Page 3 of 39 FirstFirst 1234513 ... LastLast
Results 21 to 30 of 384

Thread: TAMIL W0RD DEVELOPMENT

  1. #21
    Devoted Hubber sundararaj's Avatar
    Join Date
    Nov 2006
    Location
    BANGALORE
    Posts
    382
    Post Thanks / Like
    ¾Á¢Æ¢ø ¾ð¦¼¦Æò¾¢¼ ¸üÚ ÅÕ¸¢§Èý.....

    ¿øħ¾¡÷ ¾¢Ã¢¨Âì ¸ñ§¼ñ
    ¿¡ýÁ¸¢ú Ũ¼¸¢ý §Èý
    ¦º¡øĦšýÉ¡ ¦ÀÕ¨Á ¾Á¢ú
    ¦º¡ø¦¾¡ýȢ Ţ¾õ ¸ñÎ.
    Žì¸õ.
    Liberty is my religion. Liberty of hand and brain -- of thought and labor. Liberty is the blossom and fruit of justice -- the perfume of mercy. Liberty is the seed and soil, the air and light, the dew and rain of progress, love and joy.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #22
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    Here in another explanation by a researcher:

    [
    color=blue]அன்ன, ஏய்ப்ப, உறழ, ஒப்ப, என்ன, மான, ஒன்ற, ஒடுங்க, ஒட்ட, ஆங்க, என்ற, வியப்ப, எள்ள, விழைய, இறப்ப, நிகர்ப்ப, கள்ள, கடுப்ப, காய்ப்ப, மதிப்ப, தகைய, மருள, மாற்ற, மறுப்ப, புல்ல, பொருவ, பொற்ப, போல, வெல்ல, வீழ, நாட, நளிய, நடுங்க, நந்த, ஓட, புரைய

    என முப்பத்தாறு உவம உருபுகளைத் தொல்காப்பியம் உவமயியல் நூற்பா 1232 -ல் காட்டும். model என்பதற்கான இணைச் சொல்லை இதற்குள் காண வேண்டும்.

    படிமம் என்பது படி என்பதின் பெரியது. படி என்பது copy. copy-யும் model-உம் ஒன்றாகாது. copy என்பது அப்படியே அச்செடுத்தாற் போல் உள்ளது. அதனுடைய பொதுமை அலகு மாறலாம். அதாவது அரைமடங்கு, 12% copy ஆக இருக்கலாம். ஆனால் ஒரு உறுப்புக்கும் இன்னொரு உறுப்புக்கும் இருக்கும் உள்ளக அளவீடுகள் (internal measurements) மாறக் கூடாது. ஒரு படிமத்தில், நெஞ்சிற்கும் தொப்பூழுக்கும் உள்ள அளவீடு, தேர்ந்தெடுக்கப் பட்ட ""சாமுத்ரிகா" இலக்கணத்தில் இருந்து மாறக் கூடாது.

    ஆனால் model என்பது (அது பூதப் பொருளாய் இருந்தாலும் சரி, மெய்ப்பொருளாய் இருந்தாலும் சரி, கருத்துப் பொருளாய் இருந்தாலும் சரி) அங்கே சில பண்புகளை முன்னிறுத்தி, மற்றவற்றை ஒதுக்கிச் செய்கிறோம்.

    காட்டாக unidimentional object என்ற ஒரு பரிமானப் பொருளைப் பற்றிப் பார்ப்போம். இயற்கையில் நாம் பார்க்கும் ஒரு பொருள் கூட, ஒரு பரிமானப் பொருள் கிடையாது. இருந்தாலும் ஒற்றைப் பரிமானப் பொருள் என்ற model நமக்கு அறிவியலில் தேவைப் படுகிறது.

    அதே போன்று ideal gas என்பதும் ஒரு model தான். இருப்பதிலே பலக்கைத் (எல்லாம் ஒன்று கூடிய பலவிதமாய் - complex) தோற்றம் காட்டாத ஓர் எளிய கருத்தியல் வளி (ideal gas).

    model பற்றி முன்பு எப்பவோ எழுதிய நினைவு. சட்டென்று அந்தக் கட்டுரை நினைவுக்கு வரவில்லை.

    மாத்தல் என்பது அளவுதலே., மாத்தல், மாதித்தல், மானித்தல் எல்லாமே அளவுதலே. எவ்வளவு என்பதை வட ஆர்க்காட்டு மாவட்டத்தார் எம் மாத்தம் (மாத்திரம்) என்று கேட்பார்கள்.

    மாத்தி என்பதும் அளவிடப் பட்டதே. வடமொழிப் பலுக்கால் மாத்தி மாத்ரி>மாதிரி என்று ஆயிற்று. இங்கே வடமொழிப் பலுக்கைத் தவிர்க்கலாம் என்றாலும் மாதித்தல் என்ற வினையை ஒட்டிய மாதம் (month) என்னும் சொல் கருதி இந்தத் திரியை அப்படியே (தெரிந்த வண்ணமே) ஏற்றுக் கொள்ளலாம்.

    Model - மாதிரி, modelling - மாதிரித்தல்

    பாவாணர் model என்பதற்குப் போல்மம் என்றும் சொன்னார். அது போல்மை>பொம்மை போன்றது. 65-70 களில் போல்மத்தைப் பெரிதும் பயன்படுத்திப் பொறியியற் கட்டுரைகளைக் கோவை நுட்பியற் கல்லூரியில் நாங்கள் எழுதினோம். இப்பொழுது அதைப் பரிந்துரைப்பதைக் காட்டிலும், மாதிரியையே பொருத்தமாகப் பயன்படுத்தலாம் என்று தென்படுகிறது.

    http://valavu.blogspot.com/2006/10/3.html[/color]
    B.I. Sivamaalaa (Ms)

  4. #23
    Devoted Hubber sundararaj's Avatar
    Join Date
    Nov 2006
    Location
    BANGALORE
    Posts
    382
    Post Thanks / Like
    very good info...thanks.
    Liberty is my religion. Liberty of hand and brain -- of thought and labor. Liberty is the blossom and fruit of justice -- the perfume of mercy. Liberty is the seed and soil, the air and light, the dew and rain of progress, love and joy.

  5. #24
    Member Junior Hubber
    Join Date
    Apr 2005
    Location
    UK
    Posts
    75
    Post Thanks / Like
    Can any one tell whether the Tamil word "kaNdu" means in any way to English word 'Crystal', if not what would be the relevant word for crystal in tamil??

  6. #25
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    crystal= padikam
    "அன்பே சிவம்.

  7. #26
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    thennai - thengku

    தென்னை மரம்பற்றிய சொற்கள்
    ----------------------------

    தென்னை என்ற மரப்பெயரில், ஈற்றில் நின்ற "ஐ" விகுதியாகும். எனவே. சொல்லின் பகுதி: "தென்" என்பதே.

    தென் என்ற அடிச்சொல், தென் திசையையும் குறிப்பதால், தென்னை தமிழ் நாட்டின் தெற்கிலிருந்து கொண்டுவரப்பட்ட மரமென்பர். அது நிற்க:

    தென் > தென்னை.

    தென் > தெங்கு. (தென்+கு > தெங்கு.)

    திசையைக் குறிக்கும் தென்+கு என்ற புணர்ப்பு "தெற்கு" என்று வர, மரத்தைக் குறிக்கும் தென்+கு என்பது தெங்கு என்றானது.

    இதிலிருந்து என்ன தெரிகிறது? சொல்லாக்கத்தில் வெவ்வேறு சொற்களைப் படைக்க, வெவ்வேறு வழிகள் பின்பற்றப்படுகின்றன என்பதுதான்.
    இவற்றைக் கூர்ந்து கவனிக்காமல், வாதங்கள் செய்வதில் பயனில்லை.

    இதை இப்படிக் காட்டாமல், மாற்றுவழியாக:

    தென் > தெம் > தெங்கு எனலாம்.

    இது ஓர் உத்திதான்.

    தெங்கு+ காய் = தேங்காய்! தெங்குக்காய் என்று வரவில்லை! ஏன் வரவில்லை ? (ஆனால் தெங்கங்காய் என்று கவிதையில் வரும்).

    தெம் என்ற திரிபு அடியின் முதல் நீண்டது என்று சொல்லலாம்.

    தென்காய் > தேன்காய் > தேங்காய் ஆகலாமே! அப்படியானால் இடையில் ஏன் தேன் வழிகிறது என்று கேட்கத் தோன்றுகிறதா?

    தென் > தெம் > தேம் > தேம்+காய் > தேங்காய் என்று மடக்கலாம். அதுவும் ஒரு தந்திரம்தான்.

    தென்னை+தோப்பு , இது தென்னைத் தோப்பு என்று வராமல் தென்னந்தோப்பு என்றன்றோ வருகிறது.

    "தெங்கு நீண்டு ஈற்றுயிர் மெய்கெடும் காய்வரின்" -- நன்னூல், 186.
    B.I. Sivamaalaa (Ms)

  8. #27
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    kaRpuuram or karppuuram?

    கற்பூரமா கர்ப்பூரமா?

    சிலர் இப்படியும் சிலர் அப்படியும் எழுதுகின்றனர்.

    அடிச்சொல் யாது?
    B.I. Sivamaalaa (Ms)

  9. #28
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    மேற்கண்ட கேள்விக்குப் பதில்:

    இச்சொல் கற்பூரமென்றும் கர்ப்பூரமென்றும் இரு விதமாகவும் எழுதப்படலாம். இரு வடிவங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
    B.I. Sivamaalaa (Ms)

  10. #29
    Member Junior Hubber
    Join Date
    Apr 2005
    Location
    UK
    Posts
    75
    Post Thanks / Like
    Quote Originally Posted by bis_mala
    மேற்கண்ட கேள்விக்குப் பதில்:

    இச்சொல் கற்பூரமென்றும் கர்ப்பூரமென்றும் இரு விதமாகவும் எழுதப்படலாம். இரு வடிவங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
    'கற்பூரம்' என்பதே செந்தமிழ் இலக்கண விதியின் படியது;
    மற்றது ஒருவாறு ஏற்றுக் கொள்ளப் பட்டாலும் it is non-standard Tamil; this is my point of view;

  11. #30
    Member Junior Hubber
    Join Date
    Apr 2005
    Location
    UK
    Posts
    75
    Post Thanks / Like
    தென்காய் > தேன்காய் > தேங்காய்
    இது பேச்சு வழக்கில் ஏற்பட்ட மருவுதல் என்றே கொள்ள வேண்டும்; இன்னும் தெலுங்கில் தென்காய் என்றே வழங்கி வருகிறதைக் கேள்விப் பட்டிருக்கிறேன்.

Page 3 of 39 FirstFirst 1234513 ... LastLast

Similar Threads

  1. Evolution of Saivaism and it's development in Tamil Nadu
    By virarajendra in forum Indian History & Culture
    Replies: 134
    Last Post: 23rd February 2017, 08:27 PM
  2. Replies: 27
    Last Post: 13th January 2017, 11:47 AM
  3. Is SC's verdict on reservation good for our development ?
    By Punnaimaran in forum Miscellaneous Topics
    Replies: 234
    Last Post: 5th January 2013, 04:15 PM
  4. Is this development?Your views on this news article.
    By ssanjinika in forum Miscellaneous Topics
    Replies: 1
    Last Post: 4th October 2005, 12:19 PM
  5. Dams - Temples of doom or development?
    By jaiganes in forum Miscellaneous Topics
    Replies: 20
    Last Post: 8th April 2005, 08:51 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •