Page 21 of 21 FirstFirst ... 11192021
Results 201 to 202 of 202

Thread: PAATHASAARI

  1. #201
    Senior Member Veteran Hubber VENKIRAJA's Avatar
    Join Date
    Mar 2006
    Location
    Madras
    Posts
    3,285
    Post Thanks / Like
    பாதசாரி

    நீண்ட சிந்தனைக்குப் பிறகு ஒரு தமிழ் வலைப்பூ தொடங்கியிருக்கிறேன். அப்படியே இங்கு எழுதிய சங்கிலியை ஏற்றுமதி செய்யவும், தொடர்ந்து எழுதவும் முடிவெடுத்திருக்கிறேன். தங்களது விமர்சனங்களை எதிர்நோக்கும்,
    நெறியன்
    வெங்கிராஜா.

    பயணத்தடம்:

    முதல் சுவடு

    முகவுரை

    அத்தியாயம் #1

    அத்தியாயம் #1 தொடர்ச்சி

    இடைச்செருகல் #1

    அத்தியாயம் #1 தொடர்ச்சி

    அத்தியாயம் #2

    அத்தியாயம் #2 தொடர்ச்சி

    அத்தியாயம் #3

    அத்தியாயம் #4

    இடைச்செருகல் # 2

    அத்தியாயம் # 5

    அத்தியாயம் #6: வேஷதாரி

    இடைச்செருகல் #3

    அத்தியாயம் #7

    அத்தியாயம் #8

    அத்தியாயம் # 9: கிரணகணங்கள்

    அத்தியாயம் #10

    அத்தியாயம் #11: BLACK AND WHITE

    அத்தியாயம் #11: தொடர்ச்சி

    அத்தியாயம் #12: நகராத பயணம்

    அத்தியாயம் #12: தொடர்ச்சி

    அத்தியாயம் #12: மறுபடியும் மறுபயணம்

    அத்தியாயம் #12: யாத்திரிகன்

    அத்தியாயம் #13: பதினாறு வயதினிலே

    அத்தியாயம் #13: பிரயாணி

    இடைச்செருகல் #3: ஒரு பார்வை, சில பரிமாணங்கள்

    இடைச்செருகல் #3: தொடர்ச்சி

    தன்னிலை விளக்கம்: பாதசாரி ஒரு பூவா?

    தன்னிலை விளக்கம்: பாகம்-2

    அத்தியாயம் #14: மாலுமி

    அத்தியாயம் #15: 356

    பாதசாரி- புதிய அத்தியாயம்

    அத்தியாயம் #16: ரணத்தடச்சுவடு

    பாதசாரி-மீண்டும் ஒரு முன்னுரை

    புதிய அத்தியாயம்-I: இரவலன்

    இடைச்செருகல் # 4: உறைந்த காலம்

    தலைப்பேதும் தோன்றவில்லை

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #202
    Senior Member Veteran Hubber VENKIRAJA's Avatar
    Join Date
    Mar 2006
    Location
    Madras
    Posts
    3,285
    Post Thanks / Like
    Quote Originally Posted by crazy
    venki

    btw, naalai endru solli....ippo naal 11 aahidhu, enge....????
    -Aug 03, 2007
    கடந்த 2007 ஜூன் 27-ம் தேதி தான் கடைசியாக ஒரு அத்தியாயம் எழுதியது. எஞ்ஞான்றும் இனி இடைவெளி விட வேண்டாம் என்ற நோக்கோடு மீண்டும் பாதசாரிக்கத் தொடங்குகிறேன். வலைப்பூவிற்கும் அன்பர்கள் வருகை புரிந்தால் சற்று ஊட்டமளிப்பதாய்த் தோன்றும். வேண்டுகிறேன்.


    புதிய அத்தியாயம் #2: துவாரபாலகன்.

    சிறுவயதிலிருந்தே நமக்கு பயம் கொஞ்சம் அதிகம். பள்ளி விடுமுறைக்கு ஊருக்கு செல்லும் போதெல்லாம் சைக்கிளில் அண்ணன்கள் தங்களுக்குள் ரேஸ் விடுவதுண்டு. எப்போதும் நான் விசில் ஊதுபவனாகவே இருப்பேன். கிராம எல்லை முடிவு வரை சென்றுவிட்டு திரும்ப முதலில் யார் வருவதென்று தான் போட்டி இருக்கும். ஐயன்பேட்டைக்கும் முத்தியால்பேட்டைக்கும் இடையில் அகழி ஒன்று இருப்பதாகவும் அதில் முதலைகள் பசியுடன் எப்போதும் நீந்திக்கொண்டிருப்பதாகவுமே பயமுறுத்தி வைக்கப்பட்டிருந்தேன். குரங்கு பெடல் அடித்து, பின் டபுள்ஸ் ஓட்டும் வரை இதே நிலையில் தோப்பிலேயே வாயிற்காவலனாகத்தான் இருந்துவந்தேன்.

    விடுமுறைக்காலம் தவிர்த்து பள்ளி வாழ்க்கை மொத்தமும் சென்னையில் தான் கழிந்திருக்கிறது. அதன் பெரும் பகுதியை போரூரில் தான் செலவிட்டிருக்கிறேன். பள்ளியிலிருந்து மிகவும் தொலைவிலிருக்கும் வீடு என்னுடையது தான். சைக்கிளில் போரூர் சிக்னலைத் தாண்டி வருவதே பானிபட் யுத்ததில் அக்பரின் முன்னேற்றத்தைப் போன்றது. இந்த சமயத்தில் போரூரின் பிரசித்தி பெற்ற இரவுண்டானாவைப் பற்றி கொஞ்சம் சொல்லியே ஆகவேண்டும். சென்னையின் புறநகர் பகுதியில் முதன்முதலில் ஒரு சிக்னல் வந்தது இங்கு தான். அது போல சென்னையின் மிக முக்கியமான சாலைகள் புணர்வதும் இங்கு தான். ஒரு பக்கம் ஆற்காடு சாலை (கோடம்பாக்கம், வடபழனி, விருக/வளசரவாக்கம்) சிக்னல் அடைந்து குன்றத்தூர் சாலையாக உருமாறும். மற்றொரு திசையில் மவுண்ட் ரோடு கிண்டியில் முடிந்து பட் ரோடு, வர்த்தக மையம் வழியாக வந்து போரூராகி ரவுண்டானா வந்தடைந்து பூந்தமல்லி சாலையாக பூப்படைந்து செல்லும். அநியாயத்துக்கு விபத்துகள் சம்பவித்த வண்ணமிருக்கும். பள்ளி முடிந்து வசீம், ஜகன், ஜோ, செல்வா, திருமலை, அன்வேஷ், நான் எல்லோரும் ஒன்றாக வருவோம். இதில் ஆற்றின் கிளை போல சாகரத்தில் சங்கமித்துவிடும் ஆசாமிகள் போக நானும் அன்வேஷும் மட்டும் போரூர் சிக்னலைத் தாண்டி இரட்டை ஏரி வழியாக ட்ராஃபிக் பரமபதம் ஆடி முடிப்போம். வழியில் பாரதி பேக்கரியில் ஸ்வீட் பன்னும், வெங்கடேஸ்வராவில் சுடச்சுட சமோசாவும் வாங்கித் தின்போம். ஊடே கொஞ்சம் வெங்காய பகோடாவையும், பம்பாய் லக்கடியையும் லவட்டிக்கொள்வோம். சீருடையெல்லாம் நல்ல செம்பழுப்பில் இருந்தமையால் பிரச்சனையில்லை, அப்படியே துடைத்துக்கொள்ளலாம். சொல்ல மறந்துவிட்டேன், வருவதற்கு முன் ஏதேனும் டீச்சருடைய ஸ்கூட்டியின் காற்றை பிடுங்காமல் வந்ததில்லை.

    நமது வீட்டைச் சுற்றியிருக்கும் 'எங்க ஏரியா'-வின் வழிகள் எல்லாம் நமக்கு அத்துப்படியாகத் தான் இருக்கும். கிட்டத்தெட்ட அப்படித்தான். எப்படிப் புகுந்தாலும் போரூரின் சக்கரவியூகத்தினூடே நாங்கள் மீண்டு வரக்கூடிய சக்தி பொருந்தியவர்களாகத் திகழ்ந்தோம். வரும் வழியில் எல்லா சிற்றூர்களைப் போலவே குட்டிக் குட்டி ஹவர் சைக்கிள்கள் வரிசையில் நிற்கும் சைக்கிள் கடை, ஆல்-இன்-ஆல் அழகுராஜா மெக்கானிக் ஷெட், பாடல்கள் பாடிக்கொண்டேயிருக்கும் சலூன், மிளகாய் வாசம் படிந்த மாவு மில், அப்பா முன்னாடியும், பிள்ளை பின்னாடியும் தம் அடிக்கும் பங்க் கடை, மஞ்சள் நிற காலாவதி தொலைபேசி பெட்டிகள், ஃபிரேம் இல்லாத கண்ணாடி மாட்டிய பீட்டர்கள் மொய்க்கும் இன்டர்நெட் செண்டர்கள், டென்த், ப்ளஸ்-டூ மாணவர்களுக்கான கோச்சிங் சென்டர்கள் இத்தியாதி.சமாசாரங்கள். சில விசேஷங்களும் நடைபெறுவதுண்டு: கிறிஸ்துமஸ், ரம்ஜான், விநாயகர் சதுர்த்தி என எந்த பண்டிகை வந்தாலும் அமோகமாக கொண்டாட இடங்கள் இருந்தன. பாலமுருகன் சன்னதியும், மசூதியும், மாதா கோயிலும் சில தெருக்களால் பிரிக்கப்பட்டிருந்தாலும் எந்தவிதமான சச்சரவும் வந்ததாக நினைவில்லை. இவை விடுத்து மாதம் ஒருமுறை பார்வையிழந்த சகோதரர்கள் ஒரு வேனில் வந்து இசைச்சேவை புரிவார்கள், பெரிய புள்ளி ஒருவரை பொடா நீதிமன்றத்திற்கு பந்தோபஸ்துடன், வாகன நிறுத்ததிற்கு இடையே அழைத்து (தவறு, இழுத்துச்) செல்வார்கள். ஏகப்பட்ட சினிமா, சீரியல் ஷூட்டிங்கு நடத்தி வித்தை காட்டிக் கொண்டிருப்பார்கள். இவை எல்லாவற்றையும் தாண்டி கௌபாய் படங்களில் வருவது போல காய்ந்த புற்கள் நிறைந்த ஒரு பெரிய மைதானம் ஒன்று இருந்தது. அங்கு விமான நிலையம் வரப்போவதாக சொன்னார்கள். ஒரு பெரிய ரேடாரையும் நிர்மானித்துவிட்டு பிரும்மாண்டமான கதவுகளையும் போட்டு வைத்திருந்தனர். இப்போதும் அங்கு அனாமத்தாக சில வை-ஃபை கனெக்ஷன்கள் தட்டுப்படுகின்றன. பாதி முடித்து கைவிடப்பட்ட கட்டிடம் ஒன்று கிலியூட்டியபடி பூதாகரமாக இருந்தது. அன்று சைக்கிள்களை அங்கு நிறுத்தினார்கள். நான் தான் அந்த கதவுகளுக்கு அருகில் துவாரபாலகன் போல நின்றுகொண்டிருந்தேன்.

    (தொடரும்)

Page 21 of 21 FirstFirst ... 11192021

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •