Page 11 of 15 FirstFirst ... 910111213 ... LastLast
Results 101 to 110 of 150

Thread: iNayak kavi arangam

  1. #101
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    avan thantha........Sorgham

    II

    continued from last post

    மலைகளைத் தந்தான் மாகடல் தந்தான்
    மாட்டுடன் ஆட்டினை, மாபல தந்தான்
    இலைதழை செடிகொடி காய்கனி தந்தான்
    இன்பமும் கோடியே இனிதுளே வைத்தான்


    துய்ப்போன் பால்வினா வைப்போன் அவனலன்,
    தோன்றிமுன் தொந்தரை செய்வோன் அவனலன்;
    கைப்பொருள் தாவென வேண்டுவன் அவனலன்;
    கரும வினையலால் பிறபதி வுறுத்திலன்.


    Quote Originally Posted by Sudhama
    கதி அகலா அடியர்க்கு யாண்டும் இடும்பை இலவாய்
    தெவிட்டா-இன்பம்

    புவியெலாம் ஆள்க புலம்கண்டு வாழ்க!
    செவியுண வதன்பின் அவியுண வுனதே,
    குவியுறு இன்பமே கொள்கென விடுத்து
    தவியறு வாழ்க்கை தந்தவன் அவனே.
    B.I. Sivamaalaa (Ms)

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #102
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    On the process self -examination

    III

    continued .....

    Quote Originally Posted by Sudhama
    யார் நீ என உன்னையே கேள்வி கேட்டு விடை-அறிய மாட்டாத உத்தமா
    யார் நீ என என்னையே கேட்ட அறிவுக் கண்-மூடிக் குருடா கேள் பேதாய்

    நீயார் என்றே நெடுநின்று வினவி
    நான்யார் என்றே உணர்ந்து நலஞ்செய்
    வான்யார் அவற்கே வளம்பெறு துறக்கம்
    வீண்யார் அவரே விழைந்திவை போற்றார்.

    to continue
    B.I. Sivamaalaa (Ms)

  4. #103
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    karuma vinai.

    Quote Originally Posted by Sudhama
    கைவிடாக் காவலன் கடவுளை நம்பினோர் நல்லார் தன்னைத்தானே முன்னேற்ற
    தவிர்க்காது தத்தம் பொறுப்பு பங்கே பெரிதும் வலிந்து ஏற்க முன் வந்தாலே நாடி
    புவி மா-துணை தன்னையே கதி அகலா அடியர்க்கு யாண்டும் இடும்பை இலவாய்
    தெவிட்டா-இன்பம் கணமும் தாயுமானவன் பிதாவைக்-கட்டு தனயன் மதலைக்கும்.

    வண்டிசெல் தெருவில் (வளர்த்தவர் யாரோ?)
    துண்டுகள் சிலவாய்ச் சிதறிய நாயுடல்
    கண்டதும் கலங்கினேன் கதிர் பெறு உலகிதில்
    உண்டினி இல்லையேல் ஒழிந்ததோ அகத்துயிர்?

    கலங்கவோ படைத்தான் கடவுள் உலகுஅலால்
    துலங்கவோ படைத்தான் மானிடப் பெண்தனை?
    இலங்கிடும் இயற்கையில் அழகது சிரிக்கையில்
    விளங்குதல் இலதுதொல் வினைஉடன் நிலவுதே!

    அரசியாய் வலம்வரும் அம்மையும் மறைவதோ!
    உரசிய குச்சியின் எரிதலும் இறுதலாய்
    புரமறி பெருநிலை குறியற அருகுமோ?
    பரம்முகம் பாராது பார்மிசைக் கருகுமோ?

    பதிமுறை யாகப் பயின்றிடும் கரும
    விதிமுறை கொண்டே வியனுல காள்வோன்,
    மதிமுறை கதிர்முறை உடுமுறை இயற்கை;
    எதிர்முறை இதுவரை இயற்றியும் இலனே!





    அகத்துயிர் = ஆத்மா. விளங்குதல் இலது = புரியவில்லை.

    அரசியாய்...மறைவதோ?= அண்மையின் நிகழ்ந்த ஒரு சாவு. உரசிய குச்சி = நெருப்புக் குச்சி. இறுதல் = அணைதல்(போல்). புரம் = நகரம். அறி = யாவரும் அறிந்த. பெருநிலை - பெருவாழ்வு ( நகரறிந்த பெருவாழ்வு). அருகுமோ? = தொலையுமோ? குறியற- தடயமின்றி. கருகுமோ = ஒழியுமோ.


    பதிமுறை = பதிந்து வைக்கும் முறை. பயின்றிடும் = உலகில் வழங்கும். God keeps records....!
    B.I. Sivamaalaa (Ms)

  5. #104
    Senior Member Veteran Hubber
    Join Date
    Dec 2004
    Location
    USA
    Posts
    3,099
    Post Thanks / Like
    -


    - பாணர் காட்டும் சுவர்க்கம்.!



    [html:3b74cdf950]

    [/html:3b74cdf950]


    மதலையாய் மண்ணுலகில் பிறந்தாய் வளர்ந்தாய் முழு மாந்தனாக, பின்னும் நீ
    மதலையே வாழ்-நாள் முழுதும்; இளமை, முக்காலால் நடக்கும் முதுமையிலும்
    வித-விதமான திறமை, வல்லமை, வளமை, செல்வம் பல்வகை அதிகாரம் அவனி
    பதவி எவ்வுயர் மன்னனே ஆயினும் யாவரும் என்றும் ஆண்டவன் குழந்தையே

    குழந்தையாய் குவலயம் விளையாட்டுக்-களமாய் கூடி விளையாடிக் களிக்கவே
    மழலை-மொழி வெண்-மனத்தனாய் மண் இயல்பு நிலை புரிந்து நடந்து, மகிழவே
    அழகு-மிளிர் அலகில்-வளர் அன்பு-மிகு அவனி-தளம் அனை-மனிதர் உடன்-பிறவி
    பழகி உறு-பண்புடனே ஒழுகி-நெறி மனிதன் என்றும் இறைவன் துணை சார்ந்தே

    சார்ந்தே வாழப்-பிறந்தாய் மாந்தே தந்தை இறைவன் துணையல்லால் ஆவது ஏது.?
    ஊர்ந்தே தரை-நீந்தி, தவழ்ந்து, தத்தி நடந்து, உயர்ந்து வளர்ந்த பின்னும் சிறியனே
    கூர்ந்து கணமும் தந்தை கவனித்து கைப்பிடித்து பின்பற்றி நடக்கும் அடியொற்றியே
    ஆர்ந்த அன்புத் தந்தையின் கைப்பிடி விழைவுறு அணுகுமுறை பாலர் இரு வகை

    இரு-வகை நெறி-முறை ஏறுமாறு-ஆயினும் ஏற்றத்-தாழ்வு இல்லை நந்தன் பாணன்
    ஒருவிரல் தந்தையின் பிடித்து நடக்கும் நந்தன் மந்தி-நெறி மதலை பங்கே மிகை
    சிறு கரம் தனதை தந்தை கைப்-பிடியில் ஒப்படைத்து வழி-நடக்கும் பாணன்-நெறி
    பெரும் பங்கு இறைவன் தந்தைப் பங்கே பூனைக்-குட்டி நெறி முற்றிலும் தாயே

    முற்றிலும் தாயே கதி, குட்டியைக்-காக்க சுதந்திரம் முழுப்-பங்கு தாயே பூனை-நெறி
    பற்றிய பாணன் நாடவில்லை ஏதும், வேண்டுதல் வேண்டாமை இலனாய் பெறுவது
    வெற்றியே வையம் வானுலகு எங்கெங்கும் தாயே கதியாய் இட்டது எதுவும் போதும்
    நற்றவப்-பயன் நலமே எதுவும் தாய்-இறைவன் தந்ததில் மட்டுமே இன்புறு கொள்கை

    இன்புறு கொள்கை அன்னை இறைவன் எது செய்யினும் ஏற்பன் என் நலம் அறியேன்
    நன்மை தீமை உகந்தது எனக்குத் தக்கது தகாதது பாகுபாடு அறியாப் பேதை சிறியேன்
    பொன்-அரி பிறவி புவியில் வைத்தாள் சிறியேன் பாவியன் தகுதி இம்மட்டே எனவே
    என் மன-விருப்பம் ஆசை ஏனோ? எட்டா வானே.? இதோ சுவர்க்கம் இங்கே கண்டேன்

    கண்டேன் கண்டேன் கண்ணுக்கு இனியன கருத்துக்கும் நனி கனி காக்கும் கண்ணா
    விண்டே உரைக்க-ஒண்ணா இன்பம் அரங்கன் கோபுரம் திருப்பாதம் வடிவில் போதும்
    வண்டே மொய்க்கும் மலர் பக்தித்-தேன் பருகினன் புறத்தே வெகு தூரம் நின்றே
    அண்டம் ஆள் எங்கும் இறைவா உன்னைக்-காண கோயில் உள்ளே தரிசனம் எதற்கு.?

    எதற்கோ நான் உன்னை நெருங்க முயல உன் அருகே கோயில் வரவோ மாட்டேன்
    பிதற்றல் இந்தப்-பாணன் குரல் உன் செவி எட்டும் எளிதாய் அறிவேன் எனவே எந்தப்
    பதவியும் மென்மேல் ஆசை வேண்டேன் பேர்-இன்பம் நாடேன் எனக்கு எது நலமோ
    உதவி உன் விருப்பப்படியே எது தரினும் போதும் கண்ணா கிட்டியது எதுவும் நன்றே

    நன்றே உன்றன் கோயில் புனிதம் இப்பாவியின் நுழைவால் கெடவோ, களங்கம்
    நின்றே வெளி வெகுதூரம் அகன்றே காணும்-பேறு உன்னை உணர்வால் கண்டேன்
    ஒன்றே ஒருவா எங்கும் நிறை இறைவா உன்னைப் பாடும் நாவும் ஆற்றல் தந்தாய்
    என்றும் உன்னைப்-போற்றப் பேறே போதும் நீ எது தந்து எங்கு வைப்பினும் நலமே

    நலம் ஒன்றே செய்யும் தாய்-அல்லால் வேறு-எவரும் உண்டோ, விதிவிலக்கு ஏது.?
    வலம்மிகு வண்மை திறமையுறு தாயே உன்னில் மேலோ என் முடிவும் திறனும்.?
    புலப்படு உண்மை எளிதே புரிந்தேன் எனவே உன்-கண் முன் நீ என்னை வைத்த
    தலம் விட்டகலாது ஆடி, உண்டு-உறங்கி உலவ, தாய்-நினை மறவா பூனைக்-குட்டி
    .
    .

  6. #105
    Senior Member Veteran Hubber
    Join Date
    Dec 2004
    Location
    USA
    Posts
    3,099
    Post Thanks / Like
    Shifted
    .

  7. #106
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    iRaiyaruL

    Quote Originally Posted by Sudhama
    மதலையாய் மண்ணுலகில் பிறந்தாய் வளர்ந்தாய்
    மதலையே வாழ்-நாள் முழுதும்; இளமை, முக்காலால் நடக்கும் முதுமையிலும்
    யாவரும் என்றும் ஆண்டவன் குழந்தையே

    ஆண்டு பலசெல்லும் ஆனாலும் பிள்ளையே
    ஆண்டவர்க்கு நீ இதை ஆழ்ந்துணர்ந்தால் --- வேண்டுமோ
    தீண்டி அடையும் தெருள்சேரா இன்பமதைத்
    தாண்டி மனம்நிறுத்து வோம்.


    இன்புறு கொள்கை அன்னை இறைவன் எது செய்யினும் ஏற்பன் என் நலம் அறியேன்
    நன்மை தீமை உகந்தது எனக்குத் தக்கது தகாதது பாகுபாடு அறியாப் பேதை சிறியேன்
    பொன்-அரி பிறவி புவியில் வைத்தாள் சிறியேன் பாவியன் தகுதி இம்மட்டே எனவே
    என் மன-விருப்பம் ஆசை ஏனோ? எட்டா வானே.? இதோ சுவர்க்கம் இங்கே கண்டேன்


    கிட்டிய தெல்லாம் கிழமும் இளைஞனுமாம்
    மட்டிலா மாவொளியின் மாணருளே --- ஒட்டியுயிர்
    உள்ள பொழுதே உவந்து வணங்கியே
    கள்ளம் இலாவாழ்வு காண்.


    சார்ந்தே வாழப்-பிறந்தாய் மாந்தே தந்தை இறைவன் துணையல்லால் ஆவது ஏது.?.

    மன்னும் அகந்தன்னில் மாசில் மணவழகன்
    தன்னைத் தலைதாழ்ந்து போற்றியும் --- தன்னையே
    தானறிந் துள்ளடங்கித் தாரணியில் வாழ்வாரை
    ஏனணுகும் துன்ப மினி


    அழகு-மிளிர் அலகில்-வளர் அன்பு-மிகு அவனி-தளம் அனை-மனிதர் உடன்-பிறவி
    பழகி உறு-பண்புடனே ஒழுகி-நெறி மனிதன் என்றும் இறைவன் துணை சார்ந்தே
    நன்மை தீமை உகந்தது எனக்குத் தக்கது தகாதது பாகுபாடு அறியாப் பேதை சிறியேன்


    நிறைவாழ்வோ கற்பின் நெறிகெட்டால் நித்தல்
    சிறைவாழ்வே சீரழிவின் சேர்க்கை --- முறைசேர்
    இறையுணர்வில் தோய்ந்தே இனிக்கும் இசையில்
    கறைபுகல் இல் வாழ்வில் கனி.


    பூனைக்-குட்டி நெறி முற்றிலும் தாயே

    கலம்குறை நீராய்வீண் காலம் கழிப்பன்
    விலங்கினமும் வெல்லும் நரனை--- நலங்கள்
    பலபெற்று வாழ்வனவோ பார்மனக்கண் முன்னே
    வலம்வருமே வாய்க்குமோ சான்று?


    B.I. Sivamaalaa (Ms)

  8. #107
    Senior Member Veteran Hubber
    Join Date
    Dec 2004
    Location
    USA
    Posts
    3,099
    Post Thanks / Like
    .
    .


    நந்தன் பாணன் நெறிகள் ஒப்பீடு.!!!




    [html:c3a90cab3b]


    [/html:c3a90cab3b]

    [html:c3a90cab3b]

    [/html:c3a90cab3b]

    .
    Quote Originally Posted by Sudhaama
    நலம் ஒன்றே செய்யும் தாய்-அல்லால் வேறு-எவரும் உண்டோ, விதிவிலக்கு ஏது.?
    வலம்மிகு வண்மை திறமையுறு தாயே உன்னின் மேலோ என் முடிவும் திறனும்.?
    புலப்படு உண்மை எளிதே புரிந்தேன் எனவே உன்-கண் முன் நீ என்னை வைத்த
    தலம் விட்டகலாது ஆடி, உண்டு-உறங்கி உலவ, தாய்-நினை மறவா பூனைக்-குட்டி

    [முன் குறிப்பு: அரும் சொற்-பொருட்கள் அடிக்-கீழே காண்க]

    குட்டிச் சிசு பெற்று-வளர் தாயுமானவன் சிவனும் தாயே-ஆனவன் திருமாலும் நீயே
    குட்டி மதலை ஆற்றல்-திறன் வரம்பு அறிவாய் தாயே-தந்தை இறைவா நீ மட்டும்
    கிட்டி, தாய் நெருங்கி நாடித் தன்-தேவை பெறக்-கூட, தான்-அறியா ஊண்-உண்ணவே
    எட்டியே தாய் சிசுவுக்கு முலை-காட்டி ஊட்டினால்-தான் உயிர் வாழ் குட்டி கருவே.

    கரு-வித்து துளியுருவை தாய் வயிற்றினுள் வளர்த்து சுமந்து நொந்து-மிக, பெற்று
    உருவு கொண்டவுடன் உலகு வாழ் மூச்சு உயிர் வல்ல குட்டியாய் மண்ணில் விட்டு
    பெரு உரு தாய் தன்னைப் போலே முதிர் வளர்ச்சி, தீயரால் ஏமாறா சுயச்-சார்பு மிக
    உறு தகுதி உலகச்-சூழலில் பிறர் தயவு-இன்றி சுதந்திரமாய் வாழ்ந்து, வெற்றி நல்க

    நல்கவே பிறவிப்-பயன் வழுவாது தன் குட்டிக்கு புவி-வாழ் தகுதி வாழ்க்கைக்-கல்வி
    பல்கியே பாரில் தாய் ஈன்ற பொழுதினும் பெரிதும் உவக்கும் வகையுறு தகை மிகு
    பல்-விதப் பயிற்சி, தன் பிஞ்சுக்கு வலிந்து கற்பித்து பயிற்றுவித்து பக்குவம் ஊட்டி
    நல்லரும் ஆற்றல் அறிவு, மனம் உடல் சுய-முயற்சி வழிகாட்டி முதல் குரு தாயே

    தாய் தான் மந்திக்-குட்டியை தன் மீதே கவனம்-வழுவா காவல் காத்து எதிரி காட்டி
    பாய்ந்து தப்பவும் பயிலப் பயம் உறுத்திக் கற்பிக்கும் பல்வகை தானே முன்னோடி
    ஓய்ந்து உடல் சோம்பாது உழைத்தே பிழைக்கவும் பிறர் தயவு நாடாத வழிமுறை
    காய்-பழம் இது-எது உரிதே கடித்துக்-கொடுத்து தின்றச்-செய்து ஊட்டி முழு-வளர்ச்சி

    வளர்ச்சி-மிகு பரிணாம-உயிரின ஐந்தறிவு-மந்தி மாந்தர் முன்னோடி ஒரே கான்-பிறவி
    உளம்-ஓங்கு அன்பே தலையாய் வாழ்-பண்பு என அறிந்த இன்பம் மிகு தலைப் பிறவி
    வளம் இதுவே புவி விளையாட்டே வாழ்க்கை என உரிதே புரிந்து பிறவிப்-பயன் தகு
    களம் போரே காட்டுச் சூழலிலும் இன்பமே தன்னினம் கூடிப் பிறரொடும் பொது நலமே

    பொது-நலமே தன்னலம் பிறர்-நலமும், ஜாக்கிரதை சூழல் உன்னித்து கவனித்து மந்தி
    சதுரங்கம் தீயோர் சூழ்ந்து கவ்வ தருணம் பார்த்து ஒளிந்து பிடித்து இரையாய் ஒழிக்க
    பதுங்கிப் பாயும் புலி, தந்திர நரி, வஞ்சக ஓநாய், கூட்டு வேட்டை காட்டு-நாய், தேனீ
    ஒதுங்கி எக்கணமும் போர்க்களம் எனினும் சுவர்க்கம் வாழத்தெரிந்த ஒரே கான் -பிறவி

    பிறவிப்-பயன் தெரிந்த முதிர்ச்சி தைரியம் அறிவாற்றல் மிக்க மந்தி-நெறி நந்தன் வழி
    அறவே தாய்-சார்ந்தே வாழ, குட்டி பழக்கும் பூனை, தன்-பொறுப்பு மிக வலிந்து ஏற்று
    சிறக்க கற்பிக்கும், இருளிலும் துள்ளிப்-பாய ஓட, இரை பிடிக்க வலம், பக்குவம் பெற
    மறந்தே சுய-வலிமை தாய்-பொறுப்பே முற்றிலும் விட்டு, பின்பற்றும் பாணன் ஆர்ந்தே

    ஆர்ந்தே இறைவன்-பால் மேன்மையுறு அன்பே பக்தி கொண்டோர் தாய்-நெறி பூனை
    சார்ந்தே வாழ்வதிலும் ஓர் உயர் பொருள் உண்டு; பக்குவம் அடையா பருவத்தால் புவி
    நேர்ந்தே பிறவி வாழ்க்கைத்-திட்டம் இன்னது என அறியா மதலைக் கற்றுக்-குட்டியே
    கூர்ந்தே தாயை நம்பி வாழும் அர்ப்பணம் முழுமை பாணன் சுட்டு இன்பம் எங்குமே

    எங்கும் கணமும் இன்பமே பூனைத்-தாய் சார்ந்த குட்டி தன்னலத்-தேவை ஆபத்து-அற
    அங்கும்-இங்கும் தாய் பாய்வதால் மந்திக்-குட்டிக்கே வேதனை பூனைக்குட்டிக்கு அல்ல.
    பங்குக் கடமை முழுதும் தாயே ஏற்பதால் குட்டிக்கே சுதந்திரம் தன்னை மறந்த சுகம்
    பொங்கும் விழை-ருசி யாவும் ஈடேறும் தாயே தன்னிலும் முதிர்ச்சி மிகு தகுதி உரிதே

    உரிது-பெற்ற ஒரே குட்டி, மந்தித்-தாயை எட்டி கட்டிப்-பிடித்தே பிரியா-நிலை இயலும்
    பிரிவு குட்டிகள் பல பல்-வகை நிறம், குணம் ருசி உளம், வலிமை உடல் அறிவு, நோய்
    அரிதே, ஒரே பிரசவம் பல குட்டி உள்ளும் வெளியும் சுமந்து ஆளாக்கும் மா பொறுப்பு
    தெரிந்து அதனதன் பல்வேறு தேவை இரை-தேடி விருந்து விளையாடு குட்டிகள் பேறே

    பேறே பெரிதாய் பெறு தாயே பெரு தாயேயானவன் தந்தை இறைவனையே முற்றும்
    ஏறே சார்ந்து எக்கணமும் தாய் தனக்குப் பணித்த கடமை இடம் ஏற்றே மனம் ஒப்பி
    மாறே நினையாது தாய் காட்டும் வழியன்றி மற்றொன்று விழையாது தரணி வாழ்வே
    பாரே பாணன் எளி-நெறி துன்பத்திலும் இன்பம்-காண் சுவர்க்கமே எங்கும் திருவருளே.!

    திருவருளால் ஓங்க மாந்தரே கேளீர் சீர்-கதி இரு-வழி பார் நந்தனும் பாணன் நானும்
    இருவேறு அணுகுமுறை சிவ-பெருமான் திருமால் வழி அல்ல இருவர்க்கும் பொதுவே
    உறு-நெறி ஒப்பீடு அறிவீர் எய்தவே அரி-மா மனிதப் பிறவிப்-பயன் சுவர்க்கம் மேலும்
    திரு-நிறை வாழ்வு வாழ, நந்தரே உம்-வழி சிறப்பு விளக்க-வாரும் ஐயனே மந்தி-நெறி


    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> >>>>>>>>>>>>>>>>>

    அரும் சொற்-பொருள்:---

    ஆர்ந்தே = நிறைந்தே --- பல்கி = பெருகி --- விழையாது = விரும்பாது --- எய்தவே = பெறவே --- ஏறே = [தலை நிமிர்ந்து நடை-போடும்] காளையே --- பேறே = பாக்கியமே.

    <<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<< <<<<<<<<<<<<<<<<<<



    அடுத்து நந்தன் பாணன் சந்திப்பு.!


    அவர்களிடையே கற்பனை-உரையாடல் விவாதம்.. தொடரும்
    [/b]

    .

  9. #108
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    What reward.....!

    Quote Originally Posted by Sudhaama
    .


    ந.......... நெறிகள் ஒப்பீடு.!!!

    ...................................

    உயிரிகள் நூலுடையார் உண்மையாய்க் கண்ட
    உயர்நற் கருத்துகள் உள்வைத்து -- அயர்வின்றி
    நன்கு செலச்சொல்லும் நல்லார் சுதாமருக்கு
    என்கொடுப்பீரோ பரிசு.



    அருஞ்சொற்பொருள்.



    உயிரிகள் = பிராணிகள். நூலுடையார்= நூல்வல்லுநர். உண்மையாய்க் கண்ட = ஆய்ந்து உண்மை என்று நிறுவிய. செலச்சொல்லும் = மனத்திற் பதியுமாறு சொல்கின்ற. என் = என்ன.

    தொடரும்.
    B.I. Sivamaalaa (Ms)

  10. #109
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    if not mother, who else?

    தாயன்றி யார்?


    பிறர்தயை இல்லாநற் பெற்றியில் வாழ
    குறைமயல் இல்லாத குட்டி -- நிறைவளர்ச்சி
    நேரிற் பெறவேண்டும், நேடவிது கற்பிக்கப்
    பாரிதனில் தாயன்றி யார்?


    பெற்றி = தன்மை; குறை மயல் =அறிவுமயக்கமாகிய குறை.; அல்லது குறையும் மயக்கமும். நேரில் பெறவேண்டும் = பல இன்னல்களையடைந்து அறிந்துகொள்ளாமல், நேரடியாய்த் தாயிடமிருந்து கற்றுகொள்ளவேண்டும். நேட = சிந்தித்தால் .


    நிறைவளர்ச்சி = உடல் வளர்ச்சி மட்டுமின்றிப் பிற வளர்ச்சியையும் குறிக்கிறது.


    தொடரும்.
    B.I. Sivamaalaa (Ms)

  11. #110
    Senior Member Veteran Hubber
    Join Date
    Dec 2004
    Location
    USA
    Posts
    3,099
    Post Thanks / Like

    Re: What reward.....!

    .
    Quote Originally Posted by bis_mala
    Quote Originally Posted by Sudhaama
    .


    ந.......... நெறிகள் ஒப்பீடு.!!!

    ...................................

    உயிரிகள் நூலுடையார் உண்மையாய்க் கண்ட
    உயர்நற் கருத்துகள் உள்வைத்து -- அயர்வின்றி
    நன்கு செலச்சொல்லும் நல்லார் சுதாமருக்கு
    என்கொடுப்பீரோ பரிசு.


    அருஞ்சொற்பொருள்.



    உயிரிகள் = பிராணிகள். நூலுடையார்= நூல்வல்லுநர். உண்மையாய்க் கண்ட = ஆய்ந்து உண்மை என்று நிறுவிய. செலச்சொல்லும் = மனத்திற் பதியுமாறு சொல்கின்ற. என் = என்ன.
    மிக்க நன்றி அன்பார்ந்த சிவ-மாலாரே.

    நீங்கள் வழங்கியுள்ள மேற்கண்ட கவிதை ஒன்றே எனக்குக் கிட்டிய பரிசாக ஏற்று இறும்பூது எய்தி மகிழ்கிறேன்.


    அடுத்து... சிவனடியார் நாயன்மார் நந்தனாருக்கும்...

    ...திருமாலடியார் பாணருக்கும் (திருப்பாண் ஆழ்வார்) இடையே..

    ....அரிய கற்பனை உரையாடல் விவாதம்... விரைவில். !!!

    .

    .

Page 11 of 15 FirstFirst ... 910111213 ... LastLast

Similar Threads

  1. Centenary of Udumalai Narayana Kavi
    By Oldposts in forum Memories of Yesteryears
    Replies: 9
    Last Post: 27th April 2011, 09:51 AM
  2. KAVITHAI ARANGAM
    By V.Annasamy in forum Poems / kavidhaigaL
    Replies: 38
    Last Post: 21st August 2010, 05:05 AM
  3. Kadal Arangam - IR - Velu Prabakaran
    By Vysar in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 0
    Last Post: 30th July 2009, 09:21 PM
  4. kavi(thai)yin seyalpAdu
    By V.Annasamy in forum Poems / kavidhaigaL
    Replies: 2
    Last Post: 20th June 2007, 01:39 PM
  5. kambanin kavi
    By phinex2005 in forum Poems / kavidhaigaL
    Replies: 0
    Last Post: 21st February 2005, 01:49 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •