Page 34 of 35 FirstFirst ... 2432333435 LastLast
Results 331 to 340 of 341

Thread: veNbA vadikkalAm vA

  1. #331
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    சோகத்தின் சோர்வில் சுருண்டாலும் இங்கெமக்கு
    யோகத்தைத் தந்தீரே ஆம்..

    பழகு தமிழினில் பக்குவமாய்ப் பாக்கள்
    அழகாய்ப் புனைந்தீரே ஆம்..

    காதலிக்கு அருளும் மதி:வானும் நிலவும்;மதியின் இருமை ஒழுக்கம்:

    முப்பாவில் முக்கனியை முற்றுமாய்ச் சாறெடுத்து
    தப்பாமல் தேன்தோய்த்தே தந்தவரே - இப்புவியில்
    இன்னும் பலவாறாய் இன்பத் தமிழ்க்கவியை
    என்றுமே இங்கெனக்குத் தா(ரும்)
    Last edited by chinnakkannan; 9th February 2013 at 05:08 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #332
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஆமாம் சிவமாலா நீங்கள் இட்ட வெண்பாக்கள் எங்கு போயின..?

  4. #333
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    படக்கென இங்கே பாய்ந்துவந்த பாக்கள்
    தடக்கென மாயமாய்ப் போனாலும் நன்றாக
    மஞ்சு மலைமுகட்டை மார்பில் தழுவதற்போல்
    நெஞ்சுள்ளே நிற்கும் அவை..

  5. #334
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    lost for good....cannot be retrieved.

    தாளில் எழுதிப்பின் தன்மடி மீதுவைத்துத்
    தோளின் சுமைஇறக்கு மாபோலே---மீளவுமே
    தட்டச்சு செய்தாலே தான் தொலையா நிற்றலுறும்
    விட்டச்சம் வீற்றிருக்க லாம்.

    திருத்தம் திறப்படுத்தும் காலை அழிந்தே
    உறுத்தி உளைச்சல் உளத்தே -- கருத்திழந்தேன்
    தூங்கி அதன்பின் தொடங்கவிலை இன்னுமே
    ஆங்கிருப்பின் ஈங்களித்தல் அன்பு.

    திரு சி.க அவர்களே! அந்த வெண்பாக்கள் எதிர்பாராதவகையில் அழிந்துவிட்டன. இப்போது ஆர்வமெல்லாம் சற்று தேக்க நிலையை அடைந்துள்ளது.

    இவற்றை அலகிட்டுப் பிழைகளைக் கூறுங்கள்.

    Your memory so good. You probably had a cursory look at it.... You are able to recall the substance so well.
    Last edited by bis_mala; 12th February 2013 at 09:34 PM.
    B.I. Sivamaalaa (Ms)

  6. #335
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஓ..உங்கள் பாட்டுக்கள் போய்விட்டனவா..வருத்தமாக இருக்கிறது.. நான் உங்களைப் போல அதை மேற்கோள் காட்டி மற்ற பாட்டுக்கள் எழுதியிருக்க வேண்டும் ..அது என்ன சி.க அ..என்றெல்லாம் அழைக்கிறீர்கள்.. நான் சி.க என்னைபெ.க ஆக்காதீர்கள்!

    அலகிடுவ்தற்கு நான் என்ன கிளியா..

    முதல் பாட்டில் இரண்டாம் வரியில் மோனைக்குறைவா.. விட்டச்சம் புரியவில்லை

    இரண்டாவதில் சொற்குற்றம் இல்லை பொருட் குற்றம் தான்.. இருந்தால் நானே மீண்டும் போட்டிருக்க மாட்டேனா.. நான் எப்படி ஈங்களிக்க முடியும்..?!

  7. #336
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    Smile

    Quote Originally Posted by chinnakkannan View Post
    ஓ..உங்கள் பாட்டுக்கள் போய்விட்டனவா..வருத்தமாக இருக்கிறது.. நான் உங்களைப் போல அதை மேற்கோள் காட்டி மற்ற பாட்டுக்கள் எழுதியிருக்க வேண்டும் ..அது என்ன சி.க அ..என்றெல்லாம் அழைக்கிறீர்கள்.. நான் சி.க என்னைபெ.க ஆக்காதீர்கள்!

    அலகிடுவ்தற்கு நான் என்ன கிளியா..

    முதல் பாட்டில் இரண்டாம் வரியில் மோனைக்குறைவா.. விட்டச்சம் புரியவில்லை

    இரண்டாவதில் சொற்குற்றம் இல்லை பொருட் குற்றம் தான்.. இருந்தால் நானே மீண்டும் போட்டிருக்க மாட்டேனா.. நான் எப்படி ஈங்களிக்க முடியும்..?!




    ..................
    B.I. Sivamaalaa (Ms)

  8. #337
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    Suggestion

    "தோளின் சுமைஇறக்கும் தோரணையில்"
    என்று பாடினால் பொருத்தமாய் இருக்குமா பாருங்கள்! மோனை வந்துவிடுமா.....
    B.I. Sivamaalaa (Ms)

  9. #338
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    இன்னொன்று. தோளில் என்பதில் தோ என்பது நெடில். "மாபோல" (ஆ போல, அது போல) என்பதில் ஆவும் நெடில் மீள என்பதில் மீ என்பதும் நெடில். இதில் நெடில் வண்ணம் பயில்கின்றதன்றோ? ஆகவே வண்ணம் மேற்கொண்டு மோனை தவிர்க்கக்கூடாதா?
    B.I. Sivamaalaa (Ms)

  10. #339
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஓ தாராளமாக..ச் செய்யலாம்.. சில சமயங்களில் நான் அங்ஙனம் செய்வதுண்டு...

    பாலகன் போலே பணிவை முகம்காட்டி
    வாலண்டைன் டேயென வாலாட்டித் தாவுமே
    பாதகப் புன்னகை பக்குவமாய்ச் செய்தபடி
    காதலிப் பூனையைக் கண்டு

  11. #340
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    ஓ தாராளமாக..ச் செய்யலாம்.. சில சமயங்களில் நான் அங்ஙனம் செய்வதுண்டு...

    பாலகன் போலே பணிவை முகம்காட்டி
    வாலண்டைன் டேயென வாலாட்டித் தாவுமே
    பாதகப் புன்னகை பக்குவமாய்ச் செய்தபடி
    காதலிப் பூனையைக் கண்டு
    காதலி எப்படிப் பூனை?

    காதலன் புன்னகை பாதகப் புன்னகையா?அந்தப்புன்னகையின் போது காதலன் வாலாட்டுகிறானா? அதனால்தானா வாலன்டைன் என்று வந்தது?
    B.I. Sivamaalaa (Ms)

Page 34 of 35 FirstFirst ... 2432333435 LastLast

Similar Threads

  1. veNba - oru muyaRchchi
    By prasan8181 in forum Poems / kavidhaigaL
    Replies: 8
    Last Post: 4th April 2005, 07:21 PM
  2. veNba (3)
    By prasan8181 in forum Poems / kavidhaigaL
    Replies: 0
    Last Post: 22nd March 2005, 11:51 PM
  3. veNba (2)
    By prasan8181 in forum Poems / kavidhaigaL
    Replies: 2
    Last Post: 19th March 2005, 03:20 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •