்து வருகின்றனர். அவருங் கணக்கற்றவர். அவரிருப்புந் தொன்று தொட்டது. ஆனால் சைவ சமயத்தினர் அனைவருந் தமிழரே. அவருள் தமிழை வெறுப்பர் யாருமிலர். அதனை விளங்கவைத்த புலவர் பெருமக்கள் பலர். அவரை யெண்ணுக. பெரும் பகுதியனர் சைவரே. அது தெரியவரும். அவர் தமிழை வளர்ப்பார். ஆனால் அத்துரோகத் தமிழரின் துரோகச் செயலும் அவருக்குத் தெரியும். அதற்கு இரையாமாறு தம் சமயத்தை அவர் விட்டுக்கொடார்.
    நாத்திகத் தமிழர், சிரத்தையின்றி ஆத்திகம் பேசுந்தமிழர், சம்ஸ்கிருதத்தைப் பழிக்குந் தமிழர், பார்ப்பனரைப் பகைக்குந் தமிழர், எந்த ஆத்திக சமய நூலிலும் சிறிது பயிற்சியுமில்லாத தமிழர், தாழ்த்தப்பட்டவரென்ற வகுப்பாருள் சைவமாதி சமயங்களை யாசரித்தால் உலகில் முன்னேற முடியாதென நம்பிக்கையிழக்குந் தமிழர், எம்மதமுஞ் சம்மதமென்னுந் தமிழர், தமக்கென எதுவுமிலாத தமிழர் எனச் சில தமிழருளர். அவரெல்லாங் கூடினர். அ·தொரு தமிழர் கூட்டம். சில காலமாகத் தமிழ்ச் சைவருட் சிலரும் அக்கூட்டத்திலகப்பட்டனர். அவர் நிலையென்ன? அவர் தமிழ்ச் சைவ நூற்களைப் படிப்பர். அவற்றிலுள்ள தமிழைச் சிறிது சுவைப்பர். ஆனால் சைவத்தை அறவே உமிழ்ந்து விடுவர். அவர் திருநீறு பூசிக்கொள்வர், உருத்திராக்கந் தரித்துக்கொள்வர், சமயப் பிரசாரமுஞ் செய்து வருவர். அப்பிரசாரத்திற் சமயமிருக்கும். தமிழ்ச்சமய மிருக்கும், ஹிந்து சமயமிருக்கும், ஆனாற் சைவசமயமாத்திரமிராது. தமிழ் ஒரு மொழி. சைவம் ஒரு சமயம், 'மொழி வேறு', சமயம் வேறு. அவ்வேறு பாட்டை அவர் விடுவர். சைவமென்று சொல்லுதற்கான சந்தர்ப்பங்கள் பல நேரும். அப்போதெல்லாம் தமிழென்றே அவர் சொல்வர். அது சகவாச தோஷமாகும். சைவசமூகம் சைலாயம் சைவாதீனம் முதலிய வெல்லாம் சைவத்தி னுடைமை, சைவத்துக்கே யுரியன. ஆனால் அவை தமிழனுடைமை, தமிழுக் குரியன என்பாரவர். அத்துரோகத் தமிழரின் கை வலுப்பெற அது ஏதுவாகும். மொழிப்பொதுமைபற்றி அவ்வுடைமையையாள, அதிற் பங்குபெற அவர் முற்படுவர். சைவ சமயத்துக்கு அது பெருந்தீங்காகும்.
    அச் சைவருக்கு ஒரு குலத்தில் வெறுப்புண்டு. சம்ஸ்கிருதம் அக்குலத்துக்கே யுரியதாம்: அப்படி அவர் மயங்கினர். அதனால் அம்மொழியும் அவருக்குக் கசந்தது. அக்கசப்பே அவரிடம் தமிழ்ப் பற்றாயிற்று. அது நீண்டது. வேதாகம நிந்தையிலும் அவர் இறங்கினார். அந்நூல்கள் சைவ சமயத்துக்குப் பிரமாணவரம்பா யிருந்து வருவன. அவ்வரம்பை யழிக்க அவர் முந்துகிறார். கற்புவரம் பழிந்தாள் ஒருத்தி, அவளோடு வாழ்கிறான் அவள் கணவன். அவனால் இல்லறத்தைச் சரியாய் நடத்த முடியுமா? அதன் பயனை அடைய முடியுமா? அப்படியே பிரமாண சாத்திர வரம்பழிந்த சைவம் சைவமாகாது. அதை வைத்துச் சைவ சமூகம் வாழ முடியாது. வாழ்வதாற் பயனுமில்லை. சைவத் துரோகிகளின் செயலே உருப் பெறும். அதற்கு அவ்வரம் பழிப்பே முதற்படி. ஆகையால் அச்சைவரிடம் சைவசமூகம் ஜாக்கிரதையா யிருக்கவேண்டும். இனி அச்சைவர் இந்தக் கட்டுரையில் நவீனர் எனப்படுவர்.
    5. தமிழ் மந்திர மோகம்
    ஒவ்வொரு மாகாணத்துக்கும் மாகாண மொழியுண்டு. ஒரு மாகாணத்தில் சமபலமுடைய இரண்டு மூன்று மொழிகளும், மிகச்சிறிய அளவில் வியாபித்த மொழிகளுமிருக்கலாம். பாரத தேசத்தில் மாகாணந்தோறும் சைவாலயங்கள் பல. அவற்றில் பிரதிட்டை, உற்சவம், அர்ச்சனை யாதிய நடைபெறும். அப்போது மந்திரங்கள் ஓதப்படும். அவை சம்ஸ்கிருத வேதாகமங்களி லுள்ளன. வேறெம் மாகாணத்தாரேனும் தம் மாகாண மொழியில் அம்மந்திரங்க ளிருக்கவேண்டுமென விரும்புகின்றனரா? கிளர்ச்சி செய்கின்றனரா? தமிழகத்தில் மாத்திரம் அந் நவீனர் தமிழ் மந்திரங்கள் வேண்டு மென்கின்றனர். தமிழில் மந்திரங்களிருந்தால் அவற்றை எடுத்தாளலாம். இல்லா விட்டால் சிருட்டித்தாளலாம் என்கிறா ரவர். அவரும் இரு வகையினர். சம்ஸ்கிருத மந்திரங்களை அறவே நீக்குக என்பர் ஒரு வகையார். வழக்கத்திலுள்ள சம்ஸ்கிருத மந்திரங்களு மிருக்கட்டும், அவற்றோடு தமிழ் மந்திரங்களையுஞ் சேர்த்துக் கொள்க என்பர் இன்னொரு வகையார். ஒட்டகம் கூடாரத்தை ஆக்கிரமித்தது. அராபியன் வெளியில் தள்ளுண்டான். அக்கதை பிரசித்தம். இப்பிந்தியார் செயல் அக்கதை போலவே முடியும். ஆகையால் இவர் அம்முந்தியாருக்கு மறைமுகத் துணைவரே. தமிழ் மந்திரப் பற்றென்பது ஒரு மோகம். அது அந் நவீனரைப் பீடித்தது. தமிழவைணவராதி பிறசமயத்தாரு முளர். அவரையும் அது தொட்டதோ என்னவோ?
    தமிழ் மக்களுக்குச் சம்ஸ்கிருத மந்திரங்களின் பொருள் விளங்காது. ஆகையால் தமிழகச் சைவாலயங்களில் தமிழ் மந்திரங்களே வேண்டும். அவர்க்கு அவற்றின் பொருள் விளங்கும். அதனால் மனங்கலந்த் பக்திவழிபாடு கூடும். நாத்திகந் தொலையும். இவை அந்நவீனர் கூற்று. அது பற்றிச் சிறிது ஆராயலாம்.
    6. பெயர்ப்பு மந்திரங்கள்
    சம்ஸ்கிருத மந்திரங்களைத் தமிழிற் பெயர்த்து அப்பெயர்ப்புக்களைத் தமிழ் மந்திரங்களெனக் கொள்க. இப்படிக் கூறுவாரும் அவருளிருக்கின்றனர். மந்திரமென்ற பதமே சம்ஸ்கிருதம். மனனம், திராணம் என்பவை சேர்ந்தன. அப்பதந்தோன்றியது. நினைப்பவரைக் கரை சேர்ப்பது என்பது அதன் பொருள். அப்பதத்தின் தமிழ்ப் பெயர்ப்புச் சொல்லே இன்னுங் காணப்படவில்லை. அது கிடக்க. இனி அம்மந்திரங்களைப் பெயர்த்துக் கொள்ளட்டும். அம்மூல மந்திரங்களை என் செய்வது? ஒதுக்கிவிடுவதா? அது நன்றிகெட்ட செயல். மேலும் பெயர்ப்புக்கள் சரியானவையென்று எப்போதும் நம்பப்படல் வேண்டும். அதற்காக அம்மூலங்களைப் போற்றி வைத்தல் அவசியம். இன்றேல் அன்னிய சமயிகள் திரிவு செருகல் நீக்கல் என்பவற்றைச் செய்வர். அம்மூலங்கள் கெடும். அப்பெயர்ப்புக்களும் நம்பிக்கையிழக்கும். இன்னும் அவ்விரு மொழிப் பயிற்சியும் வேண்டும். இன்றேல் பெயர்ப்பும், மூலங்களைப் போற்றிக் கோடலும் இயலா.
    ஏகாக்கரம், பஞ்சாக்கரம், ஷடக்கரம், அஷ்டாக்கரம், நவாக்கரம், 'மிக்கவா கமத்தாற் பூசை விளைந்தெழுந் தொன்றிரன்டு - தக்கநான் கைந்தாறெட்டுத் தாமிரா றிருபத் தெட்டிற் - றொக்கமந் திரங்களாதி பல', காயத்திரி, ஹம்சம், பஞ்சப்பிரமம், ஷடங்கம், ஹிருதயம், பிராஸாதம், ஸப்தகோடி, கலா, ஸம்ஹிதா. ஆசமனம், பீஜம், அஷ்டோத்திரசதம், ஸஹஸ்ரம் என மந்திரங்கள் பல. அத்தனையும் சைவானுட்டானத்துக்கவசியம். பிரதிஷ்டை, அஷ்டபந்தன மாதிய ஒரு புறம், தீ¨க்ஷ, உபநயனம், கலியாணம், ஸீமந்தம், பிரேதகாரியம், அந்தியேஷ்டி, சிராத்தமாதிய மற்றொருபுறம், அவையெல்லாம் வேதாகமோக்தமான சைவக்கிரியைகள். அவை அற்ப சொற்பமல்ல. மந்திரங்கிரியை பாவனை யில்லாத சைவம் ஏது? அம்மூன்றனுள் ஒன்றையின்றி யொன்றில்லை. ஒன்று மாறினால் மற்றவையும் மாறும். அம்மந்திரங்களை யெல்லாந் தமிழிற் பெயர்க்க வுத்தேசமா? முடியுமா?
    இன்னும் ஏகாக்கரம் பஞ்சாக்கர முதலியன எண்ணடியாகப் பிறந்த பெயர்கள் அவற்றைத் தமிழிற் பெயர்க்க, அப்பெயர்ப்புக்களை விட்டு அப்பெயர்கள் விலகும். அந்நஷ்டம் சிறிதா? பத்தாந் திருமுறையிற் பல சக்கரங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றில் அப்பெயர்ப்பு மந்திரங்களின் எழுத்துக்கள் அடங்குமா? அச்சக்கரங்களையும் மாற்றியமைக்க வேண்டுமோ?
    அத்திருமுறையில் 'இட்ட விதழ்க ளிடையந் தரத்திலே - யட்டஹவ் விட்டதின் மேலே உவ்விட்டுக் - கிட்ட வீதழ்களின் மேலே கிரோம்சிரோ- மிட்டுவ மத்திற் கிரோங்கென்று மேவீடே' என்று வருகிறது. அன்ன பாடல்கள் பல. அவற்றிலுள்ள மந்திரங்களெல்லாம் சம்ஸ்கிருதமே. அவ்வாசிரியர் அவற்றை யப்படியே தந்தார். அவற்றுள் ஒன்றையாவது தமிழிற் பெயர்க்கவில்லை. ஏன்? அவற்றை அப்படியே ஓத வேண்டும். அவர் கட்டளை அது. அதனாற்றான் அத்திருமுறை திருமந்திரமென் றாயிற்று.
    அத்துவாக்கள் ஆறு, அவற்றுள் வர்ணம் ஒன்று. பதம் ஒன்று. வர்ணம் - எழுத்து, பதம் - சொல், சம்ஸ்கிருதத்தில் உயிர் பதினாறு, மெய் முப்பத்தைந்து, அவ்வைம்பத்தோரெழுத்துக்களுமே வர்ணாத்துவா. அவ்வெழுத்துக்களால் எண்பத்தொரு பதங்க ளியன்றன. அவை பதாத்துவா. அவ்வெழுத்துக்களைத் தமிழாக்க முடியாது. அப்பதங்களுக்குத் தமிழிற் பொருள் தெரியலாம். ஆனால் அத்தமிழ்ச் &

  10. #139
    Senior Member Devoted Hubber devapriya's Avatar
    Join Date
    Oct 2005
    Posts
    350
    Post Thanks / Like
    [tscii]மூலங்களைப் போற்றிக் கோடலும் இயலா.
    ஏகாக்கரம், பஞ்சாக்கரம், ஷடக்கரம், அஷ்டாக்கரம், நவாக்கரம், 'மிக்கவா கமத்தாற் பூசை விளைந்தெழுந் தொன்றிரன்டு - தக்கநான் கைந்தாறெட்டுத் தாமிரா றிருபத் தெட்டிற் - றொக்கமந் திரங்களாதி பல', காயத்திரி, ஹம்சம், பஞ்சப்பிரமம், ஷடங்கம், ஹிருதயம், பிராஸாதம், ஸப்தகோடி, கலா, ஸம்ஹிதா. ஆசமனம், பீஜம், அஷ்டோத்திரசதம், ஸஹஸ்ரம் என மந்திரங்கள் பல. அத்தனையும் சைவானுட்டானத்துக்கவசியம். பிரதிஷ்டை, அஷ்டபந்தன மாதிய ஒரு புறம், தீ¨க்ஷ, உபநயனம், கலியாணம், ஸீமந்தம், பிரேதகாரியம், அந்தியேஷ்டி, சிராத்தமாதிய மற்றொருபுறம், அவையெல்லாம் வேதாகமோக்தமான சைவக்கிரியைகள். அவை அற்ப சொற்பமல்ல. மந்திரங்கிரியை பாவனை யில்லாத சைவம் ஏது? அம்மூன்றனுள் ஒன்றையின்றி யொன்றில்லை. ஒன்று மாறினால் மற்றவையும் மாறும். அம்மந்திரங்களை யெல்லாந் தமிழிற் பெயர்க்க வுத்தேசமா? முடியுமா?
    இன்னும் ஏகாக்கரம் பஞ்சாக்கர முதலியன எண்ணடியாகப் பிறந்த பெயர்கள் அவற்றைத் தமிழிற் பெயர்க்க, அப்பெயர்ப்புக்களை விட்டு அப்பெயர்கள் விலகும். அந்நஷ்டம் சிறிதா? பத்தாந் திருமுறையிற் பல சக்கரங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றில் அப்பெயர்ப்பு மந்திரங்களின் எழுத்துக்கள் அடங்குமா? அச்சக்கரங்களையும் மாற்றியமைக்க வேண்டுமோ?
    அத்திருமுறையில் 'இட்ட விதழ்க ளிடையந் தரத்திலே - யட்டஹவ் விட்டதின் மேலே உவ்விட்டுக் - கிட்ட வீதழ்களின் மேலே கிரோம்சிரோ- மிட்டுவ மத்திற் கிரோங்கென்று மேவீடே' என்று வருகிறது. அன்ன பாடல்கள் பல. அவற்றிலுள்ள மந்திரங்களெல்லாம் சம்ஸ்கிருதமே. அவ்வாசிரியர் அவற்றை யப்படியே தந்தார். அவற்றுள் ஒன்றையாவது தமிழிற் பெயர்க்கவில்லை. ஏன்? அவற்றை அப்படியே ஓத வேண்டும். அவர் கட்டளை அது. அதனாற்றான் அத்திருமுறை திருமந்திரமென் றாயிற்று.
    அத்துவாக்கள் ஆறு, அவற்றுள் வர்ணம் ஒன்று. பதம் ஒன்று. வர்ணம் - எழுத்து, பதம் - சொல், சம்ஸ்கிருதத்தில் உயிர் பதினாறு, மெய் முப்பத்தைந்து, அவ்வைம்பத்தோரெழுத்துக்களுமே வர்ணாத்துவா. அவ்வெழுத்துக்களால் எண்பத்தொரு பதங்க ளியன்றன. அவை பதாத்துவா. அவ்வெழுத்துக்களைத் தமிழாக்க முடியாது. அப்பதங்களுக்குத் தமிழிற் பொருள் தெரியலாம். ஆனால் அத்தமிழ்ச் சொற்கள் பதாத்துவா ஆகா. ஏன்? அச்சம்ஸ்கிருத வர்ணங்களா லாகிய அச்சம்ஸ்கிருத பதங்களே பதாத்துவா: அப்படி தெளியக் கூறியது சிவாகமம்.& ரம், மமகாரம், அஹங்காரம், ஹ்ரீங்காரம் என்பன சம்ஸ்கிருத வழக்கு. ஓங்காரமும் அன்னதே. திருமுறையும் 'ஓங்காரத்துட் பொருள்' எனக் கூறி அவ்வழக்கை ஏற்றது. ஆகையால் அம்மந்திரமும் சம்ஸ்கிருதமே. தமிழ்ச்சொற்களைக் காரச்சாரியை கொடுத்து வழங்கலாமா? அதற்கு விதியென்னை?
    சிவ மந்திரம், உமாமந்திரம், விநாயக மந்திரம், ஸ்கந்த மந்திரம், விஷ்ணு மந்திரம், காருடமந்திரம் என்பன தெய்வம் பற்றிய வழங்கற்பாடுகள். சமயம் பற்றியும் மந்திரங்கள் வழங்கப்படும். முன் காட்டப்பட்ட ஏகாக்கர முதலிய வழக்குகளு முள. அத்தனையுந் துவேஷக் கலப்பற்றன. ஆதலின் தம்முள் மோதா. ஆனால் தமிழ்மந்திரமென்ற மாத்திரத்தில் தெலுங்கு முதலிய பிற மொழிகளிலும் மந்திரந் தோன்றுதற்கு இடங்கொடுக்கப்பட்டதாகும். அதனால் தமிழ் மந்திரம், தெலுங்கு மந்திரம், ஹிந்தி மந்திரம், குஜராத்தி மந்திரம் என மொழிபற்றிய வழக்குகளும் முளைக்கும். அது ஆரிய மந்திரம், திராவிட மந்திரம், நீக்ரோ மந்திரம் முதலிய இனம் பற்றிய வழக்குகளையும், சென்னை மந்திரம், சீன மந்திரம், இலங்கை மந்திரம் என நிலம்பற்றிய வழக்குகளையும், பிறவற்றையுந் தோன்றச் செய்யும். அவை பரிகாசத்துக் கிடம். அன்றியும் ஒரு சமயத்தினருக்குள்ளேயே சண்டையை மூட்டும். ஆகையால் துவேஷ ஜன்யமு மாம்.
    மந்திர சப்தம் உமாமயம், மந்திர அர்த்தம் சிவமயம். வேதாகமோக்த மந்திரங்களுக்கே அவ்விலக்கண முண்டு. ஆகலின் அச்சப்தமும் அர்த்தமும் ஆற்றலுடையன. அந்நவீனர் விரும்பும் மந்திரங்கள் வேறு. அவற்றுக்கு ஆற்றல் சொல்லிலா? பொருளிலா? இரண்டிலுமேயா? சொல்லிலெனின், தமிழ்ச்சொற்களிற்றான் அ·துண்டெனச் சாதிக்க வேண்டும். அ·தவரால் முடியுமா? தெலுங்கர் முதலியோர் அதனை யேலார். அவர் தம் மொழிகளிலேயே அ·துண்டென்பர். பொருளிலெனின், சம்ஸ்கிருத மந்திரப்பொருள் தமிழுக் கிரவலே, அதற்குத் தமிழுக்குஞ் சம்பந்தமில்லை. இரண்டிலுமேயெனின், அம்மந்திரங்கள் தமிழுக்கே உரியவாதல் வேண்டும். தமிழ் மந்திரங்க ளுளவா?
    செய்யுளை வசனமாக மாற்றலாம். அதுவும் பெயர்ப்புத்தான். தேவாராதிகள் செய்யுள். அது பலருக்கு விளங்காது. அதனை வசனத்திற் பெயர்க்க, அவ்வசனத்தை அவர் படிப்பர். ஆனால் அச்செய்யுளைப்போல் அவ்வசனத்தையும் ஓதலாமா? அவ்விரண்டிற்கும் ஓதும் பயன் ஒன்று தானா? ஆமெனின், அச்சம்ஸ்கிருத மந்திரங்களையும் அவற்றின் பெயர்ப்புக்களையும் ஓதுதற்குப் பயன் ஒன்று தான்.
    செய்யுள் நடையில் தரவேறுபா டுண்டு. வசன நடையிலும் அப்படியே. மந்திரப் பெயர்ப்புக்கு வேண்டுவது செய்யுளா? வசனமா? எந்நடைதரம்?
    சம்பந்தரை வணங்கி முத்திபெற்றார் பலர். அப்படியே மாணிக்கவாசகரையும் வணங்கி முத்தி பெறலாம். அவர் திருவாசகத்தை யருளினார். அதை ஆங்கிலத்திற் பெயர்த்தார் போப் என்பவர். இலண்டனின் ஒரு சிவாலய மிருப்பதாகக் கொள்க. அதில் அப்பெயர்ப்பைத் தானே ஓத வேண்டும், தமிழருக்குத் தமிழ் போன்றது ஆங்கிலருக்கு ஆங்கிலம். ஆகலின் அம்மூலத்துக்கும் பெயர்ப்புக்கும் ஓதற்பயன் ஒன்று: அப்படிக் கூறுவதே அந்நவீனருக்கு நியாயம். இங்கு மாணிக்கவாசகர் திருவுருவம் வணங்கப்படுகிறது. அங்குப் போப்புருவம் வணங்கப்படலாமா? ஆமெனின். அவ்வுருவை இங்கும் வணங்கினா லென்ன? மாணிக்கவாசகரின் பெயர்ப்பே போப். அப்படியுஞ் சொல்லிக்கொள்ளலாம் அந்நவினர்.
    வாக்குக்கள் மூன்றுவகை. அவற்றுள் ஒன்று ஞான வாக்கு. அது பரமசிவனாருடையது. வேதாகமங்களே அது. இன்னொன்று அனுபவவாக்கு. அது சம்பந்தராதியருடையது. தேவாராதி திருமுறைகளே அது. பின்னொன்று பிராகிருதவாக்கு. அது சிவானுபவ மில்லாத ருடையது. நான்போன்றா ரெழுதும் நூல்கள் பல. அவையெல்லாம் அது. ஞானவாக்கும் அனுபவ வாக்கும் அருள் நாதவொலி. பிராகிருத வாக்கு மாயா நாதவொலி. அந்த ஞானவாக்கி லுள்ளன சம்ஸ்கிருத மந்திரங்கள். ஆகலின் அவையும் அருள் நாத வொலியே. அவையே சித்தி முத்திகளைப் பயக்கும். அவற்றைப் பெயர்ப்பதென்ப தென்ன? மாயா நாதவொலியாக்குவெதேயாம். அவ்வொலிச் சொற்கள் அப்பயனைத் தரா. தேவராதிகளைப் பெயர்த்த வசனமும் மாயாநாதவொலிதான். ஆகவே எங்குள்ள சைவாலயங்களிலும் அவ்வொலிச் சொற்களை மந்திரங்களாக ஓதக்கூடாது.
    7. திருமுறை மந்திரங்கள்
    தேவார முதலிய திருமுறைகளுள; அவற்றிலிருந்து சிலபலபதிகங்களையாவது, பாடல்களையாவது, பாதங்களை யாவது. பதத்தொடர்களையாவது, பதங்களையாவது எடுத்து வரிசைப்படுத்தி அக்கோவையை மந்திரங்களெனக் கொள்ளலாம். இப்படிக் கூறுவர் அந்நவீனர். தமிழகத்துச் சைவாலயங்கள் பல. அவற்றில் தேவாரத்திகள் ஓதப்பட்டே வருகின்றன. அவற்றை ஓதிவருபவர் ஓதுவார். அந் நியமந் தொன்றுதொட்டது. அவ்வாலயங்களில் திருவுருவங்களுள. அவற்றிற்கு உபாசாரங்கள் செய்யப்படும். அவற்றுள் அவ்வோதுகையுமொன்று. அதற்கும் அந்நவீனர் விரும்பும் அக்கோவையை ஓதுகைக்கும் வேறு பாடென்னை?
    எல்லாரும் ஞானவாக்கின் விதிப்படியே யொழுக வேண்டும். அப்படியொழுகாதவரைப் பிறப்பிறப்புக்கள் விடா. தேவார முதலியவற்றின் ஆசிரியன்மார் தம் முன்னைப் பிறப்புக்களில் அவ்விதியைக் கசடறக் கற்றனர். கற்றபின் அதற்குத் தக நின்றனர். அவர்க்கு முத்தி சித்தித்தது. அவ்வேதாகமங்களே கற்பவை யென்ற உண்மையை அவர் அனுபவித்துக் கண்டனர். ஆகலின் அவரருளிய தேவராதிகள் அனுபவ வாக்கெனப்பட்டன. திருமுறைப் பாடல்கள் பல்லாயிரம். அவற்றுள் அவ்வாசிரியன்மார் தம்மைப் பற்றியுங் கூறியிருக்கின்றனர். 'நான்மறை வல்ல ஞானசம்பந்தன்', 'நான்மறை யங்கமோதிய நாவன் - வன்றொண்டன்', 'செழுமறை தெரியுந்திகழ்கருவூரன்', 'மறைவல வாலி', 'மாசிலா மறைபலவோது நாவன் வண்புருடோத்தமன்', என்பவற்றை நோக்குக. அவரெல்லாங் சம்ஸ்கிருத சதுர்வேத விற்பன்னரென்பது விளங்கும். அவர் தம் பாடல்களைப்பற்றியும் பேசினர். 'ஆரணம் பொழிந்த பவளவாய் சுரந்த வமுதமூ றியதமிழ் மாலை', 'ஆரணத் தேன்பருகி யருந்தமிழ் மாலை கமழவரும்', என்பன காண்க. திருமுறைகள் வேதக்கருத்தையே பிரதிபலிக்கின்றன வென்பது விளங்கும். ஆனால் ஒருவகையில் அவரெல்லாம் ஒருமுகமான எச்சரிக்கையுட னிருந்திருக்கின்றனர். என்னை? தம் பாடல்களை வேதமென்றோ, மந்திரமென்றோ, அவற்றிற்குச் சமமென்றோ அவர் புகழவில்லை.
    ஆனால் அவர் 'மந்திர வேதங்கள்', 'மந்திரத்தமறை', 'மந்திரமறை', 'மந்திர நான் மறை', 'மந்திர மாமறை', என்று பாடினார். சம்ஸ்கிருத வேதங்களே சர்வ மந்திரங்களுக்கும் ஆகரம். அவ்வுண்மையை அவ்வடிகள் ஏற்றுள்ளன. வேதம் மந்திர மயம்; அதனால் மந்திரமென்ற பெயரும் பெற்றது. 'மந்திரமுந் தந்திரமுந்தாமே' என்றது காண்க. மந்திரம் - வேதம்; தந்திரம் - சிவாகமம். 'இருக்குருவா மெழில் வேதம்' என்றது பத்தாந் திருமுறை. இருக்குரு- மந்திரவடிவம்.
    இன்னும் 'நன்றுமிகு நாண்மலரா னல்லிருக்கு மந்திரங்கொண் - டொன்றிவழி பாடுசெயலுற்ற வன்ற னோங்குயிர் மேற் - கன்றிவரு காலனுயிர் கண்டவனுக்கன்ற ளித்தான் - கொன்றைமலர் பொன்சொரியுங் கோளிலியெம் பெருமானே', 'வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப் - போதத்தால் வழிப்பட்டான்', 'நலமலி தருமறை மொழியொடு... ... ...மலரவை கொடுவழிபடுதிறன் மறையவ னுயிரது கொளவ... ... ...மற லிதனுயிர் கெடவுதை செய்தவன்' என்றது திருமுறை. அவற்றிலுள்ள இருக்குமந்திரம் வேதத்தின் மந்திரம். மறைமொழி யென்பன வொன்றே. இருக்கு மந்திரத்துக்கு நல் என்பதும், மறைமொழிக்கு நல மலிதரு என்பதும் விசேடணங்கள். அவற்றையுங் கருதுக. போதத்தால் வழிபட்டான் என்றுமிருக்கிறது, போதம் - ஞானம். வேதமந்திரத்தால் வழிபடுவதே ஞானவழிபாடு அது விளக்கம். வேறு மந்திரங்களால் வழிபடுவது மூட வழிபாடு. அது தொனி. சம்ஸ்கிருத வேத மந்திரங்களே மந்திரங்கள். அவைகொண் டர்ச்சிப்பதே அர்ச்சனை. எமபயம் நீக்கினதே அதற்குச் சாட்சி. நீத்தார். அதற்கேற்ற மந்திரங்களை வேதத்திலிருந்து கண்டெடுத்தானே அம்மறையவன். அதுவே அவனுடைய திறல். அம்மந்திரங்களையப்படி வந்தித்தன திருமுறைகள்.
    ஆகவே வேதத்தை விட்ட அறமில்லை. அப்படியே திருமுறைகளும் வேதத்தை விடா. ஆகலின் வேதத்தை விசுவசிப்பவரே அவற்றை ஓதுதற் குரியார். அவையும் அவருக்கே அனுக்கிரகிக்கும். வேத நிந்தகர் அவற்றையும் நிந்திப்பவரே. அவர் அவற்றை வேறெப்படியும் போற்றுக, ஓதுக, அவை அவரைக் கண்டு நாணி விலகும். அவ்வோதுகை வெறும் ஆரவாரம், ஆதலின் ஞானவாக்கின் ஸ்தானத்தில் ஞான வாக்கு இருப்பதாக, அதை அநுசரித்த ஸ்தானத்தில் அனுபவ வாக்கு இருக்க வேண்டும். அனுபவ வாக்கை என்ன வகை செய்தும் ஞானவாக்கின் ஸ்தானத்தில் வைக்கக்கூடாது. வைத்தால் அவ்விரு வாக்குகளுமே அவமதிக்கப்பட்டனவாகும். சைவாலயங்களில் சம்ஸ்கிருத வேத மந்திரங்கள் முதலில் ஓதப்படுகின்றன. பின்னர் தான் தேவாராதிகள் ஓதப்படும். அம்மரபைக் காண்க.
    வேதம் பதிகப் பாகுபாடுக ளுடையது. தேவாரமும் அப்படியே. வேதத்தை அனுசரித்தது தேவார மென்பதை அதனாலுந் தெரியலாம்.
    'அர்ச்சனை பாட்டே யாகும்' என்றது பன்னிரண்டாந் திருமுறை; ஆதலின் அர்ச்சனைக்கு திருமுறைகளை ஓதினாலென்ன? என்பர் அந்நவீனர். அப்பாட்டாவது ஏழாந் திருமுறை. அதைப் பாடியவர் சுந்தரர். அவர் எந்தச் சைவாலயத்திலாவது பதிகங்கள் பாடி அர்ச்சனை செய்திருக்கின்றனரா? இல்லை. ஆகையால் அவ்வடி அந்நவீனர் கொள்கைக்கு இசையாது. அர்ச்சக குலத்தினராகிய அச்சுந்தரரை மாத்திரம் 'நீ அர்ச்சனை செய்ய வேண்டாம். நம்மைப்பாடிக்கொண்டே யிரு. போதும். உன் பாடல்களையே நாம் அர்ச்சனையாக ஏற்றுக் கொள்வோம்' என்று பரமசிவனார் அனுமதித்தார். அர்ச்சனைக்குப் பாட்டு என்றில்லை. பாட்டே அர்ச்சனை. அவ்வேறுபா டறிக.
    இனிக், கைவல்ய நவநீத முதலியன மாயாவாத நூல்கள். பிரபுலிங்க லீலை முதலியன ஐக்கியவாத நூல்கள். வடலூர் இராமலிங்கர் சைவசமய்த்தவ ரல்லர். அதை அவரே சொல்லி விட்டார். அவர் பாடியவும் பல. நான் போன்ற ராக்கும் பாடல் களுமுள. அவையுங் கணக்கில. அவையெல்லாந் தமிழே. அவற்றிலுஞ் சிவதுதிகள் மிகுதி. சைவாலயங்களில் அர்ச்சனை யாதியவற்றிற்கு அவற்றிலிருந்துந் தமிழ் மந்திரங்கள் திரட்டலாமா? ஆகாதா? ஆமெனின், அப்பாடல்களோடு திருமுறைப் பாடல்களுஞ் சமமென்றாகும். அதுவுந் திருமுறை நிந்தையே. ஆகாதெனின், அவற்றின் தமிழை நிந்தித்த தாகும். அந்நவீனருக்கு அது நியாய மன்று.
    தமிழகத்தில் சைவாலயங்கள் முந்தித் தோன்றின. திருமுறைகள் பிந்தியவை. அம்முந்திய காலத்தில் அவ்வாலயங்களில் எந்தத் தமிழ் முறைகள் மந்திரங்களாக ஓதப்பட்டன? சம்ஸ்கிருத வேத மந்திரங்களே இன்றே போல் அன்றும் ஓதப்பட்டன. அவ்வோதுகைக்கு முந்திய காலமென்பதில்லை. இருந்தால் அது சைவாலயங்களுக்குந் தோன்றாத காலமே யாம்.
    8. சிருட்டி மந்திரங்கள்
    நினைப்பவரைக் கரை சேர்ப்பது மந்திரம். அப்பொருள் கொண்ட மந்திரங்கள் சம்ஸ்கிருத வேதத்திற்றா னுள. தவமுடையார் நிற்கு முறையில் நிற்பர்; அவற்றை ஓதுமுறையில் ஓதுவர். அதனால் தம்மை நிறைமொழி மாந்தராக்கிக் கொள்வர். அவரே நீத்தார். ஒவ்வொரு மந்திரத்தையும் ஒவ்வொரு தேவதை அதிட்டிக்கும். அவர் அம்மந்[/

  11. #140
    Senior Member Devoted Hubber devapriya's Avatar
    Join Date
    Oct 2005
    Posts
    350
    Post Thanks / Like
    [tscii]8. சிருட்டி மந்திரங்கள்
    நினைப்பவரைக் கரை சேர்ப்பது மந்திரம். அப்பொருள் கொண்ட மந்திரங்கள் சம்ஸ்கிருத வேதத்திற்றா னுள. தவமுடையார் நிற்கு முறையில் நிற்பர்; அவற்றை ஓதுமுறையில் ஓதுவர். அதனால் தம்மை நிறைமொழி மாந்தராக்கிக் கொள்வர். அவரே நீத்தார். ஒவ்வொரு மந்திரத்தையும் ஒவ்வொரு தேவதை அதிட்டிக்கும். அவர் அம்மந்திரத்தைச் செபிக்கும்போது தம்மை அத்தேவதையாகப் பாவிப்பர். அதனால் அவரிடம் ஒரு சக்தி பிறக்கிறது. அது தான் சாபானுக்கிரக சக்தி. அவர் தீயவரைச் சபிப்பர். நல்லவரை அனுக்கிரகிப்பர். அச்சாபானுக்கிரவசனங்கள் மந்திரங்களென உபசரிக்கப்படும். செபிப்பவரை நிறை மொழி மாந்த ராக்குவது சம்ஸ்கிருத மந்திரம். தொல்காப்பியத்தில் தமிழ் மந்திரமென வொன்றுளது. அது தான் அச்சாபானுக்கிரக வசனங்கள். அது செபிப்பதற்குரிய தன்று. செபிப்பவரை நிறைமொழி மாந்த ராக்கவுஞ் செய்யாது. அதனையே அந்நூல் மறைமொழி யென்றது. திருக்குறளிலுள்ள மறைமொழியும் அதுவே. திருமுறைகள் சொன்ன 'மறைமொழி', 'வேத மொழி' கள் சம்ஸ்கிருத வேத மந்திரம்.
    தொல்காப்பியரும் வள்ளுவருங் கூறிய மறைமொழிகளும், மந்திரத்துக்கும் மதமும் மறுப்புமான விருத்தியுரையில்லை. 'மந்திரப் பொருட்கண் அப்பொருட்குரித்தல்லாச் சொல் வருவனவும் என்றவாறு. இதற்குகாரணம் மந்திர நூல் வல்லார்வாய்க் கேட்டுணர்க' எனவும், 'அவர், ஆணையாற்கிளக்கப்பட்டுப் புறத்தார்க்குப் புலனாகாமன் மறைத்துச் சொல்லுஞ் சொற்றொட ரெல்லாம் மந்திரமெனப்படும் என்றவாறு. அவை வல்லார்வாய்க் கேட்டுணர்க......இவை தமிழ் மந்திரம்....' எனவுமே இப்போதுள்ள தொல்காப்பியவுரை யிருக்கிறது. மந்திரப் பொருட் கண் அப்பொருட்குரித்தல்லாச் சொல் வருவதெற்றுக்கு? ஆணையாவது யாது? அதற்கும் அவர்க்கு முள்ள சம்பந்தமென்ன? புறத்தா ராவார் யார்? புலனாகாம லென்பதெது? மறைத்துச் சொல்வானேன்? இவ்வினாக்கள் எழுகின்றன. விடை வேண்டும். அந்நவீனரால் தரமுடியுமா? மந்திரமும் அதன் பொருளும் எல்லார்க்கும் புலனாக வேண்டும்: அவர் கொளகை அது. அதற்கு அத்தமிழ் மந்திரமாவது பொருந்துகின்றதா? இல்லை.
    இன்னும் திருமுறைகளில் மந்திரப் பொருளின் கண் அப்பொருட்கு உரித்தான சொல்லே வந்துள்ளது. அந்நூல்களின் பொருள் புறத்தார் முதல் எல்லார்க்கும் புலனாகும் என்று கொண்டால் அவை தொல்காப்பியவுரையின் படி மந்திரங்க ளாகா. அவற்றில் மந்திரப் பொருளின்கண் அப்பொருட்கு உரித்தல்லாத சொல்லே வந்துள்ளது. அவற்றின் பொருள் புறத்தார் முதல் யாவர்க்கும் புலனாகாது என்று கொண்டால் அவை நவீனரின் கொள்கைப்படி மந்திரங்களாகா. ஆகவே அவ்வுரைப் பகுதியால் அவராசை தீருமாறில்லை.
    அன்றியும் அவ்வுரைப்பகுதித் தமிழ் மந்திரத்துக்கு உதாரணத்தோடு கூடிய விளக்கம் வேண்டும். மந்திர நூல் வல்லாரே அதனைத் தரக்கூடியவர். அவ்வுரைக்காரர் அப்படிச் சொல்லிக் கையை விரித்து விட்டார். தமிழ் மந்திரநூல் உண்டா? அதில் வல்லா ருளரா? அவர் விளக்குந் தருநாள் என்று? அன்றுவரை அப்பகுதியை ஒதுக்குக. மந்திர விசாரணைக்கு அது உதவாது. மேலும் தமிழ்மந்திரமென்ற பிரஸ்தாபம் அ·தொன்றுதான். அது பிற பிரமாணங்களால் வலியுறவில்லை. அந்நவீனர் அதனை யெடுப்பானேன்? விளம்பரஞ் செய்வானேன்? 'திருநான்மறை விளக்க ஆராய்ச்சி' என்றோ ரறிவாராய்ச்சி நூலுள்ளது. திரு.மா.சாம்பசிவம் பிள்ளையவர்கள் அதனாசிரியர். தமிழ் மந்திரமென்பது முதலிய பல அசைவக் கொள்கைகள் அதிற் சர்ச்சை செய்து மறுக்கப்பட்டுள்ளன. அந்நூலிற் காண்க.
    நிற்க, தமிழ்மந்திரங்க ளில்லை யாகுக: அவற்றைப் புதியவனாகச் சிருட்டித்துக் கொள்ளலாம்: அப்படிக் கூறுவர் அந்நவீனர். சீடர்களின் பக்குவத்தில் தாரதம்மியமுண்டு. அதற்கேற்ப ஆசிரியன் அவருக்கு மந்திரோப தேசஞ் செய்வான். அவனும் மந்திரங்களைச் சிருட்டித்துபதேசியான். அவனுக்கே அவ்வுரிமை கிடையாது. தகுதியுமில்லை. அந்நவீனர்க்கு மாத்திரம் அவை வந்துவிடுமா? அவருக்குங் குருபரம்பரை யிருக்கலாம். அதில் எத்தனையோ குருமார் வந்திருப்பர். அவருள் யாராவது மந்திரத்தைச் சிருட்டித்து உபதேசித்திருக்கின்றனரா? இப்போதும் ஆதீன பீடாதிபதிக ளுளர். அவருந் தமக்கு முந்திய ஆசாரியரிடம் உபதேசங்கேட்டவர் தான். அது திருமுறை மந்திரமா? தொல்காப்பியத் தமிழ் மந்திரமா? சிருட்டி மந்திரமா? அவற்றுள் எதுவு மன்று. அவர் கேட்ட வுபதேசம் வேதாகமோத்த சம்ஸ்கிருத மந்திரமே. மேலும் மந்திரத்தை அவரவரே சிருட்டித்துக் கொள்ளட்டும்: குருபரம்பரை குலைந்தேபோம். ஒருவேளை அந்நவீனருக்குச் சற்குரு ப்ரம்பரையில்லையோ? இல்லையென அவர் சொல்லட்டும். பிறகு அவர் தம்மனம்போற்செய்க. அன்றியும் மந்திரங்களே மற்றவற்றைச் சிருட்டிக்கும். பெரியோர் கருத்தது. அந்நவீனர் மந்திரங்களையே சிருட்டிக்கப்பட்டு விட்டனரா? அவருக்கு அச்சிருட்டிசத்தி வந்தவாறெங்ஙனே? மந்திரசிருட்டி சத்தி முன்னது. அதன் விளைவாய்ப் பின்னது அம்மந்திரம். இப்பின்னது அம்முன்னதை எய்துவியாது. ஆகலின் அம்மந்திர செபம் அவருக்கு வேண்டாம். அதனைப் பிறகும் விரும்பா. தமக்கு வேண்டும் மந்திரத்தை அவருஞ் சிருட்டித்துக் கொள்வர். சைவ சமய வரம்பு அழிக்கப்பட்டுவருங் கால மிது. ஆகலின் அவரவ ரறிவே அவரவருக்கு வழியுந்துணையுமாம். ஆனால் அச்சிருட்டி மந்திரங்கள் அவரவர் வீட்டிலோ, ஏட்டிலோ இருந்திடுக. சைவாலயங்களில் அவை நுழையக்கூடாது. சிவாகமங்கள் அனுமதிக்கவில்லை.
    9. மனங் கலந்த பத்தி
    தமிழருக்கு மனங் கலந்த பத்திவழிபாடு வேண்டும். அதற்கு சம்ஸ்கிருத மந்திரங்கள் உதவா, அவற்றின் பொருள் விளங்காது. தமிழ் மந்திரங்கள் பொருள் விளங்குவன, அவையே அப்பத்தி வழிபாட்டிற்கு உதவும்: இதுவும் அந்நவீனர் கூற்று. நோய்கள் மணிமந்திர மருந்துக்களால் தீரும். மாந்திரீகன் நோயாளிமுன் செபிக்கிறான். அச்செபம் பெரும்பாலும் மானதம் அல்லது மந்தமாகவே யிருக்கும். நோயாளிகன் காதில் அம்மந்திரமே விழாது. அவன் அதன்பொருள் தெரிவதெங்கே? ஆயினும் அவன் நோய் நீங்குகிறது. மந்திர சப்தமும் அர்த்தமும் விளங்காத அவன் சுகமடைகிறான். இனி மாந்திரீகருட் பலர் மந்திரங்களைச் செபிப்பர், சக்கரங்களுள் எழுத்துக்களை அமைப்பர். ஆயினும் மந்திரப்பொருளை யெல்லாம் அவர் அறிந்தவர்தானா? சொல்லமுடியாது. எனினும் அவர் செபம் பலிதமே. அது கண்கூடு. அந்நவீனர் கொள்கை அவ்வகையில் தளர்கிறது.
    மந்திரப் பொருள் விளங்கவே வேண்டுமோ? அந்நியாயம் சம்ஸ்கிருத மந்திரங்களுக்கு மாத்திரந்தானா? தமிழ் மந்திரங்களுக்கு மாகும். அப்போது தான் அம்மந்திரங்களாலும் மனங்கலந்த பத்திவழிபாடு சித்திக்கும். 'சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தி னுள்ளார்' என்றது திருவாசகம். அதிலுள்ள 'உணர்ந்து சொல்லுவார்' என்பதை நோக்குக. உணர வேண்டுவது எதை? சொல்லவேண்டுவது எதை? உணரவேண்டுவது பொருளை. ஆனால் சொல்ல வேண்டுவது பாட்டையே, சொல்லுவர் - ஓதுவார். சம்ஸ்கிருத மந்திர விஷயத்திலும் அதுவே கொள்ளற்பாலது. அம்மந்திரங்களின் பொருளைத் தெரிக. ஆனால் அம்மந்திரங்களையே ஓதுக. பாட்டிற்கு உரை தெரி, அவ்வுரையையே ஓது. பாட்டை விடு என்று அவ்வடிகள் உபதேசிக்கவில்லை.
    இனிப்பொருள் தெரிவ தெப்படி? பொருள் இரண்டு வகை. இல் என்பது ஒரு சொல். அது இலக்கிய வழக்கு. அதற்குப் பொருள் வீடு என்பது. அதுவும் ஒரு சொல்லே. அது உலக வழக்கு. அப்படி ஒரு சொல்லுக்கு இன்னொரு சொல்லைப் பொருளாகக் கொள்வது ஒன்று. இல் என்பது கல் மண் கட்டை கண்ணம் முதலியவற்றா லாயதொரு கட்டடம். அதனைப் பொருளாகக் காண்பது மற்றொன்று. மூன்றாம் வகையில்லை. சம்ஸ்கிருத மந்திரங்களுக்கு இரண்டாம் வகைப் பொருள் முனைப்புடையவராற் காணமுடியாது. முதல் வகைப் பொருள் தெரியாதிருப்பதையே அந்நவீனர் எடுத்துக் காட்டுவர். எல்லாத் தமிழ்ச் சைவரும் சம்ஸ்கிருதப் பயிற்சி பெறுக. அத்தெரியாமை தீரும். அதற்கு அப்பயிற்சி யொன்றே வழி. அதுவரை அம்மந்திரங்களுக்குத் தமிழில் உரை தரச்சொல்லித் தெரிக. தம் சமயத்தின் பொருட்டு அவர் அவ்வளவாவது சிரமப்படுக. அத்திறமுங் கெட்டவர்க்கு வாயேன்? அப்படி எவரும் அம்மந்திரங்களுக்கு எந்தப் பிரதி பதங்களாலும் அர்த்தந் தெரியலாம். ஆனால் அம்மந்திரங்களையே ஓத வேண்டும். மந்திர மென்ற பெயருக்கு அவையே முற்றிலுந் தகுதியுடையன. அவற்றின் பிரதி பதங்களும் பின்ன பதங்களும் அவை யாகா.
    தமிழிர் சைவ நூல்கள் பல. எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னிருந்தே அவை அவ்வப்போது இயற்றப்பட்டன. அவை மங்கலத் தமிழ், சின்மயத் தமிழ், மதுரத் தமிழ், மடமடை யுடைத்து வளர்ந்த தமிழ். அவை செம்பாடல்களாயுயிருக்கும். சிறந்த வசனங்களாயுமிருக்கும். அவற்றின் ஆசிரியன்மார் மனங்கலந்தசிவபத்தி வழிபாடு முதிரப்பெற்றவர். இன்றேல் அன்ன நூல்கள் தோன்றியிரா. அவர்பாலிருந்த அப்பத்தி வழிபாட்டிற்கு அவையே சான்று. இனி நூலியற்றாமற் காலஞ்சென்ற சைவரும் எண்ணற்றவர். அவ ரெப்படி? அவருள் எத்தனையோ பேர் சைவவரம்பு கடவாதவர். சிவதீக்ஷ¡வான்கள், விபூதி ருத்ராக்ஷதாரண சீலர். சிவபூஜாதுரந்தரர், சைவாலயங்களில் நித்திய நைமித்திகாதிகளை ஆகமமுறையில் நடத்தி மகிழ்ந்தவர், அச்சேவையில் தினந்தோறும் திளைத்தவர். ஏனைய ஆசாரங்களிலுங் குறையாதவர், இருமொழிச் சைவ நூல்களிலும் வல்லவர், சத்தியம், அஹிம்ஸை, பரோபகாரம் முதலிய சாதாரண தருமங்களிலுஞ் சிறந்தவர். இன்னும் என்ன வேண்டும்? அவர் வாழ்ந்த காலங்களில் சைவாலயங்களில் தமிழ் மந்திரங்களா ஓதப்பட்டன? சம்ஸ்கிருத மந்திரங்களே ஓதப்பட்டன. அவை அச்சிவ புண்ணிய சீலரின் மனங்கலந்த பத்திவழி பாட்டைச் சிறிதுந் தகையவில்லை. பெரிதும் வளர்த்தே வந்தன. அவ்வுண்மையை யாராலும் மறுத்துரைக்க முடியாது.
    அது சில வருடங்களுக்கு முன்வரை யுள்ள நிலை. இப்போது எப்படி? அந்நிலை மாறியது. அந்நவீனர் ஆங்காங்கே தோன்றினர். அவருக்குச் சம்ஸ்கிருத தூஷணமே ஆசைத்தொழில். அதுவே தமிழ் வெறியாயிற்று. அவ்வெறி கொண்ட சுவடிகள் மலிந்தன. அவற்றில் தமிழ்மொழி ஒரு தெய்வமாகக் கற்பிக்கப்பட்டது. பிறமொழிகள் எத்தனை? அவற்றுக்குரியாருமுளர். அவர் அவற்றை அப்படிக் கற்பிக்கவில்லை. அந்நவீனரே தம் சுவடிகளில் அக்கற்பனை செய்தனர். அத்தெய்வத்துக்கே தம் மனங்கலந்த பத்தி வழிபாட்டை அவை சமர்ப்பித்தன. அவ்வழிபாட்டிற்கு அர்ச்சனை மந்திரங்கள் வேண்டுமே. அத்தூஷணங்களே அம்மந்திரங்கள் அவை அச்சுவடிகளில் நிரம்பக் கிடைக்கும். அந்நவீனரே அவ்வர்ச்சகர். இப்போது அத்தெய்வமே கானல்நீர் போற்காட்சி யளிக்கிறது. அதனால் சைவ சமயம் அந்தர்த்தானமாகிவருகிறது. பரமசிவனாரும் அப்படியே. மனங்கலந்த சிவ பத்தி வழிபாடு எங்கிருக்கும்? அதுவுங் குறைகிறது. அதற்குக் காரணம் சம்ஸ்கிருத மந்திரமா? அன்று. அந்நவீனரின் தமிழ் வெறியே.
    அவர் கொள்கைப்படி மற்ற மகாணங்களின் மக்களுக்கும் அப்பத்திவழிபாடில்லையென்றே சொல்லவேண்டும். ஏன்? அங்குள்ள ஆலயங்களிலும் சம்ஸ்கிருத மந்திரங்களே ஓதப்பட்டு வருகின்றன. ஆகவே அந்நவீனர் அவரையும் நிந்தித்தவராகிறார். என்னே அவர் தம் செருக்கு!
    ஒரு சமயம் பல மொழிகளிற் பிரசார மாகும். எச் சமயத்தையும் அச்சமயிகளே பிரசங்கிப்பர். அவருள் சொந்தமொழி பயின்றார் சிலர். அவர் பிரச்சாரம் அம்மகாணத்தளவி லடங்கும். சொந்த மொழியும் பிற மொழிகள் சிலபலவும் பயின்றார் சிலர். அவர் அப்பிற மொழிகள் வழங்கும் பிரதேசங்களுக்குஞ் செல்வர். அங்கும் அவர் பிரசாரம் நடைபெறும். ஆயினும் அவ்வொரு மொழி வல்லாரும் பலமொழி வல்லாரும் ஒரே சமயிகளே. அச்சமயத்தில் அறிவும் ஆராய்ச்சியும் பற்றும் உடையாரவர். அப்பலமொழி வல்லார் பிரதேசந்தோறுஞ் சென்று அங்கொரு விதமாகவும் இங்கொருவிதமாகவும் பிரசிங்கிப்பாரா? உலகெங்கும் கிறிஸ்துவ இசுலாமிய பிரசாரம் நடந்து வருகிறது. அப்பிரசாரகர் தமிழில் ஒரு விதமாகவும் தெலுங்கில் இன்னொரு விதமாகவும் துளுவில் மற்றொரு விதமாகவுமா பிரசங்கிக்கின்றனர். இது தமிழ்க் கிறிஸ்தவம். இது தெலுங்குக் கிறிஸ்தவம், இது துளுக் கிறிஸ்தவம் எனப் பேதக் கிறிஸ்தவமுண்டா? எங்கும் ஒரே கிறிஸ்தவம், ஒரே இஸ்லாம். தமிழ்க் கிறிஸ்தவம் உயர்வு, தெலுங்குக் கிறிஸ்தவம் தாழ்வு, அல்லது இது உயர்வு. அது தாழ்வு என அவ்விருமொழிக் கிறிஸ்தவரும் வாதப்பிரதிவாதங்கள் செய்து கொள்ளார். இசுலாமியரும் அது செய்யார். பிறசமயிகளும் அப்படியே. சமயம் ஒன்றானால் அது எம்மொழியிலும் ஒன்று போலவே பிரசங்கிக்கப்பட்டிருக்கும். அந்நவீனர் மாத்திரம் விசேடப் பிறவிகள், மொழியை அடிப்படையாகக் வைத்துச் சமயத்தைப் பிளக்கும் புத்திசாலிக ளவர். அதனால் அவர் தமிழ்ச்சைவம் வேறு. சம்ஸ்கிருத சைவம் வேறு என்பார். தமிழ்ச்சைவம் வாழ்க; சம்ஸ்கிருத சைவம் ஒழிக; தமிழ்சைவ நூல்கள் வாழ்க, சம்ஸ்கிருதச் சைவ நூல்கள் ஒழிக; தமிழ்ச் சைவாசிரியன்மார் வாழ்க, சம்ஸ்கிருத சைவாசிரியன்மார் ஒழிக; தேவாரம் வாழ்க, சுருதி சூக்தி மாலை ஒழிக; சம்பந்தர் வாழ்க, ஹரதத்தர் ஒழிக என கத்துபவர்க்குப் புத்தி சிறிதாவதுண்டா? சைவம் எத்தனை மொழிகளிலிருக்கட்டும். அது ஒரே சமயந்தான். மொழிபற்றி அதை நோக்குவதும் பிளப்பதும், அழைப்பதும் சமயாபிமானமே யாகா, அவற்றில் மொழிவெறியே முனைந்து நிற்கும். சம்ஸ்கிருதச் சைவம் ஒழிக என்றால் சம்ஸ்கிருதம் ஒழிக என்பது தான் கருத்து. தமிழ்ச் சைவம் வாழ்க என்றால் தமிழ் வ

Page 14 of 15 FirstFirst ... 412131415 LastLast

Similar Threads

  1. Hariyudan Naan
    By venkkiram in forum TV,TV Serials and Radio
    Replies: 92
    Last Post: 11th April 2011, 11:34 PM
  2. Thanimaiyil naan
    By Aravind_06 in forum Poems / kavidhaigaL
    Replies: 9
    Last Post: 31st March 2005, 11:05 AM
  3. Nee Illa Naan
    By siddiqsa in forum Poems / kavidhaigaL
    Replies: 0
    Last Post: 16th March 2005, 01:31 PM
  4. naan
    By Carol in forum Indian Food
    Replies: 2
    Last Post: 21st December 2004, 09:09 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •