Page 20 of 39 FirstFirst ... 10181920212230 ... LastLast
Results 191 to 200 of 384

Thread: TAMIL W0RD DEVELOPMENT

  1. #191
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    some words ending in consonant "y"

    பொம்மை என்ற சொல்.

    இது பொய்ம்மெய் என்ற சொல்லின் திரிபு என்பர் அறிஞர். அதாவது, பொய்யான மெய் - பொய் உடம்பு என்று ொருள்படுவது.

    இச்சொல்லின் இறுதி அடிச்சொல்லான "மெய்", இங்கு "மை" என்று திரிந்தமை காண்க.

    ஒப்பாய்வு:

    செய் > சை ( கைசெய் > சைகை, செய்>சை)

    மெய் > மை (பொய்ம்மெய் >பொம்மை )


    குறிப்பு: உண்மை, தன்மை எனப் பல சொற்களில் தோன்றும் பண்புப்பெயர் "மை" விகுதியும் "மெய்" என்றசொல்லின் திரிபே என்பர் அறிஞர் மு. வரதராசனார்.

    இதிலிருந்து எகர உயிருடன் கூடிய யகர ஒற்றினை ஈற்றில் கொண்ட அசைகள் சில , இவ்வாறு திரிவனவாம் என்பது பெற்றோம்.
    B.I. Sivamaalaa (Ms)

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #192
    Senior Member Devoted Hubber
    Join Date
    Jan 2008
    Posts
    291
    Post Thanks / Like

    Re: some words ending in consonant "y"

    Quote Originally Posted by bis_mala

    இதிலிருந்து எகர உயிருடன் கூடிய யகர ஒற்றினை ஈற்றில் கொண்ட அசைகள் சில , இவ்வாறு திரிவனவாம் என்பது பெற்றோம்.

    இவ்வொற்றை வாக்கியம் எனதெத்தனையோ குழப்பங்களை சரி செய்தது மதிப்பிற்குரிய bis_mala அவர்களே! நன்றி மற்றும் நன்றி
    பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில் பாடிடும் எண்ணங்களே

  4. #193
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    Re: some words ending in consonant "y"

    Quote Originally Posted by disk.box
    Quote Originally Posted by bis_mala

    இதிலிருந்து எகர உயிருடன் கூடிய யகர ஒற்றினை ஈற்றில் கொண்ட அசைகள் சில , இவ்வாறு திரிவனவாம் என்பது பெற்றோம்.

    இவ்வொற்றை வாக்கியம் எனதெத்தனையோ குழப்பங்களை சரி செய்தது மதிப்பிற்குரிய bis_mala அவர்களே! நன்றி மற்றும் நன்றி
    மகிழ்ச்சி திரு Disk.box.

    You are welcome.
    B.I. Sivamaalaa (Ms)

  5. #194
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    uu > u >ul > uL

    மனிதன் குகைகளிலும் காடுகளிலும் அலைந்து திரிந்து காய்கனிகளை உண்டும் வேட்டையாடியும் வாழ்ந்த கழி நெடுங்காலத்தின் முன்னே, அவன் பேசிய மொழியில் அடிப்படைச் சொற்கள் சில தவிர, பிற இல்லாத நிலையே இருந்தது என்பதை, அறிவுடையோர் உய்த்துணரலாம்.

    எம்மொழியாயினும் இதற்கு விலக்கில்லை, தற்காலத்துத் தோன்றிவளர்ந்த மொழிகள் எவையும் இருப்பின், அவை தவிர எனலாம். இத்தகைய புதுமொழிகள், பழம்பெரும் மொழிகளினின்றும் கடன்பெற்றுக்கொள்வதற்கு வசதி படைத்தவையாய் உள்ளன. குகைவாழ் காலத்தினனுக்கு இத்தகைய வசதி இல்லை, அல்லது குறைவே.

    தொடக்கத்தில் சொற்கள் சிறியனவாய் இருந்தே பின் நீண்டிருக்கும். இதில் என்ன ஐயப்பாடு?


    உள்ளது (=இருக்கிறது) என்ற சொல், குகைவாழ் காலத்தில், "ஊ" என்று இருந்து, பின் "உல்" > உள் என்று திரிந்தது என்று சொல்லவும்வேண்டுமோ?

    ஆனால், சீன மொழி, இன்னும் அசை நிலையிலேயே இருக்கின்றது.

    அதாவது, ஊ =( இருக்கிறது ) என்ற சீனச் சொல் திரியாமலே உள்ளது. அம்மொழியின் அமைப்பு அப்படி.

    ஊ (சீனம் ) = (ஊ) > உள் (தமிழ்).
    B.I. Sivamaalaa (Ms)

  6. #195
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    The monosyllabic state

    என் சீனத் தோழியின் வீட்டுக்குத் தொலைபேசியில் அழைத்தபோது, என்னிடம் பேசியவளிடம்:

    ஆ மோய் ஊ தி போ(bo)?

    என்று கேட்டேன்,

    "ஊ" என்று பதில் வந்தது.

    தமிழை இப்படி ஓரசைச் சொற்களைக்கொண்டே பேச வேண்டுமாயின்:

    கை உள் வீடு இல்?

    என்றுதான் கேட்கவேண்டும்;

    கை = தங்கை!!
    உள் = உள்ளாளா?
    வீடு - இந்தச்சொல் ஓரசையாய் இல்லை. வீட்டைக் குறிக்கும் "இல்" என்ற சொல் ஓரசை. பதிலுக்கு அதைப் போட்டுகொள்ளலாம். அப்படிச் செய்தால், "இல்" (வீடு) என்பதும் "இல்" (இல்லை) என்பதும் குழம்பும்.

    இல் = இல்லை(யா)?.

    தமிழ் ஓரசைச் சொற்றொகுதி நிலையிலிருந்து வெகுதொலைவு வந்துவிட்டது. எனினும், தொல்காப்பியருக்கெல்லாம் மிக முந்திய இருண்ட குகைக்காலத்தில், அது ஓரசைகள் கொண்ட மொழியாகவே இருந்தது என்பதற்கான அடையாளம் இன்னும் அதனுள் இருக்கின்றது.

    இதை உணராமல், தமிழின் அமைப்பை முற்றிலும் அறிந்துகொள்ள முடியாது.

    Notes


    மெய் (mei) = தங்கை
    ஜ்யே (jie) = அக்காள் (அக்கை).

    There is intonation in pronouncing Chinese words. You have to learn it from a teacher. Otherwise you may not be understood by a Chinese. Transliteration here is only approximate where pronunciation is concerned.


    அம்மை என்ற சொல் அம்மா என்று விளிவடிவம் ஏற்பதும், இதில் இறுதி அசை "மா" என்பதே பல்வேறு மாற்றங்கள் அடைந்து இந்தோ ஐரோப்பிய மொழிகளில் தாயைக் குறிப்பதும், மெய் என்ற சொல் சீனமொழியில் தங்கையைக் குறிப்பதும் கவனிக்கத்தக்கது.

    அம்மை - மை - மெய் (ஆமெய், ஆமோய்)
    அம்மை - மை - மா - மாதா

    mǔ (Ch) = maa (Tamiz ) female / mother


    நை (சீனம்) : அன்னை (தமிழ்)
    nai : breast , lady , milk

    A good ground for further research.
    B.I. Sivamaalaa (Ms)

  7. #196
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    research further

    சீனமொழி எங்கே? தமிழ் எங்கே?

    இந்தியாவின் தென்கோடியில் வாழ்பவர் தமிழர். வாழிட வெம்மையின் காரணமாய், கரு நிறம் அடைந்தவர்.

    சீனர், வெண்மஞ்சள் நிறமுடையோர். பல ஆயிரம் கல்தொலைவுகட்கு அப்பால் வாழ்பவர்.

    இவர்கள் எங்கும் அடுத்தடுத்து வாழ்ந்ததாக வரலாறு கூட இல்லை.

    இவர்கள் ஒன்றாக இருந்து உணவருந்துவதையோ, திருமணவாழ்வில் ஈடுபடுவதையோ, மலேசியாவில்தானே காணமுடிகிறது?

    இதை நீங்கள் உரத்த குரலில் சொல்லிக்கொண்டிருக்கும் அதே வேளையில்,

    கல் என்ற தமிழ்ச் சொல்லை ஆராய்வோம்.
    B.I. Sivamaalaa (Ms)

  8. #197
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    li lu ilu izu

    கல் > கல்லு. (தமிழ்)

    க (பச்சைக்கல்) (stone ) (சீன)

    லி - (சிறுகல்/ விலைமதிப்புள்ளகல்)

    ஒப்பிடுக: கல் > கல்லு > லு > லி.

    லியு = லி (சீன) சிறுகல்.

    லு (சீன)= (பொருள்) எழுது


    தமிழ்ச் சொல்லமைப்பு:-

    இல் > இலு > இழு > இழுது > எழுது.

    இல்> இலக்கு

    இல் >இலக்கு > இலக்குதல் > இலக்கித்தல்.= எழுதுதல், வரைதல்.

    இலு (தமிழ்மூலச்சொல்) : லு (சீனச்சொல்)

    கல்லைக் குறிக்கும் லு என்னும் சொல் எழுது என்று பொருள்படுவதால், கல்லால் பண்டை நாளில் எழுதினரோ என்பது ஆய்வுக்குரியது.

    இது ஓர் ஒப்பாய்வு. எதிலிருந்து எது வந்தது என்பதன்று.
    B.I. Sivamaalaa (Ms)

  9. #198
    Member Junior Hubber
    Join Date
    Apr 2005
    Location
    UK
    Posts
    75
    Post Thanks / Like
    Bis_mala அவர்களே,
    'கற்பனை'-என்பதன் மூலச் சொல் யாது?
    ஏன் நான் கேட்கிறேன் என்றால்..
    கல்- learn என்று பொருள் படும்...
    கல்வி - education என்று பொருள் படும்...
    கற்பி- educate என்று பொருள் படும்... ஆனால்
    கற்பனை மட்டும்-imagination என்று பொருள்படுகிறது...
    நன்றி...

  10. #199
    Member Junior Hubber
    Join Date
    Apr 2005
    Location
    UK
    Posts
    75
    Post Thanks / Like
    Bismala அவர்களே,
    சின்னச்சாமி என்ற பெயரை சின்னஸாமி என்று ஒலிக்காமல், "ச்" கொடுத்து அழுத்திச் சிலரால் ஒலிக்கப்படுவதும் அது "ஸ்வாமி" (சுவாமி)யினின்றும் வேறுபட்ட சொல் என்பதைத் தெளிவாக்குகிறது என்க.
    மேற்கூறிய கருத்தில் எனக்கு வேறுபாடு உள்ளதாகக் கருதுகிறேன்...
    தமிழ் இலக்கணத்தில் வரும் 'சந்தி'யைப் பற்றி தாங்கள் அறியாதது இருக்க முடியாது... இருப்பினும் 'ச்' என்பதை சந்தியாகத் தாங்கள் ஏன் கருத வில்லை?

    மேலும்... சின்னசாமி என்னும் பெயர் குமாரசுவாமி என்னும் பெயரின் கிராமிய பேச்சு வழக்கில் ஏற்பட்ட திரிபாகவும் இருக்கலாம் என்ற சந்தேஹமும் இருந்து வருகிறது... சற்று விளக்கவும்... மிக்க நன்றி.

  11. #200
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    consider as sandhi

    Quote Originally Posted by sar
    Bismala அவர்களே,
    சின்னச்சாமி என்ற பெயரை சின்னஸாமி என்று ஒலிக்காமல், "ச்" கொடுத்து அழுத்திச் சிலரால் ஒலிக்கப்படுவதும் அது "ஸ்வாமி" (சுவாமி)யினின்றும் வேறுபட்ட சொல் என்பதைத் தெளிவாக்குகிறது என்க.
    மேற்கூறிய கருத்தில் எனக்கு வேறுபாடு உள்ளதாகக் கருதுகிறேன்...
    தமிழ் இலக்கணத்தில் வரும் 'சந்தி'யைப் பற்றி தாங்கள் அறியாதது இருக்க முடியாது... இருப்பினும் 'ச்' என்பதை சந்தியாகத் தாங்கள் ஏன் கருத வில்லை?

    மேலும்... சின்னசாமி என்னும் பெயர் குமாரசுவாமி என்னும் பெயரின் கிராமிய பேச்சு வழக்கில் ஏற்பட்ட திரிபாகவும் இருக்கலாம் என்ற சந்தேஹமும் இருந்து வருகிறது... சற்று விளக்கவும்... மிக்க நன்றி.
    சந்தியாகவே கருதுகிறேன்.

    மிக்க நன்றி.
    B.I. Sivamaalaa (Ms)

Page 20 of 39 FirstFirst ... 10181920212230 ... LastLast

Similar Threads

  1. Evolution of Saivaism and it's development in Tamil Nadu
    By virarajendra in forum Indian History & Culture
    Replies: 134
    Last Post: 23rd February 2017, 08:27 PM
  2. Replies: 27
    Last Post: 13th January 2017, 11:47 AM
  3. Is SC's verdict on reservation good for our development ?
    By Punnaimaran in forum Miscellaneous Topics
    Replies: 234
    Last Post: 5th January 2013, 04:15 PM
  4. Is this development?Your views on this news article.
    By ssanjinika in forum Miscellaneous Topics
    Replies: 1
    Last Post: 4th October 2005, 12:19 PM
  5. Dams - Temples of doom or development?
    By jaiganes in forum Miscellaneous Topics
    Replies: 20
    Last Post: 8th April 2005, 08:51 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •