Results 1 to 10 of 150

Thread: iNayak kavi arangam

Threaded View

  1. #21
    Senior Member Veteran Hubber
    Join Date
    Dec 2004
    Location
    USA
    Posts
    3,099
    Post Thanks / Like


    Quote Originally Posted by bis_mala

    அன்றுள நந்தன் பாணன்
    ஆயவர் பேசிக் கொண்டார்
    நன்றிவை சொன்ன பாங்கு
    நான்மிகப் புகழ்ந்து சொல்வேன்;
    ஒன்றது தெய்வம்; மாலும்
    உயர்சிவ னாரும் என்ற
    தென்றிசை மேலோர் வாய்மை
    தெளிவுற நீவிர் சொன்னீர்.
    நன்று.! நன்றி.!!


    .

    கடவுளா.? எதற்கு.?


    ...வணங்கத்- தகுதி யாருக்கு.? ஏன்.?






    நாயன்மார் நந்தனார் - திருப்பாணாழ்வார் இடையே…..


    ... கற்பனை-உரையாடல் --- தொடர்ச்சி





    [html:21e87f9a7a]


    [/html:21e87f9a7a]


    1. - நந்தனார்
    அதிக-மிகு பூவுலகப் பொறுப்பு பணி பெரு-கவலை நமக்கு இருக்க நந்தா
    புதிரான யாரோ ஒருவன் கடவுளாம் அவன் உள்ளானா என்றே தெரியாது
    விதியாம் அவரவர் தலை-எழுத்துப்படி நடக்கும் பாவி நாம்-என எம்மவர்
    நிதி-பேறு கீழ்-சாதி நமக்குத் தகுதி-இல்லை ஈசன்-பணி உயர்-குலத்ததே.!

    2.
    குலப்-பிறவி சாதி-அடிப்படை மக்கள் தேவைக்கு ஏற்ப மன்னர்கள் சட்டம்
    நிலவு நியதி ஏனைய குலத்தோர் சமுதாயத்தோர் அனைவர்க்கும் பொது-
    நலம்-காக்க இறைவன் திருவருள்-வேண்டி ஈட்டல் வேதியர் பணியே; மேல்-
    உலகோ, கோயில் துதி நம்பி வேண்டலோ நமக்கு தகுதி இல்லை என்றார்

    3.
    என்றும் கோயில்-அணுகார் காக்கும் கடவுள் நினையார் முனையா எம்மவர்
    தின்று-திரி மனித-உரு மிருகமே வாழ்-நோக்கம் பொருள்-அறியாப் பேதையர்
    அன்று-அன்றைய பாடு-மட்டும் சிந்தித்த அறியாமை-சூழ வளர்ந்தேன் நந்தன்
    நன்றே வாழ்-நெறி எனது ஐயங்களுக்கு விடை விளக்கினார் ஐயர் குருசாமி

    4.
    குருசாமி உபதேசம் கற்றேன் வேதியர் தொழில்-கடமை சமுதாய பொது-நலத்
    திருவருள், இயற்கைச் சீற்றமிலா-வளம், மறை-ஓதல், யாகம், கோயில் பணி
    வறுமையற நாடு-நலம் அன்றி அவரவர் தனித்-தேவை, பயம்-அற வாழ்க்கை
    உறு-விருப்பம், பாரிப்பு கனவு நனவாக இறை-துதி அனைவர்-தம் கடமையே

    5.
    கடமை எவரும் அவரவர் நன்னலம் கருதி, தாமே இறைவனை வழிபடு நன்றி
    கடவுளே தத்தம் தந்தை-தாயாய் இறையருள் நலம் பொலிகவே சுய-முயற்சி
    உடன்-வாழ் துணைவனைத் துதி, பிறர் சார்போ.? சீந்தா மா-மன்னனோ ஈசன்.?
    கடன்-பட்டோம் மாந்தர் ஒவ்வொருவருமே கடவுள்-துதியால் முன்னேற்றமே.!

    6,
    ஏற்றம்-பெற வாழ்- வழிகாட்டினார் எனது குரு எனக்கும் தகுதி உண்டு-என;
    போற்றி ஆசானைப்-பற்றி வழிபட்டேன் ஊர் எல்லைக்கோயில் திருப்பங்கூர்
    தோற்றினன் ஐயன் நான்-விழைந்தவாறே அருள் பெற்றேன் புவி-சுவர்க்கமே
    வேற்றுமை தாழ்-குலம் கருதாக் கடவுள் சிவன் அருள்வன் முயல்பவர்க்கே

    7.
    முயன்று மென்மேல் முன்னேற்றம் வாழ்-இலக்கண புவி-சுவர்க்க இடைப்-படி
    சுய-முயற்சியால் மட்டுமே இறை-அருள் மாந்தர்க்கு ஓங்கு நலம் விளையும்
    தயக்கம்–இன்றி மேல்படி முக்தி தில்லையம்பலம் தரிசிக்க எசமான் உத்தரவு
    உயர்வுற நாடினன், நம்பவில்லை அவர் பறையனுக்கும் பக்தியா தேவையா.?

    8.
    தேவை எசமான் நிபந்தனைப்படி என் கடமை-ஆற்றியதன் நற்பயன் கண்கூடு
    சாவை நாடிப் பெற்றேன் மறுபிறவியிலா விடுதலை பேரானந்த சிவ-லோகம்
    சேவை திருமால்-நெறி வேறோ.? மந்தித்தாய்-நெறி உமக்கு ஏற்பு அல்லதோ.?
    கோவை நாடாது முக்தி நீர் இன்னும் புவி-உழல் தாழ் ஏன் பாணரே புகல்வீர்


    9. - திருப்பாணாழ்வார்
    புகல்-இறுதி திருமால்-நெறியிலும் மந்தித்தாய்-நெறி உண்டு நமக்கு முன்பே
    புகழ் பழம் திருமால்-அடியர் பறையர் நம்பாடுவான் வரலாறு கைசிக-ஏகாதசி
    இக-சுகம் வெறுத்து புவி-வேண்டா நந்தரே உம்மைப்-போல் மேல்-உலகு, திரு-
    முக-தரிசனம் வேண்டினர் கோயில் வெளி-நின்று திருக்குறுங்குடி நம்பியை

    10.
    நம்பி-நாரணன் கோயில்-தரிசனம் மறைத்தது கொடி-மரம் வெளி-நின்று காண
    நம்பியே நாடி-வந்த தூ-அடியனைக் கை-விடுவனோ பெருமாள்.?, அக்கணமே
    தம்பம் துவஜ கொடி-மரம் விலக்கி நேர்-தரிசனம் சமுதாயத்தால் தாழ்வுற்ற
    நம்பாடுவான் பறையருக்கும் வைகுந்தம் அருளினன் தொழுகுலம் சேர்த்தே


    --- தொடரும்

    .
    .

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Similar Threads

  1. Centenary of Udumalai Narayana Kavi
    By Oldposts in forum Memories of Yesteryears
    Replies: 9
    Last Post: 27th April 2011, 09:51 AM
  2. KAVITHAI ARANGAM
    By V.Annasamy in forum Poems / kavidhaigaL
    Replies: 38
    Last Post: 21st August 2010, 05:05 AM
  3. Kadal Arangam - IR - Velu Prabakaran
    By Vysar in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 0
    Last Post: 30th July 2009, 09:21 PM
  4. kavi(thai)yin seyalpAdu
    By V.Annasamy in forum Poems / kavidhaigaL
    Replies: 2
    Last Post: 20th June 2007, 01:39 PM
  5. kambanin kavi
    By phinex2005 in forum Poems / kavidhaigaL
    Replies: 0
    Last Post: 21st February 2005, 01:49 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •