Page 31 of 33 FirstFirst ... 212930313233 LastLast
Results 301 to 310 of 324

Thread: K. BALACHANDER - GENIUS

  1. #301
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நான் அவனில்லை- 1974.

    தமிழ் படங்கள் 1973 முதல் கேவலமான நெருக்கடியை எதிர்கொண்டன. ஸ்ரீதர் ,கே.எஸ்.ஜி ,பீம்சிங் போன்றோர் தேய்ந்து மறைந்து கொண்டிருந்த நேரம். ஹிந்தியில் பாபி,யாதோன் கி பாரத் ,அபிமான் ,ஷோலே,சோடி சி பாத் என்று தூள் கிளப்ப , ஆர்.டீ.பர்மன்,லட்சுமி-பியாரி, சலில் போன்றோர் இசையில் பட்டையை கிளப்ப ,தமிழில் மூன்றாந்தர இயக்குனர்கள், தன் பழைய பெருமைகளில் தோய்ந்து தமிழ் படங்களை தேய்த்து தரை மட்டமாக்கி கொண்டிருந்த ஹீரோக்கள்,பெருங்காய டப்பா மட்டுமே மிஞ்சிய இசையமைப்பாளர்கள் என்று இளையராஜா,பாரதிராஜா,மகேந்திரன் ,பாலுமகேந்திரா வருகை தந்த 1977 வரை களப்பிரர் ஆட்சி போல இருண்ட காலத்தில் அவதியுற்ற தமிழ் பட ரசிகர்களின் ,ஒரே நம்பிக்கையாக புதுமையான ,தரமான படங்களை தந்து கொண்டிருந்தவர் கே.பாலசந்தர்.

    1973 அரங்கேற்றம் முதல் ,தன் பாணியையே மாற்றி புது அலைக்கு தக்க தன் அலைவரிசையை tune பண்ணி மெருகேற்றி ,தரமற்ற தமிழ் பட talkie களுடன், கற்பனை வளமற்ற சாரமற்ற திரைகதை,நேரிடை cliched வசனங்கள், அதை விட கற்பனை வளமில்லா நேரிடை cliche நடிப்பு, ஆகியவற்றுடன் கே.பீ. one man army ஆக போராடி கொண்டிருந்தார். அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன், பின்னால் வெளியான அவள் ஒரு தொடர்கதை,அபூர்வ ராகங்கள்,மன்மத லீலை என்று, கற்காலத்திற்கு பின் தங்கி இயங்கி ,உலகத்தை விடுங்கள்,இந்திய நீரோட்டத்துடன் கூட இணைய மறுத்த தமிழ் படங்களின் ஒரே காவலனாக போராடி கொண்டிருந்த காலம்.

    நாயகர்களை முன்னிறுத்தி ,வெறியர்களுக்கு தீனி போடாமல்,கதைகளத்தை முன்னிறுத்தி,காலத்தோடு மாற விரும்பிய இயக்குனர்களின் ஒரே நம்பிக்கை பழைய தலைமுறையாயினும் ,ஜெமினி ஒருவரே .


    அதுவரை ஜெமினி soft sophisticated romance ,intelligent situational காமெடி ,விரக்தி மற்றும் தாழுணர்வு கொண்ட கதாபாத்திரங்கள், நல்மனம் கொண்ட கிராமத்து மனிதர் பாத்திரங்களிலேயே சோபித்தார்.முதல் முறையாக ,ஜெமினியின் நிஜ இயல்புக்கு ஒத்த ,நிஜ கதையை தழுவிய வங்காள நாடக inspiration இல் பாலசந்தர் தந்த காலத்தை மீறிய அதிசயம் நான் அவனில்லை.

    இந்த படத்தை திருச்சி பாலஸ் திரையரங்கில் கே.பாலச்சதரின் அக்காள் மகன் என் நண்பர் பீ.அசோக் குமார் உடன் பார்த்த அனுபவம்.(கே.பீ யின் மகள் புஷ்பாவும்,மகன் கைலாசமும் எனது கல்லூரியில் உடன் படித்த (ஒன்றிரண்டு வருட வித்யாசம்)நண்பர்களே)

    இனி நான் அவனில்லை படத்தை பற்றி பார்ப்போம்.

    நான் அவனில்லை கதை களம், சம்மந்த பட்டவர்களின் பங்களிப்பு இவற்றை ஆராயு முன்----

    தமிழிலேயே எனக்கு மிக மிக பிடித்த படங்களில் ஒன்றாக நான் கருதுவது நான் அவனில்லை.

    ஜெமினிக்கு ,இந்த படத்துக்காக தேசிய விருது கிடைக்காதது நமக்கெல்லாம் பெருத்த அவமானம்.என்ன ஒரு performance ? சும்மா புகுந்து விளையாடி பெடலெடுத்திருப்பார். அவரின் 9 சொச்ச வேடங்களும் தனித்தனியாக நில்லாமல் கதையுடன் பிணைந்து பயணிக்கும். காதல் மன்னனுடன் ,காதல் இளவரசனும் (அன்றைய வளரும் நடிகர்)ஒரு சிறு சுவையான வேடத்தில் மலையாளம் பறைவார்.

    பாலச்சந்தரின் மருமகன் குறிப்பிட்டதில் இருந்து நான் அறிந்தது, ஜெமினிக்கும் (சொந்த படம்),கே.பிக்கும் பிணக்கு ஏற்பட்டு ,இடைவேளைக்கு பின்பு கே.பீ நினைத்த மாதிரி அமையாமல் கே.பீக்கு முழு திருப்தி இல்லையாம். ஆனால் புத்திசாலி ரசிகர்களுக்கு ,இது என்றுமே முழு திருப்தி தந்த படமே.

    ஒரு சாதாரண கோர்ட் ரூம் டிராமா , எப்படி சுவையான பாத்திரங்களால்,nerrative surprise நிறைந்த திரைக்கதையால்,கூர்மையான இயல்பான வசனங்களால் ,ஒரு வித்தியாச சிந்தனை கொண்ட இயக்குனரால் பரிமளித்தது என்று பார்ப்போம்.வந்த போது பெரிய வெற்றி படமல்ல.புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காணாத காலம்.

    இந்த படத்தில் விறுவிறுப்பு,திருப்பங்கள்,நகைச்சுவை(டயலாக்,si tuati on-linked) ,அங்கங்கே மிளீரிடும் மனிதம்,கட்டி போடும் வசனம்(ஒரு நிமிடம் நாம் கவனத்தை நகர்த்தினால் முக்கியமான லிங்க் போய் விடும்)என்று ,அருமையான ஒரு படைப்பு. இந்த அளவு wholesome என்று சொல்லத்தக்க படங்கள் இந்திய அளவில் மிக குறைவே.

    நான் எஸ்.எஸ்.எல்.சி முடித்த கையோடு, பீ.யு.சீயில் படிக்கும் போது இந்த படம் பார்த்த போது தீவிர கே.பீ.ரசிகன். ஜெமினியை பிடிக்கும்.(தீவிர ரசிகன் என்று சொல்ல முடியாவிட்டாலும்)

    அடுத்தடுத்த நாட்களில் ஐந்து முறை பார்த்து என் பெரியப்பா ,அப்பாவிற்கு போஸ்ட் கார்டு எழுதி உன் பையனுக்கு எதிர்காலமே இல்லை என்று தெரிவிக்கும் அளவு தீவிரமாகி, இந்த படம் என்னை பாதித்தது.

    இன்று பார்க்கும் போதும் அதே உணர்வையே அடைகிறேன். இதை பற்றி விலாவரியாக எழுதும் துடிப்பை என் கைகள்,இதயம்,அறிவு மூன்றும் பரபரக்கிறது.
    இனி முகவுரை முடிந்து படத்தினுள்.....
    Last edited by Gopal.s; 17th December 2014 at 03:48 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #302
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நான் அவனில்லை.

    கதையை நேரிடையாக சொல்லி, மற்ற அலசல்களை தொடர்கிறேன்.(பார்த்தவர்களுக்கு தேவை படாது)

    போலிஸ் ஒரு நடுத்தர வயது ஆங்கிலோ இந்தியன் ஒருவனை துரத்துவதில் ஆரம்பிக்கும் டைட்டில் , ஒரு கிராமத்து மனிதன் விபத்தில் மாட்டி சந்தேகத்தில் பிடி படுவதில் படம் துவங்கும். பின் நேரடியாக கோர்ட் ரூம்தான்.சாட்சிகள் ஒவ்வொருவராக வர, குற்றம் சாட்டப்பட்ட வடசேரியில் நெய்சு வேலை செய்து வருவதாக சொல்லும் நாஞ்சில் நம்பி ,தன்னுடைய டிபென்ஸ் வக்கீலை இன்சல்ட் செய்து துரத்தி தனக்காக தானே வாதாடி கொள்வதாக சொல்கிறான்.முதல் சாட்சியாய் சவப்பெட்டி தொழில் செய்யும் ஆல்பர்ட் ஆசீர்வாதம் எதிரில் நிற்பது தன்னுடைய B .A படித்த புத்தி கூர்மை ,பன்மொழி திறமை கொண்ட தன்னுடைய தம்பி டேவிட் ஆசிர்வாதமே, மனைவி(ஊமை),இரு குழந்தைகளை தவிக்க விட்டு 15 வருடம் முன்பு ஓடி விட்டவனே என்று சொல்கிறான். நாஞ்சில் நம்பியோ,நான் அவனில்லை என்று நிறுவ பார்க்கிறான்.

    அடுத்த சாட்சி மாதவ ராவ் என்ற அரசாங்க ஊழியன் ,சி.என்.எ .சாரி என்ற பெயரில் தனக்கு நல்ல வேலை வாங்கி தருவதாக சொல்லி 15000 ரூபாய் ஏமாற்றியது குற்றம் சாட்ட பட்டு கூண்டில் நிற்பவரே என்று சொல்கிறான்.

    இடையில் இந்த வழக்கின் நீதிபதி ஜலால் ஹுசேன் மகள் சலீமா ஹுசேன் ,இந்த வழக்கில் தனக்கு ஒரு உண்மை தெரியும் என்று சொல்கிறாள்.அக்பர் அலி என்ற பெயரில் ரயிலில் வரும் தன்னுடன் அழகான உருது பேசி ,தன் அப்பாவிடம் 1000 ரூபாய் தந்தி மணி ஆர்டர் சலீமா என்ற பெயரை உபயோகித்து ஏமாற்றியவன் அவனே என்றுணர்ந்து ஒரு ஹீரோ வொர்ஷிப் கொண்டு,கோர்ட்டுக்கு வர ஆரம்பிக்கிறாள்.

    அடுத்தடுத்து விஜயஸ்ரீ என்கிற தெலுங்கு பெண்,தன்னிடம் லட்சுமண சர்மா என்ற பெயரில் தன்னை மணந்து (இதில் சித்தப்பா சகாதேவ சாஸ்திரிகள் என்று வேறு )பணம்,நகைகளை ஏமாற்றியவன் என்றும்,அம்மு குட்டி என்ற கேரளா பெண் ,சத்ருகன மேனன் என்ற பெயரில் தன்னை மணந்து ,75000 ரூபாய் பணம்,30000 ரூபாய் நகைகளுடன் ஓடியவன் என்று அடுத்தடுத்து சாட்சி சொல்ல ,குற்றவாளியின் பதில் நான் அவனில்லை.இந்த பெண்கள் சொல்லும் ஒரு பெயர் ஜானி வாக்கர் என்ற நண்பன் அடிக்கடி கொடுக்கும் வாழ்த்து தந்திகள்,இறப்பு செய்திகள்.தேன் மொழி என்ற கல்யாண புரோக்கர். என்று சாட்சிகள்.

    நாஞ்சில் நம்பி ஆங்கிலம்,தெலுங்கு,மலையாளம்,உருது என அனைத்து மொழிகளும் பேசுவதால்,அவன் தாய் மொழி அறிய ,எதிர்பாராமல் போலிஸ் கன்னத்தில் அறைய முஷே என்று கத்துகிறான்.அனைவரும் குடைந்து முஷே என்பது சீன மொழியில் அம்மாவை குறிப்பது என்று அங்கலாய்கிறார்கள்

    .அடுத்து கிருஷ்ணா பாய் ,தங்கள் ஆஸ்ரமத்திற்கு வந்து ,தன்னுடைய பெண் ராணியை சர்வாலங்கார பூஷிதையாய் பழனிக்கு அழைத்து சென்று ஏமாற்றிய ஹரி ஹர தாஸ் ஸ்வாமிகள் ,நாஞ்சில் நம்பியை நிற்பவனே என்று சாட்சி கூற,அடுத்து violet solomon என்ற ஆங்கிலோ இந்திய பணக்கார மாது, தன் கணவன் ஜாக் சாலமன் அவனே என்றும் ,தான் அவனை இன்னும் விரும்புவதை கூற,நாஞ்சில் நம்பியில் விழி கடையோரத்தில் துளிர்க்கும் நீர்.அவளை குறுக்கு விசாரணையும் செய்யாமல் அனுப்புகிறான்.(மற்றவர்களை போட்டு கிழி கிழிதான்)அடுத்த சாட்சி ராணி.தன்னை ஏமாற்றி தன் நகைகளை எடுத்து கொண்டு ஓடிய ஹரிஹரதாஸ் ஸ்வாமிகள் அவனே என்றும்,தன்னை பலர் கற்பழித்து,ஒரு நடன விடுதியில் நடன மாதாக இருக்கும் பொது,ஒரு இளைஞன் வாழ்வு கொடுத்ததாக கூறுகிறாள்.(அம்மு குட்டியின் தம்பியே).

    தன் சாட்சியாக நாஞ்சில் விசாரிப்பது தானம்மாள் என்கிற தன் மனைவியை மட்டுமே.(3 ஆண் 2 பெண் குழந்தை 10 வருட வாழ்க்கை)

    அடுத்து ஜானி வாக்கர் என்ற பெயரில் தந்தி கொடுத்த தம்பிதுரை மாட்ட, ஜாக் சாலமனாய் கொடைக்கானலில் உலவிய டேவிட் என்கிற,நாஞ்சில் நம்பி என்கிற,சாரி என்கிற,அக்பர் அலி என்கிற,சத்ருகன மேனன் என்கிற,லட்சுமன் சர்மா என்கிற,ஹரிஹரதாஸ் ஸ்வாமிகள் என்கிற நான் அவனில்லை ,அம்முகுட்டியின் தம்பி,விஜயஸ்ரீ,அம்முகுட்டி,வயலெட் எல்லோரிடமும் ஒரு சேர மாட்ட தப்பித்து ஓடும் போது……

    இறுதியில் 14 வருடம் கடுங்காவல் பெறும் அவனிடம் அண்ணன் ஆல்பர்ட் ,இப்போதாவது ஜீசஸ் இடம் பாவமன்னிப்பு கோர சொல்ல திமிராக சாதிக்கும் அவனிடம் கோபம் கொண்டு கத்தியால் குத்தி விட கடைசியில் ,ஜீசஸ் என்று தன்னை வெளிக்காட்டி மரணமடையும் டேவிட் என்கிற perverted genius deviant .genius .

    The High light of Naan Avanillai lies in its Novel Theme, Structuring of the movie soaked well in Layered Nuances, Well rounded Multi Dimensional Characters, its narrative surprises,Intelligent Pauses, and the space given to all minor characters.Infact protagonist cum Antagonist of the movie is built on minor blocks of different Hues&shades.

    Unfortunately ,Tamil audiences used to bonding with the character who is our Emotional Proxy or substituting our wishes on the characters and the characters are usually the collection of traits necessary for the nerrative and their decision,choices ,Traits cause something which shapes the flow or outcome of nerrative soaked in exaggerated melodrama.

    Nan Avanillai broke this jinx and not far from reality as it is based on a true story of a deviant individual .It can even be classified under Classic Film Noir which is strange,Erotic and Ambivalent with Black Humour.The deconstruction of the nerrative with elusive phenomena lies in its non-chronological progression but coherent in logic and aesthetic consistency.

    The central dynamic of the story uses coincidences to worsen the characters' plight. The inherent Form&contents offer Anticipation and surprises and Finger pointing devices are implanted intelligently in the Film.The pacing out of the dramatic elements with confrontation and squaring off between characters of conflicting interests with intelligent sub-plots and Minor characters etched properly with different spaces.The Film slowly gain in knowledge search,investigate with time indication intensify the expectation with unique tone,Style and Atmosphere.

    The screen play has plenty to offer in reversals,surprises and revelations,A problem to solve,New Experiences,Clearly defining the premise, starting with a situation ,Win attention by involving the Audience thru minor characters (Saleemaa,Spectator achacho chitra). But Audience are primarily engrossed and enthralled by the main character .The cognitive process happens thru constant testing and revising previous conclusions.

    One anticipates,curious&Surprised,feels cheated at times , amazed with the deviant theme from normal life.Proper emphasis given at times with strong painful emotions,empathy with underdogs enhances audience kinesthetic response.

    The story gains momentum with new and constant sensation with scene constructions thru odds and obstacles enhanced with dramatic tension, the process of problem,obstacle,choice,pressure ,tension,challenge,imbalance,conflicting values,clash,disharmony,discord with dramatic progression in crises,tension. The sequence of events one leads to another escalate in intensity and plant many questions with appropriate anger at social issues.

    It arranges cues with something introduced new always ,withholding something,to intrigue and tantalise the audience.

    What else ,as a sensation, is required in a Film?Kudos to K.Balachandar.

    நான் அவனில்லையில் ஜெமினியின் நடிப்பு விசேஷமாய் அலச பட வேண்டியது. வெளி பார்வைக்கு நகைச்சுவையாய் தோன்றும் ஆழ்ந்த கதையமைப்பில் அவர் பங்கு மிக மிக delicate ஆனது. exemplarily executed &Near perfect .

    பல வேடங்கள் புனையும் ஜெமினியின்,படம் முழுக்க பிரதான இணைப்பாக வரும் வேடம் நெய்சு வேலை செய்யும் நாஞ்சில் நம்பி.இந்த வேடத்திலேயே பிடி படுவதாலும்,கோர்ட் விசாரணை முழுக்க இந்த பாத்திரமே கையாளுவதாலும் ,இதுவே முக்கிய பாத்திரமாகும்.

    இது கொஞ்சம் சிக்கலான பாத்திரம்.

    நகைச்சுவையும் காட்ட வேண்டும்,seriousness இழக்க படகூடாது. நாஞ்சில் slang பேசும் பாமரனாக காட்ட வேண்டும்.தன் வழக்கில் தானே வக்கீலாகவும் வாதாட வேண்டும்.சாட்சிகளை, குறுக்கு விசாரணை செய்யவும் வேண்டும்,அதே நேரம் மித மிஞ்சிய புத்திசாலித்தனம் வெளியாகவும் கூடாது.சாட்சிகளின் பலவீனத்தை வைத்து மடக்க வேண்டும்.அதே நேரம் தெரிந்ததாக காட்டி கொள்ள கூடாது. குற்ற சாட்டுகளால் பாதிக்க பட வேண்டும்.அதே சமயம் அந்த குற்றங்கள் தன்னை சேராதவை என்று குறிப்புணர்த்த வேண்டும்.இந்த கத்தி மேல் நடக்கும் பாத்திரத்தில் ஜெமினி தவிர வேறொரு நடிகனை கற்பனை கூட செய்ய முடியாது.(என் நெஞ்சில் நிறைந்த இதய தெய்வத்தையும் சேர்த்தே).வெகுளி தனத்தில்,அவ்வப்போது எட்டி பார்க்கும் குரூர புத்திசாலித்தனத்தை அவர் உணர்த்தும் பாங்கு.ஆனாலும் என்னதான் perverted crook என்றாலும் violet unconditional love காட்டும் போது(பாவம் ,இவளுடன் செட்டில் ஆகவே விழைவார்),கண்களின் ஓரத்தின் துளிர்க்கும் துளியே துளி நீர்,அவளை குறுக்கு விசாரணை செய்யாமல் காட்டும் மெல்லிய பரிவு. காதல் மன்னன் ஜால வித்தை காட்டுவார்.

    சாரியாக ஒரு வினோத நடை,(சவடால் வைத்தியை ஒத்த பாத்திரம்),வித்தியாச பேச்சு,அக்பர் அலியாக உருதுவில் கிளப்புவது,முக்கியமாக ஸ்டேஷன் மாஸ்டர் இடம் சலீமா தான்தான் என்று விளக்கும் அடாவடி. சித்தப்பா சகாதேவ சாஸ்திரி யாக (வினோத பொடி டப்பா)பேராசை கொண்ட வேத வித்துவாக,லக்ஷ்மண சர்மா,சத்ருகன மேனன் என்று கன்னட ,மலையாள slang பேசி மாட்டி கொள்ளும் கட்டத்தில் மாறி மாறி சமாளிப்பு, ஹரிஹர தாஸ் சுவாமிகளாக அண்ணாவுடன்,நேருவுடன்,மகாத்மாவுடன் கற்பனை உரையாடல்,கைவீக்கம்,கால்வீக்கத்திற்கேல்லாம் முற்பிறவி ரீல் ,ஜாக் சாலமன் என்ற தும்மல் பார்டி ஆங்கிலோ இந்தியராக படத்தையே இமாலய உயரத்திற்கு தூக்கி விடுவார்.ஒரு black humour ,situational humour இழையோடும் காட்சிகளில் எந்த முக சேட்டையும் இல்லாது நம்மை நகைச்சுவை புன்னகை பூக்க வைப்பார்.

    நான் அவனில்லை ஒரு மனோரஞ்சித மலர். முழு யானையை பார்க்க வழியில்லாத குருடர்களான தமிழர்கள், அதன் ஏதாவது ஒரு பாகத்தை தொட்டு உணர்ந்திருந்தாலே போதும்.இந்த படம் மிக உயரங்களை அடைந்திருக்கும்.

    இந்த படத்தை ஒரு ஜாலியான பொழுது போக்கு படமாக பார்க்கலாம். ஈர்ப்பான காட்சிகள்,நிறைய heroine கள். சிறப்பான பாடல்கள்.

    மிக சுவையான நகைச்சுவை படமாக பார்க்கலாம்.

    சமுதாய கருத்துக்கள் விரும்புவோர்க்கும் நிறைய.(இந்த மாதிரி ஜென்மங்கள் இன்றும் உண்டு.)படத்தில் தீனி உண்டு.

    புதுமை விரும்பிகளுக்கு buffet டின்னெர்.

    ஆனால் ஒன்று. ஒரு நொடி கூட கண்ணையோ,காதையோ,மூளையையோ மூடி casual ஆக பார்க்க முடியாமல்,நம் நேரத்தை இந்த படம் மட்டுமே தக்க வைத்து விடும்.

    ஒரு ஸ்டாம்ப் பின் பக்கம் எழுதி விட வேண்டிய oneliner இவ்வளவு சுவையாக நம் கருத்தை கவனத்தை ஈர்த்தது கே.பாலசந்தர் என்ற ஒரு மேதையால்தான்.சம்பவ நகைச்சுவை மற்றோர் ஏமாறும்,மற்றோரை ஏமாற்றும்,கதாநாயகனின் இயல்பு சார்ந்ததே. சாட்சிகளின் குறுக்கு விசாரணையில் பாத்திரங்களின் தன்மைக்கேற்ப plasticity கொண்ட நாஞ்சில் நம்பியின் இயல்பான நகைச்சுவை,ராணி போன்ற புத்திசாலியாக்க பட்ட பாத்திரங்களின் திருப்பும் நேர்த்தி,ஜட்ஜ்-மகள் இடையேயான புத்திசாலித்தனம் நிறைந்த,நேர்த்தியான கதையை நகர்த்தும் அன்னியோன்யம்,நாயகனின் ஒரே சாட்சியான தானம்மாள் போன்றோரின் கதையுடன் ஒட்டிய crude (கோவை சரளா type )நகைச்சுவை,கடைசியில் முத்தாய்ப்பாக நாஞ்சில் நம்பியின் பார்வை வீச்சில் அச்சச்சோ படும் அச்சச்சோ என்று படம் முழுதும் தெறிக்கும் நகைச்சுவை பொறிகள், எண்ணி மாளாது.

    அதையெல்லாம் மீறிய பாலச்சந்தரின் லாஜிக் மீறாத தற்செயல் சம்பவங்களின் சுவையான இணைப்பு கோர்ப்பு,ஒரு சம்பவம் இன்னொன்றுக்கு துணையாகி வேறொரு அபத்தத்தில் முடியும் சுவையான linked situations ,ஒவ்வொரு சம்பவத்துக்கும் சுவையான leads என்று இக்கால திரை கதை,வசனகர்த்தாக்கள்,இயக்குனர்கள் படிக்க வேண்டிய பாடம்.

    இன்றைய டொராண்டினோ,நோலன் போன்று பரிமளித்திருக்க கூடிய உலக இயக்குனர் தமிழில் பிறந்து தொலைத்தது....(நடிகர்திலகத்துக்கு நேர்ந்த அதே விபத்து.தமிழனாய் பிறந்து தொலைத்த தமிழின் இரு பால்கேக்கள்)

    இந்த படத்தின் சுவையான காட்சிகளை விஸ்தாரமாக விவரிக்க ஆசையிருந்தாலும்,இது கண்டு,கேட்டு,களித்து,சுவைக்க வேண்டிய, நான் மிக மிக strong ஆக prescribe செய்யும் ஒரு படம்.

    மெல்லிசை மன்னரின் நான் சின்னஞ்சிறு பிள்ளை ,மந்தார மலரே,ராதா காதல் வராதா அந்த கால popular numbers

    எனக்கு பிடித்த பாலுவின் மற்றொரு பாணி.சினிமாடிக் லைசென்ஸ் உபயோகித்து அவர் கொடுக்கும் எதிர்பாரா அதிர்ச்சிகள்.புன்னகையில் கற்பழிப்பு காட்சிக்கு பாடல் உபயோகிப்பு.இதில் பக்தர்கள் அனைவரும் ராணியை பண்ணும் மாஸ் rape .

    மற்றபடி அனந்து,சர்மா,கிட்டு,லோகநாதன்,என்று இயக்குனர் சிகரத்தின் வழக்க கூட்டணி.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  4. #303
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பாலசந்தர் படங்களில் என் 10விருப்பங்கள்.

    1)பாமா விஜயம்.
    2)மன்மத லீலை.
    3)நான் அவனில்லை.
    4)அவள் ஒரு தொடர்கதை.
    5)அரங்கேற்றம்.
    6)இரு கோடுகள்.
    7)அவர்கள்.
    8)தண்ணீர் தண்ணீர்.
    9)அபூர்வ ராகங்கள்.
    10)நூற்றுக்கு நூறு.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  5. #304
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கே.பாலசந்தர் என்ற துரோணரே,

    உங்களுடன் மானசீகமாக கற்ற கோபால் என்ற ஏகலைவன் ,கட்டை விரலை மட்டுமல்ல ,எதையும் விலையாக தர சித்தமாக இருக்கிறேன். மீண்டு வாருங்கள். நீங்கள் வருவீர்கள். அந்த மனத் திடம் தங்களுக்கு உண்டு.

    1972 இல் உங்கள் மூன்று படங்களின் தொடர் தோல்வி,பாகஸ்தர்களிடம்
    மனஸ்தாபம்,angina என்ற பிரச்சினை தந்த இதய பிரச்சினை என்பவற்றில் இருந்து மீண்டு ,அரங்கேற்றத்தில் இருந்து புது பாதை கண்டு ,இரு முக்கிய நடிகர்களை அறிமுகம் செய்து,இயக்குனர்களின் இயக்குனராக திகழ்ந்து வரும் எமது பெருமையே? புத்திர சோகம் உங்களை பலவீன படுத்தி இருக்கலாம். நாங்களெல்லாம் உங்கள் புத்திரர்களே.

    எங்களுக்காக மீண்டு வாருங்கள் எங்கள் பிதாமகரே!!!

    நலம் பெறுங்கள்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  6. Likes chinnakkannan liked this post
  7. #305
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    நான் அவனில்லையை முதலில் பார்க்கவில்லை..கேட்க மட்டும் செய்திருக்கிறேன். ஒலிச்சித்திரம். சிலோனா அல்லது மார்கழி மாதத்திலோ அல்லது ஒர்க்*ஷாப் ரோடின் முனையில் மங்கையர்க்கரசி ஸ்கூலுக்கு செல்வதற்கு முன் இருக்கும் வீரகாளியம்மன் கோவில் திருவிழா நேரத்திலோ கேட்டிருக்கிறேன்.. கேட்பதற்கு இண்ட்ரஸ்டிங்க்காக இருந்த படம். (சில படங்களைத் திருப்பித் திருப்பிப் போடுவார்கள் எல்.பியில்..கேட்டு மகிழ்ந்த காலம் அது.. திருவிளையாடல், சரஸ்வதி சபதம் தில்லானா மோகனாம்பாள் என). வேறு எல்பி ஒலிசித்திரம் நினைவில் வரவில்லை..

    நிற்க நான் அவனில்லையை – சொன்னால் நம்ப மாட்டீர்கள் – சில வருடங்களுக்கு முன்னால் தான் பார்த்தேன்.. எனக்கு மிகப் பிடித்திருந்தது.. இன்னொரு விஷயம் தெரியுமா..புது நான் அவனில்லையை ப் பார்த்து தலையில் அடித்துக் கொண்ட பிறகு தான் பழையது பார்க்க வாய்ப்பு எனக்குக் கிடைத்தது..

    சொன்னாற்போல மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒரு படம். வெகு புத்திசாலித்தனமாக எடுக்கப்பட்ட படம்..அன்றைய காலகட்டத்தில் ஏற்கப் படவில்லை என்பது புதிர் தான். இன்ஃபாக்ட் விழுந்து விழுந்து சாவித்திரிக்கு அட்வைஸ் செய்த ஜெமினி இந்தப் படம் எடுத்து நஷ்டப் பட்டார் என டாக்டர் கமலா செல்வராஜ் ஜெமினி கணேசனின் சரிதை - டிவிடியில் சொல்லியிருக்கிறார்.

    க்ளைமாக்ஸில் இரண்டு பெண்கள் சண்டை போடுவது போலவரும்- அது என்னவோ பிடிக்கவில்லை.. ராஜ சுலோச்சனா ஆங்கிலோ இந்தியப் பெண் என்பதை நம்புவதற்கு க் கஷ்டமாக இருந்தது..ஆரம்பத்தில் இந்த லஷ்மண சர்மாவிடம் ஆங்கிலத்தில் பேசும் பெண்மணி (எம்.என்.ராஜமா நினைவில்லை), திட்டீர் என அதிர அதிர கவர்ச்ச்சி உடையில் கோர்ட் ஏறும் ஜெயசுதா, அக்பர் அலியிடம் ஏமாறும் லஷ்மி ஜானிவாக்கர் என வரும் தேங்காய் சீனிவாசன், க்ளைமாக்ஸில் யாருதான்யா நீ என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ளும் தறுவாயில் கத்தியால் நாஞ்சில் நம்பியைக் குத்தி வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் அசோகன் இன்னும் அல்மோஸ்ட் எல்லாவிதப் பாத்திரங்களுமே சுவாரஸ்யம் தான்..அழகாய்க் கோர்த்துத் தந்தவர் கே.பி தான்..

    ம்ம் மறுபடியும் பார்க்க வேண்டிய எண்ணத்தைத் தூண்டி விட்டு விட்டீர்கள் கோபால்

  8. #306
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    BEHINDWOODS COLUMN

    By Jyothsna

    KB SIR, PLEASE GET WELL SOON !

    K Balachander’s Apoorva Raagangal was known for a riddle which was the fad of the town those days. It was something like this - if my son's mother-in-law's daughter is my wife then what is the relationship between my wife's daughter and my son? It truly was complicated but had the right kind of hooks. Balachander’s films always had that unique selling point besides his avant-garde themes. They were different and brand new which went on to earn him a loyal patronage.



    In his career spanning one hundred odd films, the veteran had handled assorted premises and topics. Middle class people, their psyche, emotions and relationships ruled the centre stage in his films. This perhaps is the reason for his projects to strike a chord with the majority. The screen play screamed of intelligence and novelty.



    If in Apoorva Raagangal, it was about unusual relationships, it was about a woman standing up to her principles, slaying her husband in Achchamillai Achchamillai and Arangetram was all about a woman succumbing to sell her body to protect her family.



    We in fact wonder if the directors of today could conjure up such daring, interesting, challenging and radical themes in their films.



    Women invariably occupied centre space in his films and the character of the men would actually draw mooring from them. Such a strong portrayal of women has become a rarity now. KB never objectified women in his films and there would always be a feeling of awe of his women characters when you get out of theatres. They were all simple, relatable, loving, caring, strong and stood for their beliefs but all the same retained their alluring feminine side. Nizhal Nijamagiradhu, Avargal and Nool Veli are just a few examples. Saritha, Sujatha and Sridevi are quite fortunate to have been in KB’s films who translated his vision on to the silvers screen with aplomb. Kamal and Rajini had a glorious time portraying varied roles under KB’s powerful writing.



    And mind you, KB never shied away from talking for the society or for handling topical issues boldly. Thaneer Thaneer in 1981 was about the drought situation prevailing all over in Tamil Nadu then and Varumaiyin Niram Sigappu delved on the unemployment crisis bordering on leftist principles.



    It’s not today that we get to watch psychological disorders in films. Way back in 1982, more than three decades ago, the veteran had discussed about multiple personality disorder in Agni Saatchi which found just a few takers for its complex theme. Saritha was at her superb best in the film. 47 Naatkal showcased the plight of innocent sparsely read woman caught in a frightening marriage in foreign soil.



    LOVE, the omnipotent and the omnipresent emotion of Tamil cinema assumed magical proportions with his Maro Charithra and Ek Dujhe Ke Liyae which was a blockbuster in those days running to several weeks. Love was very strongly in the ‘air’ then and was glorified magnificently.



    KB is always musically inclined and the ‘transcending times’ quality of songs from his films stands testimony to this. He had worked with Viswanathan, Ilayaraja, Rahman and others. His musical acumen brought out the best from them. His leaning and soft corner towards Mahakavi Bharathi is evident in many of his films that would either have a song from the great poet or strong references to the Mundaasu Kavignan.



    This Dada Saheb Phalke Awardee’s rich repertoire can never be contained or discussed in such a short write up and when it comes to discussing the veteran’s work, it is not even ‘Vaanamae Ellai’ but beyond that. Just like his film’s title Apoorva Raagangal, he is rarest among rarest film makers who have given cinema a lot of purpose.



    Get well soon sir! We are waiting!
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  9. Likes raagadevan liked this post
  10. #307
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பாலசந்தர் மறைவுக்கு இந்த ஏகலைவன் அஞ்சலி.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  11. #308
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    இளமையின் மீதான காதல்
    தமிழ்ப் பற்று
    நினைவில் நிற்கும் பெண்பாத்திரங்கள்
    என்றும் ரீங்காரமிடும் இசைப்பாடல்கள்
    சூழலுக்குத் தேவையான வரிகள்
    கர்நாடக இசை பரதம் பரப்புரை
    சின்னத்திரை நாடகங்கள்
    இப்படி தனக்கென ஒரு பாதையை அமைத்து
    வீறுநடை போட்ட வெற்றி மனிதர்
    நன்றி கேபி!

    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  12. #309
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    தமிழ் சினிமாவில் ஸ்ரீதருக்குப் பிறகு புதிய டிரெண்டை உருவாக்கியவர் கே.பி. நடிகர் திலகத்துடனான முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர். எதிரொலியோடு நடிகர் திலகம் கேபி கூட்டணி நின்று போனது தமிழ் சினிமாவிற்கு துரதிருஷ்டம். எதிரொலி மட்டும் வெற்றி பெற்றிருந்தால் அது எந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்திருக்கும் என்பது கணித்திருக்க முடியாததாகும். பல படங்களில் அவருடைய கதாபாத்திரங்கள் அவருக்குள் நடிகர் திலகத்தை உருவகப் படுத்தி அதனை வெளிக்கொண்டு வந்துள்ளதாக நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன். அதற்கு மிகச் சிறந்த உதாரணம் நான் அவனில்லை. ஜெமினி கணேசன் நடித்திருந்தாலும் கூட கேபியை பொறுத்தவரை அவர் அந்தப்பாத்திரத்திற்குள் நடிகர் திலகத்தை உருவகப்படுத்தியே வடிவமைத்திருந்தார் என நான் பலமுறை நினைத்திருக்கிறேன், இன்றும் நம்புகிறேன். அந்த உருவகத்தை ஜெமினி கணேசன் மூலமாக அவர் வெற்றிகரமாக வெளிக்கொண்டு வந்தார் என்றும் நான் எண்ணியதுண்டு. அவருக்குள் நடிகர் திலகத்தை வைத்து இன்னும் படங்களை இயக்கியிருக்கலாமே என்கின்ற ஏக்கம் நிச்சயம் இருந்ததுண்டு என்றும் அதை சில கதாபாத்திரங்களின் வடிவமைப்பின் மூலம் அவர் தீர்த்திருக்க வாய்ப்புண்டு என்றும் நான் நம்பி வருகிறேன். இதற்கொரு இன்னொரு உதாரணம், நூற்றுக்கு நூறு. இதில் வரும் பேராசிரியர் கதாபாத்திரத்தைப் பொறுத்த மட்டில் TO SIR WITH LOVE மற்றும் ஆண்டவன் கட்டளை இந்த இரண்டு நாயகர்களின் கலவையாக வடித்திருந்தார் என்பதே என் அபிப்ராயம்.

    இன்னும் நூறாண்டுகளுக்கு கேபியின் சகாப்தம் நிலைத்திருக்கும். ஸ்ரீதரும் கேபியும், பீம்சிங்கிற்குப் பிறகு தமிழ்த்திரையுலகை வலுவாக தாங்கி நின்ற தூண்கள்.

    ஆனால் இந்தத் தூண்கள் சாயவில்லை, சொல்லப்போனால் அந்தத் தூண்களின் வண்ணமாக இவர்கள் கலைந்திருக்கலாம். இவர்கள் வடித்த தூண்களாக மகேந்திரன், பாரதிராஜா, போன்றவர்கள் தாங்கி நிற்பார்கள். அவர்களுக்குப் பின்னும் அவர்களுக்கு அடுத்தடுத்த தலைமுறையினர் அந்தப் பொறுப்பை நிச்சயம் ஏற்பார்கள்.

    வருங்காலத்தில் தமிழ் சினிமாவின் பாதை உலக உச்சியை நோக்கிச் செல்லும். அப்போது அவர்களை அங்கே வரவேற்க கே.பி., ஸ்ரீதர், பீம்சிங், போன்றோர் காத்திருப்பர்.

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  13. #310
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    He took Tamil cinema beyond hero-centric creations

    -B. Kolappan; The Hindu, December 23, 2014

    http://www.thehindu.com/entertainmen...cle6719996.ece

Page 31 of 33 FirstFirst ... 212930313233 LastLast

Similar Threads

  1. Who is better - Barathiraja or Balachander
    By S.Balaji in forum Tamil Films
    Replies: 285
    Last Post: 16th December 2014, 07:32 AM
  2. How to describe it? Nothing but genius!
    By ananth222 in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 7
    Last Post: 20th June 2005, 08:26 PM
  3. Here's what an ACTUAL genius looks like!
    By Observer_Is_Back in forum Current Topics
    Replies: 33
    Last Post: 4th February 2005, 09:47 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •