Page 10 of 15 FirstFirst ... 89101112 ... LastLast
Results 91 to 100 of 150

Thread: iNayak kavi arangam

  1. #91
    Senior Member Veteran Hubber
    Join Date
    Dec 2004
    Location
    USA
    Posts
    3,099
    Post Thanks / Like
    .
    Shifted
    .

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #92
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    We will follow examples set by Nayanmaar in devotional path

    இறைகாட்டும் வாழ்நெறியில் நின்று செய்யும்
    முறையெல்லாம் மாறாமல் முன்னே செல்லக்
    குறையின்றிக் கூறிவரும் கொற்றம் போற்றும்
    மறைசார்ந்த மாண்புமொழிக் குரித்தே நன்றி.

    கண்காற்றில் தூசிவிழக் கசிந்த போதும்
    கண்போற்றி அஃதகற்றிச் செல்லுமாப் போல்
    முன்னேற்றப் பாதைபோம் அயர்ச்சி தாண்டி
    பின்மாற்றம் ஒப்பாத முயற்சி வேண்டும்.

    படியேறிப் படியேறிப் பார்த்த வீட்டில்
    குடியேறி வாழகையும் கொடுப்பர் காணீர்!
    அடிதொற்றிப் பேருந்தில் படியேறிப் பின்
    மடிதொற்றி மாதணைக்கும் குழந்தை யாமே.

    தன்வீட்டு வாழ்கூலி தந்து நட்பால்
    பின்வீட்டில் முன்வீட்டில் இணக்கம் கண்டு
    தன்பாட்டை யார்பிறர்க்கும் இடரே இன்றித்
    தான்பாடி வீண்பாடு தவிர்த்து வாழ்வோம்.

    சாதணப்பே நேர்ந்தாலும் சார்ந்த வாழ்வே
    மாதணைப்பாள் மாதவத்தோன் பாங்கிலுள்ளாள்
    நோதணத்தல் அவள்செயலே யாதும் வந்த
    போதணைப்பாள் துன்பமெலாம் போம்போம் என்போம்.


    நாயன்மார் கண்ணப்பன் நந்தன் பாணன்
    நாட்டியதோர் நன்னெறியில் நலிவு நண்ணா,
    சேயிருவர்க் காயானாள் சேய்மை செல்லாச்
    செயிர்தீர்ந்த சீர்வாழ்வு பயிர்செய் வோமே.
    B.I. Sivamaalaa (Ms)

  4. #93
    Senior Member Veteran Hubber
    Join Date
    Dec 2004
    Location
    USA
    Posts
    3,099
    Post Thanks / Like
    -
    .

    புவி-சொர்க்க நதியின் இரு கரையர்:2



    சுதாமா கவிதைகள் யாப்பு-இலக்கண வரம்பிற்கு உட்பட்டன அல்ல

    Quote Originally Posted by bis_mala
    திருவுண்டு எனும்போதும் மதிகாண நிதிவேண்டும்
    திருவென் றிருந்தாலே போதும் --- அதில்
    திருத்தமே வேண்டாமெப் போதும்!
    போதும் என்றே பொன்-மனத் திருப்தி கொண்டு போற்றி இறை நன்றி எப்-
    போதுமே நிறை-உளம் கொள் வாழ்வே நனி-வாழ்வு எனினும் மாந்தர் புவிப்
    போது-கணமும் வீண்-கழியாது ஓயாது எப்போதும் செயல்படலே உயிர் இப்
    போதுளதா அறிய-இயலும் வைத்தியர் ஆயினும் பரிசோதனை இயக்கத்தாலே

    இயக்கமே ஓயா, இயற்கை நமக்கு உணர்த்தும், வையத்து வாழ்வாங்கு வாழ,
    தயக்கமே ஏனோ மாந்தே, எம்மா செல்வ-வளம் கொழிக்கத் தரணி எல்லை
    மயக்கம் கொண்டு சொக்கி மாய்ந்து- விடாதீர் சோம்பி; எறும்பு தேனீ பசுவே
    நயக்க நன்னெறி: பஸ்-படி நின்றே என்றும் பயணமோ பயன் புவி ஆனந்தம்.?

    Quote Originally Posted by bis_mala
    நந்தனையே சிவனேற்று நன்மை செய்தார்'-- அது
    நாட்டினுக்கே இறையன்பின் தன்மை காட்ட!
    விந்தையிதே பாணருக்கும் அந்தமில்லார் -- பத்தன்
    வேண்டியதை அருள்செய்தார் மென்மை கூட்ட.

    கூட்டவே இறைவன் அற-நெறியே மாந்தர் வாழ்-நெறியின் அஸ்திவாரம் புவி
    காட்டக் குரங்கு, பூனைக் குட்டி பத்தர் உயர்-தகு இறை-நெறி இருவகை என்றே
    நாட்டவே செயல்-முறை மாந்தர்-பங்கு, இறை பங்கு-எது, நாடகம் இருமாறு
    ஊட்டவே போதும் வாழ்வு, வான்-நாட நந்தன் வைய மாந்தன் பங்குக் கடனே

    கடன் புவி கழித்து-விட்டாய், என்னை நம்பியே மாண் சீலம் வழுவா நந்தா
    சடமாய் புவிச்-சவமே கிட்டியதே வாழ்க்கை எனக் கிடந்து முயலாது வீணே
    தடம்-வழி அடுத்தடுத்து பஸ்ஸில் நெருக்கடி மிக்க நிலையில் என் செய்வாய்.?
    இடம்-ஒண்டிப் படி-நின்று எட்டி-அமர மென்மேல் முயன்றாலே முன்னேற்றம்.

    ஏற்ற ஓர்-அறிவுப் புழு தொடங்கி இறுதி உன்னத எழு-பிறவி தந்தேன் மாந்தே
    ஊற்றம் ஆறு-அறிவர் இறை-மிருக இடைப்பிறவி புவி-சொர்க்கமே உன் நோக்கம்
    போற்றவே பணி பாணன் தூரத்தே கோபுரம் திருவடி-வடிவு, கோயில் எட்டாது
    சாற்றத்-துதி, ஏற்றேன்; உனைத் தோள்-தூக்கி உயர்த்து-கடன் இறை-என் பங்கே.!!!
    .
    - வழி மறைத்திருக்குது (நந்தன் சரித்திரம் பாட்டு):

    Video : Ranjani-Gayathri



    Quote Originally Posted by bis_mala
    இறைகாட்டும் வாழ்நெறியில் நின்று செய்யும்
    முறையெல்லாம் மாறாமல் முன்னே செல்லக்
    குறையின்றிக் கூறிவரும் கொற்றம் போற்றும்
    மறைசார்ந்த மாண்புமொழிக் குரித்தே நன்றி.

    கண்காற்றில் தூசிவிழக் கசிந்த போதும்
    கண்போற்றி அஃதகற்றிச் செல்லுமாப் போல்
    முன்னேற்றப் பாதைபோம் அயர்ச்சி தாண்டி
    பின்மாற்றம் ஒப்பாத முயற்சி வேண்டும்.

    படியேறிப் படியேறிப் பார்த்த வீட்டில்
    குடியேறி வாழகையும் கொடுப்பர் காணீர்!
    அடிதொற்றிப் பேருந்தில் படியேறிப் பின்
    மடிதொற்றி மாதணைக்கும் குழந்தை யாமே.

    தன்வீட்டு வாழ்கூலி தந்து நட்பால்
    பின்வீட்டில் முன்வீட்டில் இணக்கம் கண்டு
    தன்பாட்டை யார்பிறர்க்கும் இடரே இன்றித்
    தான்பாடி வீண்பாடு தவிர்த்து வாழ்வோம்.

    சாதணப்பே நேர்ந்தாலும் சார்ந்த வாழ்வே
    மாதணைப்பாள் மாதவத்தோன் பாங்கிலுள்ளாள்
    நோதணத்தல் அவள்செயலே யாதும் வந்த
    போதணைப்பாள் துன்பமெலாம் போம்போம் என்போம்.

    நாயன்மார் கண்ணப்பன் நந்தன் பாணன்
    நாட்டியதோர் நன்னெறியில் நலிவு நண்ணா,
    சேயிருவர்க் காயானாள் சேய்மை செல்லாச்
    செயிர்தீர்ந்த சீர்வாழ்வு பயிர்செய் வோமே.
    .

  5. #94
    Senior Member Veteran Hubber
    Join Date
    Dec 2004
    Location
    USA
    Posts
    3,099
    Post Thanks / Like
    .
    Shifted.
    .

  6. #95
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    veyilum nizalum

    I


    -
    வெயிலும் நிழலும் ஒளியும் இருளும் இன்பமும்
    துன்பமும் மண்மிசை இயல்பொருளே;

    குயிலும் மயிலும் கூகையும் காக்கையும் கொக்கும்
    குறைநிறை அடைதற் குரிபொருளே;

    வயலில் பயிரும் வெயிலில் கருகி மழையில்
    அழுகி அழிவது தெரிவதனால்,

    இயவுள் இயற்றிய கரும வினையென இவற்றை
    மனிதனும் நினைப்பதன் பயனறிவோம்.


    நடப்பவை யாவும் நடக்கவி வைதாம் நாதனின்
    செயலென நடங்துகொண்டால்,

    அடைப்பதும் வேண்டுமோ துன்பம் இருள்புகு வாயிலை,
    அறிந்திவை கூறிட வேண்டியவாம்'

    துடைப்பது கண்ணீர்! அதற்கொரு மேலவன் துணியொடு
    நிற்பவன் என்று துணிந்துணர்ந்தால்

    மடைப்பளி நின்றிடும் மலைப்புறு வேதனை மாநில
    மக்களும் கொண்டிட நடைபெறுமோ?


    காரைக் காலவர் கண்டு மகிழ்ந்துயர் வேறக்
    குறித்திடும் அம்மையின் வரல்நெறியில்

    ஓரைந் தொடுக்கிய சாரத் தொடுதிகழ் வாழ்வைத்
    தரித்தவர் யாரும் திறல்பெறுவார்.

    தீரத் தெளிந்தவர் தேடும் அனைத்திலும் கூறப்
    படுமறம் பொருளொடும் இன்பமிவை

    ஆரத் தழுவிய அமுதப் பெருநலம் அடையத்
    தகும்படி அணிசெயும் உலகமைப்போம்.
    B.I. Sivamaalaa (Ms)

  7. #96
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    resposibilities of mom etc

    II



    தாயின் பொறுப்பென ஆய யாவினும் ஓய
    ஒழிந்திட உதவியொன் றிலாப்படிக்கு

    நோயும் நொடியற, காயும் வயிற்றினுக் காயதீம்
    பால்தனை வாயில் புகட்டியபின்,

    சாயும் காலமும் இராவும் பகலும் பொழுதிவை
    சடுதியில் போகதுன் பலைப்படுவாள்,

    போயும் இனியும் பொல்லா மகாரினால் புகழும்
    தரமும் உலகினில் கொலைப்படுமோ?



    மட்டில் மகிழ்வுடன் தொட்டில் குழவிநன் மெட்டில்
    இசைபெறத் தாவி அணைத்திடுந்தாய்;

    குட்டிக் குரங்கதன் சுட்டித் தனம்மிகக் கட்டிப்
    பிடிக்குமப் பெற்ற கிளைக்குரங்கு;

    ஒட்டித் திரிநலம் எட்டில் உறழுபத் தெட்டும்
    செலும்வரை நெட்டில் வளர்தருமோ?

    தட்டித் துரத்துமே முட்டும் சிறுகபி பட்டும்
    அறிகிற மட்டம் அடைந்ததுமே!
    B.I. Sivamaalaa (Ms)

  8. #97
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    iRaivaraith thozuthal

    III




    ஒருவரோ அல்லர் இருவரோ அல்லர்
    அறுபதும் மூன்றுமே ஆனோர் தொகையாம்
    திருவினை வாழ்த்தித் திறம்பெற் றவர்கள்
    மறுவற நின்றவர் மாதவத் தோராம்.

    அனையவர் தந்தவை ஆழ்கடல் அன்ன
    இணையறு பாடம் இறைவர்த் தொழுதல்
    புனைகதை அன்றிது போற்றிநின் றார்க்குத்
    துணையென வந்து துயர்களை வுண்மை.


    அன்பும் அறமும் பிறழ்செலவு உற்றவன்
    மன்பதை தன்னில் மயக்கழிந் தானெனத்
    தென்பட நின்று தெருள்பெறும் காலையே
    அன்பரை ஆள வருவான் இறைவனே!
    B.I. Sivamaalaa (Ms)

  9. #98
    Senior Member Veteran Hubber
    Join Date
    Dec 2004
    Location
    USA
    Posts
    3,099
    Post Thanks / Like
    -


    புவி-சொர்க்கம் உயர்வு நம் கையிலே.!!!


    [html:de52cf2ab8]


    [/html:de52cf2ab8]


    Quote Originally Posted by Sudhaama
    கூட்டவே இறைவன் அற-நெறியே மாந்தர் வாழ்-நெறியின் அஸ்திவாரம் புவி
    காட்டக் குரங்கு, பூனைக் குட்டி பத்தர் உயர்-தகு இறை-நெறி இருவகை என்றே
    நாட்டவே செயல்-முறை மாந்தர்-பங்கு, இறை பங்கு-எது, நாடகம் இருமாறு
    ஊட்டவே போதும் வாழ்வு, வான்-நாட நந்தன் வைய மாந்தன் பங்குக் கடனே

    Quote Originally Posted by Bis_mala
    நாயன்மார் கண்ணப்பன் நந்தன் பாணன்
    நாட்டியதோர் நன்னெறியில் நலிவு நண்ணா,
    சேயிருவர்க் காயானாள் சேய்மை செல்லாச்
    செயிர்தீர்ந்த சீர்வாழ்வு பயிர்செய் வோமே.

    பயிர் செய்தே ஆத்ம-வித்தால் வாழ்வு-ஓங்கப் புவி-சொர்க்கம் பேறு ஒரே பிறவி
    உயிர் தந்தான் உயர் மாந்தனாக இம்மை இன்பம் மிருக-தெய்வம் இடையராக
    ஜெயித்து வைய விளையாட்டு போராட்டம் புரிந்து விடை-கண்டு பயன்-கொண்டு
    வெயில் நிழல், ஒளியிருள் இன்ப துன்பம் புவிப்பிறவி உண்மை வினைப்-பயனே

    பயன் புவியால் ஏனைய பிறவியர்க்கு இல்லை எனினும் அவை வையத்-தேவை
    இயற்கைச் செயல்-நியதி வட்டப்படியே அவற்றின் நெறி வகுத்தான் வைகுந்தன்
    உயர்-பிறவி மாந்தனே தன் தரணிப் பிரதிநிதியாய் வல்லமை நால்வகை அருளி
    நயம் மிகு ஆத்ம-வலிமையே, அறிவு, மனம் உடல் வலிமைகளினும் தலையே

    தலையாய பிறவி மாந்தனின் பணிகள் யாவிலும் இறைவனின் பங்கும் உண்டு
    அலையாய வாழ்-கடல் நீந்திக்-கடக்க இரு-வகை வாய்ப்பு வைத்தான் மாந்தர்க்கு
    மலைக்காதே விடுதலை-பெற சிறை பிறந்தாய் உன்னைக் காக்கும் தந்தை நாடு
    நிலை-வீடு விருப்பம் வைய-இன்பம் பின் வீடா, புவி இன்பம்-விடு வீடா சொல்

    சொல்லாது வாழ்-நெறி பூனை குரங்கு தாய்-சேய் கொள்கை இரு-மாறு வகை
    செல்ல வீடு இறுதி-இலக்கு மாந்தர் இறைவன் பொறுப்பு பெரும்-பங்கு எவர்க்கு?
    நல்ல பண்பே பூனைத்-தாய் தம்-போக்கில் விளையாடு குட்டி நாடி பால்-ஊட்டி
    மெல்லக்-கவ்வி இடம் மாறி-மாறி தாவி ஓடி கணமும் அகலா தாய்-பொறுப்பே

    பொறுப்பு பெரும்-பங்கு குரங்குக் குட்டி தன்னலம் காத்துக்-கொள்வது சிசுவே
    இறுக்கித் தாயைப்-பிடித்த பிடி விடாத வரை-தான் குட்டிக்கு ஆபத்து இல்லை,
    தருக்-கிளை பல தாவித்-தாவி குதித்துத்-துள்ளி தாய்க் குரங்கு தன் போக்கிலே
    நெருக்கம் தாயை குட்டிப்-பிடி இறுக்கம் தளர்ந்தால், வீழ்வது குட்டி தானே

    குட்டி வலிந்த பொறுப்பு நந்தன் கடைப்பிடி கட்டிப்-பிடி சொர்க்கம் மந்தி-நெறி
    வெட்டிக் காலம் புவி-வாழ்வு சூழல் கர்ம-வினை மென்மேல் கூடுமோ, பயமே
    கிட்டிய முழு-வாய்ப்பு எட்டித்-தழுவி பிறவி- வினை தீர்க்க தானே நெருங்கி
    முட்டி நாடி இறைவனைக் கெஞ்சி அழுது கருணை-அருள் விரை உயர்வழி

    உயர்-வழி பெரும்-பங்கு சுய-பொறுப்பாலே தன்-பிடியே சார்ந்த மந்திக்-குட்டி
    துயர் துன்பம், கேடு தாவும்-தாயால் மரத்து-இடி, அடி, குத்து, மோதல், வீழல்
    இயல்பு புவி-காலம் வெறுத்து,, எதிர்காலம் குறுக்கி, விடுதலை முந்தவே
    பயம்-இன்றி அகலாது சிறிதும் நழுவா குட்டி, தாயின் போக்கே கதி ஒன்றி

    கதி-ஒன்றி கடவுளே அர்ப்பணம் இருவகை நெறியிலும் வேறுபாடு இன்றி
    விதி-நியதி நந்தி-இயல்பு அறிந்தும் நந்தன் தந்தையை கூட பிறீடு வேட்கை
    விதி-புவி நீள்-காலம் பொறுக்கா சேயின் அவசரம், நந்தியை விலகச் செய்த
    நிதி-நெறி, இறை-பங்கினும் மேலாய் அடியன்-பங்கு புவி-துறவு விரை வீடே

    விரைந்தே வீடு-முக்தி பேரின்ப உலகம் சேர முந்தி, மாந்தன் நந்தன் வழி
    சிறை-வாழ்க்கை புவி-நரகம் காலம் கணமும் தாழ்த்தா முன்-விரை ரயிலே
    இறை-பங்கு கடமை அதிகம்-கொடா, தனக்கு கூடுதல் சுய-பொறுப்பாலே
    குறை-வினையால் வாடி பாவ-மன்னிப்பு சரண்-நாடி சுமை-ஏற்பால் உயர்வே
    .

    - வழி மறைத்திருக்குது -- நந்தனார் -- விடியோ.



    Quote Originally Posted by bis_mala
    I

    வெயிலும் நிழலும் ஒளியும் இருளும் இன்பமும்
    துன்பமும் மண்மிசை இயல்பொருளே; ..........

    இயவுள் இயற்றிய கரும வினையென இவற்றை
    மனிதனும் நினைப்பதன் பயனறிவோம்........

    அடைப்பதும் வேண்டுமோ துன்பம் இருள்புகு வாயிலை,
    அறிந்திவை கூறிட வேண்டியவாம்'.......

    தீரத் தெளிந்தவர் தேடும் அனைத்திலும் கூறப்
    படுமறம் பொருளொடும் இன்பமிவை.......

    ஆரத் தழுவிய அமுதப் பெருநலம் அடையத்
    தகும்படி அணிசெயும் உலகமைப்போம்.
    Quote Originally Posted by bis_mala
    II

    தாயின் பொறுப்பென ஆய யாவினும் ஓய
    ஒழிந்திட உதவியொன் றிலாப்படிக்கு.....

    குட்டிக் குரங்கதன் சுட்டித் தனம்மிகக் கட்டிப்
    பிடிக்குமப் பெற்ற கிளைக்குரங்கு;

    ஒட்டித் திரிநலம் எட்டில் உறழுபத் தெட்டும்
    செலும்வரை நெட்டில் வளர்தருமோ?

    தட்டித் துரத்துமே முட்டும் சிறுகபி பட்டும்
    அறிகிற மட்டம் அடைந்ததுமே!
    Quote Originally Posted by bis_mala
    III

    அன்பும் அறமும் பிறழ்செலவு உற்றவன்
    மன்பதை தன்னில் மயக்கழிந் தானெனத்
    தென்பட நின்று தெருள்பெறும் காலையே
    அன்பரை ஆள வருவான் இறைவனே!

    ...

  10. #99
    Senior Member Veteran Hubber
    Join Date
    Dec 2004
    Location
    USA
    Posts
    3,099
    Post Thanks / Like
    -
    .

    நந்தனார் காட்டும் சுவர்க்கம்.!



    [html:c8ad41c2be]

    [/html:c8ad41c2be]


    Quote Originally Posted by bis_mala

    தாயின் பொறுப்பென ஆய யாவினும் ஓய
    ஒழிந்திட உதவியொன் றிலாப்படிக்கு.....

    குட்டிக் குரங்கதன் சுட்டித் தனம்மிகக் கட்டிப்
    பிடிக்குமப் பெற்ற கிளைக்குரங்கு;

    ஒட்டித் திரிநலம் எட்டில் உறழுபத் தெட்டும்
    செலும்வரை நெட்டில் வளர்தருமோ?

    தட்டித் துரத்துமே முட்டும் சிறுகபி பட்டும்
    அறிகிற மட்டம் அடைந்ததுமே!

    Quote Originally Posted by Sudhaama
    பயிர் செய்தே ஆத்ம-வித்தால் வாழ்வு-ஓங்கப் புவி-சொர்க்கம் பேறு ஒரே பிறவி
    உயிர் தந்தான் உயர் மாந்தனாக இம்மை இன்பம் மிருக-தெய்வம் இடையராக
    ஜெயித்து வைய விளையாட்டு போராட்டம் புரிந்து விடை-கண்டு பயன்-கொண்டு
    வெயில் நிழல், ஒளியிருள் இன்ப துன்பம் புவிப்பிறவி உண்மை வினைப்-பயனே

    விரைந்தே வீடு-முக்தி பேரின்ப உலகம் சேர முந்தி, மாந்தன் நந்தன் வழி
    சிறை-வாழ்க்கை புவி-நரகம் காலம் கணமும் தாழ்த்தா முன்-விரை ரயிலே
    இறை-பங்கு கடமை அதிகம்-கொடா, தனக்கு கூடுதல் சுய-பொறுப்பாலே
    குறை-வினையால் வாடி பாவ-மன்னிப்பு சரண்-நாடி சுமை-ஏற்பால் உயர்வே

    உயர்வே உனக்கு உத்தமப்-பிறவி மனிதனே-என என்-மேல் புவி-திணித்து,
    நயம்-உறு புவி-சுவர்க்கம் வாழப் பிறந்தாய் நீயே, அரிதாய் நீ மட்டும்-என
    உயர்வற உயர்நலம் உடையவன் நீ என எனை வஞ்சித்தாயோ இறைவா.?
    பயன்-பிறவி, புவி-இன்பம் எங்கே.? நீ யார் உயர்வற உயர்நலம் உடையவா.?

    உடையவன் உன்னை மனிதா இறைவன் நானே கண்-காணா மறையவன்
    கடை இழி பிறவியர் ஓரறிவு புழுமுதல் ஐந்தறிவு குரங்கு அடுத்து உன்னை
    இடைப்பிறவியாய் படைத்தேன் எனக்கும் புவி வாழ் தாழ்-பிறவியர்க்கும்
    படைத்தவன் புவி-சுவர்க்கம் இயற்கை எத்தனை கோடி இன்பம் உனக்காக

    உனக்காக புவி-வளம் பல்வகை ஊண், ஐம்பொறி இயற்கையே பணி செய்ய
    மனக் கவலை-இன்றி மாந்தனே என் பிரதிநிதியாய் புவி-சுவர்க்க போகம்
    இனக் குடும்பமாய் புவியோர் இலக்கணமே ஞான-விஞ்ஞான வல்லமையால்
    தனக்கு-உவமை இல்லா மன்னனாய் தரணி ஆள, உன்னையே கேள் நீ யார்.?

    யார் நீ என உன்னையே கேள்வி கேட்டு விடை-அறிய மாட்டாத உத்தமா
    யார் நீ என என்னையே கேட்ட அறிவுக் கண்-மூடிக் குருடா கேள் பேதாய்
    பார்க்க-இயலா அருவிலும், பார்வையில் அருள்-உருவுகள் பலவும் நானே
    வார்க்க-அருள் அல்லா, பரம-பிதா, புத்தர், சிவன், காளி, திருமாலே பிறவும்

    பிற சிந்தனை பரமன் யாராயினும், உன் விருப்பம் இறை-நெறி தோய்ந்த
    அற-நெறியே வாழ்-நெறியாய் கடைப்பிடித்து ஒழுகினால் தான் திருவருள்
    புறத்தவன் உன்-மேலவன் உன்னுள்ளும் உறைந்து உன்னையும் ஆள்பவன்
    சிறந்த பிறவிப்-பயன் புவி-சுவர்க்கம் மோட்சம் அருளும் பிறவி-விடுதலை

    பிறவி-விடுதலை நாடார் வருங்காலம் மென்மேல் நரகமாய் உணர்வார் புவி
    தரம்-அற்ற இழி-பிறவியர் நரி, ஓநாய், பாம்பு அனையவை மனித உருவில்
    நரகம் தனக்குத்-தானும் பிறர்க்கும் இழைக்கும் உண்மை ஞான-விஞ்ஞானம்
    சிறகு வளர்ந்தவுடனே வான்-பறக்க துடிக்கும் பறவையாய் வாழ்க சிறந்தே

    சிறந்தே வாழப்-பிறந்த மாந்தனே புவி-சுவர்க்கம் உன் கையில், தகு-நெறியால்
    மறந்திடாதே விருந்தே மருந்தாம் குடிசையில், மருந்தே விருந்தாம் மாடியில்
    இரந்து வாழ்வே, பசி இருந்தும் உணவிலா வறுமை குடிசை-வீட்டு ஏழ்மை
    இறந்த-வாழ்வே உணவு இருந்தும் பசியிலா கொடுமை, மாடி-வீட்டு ஏழ்மை

    ஏழ்மையற வாழத்தெரியுமா மனிதா உனக்கு.? தேவையான வல்லமைகள்
    வாழ்-வளமுற சீர்-அறிவு, உடல் மனம் மேலாய் ஆத்ம- வலிமை தந்தேனே
    ஆழ்-பொருள் பார் குடிசை-வீட்டு மாடி-வீட்டு ஏழை இருவகையும் ஆகா வழி
    ஏழ்மை போக்க ஞான-விஞ்ஞானம் படைத்தேன் புவி சுவர்க்க-வளம் பெருக

    பெருகவே ஓங்கி நீ மனிதனாய் என் மதலை-மன்னனாய் படைத்தேன் புவி
    திருவருள் புரிந்து உரிய நற்பயன் பெறவே உன்னை நீயே உயர்த்திக் கொள்
    சிறு-பிறவியர் தத்தம் சுய-நெறியால் தகு வாழ்-பயன் கொள்வது கண்டாவது
    உறு-பயன் நீ கொள்வது எப்போது என் குழந்தாய் உத்தமப்-பிறவி உணர்வாய்

    உணர்வால் தெரிய பிற-பிறவியர் இயலார் அத்தகு நிறை-வளம் இல்லார்
    உணர்வால் மூவகையிலும் புரிந்து வாழ வளம் படைத்தவன் நீ மட்டுமே
    உணர்வே பெரும்-பதம் தெரிந்தான் ஒரு பாமர-வேடனே, நன்னெறி உய்வே
    உணர்வால் மனம், அறிவு, ஆத்மா பயில்வாய் உயரவே புண்ணியம் மனிதா

    மனிதனாய் புவி-சுவர்க்கம் போகம்-உற பிறந்த ஒரே பிறவி உத்தமனே கேள்
    புனிதன் நீயுமே உனது ஆத்ம-வலிமை உன்னுள் உறங்கிக்கிடப்பதை எழுப்பு
    இனியனாய் புவிப்பிறவிப் பயன் பெற தன்னலம் போல பிறர்-நலமும் கருதி
    தனியனாய் ஒதுங்கிக்கிடவாது ஊருடன் கூடி ஓங்க முயன்றால் எனது அருள்

    அருள்-இல்லார்க்கு அவ்வுலகம் என்னும் இறைவன் திருவருள் இல்லை புவி
    பொருள் வாழ்-நெறி அர்த்தம் இல்லார்க்கு இவ்வுலக சமுதாயத்துணை இல்லை.
    இரு வகை ஏழ்மையற உடல்-பணி வாழ்வும், புண்ணிய-ஈட்டம் உய்வும் தேவை
    திருவருள் அறத்தால் வருவதே இன்பம், அறம் செய விரும்பு பொருள் அறி

    அறிவாயா மனிதா சிந்தித்தாயா ஔவை மூதாட்டியின் ஆழ்பொருள் அற-நெறி.?
    விரிக்காது சுருக்கி “அறம் செய விரும்பு” என்றாளே, அறம் செய் என்னாது ஏன்.?
    நெறியே உணர்வு துவக்கம் நோக்கமே, அறம் செய இயன்றாலும் அன்றியும்
    குறிக்கோள் எக்கணமும் அறமே நினைவாய் பிறர் நலமும் கொள் தன்னலமாய்

    தன்னலமே தரணி ஓங்க புகழ் தன்-சுமை தான்-மட்டுமே பெரும் பங்கு
    சுய-கடமையே பெரிதாய், தன்-வினைச் சுமை ஈசனாயினும் கடத்தவோ.?
    அயலார்க்குச் சுமத்துவதோ, அருள்-மனத்தன் பொருள்-பொதிந்த பண்பன்
    செயல், சொல், எண்ணம், முத்-தூய்மை ஈசன்-பாலும் பேர்-அறம் அன்பே

    அன்பும் அறமும் உடைத்தாயின் பண்பும் பயனும் அதுவே வாழ்-நெறி
    அன்பே பிற மாந்தர் துணை-கூட்டும் ஆதார மானிட-நெறி அஸ்திவாரம்
    அன்பே மிருகத்தினும் மேலாய் மானிட-உணர்வுப் பண்பின் தலை-வாயில்
    இன்பம் பொழி பண்பு அறமே மிருகம் துவங்கி இறைவன் வரை அன்பாலே


    Quote Originally Posted by Bis_mala
    அன்பும் அறமும் பிறழ்செலவு உற்றவன்
    மன்பதை தன்னில் மயக்கழிந் தானெனத்
    தென்பட நின்று தெருள்பெறும் காலையே
    அன்பரை ஆள வருவான் இறைவனே!

    இறைவனே தான் படைத்த குட்டியைத் தாங்கி சுமந்து உறு-தகு நல்லிடம் சேர்
    வரையிலா வள்ளல்-அவனைக் கணமும் அகலாது இறுகிய பிடி நழுவாது ஒட்ட
    சிறைப்-பிறவி விடுத்து இறுதி-இலக்கு பிறவியற விடுதலை-முக்தி நந்தன் சுட்டு
    நிறை-துணையே தனக்கு வேறு என்ன குறை, புவி-சுவர்க்கமும் கை-விடானே

    கைவிடாக் காவலன் கடவுளை நம்பினோர் நல்லார் தன்னைத்தானே முன்னேற்ற
    தவிர்க்காது தத்தம் பொறுப்பு பங்கே பெரிதும் வலிந்து ஏற்க முன் வந்தாலே நாடி
    புவி மா-துணை தன்னையே கதி அகலா அடியர்க்கு யாண்டும் இடும்பை இலவாய்
    தெவிட்டா-இன்பம் கணமும் தாயுமானவன் பிதாவைக்-கட்டு தனயன் மதலைக்கும்.
    .

    .

  11. #100
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    iRaivan naayanaarkadkuk kaattiya neRi

    Quote Originally Posted by Sudhaama
    நந்தனார் காட்டும் சுவர்க்கம்.! ............
    Quote Originally Posted by bis_mala

    தாயின் பொறுப்பென .................................................. .......................................... அடைந்ததுமே!
    Quote Originally Posted by Sudhaama
    பயிர் செய்தே .........................................வரை அன்பாலே

    Quote Originally Posted by Bis_mala
    அன்பும் அறமும் பிறழ்செலவு உற்றவன்
    ...................... இறைவனே!
    இறைவனே தான் ..................................
    .
    .
    I

    Quote Originally Posted by Sudhama
    நந்தனார் காட்டும் சுவர்க்கம்.!

    உயர்வே உனக்கு உத்தமப்-பிறவி மனிதனே-என என்-மேல் புவி-திணித்து,
    நயம்-உறு புவி-சுவர்க்கம் வாழப் பிறந்தாய் நீயே, அரிதாய் நீ மட்டும்-என
    உயர்வற உயர்நலம் உடையவன் நீ என எனை வஞ்சித்தாயோ இறைவா.?
    பயன்-பிறவி, புவி-இன்பம் எங்கே.? நீ யார் உயர்வற உயர்நலம் உடையவா.?

    நந்தனோ டெந்தபன் னாயன்மார் வந்துமே
    ஒத்தியல் கின்றதாம் மொத்தநற் கருத்திது
    மந்தனும் சொந்தவை குந்தமென் கைகளில்
    நந்துமோர் நன்னிலை என்றதை ஏற்பனே.


    வாழவே பிறந்தவர் வளநலம் கொண்டவர்
    சூழுதுன் பனைத்துமே சூழ்ந்துணர்ந் தழிப்பவர்
    ஏழ்பிற விகள்வரும் இடர்களைந் தொன்றுடன்
    ஆழ்கடல் நீந்தியே அப்பால் களிப்பவர்.

    புறத்தவன் உன்-மேலவன் உன்னுள்ளும் உறைந்து உன்னையும் ஆள்பவன்
    சிறந்த பிறவிப்-பயன் புவி-சுவர்க்கம் மோட்சம் அருளும் பிறவி-விடுதலை

    பிறவியின் பயனைஇப் பிறவியி லடைபவர்
    துறவியே ஆயினும் இல்லுளார் ஆயினும்
    இறையொடு மொன்றியே நிறைகொள நின்றுள
    மறைத்திறம் வழுவிடா மானிட மலையவர்.



    continued
    B.I. Sivamaalaa (Ms)

Page 10 of 15 FirstFirst ... 89101112 ... LastLast

Similar Threads

  1. Centenary of Udumalai Narayana Kavi
    By Oldposts in forum Memories of Yesteryears
    Replies: 9
    Last Post: 27th April 2011, 09:51 AM
  2. KAVITHAI ARANGAM
    By V.Annasamy in forum Poems / kavidhaigaL
    Replies: 38
    Last Post: 21st August 2010, 05:05 AM
  3. Kadal Arangam - IR - Velu Prabakaran
    By Vysar in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 0
    Last Post: 30th July 2009, 09:21 PM
  4. kavi(thai)yin seyalpAdu
    By V.Annasamy in forum Poems / kavidhaigaL
    Replies: 2
    Last Post: 20th June 2007, 01:39 PM
  5. kambanin kavi
    By phinex2005 in forum Poems / kavidhaigaL
    Replies: 0
    Last Post: 21st February 2005, 01:49 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •