Page 22 of 39 FirstFirst ... 12202122232432 ... LastLast
Results 211 to 220 of 384

Thread: TAMIL W0RD DEVELOPMENT

  1. #211
    Member Junior Hubber
    Join Date
    Apr 2005
    Location
    UK
    Posts
    75
    Post Thanks / Like
    எனது கருத்து முந்தைய இடுகையின் படி இது தான்...

    ஆனால் எனக்கு ஒரு சந்தேஹக் கருத்து உண்டு... உலகத்தின் வெவ்வேறு மூலைகளில் உருவாகியுள்ள 'உயர் தனிச் செம்மொழிகள்' ஒன்றை ஒன்று சாராமல் வளர்ந்திருக்கலாமே... ஏன் ஒன்றிலிருந்து மற்றொன்று தான் தோன்றி இருத்தல் தான் அவசியமா என்ன?
    இரு மொழிகட்குள் பொதுச்சொற்கள் இருப்பின் பின் காலத்தால் ஏற்பட்ட கலாச்சாரப் பரிமாற்றத்தாலும் (due to people migration from north to south & vice versa) வேறு தாக்கங்களாலும் மொழி வல்லுனர்களின் இரு மொழிகளின் கூட்டுப் பயன்பாட்டினாலும் ஏற்பட்டிருக்கக் கூடும் என்பது எளிதில் ஏற்கக் கூடியது என்று கொள்கிறேன்...

    If there are common words, then it does not necessarily mean one has to be the soley parental to other...


    mostlikely my point of view: Sanskrit(Prakrit derived) & Tamil(proto dravidian derived) are independently originated classical Parental languages of Indian Subcontinent


    This point seems more logical sense to me... just by observing the absence of sound patterns from one another as a starting argument

    இவ்வாறே பார்க்கின், கிரேக்க-லத்தீன் செம்மொழிகள்... இவை சமஸ்கிருதத்துடனே தொடர்பு படுத்தி இந்தோ-ஐரோப்பிய என்று வழங்கப்படும் கூற்றிற்கும் மாறுபாடு கருதி.... தனியே உதித்த உயர்தனிச் செம்மொழிகள் என்று ஏன் ஏற்றுக் கொள்ளலாகாது? என்று எண்ணி வியக்கிறேன்...

    நம் மொழியில் உள்ள பிரசித்தி பெற்ற சித்தர் பாடல் ஒன்று - இதையும் கவனிக்க வேண்டும் எனக் கருதுகிறேன்...

    59.
    பண்டிதர் ஆவார் பதினெட்டும் பாடையும்
    கண்டவர் கூறும் கருத்தறி வார்என்க
    பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையும்
    அண்ட முதலான் அறஞ்சொன்ன வாறே. ௩

    Interpretation meaning of this poem is clearly indicating that...
    God of the Universe dictated for humanity the formation of 18 classical languages around the world for the purpose of pandits/linguists to learn everything by meeting other linguists by exchanging their views, opinions, theories and ideas...etc

    hence strictly according to this stanza it is evident that: these languages are independent classical languages created by God's Command (Tamil is one among them like Sanskrit, Chinese, Greek/Latin etc)

    எந்தளவிற்கு என் பார்வைக் கருத்து ஏற்றுக் கொள்ளக் கூடியது என்பதையும் தாங்கள் சற்று முன்மொழிந்தால் நன்றாக இருக்கும்...
    மிகவும் நன்றி...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #212
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    concoctions

    உங்கள் கொள்கை மெச்சத்தக்கதுதான்.

    இருப்பினும், மொழிபேசுவோர், ஒரு கூட்டத்தார் இன்னொரு கூட்டத்தாருடன், கலந்து உறவாடினர் என்று பழந்தொடர்பு பாராட்டினால், அதனால் ஒற்றுமை உருவாகும், வேற்றுமைகள் மறையும் என்பதால், இதனை மொழித்தொடர்பு வழியாகக் காட்டுவதையும் பல அரசாங்கங்கள் ஊக்குவிக்கின்றன.

    மொழிநூலார் கூறிய "ஆரிய மொழித் தொடர்புகளை" நம்பி, இட்லர் போர்துவக்க, "நாமும் ஆரியரே" என்று நம்பிய ஈரானிய மன்னர் பாலவி, "பெர்சியா"என்ற பெயரை ஈரான் என்று மாற்றிக்கொண்டதுடன், இட்லருக்குச் சார்பாகப் பேசி, நேச நாடுகளால் தாக்கப்பட்டு நாடிழந்து,பதவியிழந்து அல்லல் உறவேண்டியதாயிற்று..

    "பொய்ம்மையும் வாய்மை இடத்த, புரைதீர்ந்த
    நன்மை பயப்ப தெனின்".

    பலரிடம் இந்தக் கொள்கை குடிகொண்டுள்ளது.

    தொடர்பு காட்டுவதும் நன்மைக்கே.

    அதனால் தீமை ஏதும் ஏற்பட்டுவிடாது என்பர்.

    சங்கதம் வெளி நாட்டினர் மொழி என்றகொள்கை
    பரவலாக இருந்துவருகிறது.

    மேலே கொடுக்கப்பட்டுள்ள "பாக்லிங்க்"கில் போய்ப்பாருங்கள்....Posted: Sat Nov 06, 2010 4:08 am
    B.I. Sivamaalaa (Ms)

  4. #213
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    Skrt Ind. language

    ஒவ்வொரு மொழியும் தற்சார்பு உடைய செம்மொழி என்று ஏற்றுக்கொள்வதில் தொல்லை ஒன்றும் இருக்காது - ஒரு செம்மொழிக்குரிய தகுதி உடைமையைப் புலவர் ஏற்கத்தக்க நிலை அம்மொழியில் இருக்குமாயின்.

    ஒரு சொல் எந்த மொழிக்குரிய சொல் என்பதைப் பணிப்பெண் முதல் பாவலர் வரை பேசிக்கொண்டிருப்பதற்குக் காரணம், பேசும் மொழி, பேசுகிறவர்க்குத் தொடர்புடையதாக இருப்பதுதான். அது அறுக்கலாகாத தாலிக்கயிறு கட்டப்பெற்றது போன்ற
    நிலை என்று சொல்லத் தோன்றுகிறது!

    சமஸ்கிருதம் இந்திய மொழி. நம்முடையது. அதை இந்தோ ஐரோப்பிய மொழி என்று ஐரோப்பியர் சொந்தம் கொண்டாடினால், நாமென்ன செய்வது? அதை ஓர் அல்லது அதற்கு மேற்பட்ட வெள்ளை இனத்தவர்கள் பேசிக்கொண்டு துணைக்கண்டத்தில் நுழைந்தார்கள் (AIT, AMT) என்றல்லவா அவர்கள் தெரிவியல் (theory) அமைக்கிறார்கள்.

    ஆனால் வரலாற்றுப் பேராசிரியர் ரோமிலா தாப்பார் இதை ஒப்புக்கொள்ளவில்லை.சமஸ்கிருதத்தில் அயல் மொழிச் சொற்கள் வந்து வழங்கினால்,, அதை வைத்து அது அயல் மொழி என்று கூறுதல்கூடாது என்று அவர் கூறுவதாகத் தெரிகிறது.

    Notes on Discussions
    I could not understand one thing- Hindi has less in common with sanskrit and South Indian Languages are closer to sanskrit.
    Then how did researchers brand one language group as Aryan and the other as Dravidian?
    http://www.topix.com/forum/religion/...NAKNHEPCLV11VM
    B.I. Sivamaalaa (Ms)

  5. #214
    Member Junior Hubber
    Join Date
    Apr 2005
    Location
    UK
    Posts
    75
    Post Thanks / Like
    சமஸ்கிருதம் மக்கள் நாவை விட்டு நழுவிப் போனதற்குக் காரணம்... பண்டிதர்களின் ஆணவக் கர்வப் போக்கே தான் என்று கருதுகிறேன்... அதற்கு சாதி சமய வேறுபாடுகளும் துணை போயினவே ஒழிய மற்ற படிக்கு மொழியைக் குறை கூற இயலாது... பின்பு அலசுவோம். நன்றி


    Notes on Discussions
    I could not understand one thing- Hindi has less in common with sanskrit and South Indian Languages are closer to sanskrit.
    Then how did researchers brand one language group as Aryan and the other as Dravidian?
    http://www.topix.com/forum/religion/...NAKNHEPCLV11VM

    மற்றபடி ஆரியம் ஆரியம் என்கிறார்கள்... ஆரிய மன்னன் என்ற சொல்லாட்சி தொல்காப்பியத்திலும் வரும் என்பதை நான் பார்த்து இருக்கிறேன்... அது மத்தியக் கிழக்கு மக்கள் (immigration of race population) இனத்தைக் குறிப்பதா? என்பதே எனக்குப் பெரிய கேள்வியாக இருக்கிறது... ஏனெனின்... சேர மன்னன் என்ற சொல் சேர தேசத்தில்/வம்சத்தில் ஒரு மன்னன் என்று பொருள்... அவ்வாறே சோழ மன்னன், மௌரிய வம்சம், சூரிய வம்சம், போன்றவை... ஆரிய வம்சம்/தேசம் என்பது போன்ற இந்தியாவின் ஒரு வம்சத்தை அல்லது சிறு நாட்டைக் குறிக்கும் சொல்லாக ஏன் இருந்திருக்கக் கூடாது... என்பது ஒரு வகைக் கண்ணோட்ட கேள்வி எழுந்துள்ளது... உண்மையில் ஆரிய மொழி என்று ஒன்று சரித்திரத்தில் (சரித்திர ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதா?) சமஸ்க்ருதத்துடன் தொடர்புபடுத்திக் குறிப்பிடப்பட்டுள்ளதா...? என்று சந்தேஹம் எழுந்துள்ளது... அவ்வாறே உண்மையாக இருக்கலாம் ஆனால் சரியான தெளிவு இல்லை...
    சிவமாலா அவர்களே - தாங்கள் சற்று தங்களுக்கு தெரிந்ததைக் கூறினால் ஐயம் நீங்கிய படி இருக்கும்... நன்றி மிக்க

    அதே போன்று திராவிடம் என்னும் சொல்லாட்சி (SouthIndia languages) தென்னிந்திய இன மொழிகளைக் குறிக்கும் சொல்லா...? அல்லது அதன் உண்மையான அர்த்தம் 'தமிழ்' என்பதன் மருவல் மட்டுமே தானா? சரியான தெளிவில்லை...

    மற்றபடி - ஆம்... இந்தி மொழி சமஸ்கிருதத்தை விடவும் பார்சி மொழியுடன் (PERSIAN) அதிகத் தொடர்புடையதாக இருக்க வேண்டும் என்பதே நிதர்சனமான உண்மை என்று கருதுகிறேன்...

    நன்றி

  6. #215
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    ichchai

    Whilst thinking how to give a brief but comprehensive reply to Mr Sar, here is something in the interim.

    இசிவு என்பதை இழுக்கப்படுதலைக் குறிக்கும்.

    அடிச்சொல் "இசி" என்பது. இது இழு என்பதனோடு தொடர்புடைய சொல்லே.

    கைகால் ஒரு பக்கமாக இழுக்கப்படுவது இசிவு என்பதேபோல், மனமும் ஒன்றன்மேல் ஒரு பக்கமாக இழுக்கப்படலாம்.

    இசி - இச்சி.

    இசி - இச்சி - இச்சி+ஐ = இச்சை.

    இச்சி+அகம் = இச்சகம்.

    இச்சித்தல் ( இச்சி : வினைச்சொல்)

    compare:

    மனத்தை ஒன்றன்மேல் இடுதல் இட்டம்: இடு+அம்.

    இடு (வினைச்சொல்); இட்டு, இட்ட (எச்சவினைகள்).

    Incline, inclination.

    Inclination = wish.

    Many words are developed "figuratively".

    But according to science, heart is not the seat of emotions.
    B.I. Sivamaalaa (Ms)

  7. #216
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    Arya - word and usage.

    ஆரியம் என்பது ஒரு குழப்படி மிகுந்த பயன்பாட்டுச் சொல். ஆரியம் என்று (சங்க அல்லது சங்க மருவிய, அல்லது அதற்கு அண்மிய காலத்துத்) தமிழ் நூல்களில் சொல்லப்படுமானால், அது வடநாட்டினரைக் குறிக்க வழங்கப்பட்ட சொல் என்று அறிந்துகொள்ளவேண்டும்.

    "ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்" என்ற தொடரை நோக்குக. இச்சொல்லை இங்ஙனம் பயன்படுத்தும்போது, வட நாட்டிலுள்ள ஒரு பறையர் அந்தப் படையில் சேர்ந்து தென்னாட்டிற்கு வந்திருந்தாலும், அவரும் ஆரியாரே ஆகிவிடுகின்றார்! இந்தச் சொற்புழக்கத்தில், இனக்குறியீடு ஏதுமில்லை!! சாதிக் குறிப்புமில்லை. ஆரியர் படை என்றால் அறிவாளிகள் படை என்று பொருள்சொல்லவும் வழியில்லை.

    ஆனால் சங்கத அகராதியில் ஆர்யா = noble என்று இருக்கலாம். இங்கு அதற்கு அந்தப் பொருளில்லை.

    தொடரும்
    B.I. Sivamaalaa (Ms)

  8. #217
    Senior Member Platinum Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    10,586
    Post Thanks / Like
    Quote Originally Posted by sar
    நம் மொழியில் உள்ள பிரசித்தி பெற்ற சித்தர் பாடல் ஒன்று - இதையும் கவனிக்க வேண்டும் எனக் கருதுகிறேன்...

    59.
    பண்டிதர் ஆவார் பதினெட்டும் பாடையும்
    கண்டவர் கூறும் கருத்தறி வார்என்க
    பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையும்
    அண்ட முதலான் அறஞ்சொன்ன வாறே. ௩

    Interpretation meaning of this poem is clearly indicating that...
    God of the Universe dictated for humanity the formation of 18 classical languages around the world for the purpose of pandits/linguists to learn everything by meeting other linguists by exchanging their views, opinions, theories and ideas...etc
    நல்ல சிந்தனை.

    இந்த சித்தர் பாடல் எந்த இலக்கியத்திலுள்ளது, இயற்றிய காலம் போன்ற விவரங்கள் தர இயலுமா?

  9. #218
    Member Junior Hubber
    Join Date
    Apr 2005
    Location
    UK
    Posts
    75
    Post Thanks / Like
    Quote Originally Posted by app_engine
    Quote Originally Posted by sar
    நம் மொழியில் உள்ள பிரசித்தி பெற்ற சித்தர் பாடல் ஒன்று - இதையும் கவனிக்க வேண்டும் எனக் கருதுகிறேன்...

    59.
    பண்டிதர் ஆவார் பதினெட்டும் பாடையும்
    கண்டவர் கூறும் கருத்தறி வார்என்க
    பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையும்
    அண்ட முதலான் அறஞ்சொன்ன வாறே. ௩

    Interpretation meaning of this poem is clearly indicating that...
    God of the Universe dictated for humanity the formation of 18 classical languages around the world for the purpose of pandits/linguists to learn everything by meeting other linguists by exchanging their views, opinions, theories and ideas...etc
    நல்ல சிந்தனை.

    இந்த சித்தர் பாடல் எந்த இலக்கியத்திலுள்ளது, இயற்றிய காலம் போன்ற விவரங்கள் தர இயலுமா?
    THIS IS FROM FAMOUS TAMIL SAIVIST SIDHDHANTIC WORK NAMED THIRUMANDIRAM BY ONE OF THE GREAT 18 SIDDAR THIRUMOOLAR... IT CONTAINS 3048 VERSES ITS SAID TO HAVE WRITTEN 1 STANZA /YEAR THROUGH HIS YOGIC PENANCE FOR THE WHOLE YEAR... HENCE ACTUAL SPAN OF THE LITERATURE FORMING WOULD BE MORE THAN 3000 YEARS HENCE EXACT DATE CANNOT BE MENTIONED... THATS THE BELEIF, WORD OF MOUTH... BUT NO TRUE INFO IS AVAILABLE AS THERE ARE MINOR CONTRADICTIONS BETWEEN TWO VERSIONS OF THIS SAME LITERATURE... AS TAMILS WE HAVE TO PRAY PROPER HOMAGE TO THEM.. FOR EXAMPLE: NEAR TO MY HOME TOWN THERE IS A SHIVA TEMPLE, WHERE THERE IS SHRINES FOR 18 SIDDHARS (VIJAYANARAYANAPURAM)

    BISIVAMALA - STILL WAITING FOR YOUR MORE EXPLANATIONS...THX

  10. #219
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    ariyak kuuththu

    அடுத்து, ஒரு பழமொழியைப் பார்ப்போம்.

    ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு என்பது. ஆர் = நிறைந்த; இயம் = வாத்தியம். எந்த இசைக் கருவியும், (பக்க வாத்தியமும்) குறைவில்லாததுதான் ஆரியம் . நிறைந்த பக்க வாத்தியங்களுடன் ஆடுகையில், கவனக் குறைவு ஏற்படும் சாத்தியக்கூறுகள் மிகுதி யாதலின் காரியத்தில் கண்ணாயிரு என்றனர். இது ஆரியம் என்று மேலே முன் இடுகையில் கவனித்த சொல்லுடன் ஒலியொற்றுமையுடைய கூட்டுச்சொல். homonym and a compound word. ஆடியவர்கள், எந்த மாநிலத்தவர், எப்படித் தமிழ் நாட்டில் வந்து ஆடினார்கள், அல்லது, உள்ளூர்க்காரர்களே ஆடினார்களா என்பவையெல்லா ஊகம் (வியூகம்) செய்துகொள்ள இடந்தருவனவாய் உள்ளன. இந்த ஊகங்களில் ஈடுபட்டு உதைத்துக்கொள்வது மடமை,

    வாத்தியம் என்பதும் வாழ்த்து+ இயம் = வாழ்த்தியம், இடைக்குறைந்து வாத்தியம் ஆயிற்று. பொண்ணுமாப்பிள்ளையை வாத்துவது என்பர், வாழ்த்துவது என்று திருந்தச் சொல்லாமல்.

    தொடரும்

    Discussion Note

    Response to Biplab-- Arya of Rig Veda and women Rishis
    http://groups.yahoo.com/group/mukto-mona/message/21703
    B.I. Sivamaalaa (Ms)

  11. #220
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    Vedic aryas

    ருக் வேதத்தில் ஆரியா என்ற சொல் பல பாடல்களில் காணப்படுகிறது. இதன் பொருள் , பணியத்தக்க மேதகவு உடையோன் என்று ஊகித்துள்ளனர். ருக் வேதப்பாடல்களைப் பாடியோர் தாம் பயன்படுத்திய சொற்களுக்குத் தாமே பொருள் கூறியிலர். எதிர் நின்றோராகப் பாடல்களில் வரணிக்கப் பட்டோர், தாசர்கள், தாசியுக்கள், இராக்கதர்கள் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும் இவர்கள் யாரென்று வேண்டியவாறு ஊகித்துக்கொள்ளலாமேயன்றி, திட்டவட்டமாகத் தெரியவில்லை. ஈரானுக்கு அப்பாலிருந்து வந்த இந்தோ ஐரோப்பிய வெள்ளை இன மக்கள் என்பது , ஐரோப்பியர்களின் பரப்புரை யாகும். (prachchaaram or propaganda).
    இதற்கு விளக்கமுரைத்தோரின் தகுதி, பதவி, ஆங்கிலக் கல்வி என இவைதவிர, வேறு முறையான ஆதாரங்களில்லை.

    ஆர்யா என்பதோர் இனம் என்பதற்கும் தாசியு முதலியோர் ஓரினம் அல்லது இனங்கள் என்பதற்கும் ஏதும் சான்றுகளில்லை.


    தொடரும்
    B.I. Sivamaalaa (Ms)

Page 22 of 39 FirstFirst ... 12202122232432 ... LastLast

Similar Threads

  1. Evolution of Saivaism and it's development in Tamil Nadu
    By virarajendra in forum Indian History & Culture
    Replies: 134
    Last Post: 23rd February 2017, 08:27 PM
  2. Replies: 27
    Last Post: 13th January 2017, 11:47 AM
  3. Is SC's verdict on reservation good for our development ?
    By Punnaimaran in forum Miscellaneous Topics
    Replies: 234
    Last Post: 5th January 2013, 04:15 PM
  4. Is this development?Your views on this news article.
    By ssanjinika in forum Miscellaneous Topics
    Replies: 1
    Last Post: 4th October 2005, 12:19 PM
  5. Dams - Temples of doom or development?
    By jaiganes in forum Miscellaneous Topics
    Replies: 20
    Last Post: 8th April 2005, 08:51 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •