Page 5 of 39 FirstFirst ... 3456715 ... LastLast
Results 41 to 50 of 384

Thread: TAMIL W0RD DEVELOPMENT

  1. #41
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    Re: PASSION - TAMIL EQUIVALENT

    Quote Originally Posted by sar
    தாபம் என்பதன் ஆங்கிலம் என்ன?

    பரிதாபம் - sympathy - இரக்கம்
    பச்சாதாபம் - empathy
    அனுதாபம் - pity - இரக்கம்
    தாபம் - yearning
    ( source - http://www.tamildict.com/tamilsearch.php)

    தவிப்பு என்பதும் தாபம் என்பதற்கும் உண்டான தொடர்பு
    படிப்பு என்பதும் பாடம் என்பதற்கும் உண்டான தொடர்பைப் போன்றதே அல்லவா இருக்க வேண்டும்!

    தாபம் - PASSION என்று சரியான ஆங்கிலங் கொள்ளலாமா?
    பரிதாபம் - COMPASSION - இரக்கம் - என்றும் சரியாக பொருள் படுகிறது

    தாகம் எனபதும் THIRST/YEARNING என்று பொருள் படுகிறது
    அறிவுத் தாகம் - yearning for knowledge...

    இன்னும் இவற்றில் பகுத்தறிவு தேவை என்று கருதுகிறேன்
    தவி - தாகம், தாபம் முதலான நீங்கள் காட்டிய சொற்களுக்கு எல்லாம், துல்லியமான பொருள் வேறுபாடுகள் உண்டு என்பதை நீங்களே எடுத்துச் சொல்லிவிட்டீர்கள்.
    நன்று. நன்று.
    (இவற்றைப்பற்றி நானேதும் முன் கூறியுள்ளேனா என்று நினைவில் இல்லை. )
    B.I. Sivamaalaa (Ms)

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #42
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    இன்னும் ஒரு விடயம் என்னவென்றால்:

    பக > பகவத் என்ற சொல்லுக்கு ஈடாக பகவன் என்ற தென்சொல்லைப் பாவித்து, அதனோடு கீதை என்ற சொல்லைக் கொண்டு சேர்த்தால், பகவற் கீதை என்று - தமிழ்ப் புணரியல் விதிகளின் படி வரும். இப்போது இப்படிச் செயவது ஒரு புத்தாக்கம் அல்லது புதுமொழிபெயர்ப்பு.

    பழைய பகவத் கீதை என்ற நூலின் பெயர் இங்ஙனம் பிறப்பிக்கப் படடதன்று.

    பகவத் என்பதற்கு நேரான சொல்லைத் தமிழில் தரவேண்டுமென்றால்:

    பக = இறைவன்.
    பக+ அது = பகவது. (இறைவன் > இறைவனது என ஒப்பு நோக்கவும்).

    பகவது = பகவத். அது > அத் > வத் (வகர உடம்படு மெய).

    இப்படி ஒப்பு நோக்கினால் நன்கு விளங்கும்.

    அதனால்தான்: " சங்கதத்தில் புதிராயுள்ளது, தமிழைத் துருவினால் கிடைத்துவிடும் என்று அரவிந்தர் (Sri Aurobindo) கூறினார்.

    ஆனால் இவ்விளக்கம் சங்கத வகுப்பில் கூறப்படமாட்டாது.

    B.I. Sivamaalaa (Ms)

  4. #43
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    "Rawther"

    ராவுத்தர் என்ற சொல் பற்றிச் சில இணைய தளங்களிலும் தாளிகைகளிலும் பேசப்பட்டதுண்டு.

    இது உண்மையில்:

    உரம் +உத்து + அர் = உர + உத்து + அர் = உரவுத்தர்.

    இது பின் உராவுத்தர் > ராவுத்தர் என்று திரிந்தது.

    உரத்திற்கோர் சான்றானவர் என்பது பொருள்.

    உரம் - உடலுரமும் உள்ள உரமும் அடங்கும்.
    உத்து - சான்று.
    அர் - விகுதி.

    இறையருட் பாடல்களில் வரும் இச்சொல்லுக்கு இதுவே பொருள்.

    இரா+யுத்தர் என்று பிரித்து, "இரவில் யுத்தம்் செய்தோர்" என்று பொருள் கூறினோரும் உண்டு. முஸ்லீம் பட்டப்பெயராய் வரும் "ராவுத்தர்" இங்ஙனம் வந்த சொல்லாய் இருக்கக்கூடும். அவ்வாறாயின், இச்சொற்கள் வெவ்வேறு களத்தினின்று தோன்றி ஒரு முடிபு எய்தி, ஒலியொற்றுமைச் சொற்களாய்விட்டன என்று கொள்ளலாம். இவர்கள் குதிரையில் வந்ததால், குதிரைவீரன் என்ற பொருள் ஏற்பட்டதெனலாம்.

    தொடக்கத்தில், அது இந்து வீரர்களைக் குறித்ததென்கிறார் ஒரு வரலாற்றாசிரியர். அது உண்மையாயின், இப்பட்டத்தை முஸ்லீம்கள் பின்னர் மேற்கொண்டிருக்கக்கூடும்.

    உருதுமொழியில், குதிரை என்பது : ghoraa எனப்படும். இச்சொல்லில் கு gho எனத் திரிந்து தி மறைந்துள்ளது. உருது மொழியில் ரவுத் என்ற சொல்லேதும் வழக்கில் உள்ளதாகத் தெரியவில்லை. அரபு - பாரசீக மொழியில் raut̤ (v.n.), Fleeing unto the hills (a wild beast); (for P. rūd) a river. - "குன்று நோக்கி ஓடினவர்" அல்லது "ஆறு" ( நதி) எனப்படுவதால் பொருந்துவதாயில்லை .روع rauʻ (v.n.), Fearing; terror; terrifying; astonishing;--rūʻ, எனவும் பொருளுண்டு. "ராவ்" என்ற இந்தியப் பட்டப்பெயருடன் தொடர்பு கூறலாமோ? தங்கள் பட்டப்பெயர்களெல்லாம் உருது மொழியின என்று கூறிக்கொள்வதில் முஸ்லீம்கள் பெருமை கொள்கிறார்கள். சமஸ்கிருதச் சொற்கள் அவர்கள்தம் உருதுப் பேச்சில் அல்லது எழுத்தில் வரின், நடை தாழ்ந்துவிட்டதென்று நினைக்கின்றனர். ஆகவே தங்கள் பட்டப்பெயர்கள் தமிழென்று சொல்லிக்கொள்ள விரும்பார் என்பது தெளிவு.
    B.I. Sivamaalaa (Ms)

  5. #44
    Member Junior Hubber
    Join Date
    Apr 2005
    Location
    UK
    Posts
    75
    Post Thanks / Like

    Re: PASSION - TAMIL EQUIVALENT

    Quote Originally Posted by bis_mala
    Quote Originally Posted by sar
    தாபம் என்பதன் ஆங்கிலம் என்ன?

    பரிதாபம் - sympathy - இரக்கம்
    பச்சாதாபம் - empathy
    அனுதாபம் - pity - இரக்கம்
    தாபம் - yearning
    ( source - http://www.tamildict.com/tamilsearch.php)

    தவிப்பு என்பதும் தாபம் என்பதற்கும் உண்டான தொடர்பு
    படிப்பு என்பதும் பாடம் என்பதற்கும் உண்டான தொடர்பைப் போன்றதே அல்லவா இருக்க வேண்டும்!

    தாபம் - PASSION என்று சரியான ஆங்கிலங் கொள்ளலாமா?
    பரிதாபம் - COMPASSION - இரக்கம் - என்றும் சரியாக பொருள் படுகிறது

    தாகம் எனபதும் THIRST/YEARNING என்று பொருள் படுகிறது
    அறிவுத் தாகம் - yearning for knowledge...

    இன்னும் இவற்றில் பகுத்தறிவு தேவை என்று கருதுகிறேன்
    தவி - தாகம், தாபம் முதலான நீங்கள் காட்டிய சொற்களுக்கு எல்லாம், துல்லியமான பொருள் வேறுபாடுகள் உண்டு என்பதை நீங்களே எடுத்துச் சொல்லிவிட்டீர்கள்.
    நன்று. நன்று.
    (இவற்றைப்பற்றி நானேதும் முன் கூறியுள்ளேனா என்று நினைவில் இல்லை. )
    தகி - தகிப்பு - தாகம் = yearning/thirst என்பதைப் போல

    தவி - தவிப்பு - என்பதற்கு தாபம் என்ற சொல் etimologically related ஆக இருக்க முடியுமா? என்பது ஆய்தற்குரிய கேள்வி?

    வ என்பது ப என்பதோடு மாறும் குணம் கொண்டது

    எவ்வாறெனின் விவரம் விபரம் இரண்டுமே சரி தான்
    வழங்குவோர் வழங்குபவர் இரண்டுமே சரி தான் இல்லையா?

  6. #45
    Member Junior Hubber
    Join Date
    Apr 2005
    Location
    UK
    Posts
    75
    Post Thanks / Like
    Quote Originally Posted by bis_mala

    இன்னும் ஒரு விடயம் என்னவென்றால்:

    பக > பகவத் என்ற சொல்லுக்கு ஈடாக பகவன் என்ற தென்சொல்லைப் பாவித்து, அதனோடு கீதை என்ற சொல்லைக் கொண்டு சேர்த்தால், பகவற் கீதை என்று - தமிழ்ப் புணரியல் விதிகளின் படி வரும். இப்போது இப்படிச் செயவது ஒரு புத்தாக்கம் அல்லது புதுமொழிபெயர்ப்பு.

    பழைய பகவத் கீதை என்ற நூலின் பெயர் இங்ஙனம் பிறப்பிக்கப் படடதன்று.

    பகவத் என்பதற்கு நேரான சொல்லைத் தமிழில் தரவேண்டுமென்றால்:

    பக = இறைவன்.
    பக+ அது = பகவது. (இறைவன் > இறைவனது என ஒப்பு நோக்கவும்).

    பகவது = பகவத். அது > அத் > வத் (வகர உடம்படு மெய).

    இப்படி ஒப்பு நோக்கினால் நன்கு விளங்கும்.

    அதனால்தான்: " சங்கதத்தில் புதிராயுள்ளது, தமிழைத் துருவினால் கிடைத்துவிடும் என்று அரவிந்தர் (Sri Aurobindo) கூறினார்.

    ஆனால் இவ்விளக்கம் சங்கத வகுப்பில் கூறப்படமாட்டாது.

    அடியேனின் சிறு திருத்தம்...

    பக = இறை
    பகவன் = இறைவன்
    பகவது = இறையது/ இறைவனது

    மற்ற படிக்கு ஓரளவு ஒத்துப் போகிறேன்... தங்கள் விளக்க முயற்றிற்கு நன்றி மிக

    one more thing...

    which Sri Aurobindo you are referring to? Is the same as the Aravindar Ashram in Pondicherry?

    Thanks

  7. #46
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    ;tscii}[quote="sar"]
    Quote Originally Posted by bis_mala
    [color=blue]

    bis_mala wrote:

    þýÛõ ´Õ Å¢¼Âõ ±ýɦÅýÈ¡ø:
    ..........................................

    À¸ = þ¨ÈÅý.
    À¸+ «Ð = À¸ÅÐ. (þ¨ÈÅý > þ¨ÈÅÉÐ ±É ´ôÒ §¿¡ì¸×õ).

    À¸ÅÐ = À¸Åò. «Ð > «ò > Åò (Ÿà ¯¼õÀÎ ¦ÁÂ).

    þôÀÊ ´ôÒ §¿¡ì¸¢É¡ø ¿ýÌ Å¢ÇíÌõ.

    «Ê§ÂÉ¢ý º¢Ú ¾¢Õò¾õ...

    À¸ = þ¨È
    À¸Åý = þ¨ÈÅý
    À¸ÅÐ = þ¨ÈÂÐ/ þ¨ÈÅÉÐ

    ÁüÈ ÀÊìÌ µÃÇ× ´òÐô §À¡¸¢§Èý... ¾í¸û Å¢Çì¸ ÓÂüÈ¢üÌ ¿ýÈ¢ Á¢¸

    one more thing...

    which Sri Aurobindo you are referring to? Is the same as the Aravindar Ashram in Pondicherry?

    Thanks
    À¸ ±ýÀÐ ºí¸¾î ¦º¡ø: «¾üÌ «ý Ţ̾¢ þøÄ¡Á§Ä þ¨ÈŨÉì ÌÈ¢ìÌõ. «ý Ţ̾¢ §º÷ì¸×õ ÓÊ¡Ð. ²¦ÉýÈ¡ø ºí¸¾ ¦Á¡Æ¢Â¢ø "«ý" ¬ñÀ¡ø Ţ̾¢ ¸¢¨¼Â¡Ð.

    À¸ ±ýÈ ¦º¡ø ¾Á¢Æ¢ø þø¨Ä.

    À¸Å¡ý ºí¸¾ ÅÊÅõ. ¾Á¢Æ¢ø ÅóÐ ÅÆíÌÅÐñÎ.

    À¸Åý ±ýÀÐ ¾Á¢ú¡ø; «ý Ţ̾¢ ¦ÀÈ¡Å¢ð¼¡ø "À¸×" ±ýÚ ÅóÐ, "À̾¢" ±ýÚ ¦À¡ÕûÀÎõ. þ¨ÈŨÉì ÌȢ측Ð. «ý Ţ̾¢ ¦ÀüÚô À¢ý þ¨ÈŨÉì ÌÈ¢ìÌõ.

    À¸Åò ±ýÈ ¦º¡øÅÊÅõ ºí¸¾¦Á¡Æ¢Â¢Û¨¼ÂÐ. ¾Á¢Æ¢ø ÅóÐ ÅÆíÌÅÐñÎ.

    þÕ¦Á¡Æ¢ìÌõ þÄ츽 §ÅÚÀ¡Î¸û ¯ûÇÉ.

    ¿¡ý ´ôÀ¢ðÎì ¸¡ðÊÂÐ ºí¸¾î ¦º¡ü¸¨Ç. ±Ç¢¾¢ø ÒâóЦ¸¡ûžü¸¡¸.

    þ¨¾ ¿ýÌ ¸ÅÉ¢òÐ ´ôÀ¢¼×õ.

    «ÃÅ¢ó¾÷ ±ýÈÐ «Å¨Ãò¾¡ý.

    þô§À¡Ð Å¢Çì¸õ ¦¾Ç¢Å¡Â¢ÕìÌõ ±ýÚ ¿õÒ¸¢§Èý. ¿ýÈ¢.
    [/tscii]
    B.I. Sivamaalaa (Ms)

  8. #47
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    p>b>v interchangeability

    [quote="sar"]
    Quote Originally Posted by bis_mala
    Quote Originally Posted by sar
    தாபம் என்பதன்........................................... ................
    நன்று. நன்று.
    (இவற்றைப்பற்றி நானேதும் முன் கூறியுள்ளேனா என்று நினைவில் இல்லை. )
    தகி - தகிப்பு - தாகம் = yearning/thirst என்பதைப் போல

    தவி - தவிப்பு - என்பதற்கு தாபம் என்ற சொல் etimologically related ஆக இருக்க முடியுமா? என்பது ஆய்தற்குரிய கேள்வி?

    வ என்பது ப என்பதோடு மாறும் குணம் கொண்டது

    எவ்வாறெனின் விவரம் விபரம் இரண்டுமே சரி தான்
    வழங்குவோர் வழங்குபவர் இரண்டுமே சரி தான் இல்லையா?
    வ - ப திரிபுபற்றி நீங்கள் கண்டுபிடித்தது உண்மைதான்.

    இந்த வ-ப மற்றும் ப-வ திரிபுகள் பல உலக மொழிகளில் உண்டு. தமிழிலும் உளது.

    பெங்கால் - வங்காளம்.
    பீஷ்மன் - வீமன்.
    பைபிள் - விவிலியம்.
    மாவலி -( மகாபலி )- பாலி.( இந்தோனேசியா)
    சேவை - sebok (busy)
    வா அழை - balek
    மலைவாரம் - Malabar
    வ(ல்)லவன் - balawan(t)
    நக்கவாரம் - Nicobar
    வில் (விலை) -bill *
    பகு - வகு
    வ - ba (usually confounded in Skrt)
    பாஷ்கலா - வாஸ்கலா
    பாஷ்பா - வாஷ்பா
    பஸ்தி - வஸ்தி
    வேல் - Belu (Akkd) Baal (Hebrew) * ("Lord)

    வாய்க்கு வந்தவை இத்தனை என்றால், தேடிப்பார்த்தால் ப்ல்லாயிரம்!!

    * ஆய்வுக்குரியது.

    உஙகள் ஆய்வு முடிவுகளை இங்கே நேயர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
    B.I. Sivamaalaa (Ms)

  9. #48
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    ka > va interchangeability

    * பேச்சு வழக்கு

    மகன் > மவ(ன்) * > மய(ன்) * > மோன் *

    தகப்பன் > தவப்ப(ன்) * > தோப்ப(ன்) * தோப்பனார்

    சிகப்பு > சிவப்பு > சோப்பு *்
    B.I. Sivamaalaa (Ms)

  10. #49
    Member Junior Hubber
    Join Date
    Apr 2005
    Location
    UK
    Posts
    75
    Post Thanks / Like

    ஒப்பா&

    உஙகள் ஆய்வு முடிவுகளை இங்கே நேயர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

    ப(pa) என்பது ஹ என்பதோடு மாறும் குணம் கொண்டது என்று தங்களுக்கு தெரிய வந்திருக்க கூடுமோ என்று வியக்கிறேன்!!!

    ஆனால் தமிழோடு என்று மட்டும் இல்லை தமிழோடும் கன்னடத்தோடும்...

    எவ்வாறெனின்...

    கன்னடத்தில்
    ஹாலு என்பதற்கு பால் என்பது தமிழ்ச சொல்.

    ஹாவு என்றால் பாம்பு

    இம்மாதிரி பல இருக்கக் கூடும்

    ப(ba) வ தொடர்பையும் காணலாம்

    பேடா என்றால் வேண்டாம்

    பா என்றால் வா

    பாளே என்றால் வாழை

    திராவிட மொழி ஒப்பாய்வுகளுள் இவை கண்டு கொள்ளப் பட்டிருக்கலாமோ என்று எண்ணுகிறேன்.

  11. #50
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    good

    Quote Originally Posted by sar
    உஙகள் ஆய்வு முடிவுகளை இங்கே நேயர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

    ப(pa) என்பது ஹ என்பதோடு மாறும் குணம் கொண்டது என்று தங்களுக்கு தெரிய வந்திருக்க கூடுமோ என்று வியக்கிறேன்!!!

    ஆனால் தமிழோடு என்று மட்டும் இல்லை தமிழோடும் கன்னடத்தோடும்...

    எவ்வாறெனின்...

    கன்னடத்தில்
    ஹாலு என்பதற்கு பால் என்பது தமிழ்ச சொல்.

    ஹாவு என்றால் பாம்பு

    இம்மாதிரி பல இருக்கக் கூடும்

    ப(ba) வ தொடர்பையும் காணலாம்

    பேடா என்றால் வேண்டாம்

    பா என்றால் வா

    பாளே என்றால் வாழை

    திராவிட மொழி ஒப்பாய்வுகளுள் இவை கண்டு கொள்ளப் பட்டிருக்கலாமோ என்று எண்ணுகிறேன்.
    நல்ல ஆர்வத்துடன் செயல்படுவது தெரிகிறது. நன்று.

    இப்போது "பகு" என்பதையே பார்ப்போமே!

    Kurukh: paxna
    Malto: pakme
    Kuruba bata (cf)
    Telugu payu

    பகு > பகல் > பால்

    Tamil. pa-l part, portion, share, section, dividing; எ-டு: அறத்துப்பால்
    (pa-n_mai : portion, share; nature.)
    Malayalam. pal part.
    Kodagi (?). palm (obl. palt-) portion, division.
    Toda. polm (obl. polt-) share; subdivision of patrilineal sib.
    Kannada: . pal

    ஆங்கிலம்: part.

    பாற்று = பார்ட் (ஆங்.) ?

    பால் + து = பாற்று.

    வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
    தானமிழ்தம் என்றுணரற் பாற்று (திருக்.)

    இன்னும் ஏனை மொழிகளிலும் தேடிக் கண்டுபிடித்தால், ஒரு வேளை பயனுடைய நல்ல கருத்து உருவாகலாம்.

    திராவிடமொழி ஒப்பாய்வுகள் சென்ற 150 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இப்போது எண்ணிறந்த நூல்களும் கட்டுரைகளும் உள்ளன.
    பல ஆய்வு நிலையங்களும் செயல்படுகின்றன.

    உங்கள் கருத்துகளைக் கேட்க ஆவல்.

    B.I. Sivamaalaa (Ms)

Page 5 of 39 FirstFirst ... 3456715 ... LastLast

Similar Threads

  1. Evolution of Saivaism and it's development in Tamil Nadu
    By virarajendra in forum Indian History & Culture
    Replies: 134
    Last Post: 23rd February 2017, 08:27 PM
  2. Replies: 27
    Last Post: 13th January 2017, 11:47 AM
  3. Is SC's verdict on reservation good for our development ?
    By Punnaimaran in forum Miscellaneous Topics
    Replies: 234
    Last Post: 5th January 2013, 04:15 PM
  4. Is this development?Your views on this news article.
    By ssanjinika in forum Miscellaneous Topics
    Replies: 1
    Last Post: 4th October 2005, 12:19 PM
  5. Dams - Temples of doom or development?
    By jaiganes in forum Miscellaneous Topics
    Replies: 20
    Last Post: 8th April 2005, 08:51 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •