Page 25 of 35 FirstFirst ... 152324252627 ... LastLast
Results 241 to 250 of 341

Thread: veNbA vadikkalAm vA

  1. #241
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    for analysis...

    Something like this:-

    உலகமே கண்டிராத வள்ளலே வானம்
    கலகமே ஒன்றில்லை தேர்ந்த விடையே.
    பழகும் கொடியினுக்குத் தேரினைத் தந்தார்
    உலவும் மயிலுக்குப் போர்வையை ஈந்தார்
    உயிரெனத் தேர்ந்தே உதவி அளித்தார்
    உருளும் சகடம் உயிர் இல் உலோகமெனும்
    காருக்குப் பாலுடை தந்து.

    Now you may scan to pick out the errors in "thaLai".
    B.I. Sivamaalaa (Ms)

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #242
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    Re: cholla...

    Quote Originally Posted by P_R
    Quote Originally Posted by bis_mala
    Tried a change
    சொல்ல நினைத்ததை யாப்புக் கலத்தினில்
    அள்ள சிறிதேதான் மிஞ்சியதே - வில்லெய்து
    தப்பிய பான்மையில் தத்தளிக்க நானாற்றேன்,
    செப்பியது சீர்செய்கு வேன்
    நன்று! இருப்பினும் முதலிரண்டு அடிகளில் மோனை போட
    முயலலாமே.....try a little bit more.......
    Tried this:

    உள்ளக் கருத்தினை யாப்புக் கலத்தினில்
    அள்ள முடிந்தது அற்பம்தான் - வில்லெய்து
    தப்பிய பான்மையில் தத்தளிக்க நானாற்றேன்,
    செப்பியது சீர்செய்கு வேன்
    I wanted to retain யாப்புக் கலத்தினில் for the pun.
    So in the first line I only got the 2,4 "மோனை"
    OK. We shall try another veNpaa in a while.
    B.I. Sivamaalaa (Ms)

  4. #243
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    scan

    நாட்டின் கண்வாழ்வைத் துறந்து போய்நான் மறையோர்
    ஈட்டங்கள் சூழ விருந்தானைக் - காட்டில்
    பெருந்தகையைக் கண்டார்கள் பேரெழிற் றோள்வேந்தர்
    வருந்தகையாரெல் லோரும் வந்து.

    Please scan and critically analyse this veNpA.

    Also attack this compo:

    உலவும் மயிலுக்குப் போர்வை கொடியோ
    பழகும் படிக்கொருதேர் தந்த ---- உலகம்
    வியக்கும் பெருவள்ளல் விண்ணே்; நயக்குமே
    காருக்குப் பாலுடை காண்.
    B.I. Sivamaalaa (Ms)

  5. #244
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like

    Re: scan

    Quote Originally Posted by bis_mala
    நாட்டின் கண்வாழ்வைத் துறந்து போய்நான் மறையோர்
    ஈட்டங்கள் சூழ விருந்தானைக் - காட்டில்
    பெருந்தகையைக் கண்டார்கள் பேரெழிற் றோள்வேந்தர்
    வருந்தகையாரெல் லோரும் வந்து.

    Please scan and critically analyse this veNpA.

    வரிகளை கீழ்க்கண்டவாறு எழுதினால் தளை தட்டவில்லை:
    1--> நாட்டின்கண் வாழ்வைத் துறந்துபோய் நான்மறையோர்
    3--->பேரெழிற்றோள் வேந்தர் (தேமாங்காய் தேமா) என்று எழுத வேண்டும்.
    4--> வருந்தகையா ரெல்லோரும் வந்து

    பொருள்

    வருந்தகையார் என்ற சொல்லுக்கு என்ன பொருள்?

    பல்வேறு spellingஇல் இங்கு தேடிப்பார்த்தேன்.

    'லௌகீக வாழ்வைத் துறந்து நான்மறையோர் ஈட்டிய (தவச்)செல்வங்கள் சூழ காட்டில் இருந்த பெருந்தகையை, பேரழகு தோள்கள் உள்ள வேந்தர்கள் எல்லோரும் வந்து கண்டார்கள்' என்று பொருள் விளங்கிக்கொள்ள முயன்றேன். சரியா?
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

  6. #245
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like

    Re: scan

    Quote Originally Posted by bis_mala

    Also attack this compo:

    உலவும் மயிலுக்குப் போர்வை கொடியோ
    பழகும் படிக்கொருதேர் தந்த ---- உலகம்
    வியக்கும் பெருவள்ளல் விண்ணே்; நயக்குமே
    காருக்குப் பாலுடை காண்.
    21 211 11 21
    21 221 11 21
    21 211 11 22
    111 12 1

    தளை தட்டவில்லை ஆனால் கடைசி இரு அடிகளுக்கு இடையில் எதுகை இல்லையே

    நேரிசை வெண்பாக்களில் இரண்டாம் அடியில் முதற்சீருக்கும் கடைச்சீருக்கும் இருக்க்கும் எதுகைபோல மூன்றாம் அடியிலும் வருகிறது. அப்படி வந்தால் கடைசி அடியில் எதுகைக்கு விலக்கா?

    பொருள்
    என் புரிதலில் மிகச்சிறப்பான ஒரு பொருள் படுகிறது:
    உலகம் என்ற சொல் இரண்டாமடியில் கடைச்சீராக இருப்பதால் முதல் இரு அடிகளில் கூறப்பட்ட கொடைச்செயல்கள் இவ்வுலகம் செய்தது என்று பொருள்படும்படி வாசித்தால் உலகம் என்பதன் பொருள் விரிவாகப் படுகிறது. Ground reality (as opposed to something celestial that "droppeth as gentle rain from heaven").

    அப்படிப்பட்ட வள்ளல்தன்மை வாய்த்த உலகமே வியக்கும் பெருவள்ளல் விண்தான்...என்றவாறு புரிந்துகொள்கிறேன்.

    நயக்கும் - என்றால் நயம் உண்டாக்கும் (embellish) என்று பொருள் கொண்டேன். சரியா?

    முதலடியில் கொடியோ என்பதை கொடியும் என்று சொன்னால் 'கொடு கூட பழகும்படி' (even a creeper) என்றும் 'and' என்ற பொருளும் கிடைக்கும். அசையிலும் மாற்றமில்லை.
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

  7. #246
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    ஒரு சந்தேகம்....ஒரு சில குறட்பாக்களில் எதுகை அமையாமல் வருவதைப் பார்க்கிறேன்.

    இங்கு சென்னையில் 'வாயில்தோரும் வள்ளுவம்' என்ற பெயரில் ஒவ்வொரு அரசாங்கக் கட்டிடத்தின் வாயிலிலும் ஒரு பலகையில் விளக்கத்துடன் திருக்குறள் ஒன்றை வைக்கிறார்கள். மிகப் பிரபலமான நீதிபோதனைக் குறள்கள் மட்டுமல்ல, சில அழகான காமத்துப்பால் குறட்பாக்களும் உண்டு.

    என் வீட்டருகில் உள்ள பூங்காவில் இன்று இதைப் படித்தேன்:

    இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
    கண்நிறை நீர்கொண் டனள்.
    இதில் எதுகை அமையவில்லையே.
    ஏதாவது விதிவிலக்கு உண்டா?
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

  8. #247
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    Quote Originally Posted by P_R
    ஒரு சந்தேகம்....ஒரு சில குறட்பாக்களில் எதுகை அமையாமல் வருவதைப் பார்க்கிறேன்.

    இங்கு சென்னையில் 'வாயில்தோரும் வள்ளுவம்' என்ற பெயரில் ஒவ்வொரு அரசாங்கக் கட்டிடத்தின் வாயிலிலும் ஒரு பலகையில் விளக்கத்துடன் திருக்குறள் ஒன்றை வைக்கிறார்கள். மிகப் பிரபலமான நீதிபோதனைக் குறள்கள் மட்டுமல்ல, சில அழகான காமத்துப்பால் குறட்பாக்களும் உண்டு.

    என் வீட்டருகில் உள்ள பூங்காவில் இன்று இதைப் படித்தேன்:

    இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
    கண்நிறை நீர்கொண் டனள்.
    இதில் எதுகை அமையவில்லையே.
    ஏதாவது விதிவிலக்கு உண்டா?
    இரண்டாம் எழுத்து தொடங்கி, எழுத்துக்கள் ஒன்றி வருதல் எதுகை என்று இலக்கண நூல்கள் கூறுகின்றனவே தவிர, எதுகை இல்லாமல் எழுதலாகாது என்று எந்த விதியும் இல்லையே!
    எனவே விதிவிலக்கு என்ற பேச்சே எழ இடமில்லை.எதுகையிலும் பலவகை. பொருளெதுகையும் உண்டு, வந்துழிக் காண்க.

    மிகச் சிறந்த கவிதை என்பது பொருளை வைத்தே முடிவு செய்யப்படும்.

    "அப்படியானால் மறுமையில் என்னைப் பிரிந்துவிடுவீரோ என்று அழும் காதலியை நம் முன் தெய்வப் புலவர் நாயனார் நிறுத்துகிறார்.இம்மை - மறுமை என்று இரண்டையும் போட்டுப் பொருளெதுகையாய்க் காட்டியிருக்கலாம். ஆனால் கவிதை என்பது எதுகை மோனைகளை மட்டும் வரிகளில் அமைத்துக் காட்டும் பயிற்சி அன்று. அதனினும் மேலான உயர்ந்த கருத்துக்களின் பெட்டகம் அதுவாம்.

    கவித்துவம் வாய்ந்த ஒன்றைத் தெளிவாகவும் நேரடியாகவும் சொல்வதற்கு எதுகை முதலியவை தடையாய் இருப்பின், அவற்றைத் தொலைவில் எறிந்துவிட்டுத் தொடரலாம் என்பது நல்லிசைப் புலவர்களுக்குத் தெரியுமே!

    மறுமைபற்றிச் சொல்லாமல் விட்டதும், இடையில் வரும் சாவு என்ற அமங்கலத்தைத் தலை எடுக்கவிடாமல் பாடியதும்,
    ....கவிதையின் அழகே அழகு.
    B.I. Sivamaalaa (Ms)

  9. #248
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    Re: scan

    Quote Originally Posted by P_R
    Quote Originally Posted by bis_mala

    Also attack this compo:

    உலவும் மயிலுக்குப் போர்வை கொடியோ
    பழகும் படிக்கொருதேர் தந்த ---- உலகம்
    வியக்கும் பெருவள்ளல் விண்ணே்; நயக்குமே
    காருக்குப் பாலுடை காண்.
    21 211 11 21
    21 221 11 21
    21 211 11 22
    111 12 1

    தளை தட்டவில்லை ஆனால் கடைசி இரு அடிகளுக்கு இடையில் எதுகை இல்லையே

    நேரிசை வெண்பாக்களில் இரண்டாம் அடியில் முதற்சீருக்கும் கடைச்சீருக்கும் இருக்க்கும் எதுகைபோல மூன்றாம் அடியிலும் வருகிறது. அப்படி வந்தால் கடைசி அடியில் எதுகைக்கு விலக்கா?

    பொருள்
    என் புரிதலில் மிகச்சிறப்பான ஒரு பொருள் படுகிறது:
    உலகம் என்ற சொல் இரண்டாமடியில் கடைச்சீராக இருப்பதால் முதல் இரு அடிகளில் கூறப்பட்ட கொடைச்செயல்கள் இவ்வுலகம் செய்தது என்று பொருள்படும்படி வாசித்தால் உலகம் என்பதன் பொருள் விரிவாகப் படுகிறது. Ground reality (as opposed to something celestial that "droppeth as gentle rain from heaven").

    அப்படிப்பட்ட வள்ளல்தன்மை வாய்த்த உலகமே வியக்கும் பெருவள்ளல் விண்தான்...என்றவாறு புரிந்துகொள்கிறேன்.

    நயக்கும் - என்றால் நயம் உண்டாக்கும் (embellish) என்று பொருள் கொண்டேன். சரியா?

    முதலடியில் கொடியோ என்பதை கொடியும் என்று சொன்னால் 'கொடு கூட பழகும்படி' (even a creeper) என்றும் 'and' என்ற பொருளும் கிடைக்கும். அசையிலும் மாற்றமில்லை.
    Well analysed.

    As viyakkum and nayakkum are ethukais occurring in the same line in 1 x x 4 sequence, no ethukai in the next line is necessary. If you can get one more in the next line, then, good; the more the merrier!

    This veNpaa is just a hurriedly shortened form of the lines furnished by our friend Jaiganes. Any praise for substance should go to him. I just assembled the words in his poem.
    Sorry about that, Jaiganes avl.
    B.I. Sivamaalaa (Ms)

  10. #249
    Senior Member Veteran Hubber jaiganes's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    West Des Moines
    Posts
    3,701

    அழகாக என் கவிதையை வெண்பாவாகவும்
    அதே சமயம் நற்பாவாகவும் ஆக்கியுள்ளீர்.
    நன்றிகள் நான் தந்து நீங்கள் பெற வேண்டியது.
    பி_ஆர் அவர்களின் விளக்கமும் மிக அருமை..
    நான் சில வெண்பாக்களைப்பழகி வருகிறேன். அடுத்த வெண்பா
    சுத்தமாக வெளி வரும் என நினைக்கிறேன்.
    Apparently, a democracy is a place where numerous elections are held at great cost without issues and with interchangeable candidates.
    - Gore Vidal

  11. #250
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    Re: scan

    Quote Originally Posted by P_R
    Quote Originally Posted by bis_mala
    நாட்டின் க....................... வந்து.
    Please scan and.......... veNpA.

    வரிகளை கீழ்க்கண்டவாறு எழுதினால் தளை தட்டவில்லை:
    Good.

    பொருள் - வருந்தகையார் ?
    ...........'லௌகீக வாழ்வைத் துறந்து நான்மறையோர் ஈட்டிய (தவச்)செல்வங்கள் சூழ காட்டில் இருந்த பெருந்தகையை, பேரழகு தோள்கள் உள்ள வேந்தர்கள் எல்லோரும் வந்து கண்டார்கள்' என்று பொருள் விளங்கிக்கொள்ள முயன்றேன். சரியா?
    Yes
    வேந்தருள் வந்துகாணும் தகுதி,அகச்சிறப்பு முதலிய படைத்தோர். வாராத அரைவேக்காடுகளும் உளர் என்று சாடியவாறு.
    புகழேந்திப் புலவரின் பாடல்.
    B.I. Sivamaalaa (Ms)

Page 25 of 35 FirstFirst ... 152324252627 ... LastLast

Similar Threads

  1. veNba - oru muyaRchchi
    By prasan8181 in forum Poems / kavidhaigaL
    Replies: 8
    Last Post: 4th April 2005, 07:21 PM
  2. veNba (3)
    By prasan8181 in forum Poems / kavidhaigaL
    Replies: 0
    Last Post: 22nd March 2005, 11:51 PM
  3. veNba (2)
    By prasan8181 in forum Poems / kavidhaigaL
    Replies: 2
    Last Post: 19th March 2005, 03:20 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •