Page 11 of 21 FirstFirst ... 910111213 ... LastLast
Results 101 to 110 of 202

Thread: PAATHASAARI

  1. #101
    Senior Member Veteran Hubber VENKIRAJA's Avatar
    Join Date
    Mar 2006
    Location
    Madras
    Posts
    3,285
    Post Thanks / Like
    மறுபடியும் மறுபயணம்.

    நிரம்ப நாட்களாகிவிட்டதால் மீண்டும் ஒருமுறை என் பூர்வீகத்தை கண்டுவர என்று இந்த காலாண்டுவிடுமுறையின் இருநாட்களை ஒதுக்கினேன்.செல்ல நாயிடம் விடை பெறுவதைப்போல கணிணியிடம் சொல்லிக்கொண்டு ஆட்டோவில் பேருந்துநிலையம் அடைந்தேன்.இதற்குமுன் இவ்வளவு கனத்ததில்லை,ஊருக்கு சென்றுவர.அநேகம் முறை பள்ளிக்கு மட்டம் போட்டுவிட்டு ஆனந்தமாய்த்தான் கிளம்பியிருக்கிறேன்.ஆனால் இம்முறை பள்ளி சகாக்களுடன் இரண்டு நாட்களை மிஸ் செய்யப்போகிறேன் என்ற எண்ணத்துடன் கிளம்பினேன்.ஆட்டோவில் முன்னாடி ஓட்டுனருடன் அமர்ந்துகொள்வதே வழக்கம்.வழிகளெல்லாம் எனது ஊரின் பழைய முகத்தை காட்டிக்கொண்டே வந்தன.எங்கள் மாமாவிற்கு திருமணம் முடிந்து வீட்டிற்கு வந்திருந்த மாமியிடம் அறிமுகமான முதல் பிரமுகர்கள் நாங்கள் ஐந்து பங்காளிகள் தான்.வெட்கத்தோடு பேசி நண்பர்களாகி பரிசுப்பொருட்கள்அனைத்தையும் பிரித்தது நினைவிருக்கிறது. எங்களுக்கான பேருந்து வந்துவிட்டிருந்தது.என் ஞாபகங்களை அங்கேயே போட்டுவிட்டு பேருந்தில் ஏறி வேகவேகமாக ஒரு ஜன்னல் இருக்கையில் அமர்ந்துகொண்டேன்.சென்னையின் புழுக்கத்தை விட்டுவிட்டு பட்டுநகரத்திற்கு விரைந்துகொண்டிருக்கிறது உந்து.ஒரு வேடிக்கை பாருங்கள்:பல்லவனின் நகரத்தில் பாரதி ஓடுகிறான்,பாரதியின் நகரில் பல்லவன் ஓடுகிறான்,நான் பேருந்துகளின் பெயரை சொன்னேன்.பாதையின் முன்னோட்டம்,வாழ்க்கையை பின்னோடியது.ஐயம்பேட்டை,இது லா.ச.ரா. வாழ்ந்த ஊராம்!ஐயம்பேட்டையிலிருந்து முத்தியால்பேட்டை செல்ல அவா கொண்ட என்னிடம்,ரெண்டு ஊருக்கு ஊடால முதைலைங்க கிடக்கு என்று பயமுறுத்தியவர்களின் முகங்கள் நினைவில் பூச்சாண்டி காட்டின.தூக்குச்சட்டியில் நுங்கு கொணர்ந்தது,மரத்தில் ஏற முற்பட்டு விழுந்தது,வண்டி ஓட்ட கற்றுக்கொண்டது தோற்றது- பசுமரத்தாணி.ஸ்ரீபெரும்புதூரை அடைந்த பின் நினைவுகளை விட குமுதம் கொஞ்சம் சுவாரஸ்யமாகப்பட்டது.எவ்வலவு நேரம் தான் கன்னத்தில் கரம் வைத்து முட்டுக்கொடுத்து வேடிக்கை பார்ப்பதைப்போல பாவ்லா காட்டுவது?காற்றின் கைகள் அப்போதுதான் வேலையில் இறங்கின.என் முகத்தினை வறட்சிப்பிரதேசமாக்கி சுத்தமாக உலரவைத்தது.காற்றின் விஸ்வரூபக்கைகளில் மிகவும் காயம் கண்டிருந்த பொம்மை போலிருந்தது என் சிரம்.என் பால்யம் அலாதியாக எல்லாம் இல்லை.எனக்கு கிடைத்த வசவுகள் இவை:அடுப்பு,தயிர்வடை,டியூப்லைட்,தத்தி,எருமை இன்னபிற.ஆனால் என்னைடம் அன்று எக்காளமிட்டவர்களால் இன்று பேசி மாளவில்லை.அவர்களாலேயெ பழக்கப்பட்டு அவர்களையே காயப்படுத்தும் கத்தி நான்.இந்த துர்நினைவுகள் சலனமிட,கொஞ்ச தூரம் வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தேன்.காற்றூ இன்னமும் ஓய்ந்தபாடில்லை.தூரத்து பனைமரங்கள் சாய்ந்தபடி "எங்க அவஸ்தை உனக்கு புரியுதா?"என்று கேட்பது போல இருந்தது.ஊருக்கு செல்லும் குழந்தைகளின் வழக்கமான செயல்களைப்போல அன்றி நான் ஏதேதோ விபரீத கற்பனைகளில் மூழ்கி முத்தெடுத்துக்கொண்டிருந்தேன்.கையிலிருந்த வால்காவிலிருந்து கங்கை வரை-யையும் படிக்க முடியவில்லை.கடந்த முறை வந்துப்ப்யிருந்தபோது ஒரு இழவுக்கு வந்திருந்ததால்,அந்தப்பயணத்தின் ரணங்கள் இன்னுமொருமுறை எனக்கு வலித்தன.ஆறு தெருக்களும்,நூற்றுக்கணக்கான நாராசந்துகளும் நிரப்பிய ஊரின் தொழிலான நெசவின் சாயங்கள் மனதில் ஊறின.சாயடிகளில் பந்துகளை அடித்து அதை தேடி ரகசியமாக கடத்தல்காரர்களைப்போல சென்று வந்ததும்,மாமியின் குழந்தையோடு விளையாடியதும்,விநாகருக்கு கண்கள் பறித்ததும்,தாயபாஸ் ஆடியதும் தெருவில் டயர் உருட்டியதும்,தராசுகளில் விளையாடியதும் என்று எண்ணற்ற ஞாபகங்கள்.அதன் நகைச்சுவையில் சிரித்துக்கொண்டிருந்த என்னை சுற்றியிருதவர்கள் பைத்தியக்காரன் என்று நினைத்திருக்க வேண்டும்.ஊர் அடைந்து டி.வி.டியில் படங்கள் பார்த்தேன்.அதிகம் பேசவில்லை.பாடியின் கைமணத்திலான ஆபங்களை புசித்தபடி நினைவுகளையும் சேர்த்து ஏப்பம் விட்டேன்.ஊருக்கு போஇ வருவது வீண் என்று கற்றுக்கொண்டதோடு இந்த பயணம் முடிவுக்குவந்தது.திரும்பும் தடங்களில் தொலைத்த என் நினைவுகளை சுருட்டிக்கொண்டு மீண்டும் கையிலெடுத்து காகிததில் கொட்டிவிட்டேன்.காற்று அடிக்கிறது

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #102
    Senior Member Diamond Hubber
    Join Date
    Jan 2006
    Posts
    6,074
    Post Thanks / Like
    Quote Originally Posted by VENKIRAJA
    திரும்பும் தடங்களில் தொலைத்த என் நினைவுகளை சுருட்டிக்கொண்டு மீண்டும் கையிலெடுத்து காகிததில் கொட்டிவிட்டேன்.காற்று அடிக்கிறது
    Anbe Sivam

  4. #103
    Senior Member Veteran Hubber VENKIRAJA's Avatar
    Join Date
    Mar 2006
    Location
    Madras
    Posts
    3,285
    Post Thanks / Like
    மீண்டுமொருமுறை முதலிலிருந்து வாசித்துப்பாருங்களேன்,இது பாதசாரியின் திருந்தியபடிவம்,திருத்தியபடிவம்.

  5. #104
    Senior Member Veteran Hubber VENKIRAJA's Avatar
    Join Date
    Mar 2006
    Location
    Madras
    Posts
    3,285
    Post Thanks / Like
    யாத்திரிகன்.

    மலைகளின் உயரத்தைப்போலவே அது தரும் இன்பமும் உயரமான ஒன்றாகவே இருக்கிறது.சென்னை மற்ற நகரங்களிலிருந்து எப்படி வித்தியாசப்படுகிறது என்று வரைபடத்திலிருந்தே நாம் கணிக்கலாம்.ஏறத்தாழ நம் நகரம் ஐந்நிலங்களின் சங்கமம்.கடலிருக்கிறது:மெரீனாவும்,எலியட்ஸும்.வயலிரு க்கிறது:புறநகரில்.ஆங்காங்கே காடுகள் இருக்கின்றன.மேலும் பாலையும் இருக்கிறது.மலை:தாமஸ் மவுண்ட் இருக்கிறது.மலை என்ற பெயரில் முதன்முதலாக எனக்கு அறிமுகமானது என் தலைமுடியை தட்சணையாக பிடுங்கிக்கொண்ட திருப்பதியும்,திருத்தணியும்.ஒன்றாம் வகுப்பை நான் கற்றுக்கொண்டேன்-ஆசிரியைகளோடு மலையொடும்.தாமஸ் மலையின் எதிரில் தான் என் பள்ளி:மேரியன்.குருகுலமும் ஏறக்குறைய ஒரு குன்றுதான்.மொட்டையடிப்பதற்கு டிராவல்ஸ் மார்க்கமாக செல்வோம்,பள்ளிக்கு மாட்டு வண்டியிலும்,ஆட்டோவிலும்.என் இயற்கை குறித்த பார்வைக்காகவோ என்னவொ எனக்கென்று அவதரித்திருந்தது என் குடியிருப்புக்கு அருகில் ஒரு மலை.

    "பெரிதாயும் சில பூக்கள்
    வண்டுக்கும் சிட்டுக்கும் மட்டுமா?
    சிட்டுக்கும் தேன் பிடிக்கும்"
    (உதயஜோதி)

    நெடுஞ்சாலையில் ஆந்தை சத்தங்களையும்,லாரிக்கிறீச்சிடல்களையும் கேட்க ஒவ்வாமல் குறட்டை விடுவது என் வழக்கம்.மலையில் ஏற பாஸ் வாங்கும் போது என் தூக்கத்திற்கு குட் நைட் சொல்லிவிடின் அதற்கப்புறம் கனவுலகு தான்.வாகனத்து(பெரும்பாலும் டிராவல்ஸில் சொல்லித்தான் பயணம் செய்துகொண்டிருந்தேன்,இப்போது தான் ஒரு ஐந்து வருடங்களாக அப்பாவின் கார் அதன் இடத்தை சப்ச்டிட்டியூட் செய்திருக்கிறது.)கண்ணாடியை இறக்கிவிடின் வாகனம் எங்களை ஏற்ற ஏற்ற காதைச்சூழும் காற்றின் குளிர்ந்த கரங்கள்.வழியில் இருக்கும் ஒரு விநாயகருக்காக ஒரேயொருமுறை நிறுத்துவோம்.அதற்கப்புறம் பத்துமணி நேரம் இந்த வெங்கடேஷுக்காக அந்த திருப்பதி வெங்கடேஷ் காத்திருக்க வேண்டும்!மலையுச்சியிலிருந்து கீழே காணின் மொத்த தரையும் பிம்பமாகத் தெரியும்.குறிப்பாக அதை இரவில் கண்டு கண்ணாடியில் விழவைத்து புகைப்படம் எடுக்க ஆசை.சரியாக எனது ஏழாம் வயதிலிருந்து மலையுடன் நண்பனாக இருக்கிறேன்.ஒரு மௌனமான துணையாகவே அவன் இருந்திருக்கிறான்.மலை என்ற பாங்கில் அது வெறும் 134 படிகள் தான்.எனக்கும் 134-க்கும் 143!அஃது சுமாரான ஓர் குன்று.அதைவிட சிறிய குன்றாக்கும் எதிரிலிருப்பது.சின்னக்குன்றின் மீதும் மேலிருப்பதைப்போலவே சின்னதாக ஓர் தேவாலயம் இருக்கும்.ஆலயத்திற்கு கீழே சுமார் 40 படிகள் ஆழத்தில் எனக்கே எனக்கான ஒரு பிரத்தியேக நகரம்,அதாவது பள்ளி.செவ்வக அடைப்புச்சுவர்களும்,விவிலிய வாசகங்களும் நிறைந்த ஒரு கட்டிடம்:அது வெளியாட்களுக்கு.ஆனால் அது ஒரு பட்டாம்பூச்சிப் பண்ணை:எங்களுக்கு.அதைப்பற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன்.அந்த வாசகங்கள் எனக்கு பெரும்பாலும் புரியாமல் இருந்தாலும் கிறித்தவ இடம் என்ற குறியீட்டை தாங்கியபடி அவ்வாசகங்கள் சுவற்றுடன் முத்தம் தந்தபடிக்கு உறைந்து நிற்கின்றன.தேவாலயத்துக்கும்,பள்ளிக்கும் நடுவே இருபத்தைந்து குல்மொஹர் விருட்சங்கள்.மழை மட்டும் பெய்தது என்று வையுங்கள்,குல்மொஹர் மலர்கள் நீரோடு அருமையாக வந்து விழும்.வகுப்புகள் போரடித்தால் பக்கவாட்டு
    ஜன்னல்,என் கண்ணாகிப்போகும்.ஏதேதோ ரம்மியமான வயலின் இசை மனதில் ஊறும்.இப்போது நினைத்தாலும் அப்படியே மெல்லிய உறக்கம் வருகிறது.இன்னும் சொல்வதற்கு மூட்டை நிறைய நினைவுகள் இருக்கின்றன.ஒவ்வொரு முறை எழுதும்போதும்,கொஞ்சம் என் மூட்டை நினைவுகளில் கொஞ்சம் குறைகிறது.எழுதி முடிப்பதற்குள் மூட்டை இரட்டிப்பாகும் அளவு வேறுவேறு நினைவுகள்,நிகழ்ச்சிகள் நிரம்பிவிடுகின்றன.இப்போதைக்கு விடைபெறுதலுக்கு அடையாளமாக ஓர் கவிதை.

    "பாடம் நடந்தது,
    தூக்கம் வந்தது,
    வெளியே பாத்தேன்
    டவர் தெரிந்சிது
    பிடிச்சுப் போச்சு
    பாத்துகிட்டே இருந்தேன்

    பெஞ்ச் மேல் ஏறுன்னு
    சொன்னாங்க மிஸ்.
    இப்போ டவர்
    தெரிஞ்சுது
    இன்னும் நல்லா.
    பிடிச்சுப் போச்சு
    பாத்துகிட்டே இருந்தேன்.

    வெளியே போன்னு
    சொன்னாங்க மிஸ்.
    அவங்கள எனக்கு
    ரொம்ப பிடிக்கும்பா.
    வெளியே போனேன்.
    இப்போ டவர்
    ஃபுல்லா தெரிஞ்சது.
    பிடிச்சுப்போச்சு.
    பாத்துகிட்டே இருந்தேன்.

    ஹெட்மிஸஸ் வந்தாங்க.
    என்னன்னு கேட்டாங்க.
    இன்னன்னு சொன்னேன்.
    அவங்க முட்டாள்பா.
    மிஸ் என்ன
    ஃபனிஷ் பண்ணாங்கன்னு
    சொல்லாறாங்கப்பா."
    -செ.ச.செந்தில்நாதன்(அவரது ப்ளாக்கிலிருந்து)

  6. #105
    Senior Member Diamond Hubber
    Join Date
    Jan 2006
    Posts
    6,074
    Post Thanks / Like
    Anbe Sivam

  7. #106
    Senior Member Veteran Hubber VENKIRAJA's Avatar
    Join Date
    Mar 2006
    Location
    Madras
    Posts
    3,285
    Post Thanks / Like
    பதினாறு வயதினிலே.

    "தங்களை இப்படி
    கிறுக்குத்தனமாக கிறுக்கிய
    யாரைப் பற்றி
    முறையிடுகின்றன சொற்கள்?"
    (காலிஃப்,தமிழில்:கவிக்கோ அப்துல் இரகுமான்)

    முதல் முதலாக அம்புலிமாமா மூலமாக கிட்டிய இலக்கிய ரஸம் குமுதம்,விகடன் வழியாக வளர்ந்தது.மெல்ல சிறு பத்திரிக்கைகள் பக்கம் ஈர்க்கப்பட்டு,தற்போது எங்கள் வட்டத்திலேயே மிக பிரபலமான இலக்கியவாதியாக ஆனது ரொம்ப சந்தோஷம்.நாங்கள் ஒரு பத்து பேர்.இயற்பியல் பீரியட் வந்தின் செமினார் ஹாலுக்கு அழைத்துச்செல்வார்கள்.நாங்கள் எழுதுவது தான் முக்கியமே ஒழிய,என்ன எழுதுகிறோம் என்பதல்ல.அதனால் ஒரே வரிசையில் பத்து பேர் அமர்ந்து ஒரு காகிதம் எடுப்போம்.அப்பக்கம் முழுதும் அந்தாதி எழுதுவோம்,அதுதான் கவிதைக்கு கவிதை.இப்படித் தான் எங்கள் திறமை உரம் சேர்த்துக்கொண்டது.அண்மையில் எங்களது துண்டுப்பிரசுரங்கள் மாட்டிக்கொண்டுவிட குழு தகர்ந்தது.அத்தனை பேரும் கவியியற்றுவதை நிறுத்திக்கொண்டோம்.ஆனாலும் மனதின் ஓரத்தில் சொட்டிக்கொண்டிருக்கும் இலக்கிய சிந்தைகளை இது போன்ற வெவ்வேறு வடிகால்களில் வாய்க்கால்களாக்கிகொண்டிருக்கிறோம்.எழுதாமல் இருப்பது பைத்தியம் பிடித்தது போல் ஆகிவிடுகிறது.நூலகங்களில் முற்றுகையிட்டது,புத்தகக் கண்காட்சிகளில் பேரம் பேசியது எல்லாம் நினைவுக்கு வந்து உயிரை எடுக்கின்றன.பஜ்ஜி மடித்த காகிதத்தில் இருந்த கவிதையை படித்து,பாட்ல்களில் இருக்கும் நயம் பாராட்டுவது என எப்படியோ மனம் கலைந்துவிடுகிறது.உள்ளம் கலைடாஸ்கோப்பாகி நொடியொரு கவிதை எங்கிருந்தோ பறந்து வந்தென் மனக்கிளைகளில் கூடு கட்டிக்கொள்கிறது.இது நேற்று முந்தாநேற்று வந்த பழக்கமல்ல.அத்தனை பேரும் விவாத்தித்த தருணத்தில் தான் நாங்கள் எப்படியோ பத்து வயதிற்குள்ளேயே இலக்கியத்துடன் சம்மந்தப்பட்டிருப்பது தெரிகிறது.உதாரணம்?இதோ:நான் என் முதல் கதையை எழுதிய போது நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்,ஒருவன் மூன்று வயதில் ரஜினியை படம் வரைந்திருக்கிறான்.ஒருவன் தன் தாய்மாமன் காதலிப்பதைப்பார்த்து அதை வைத்து ஒரு கவிதை எழுதியிருக்கிறான் பத்து அகவையில்,இது போல.மு.மேத்த என்னை வெகுவாக பாதித்திருந்தார்,கூடவே அப்துல் இரகுமானும்.ஆனால் நண்பன் வைரமுத்துவின் வைரமுத்துக்களுக்கு நிகராகாது என்பான்.ஒருவன் நாம் அப்படி ஆவோமா என்பான்.ஒருவன் அவர்களைப்பற்றியெல்லாம் எனக்கு தெரியாது,நான் நான் நான்... நான் நல்ல கவிஞன்,எனது நல்ல குணங்கள் எனக்கு தெரியும் என்பான்.எல்லோரும் "யே.."என்போம்.இப்படியாக வளர்ந்து வந்த கவிதைப்பாதை,அவ்வப்போது காதல் பக்கம் தலைவைத்து படுக்கும்,காதல் கவிதைகள் எழுதுவோம்.சினிமா பற்றி கதைப்போம்.புத்தகங்கள் பகிர்வோம்.ரேடியோவிலும்,MP3-யிலும் பாடல்களை கேட்போம்.இசையை காகித்தத்தில் வார்ப்போம்.பழைய பேப்பர் கடைகளில் புத்தகம் வாங்கும் உத்தியை நான் கண்டறிந்தேன்.பள்ளி நூலகத்தில் நல்ல புத்தகங்களை அகழ்வாராய்ச்சி செய்வான் ஒருவன்,பள்ளியின் இதழில் கவிதை எழுதுவான் ஒருவன்.ஆசிரியர் தின வாழ்த்தாக கவிதை எழுதி தப்பித்துவிடுவேன் நான்.இவனை நம்பாதீங்கடா,சரியான் நேரத்தில ஜூட் வுட்டுட்டு எஸ்ஸாயிடுறான் என்பான் ஒருவன்.திடீரென ஒரு crime கதையெழுதி அத்தனைபேரும் கதைக்கு தடம் மாறுவோம்.அதிலும் அந்தாதி தான்.ஒரு வரி நான்,ஒரு வரி நீ...இத்தியாதி.வீட்டிற்கு வருகையிலும் இதே பேச்சுதான்.தூக்கம் வரும் வரை கவிதை பற்றி யோசிப்பேன்.இப்படி பல்வேறு நெறிகளில் மனம் முழுக்க கவிதை ஆக்கிரமித்தது.வெறு வழியே இல்லாமல் அருமையான மதிப்பெண்கள்,வகுப்பிலேயெ first mark,கடைசியிலிருந்து(ஹி..ஹி..ஹி).ஏகப்பட்ட அறிவுரைகள்.அதில் எனக்கு பிடித்தது இதோ:

    "நீ எழுதுறது jam மாதிரி,jam உபயோகப்படணும்னா bread வேணும்.மத்தவங்க எல்லாம் வெறும் breadஓட வாழ்க்கை கசந்து போக வாழ்வாங்க,ஆனா நீ bread-jam ஓட சந்தோஷமா வாழலாம்.ஆனா அதுக்கு bread வேணுமில்லையா?போ போய் ஒழுங்கா படி. jam மட்டும் இருந்தா பைசாவுக்கு பிரயோசனமில்லை"
    (வசந்தா கிருஷ்ணன்,சுவாமீஸ் பள்ளி தலைமையாசிரியை)

    அன்று முடிவு செய்தேன்,அறுவை சிகிச்சை செய்து இந்த நோயை தற்காலிகமாக நீக்குவதென,இன்னும் இரண்டு வாரங்களில் அறுவை சிகிச்சை.

  8. #107
    Senior Member Veteran Hubber VENKIRAJA's Avatar
    Join Date
    Mar 2006
    Location
    Madras
    Posts
    3,285
    Post Thanks / Like
    பிரயாணி.

    "தலை வழுக்கை
    அனுபவச்சீப்பு
    கையில் கிடைத்தபோது."
    (முனைவர்.ம.இளங்கோவன்,நிலாச்சாரல்.காம்)

    அலைந்து அலைந்து ஒருவன் ஒரு மோதிரத்தை வாங்குகிறான் என்று வைத்துக்கொள்வோம்.கைக்கு எடுப்பாக,விலையாக,தரமாக.அதை கொண்டுவருகையில் விபத்தொன்றில் கைகள் போய்விடுகின்றன என்றால் .....அதெ போன்ற நிலை தான் ஏறத்தாழ,எனக்கு.தேர்வுகளோடு குடுமிப்புடி சண்டை போட்டுக்கொண்டிருந்த தருணத்தில் நல்ல் வேளை அடைமழை.சீற்றம் காரணமாக எங்களையெல்லாம் 2.30-க்கெல்லாம் சிஐயினின்று விடுவித்துவிட்டார்கள்.ஆபத்பாந்தவனை ரசித்தபடி நான் வந்துகொண்டேயிருந்தேன் சைக்கிளில் ஓவர்ஸ்பீடாக.சர்வலட்சண யமகண்டத்தில் சைக்கிள் செயின் அறுந்தது.மழை வேகமெடுத்தது,நானோ தள்ளிக்கொண்டுவந்தேன்.5 கீ.மி.ஏற்கனவே மழை பற்றி குறிப்புரை ஒன்று எழுதியிருந்தாலும்,அதையும் தாண்டி முகில்கள் எனக்கு ரசிக்கத்தந்த தருணமிது.

    வானத்தின் நட்சத்திரங்களே மழைத்துளிகளாக பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிக்கொண்டுவர,வகுப்பில் ஒரே "absent sir!" குரல்களின் ஞாபகம்.வாகங்களின் சோற்றுப்பருக்கைகளான பெட்ரோல் துளிகள் தெருவில் மழையோடு சங்கமமாகி ஆங்காங்கெ மைக்ரோ வானவில்கள்,மேகமிட்ட ரங்கோலியாக.எப்பொழுதும் போல சென்னைவாசிகள் தத்தம் பங்குக்கு தாடைகளுக்கு நடுவிலிருப்பது வழியாகவும்,தொடைகளுக்கு இடையில் இருப்பது வழியாகவும் மழை பொழிந்துகொண்டிருந்தார்கள்.ஜென்மாதி ஜென்மங்களாக குளிக்காத தெருநாய்கள் குளித்துக்கொண்டிருந்தன,விண்ணின் ஷவரில்.புயல்மழையில் டீக்கடை விவாதம்,பாராளுமன்றத்தைவிட இரைச்சல் கம்மியாக.சந்தடி சாக்கில் என் சைக்கிளையும் கழுவிய திருப்தி.இரசனைகெட்ட வேலைக்காரிகள் ஜன்னல்களை மூடிக்கொண்டிருந்தார்கள்.பொறுப்பன மின்சாரத்துறையினர் மின்சாரத்தை நிறுத்தி வைத்திருந்தார்கள்.பெருமகிழ்ச்சியில் தங்கள் புன்னகைகளால் பொங்கிவழிந்தன சாகடைகள்.வீட்டுக்குள்ளிருந்த நாய்கலும்,வெளியிலிருந்த நாய்களும் தொகுப்பாளினிகள் பாஷையில் பட்டிமன்றம் நட்ந்துகொண்டிருந்தன.மல்லிகைப்பூகள் பாராஷூட் இன்றி தரையிறங்கி சேற்றோடு கலந்துவிட்டன.யாரும் கண்டுகொள்ளாத பாவப்பட்ட ஜீவனஎன தெருவோர பிள்ளையார் குடையின்றி அழுதுகொண்டிருந்தார்.கரைந்துகொண்டிருந்தது,அவரத ு பக்தர்களுக்காக வைக்கப்பட்டிருந்த விபூதி கரைந்துகொண்டிருந்தது.குதுகலமாக டூயட் பாஅடிக்கொண்டிருந்தன தவளைகள்.மூக்குக்கண்ணாடியை சரி செய்தபடி ரேடியோவை தட்டித்தட்டி கேட்டுக்கொண்டிருந்தார் கடைக்காரர்.கிரிக்கெட் ஆடும் பிள்ளைகளை அபிஷேகம் செய்தது நீலவானஓடை.ரெயின்கோட்டின் பாக்கெட்டுகளில் மழைநீர் சேகரிப்பு நடைபெற்றது.கடிகாரத்தினுள்ளே அத்துமீறி ஆக்க்கிரமித்தன தூறல் துளிகள்.ஏதேதோ காரணங்களால் விசிலடித்தன பறவைகள்.வாகனங்களின் வைப்பர்கள் பெருக்கிக்கொண்டிருந்தன.மரவேர்கள் ஓவர்டைமில் ஸ்ட்ரா போட்டு தண்ணீரை ருசித்துக்கொண்டிருந்தன.அவ்வப்போது டார்ச் அடித்து மழைக்கு வழிகாட்டியது மின்னல்.மழையின் பன்ச்-டயலாக்காக வெளியதிர்கிரது இடி.மக்க்ளால் நிறுத்தமுடியவில்லை மழையையும்,தெருகுழாய்களையும்.அரை நிர்வாணமாக....சீச்சீ சில ஆண்கள்.கவிதைகளை மறந்துகொண்டிருந்தேன் நான்.எறும்பென நகர்ந்தது வாகனநெரிசல்:பாவம் டிராபிக் சார்ஜண்ட்.கொசுக்களுக்கு ரத்ததானம் செய்தபடியே கவிதைகளை மறந்துகொண்டிருந்தேன் நான்.அய்யய்யோ முற்றுப்புள்ளி வைக்க் மறந்துவிட்டேனே

    "மழை வேண்டாம்
    தூறல் போதும்
    மண்வாசனை"
    (மோ.அபிலாஷ்,என் சக கவித்தோழன்)

  9. #108
    Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Vagabond
    Posts
    17,596
    Post Thanks / Like
    Quote Originally Posted by VENKIRAJA
    திரும்பும் தடங்களில் தொலைத்த என் நினைவுகளை சுருட்டிக்கொண்டு மீண்டும் கையிலெடுத்து காகிததில் கொட்டிவிட்டேன்.காற்று அடிக்கிறது
    motha ganamum allathu ganamatra innavendru sollaatha silavum...

    kadaisi iru varigaL kotti vittana.

    plz do spell check.

    konjam spelling mistake irukku. parthukonga.

  10. #109
    Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Vagabond
    Posts
    17,596
    Post Thanks / Like
    Quote Originally Posted by VENKIRAJA
    என் கேள்விக்கென்ன பதில்?
    யாராவது இவற்றுக்கு பதிலளியுங்கள்:

    anonymous:தமிழாக்கம் யாது?

    யாரேனும் "திரைப்படம் தன் வரலாறு கூறுதல்" என்ற தலைப்பில் எழுதுங்களேன்.

    இங்கு எழுதியிருந்த மேற்கோள்களுள் உங்களைக் கவர்ந்தது எது?

    entha mErkoL ai patri kEtkireergaL?

    anonymous : peyarili?

    sounds okei?

  11. #110
    Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Vagabond
    Posts
    17,596
    Post Thanks / Like
    venkiraja,

    your tamizh is extremely concentrated , rich. Probably thats why, not many are able to obsorb themselves with absolute intimacy.

    Yet I cant help but to say, UR TAMIZH is a GIFT for tamizh lovers.

    I would follow up every now and then.

    please keep writing.

    Also, soon enough I wanna reinstall my tamizh fonts.

    appothu naan ungaLukku tamizhil vidai aLippathu innum enakku magizchi aLikkum.

Page 11 of 21 FirstFirst ... 910111213 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •