பலகணி என்பது சன்னல் (ஜன்னல்) என்று பொருள்படுவது.

கண் என்பது பொத்தல், துளை என்றும் பொருள்தருவதாம். "ஊசிக்கண்" என்பதைக் காண்க.

பல கண்களையுடையதே பலகணி. ஒரு வட்டம் அல்லது நாற்கோண அமைப்பினுள் பல் காற்றுத் துளைகள் இருக்கும்படி இச்சன்னல்களை அமைத்திருந்தனர் என்பதை உணரலாம். பிற்காலத்தில், மரச்சட்டங்களை குறுக்கு நெடுக்காக இணைத்து இந்தக் "கண்கள்" அமைக்கப்பட்டன. இப்பொழுது பெரும்பாலும் இரும்புச் சட்டங்களே பலகணிக்குப் பொருத்தமெனலாம்.

பல+கண்+இ = பலகணி.

பலகண்ணி> பலகணி.

சொல்லாக்கத்தில் வேண்டுழித் தொகுத்தலும் விரித்தலும் இயல்பு. இப்படி விரித்தும் தொகுத்தும் அமைக்கப்பட்ட சொற்களில் பட்டியலை எழுதிவைத்துப் பாராயணம் பண்ணிக்கொள்ளுங்கள்.