Page 27 of 35 FirstFirst ... 172526272829 ... LastLast
Results 261 to 270 of 341

Thread: veNbA vadikkalAm vA

  1. #261
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    Smile விசா இல்லாமல்............

    Quote Originally Posted by chinnakkannan View Post
    vவணக்கம் பிஐஎஸ் மாலா..

    என் வீட்டில் கடந்த இரு நாட்களாக ஒரு எலி விசா இல்லாமல் வந்து படுத்துகிறது.. கொஞ்சம் எழுதிப் பார்த்தேன்..

    குறுகுறுத்துப் பார்க்கும் குதித்தேதான் ஓடும்
    உருவத்தில்x சிறிதாய் ஒடுங்கி இருந்தே
    பழியாய்ப் பதுங்கியே படசணம் தானுண்டேx
    எளிதாய்ப் படுத்தும் எலி
    x change

    குறுகுறுத்துப் பார்க்கும் குதித்தேதான் ஓடும்
    உருவத்தில் சின்ன(து) ஒடுங்கி -- இருந்தே
    பழியாய்ப் பதுங்கியே பட்சணம் தானுண்(டு)
    எளிதாய்ப் படுத்தும் எலி

    என்று சிறிது மாற்ற, வெண்பா சரியாகிவிடும்.

    Good attempt.
    Show your immigration authority card to the எலி.
    B.I. Sivamaalaa (Ms)

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #262
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    3rd and 4th lines, can also be rendered with this slight change:


    பழியாய்ப் பதுங்கியே பட்சணம்தா னுண்டே
    எளிதாய்ப் படுத்தும் எலி
    B.I. Sivamaalaa (Ms)

  4. #263
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    a small change only

    Quote Originally Posted by chinnakkannan View Post
    கண்மயங்கும் வாயோ கணம்மடியும் வண்ணம்யில்
    அன்ன்நடை தான்குலையும் வஞ்சியர்க்கே வெண் திரையில்
    நன்றாக நடக்குமிந்த நாடகத்தை எப்பொழுதும்
    கண்ட்துண்டு கேட்ட்தில்லை காண்..

    (ரொம்ப முன்னாலே – ஐந்து வருடம்முன் எழுதிப் பார்த்த்து...திரைப்பட்த்தில் எப்பொழுதும் நாயகி நாயகன்ஸ்பரிசத்தில் கண் மயங்குவாள் கால் அரைவட்ட்ம் போடும் உதடு கொஞ்சம் மடிந்து ஸ் ஸ் என சப்தம் வரும்...
    நிஜ வாழ்க்கையில் நடக்குமா என்ன... உயர் காலணிகளை எப்படிக்கழட்டுவாள்..எப்படி அரைவட்டம் போட முடியும்..!)
    கண்மயங்கும் வாயோ கணம்மடியும் வண்ணமயில்
    அன்னநடை தான்குலையும் வஞ்சியர்க்கே-- வெண் திரையில்
    நன்றாய் நடக்குமிந்த நாடகத்தை எப்பொழுதும்
    கண்டதுண்டு கேட்டதில்லை காண்..

    ஒரு சிறு மாற்றமே தேவைப்பட்டது.
    Last edited by bis_mala; 1st September 2011 at 07:24 PM. Reason: color
    B.I. Sivamaalaa (Ms)

  5. #264
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    முதலில் நன்றாய் என்று தான் எழுதியிருந்தேன்.. நினைவிலிருந்து எழுதுகையில் தளை சரிபார்க்க வில்லை..ம..
    *
    சின்ன எலி என்று பார்த்தால் பாருங்கள் இதுவும் தளையில் கடித்து விட்ட்து..
    ம்ம் நேற்று வரவில்லை.. அது சிறுகதை எலியா தொடர்கதை எலியா தெரியவில்லை..
    திருத்தங்களுக்கு நன்றி..
    *
    பாரில் என்னென்ன நடக்கும்- நடக்கின்றன என்று யோசித்தால்..

    கண்கள் நிறமோ கருஞ்சிவப்பாய் ஆகிவிட
    உண்மையை வாயதுவும் தானாய் உளறிவிட
    தேர்போல ஆடியே தள்ளாடும் கால்பலவும்
    பாரில் நடக்குது பார்

    ஹி.ஹி.. ஆங்கில பார் ஆகவும் வைத்துக் கொள்ளலாம் தமிழ் பார் ஆகவும் வைத்துக் கொள்ளலாம்..
    மரபில் நடந்து சிலகாலம் ஆனதால் கற்பனைக் குதிரை சற்றே நொண்டியடிக்கிற்து..மன்னிக்க..கூடியவிரைவில் ஓடும் என நினைக்கிறேன்

  6. #265
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    முன்பெல்லாம் பெரிய அட்டைகளில் நாயகன் , நாயகி அல்லது காட்சியை வண்ணத்தில் வரைந்து பட வெளியிடும் திரையரங்குகளில் வைப்பார்கள்..அவை வரைவதற்கென்றே சில் ஓவியர்கள் இருப்பார்கள்..அருகில் பார்த்தால் கலங்கி இருக்கும்..உயரத்தில் வைத்திருந்து பார்க்கையில் வெகு அழகாக இருக்கும்..இப்போதோ டிஜிட்டல் என நிறைய மாற்றங்கள் வந்து விட்டன...அந்த ஓவியர்கள் என்ன ஆனார்கள் எனத் தெரியவில்லை..

    வானுயர நின்றிருக்கும் வண்ணப் படங்களுந்தான்
    பூணும் விழிகளுக்குள் பாந்தமாய்த் தங்கும்
    மலையென வந்துவிட்ட மாற்றத்தால் இன்றோ
    கலைந்தே கரைந்த கலை

  7. #266
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    வானுயர நின்றிருக்கும் வண்ணப் படங்களுந்தாம்
    பூணும் விழிகளுக்குள் பாந்தமாய்த் தங்கும்
    மலையென வந்துவிட்ட மாற்றத்தால் இன்றோ
    கலைந்தே கரைந்த கலை

    மலையென வந்துவிட்ட மாற்றத்தால்: மலைபோலும் பெரிய மாற்றமென்றும், மலைத்து நிற்றலை ஏற்படுத்தும் மாற்றமென்றும் இருபொருள் தந்து, சிறப்புச் சேர்க்கும் வரி.

    கலைந்தே கரைந்த கலை - முற்றுமோனை மட்டுமன்று. ஒரு சொற்சித்திரமாய் யாத்துள்ளீர்கள்.கலை கரைந்ததோடின்றிக் கலைந்தும் விட்டது....

    படங்களைப் பூணும் விழிகள். வெறுமனே "பார்க்கும்" என்னாது, பூணும் என்றதில் கவித்துவம் காணலாம்.

    எழுதிக்கொண்டிருங்கள். வாழ்த்துகள்.
    B.I. Sivamaalaa (Ms)

  8. #267
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    தள்ளாடும்

    கண்கள் நிறமோ கருஞ்சிவப்பாய் ஆகிவிட
    உண்மையை வாயதுவும் தானாய் உளறிவிட
    தேர்போல ஆடியே தள்ளாடும் கால்பலவும்
    பாரில் நடக்குது பார்

    மேடுகள் பள்ளங்கள் மீதூர்ந்த தேரும்தள்
    ளாடுதல் தாங்கும் நிலம்.

    The pun of bar/pAr, well-done. Keep it up.
    Last edited by bis_mala; 2nd September 2011 at 11:30 AM. Reason: coloring n title
    B.I. Sivamaalaa (Ms)

  9. #268
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    மிக்க நன்றி சிவ மாலா..
    உங்கள் குற்ளும் அழகு..
    *
    இந்தக் கால அடுக்கு மாடிக் குடியிருப்பில் கதவுகளுக்கு என்ன செய்கிறார்கள்..மிகச் சாதாரணமாக நீள் செவ்வக மரம்..பின் அதில் சில செவ்வகங்கள்.. நடுவில் ஒரு கண்.. (யாரவதுவந்தால் பார்ப்பதற்கு) பின் இரண்டு மூன்று தாழ்ப்பாள்கள்..
    அவ்வளவு தான்.. நான் அவ்வ்ப்போது பூட்டிவிட்டுப் போவேன்..நீ உடையாமல் சமர்த்தாய் நின்று கொண்டிரு.. அவ்வளவு தான்
    அந்தக் காலத்தில் இப்படியா இருந்த்து...ராஜாக்களின்காலத்தில் அரண்மனைக் கதவுகளில் சிற்பம் மணி என அழகாய்ச் செதுக்கியிருப்பார்கள் கலை நயம் த்தும்பும்..மற்றும் செட்டி நாட்டு வீடுகளிலும் கதவுகள் தேக்கு மரத்தில் இழைக்கப் பட்டு வேலைப்பாடுகளுடன் இருக்கும்..ம்ம்ம்..


    காப்பது மட்டும் கதவென்று கண்வைத்துத்
    தா(ழ்)ப்பாள்கள் சேர்த்துத் தருமிந்த நாளில்
    விலையதிகம் என்றே வியக்காமல் செய்தே
    நிலைத்தங்கே நிற்கும் நிலை

    செப்பலோசை வரமாட்டேங்குதுல்ல... !
    Last edited by chinnakkannan; 2nd September 2011 at 01:47 PM.

  10. #269
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    good and an alternative

    Quote Originally Posted by chinnakkannan View Post
    மிக்க நன்றி சிவ மாலா..
    உங்கள் குற்ளும் அழகு..
    *
    இந்தக் கால ......................ம்ம்ம்..


    காப்பது மட்டும் கதவென்று கண்வைத்துத்
    தா(ழ்)ப்பாள்கள் சேர்த்துத் தருமிந்த நாளில்
    விலையதிகம் என்றே வியக்காமல் செய்தே
    நிலைத்தங்கே நிற்கும் நிலை
    Well done,well done.
    lst line: y x y y : மோனைகள்: மேற்கதுவாய்.

    மற்ற ஈரடிகளிலும் பொழிப்பு மோனைகள்.

    இறுதி: முற்றுமோனையாய் முடிந்தது.

    Let me give an alternative version:

    காப்பது மட்டும் கதவென்று கண்வைத்துத்
    தா(ழ்)ப்பாள்கள் பூட்டித் தருவியப்பில் இந்நாள்
    கலை நயம் காட்டா விலைநயமொன் றீட்டி
    நிலைநயம் நேர்ந்த நிலை.


    கலை நயம் இல்லை என்பதே உங்கள் முன்மைக் கருத்தாகத் தோன்றுகிறது.

    அதையும் உள் விரித்துக் கூறுவோம்.

    வியப்பில் = வியப்பு + இல்.

    PS. previous posts with edits lost as connections were disrupted quite frequently.
    Hope this one appears. Will edit after posting to overcome disruptions.
    Last edited by bis_mala; 2nd September 2011 at 05:00 PM. Reason: disruptions in connections
    B.I. Sivamaalaa (Ms)

  11. #270
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    நன்றி சிவமாலா..
    *
    காலையில் போனவனைக் காணவில்லை..எப்ப்ப் பார்த்தாலும் விளையாட்டு தான்.. எங்கே போனான் என்றும் தெரியவில்லை..காத்துக்காத்துக் கண்கள் பூத்த்து தான் மிச்சம்..எப்பொழுதும் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்கும் அவனைக்காணவில்லை..வாசலில் நின்று அங்கிருக்கும் கோபியரிடம் கேட்டுப் பார்க்கிறாள் யசோதை... (கண்ணா.. நீ எழுத்ற வெண்பாக்குப் இ.பொ.வியும் தேவையா.. ஹேய் மனச்சாட்சி கம்முனு இரு..)

    வருவான் அவ்னென்றே வாசலிலே நின்றால்
    குற்குறுப்பாய் அங்கிங்கே கொஞ்சமும் ஓடாமல்
    எண்ணத்தில் உள்வந்து எள்ளித்தான் செல்கின்ற
    கண்ணனைக் கண்டாயோ சொல்..

Page 27 of 35 FirstFirst ... 172526272829 ... LastLast

Similar Threads

  1. veNba - oru muyaRchchi
    By prasan8181 in forum Poems / kavidhaigaL
    Replies: 8
    Last Post: 4th April 2005, 07:21 PM
  2. veNba (3)
    By prasan8181 in forum Poems / kavidhaigaL
    Replies: 0
    Last Post: 22nd March 2005, 11:51 PM
  3. veNba (2)
    By prasan8181 in forum Poems / kavidhaigaL
    Replies: 2
    Last Post: 19th March 2005, 03:20 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •