Page 14 of 15 FirstFirst ... 412131415 LastLast
Results 131 to 140 of 150

Thread: iNayak kavi arangam

  1. #131
    Senior Member Veteran Hubber
    Join Date
    Dec 2004
    Location
    USA
    Posts
    3,099
    Post Thanks / Like


    Quote Originally Posted by bis_mala

    அன்றுள நந்தன் பாணன்
    ஆயவர் பேசிக் கொண்டார்
    நன்றிவை சொன்ன பாங்கு
    நான்மிகப் புகழ்ந்து சொல்வேன்;
    ஒன்றது தெய்வம்; மாலும்
    உயர்சிவ னாரும் என்ற
    தென்றிசை மேலோர் வாய்மை
    தெளிவுற நீவிர் சொன்னீர்.
    நன்று.! நன்றி.!!


    .

    கடவுளா.? எதற்கு.?


    ...வணங்கத்- தகுதி யாருக்கு.? ஏன்.?






    நாயன்மார் நந்தனார் - திருப்பாணாழ்வார் இடையே…..


    ... கற்பனை-உரையாடல் --- தொடர்ச்சி





    [html:21e87f9a7a]


    [/html:21e87f9a7a]


    1. - நந்தனார்
    அதிக-மிகு பூவுலகப் பொறுப்பு பணி பெரு-கவலை நமக்கு இருக்க நந்தா
    புதிரான யாரோ ஒருவன் கடவுளாம் அவன் உள்ளானா என்றே தெரியாது
    விதியாம் அவரவர் தலை-எழுத்துப்படி நடக்கும் பாவி நாம்-என எம்மவர்
    நிதி-பேறு கீழ்-சாதி நமக்குத் தகுதி-இல்லை ஈசன்-பணி உயர்-குலத்ததே.!

    2.
    குலப்-பிறவி சாதி-அடிப்படை மக்கள் தேவைக்கு ஏற்ப மன்னர்கள் சட்டம்
    நிலவு நியதி ஏனைய குலத்தோர் சமுதாயத்தோர் அனைவர்க்கும் பொது-
    நலம்-காக்க இறைவன் திருவருள்-வேண்டி ஈட்டல் வேதியர் பணியே; மேல்-
    உலகோ, கோயில் துதி நம்பி வேண்டலோ நமக்கு தகுதி இல்லை என்றார்

    3.
    என்றும் கோயில்-அணுகார் காக்கும் கடவுள் நினையார் முனையா எம்மவர்
    தின்று-திரி மனித-உரு மிருகமே வாழ்-நோக்கம் பொருள்-அறியாப் பேதையர்
    அன்று-அன்றைய பாடு-மட்டும் சிந்தித்த அறியாமை-சூழ வளர்ந்தேன் நந்தன்
    நன்றே வாழ்-நெறி எனது ஐயங்களுக்கு விடை விளக்கினார் ஐயர் குருசாமி

    4.
    குருசாமி உபதேசம் கற்றேன் வேதியர் தொழில்-கடமை சமுதாய பொது-நலத்
    திருவருள், இயற்கைச் சீற்றமிலா-வளம், மறை-ஓதல், யாகம், கோயில் பணி
    வறுமையற நாடு-நலம் அன்றி அவரவர் தனித்-தேவை, பயம்-அற வாழ்க்கை
    உறு-விருப்பம், பாரிப்பு கனவு நனவாக இறை-துதி அனைவர்-தம் கடமையே

    5.
    கடமை எவரும் அவரவர் நன்னலம் கருதி, தாமே இறைவனை வழிபடு நன்றி
    கடவுளே தத்தம் தந்தை-தாயாய் இறையருள் நலம் பொலிகவே சுய-முயற்சி
    உடன்-வாழ் துணைவனைத் துதி, பிறர் சார்போ.? சீந்தா மா-மன்னனோ ஈசன்.?
    கடன்-பட்டோம் மாந்தர் ஒவ்வொருவருமே கடவுள்-துதியால் முன்னேற்றமே.!

    6,
    ஏற்றம்-பெற வாழ்- வழிகாட்டினார் எனது குரு எனக்கும் தகுதி உண்டு-என;
    போற்றி ஆசானைப்-பற்றி வழிபட்டேன் ஊர் எல்லைக்கோயில் திருப்பங்கூர்
    தோற்றினன் ஐயன் நான்-விழைந்தவாறே அருள் பெற்றேன் புவி-சுவர்க்கமே
    வேற்றுமை தாழ்-குலம் கருதாக் கடவுள் சிவன் அருள்வன் முயல்பவர்க்கே

    7.
    முயன்று மென்மேல் முன்னேற்றம் வாழ்-இலக்கண புவி-சுவர்க்க இடைப்-படி
    சுய-முயற்சியால் மட்டுமே இறை-அருள் மாந்தர்க்கு ஓங்கு நலம் விளையும்
    தயக்கம்–இன்றி மேல்படி முக்தி தில்லையம்பலம் தரிசிக்க எசமான் உத்தரவு
    உயர்வுற நாடினன், நம்பவில்லை அவர் பறையனுக்கும் பக்தியா தேவையா.?

    8.
    தேவை எசமான் நிபந்தனைப்படி என் கடமை-ஆற்றியதன் நற்பயன் கண்கூடு
    சாவை நாடிப் பெற்றேன் மறுபிறவியிலா விடுதலை பேரானந்த சிவ-லோகம்
    சேவை திருமால்-நெறி வேறோ.? மந்தித்தாய்-நெறி உமக்கு ஏற்பு அல்லதோ.?
    கோவை நாடாது முக்தி நீர் இன்னும் புவி-உழல் தாழ் ஏன் பாணரே புகல்வீர்


    9. - திருப்பாணாழ்வார்
    புகல்-இறுதி திருமால்-நெறியிலும் மந்தித்தாய்-நெறி உண்டு நமக்கு முன்பே
    புகழ் பழம் திருமால்-அடியர் பறையர் நம்பாடுவான் வரலாறு கைசிக-ஏகாதசி
    இக-சுகம் வெறுத்து புவி-வேண்டா நந்தரே உம்மைப்-போல் மேல்-உலகு, திரு-
    முக-தரிசனம் வேண்டினர் கோயில் வெளி-நின்று திருக்குறுங்குடி நம்பியை

    10.
    நம்பி-நாரணன் கோயில்-தரிசனம் மறைத்தது கொடி-மரம் வெளி-நின்று காண
    நம்பியே நாடி-வந்த தூ-அடியனைக் கை-விடுவனோ பெருமாள்.?, அக்கணமே
    தம்பம் துவஜ கொடி-மரம் விலக்கி நேர்-தரிசனம் சமுதாயத்தால் தாழ்வுற்ற
    நம்பாடுவான் பறையருக்கும் வைகுந்தம் அருளினன் தொழுகுலம் சேர்த்தே


    --- தொடரும்

    .
    .

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #132
    Senior Member Veteran Hubber
    Join Date
    Dec 2004
    Location
    USA
    Posts
    3,099
    Post Thanks / Like
    -


    வாழப்-பிறந்தோமே அன்றி...


    ...பிறரால் தாழத்-துறந்தோமா.?





    நாயன்மார் நந்தனார் – திருப்பாணாழ்வார் இடையே
    ..


    ... கற்பனை-உரையாடல் --- தொடர்ச்சி




    [html:d380bc2ed4]


    [/html:d380bc2ed4]



    1. திருப்-பாணர்
    சேர்த்தே படைத்தான் உயிரினம் ஓர்-அறிவர் புழு முதல் ஆறரிவர் மாந்தர் வரை
    ஒர் புவி ஒரே இடத்தே இசைபட இயலா கூடகில்லாப் பிறவியர் கூடி-வாழவோ
    பார் புவியில் பிறவியிலேயே உயர்வு-தாழ்வு சதியோ விளையாட்டோ விதியோ.?
    யார் கடவுளோ.? காணான் அனைவர் நலம் காக்கும் தாய்-தந்தையோ ஏன்.? ஏன்.?

    2.
    ஏன் தலைமா-படைப்பு மாந்தரிடையும் ஏற்றத்-தாழ்வு பிறவியிலேயே இழி-பட்டம்.?
    வான்-பிறவியரோ நாட்டு வாழ உயர்-குலத்தோர் கல்வி, செல்வம் வசதி; புவி-ஆள
    கோன்-தகையோ அவர்க்குப் பிறவி-அடிமை பறையரோ சுடுகாடு வாழ் தலை-விதி.?
    ஈன்ற தாய் பிழையோ தாழ்-குல அவமானச்-சுமை ஏன் படைத்தாய் படைப்பாளி.?

    3.
    படைப்பாளி இறைவன் பான்மை நோக்கம் அறிய அலைந்தேன் பறையன்-பாணன்
    விடை தேடித்தேடி மா-மன்னர், அடிமை, செல்வந்தர், ஏழை, வீரர் மனிதர் எவரும்
    மடையர் அறிஞர் உயர் தாழ்-குலத்தோர் பாலர்-முதியர் பல்வகையோர் அனைவர்
    கடைசி சேர்விடம் ஒரே நிலம் ஆறடி இடுகாடு சுடுகாடே, கொள்-வடிவம் பிணமே

    4.
    பிணமே கடமையாய் உடன்-கூடி வாழும் பறை அடியேன் பாணன் மானிடப் பண்பு
    குணம் ஆர்வமுற நல்லார் அன்பார் வேதியர் அறிஞர் பண்டிதர் பல்வேறோர் நாடிய
    கணமே அடுத்தடுத்தே என்-மனக் குறை கவலை போக்கினர் வாழ்க்கை-நெறி பற்றி
    மணம்-உயர் மாந்தர் ஓரே இனம், யாவரும் சமமே இறைவன் நோக்கம் ஐயம்-அற

    5.
    ஐயம் வேண்டாம் பாணரே பிறவிக்-குலம் பல்வகை இறைவன் படைப்பு விதி-அன்று
    வியந்தனன் குலப்-பிரிவு மன்னர்கள் விதித்த மனித-சாத்திரம் தொழில் அடிப்படையே
    உயர்வு தாழ்வு தொழில் எதிலும் கிடையாது-எனினும் மூட-வெறியால் ஆளும் அரசர்
    பெயர்-புகழ் தகு நாட்டு-சேவை பறையர்க்கு-இழை மானிடம்-அற்ற மா-பாவம் என்று

    6.
    என்றும் தம்-நாடு ராஜ-விசுவாசி, தியாகி, ஒற்றர், தற்கொலைப்-படையர் அனையர்
    ஒன்றே-இலக்கு நாடு-நலம் தன்னலம்-மறந்து ஆபத்து-எதிர்த்து அரசன் நேர்-ஆணை
    நன்றே செயல்படுத்து அரி-திறம் வீர-விவேகி முழு நம்பத்-தக்கோர் பணியே பறை
    வென்றான் ராமனை உயர்-பண்பு ஆணைத்-தொண்டு பறை-நெறியால் புகழ் பரதன்.

    7.
    பரதன் தன்-மன்னன் அண்ணனின் நேரடி-ஆணைச் செயல்-புரிந்த தியாகி பறையன்
    விரதன் இலட்சுமணன் மன்னனுக்கே தொண்டு சேவகம், சேவகன் இணை-பிரியான்
    சிரமேல் தொண்டு இருவகை சேவகம் பறை மன்னனுக்கோ, இறைவனுக்கோ பணி
    அறம்-ஓங்கு தொழில் புரிந்த போற்றத்தகு பறையர்க்கே இழிவு செய்தனர் மன்னரே

    8.
    மன்னன் முந்தையவனின் பறைத்தொழில் தொண்டர்க்கே பழி-அவமானம், வென்ற
    பின்னவர் அரியணை ஏறியவுடன் அடிமையாக்கி நாடு-கடத்தி சுடுகாடே கதியாக்கி
    தன்னலம் துறந்த தியாகி வீர-மறவரை போற்றிப் புகழத்-தக்கோரை ஆணவ-வெறி
    மன்னரே வம்ச-பரம்பரை துரோகி என அநியாயத் தாழ்வு-பட்டம் சூடு குறையரோ.?

    9.
    குறையிலா தியாக-சீலரை காக்க-வேண்டிய மன்னனே காக்கத்-தவறியது அநீதியே
    முறை-தவறி, ஆளும்-நெறி மீறி அரசர் விதித்த தண்டனை பழி இழி மிருகத்-தனம்
    வரையிலா மேலவன் மன்னர்-மாமன்னனும் வாளா-இருப்பனோ தன் கடன்-பணியர்
    சிறை தீராது பொறுப்பனோ இறைவன் எனவே பாணா கலங்காதே இதோ வழி இரு

    10.
    இரு-வகை அணுகுமுறை மந்தி பூனை தாய்-சேய் மாந்தர் இறைவனைத் தாயாக
    திருவருள் பெற கடைப்பிடி சேய்-பங்கு அதிகம் குரங்குத்-தாயை குட்டி கட்டிப்-பிடி
    பொறுப்பு பூனைத்தாய் பங்கு அதிகம், தாயே குட்டி கவ்விச் செல்லும், சேய்-கொள்
    விருப்பம் தாயே முற்றும் கதி அறியேன் எங்கு-இருப்பினும் வேண்டும் இன்பமே

    11.
    இன்பமே குறையிலா இம்மை மறுமையும் வேண்டும் அடியேன் உகந்த சீர்-நெறி
    தன்னலமே குறியன்று, நம் நல-விரும்பி இறை-அடி அன்பர் பொது-நலம் துறந்து
    என்ன பயன்.? தனி-இன்பத்தைக் காட்டிலும் அடியரொடு-கூடி இன்பமே பேரின்பம்
    பொன்னரும் பூனைத் தாய்-நெறி தூர-நின்றே துதி திருவரங்க-கோபுரம் திருவடியே

    12.
    திருவடியே மறுவடிவு திருமாலே உலகாளும் காப்பு-உரு கோபுர அம்மா தெய்வம்
    சிறு அடி பாவி பாணன் உடல்-தூசி படலாமோ நெருங்கேன் திருக்-கோயில் அருகே
    திருமாலா புனித-மிகு தலத்-தூய்மை சிறியேனால் பழுதாமே ஐயோ மாட்டேனே
    திருவரங்கா காவிரிக்-கரை நின்றே தரிசனம் போதும் அமலன் ஆதி-பிரானே வாழி!
    .
    .
    -- தொடரும்

    .
    [/tscii]

  4. #133
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    bliss of joint effort in god- realisation, meditation

    Quote Originally Posted by Sudhama
    தனி-இன்பத்தைக் காட்டிலும் அடியரொடு-கூடி இன்பமே பேரின்பம்
    பொன்னரும் பூனைத் தாய்-நெறி தூர-நின்றே துதி திருவரங்க-கோபுரம் திருவடியே

    தனித்தலையாய் இறையின்பம் தினைத்துணையே நன்மை!
    பனித்தூய்மை அடியரொடும் இனித்திடுமா றாழ்ந்து
    நினைத்தமர்ந்து நிலைப்படுத்தி நிறைவினையே காணல்
    அனைத்துலக அடியவரும் பனைத்துணையென் றேற்பர்.
    B.I. Sivamaalaa (Ms)

  5. #134
    Senior Member Veteran Hubber
    Join Date
    Dec 2004
    Location
    USA
    Posts
    3,099
    Post Thanks / Like
    -


    புவி-வாழ்க்கை நரகமா, சுவர்க்கமா.? ஏன்.?



    1. நந்தனார்
    வாழி அன்பார் அடியார்கள் வாழி வண் திருப்பாணரே வாழி பரமேசுவரன் வாழி
    ஊழி முதல்வன் துவங்கி உலகு படைப்புச் சிந்தனை யாவும் சுற்றிச்-சுற்றி ஞானம்
    ஏழியல் உயிரினப்-பிறவிகள் குறித்து இழி-பறையன் பேதையேனுக்குமோ தேவை.?
    ஆழி-சூழ் அவனி விந்தை இயற்கை ஆர்வம் தூண்டி-விட்டீர் அன்பரே கூறும்-ஐயா

    2.
    ஐயர் எந்தன் குருசாமியிடம் சிறியேன் ஆர்வத்து-அளவு மட்டுமே கேட்டுக்-கேட்டு
    ஐயங்கள் வாழ்க்கை வாழ்வு-நெறிகளின் யாவும் தீர்ந்து தெளிவுறு சிந்தையனாய்
    வைய வாழ்க்கை ஓர் நரகம் சிறை, சிறியேன் முன்-வினை விளைவு இழி பிறவி
    நையவே நோகும் பறை நந்தா விரைந்து விடுபட விடுதலை முக்தி நாடு என்றார்.

    3.
    என்றுமே எந்தப்-பிறவியும் முன் வினையால் தான் புவி-பிறந்து கடன் தீர்க்க
    நன்றது ஞாலத்து-மிக்கார் மாந்தர் நானிலம் விடுத்து சிவ-லோகம் ஏகவே விதி
    ஒன்றதே இலக்காய் புவி ஆசை வாழ்க்கைச் சிறை வெறுத்து சிவ-பெருமான்
    கொன்றை-வேந்தனை வேண்டு மந்தித்-தாய்-நெறியே பற்றி தாய் இறுகக்-கட்டி.

    4.
    கட்டியே என்-ஐயன் தாயுமானவனை நினைவு சொல் செயலால் குட்டியேன்
    மட்டிலா மாண்-பயன் பெற்றேன் பாணரே இன்றும் சிவ-லோகம் பேரின்பமே
    விட்டில்-பூச்சி போல் புவி-வாழ்க்கை மாய-ஒளியில் மதி-மயங்கியே வீழ்வது
    விட்டு புவிப்பிறவி விடுதலை நாடீரோ மோட்சம் வேண்டீரோ வான்-உலகு.?

    ….தொடரும்

    .

  6. #135
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    good.

    நன்கு சொன்னீர்



    உலகு படைத்தவன் ஊழி முதல்வனாம்
    நிலவு வேணியன் நிறுவிய அமைப்பினில்
    அலவு இலாதவை அழகு மிகநலம்்
    குலவு தமிழினில் கூறி விளக்கினீர்.


    அலவு இலாதவை - குழப்பமிலாதவை.
    B.I. Sivamaalaa (Ms)

  7. #136
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    any more...

    முற்றிற்று போலும்
    முனைப்போ டவர்வரைந்தார்
    உற்றிற்றை நாளில்
    ஒருமுழுமை மற்றிங்கு
    யாதும் எழுமோ
    இனியும் பிறவுண்டோ
    ஏதும் அறிகிலேன் யான்.
    B.I. Sivamaalaa (Ms)

  8. #137
    Senior Member Veteran Hubber
    Join Date
    Dec 2004
    Location
    USA
    Posts
    3,099
    Post Thanks / Like

    Re: any more...

    .
    Quote Originally Posted by bis_mala
    முற்றிற்று போலும்
    முனைப்போ டவர்வரைந்தார்
    உற்றிற்றை நாளில்
    ஒருமுழுமை மற்றிங்கு
    யாதும் எழுமோ
    இனியும் பிறவுண்டோ
    ஏதும் அறிகிலேன் யான்.
    My Dear Sivamala & Other Friends,

    Sorry. I am unable to continue now, due tro my serious EYE-PROBLEM.

    Yes. Now I have come to India (Chennai) for my Retina-treatment in both of my Eyes.

    Even this typing I am doing with much difficulty and strain..

    So my dear Friends, kindly bear with me for a SHORT BREAK.

    By God's grace, I hope ro resume soon.

    Thanking you all , With Best Wishes,
    Sudhaama
    .
    .

  9. #138
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    Wishing..

    விண்தனில் மின்னுக மீனாய்,
    கவிதைக் கனிதர:

    கண்களில் புத்தொளி கண்டே
    கழனி திரும்புக!

    Wishing you speedy recovery.


    anbudan
    B.I. Sivamaalaa (Ms)

  10. #139
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    Quote Originally Posted by Sudhaama View Post
    .


    My Dear Sivamala & Other Friends,

    Sorry. I am unable to continue now, due tro my serious EYE-PROBLEM.

    Yes. Now I have come to India (Chennai) for my Retina-treatment in both of my Eyes.

    Even this typing I am doing with much difficulty and strain..

    So my dear Friends, kindly bear with me for a SHORT BREAK.

    By God's grace, I hope ro resume soon.

    Thanking you all , With Best Wishes,
    Sudhaama
    .
    .
    Dear sudhaama sir,

    Its been a year since u posted anything in hub. I hope ur eye treatment went on well and u are back to normal health. Do keep in touch and keep posting. Your mails are bouncing, hence a message here....

    regards,
    shakthiprabha

    (anyone else knows how he is doing and any updates about him? )

  11. #140
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    கண்களைக் குணப்ப டுத்தச்
    சென்றவர் பரத தேசம்!
    கண்குணம் அடைந்த பின்னர்
    கனிவுடன் வருவார் என்றே
    என்மனம் எதிர்பார்த் திங்கே
    இருந்ததே!எதனால் வந்து
    பொன்புனை கவிகள் செய்யப்
    புகவில்லை புரியா துள்ளேன்.

    எழுத்தவாம் கவிகட் கெல்லாம்
    இருக்குமோ புவியில் ஓய்வும்?
    பழுத்தவோர் அறிவில் ஓங்கும்
    பைந்தமிழ்ச் சுதாமர் தம்மை
    வழுத்துவோம் வாழ்கவென்று[
    வருதலைக் கருதார் ஆயின்
    விழுத்துணைக் குடும்பத் தோடு
    விளைந்திடும் இன்பம் காண்க!!

    Sudhama sir, maybe someone very close to you can help post your message on your behalf as to how things are at the moment. Have a nice rest. Wish you all the best.
    B.I. Sivamaalaa (Ms)

Page 14 of 15 FirstFirst ... 412131415 LastLast

Similar Threads

  1. Centenary of Udumalai Narayana Kavi
    By Oldposts in forum Memories of Yesteryears
    Replies: 9
    Last Post: 27th April 2011, 09:51 AM
  2. KAVITHAI ARANGAM
    By V.Annasamy in forum Poems / kavidhaigaL
    Replies: 38
    Last Post: 21st August 2010, 05:05 AM
  3. Kadal Arangam - IR - Velu Prabakaran
    By Vysar in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 0
    Last Post: 30th July 2009, 09:21 PM
  4. kavi(thai)yin seyalpAdu
    By V.Annasamy in forum Poems / kavidhaigaL
    Replies: 2
    Last Post: 20th June 2007, 01:39 PM
  5. kambanin kavi
    By phinex2005 in forum Poems / kavidhaigaL
    Replies: 0
    Last Post: 21st February 2005, 01:49 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •