Results 1 to 10 of 324

Thread: K. BALACHANDER - GENIUS

Threaded View

  1. #17
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நான் அவனில்லை- 1974.

    தமிழ் படங்கள் 1973 முதல் கேவலமான நெருக்கடியை எதிர்கொண்டன. ஸ்ரீதர் ,கே.எஸ்.ஜி ,பீம்சிங் போன்றோர் தேய்ந்து மறைந்து கொண்டிருந்த நேரம். ஹிந்தியில் பாபி,யாதோன் கி பாரத் ,அபிமான் ,ஷோலே,சோடி சி பாத் என்று தூள் கிளப்ப , ஆர்.டீ.பர்மன்,லட்சுமி-பியாரி, சலில் போன்றோர் இசையில் பட்டையை கிளப்ப ,தமிழில் மூன்றாந்தர இயக்குனர்கள், தன் பழைய பெருமைகளில் தோய்ந்து தமிழ் படங்களை தேய்த்து தரை மட்டமாக்கி கொண்டிருந்த ஹீரோக்கள்,பெருங்காய டப்பா மட்டுமே மிஞ்சிய இசையமைப்பாளர்கள் என்று இளையராஜா,பாரதிராஜா,மகேந்திரன் ,பாலுமகேந்திரா வருகை தந்த 1977 வரை களப்பிரர் ஆட்சி போல இருண்ட காலத்தில் அவதியுற்ற தமிழ் பட ரசிகர்களின் ,ஒரே நம்பிக்கையாக புதுமையான ,தரமான படங்களை தந்து கொண்டிருந்தவர் கே.பாலசந்தர்.

    1973 அரங்கேற்றம் முதல் ,தன் பாணியையே மாற்றி புது அலைக்கு தக்க தன் அலைவரிசையை tune பண்ணி மெருகேற்றி ,தரமற்ற தமிழ் பட talkie களுடன், கற்பனை வளமற்ற சாரமற்ற திரைகதை,நேரிடை cliched வசனங்கள், அதை விட கற்பனை வளமில்லா நேரிடை cliche நடிப்பு, ஆகியவற்றுடன் கே.பீ. one man army ஆக போராடி கொண்டிருந்தார். அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன், பின்னால் வெளியான அவள் ஒரு தொடர்கதை,அபூர்வ ராகங்கள்,மன்மத லீலை என்று, கற்காலத்திற்கு பின் தங்கி இயங்கி ,உலகத்தை விடுங்கள்,இந்திய நீரோட்டத்துடன் கூட இணைய மறுத்த தமிழ் படங்களின் ஒரே காவலனாக போராடி கொண்டிருந்த காலம்.

    நாயகர்களை முன்னிறுத்தி ,வெறியர்களுக்கு தீனி போடாமல்,கதைகளத்தை முன்னிறுத்தி,காலத்தோடு மாற விரும்பிய இயக்குனர்களின் ஒரே நம்பிக்கை பழைய தலைமுறையாயினும் ,ஜெமினி ஒருவரே .


    அதுவரை ஜெமினி soft sophisticated romance ,intelligent situational காமெடி ,விரக்தி மற்றும் தாழுணர்வு கொண்ட கதாபாத்திரங்கள், நல்மனம் கொண்ட கிராமத்து மனிதர் பாத்திரங்களிலேயே சோபித்தார்.முதல் முறையாக ,ஜெமினியின் நிஜ இயல்புக்கு ஒத்த ,நிஜ கதையை தழுவிய வங்காள நாடக inspiration இல் பாலசந்தர் தந்த காலத்தை மீறிய அதிசயம் நான் அவனில்லை.

    இந்த படத்தை திருச்சி பாலஸ் திரையரங்கில் கே.பாலச்சதரின் அக்காள் மகன் என் நண்பர் பீ.அசோக் குமார் உடன் பார்த்த அனுபவம்.(கே.பீ யின் மகள் புஷ்பாவும்,மகன் கைலாசமும் எனது கல்லூரியில் உடன் படித்த (ஒன்றிரண்டு வருட வித்யாசம்)நண்பர்களே)

    இனி நான் அவனில்லை படத்தை பற்றி பார்ப்போம்.

    நான் அவனில்லை கதை களம், சம்மந்த பட்டவர்களின் பங்களிப்பு இவற்றை ஆராயு முன்----

    தமிழிலேயே எனக்கு மிக மிக பிடித்த படங்களில் ஒன்றாக நான் கருதுவது நான் அவனில்லை.

    ஜெமினிக்கு ,இந்த படத்துக்காக தேசிய விருது கிடைக்காதது நமக்கெல்லாம் பெருத்த அவமானம்.என்ன ஒரு performance ? சும்மா புகுந்து விளையாடி பெடலெடுத்திருப்பார். அவரின் 9 சொச்ச வேடங்களும் தனித்தனியாக நில்லாமல் கதையுடன் பிணைந்து பயணிக்கும். காதல் மன்னனுடன் ,காதல் இளவரசனும் (அன்றைய வளரும் நடிகர்)ஒரு சிறு சுவையான வேடத்தில் மலையாளம் பறைவார்.

    பாலச்சந்தரின் மருமகன் குறிப்பிட்டதில் இருந்து நான் அறிந்தது, ஜெமினிக்கும் (சொந்த படம்),கே.பிக்கும் பிணக்கு ஏற்பட்டு ,இடைவேளைக்கு பின்பு கே.பீ நினைத்த மாதிரி அமையாமல் கே.பீக்கு முழு திருப்தி இல்லையாம். ஆனால் புத்திசாலி ரசிகர்களுக்கு ,இது என்றுமே முழு திருப்தி தந்த படமே.

    ஒரு சாதாரண கோர்ட் ரூம் டிராமா , எப்படி சுவையான பாத்திரங்களால்,nerrative surprise நிறைந்த திரைக்கதையால்,கூர்மையான இயல்பான வசனங்களால் ,ஒரு வித்தியாச சிந்தனை கொண்ட இயக்குனரால் பரிமளித்தது என்று பார்ப்போம்.வந்த போது பெரிய வெற்றி படமல்ல.புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காணாத காலம்.

    இந்த படத்தில் விறுவிறுப்பு,திருப்பங்கள்,நகைச்சுவை(டயலாக்,si tuati on-linked) ,அங்கங்கே மிளீரிடும் மனிதம்,கட்டி போடும் வசனம்(ஒரு நிமிடம் நாம் கவனத்தை நகர்த்தினால் முக்கியமான லிங்க் போய் விடும்)என்று ,அருமையான ஒரு படைப்பு. இந்த அளவு wholesome என்று சொல்லத்தக்க படங்கள் இந்திய அளவில் மிக குறைவே.

    நான் எஸ்.எஸ்.எல்.சி முடித்த கையோடு, பீ.யு.சீயில் படிக்கும் போது இந்த படம் பார்த்த போது தீவிர கே.பீ.ரசிகன். ஜெமினியை பிடிக்கும்.(தீவிர ரசிகன் என்று சொல்ல முடியாவிட்டாலும்)

    அடுத்தடுத்த நாட்களில் ஐந்து முறை பார்த்து என் பெரியப்பா ,அப்பாவிற்கு போஸ்ட் கார்டு எழுதி உன் பையனுக்கு எதிர்காலமே இல்லை என்று தெரிவிக்கும் அளவு தீவிரமாகி, இந்த படம் என்னை பாதித்தது.

    இன்று பார்க்கும் போதும் அதே உணர்வையே அடைகிறேன். இதை பற்றி விலாவரியாக எழுதும் துடிப்பை என் கைகள்,இதயம்,அறிவு மூன்றும் பரபரக்கிறது.
    இனி முகவுரை முடிந்து படத்தினுள்.....
    Last edited by Gopal.s; 17th December 2014 at 03:48 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

Similar Threads

  1. Who is better - Barathiraja or Balachander
    By S.Balaji in forum Tamil Films
    Replies: 285
    Last Post: 16th December 2014, 07:32 AM
  2. How to describe it? Nothing but genius!
    By ananth222 in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 7
    Last Post: 20th June 2005, 08:26 PM
  3. Here's what an ACTUAL genius looks like!
    By Observer_Is_Back in forum Current Topics
    Replies: 33
    Last Post: 4th February 2005, 09:47 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •