Page 31 of 35 FirstFirst ... 212930313233 ... LastLast
Results 301 to 310 of 341

Thread: veNbA vadikkalAm vA

  1. #301
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    செல்லுகமேல்!

    எல்லாம் அழகென் றெடுத்தகதை செல்லுகமேல்!
    உள்ளாரே கேட்கப் பலர்!
    B.I. Sivamaalaa (Ms)

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #302
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    வந்து விட்டேன்..
    *

    அதுல பாருங்கோ.. இந்தக் காதல் இருக்கே சம்யத்தில மகாதைரியத்தக் கொடுத்து கோழைய வீரனாக்கிடும்.. அதேசமயத்தில மனசுக்கு இஷ்ட்மானவ மொதல்ல ஏதாவது சொன்னான்னா கொஞ்சம் தடுமாறவைக்கும்..

    அப்படித் தான் சுந்தராக்கும் இருந்த்து.. மலரோ ஏன் இப்படி மலங்க மலங்க கர்ப்பமான ஆடு மாதிரி முழிக்கறேள்..உள்ள வாங்க அப்படின்னு சொன்னவ் வீட்டுக்குள்ள பாத்து பாட்டீஈஈன்னு கூப்பிட்டா..உள்ள இருந்து அவ பாட்டியும் வந்தா..

    கண்ணில் அழகான கண்ணாடி; நெற்றியிலோ
    வண்ணம் சிவப்பான வாகான பொட்டுடனும்
    கூந்தல் நரைத்தே குரலும் இளகாமல்
    காந்தமாய் கூப்பிட்டாள் காண்..

    சரின்னு உள்ள போனான்.. கொஞ்ச நேரம் அப்பா அண்ணா எல்லாம் என்ன வேலை பாக்கறான்னு கேட்டா பாட்டி.. மல்ர்க்கிட்ட முன்னால அவன் ஜாஸ்தில்லாம் பேசினது கிடையாது.. சரி கூப்பிட்டுட்டா.. பேசலாம்னு பார்த்தாக்க பாட்டி ஃபெவிகால் ஒட்டின மாதிரி பேசிண்டே இருக்கா.. கொஞ்ச நிமிஷம் கழிச்சு உள்ளே போன பாட்டி வெளிய வந்து என்ன கொடுத்தான்னா..

    பத்திரிகை வாங்கிப் படிக்கையில் தான்தெரியும்
    அத்துடன் சேர்ந்திருக்கும் அழகான புத்தகம்போல்
    பொங்கிச் சிரித்தவள் பாட்டியும் தந்தாளே
    தங்கநிறத் தின்பண்டம் தான்..

    பஜ்ஜியெல்லாம் சாப்பிட்டுட்டு அப்புறமா பாட்டி உள்ள போயிருக்கறப்ப தைரியமா மலர்கிட்ட “உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்’னான்.. மல்ரோட அழகான கண்ணு இன்னும் கொஞ்சம் பெரிசா மலர்ந்துச்சு.....

    (தொடரும்)
    Last edited by chinnakkannan; 18th September 2011 at 09:30 PM.

  4. #303
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    மலருக்கு கைகால் பதட்டமாயிருச்சு.. என்னடா இது வம்பாப் போச்சு..

    பஸ்ல பார்த்த சினேகிதன்.. ஏதோ வீட்டுப் பக்கம் வந்தான்.. (கொஞ்சம் உள்ளுக்குள்ள புடிக்கத்தான் செய்யுது) வான்னு கூப்பிட்டுப் பேசினா.. பாட்டி இல்லாத சமயத்தில ஏதோ சொல்லணும்கறான்.. அச்ச்ச்சோ ஐலவ்யூ சொல்வானோ..பாவி.. அதெல்லாம் சினிமால தானே பாத்துருக்கோம்..அப்பா வேற வர நேரம்.. இந்தப் பாட்டி எங்க போய்த் தொலஞ்சா..இப்பத் தானா பாத்ரூம் வரணும்.. இவன் என்ன சொல்லப் போறான்..

    காதலைச் சொல்வானோ கற்பனையாய்த் தான்பட்ட
    வேதனையைச் சொல்லியே விம்மலுடன் நிற்பானோ
    இன்னும் பலவாறாய் ஏதோதோ எண்ணியே
    பின்னும் குழம்பினாள் பார்..

    ஒரே ஒரு நொடிக்குள்ள ஓராயிரம் சிந்தனை மலர்பொண்ணுக்கு.. கற்பனை தண்ணிப் பஞ்ச காலத்தில வர்ற தண்ணீர் லாரி தாறுமாறாப் போறமாதிரி வந்துச்சாம்..

    ”என்ன சொல்லப் போறேள்’ன்னா.. கொஞ்சம் காத்துப் போன பலூன் மாதிரி முகமும் சுருங்கி, சரியா சிக்னல் கிடைக்காத ரேடியோ மாதிரி குரலும் கொஞ்சம் கரகரக்குது..

    நம்ம சுந்தராவோ கொஞ்ச்ம சிரிச்சான்..அதுல கவலப்படாதேங்கற அர்த்தமும் இருந்த்து..

    மலர்.. நான் இப்ப ப்ளஸ்டூ எழுதிட்டேன்.. ரிசல்ட் வந்தா காலேஜ்..இந்த ஊர் தான்.. இருந்தாலும் பஸ்ல பார்க்க முடியாது.. அப்ப்ப்ப வந்து உன்னப் பாக்கலாமா..என்னை மறந்துட மாட்டியேன்னு சிரிச்சுட்டே கை நீட்டினான்..
    அவளும் ரிலாக்ஸாகி கை கொடுக்கறா...

    மயக்கங் கொண்டே மலர்விழியோ கொஞ்சம்
    தயக்கமாய் வார்த்தை தொடுத்தங்கே கேட்டுவிட
    பட்டெனச் சொல்லிவிட்டான் பாவையிடம் நெஞ்சத்தில்
    விட்டு விலகா திரு..

    (தொடரும்)

  5. #304
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    இப்படி எல்லாம் எழுதலாமான்னு தெரியாது..ஏதோ விளையாட்டுத்தனமா எழுத ஆரம்பிச்சது கொஞசம் தத்தித்தத்தி தொட்ருது..(கொஞசம் வேலைப் பளு..அதனால் உடனே எழுத முடியலை..) ஸினாப்ஸிஸ் கூட ஒரு நாள் ஒக்காந்து எழுதி வெச்சுருக்கேன்..(மனசாட்சி: கண்ணா..!) கொஞ்சம் கொஞ்சமாய் எழுதுகிறேன்.. குத்தங்குறையிருந்தா ஷமிககணும்..

  6. #305
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கொஞ்சம் பழைய பாக்கள்..ஹி.,ஹி..


    ஓவியப் பாவையென ஓராள்தான் உண்டதுவும்
    தேவிகா என்று தெளிவு..

    தீஞ்சுவை கொண்டிருக்கும் தேனைப்போல் தித்திக்கும்
    காஞ்சனையைக் கண்டுவந்தார் கண்..

  7. #306
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    மழுக்கட்டில் தந்த மயக்கிதுவோ நும்கண்
    விழக்கட் டழகியர்தம் வேடு.


    (மஸ்கட்டில் உள்ள கட்டழகியர் முக்காடிட்டு மறைத்துக் கொள்வதால், அந்தக் குழப்பத்தில், வேறு சிலரைப் பாராட்டுகிறீர்களோ? )


    vEdu = veil.
    Last edited by bis_mala; 20th September 2011 at 06:19 PM.
    B.I. Sivamaalaa (Ms)

  8. #307
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    அன்பின் மாலா..
    வீட்டுக் கணினிக்கு வியாதி வந்து வைத்தியரிடம் காட்ட் வேண்டும்.. எனில் அலுவலிடத்திலிருந்து கிடைத்த நேரத்தில் இடுகை செய்கிறேன்..

    முக்காடு போட்டே முகம்மறைக்கும் மங்கையரால்
    துக்கமாய் நெஞ்சமும் தூங்கி வழிந்தாலும்
    பக்குவமாய் காட்டுமெழில் பாவையரின் முன்னாலே
    சிக்கிடும் பாக்களோ சீர்.

    விரைவில் மீண்டும் வருகிறேன்..
    அன்புடன்
    சி.க

  9. #308
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    தத்தி..... தத்தி

    Quote Originally Posted by chinnakkannan View Post
    அன்பின் மாலா..
    வீட்டுக் கணினிக்கு வியாதி வந்து வைத்தியரிடம் காட்ட் வேண்டும்.. எனில் அலுவலிடத்திலிருந்து ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,
    சிக்கிடும் பாக்களோ சீர்.

    விரைவில் மீண்டும் வருகிறேன்..
    அன்புடன்
    சி.க

    தத்தித் தொடரும் தமிழ்க்கதைப் பாடலில்
    குத்திய கூலத்துக் கோதகற்றி --- வைத்தாற்போல்
    கொஞ்சமாய்க் கொஞ்சமாய்க் கூர்ந்தெண்ணி நன்கெழுதி
    விஞ்சுதன் ஆர்வம் வெளிப்படவே -- அஞ்சா
    திடுகின்ற உங்கள் இடரணையாச் செய்கை
    எழுகின்ற வெண்ணிலவு போல வளர்க
    ஒழுகுசீ ரோடே உடன்.
    Last edited by bis_mala; 29th September 2011 at 06:34 PM. Reason: insert clear words
    B.I. Sivamaalaa (Ms)

  10. #309
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    மாதமோர் வெண்பா மதிபெறப் பாடினும்
    சாதனை யாகிடும் சின்னாளில் -- யாதொன்றும்
    தீதில்லை தென்மொழியின் தேனைப் பருகிடத்
    தோதில்லை என்பதோ பொய்.

    அலகிட்டுப் பிழை[ பொறுக்குக. That means - pl pick out the faults.
    B.I. Sivamaalaa (Ms)

  11. #310
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பிழை இல்லாதது போல் தான் தெரிகிறது..

    இலைமறை காயாக ஏதோ உண்டோ
    பிழையெனக்குத் தோன்றவில்லை பார்..

Page 31 of 35 FirstFirst ... 212930313233 ... LastLast

Similar Threads

  1. veNba - oru muyaRchchi
    By prasan8181 in forum Poems / kavidhaigaL
    Replies: 8
    Last Post: 4th April 2005, 07:21 PM
  2. veNba (3)
    By prasan8181 in forum Poems / kavidhaigaL
    Replies: 0
    Last Post: 22nd March 2005, 11:51 PM
  3. veNba (2)
    By prasan8181 in forum Poems / kavidhaigaL
    Replies: 2
    Last Post: 19th March 2005, 03:20 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •